தமிழ்மணம் “ம” திரட்டி

May 24, 2007 · Posted in அறிவிப்புகள் · 10 Comments 

தமிழ்மணத்தின் மறுமொழிகள் திரட்டி – “ம” திரட்டி யின் ஆரம்பகட்ட அடிப்படைச்சோதனை வடிவத்தை – தற்பொழுது வெளியிட்டுள்ளோம். பதிவுகளின் திரட்டி போல அல்லாது மறுமொழிகளின் திரட்டி தமிழ்மணம் வழங்கிக்கு அதிகப் பளுவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதுகிறோம். எனவே “ம” திரட்டியின் செயற்பாட்டிலே வேண்டிய முன்னேற்றம் (Performance improvement), தொழில்நுட்பத்தேவைகள், வாய்ப்புகள் மற்றும் இது குறித்த பதிவர்களின் கருத்துக்கள் போன்றவற்றை அலசுவதற்கு இச்சோதனை வடிவத்தைப் பயன்படுத்திக்கொள்ள இருக்கிறோம்.

தற்போதைய நிலையில் இந்த திரட்டியில் சில பதிவுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன; பல பதிவுகளைச் சேர்க்கவில்லை. “ம” திரட்டியில் பதிவுகளைச் சேர்ப்பதற்கு எந்த அளவுகோலும் வைக்கவில்லை. பரிசோதனைக்காகச் சில பதிவுகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.

“ம” திரட்டிக்கு மறுமொழிகள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது

“ம” திரட்டியின் மூலமாக தமிழ்மணம் மறுமொழிகளைப் புதிய வடிவத்தில், பதிவர்களையும்/வாசகர்களையும் ஈர்க்கும் வடிவத்தில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்த ஆலோசனைகளைப் பதிவர்கள் எங்களுக்கு இந்தப் பதிவின் பின்னூட்டம் மூலமாகவோ, மின்னஞ்சல் ( admin@thamizmanam.com) மூலமாகவோ அனுப்பலாம்.

பதிவுகளின் ஓடையை (OPML) வழங்கிய தமிழ்மணம் நண்பர் சுரதாவிற்கு எங்கள் நன்றி

“ம” திரட்டி உங்களுக்கு ஒரு புதிய வலைப்பதிவு அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம்.