தமிழ்மண வானிலை அறிக்கை

November 29, 2008 · Posted in அறிவிப்புகள் · 9 Comments 

Techtalk

1. இப்ப எதுக்கு இந்தப் பழைய கதையெல்லாம்? விருது பத்தி மேல சொல்லுங்கப்பா…
2. மன்னிச்சுக்குங்க போன வாரம் ஒடம்பு சரியில்ல.

1. அடடா… இப்போ பரவால்லியா?* (அது பத்தி எங்களுக்கு என்னப்பா கவலை!) :-)*
2. ஓ… சுறுசுறுப்பா எறங்கீட்டேன். விருது பத்தி வர்ற வாரம் பேசிக்குவோமா?

தமிழ்மணம் விருதுகள் 2008

Tamilmanam Blog Awards 2008

1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க?
2. ஏன், இன்னைக்கே கூட போட்டுடலாம்.

1. முழுமையான அறிவிப்ப வெளியிடப் போறோமா, இல்லை முன்னோட்ட அறிவிப்பு மட்டும் தானா?
2. இப்போதைக்கு முன்னோட்ட அறிவிப்பு மட்டும் போதும்.

1. ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால…
2. அப்போ ஏற்பட்ட குழப்பங்கள் இந்த முறை இருக்காது. தெரிவை எளிமையாக்குறதுக்கான நிரல்கள் பாதி தயாரா இருக்கு. இன்னும் சில நாட்கள்ல முழுமையான சோதனைய நடத்திப் பார்த்திடலாம்.

1. அப்படின்னா முழுமையான அறிவிப்பையே வெளியிட்டுடலாமே?
2. வேண்டாம். முழுமையான அறிவிப்பை நிரல் சோதனைகள் முடிஞ்சபின்னாடி வெளியிடலாம். இப்போதைக்குப் பதிவர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருக்குற தகவலை மட்டும் சொல்லிடலாம். சரியா?

சொன்னதும், செய்யிறதும்

November 24, 2008 · Posted in சிறப்பிடுகைகள் · 16 Comments 

1. கீழ இருக்கற இந்தப் படத்தைத் தான் தமிழ்மணம் முகப்பிலயும், தமிழ்மணம் வலைப்பதிவிலையும் சிறப்பிடுகைகள் பிரிவில போடப் போறேன்.
2. ஏற்கனவே பதிவர்கள் நம்மளை திட்டுறது காணாதுன்னு இப்ப நமக்கு நாமே திட்டத்தில் நாமே திட்டிக்க போறோமா?

1. இத நாங்க சுயபரிசோதனைன்னு விளம்பிக்குவோம்.
2. 🙂

1. இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தான் தெரியலை. தலைப்பு கடன் தர முடியுமா?
2. “நாங்க சொன்னதையெல்லாம் செஞ்சதும் இல்லை, அதுக்காக எதுவும் செய்யாமலும் இல்லை”

1. இது எனக்குப் பிடிச்சிருக்கு. நன்றி.

Teaser - 2

கேள்விக்குறியா ?? ஆச்சரியக்குறியா !!

November 22, 2008 · Posted in அறிவிப்புகள் · 32 Comments 

1 : இந்தப் படத்தை தமிழ்மணம் முகப்பிலயும் வலைப்பதிவுலயும் இணைச்சிடுறீங்களா?
2 : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் இது எதுக்காக?

1 : அத உங்களோட ஊகத்துக்கே விட்டுடறேன்.
2 : பதிவர்கள் கேட்டா என்னன்னு சொல்றது ?
1 : அவங்களும் ஊகிக்கட்டுமே.
2 : சரியா ஊகிக்கறவங்களுக்கு சிறப்புச் சலுகை/பரிசு எதுவும் உண்டா ?
1 : 🙂

2 : இது கேள்விக்குறியா இல்ல ஆச்சரியக்குறியா?
1 : உங்களுக்கு எது வசதியோ அதையே வைச்சிக்கோங்க.

தமிழ்மணம் & பதிவுகள் இயங்குவேகம் தொடர்பான பிரச்சனைகள்

November 19, 2008 · Posted in தமிழ்மணம் · 12 Comments 

தமிழ்மணம் தளத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டன. தமிழ்மணத்தில் புதிய இடுகைகளை இணைப்பது, பதிவுகளில் தமிழ்மணம் பதிவுப்பட்டையின் தறவிறக்கம் போன்றவை மிக வேகமாக இயங்குவதை எங்களின் சோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தமிழ்மணம் கருவிப்பட்டை மட்டுமே பதிவுகளை தாமதப்படுத்துவதாக பல பதிவர்கள் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சனை முழுவதுமாக தற்பொழுது சரி செய்யப்பட்டு விட்டாலுங்கூட சில தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

– தமிழ்மணம் நிரலி தவிர பதிவர்கள் பல விதமான நிரலிகளை தங்கள் பதிவுகளில் இணைத்துள்ளனர். இந்த நிரலிகளும் பதிவுகளின் தரவிறக்கத்தை தாமதப்படுத்துகிறது. தமிழ்மணம் நிரலி மட்டுமே உள்ள பதிவுகளின் தரவிறக்கம் வேகமாக உள்ளதை எங்கள் சோதனைகளில் உறுதி செய்திருக்கிறோம். உதாரணமாக இந்தப் பதிவில் தமிழ்மணத்தின் பதிவுப்பட்டை இரு முறை தோன்றியுள்ளது. http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_18.html
ஆனாலும், இது வேகமாக தரவிறக்கமாகிறது. மாறாக, வேறு நிரலிகள் இணைக்கப்பட்ட பதிவுகள், குறிப்பாக Google Analytics சார்ந்த நிரலிகள் கொண்ட பதிவுகள் தரவிறக்கமாக தாமதமாகிறது.

– இது தவிர ஐ.பி.எண்களை காட்டும் நிரலிகளும் பதிவுகளின் தரவிறக்கத்தை தாமதம் செய்கிறன.

– தமிழ்மணம் நிரலியிற்கூட பதிவர்களின் புகைப்படங்களை திரட்டும் Gravatar நுட்பமே தமிழ்மணம் பதிவுப்பட்டை பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது. தற்காலிகமாக Gravatar மூலமாக புகைப்படம் திரட்டுதலை நிறுத்தியுள்ளேம்.

பதிவர்கள் தற்பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டுமில்லாது, பதிவுகளை திரட்டுவதும் வேகமாக உள்ளதை உணரலாம். வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை பதிவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். விரைவாக சரி செய்ய முயல்வோம்

கடந்த சில நாட்களாகத் தமிழ்மணம் தளத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு வருந்துகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணத்திலே இடுகைகளைச் சேர்த்தல்

November 17, 2008 · Posted in அறிவிப்புகள் · 23 Comments 

தமிழ்மணம் வழங்கியின் பராமரிப்பு தொடர்பான வேலைகள் முடிவடைந்து, தமிழ்மணம் வழக்கமான சேவைக்குத் திரும்பியிருக்கின்றது.

எனினும், பதிவர்கள் புதுஇடுகைகளைத் தமது பதிவுகளிலிருந்தே தமிழ்மணத்துக்குச் சேர்ப்பதிலே தடங்கலிருக்கின்றதாகத் தெரிகின்றது. புதிய இடுகைகளைச் சேர்க்கும்போது, “புதிய இடுகைகள் காணப்படவில்லை” என்ற செய்தி கிட்டுகிறது.

தற்போதைக்கு பதிவர்கள் தமிழ்மணத்தின் முன்பக்கத்திலே “இடுகைகளைப் புதுப்பிக்க” வசதியினூடாக, தம் பதிவு முகவரியினைத் தருவதன்மூலம், வழக்கம்போலவே புதிய இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கலாம்.

தம் பதிவுகளிலிருந்து நேரடியாகப் புதிய இடுகைகளை அறியத்தரும் நுட்பத்திலிருக்கும் குறைபாடு விரைவிலே களையப்பட்டுத் தொழிற்படுவதற்கான முயற்சி செய்கிறோம்.

புரிந்துணர்வோடு தொடரும் ஆதரவுக்கு நன்றி.

பின்னிணைப்பு
நவம்பர் 18, 2008
தற்போது, இடுகைகளைப் பதிவிலிருந்தே இணைக்கும் சேவை தொழிற்படுகிறது

தமிழ்மணம் சேவையில் மாற்றங்கள்

தமிழ்மணம் வழங்கியில் (Server) எதிர்கொண்டு வரும் பிரச்சனை காரணமாக தமிழ்மணம் சேவையில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம்.

அதிகப்படியான பதிவர் வருகை தவிர, தமிழ்மணம் தளம் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் வலைப்பதிவு உலகின் அனைத்து பதிவுகளையும் வைத்துள்ளதும் தமிழ்மணம் தளத்தின் வழங்கிக்கு பலுவை ஏற்படுத்துகிறது. இவை தவிர மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொல் திரட்டுதல், சூடான இடுகைகள் போன்றவையும் தமிழ்மணம் வழங்கிக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறது.

இதுவே தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி விடுவதற்கான காரணம்.

புதிய வழங்கிக்கு விரைவில் மாறும் திட்டம் இருந்தாலும், தற்காலிக ஏற்பாடாக சில மாற்றங்களை செய்திருக்கிறோம். இந்த மாற்றங்களால் தமிழ்மணம் தளம் பிரச்சனையின்றி இயங்கவும், பதிவுப்பட்டை போன்றவை வேகமாக தறவிறக்கவும் உதவும் என நம்புகிறோம்.

சேவை மாற்றங்கள்
– சூடான இடுகை பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக வாசகர் பரிந்துரைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பதிவர்களின் பதிவுப்பட்டையில் இருந்தே வாக்களிக்கும் இந்த முறை மூலம் வாசகர்களால் தேர்வு செய்யப்படும் இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரியும். இதனை பதிவர்களும்/வாசகர்களும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்

– பதிவுகளின் மறுமொழிகளை திரட்டும் வசதியில் கடந்த 20 நாட்களில் எழுதப்பட்ட பதிவுகளின் மறுமொழிகள் மட்டுமே திரட்டப்படும். பழைய பதிவுகளின் மறுமொழிகள் திரட்டப்படாது

இந்த மாற்றங்கள் காரணமாக தமிழ்மணம் தளம், பதிவுப்பட்டை போன்றவை சற்று வேகமாக இயங்கும் என நம்புகிறோம். தமிழ்மணம் தளம் முடங்கிப் போகாது.

இந்த சேவை மாற்றங்கள் பதிவர்கள்/வாசகர்களுக்கான சில வசதிகளை குறைத்தாலும், இந்த மாற்றங்கள் புதிய வழங்கிக்கு மாறும் வரை மட்டுமே என்பதை தெரிவித்து கொள்கிறோம். புதிய வழங்கி மாற்றத்திற்கு பின் மறுபடியும் அனைத்து சேவைகளும் வழக்கம் போல இயங்கும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் வழங்கி பிரச்சனைகள் (Server Problems)

தமிழ்மணம் தளம் செயல்படும் வழங்கியிலே இருந்து வரும் தொடர் பிரச்சனைகளால் தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி விடுவதை கடந்த சில வாரங்களாக எதிர்கொண்டு வருகிறோம். அதிகப்படியான வாசகர்/பதிவர் வரவு இதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

இதனை சமாளிக்கவும், எதிர்காலங்களில் தமிழ்மணத்திற்கு வரக்கூடிய புதிய வாசகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தமிழ்மணம் தளத்தை அடுத்த சில நாட்களில் வேறு ஒரு மேம்பட்ட வழங்கிக்கு மாற்ற இருக்கிறோம். இந்த வழங்கி மாற்றம் தமிழ்மணம் தளத்தை மேம்படுத்தவும், தளத்தின் வேகமான தறவிறக்கத்திற்கும் உதவும் என நம்புகிறோம்.

அதுவரையிலும் தமிழ்மணம் தளத்தின் செயல்பாட்டிலே சில பிரச்சனைகள் அவ்வப்பொழுது நேரலாம் என்பதை பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்