தேர்தல் திரட்டி

தேர்தல் சார்ந்து பல கட்டுரைகளும், நல்ல தரமான அலசல்களும்
வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. இதனை ஒரே இடத்தில்
வாசிக்கும் வகையில் தமிழ்மணம் ஒரு தனி திரட்டியை உருவாக்கி இருக்கிறது.

http://therthal.tamilmanam.net

தேர்தல் என்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இந்த பக்கத்தில்
திரட்டப்படும்.

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் சினிமா

March 22, 2009 · Posted in அறிவிப்புகள் · 28 Comments 

சினிமா தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருக்கிறது. இந்தியாவிலே
தமிழகம் தான் தொடர்ச்சியாகத் தனது தலைவர்களைத் திரையரங்குகளிலே தேடிக்
கொண்டிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவுகளில் சினிமா குறித்து பல நல்ல விமர்சனங்களும், ஆய்வுகளும்
வெளி வந்து கொண்டிருக்கின்றன. வெகுஜன ஊடகங்களில் கூட வெளிவராத பல நல்ல
விமர்சனங்களையும், திறனாய்வுகளையும் வலைப்பதிவுகளில் தான் காண முடிகிறது.
இத்தகைய நல்ல விமர்சனங்களைத் தனியாகத் தொகுப்பதன் மூலம் பலரை இந்த படைப்புகள் இலகுவாகச் சென்றடையும் எனத் தமிழ்மணம் நம்புகிறது.

எனவே இதற்கென ஒரு தனிப்பகுதியாக “தமிழ்மணம் சினிமா” என்ற பகுதியை
தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம் –
http://cinema.tamilmanam.net

Tamilmanam Cinema

பதிவர்கள் தங்கள் இடுகைகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் இதனை
தனியாக திரட்டுகிறது. இடுகைகளை எழுதி தமிழ்மணத்திற்குச் சமர்ப்பிக்கும் பொழுது
சரியான குறிச்சொல்லுடன் எழுதினால் அந்த இடுகைகள் தமிழ்மணம்
சினிமா
பகுதியில் வெளியாகும்

இந்தப் புதிய பகுதி தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஓர் இனிய வலைப்பதிவு அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்

குறிச்சொற்கள்

சினிமா, Cinema போன்ற குறிச்சொற்கள் பொதுவான சினிமா பகுதிகளில் வெளியாகும்

திரைவிமர்சனம் போன்ற குறிச்சொற்கள் திரைவிமர்சனம் பகுதியில் வெளியாகும்

சினிமாவை அடிப்படையாக கொண்ட தளங்களில் இருந்து திரட்டப்படும் இடுகைகள் சிறப்பு இடுகைகள் பகுதியில் வெளியாகும்

இசை மற்றும் அது சார்ந்த குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இசை என்ற பகுதியில் வெளியாகும்

சின்னத்திரை, தொலைக்காட்சி போன்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் சின்னத்திரை பகுதியில் வெளியாகும்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாக தமிழ்மணம் திரட்டுகிறது

பதிவர்கள் செய்ய வேண்டியது

பதிவர்கள் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்தப் புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

பதிவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது – தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்யும் பொழுது கொடுத்த மின்னஞ்சல் முகவரியும், Gravatar தளத்தில் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரியும் ஒரே முகவரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்கள் புகைப்படம் திரட்டப்படும்

Gravatar என்றால் என்ன ?

நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக உள்ள தொழில்நுட்பம் தான் Gravatar – globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

செய்திப் பதிவுகள்

March 4, 2009 · Posted in அறிவிப்புகள் · 14 Comments 

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும் விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

இவைத்தவிர தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப்பட்டு நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாத பதிவுகளையும், பழுதான பதிவு ஓடைகளையும் தமிழ்மணம் திரட்டியின் பராமரிப்பிற்காக நீக்க முடிவு செய்துள்ளோம் என்பதையும் பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்

இது குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்,
தமிழ்மணம்