Thursday, February 28th, 2008
இன்று (பெப்ருவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விரைவிலே தமிழ்மணத்தினை வழக்கமான செயற்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள் | No Comments »
Thursday, February 21st, 2008
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இணைய நுட்பங்களின் ஓர் அங்கமாகச் செல்பேசிகள் மற்றும் நகர்கணிகள் வழியாகத் தரவுப்பரிமாற்று வசதி அமைந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் பல வசதிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய தமிழ்மணம் இப்போது செல்பேசிகளிலும் தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டியினைக் காணும் வசதியினை வெளியிடுகிறது. இந்தச் செல்பேசித் திரட்டியைக் கீழ்க்காணும் முகவரியில் காணலாம்.
http://m.thamizmanam.com
இவ்வசதியானது தமிழ் ஒருங்குறி (Tamil Unicode) வசதி அமையப்பெற்ற செல்பேசிகள், நகர்கணிகள், கைக்கணிகள் முதலியனவற்றில் மட்டுமே தெரியும். காட்டாக, ...
Posted in அறிவிப்புகள் | 19 Comments »