தமிழ்மணம் & பதிவுகள் இயங்குவேகம் தொடர்பான பிரச்சனைகள்

November 19, 2008 · Posted in தமிழ்மணம் · 12 Comments 

தமிழ்மணம் தளத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டன. தமிழ்மணத்தில் புதிய இடுகைகளை இணைப்பது, பதிவுகளில் தமிழ்மணம் பதிவுப்பட்டையின் தறவிறக்கம் போன்றவை மிக வேகமாக இயங்குவதை எங்களின் சோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தமிழ்மணம் கருவிப்பட்டை மட்டுமே பதிவுகளை தாமதப்படுத்துவதாக பல பதிவர்கள் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சனை முழுவதுமாக தற்பொழுது சரி செய்யப்பட்டு விட்டாலுங்கூட சில தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

– தமிழ்மணம் நிரலி தவிர பதிவர்கள் பல விதமான நிரலிகளை தங்கள் பதிவுகளில் இணைத்துள்ளனர். இந்த நிரலிகளும் பதிவுகளின் தரவிறக்கத்தை தாமதப்படுத்துகிறது. தமிழ்மணம் நிரலி மட்டுமே உள்ள பதிவுகளின் தரவிறக்கம் வேகமாக உள்ளதை எங்கள் சோதனைகளில் உறுதி செய்திருக்கிறோம். உதாரணமாக இந்தப் பதிவில் தமிழ்மணத்தின் பதிவுப்பட்டை இரு முறை தோன்றியுள்ளது. http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_18.html
ஆனாலும், இது வேகமாக தரவிறக்கமாகிறது. மாறாக, வேறு நிரலிகள் இணைக்கப்பட்ட பதிவுகள், குறிப்பாக Google Analytics சார்ந்த நிரலிகள் கொண்ட பதிவுகள் தரவிறக்கமாக தாமதமாகிறது.

– இது தவிர ஐ.பி.எண்களை காட்டும் நிரலிகளும் பதிவுகளின் தரவிறக்கத்தை தாமதம் செய்கிறன.

– தமிழ்மணம் நிரலியிற்கூட பதிவர்களின் புகைப்படங்களை திரட்டும் Gravatar நுட்பமே தமிழ்மணம் பதிவுப்பட்டை பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது. தற்காலிகமாக Gravatar மூலமாக புகைப்படம் திரட்டுதலை நிறுத்தியுள்ளேம்.

பதிவர்கள் தற்பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டுமில்லாது, பதிவுகளை திரட்டுவதும் வேகமாக உள்ளதை உணரலாம். வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை பதிவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். விரைவாக சரி செய்ய முயல்வோம்

கடந்த சில நாட்களாகத் தமிழ்மணம் தளத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு வருந்துகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்