Archive for April, 2007
Monday, April 30th, 2007
கடந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் பல தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்பொழுது வந்த பின்னூட்டங்கள் வாயிலாக பாராட்டுக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
நாங்கள் சொல்லியபடி தமிழ் மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப் படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் முதல் பக்கத்தில் அளிக்கப்படும் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" ...
Posted in சிறப்பிடுகைகள் | 24 Comments »
Sunday, April 22nd, 2007
தோற்றம்
"மனித வர்க்கத்தின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம், சுழற்சி. பூமியின் சுழற்சியில் உள்ளது நம் உயிராதாரம். சுழலும் சக்கரங்கள் மனிதனின் மன வேகத்தை இயந்திரத்தில் ஏற்றி இயக்கிய முயற்சி. மனித வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் நிகழும் அத்தனை மாற்றங்களும் இச்சுழற்சியின் வேகத்தினைப் பொருத்தே அமைகின்றன.
மனிதகுலத்தின் எண்ணச்சுழற்சி, அது வாழும் சமுதாயத்தை அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் பேராற்றல் கொண்டது. சிந்தனையில், செயல்களில், விருப்பங்களில், ஏன் ...
Posted in சிறப்பிடுகைகள் | No Comments »
Sunday, April 22nd, 2007
மக்கள்தொடர்புக்குழு மக்கள்தொடர்புக்குழுவின் கீழான செயற்பாடுகள்
1. டிஎம்ஐ, அதன் பக்கங்கள் தொடர்பான அறிவிப்புகளைச் செய்தல்
2. தமிழ்மணம் அறிவிப்புகள்: வலைப்பதிவுகள் (http://blog.thamizmaNam.com, http://thamizmaNam.blogspot.com)
3. தமிழ்மணம் முகப்பிலே சேர்த்துக்கொள்ளப்படும் அறிவிப்புகள், மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகள்
4. தமிழ்மணம் திரட்டி செயற்பாடுகள்: நிர்வாகம் மின்னஞ்சல் (admin@thamizmaNam.com), வலைப்பதிவு நிர்வாகம் (postadmin@thamizmaNam.com), முறையீடுகள் (complaints@thamizmanam.com)
5. தமிழ்மணம் நட்சத்திரம் தொடர்பான நிர்வாகம்: staradmin@thamizmaNam.com
6. தமிழ்மணம்மீதான பதிவர்களின் கருத்துகளையும் பதிவுகளையும் -வேண்டின், பிற ...
Posted in சிறப்பிடுகைகள் | 7 Comments »
Saturday, April 21st, 2007
''தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு, “பூங்கா எனும் வாராந்திர வலையிதழாக வெளிவரத் தமிழ்மணம் விரும்புகிறது'' என்ற அறிவிப்போடு பூங்காவின் வெளியீடு, உள்ளடக்கம், அதன் நோக்கம் குறித்து விரிவான பதிவு செப்டம்பர் 7, 2006 அன்று வெளியானது. "தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் ...
Posted in சிறப்பிடுகைகள் | 6 Comments »
Friday, April 20th, 2007
தமிழ்மணம் தமிழின் முதல் தானியங்கி வலைப்பதிவு திரட்டி என்பது மட்டுமில்லாது தமிழில் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளைப் பயனர்களுக்குக் கொடுக்கும் முக்கிய தளம் என்பதை பதிவர்கள் அறிவார்கள். உடனுக்குடன் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வாசகர்களுக்கு கொண்டு செல்வது தமிழ்மணத்தின் முக்கியமான சேவை. கூகுள் போன்ற திரட்டிகளில் கூட நம் பதிவு தெரிவதற்குச் சில மணி நேரங்கள் தேவைப்படும் சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் உடனே வாசகர்களின் பார்வைக்கு செல்வதில் ...
Posted in சிறப்பிடுகைகள் | 10 Comments »
Wednesday, April 18th, 2007
பொதுவாகக் கையேடுகள் என்பவை குறுகிய நேரத்தில் நிறைய செய்திகளை எளிய முறையில் சொல்லி, பல்வேறு செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இவற்றைச் சுற்றுலா மையங்கள், கண்காட்சிகள், நூல்நிலையங்கள், மருத்துவமனைகள் என்பவற்றில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். தமிழ் இணையத்தில் உலாவும் அன்பர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு சோதனை முயற்சியே 'தமிழ் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கையேடுகள்'. இவற்றின் நோக்கம், ...
Posted in சிறப்பிடுகைகள் | 5 Comments »
Tuesday, April 17th, 2007
தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி.
(முன் குறிப்பு: இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வித்தியாசமாக இருக்கலாம். இந்தப் பதிவைப் படிக்கும் முன்பாக இதற்கு முந்தைய பதிவான காசியின் மீள்பதிவைப் படிக்க வேண்டுகிறோம். குறிப்பாக பாகம் நான்கில் சொல்லப் பட்டதைப் படியுங்கள். நட்சத்திரத் தேர்வை குறை கூறி எழுந்த இந்த ...
Posted in சிறப்பிடுகைகள் | 14 Comments »
Sunday, April 15th, 2007
தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை
‘தமிழ் மணம்’ காசி ஆறுமுகம்
பாகம் ஒன்று
தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை சுருக்கமாகவேனும் ஓரிடத்தில் எழுதி வைப்போம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் குறுந்தொடர்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/1.html
பாகம் இரண்டு
எப்படியோ விழுந்து எழுந்து, ...
Posted in சிறப்பிடுகைகள் | 8 Comments »
Saturday, April 14th, 2007
அண்மைக்காலமாக தமிழ்மணத்தின் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் குறைந்து ஆதாரமில்லாது பழி சுமத்துவது சில பதிவர்களின் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. தமிழ்மணம், டிஎம்ஐ ஆகியவற்றின்மீது இக்குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் ஒரு திட்டமிட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதலும் நோக்கும் இருப்பதை எம்மைப்போலவே பதிவர்களும் உணர்ந்திருப்பார்கள். தன்மீதான நேர்மையான, முறையான ஆதாரங்களுடனான விமர்சனங்களை, அவை எவையாயினும் தமிழ்மணம் என்றுமே வரவேற்கிறது. நியாயமான விமர்சனங்களை கருத்திலெடுத்துத் தொடர்ந்து குறைகளெனப்பட்டவற்றைக் களைந்து, தளத்தையும் சேவைகளையும் மேம்படுத்தி ...
Posted in அறிவிப்புகள் | No Comments »
Monday, April 9th, 2007
இன்று (9, ஏப்ரல் 2007) தமிழ்மணம் தரவுத்தளம் கறையுற்றதால், தரவுத்தளத்தினை ஏப்ரல் 8, 2007 22:56 கிநிநே வேளையிலே இருந்த நிலைக்கு மீளமைக்க நேர்ந்தது. விளைவாக, ஏப்ரல் 8, 22:56 கிநிநே ~ ஏப்ரல் 9, 23:00 கிநிநே [April 8, 22:56 EST ~ April 9, 23:00 EST] பொழுதுக்கு இடைப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை. இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் தங்கள் ...
Posted in அறிவிப்புகள் | No Comments »