தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி – ”ம” திரட்டி

May 25, 2008 · Posted in அறிவிப்புகள் · 8 Comments 

மறுமொழிகளுக்கு மென்நூல் வசதி, அச்சு வசதி, ஒரு பதிவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே இடத்தில் வாசிக்கும் வசதி, அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி என பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தமிழ்மணத்தின் மறுமொழி திரட்டியான “’ம’ திரட்டியை” வெளியிடுகிறோம்.

ம திரட்டி – http://www.tamilmanam.net/m/thiratti.html

வேறு எந்த தளத்திலும் (ஆங்கில தளங்கள் உட்பட) இல்லாத வகையில் மறுமொழிகள் சார்ந்த பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த மறுமொழிகள் திரட்டி வெளியாகிறது. இது ஏற்கனவே PoC வடிவத்தில் இருந்த ம திரட்டியின் பீட்டா வடிவம்.

தமிழ் வலைப்பதிவுகளில் மறுமொழிகளுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கு உண்டு. ஒரு இடுகையை விட அதன் மறுமொழிகளுக்கே அதிக கவனம் பல நேரங்களில் ஏற்படுகிறது. ஆனாலும் இந்த மறுமொழிகளை சரியாக தொகுக்க முடியாத ஒரு நிலையே இருந்து வந்திருக்கிறது. வேர்ட்பிரஸ், cocomment போன்ற தளங்களில் சில சேவைகள் வழங்கப்பட்டாலும் மறுமொழிகளை முழுமையாக தொகுக்கக்கூடிய ஒரு வடிவம் இல்லை.

தமிழ்மணத்தின் மறுமொழிகள் திரட்டி வலைப்பதிவர்களுக்கு தேவையான பல வசதிகளுடன் வெளியாகிறது. இந்த வசதிகளை தொடர்ந்து கூகுள் ரீடர் போன்றவற்றில் மிகவும் இலகுவாக மறுமொழிகளை வாசிக்கும் வகையில் ‘ம’ திரட்டி செய்தியோடையையும் வழங்க இருக்கிறது.

ம திரட்டி பதிவுகளின் மறுமொழிகள் ஓடையை கொண்டு திரட்டுவதால் ப்ளாகர், வேர்பிரஸ்.காம் தளங்களை திரட்டுகிறது. மறுமொழிகள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது. தற்பொழுது இந்த வசதி ப்ளாகர், வேர்ட்ஸ்பிரஸ்.காம் போன்ற பதிவுக்கு மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. தனித்தளங்களில் இயங்கும் பதிவுகளுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை

”ம” திரட்டியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்

– ஒவ்வொரு இடுகை பெறும் மறுமொழிகளின் எண்ணிக்கை மட்டுமே இது வரை தமிழ்மணத்தில் தெரிந்தது. இனி யார் எழுதினார்கள், பின்னூட்டங்களின் சாராம்சம் போன்றவையும் தெரியும்

– ஒருவர் இடும் மறுமொழிகளை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி. உதாரணமாக பதிவர் கானா பிரபா எழுதிய அனைத்து மறுமொழிகளையும் இங்கே வாசிக்க முடியும்
http://www.tamilmanam.net/comments/கானா பிரபா

– அவர் எழுதிய ஒவ்வொரு மறுமொழியையும் தனித்தனியாக மென்நூலாக பெற முடியும்.
http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_single_pdf.php?id=7261&a.pdf

– அவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே மென்நூலாகவும் பெற முடியும்
http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_author_ebook.php?author=கானா பிரபா&a.pdf

– ஒரு இடுகை, அதன் மறுமொழிகள் என அனைத்தையும் மென்நூலாக பெற முடியும்
http://www.tamilmanam.net/m/thiratti.html

– மென்நூலைப் போலவே அச்சு வசதியும் அனைத்து மறுமொழிகளுக்கும் செய்யப்பட்டுள்ளது

– அதிகளவில் எழுதப்படும் மென்நூல்களை கொண்டு சூடான இடுகைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
இது ”ம” திரட்டிக்கான சூடான இடுகைகள் பகுதி ஆகும்

– அதிகளவில் மறுமொழிகள் எழுதும் பதிவர்களின் நிலவரம்

பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் வெளியாகும் இந்த புதிய ‘ம’ திரட்டி வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்

அன்புடன்,
தமிழ் சசி
தமிழ்மணம்

இணையத்தில் வளர்தமிழ் – திருநெல்வேலியில் கருத்தரங்கம்

May 22, 2008 · Posted in அறிவிப்புகள் · 9 Comments 

வரும் ஜுன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் ”இணையத்தில் வளர்தமிழ் – வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும்” என்ற கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மாவட்டக் ஆட்சித்தலைவர் திரு. கோ. பிரகாஷ், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் “இணையத்தில் வளர்தமிழ்” என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். தமிழ்மணம் நிர்வாகத்தைச் சார்ந்த முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

பேராசிரியர் தொ. பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர்கள் தீன், பிரபாகர் இன்னும் பலர் சொற்பொழிவாற்றுகிறார்கள். பல தமிழ் அறிஞர்களும், புரவலர்களும் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பயன்படுத்தித் தமிழாய்வை மேலும் செழுமையாக்கும் வழிமுறைகளும் கணி சாராத பெருவாரித் தமிழ் மக்களுக்கு இணையத்தின் பயன்களைக் கொண்டு செல்தலும் பற்றிக் கலந்து ஆலோசிப்பது கருத்தரங்க நோக்கங்களாம்.

வலைப்பதிவர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கணிஞர்களும், தமிழ்க் கணிமை ஆர்வலர்களும் வருகைதந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறோம்.

கருத்தரங்க நிகழிடம்: விஜயா கார்டன்ஸ், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி – 5
நேரம்: மாலை 5 மணி, சனிக்கிழமை, ஜூன் 7 (07/06/2008)

இன்றைய அனைத்து இடுகைகளும், மறுமொழிகளும்

May 12, 2008 · Posted in அறிவிப்புகள் · 11 Comments 

புதிய தமிழ்மணத்தில் இன்றைய அனைத்து இடுகைகள் பக்கமும், மறுமொழிகள் பக்கமும் லோட் ஆவதற்கு மிக அதிக நேரம் எடுப்பதாக பதிவர்கள் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பக்கமாக பார்க்கும் வசதியும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியும் உள்ளது. ஒரே பக்கத்தில் அனைத்து இடுகைகளும் லேட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது வேகமாக லோட் ஆகும் என நினைக்கிறோம்.

இன்றைய அனைத்து இடுகைகளும்
http://tamilmanam.net/tamil/blogs/today.html

இன்றைய அனைத்து மறுமொழிகளும்
http://tamilmanam.net/tamil/blogs/feedback.html

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

புதிய தமிழ்மணம் – Problems in Slow Internet Connection

May 10, 2008 · Posted in அறிவிப்புகள் · 7 Comments 

தமிழகம், இலங்கை போன்ற இடங்களிலும் மற்றும் Slow Internet Connection கொண்டவர்களுக்கும் புதிய தமிழ்மணம் லோட் (Load) ஆவதில் சில பிரச்சனைகள் இருந்தன. முகப்பு பக்கம் லோட் ஆவதற்கு 1:30 நிமிடத்திற்கும் மேல் எடுப்பதாக தமிழ்மணம் பயனர்களும், நண்பர்களும் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

அஜாக்ஸ் (Ajax) நிரலில் இருந்த ஒரு bug காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கே அமெரிக்காவில் இணையம் மிக அதிக Bandwidthன் இருப்பதால் இந்தப் பிரச்சனை எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் குறைந்த Bandwidth கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்துள்ளது. அஜாக்ஸ் நிரலில் இருந்த சில பிரச்சனைகளால் உலாவி (browser) சில நொடிகள் உறைந்து போவது (freeze/stuck) போன்ற பிரச்சனைகளும் இருந்தன.

இந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் புதிய தமிழ்மணம் பழைய தமிழ்மணம் போலவே மிக வேகமாக லோட் ஆகும். அது போலவே தமிழ்மணத்தின் முழு வடிவமும் (Full Version) வேகமாக லோட் ஆகும் என நிம்புகிறோம். என்றாலும் இன்னும் மேலதிக சோதனைகள் செய்யும் வரை தற்போதைய வடிவமே (Short Version) தொடரும். தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தால், பதிவர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் மூலம் எங்களுக்கு தெரிவிக்கலாம். பிரச்சனைகளை நிச்சயம் சரி செய்வோம்.

தமிழ்மணம் தற்பொழுது பீட்டா பதிப்பில் இருப்பதால் சில பக்கங்களில் பிரச்சனைகள் உள்ளன (இன்றைய அனைத்து பதிவுகளும், மறுமொழிகள் போன்ற பக்கங்களில்). விரைவில் இதனை சரி செய்து முழுமையான பதிப்பினை வெளியிடுவோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

புதிய தமிழ்மணம் – பீட்டா வடிவம்

புதிய தமிழ்மணத்தின் சோதனை வடிவத்தை (பீட்டா) தற்பொழுது வெளியிட்டுள்ளோம். இந்த புதிய தமிழ்மணம் மேம்படுத்தப்பட்ட் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வெளியாகிறது.

புதிய தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை அடுத்த வரும் நாட்களில் தொடர்ச்சியாக இந்த வலைப்பதிவின் மூலமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

தற்போதைய சில முக்கிய குறிப்புகள்

குறிச்சொல் சார்ந்த பல்வேறு வசதிகளை தமிழ்மணம் இந்த புதிய பதிப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது வரை இருந்த தமிழ்மணம் வகைப்படுத்தல் இனி முற்றிலுமாக நீக்கப்படும். பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் வகைப்படுத்தும். ஒரு குறிச்சொல் சார்ந்த தொடர்புடைய குறிச்சொல் போன்றவற்றை வழங்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.

மென்நூல், அச்சு வசதி போன்றவற்றை தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் கொண்டு வந்திருக்கிறோம்

மேலதிக சேவைகள் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு பதிவரின் கடந்த சில இடுகைகளை வாசிக்கும் வசதியை இந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறோம். படிப்படியாக மேலும் பல சேவைகளை இந்தப் பகுதியில் வழங்க இருக்கிறோம்.

செய்தியை அடிப்படையாக கொண்டு செயல்படும் பதிவுகளுக்கு தனி பக்கத்தை வழங்கியுள்ளோம். சுயமான எழுத்துக்களை முன்வைக்கும் பதிவுகள் மட்டும் முகப்பு பக்கத்தில் வெளியாகும்

தமிழ்மணத்தில் இணைக்கப்படாத பதிவுகளை கேளிர் திரட்டி மூலமாக தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. கேளிர் திரட்டியால் திரட்டப்படும் பதிவுகளின் உள்ளடக்கத்திற்கு தமிழ்மணம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. கூகுள் (Google Blog search) மற்றும் பதிவுகளின் ஓடை (RSS feed) என்ற இரண்டையும் கொண்டு கேளிர் திரட்டி செயல்படுகிறது. இந்த திரட்டியில் இருந்து பதிவுகளை சேர்த்தல்/நீக்குதல் போன்றவற்றை தமிழ்மணம் ஊக்குவிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரட்டி கூகுளை கொண்டே செயல்படுகிறது.

துறை சார்ந்த பதிவுகளை தமிழ்மணம் ஊக்குவிக்கிறது. துறை சார்ந்த பதிவுகளுக்கு தனி பக்கத்தை தமிழ்மணம் வழங்குகிறது

பழைய தமிழ்மணம் சில உலாவிகளில் (browser) சரியாக தெரிவதில்லை என்ற பிரச்சனை இருந்தது. புதிய தமிழ்மணம் அனைத்து உலாவிகளிலும் – Firefox, Internet Explorer 7, Opera, Safari சரியாக தெரியுமாறு வடிவமைத்து உள்ளோம். IE6.0ல் வடிவமைப்பில் மட்டும் சில பிரச்சனைகள் இருக்கலாம். பதிவர்களை IE7.0, FireFox போன்றவற்றை பயன்படுத்த தமிழ்மணம் ஊக்குவிக்கிறது.

அது போலவே புதிய தமிழ்மணம் 1024×768 resolutionல் செயல்படுமாறு வடிவமைத்து இருக்கிறோம். இதை விட மேம்பட்ட resolutionல் தமிழ்மணம் இன்னும் சிறப்பாகவே தெரியும். குறைந்த resolutionல் Scroll செய்து பார்க்க வேண்டிய தேவை இருக்கலாம். என்றாலும் பழைய தமிழ்மணம் போல எழுத்துக்கள் மறைந்து போவது போன்ற பிரச்சனைகள் இருக்காது.

தமிழ்மணத்தில் அதிக பயன்பாடு உள்ள பக்கங்கள் மட்டும் தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற பக்கங்களும் படிப்படியாக மாற்றப்படும். புதிய தமிழ்மணம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளதால், இதில் ஏற்படும் பிரச்சனைகளை, வழுக்களை (bugs) எங்களுக்கு அறியத் தாருங்கள். அதனை களைய முயற்சி எடுப்போம்.

புதிய தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.

நன்றி….

தமிழ் சசி,
தமிழ்மணம்