அண்மைய சில இடுகைகள்

January 31, 2008 · Posted in அறிவிப்புகள் · 35 Comments 

பதிவர்களுக்கு,
கடந்த சில நாட்களாகச் சில பதிவர்கள் ஒரு பகுதி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு பலரை முகம் சுளிக்க வைக்கும் இடுகைகளைத் தமிழ்மணத்தில் இணைத்து வருவதைப் பல பதிவர்களும், வாசகர்களும் எமக்குத் தெரியபடுத்தி வருகிறார்கள். பதிவர்களின் கருத்துரிமையில் தலையிடும் நோக்கம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இல்லையெனினும், இப்போக்கால் பெருவாரியான பதிவர்கள், வாசகர்கள் தமிழ்மணத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு இத்தகைய, வெறும் பரபரப்பு மதிப்பிற்காக எழுதப்படும் இடுகைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது மேலும் தொடருமானால் பெருவாரியான பதிவர்கள்/வாசகர்களின் தேவைகள், ஆர்வங்கள் ஆகியவற்றைக் கருதி அத்தகைய இடுகைகள் நீக்கப்படும் அல்லது பதிவுகளைத் திரட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

பதிவர்களின் புரிந்துணர்விற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

தமிழ்மணம் இடுகைகள்: ஜனவரி 28, 2008

January 28, 2008 · Posted in அறிவிப்புகள் · 1 Comment 

இன்று (ஜனவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. இதன் விளைவாக, இன்று அதிகாலை அளவில் எடுக்கப்பட்ட மாற்றுச் சேமிப்பு (backup) கொண்டு சரிசெய்யப்பட்டுள்ளது. அதிகாலை சில மணி நேரம் சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை.

இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் தங்கள் பதிவை மறுபடியும் தமிழ்மணத்துக்குச் சமர்ப்பிக்கும்போது, இவ்விடுகைகளைத் தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2008

January 1, 2008 · Posted in தமிழ்மணம் · 6 Comments 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ) நிறுவனத்தின் நிறைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக் காட்டியும் டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவண்,
டி.எம்.ஐ நிர்வாகக் குழு

Happy New Year

Tamil Media International LLC (TMI) expresses its gratitude to you for continuously supporting its efforts by rightfully appreciating its services and criticizing its drawbacks. TMI wishes you all a very Happy New Year.
Yours,
TMI Executive Committee