Archive for January, 2009

முத்துகுமாருக்கு அஞ்சலியும், வேண்டுகோளும்

Friday, January 30th, 2009

ஈழப்பிரச்சனையை முன்னிட்டு தீக்குளித்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர் சகோதரர் முத்துக்குமாருக்கு தமிழ்மணம் தன்னுடைய அஞ்சலியை செலுத்துகிறது. இவ்வளவு கொடிய முறையில் தம் மகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ்மணம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலே உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு போராட்டத்தை முத்துக்குமார் மேற்கொண்டதை நாம் விரும்பவில்லை. இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்படவேண்டும். அதே நேரத்தில் முத்துக்குமார் மரணம் அடைந்து விட்ட நிலையில் அவரது ...

முதற்கட்ட வாக்குப்பதிவு நீட்டிப்பு

Sunday, January 18th, 2009

தமிழ்மணம் விருதுகள் 2008ற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் இதுவரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி. அதிக எண்ணிக்கையிலான இடுகைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், பதிவர்களின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டியுள்ளமை மகிழ்ச்சியை அளிக்கிறது. நிற்க. முதற்கட்ட வாக்கெடுப்பில் எமது தரவுத் தளத்தில் ஏற்பட்ட வழுவின் காரணமாக சில வாக்குகளின் பிரிவுகள் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புபட்ட பதிவர்களுக்கு மட்டும் சிறப்பு மின்னஞ்சல் மூலம் தங்கள் வாக்கினை மீள அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு ...

புத்தாண்டு பொங்கும் வாழ்த்து

Wednesday, January 14th, 2009

தமிழ்மணம் பதிவர்கள், வாசகர்கள், பயனாளர்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கும் வாழ்த்து. தமிழ்மணம்

முதற் கட்ட வாக்கெடுப்பு - தமிழ்மணம் விருதுகள் 2008

Sunday, January 11th, 2009

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தமிழ்மணம் விருதுகள் 2008ன் முதற்கட்ட வாக்கெடுப்பு இன்று முதல் (சனவரி 12) தொடங்குகிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும். தற்சமயம் பதிவர்கள் வாக்கிடுவதற்கான சிறப்புத் தொடுப்பினை உள்ளடக்கிய மின்னஞ்சல் பதிவர்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு இன்றிலிருந்து சனவரி 18ம் தேதி வரை நடைபெறும். வாக்களிப்பது பற்றிய சில குறிப்புகள்: 1. பிரிவுக்கு ஒன்றாக 12 பிரிவுகளிலும் பதிவர்கள் வாக்களிக்க ...

இறுதிப் பரிந்துரைகளும், தவறான பரிந்துரைகளைச் சரி செய்தலும்

Wednesday, January 7th, 2009

தமிழ்மணம் விருதுகள் 2008க்கான பரிந்துரைகள் நாளை(சனவரி 8 ) இரவோடு நிறைவு பெறுகின்றன. இதுவரை பரிந்துரை செய்யாதவர்களும், தங்களது முன்னைய பரிந்துரைகளை மாற்ற விரும்புபவர்களும் இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனைய பதிவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகள் பரிந்துரைகள் பக்கத்தில் காணக்கிடைக்கின்றன. விருதுப் பரிந்துரையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு வழுவினால் 2008க்கு முன்னர் எழுதப்பட்ட இடுகைகளும் பரிந்துரைப் பக்கத்தில் தெரிந்தது. அஃது விரைந்து சரி செய்யப்பட்டு விட்டாலும் சில பதிவர்கள் ...

உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா?

Friday, January 2nd, 2009

உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா? இல்லையெனில் சனவரி 7 வரை உங்களுடைய இடுகைகளை நீங்கள் பரிந்துரை செய்ய இயலும். இதுவரை பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளை இன்று முதல் பரிந்துரைகள் பக்கத்தில் காணலாம். மேலும் இப் போட்டி சார்ந்த சில விதிகளையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் விருதுகளுக்கான தேர்வுகளில் தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்களின் இடுகைகளும் இடம்பெறுகின்றன. தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்கள் ஏனைய பதிவர்கள் போலவே போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும். ஆனால் விருதுக்கான இறுதித் ...

புத்தாண்டு வாழ்த்து

Thursday, January 1st, 2009

தமிழ்ப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டில் தமிழ்ப்பதிவுகள் மேலும் சிறக்கட்டுமென்று தமிழ்மணத்தின் உளங் கனிந்த நல்வாழ்த்து! Wishing all Tamil Bloggers and Readers, a Very Happy, Healthy, Peaceful and Prosperous Blogging in 2009!