தமிழ்மணத்தில் புகைப்படங்களை Gravatar மூலம் மாற்றும் வசதி

April 10, 2008 · Posted in அறிவிப்புகள் · 25 Comments 

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாக திரட்டும் புதிய வசதியை தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க முடியாத வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களும் தங்கள் புகைப்படத்தை தமிழ்மணத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.

இது தவிர தமிழ்மணம் கருவிப்பட்டை வாயிலாகவும் உங்கள் புகைப்படங்களை மாற்றிக்கொள்ள இயலும். அது குறித்த செய்முறைக்கு இந்த இடுகையை பார்க்கலாம் – http://blog.thamizmanam.com/archives/120

Gravatar என்றால் என்ன ?

நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் Gravatar – globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக நாம் பல வலைத்தளங்களில் மறுமொழிகளை இடும் பொழுது இது மிகுந்த உதவியாக இருக்கும்.

இந்த வசதி வேர்ட்பிரஸ் 2.5ல் உள்ளது. ப்ளாகரில் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தை இப்பொழுது தமிழ்மணத்திலும் ஏற்படுத்தியிருக்கிறோம்.

பதிவர்கள் செய்ய வேண்டியது

பதிவர்கள் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்த புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பயன்படுத்தியும், Gravatar மூலமாகவும் தமிழ்மணத்தில் பதிவர்கள் தங்கள் புகைப்படங்களை மாற்றிக் கொள்ளலாம்.

பி.கு.

  • Gravatar நுட்பத்திற்கு மாற்றாக openvatar என்ற புதிய தொழில்நுட்பமும் உள்ளது. ஆனால் இது தற்பொழுது alpha பதிப்பில் உள்ளது.
  • Openid தொழில்நுட்பமும் விரைவில் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கலாம்.

வேர்ட்பிரஸில் Gravatar பயன்படுத்த இந்தச் சுட்டியை பார்க்கலாம் – Gravatars and WordPress 2.5

Gravatar யோசனையை அளித்த நண்பர் ரவிசங்கருக்கு நன்றி…

நன்றி…

தமிழ் சசி
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் மென்நூல் (PDF) வசதி

April 4, 2008 · Posted in அறிவிப்புகள் · 14 Comments 

தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகைகளை மென்நூலாக (PDF) பெறும் வசதி ப்ளாகரின் சமீபத்திய மேம்பாடுகளுக்கு பிறகு வேலை செய்ய வில்லை. ப்ளாகர் தமிழ் குறியீட்டு முறை காரணமாக இருந்த இந்தப் பிரச்சனைகள் இப்பொழுது சரி செய்யப்பட்டு விட்டன.

ப்ளாகர் தமிழ் குறியீட்டில் இருந்த சில பிரச்சனைகளை சரி செய்ய ஆலோசனைகள் வழங்கிய நண்பர் சுரதாவிற்கு எங்களது நன்றி…

பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையை (Toolbar) தங்கள் பதிவுகளில் இணைத்தால் போதுமானது. இதன் மூலம் ப்ளாகர், வேர்ட்பிரஸ் மென்பொருள் பயன்படுத்தும் பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற முடியும். வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களுக்கு வேறு வசதி செய்யப்படும்.

தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்படும் செய்தியோடைகளில் இருந்து இடுகைகள் திரட்டப்படும் என்பதால் செய்தியோடைகளில் முழு இடுகையும் இருக்குமாறு அமைக்க வேண்டும் (Blog Posts Feed – Full Feed).

அன்புடன்,
தமிழ் சசி
தமிழ்மணம்