தமிழ்மணம் விருகள் 2010 – பரிசு கூப்பன்

தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறோம். இதனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையிலும், நூல் உலகம் இணையத்தளத்திலும் (http://www.noolulagam.com/) புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடைக்கு செல்லும் பொழுது மின்னஞ்சலை அச்சு எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்தால் நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையை தொடர்பு கொண்டு அஞ்சல் மூலமாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுகள் 2010 – முடிவுகள்

January 15, 2011 · Posted in அறிவிப்புகள் · 43 Comments 

தமிழ்மணம் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இனிய தமிழர் திருநாளில் தமிழ்மணம் விருதுகள் 2010 முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுகள் நிகழ்வு வலைப்பதிவுகளில் நல்ல ஆக்கப்பூர்வமான எழுத்துக்களை வளர்க்கவும், ஊக்குவிக்கவுமே வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் அத்தகைய எழுத்துக்கள் வலைப்பதிவுலகில் பெருகும் என நம்புகிறோம்.

2010ம் ஆண்டு விருதுகள் தமிழ்மணம் விருதுகளின் 3வது நிகழ்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பதிவர்களும், வாசகர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பது வலைப்பதிவுகளின் வளர்ச்சியையே காட்டுகிறது எனக் கருதுகிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்களின் பங்கேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வில் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தோம். அதிகளவில் சுமார் 20 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அதோடு மூன்றாவது கட்டத் தேர்வில் நடுவர் குழுவின் தேர்வு இருந்தது. தமிழ்மணம் நிர்வாகம் மற்றும் வலைப்பதிவர்களை உள்ளிட்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு இடுகைகள் தேர்வு செய்யப்பட்டன. நடுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, குறித்த தேதிக்குள் தங்களது மதிப்பெண்களை அளித்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு போட்டியின் சிறப்பம்சமாகப் பெண் பதிவர்களுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மகளிர் மட்டும் என்பது போல முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்று, பெண் நடுவர்களால் இடுகைகள் பரிசீலனை செய்யப்படும் வகையில் இந்தப் போட்டியினை உருவாக்கியிருந்தோம்.

தமிழ்மணத்தில் 2010ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம் இடுகைகள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இருந்து சுமார் 1511 இடுகைகள் போட்டியில் பங்கேற்றன. இந்த 1511 இடுகைகளில் இருந்து 40 இடுகைகள் சிறந்த இடுகைகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெரிய பணியை செய்வதில் எங்களுக்குத் துணையாக இருந்த பதிவர்கள், வாசகர்கள், நடுவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு என்பது பதிவர்களை ஊக்குவிக்கும் ஓர் அடையாளம் மட்டுமே. பரிசுத் தொகை என்பதும் ஓர் அடையாளத்தொகை மட்டுமே. என்றாலும் இந்த ஆண்டும் ரூ45,000.00 மதிப்புள்ள பரிசுகளை இந்த நிகழ்வில் அறிவித்து இருந்தோம். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக்கூப்பன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். பரிசுக் கூப்பனைக் கொண்டு உடனே பரிசுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நியூபுக்லாண்ட்ஸ் கடைக்கு நேரில் செல்ல முடியாவதர்கள் நியூபுக்லாண்ட்சைத் தொடர்பு கொண்டு அஞ்சல் மூலம் புத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர நூல் உலகம் வழங்கும் புத்தக கூப்பனைக் கொண்டு இணையத்தில் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விருதுகள் நிகழ்வில் எங்களுடன் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த நடுவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய நடுவர்களின் பெயர்கள்.

தருமி, தமிழ்நதி, டாக்டர். ருத்ரன், துளசி கோபால், வினவு, சுரேஷ் கண்ணன், குழலி, கோவி.கண்ணன், டாக்டர். புருனோ, செந்தழல் ரவி, சுசீலா, சந்தனமுல்லை, கவிதா, TV ராதாகிருஷ்ணன், பழமைபேசி, ரவிச்சந்திரன், சீனா, து.குமரேசன் (விருபா), ஜாக்கி சேகர், பிரசன்னா, கேபிள் சங்கர், ஜோதிஜி, கேஆர்பிசெந்தில், சங்கரபாண்டி, தமிழ் சசி, இரமணீதரன், செல்வராசு, காசி ஆறுமுகம், இளங்கோ, விஜய் மணிவேல், கார்த்திக் ராமாஸ், பாலாஜி பாரி, சுந்தரவடிவேல், தாரா, மயிலாடுதுறை சிவா, நா.கணேசன்

தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது.
http://tamilmanam.net/awards2010/winners2010.php

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ்மணம் விருதுகள் ஒருங்கிணைப்பு குழு
தமிழ் சசி
சங்கரபாண்டி
இரமணீதரன்
செல்வராசு
விஜய் மணிவேல்

தமிழ்மணம் விருதுகள் 2010 – இரண்டாம் சுற்று முடிவுகள்

January 5, 2011 · Posted in அறிவிப்புகள் · 10 Comments 

தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தச் சுட்டியில் உள்ளது
http://www.tamilmanam.net/awards2010/2nd_round_results.php.

இந்தப் பட்டியலில் உள்ள இடுகைகள் நடுவர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். நடுவர் குழுவின் பரிசீலனை அடுத்த சில நாட்கள் நடைபெறும். முடிவுகள் பொங்கல் தினத்தன்று வெளியாகும்.

போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாக்களிப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ்மணம் விருது தேர்வுக் குழு