புத்தாண்டு வாழ்த்து

January 1, 2009 · Posted in தமிழ்மணம் · 18 Comments 

தமிழ்ப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டில் தமிழ்ப்பதிவுகள் மேலும் சிறக்கட்டுமென்று தமிழ்மணத்தின் உளங் கனிந்த நல்வாழ்த்து!

Wishing all Tamil Bloggers and Readers, a Very Happy, Healthy, Peaceful and Prosperous Blogging in 2009!

தமிழ்மணத்திலே இடுகைகளைச் சேர்த்தல்

November 17, 2008 · Posted in அறிவிப்புகள் · 23 Comments 

தமிழ்மணம் வழங்கியின் பராமரிப்பு தொடர்பான வேலைகள் முடிவடைந்து, தமிழ்மணம் வழக்கமான சேவைக்குத் திரும்பியிருக்கின்றது.

எனினும், பதிவர்கள் புதுஇடுகைகளைத் தமது பதிவுகளிலிருந்தே தமிழ்மணத்துக்குச் சேர்ப்பதிலே தடங்கலிருக்கின்றதாகத் தெரிகின்றது. புதிய இடுகைகளைச் சேர்க்கும்போது, “புதிய இடுகைகள் காணப்படவில்லை” என்ற செய்தி கிட்டுகிறது.

தற்போதைக்கு பதிவர்கள் தமிழ்மணத்தின் முன்பக்கத்திலே “இடுகைகளைப் புதுப்பிக்க” வசதியினூடாக, தம் பதிவு முகவரியினைத் தருவதன்மூலம், வழக்கம்போலவே புதிய இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கலாம்.

தம் பதிவுகளிலிருந்து நேரடியாகப் புதிய இடுகைகளை அறியத்தரும் நுட்பத்திலிருக்கும் குறைபாடு விரைவிலே களையப்பட்டுத் தொழிற்படுவதற்கான முயற்சி செய்கிறோம்.

புரிந்துணர்வோடு தொடரும் ஆதரவுக்கு நன்றி.

பின்னிணைப்பு
நவம்பர் 18, 2008
தற்போது, இடுகைகளைப் பதிவிலிருந்தே இணைக்கும் சேவை தொழிற்படுகிறது

ப்ளாகர் பதிவுகளில் – பின்னூட்டங்களில் ”’))’))’)) said…”, பதிவுப்பட்டை பல முறை தெரியும் பிரச்சனைகள்

தமிழ்மணம் கருவிப்பட்டை சில பதிவுகளில் பல முறை தெரியும் பிரச்சனை இருந்து வருகிறது. கருவிப்பட்டையை இணைக்க பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை “அளி” என்ற பொத்தனை அழுத்துவது தான் இதற்கு காரணம் (Multiple clicks on the submit button). இவ்வாறு செய்யும் பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை நிரலி பல முறை இணைக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக தமிழ்மணம் பதிவுப்பட்டை பல முறை தெரிகிறது.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை கவனிக்கவும். இதில் தமிழ்மணம் பதிவுப்பட்டை இரு முறை தெரிகிறது. சில பதிவுகளில் மூன்று பதிவுப்பட்டைகள் கூட தெரிகின்றன.

இது தவிர ஜெகத்தின் நிரலும் பல முறை இணைக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக மறுமொழிகளில் மறுமொழியிட்டவரின் பெயர் தெரியாமல் ”’))’))’)) said…” போன்ற பிரச்சனைகளும் இருந்து வருகிறது.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை கவனிக்கவும். மறுமொழியிட்டவரின் பெயர் தெரியவில்லை. மாறாக ”’))’))’)) என உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பதிவர் Voice on Wings அவர்களின் பதிவை பார்க்கலாம்

இந்தப் பிரச்சனைகளை தற்பொழுது தமிழ்மணம் அடைப்பலகை மேம்படுத்தும் கருவியில் சரி செய்திருக்கிறோம்.

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

ஒருவர் ஒரு முறை மட்டுமே click செய்யும் வகையில் இந்த அடைப்பலகை மேம்படுத்தும் கருவி சரி செய்யப்பட்டுள்ளது. அது போல ஜெகத்தின் நிரலி ப்ளாகரின் ஆரம்பகால வழுக்களுக்கு (blogger beta bugs) தேவைப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிரலி தேவையில்லை என்பதால் அடைப்பலகை கருவியில் தமிழ்மணம் நிரலி மட்டுமே சேர்க்கப்படும்.

பதிவர்கள் தங்கள் அடைப்பலகையை சரி செய்ய இந்த சுட்டியில் உள்ள ஆலோசனைகளை பார்க்கலாம் – http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html

புதியதாக அடைப்பலகையை இணைக்க விரும்பும் பதிவர்கள் தமிழ்மணம் அடைப்பலகை மேம்படுத்தும் கருவியை கொண்டு தமிழ்மணம் பதிவுப்பட்டையை இணைத்து கொள்ளலாம்

இந்தப் பிரச்சனை குறித்து அறியத்தந்த நண்பர் Voice on Wingsக்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி

August 7, 2008 · Posted in அறிவிப்புகள் · 6 Comments 

நாளை பீஜிங்கில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த இடுகைகளை ஒரே இடத்தில் தொகுக்க தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டியை தற்பொழுது வெளியிட்டிருக்கிறோம்.

ஒலிம்பிக் திரட்டியின் சுட்டிகள்
http://tamilmanam.net/2008/ஒலிம்பிக்
http://tamilmanam.net/2008/olympic

ஒலிம்பிக் போட்டிகள், அதன் அரசியல் என இந்தப் போட்டிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் இந்த திரட்டியில் வாசிக்க முடியும். தற்பொழுது தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து ஒலிம்பிக் சார்ந்த இடுகைகள் திரட்டப்படுகின்றன.

பதிவர்கள் தங்கள் இடுகைகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி பதிவுகளை வகைப்படுத்துகிறது.

பதிவர்கள் ஒலிம்பிக், ஒலிம்பிக்ஸ் போன்ற குறிச்சொற்களை பயன்படுத்தி ஒலிம்பிக் குறித்த இடுகைகளை எழுத வேண்டுகிறோம்.

நன்றி

தமிழ் சசி,
தமிழ்மணம்

தமிழ்மணத்தின் புதிய சேவைகள் : பதிவர் புத்தகம், மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி

மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி

தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டியான ‘ம’ திரட்டி மூலமாக பல்வேறு வழிகளில் மறுமொழிகளை திரட்டுகிறோம்.

ப்ளாகர் தளங்களில் இயங்கும் பதிவுகளில் தமிழ்மணம் கருவிப்பட்டை மூலமாக மறுமொழிகள் நிலவரம் திரட்டப்படுகிறது. இது தவிர கருவிப்பட்டை இணைக்கப்பட்ட பதிவுகளின் செய்தியோடைகள் மூலமாக அனைத்து மறுமொழிகளையும் தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. இதன் மூலம் அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை ‘ம’ திரட்டி வழங்குகிறது

தமிழ்மணம் பதிவுப்பட்டையை ப்ளாகர் பதிவுகளில் இணைக்கும் செய்முறை இந்தப் பக்கத்தில் உள்ளது

வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இயங்கும் பதிவுகளில் கருவிப்பட்டையை இணைக்க முடியாத நிலை உள்ளதால் இந்தப் பதிவுகளின் மறுமொழி ஓடை மூலமாக மறுமொழி நிலவரத்தை தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. வேர்ட்பிரஸ்.காம் பதிவர்கள் மறுமொழிகள் திரட்டுவதற்கு எந்த தனி வசதியும் செய்ய தேவையில்லை. தமிழ்மணத்தில் இணைந்தாலே போதுமானது.

இவ்வாறான வசதிகள் இருந்தும் பல பதிவர்கள் தங்கள் பதிவுகளின் மறுமொழிகள் நிலவரம் தமிழ்மணத்தில் தெரியவில்லை என்று தமிழ்மணத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். தமிழ்மணத்திற்கு வரும் பெரும்பான்மையான தொழில்நுட்ப சார்ந்த கேள்வியாக இந்தப் பிரச்சனையே இருந்து வருகிறது.

தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ‘ம’ திரட்டியின் தொழில்நுட்பம் சரியாகவே செயல்படுகிறது.
blogspotல் இயங்கும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் கருவிப்பட்டையை சரியாக இணைத்து விட்டால் மறுமொழிகள் ”தானியங்கியாக” திரட்டப்பட்டு விடும். வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களின் மறுமொழிகள் நிலவரமும் தானியங்கியாக திரட்டப்படுகிறது.

தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சரியாக செயல்பட்டாலும், தொடர்ந்து பல பதிவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து எங்களுக்கு அறியத்தருவதால் ஒரு மாற்று வழியினை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த மாற்று வழி மூலமாக இடுகைகளை புதுப்பிப்பது போல மறுமொழிகளின் நிலவரத்தை தமிழ்மணத்திற்கு ping செய்யலாம். இதன் மூலம் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரத்தை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும். இந்த வசதி ப்ளாகர், வேர்ட்பிரஸ்.காம் என்றில்லாமல் மறுமொழி ஓடை கொண்ட அனைத்து பதிவுகளுக்கும் செயல்படும்.

தற்போதைய நிலையில் இந்த வசதி தமிழ்மணத்தின் சோதனையில் உள்ளது. திரட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவியுங்கள்

இந்த வசதி மாற்று ஏற்பாடு மட்டுமே. உங்கள் மறுமொழிகளை தானியங்கியாக திரட்ட தமிழ்மணம் பதிவுப்பட்டையை பயன்படுத்துங்கள்

மறுமொழிகளை எப்படி புதுப்பிப்பது ?

1. தமிழ்மணம் “ம” திரட்டிக்கு செல்லுங்கள்
http://www.tamilmanam.net/m/thiratti.html

2. அங்கு ”மறுமொழிகளை புதுப்பிக்க” என்று காணப்படும் பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை அளிக்கவும்
உதாரணமாக http://parthy76.blogspot.com என்ற பதிவின் மறுமொழி நிலவரத்தை தமிழ்மணத்திற்கு அளிக்க, பெட்டியில் கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல அந்தப் பதிவின் முகவரியை http://parthy76.blogspot.com அளிக்கவும்

ping feedback

3. அளி என்ற பொத்தானை அழுத்தினால் தமிழ்மணம் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரத்தை திரட்டிக் கொள்ளும்

பதிவர் புத்தகங்கள்

பதிவர் புத்தகங்கள் என்ற புதிய பக்கத்தை தமிழ்மணத்தில் ஏற்படுத்தி உள்ளோம். வலைப்பதிவர்கள் எழுதும் புத்தகங்கள் குறித்த அறிமுகத்தை பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு செல்ல இந்த பக்கம் உதவும் என நம்புகிறோம்.

blogger_books

பதிவர் புத்தகங்கள் பகுதியில் தங்கள் புத்தகத்தை இணைக்க விரும்பும் பதிவர்கள் புத்தகம் குறித்த விபரங்களுடன் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

நன்றி,
தமிழ் சசி
தமிழ்மணம்

« Previous Page