தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

தமிழ்மணம் விருதுகள் 2009ல், பதிவர்கள் மட்டும் பங்கு பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பி்ன் முடிவுகளை இப்பொழுது அறிவிக்கின்றோம். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குகள் பெற்ற முதல் 10 இடுகைகள் அடுத்த கட்ட பொது வாக்கெடுப்பிற்கு தகுதி பெறுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளை சில பிரிவுகளில் பெற்றிருப்பதால் சில பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கேற்க முடியும். ஏற்கனவே முதல் சுற்றில் வாக்களித்த பதிவர்கள், பொது வாக்கெடுப்பிலும் வாக்களிக்கலாம். பொது வாக்கெடுப்பு நாளை மறு நாள், சனவரி 2 2010ல் தொடங்குகிறது. அதற்கான விபரங்கள் நாளை வெளியாகும்.

முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம். இந்தச் சுட்டியில் இடுகைகள் Random முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இடுகைகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த வரிசை அமைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

http://awards2009.tamilmanam.net/voting_results.php

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்கள் அதிக ஆர்வமுடன் இந்த விருது நிகழ்வில் பங்கேற்றார்கள். தங்களுடைய இடுகைகளை பரிந்துரை செய்த அனைத்து பதிவர்களுக்கும், வாக்களித்த பதிவர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் வாழ்விலும், வரலாற்றிலும் கசப்பான ஆண்டாக அமைந்த 2009ம் ஆண்டு முடிவு் பெறுகின்ற தருவாயில் 2010ம் ஆண்டு தமிழர்களுக்கு அமைதியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பாக எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

– தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
– தமிழ்மணம் நிர்வாகம்

இடுகைகளின் தலைப்புகள்

தமிழ்மணத்தில் சில இடுகைகளின் தலைப்புகள் கடந்த இரு தினங்களாக தெரிவதில்லை என பல பதிவர்கள் கூறியுள்ளனர். ப்ளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் செய்தியோடைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

தமிழ்மணம் தொழில்நுட்பக்குழு இந்தப் பிரச்சனையை சரி செய்ய முயன்று வருகிறது என அறியத்தருகிறோம். பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

விருதுகள் 2009 – முதல் கட்ட வாக்கெடுப்பு – உங்கள் வாக்கினை செலுத்தி விட்டீர்களா ?

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த ஆண்டின் சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் முதல் கட்ட வாக்கெடுப்பு இன்று தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.

தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக வாக்கினை அளிப்பதற்கான சிறப்புத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.

tm awards 2009

நடைமுறைகள்:

1. உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

2. இச்சிறப்புத் தொடுப்பின் மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

3. ஒவ்வொரு பிரிவின் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பின் மூலம் அந்தந்தப் பிரிவிற்குப்
பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம். புதிதாக மேலெழும்பும்
சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் அதே முகப்புச் சன்னலுக்கு வந்து வேறு
பிரிவுக்கு வாக்களிக்கலாம்

4. அனைத்துப்பிரிவுகளுக்கும்/ விருப்பப்பட்ட பிரிவுகளுக்கும் வாக்களித்தபின்னர் அதே
முகப்பு சன்னலில் ‘வாக்கை உறுதி செய்கிறேன்’ என்ற பொத்தானை அழுத்துவதன்
மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்துக்கு வந்துசேரும்.

5. அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் மின்னஞ்சலில் வந்த சிறப்புத் தொடுப்பை
சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த
வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் -2009 – ஒருங்கமைப்புக் குழு

விருதுகள் 2009 – உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

December 5, 2009 · Posted in தமிழ்மணம் · 66 Comments 

தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான விருதுகள் நிகழ்வின் முதல் கட்டம் தொடங்கி விட்டது என்பதை பதிவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு இடுகைகளை பரிந்துரை செய்வதற்கான சுட்டி தற்பொழுது அனுப்பபட்டுள்ளது. முதன் முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக, மீண்டும் ஒரு முறை மற்றொறு சுட்டியை அனுப்பியிருக்கிறோம். இறுதியாக அனுப்பப்பட்ட அந்தச் சுட்டியை பயன்படுத்துமாறு பதிவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும். இத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

tm awards 2009

இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும். இப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.

இப்பொழுதிலிருந்து 2009-12-12 11:59 PM (அமெரிக்க கிழக்கு நிர்ணய நேரம் – EST) வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2009) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.

இச் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை இந்த வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

இவ் விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்
-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009 – இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம்

தமிழ்மணம் விருதுகள் 2009ம் ஆண்டுக்கான இடுகைகளைப் பரிந்துரை செய்வதற்கான காலக்கட்டம் வரும் சனிக்கிழமை, டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு (அமெரிக்க நேரம்) தொடங்க இருக்கிறது என்பதை பதிவர்களுக்கு நினைவுறுத்துகிறோம்.

பதிவர்களுக்கு அனுப்ப்படும் மின்னஞ்சலைக் கொண்டு தங்களுடைய இடுகைகளை பதிவர்கள் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை தொடங்கும் நேரத்தில் அது குறித்த அறிவிப்பும் தமிழ்மணத்தில் வெளியாகும்.

பரிந்துரைக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 முதல் டிசம்பர் 12 வரை (அமெரிக்க நேரம் – EST)

கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 30-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

பதிவர்கள் அனைவரையும் இந்த விருது நிகழ்வில் பங்கு பெற அழைக்கிறோம்…

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு