முதற்கட்ட வாக்குப்பதிவு நீட்டிப்பு

January 18, 2009 · Posted in அறிவிப்புகள் · 12 Comments 

Tamilmanam Blogger Awards 2008- Extending first phase polls
தமிழ்மணம் விருதுகள் 2008ற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் இதுவரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி. அதிக எண்ணிக்கையிலான இடுகைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், பதிவர்களின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டியுள்ளமை மகிழ்ச்சியை அளிக்கிறது.

நிற்க. முதற்கட்ட வாக்கெடுப்பில் எமது தரவுத் தளத்தில் ஏற்பட்ட வழுவின் காரணமாக சில வாக்குகளின் பிரிவுகள் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புபட்ட பதிவர்களுக்கு மட்டும் சிறப்பு மின்னஞ்சல் மூலம் தங்கள் வாக்கினை மீள அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களது வாக்கினை மீள அளிக்குமாறு இதன்மூலம் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

அதிக எண்ணிக்கையினையும், வழுவினையும் கருத்தில் கொண்டு முதற்கட்ட வாக்கெடுப்பு சனவரி 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொடரும் உங்களின் ஆர்வத்திற்கும், பங்களிப்பிற்கும் நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு

முதற் கட்ட வாக்கெடுப்பு – தமிழ்மணம் விருதுகள் 2008

January 11, 2009 · Posted in அறிவிப்புகள் · 17 Comments 

Tamilmanam Blogger Awards  2008 - First Phase of Voting

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தமிழ்மணம் விருதுகள் 2008ன் முதற்கட்ட வாக்கெடுப்பு இன்று முதல் (சனவரி 12) தொடங்குகிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும். தற்சமயம் பதிவர்கள் வாக்கிடுவதற்கான சிறப்புத் தொடுப்பினை உள்ளடக்கிய மின்னஞ்சல் பதிவர்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு இன்றிலிருந்து சனவரி 18ம் தேதி வரை நடைபெறும்.

வாக்களிப்பது பற்றிய சில குறிப்புகள்:

1. பிரிவுக்கு ஒன்றாக 12 பிரிவுகளிலும் பதிவர்கள் வாக்களிக்க இயலும். குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே கூட வாக்களிக்க முடியுமென்றாலும், அனைத்துப் பிரிவுகளிலும் வாக்களிப்பது சிறந்ததாக இருக்கும்.

2. முதன்மை வாக்களிப்புப் பக்கத்தில், ஒவ்வொரு பிரிவின் கீழேயும் அப்பிரிவிற்கான தொடுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இத்தொடுப்பின் மூலம் அப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம்.

3. புதிதாக மேலெழும்பும் சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் முதன்மை வாக்களிப்புப் பக்கத்திற்கு வந்து அடுத்தடுத்த பிரிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும்

4. அனைத்துப் பிரிவுகளுக்கும் வாக்களித்த பின்னர் முதன்மைப்பக்கதின் கடைசியில் உள்ள “வாக்கை உறுதி செய்கிறேன்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்திற்கு வந்து சேரும். இவ்வாறு உறுதி செய்யப்படாத வாக்குகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது.

5. அளித்த வாக்கினை வாக்கெடுப்பு நடக்கும் காலக்கெடுவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற இயலும். ஒவ்வொரு முறையும் தவறாமல் அளிக்கப்படும் வாக்கினை உறுதி செய்தல் வேண்டும்.

6. இவ்வாக்கெடுப்பு ரகசியமான ஒன்று. எனவே பதிவர்களின் தனிப்பட்ட வாக்கு விவரங்கள் வெளியிடப்படாது.

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு

இறுதிப் பரிந்துரைகளும், தவறான பரிந்துரைகளைச் சரி செய்தலும்

January 7, 2009 · Posted in அறிவிப்புகள் · 6 Comments 

Tamilamanam Blog Awards 2008 Nomination Last Date

தமிழ்மணம் விருதுகள் 2008க்கான பரிந்துரைகள் நாளை(சனவரி 8 ) இரவோடு நிறைவு பெறுகின்றன. இதுவரை பரிந்துரை செய்யாதவர்களும், தங்களது முன்னைய பரிந்துரைகளை மாற்ற விரும்புபவர்களும் இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனைய பதிவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகள் பரிந்துரைகள் பக்கத்தில் காணக்கிடைக்கின்றன.

விருதுப் பரிந்துரையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு வழுவினால் 2008க்கு முன்னர் எழுதப்பட்ட இடுகைகளும் பரிந்துரைப் பக்கத்தில் தெரிந்தது. அஃது விரைந்து சரி செய்யப்பட்டு விட்டாலும் சில பதிவர்கள் தங்களது பழைய இடுகைகளையும் இவ்வாண்டு விருதுக்குப் பரிந்துரைக்க அவ்வழு ஏதுவாக அமைந்துவிட்டது. எனினும் விருதுகள் 2008ன் நெறிமுறைகளின் படி அவ்விடுகைகளை ஏற்றுக் கொள்ள இயலாது. மாற்றப்படாத இடுகைகள் விருதுப் பரிந்துரையின் முடிவில் தானியங்கியாக நீக்கப்பட்டுவிடும். எனவே பழைய இடுகைகளைப் பரிந்துரைத்த பதிவர்கள், இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்தி அவ்விடுகைகளுக்குப் பதிலாக இவ்வாண்டு (2008) இடுகைகளைப் பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

தமிழ்மணம் விருதுகள் 2008ல் பங்குபற்றும் அனைத்துப் பதிவர்களுக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விருதுத் தெரிவுகள் பற்றிய தகவல்கள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்மணம் விருதுகள் 2009 – ஒருங்கமைப்புக் குழு

உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா?

January 2, 2009 · Posted in அறிவிப்புகள் · 19 Comments 

Tamilmanam Blog Awards 2008 - Nominations

உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா? இல்லையெனில் சனவரி 7 வரை உங்களுடைய இடுகைகளை நீங்கள் பரிந்துரை செய்ய இயலும். இதுவரை பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளை இன்று முதல் பரிந்துரைகள் பக்கத்தில் காணலாம்.

மேலும் இப் போட்டி சார்ந்த சில விதிகளையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்மணம்
விருதுகளுக்கான தேர்வுகளில் தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்களின்
இடுகைகளும் இடம்பெறுகின்றன. தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்கள் ஏனைய
பதிவர்கள் போலவே போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும். ஆனால் விருதுக்கான
இறுதித் தேர்வுகளில் இந்தப் பதிவர்களின் இடுகைகள் இடம்பெறாது. தேர்வு
செய்யப்படும் இடுகைகள் புகழ் அரங்கு பக்கத்தில் மட்டும் இடம்
பிடிக்கும்.

பதிவர்களுக்கு தமிழ்மணத்தின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இடுகைகள் பரிந்துரை ?

December 28, 2008 · Posted in அறிவிப்புகள் · 13 Comments 

Tamilmanam Blog Awards questions and answers

1. விருதுகள் 2008ன்னு அறிவிச்சிட்டு 2006ல எழுதுன இடுகைகளையும் பரிந்துரைப்பக்கத்தில காண்பிக்கறீங்க?
2. தவறுதலா நடந்தது இப்போ சரிசெய்யப்பட்டிருக்கு. ஏற்கனவே பழைய இடுகைகளை பரிந்துரை செஞ்சவங்க மறுபடியும் சரியான இடுகைகளை தெரிவு செய்ய வேண்டியதிருக்கும்.

1. சரி செய்யப்பட்டதில ஒரு சில இடுகைகள் ரெண்டு மூணு தடவை தெரியுதே?
2. அப்படி ஒரு வழு இருக்கறது தெரியும். அதனால எந்த சிக்கலும் இல்லை. இப்போதைக்கு அது அப்படியே தான் தொடரும்

1. விருதுகள் -2008க்கு பதிவர்களோட பங்களிப்பு எப்படி இருக்கு.
2. நல்லாவே இருக்கு.

1. இதுவரைக்கும் பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளைப் பார்க்கலாமா?
2. வாக்களிப்புக்கு முன்னாடியே பொதுப்பார்வைக்கு வைக்கலாமான்னு ஒரு விவாதம் நடந்துக்கிட்டு இருக்கு. அனேகமா முன்னாடியே பொதுப்பார்வைக்குக் வைப்போம்.

1. விருதுகள் நடைமுறையில பதிவர்கள் சிலபேர் சிக்கல்கள் இருக்கறதா சொல்லியிருக்காங்களே?
2. விருதுகள் நடைமுறை பற்றிய தங்களோட கருத்துக்களையும், சிக்கல்களையும் எங்களுக்கு அறியத் தந்த பதிவர்களுக்கு நன்றி. கூடுமானவரைக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முயற்சி செய்துகிட்டு இருக்கோம். இப்போ குழுவில எல்லாரும் விடுமுறையில இருக்கறதால பதிவர்களுக்கு பதில் சொல்றதுலயும், சிக்கல்களை களைவதிலும் அதிகமான காலதாமதம் இருக்கு.

1. பதிவர்கள் விருதுகள் குழுவினரை எப்படி தொடர்பு கொள்றது?
2. பின்னூட்டங்கள் மூலமா தொடர்புகொள்ளலாம்னு ஏற்கனவே அறிவிச்சிருந்தோம். அதுபோக admin@thamizmanam.com ன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம். அதுலயும் இப்போதைக்கு காலதாமதம் உண்டு. விடுமுறை கால தாமதத்தை பதிவர்கள்
புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்

1. வேற எதாவது சிக்கல் இருந்தா தொடர்பு கொள்ளலாமா?
2. நிச்சயமா. அப்புறம் மறந்துடாம உங்களோட இடுகைப் பரிந்துரையையும் செஞ்சிடுங்க.