சோதனைப் பதிவு

March 31, 2007 · Posted in அறிவிப்புகள் · 5 Comments 

சோதனைப் பதிவு

தமிழ்மணம் சேவையிலே தடங்கல்: 31, மார்ச் 2007 சனி பின்னிரவு

March 31, 2007 · Posted in அறிவிப்புகள் · Comment 

இன்று, மார்ச் 31, 2006, சனிக்கிழமை, அமெரிக்க கிழக்கு நிர்ணய நேரம் இரவு 10:30 மணியிலிருந்து (31, March 2007 Sat 22:30 EST) சில பராமரிப்பு வேலைகளின் காரணமாக தமிழ்மணம் சேவையில் பல மணி நேரம் பாதிப்பு இருக்கும்.

தமிழ்மணம் சேவை தொடங்கிய பின் அறியத்தருகிறோம்.

இடைப்பட்ட நேரத்திலே தொடர்புகளுக்கு admin@thamizmanam.com மின்னஞ்சலையோ http://thamizmaNam.blogspot.com பதிவினையோ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்தமிழ்மணம்

தமிழ்மணத்தின் சேவையிலே காணப்படும் தாமதம்

March 12, 2007 · Posted in அறிவிப்புகள் · 3 Comments 

தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட இடுகைகளையும் இற்றைப்படுத்தப்பட்ட பின்னூட்டங்களையும் காட்டுவதிலே கடந்த ஞாயிறிலிருந்து (11 மார்ச் 2007) தாமதம் ஏற்பட்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. இந்நிலையை எமக்கு அறியத் தந்த பதிவர்களுக்கு நன்றி.

இந்நிலை கடந்த ஞாயிறு அமெரிக்க நிர்ணய நேரத்திலே ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் விளைவாக இருக்கலாமெனக் கருதுகிறோம்.

விரைவிலே சேவையை வழமைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

இடைப்பட்ட நேரத்திலே தமிழ்மணம்_பயனர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வசதிக்குறைவுக்கு வருந்துகிறோம்.

புரிந்தலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

‘பூங்கா’ பெண்கள் நாள் இதழிற்கான (12, மார்ச் 2007) படைப்புகள்

March 6, 2007 · Posted in அறிவிப்புகள் · 8 Comments 

வரும் மார்ச் 8 ஆம் தேதி பன்னாட்டு மகளிர் தினம்! உலகெங்கும் வாழும் பெண்கள் மொழி, மதம், நாடு, இனம், பண்பாடு, அரசியல் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து “பெண்” என்கிற சிறப்பால் மட்டுமே ஒன்றுபட்டு, கடந்த நூறு ஆண்டுகளாகத் தாம் சந்தித்தப் போராட்டங்கள், சமத்துவம், நீதி, அமைதி, முன்னேற்றங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்து கொண்டாடும் நாள்! ஆண்களுக்கு இணையாக இந்தச் சமூகத்தில் கால் ஊன்றப் பாடுபட்டு சாதித்தப் பெண்களின் வரலாற்றைச் சிறப்பிக்கும் நாள்! இந்த வருட மகளிர் தினத்திற்காக “பெண்கள், சிறுமிகள் மேலான வன்முறையாளர்களைத் தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்கு முடிவு கட்டுதல் (Ending impunity for violence against women and Girls)” என்கிற கருத்தை ஐ.நா சபை அறிவித்திருக்கிறது.

இந்தச் சிறப்பு தினத்தை முன்னிட்டு, மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளிவரும் பூங்கா, பெண்கள் சிறப்பிதழாக வெளிடப்படும். இந்த இதழுக்காக, பதிவர்களை பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு தலைப்பில் ஆக்கப்பூர்வமான கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நேர்காணல்கள் போன்றவற்றை உங்கள் பதிவில் இன்று தொடங்கி எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு, ஊடகம், வர்த்தகம், சினிமா, சட்டம், மருத்துவம், பெண்ணியம், கலை, போர், அரசியல் போன்ற பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த பெண்களின் சாதனைகள், வாழ்க்கை முறை, பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி எழுதலாம்.

உங்கள் படைப்புக்களை பூங்காவிற்கு நேரிடையாகவும் select@thamizmanam.com என்கிற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். அடுத்த வார பூங்காவிற்குப் பொருத்தமான உங்களது படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்மணம் திரட்டியிலே பின்னூட்டங்களினைக் காட்டுவதிலேயிருந்த சிக்கல்

March 4, 2007 · Posted in அறிவிப்புகள் · 24 Comments 

தமிழ்மணம் திரட்டியிலே பின்னூட்ட மேலெல்லையை மாற்றுதலின் பின்னால், கடந்த சில நாட்களாகப் பின்னூட்டங்கள் காட்டப்படுவதிலே இரண்டு வழுக்கள் தற்காலிகமாகக் காணப்பட்டன.

1. பின்னூட்டங்களின் எண்ணிக்கையைத் தவறாக உயர்த்திக்காட்டுதல்
2. பின்னூட்டங்களுக்கான இடுகைகளின் அருகிலே பதிவர்களின் பெயர்கள் தோன்றாதிருத்தல்

இது குறித்து தமிழ்மணம் அறிவிப்பு பின்னூட்டங்களிலே அறியத் தந்திருந்தோம். இவை பற்றி பதிவர்கள் & வாசகர்கள் ஆகியோரும் அறியத் தந்தனர். அவர்களுக்கு நன்றி. இப்போது, முதலாவது வழு களையப்பட்டிருக்கிறது என சோதித்தவளவிலே நம்புகிறோம்.

தொடர்ந்தும் இந்நிலையிலே சிக்கல்கள் தென்பட்டால், அறியத்தாருங்கள். மேலே குறை களைய வசதியாகவிருக்கும்.

வருத்திய வழுக்களுக்கு வருந்துகிறோம். தமிழ்மணம் பயனாளிகள் காட்டிய பொறுமைக்கு நன்றி.

புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

இற்றைப்படுத்து விபரம்

4 மார்ச் 2007, 15:45 கிநிநே

தொடர்ந்தும் ஏறக்குறைய இருபத்தைந்து இடுகைகள் பின்னூட்ட எண்ணிக்கை *வழு*வுடன் காணப்படுகிறன.

However the comment count *problem* is fixed. For the practical (time saving) purpose , those numbers are left to appear as such if the count is less than 100. For those more than 100 were reset already. That is why no any 100, 608, 456, 4424 etc.

All of the ones >40 and <100 can be reset to zero and upon viewing them next they can show the correct count. Just that for a brief time they will disappear from the list. This might take a while. Once finishing up the 2nd problem this resetting will be tackled. பொறுமைக்கு நன்றி நிர்வாகம்
தமிழ்மணம்

வார இறுதி (மார்ச் 3, 2007) தமிழ்மணம் வழங்கியின் சேவை & பராமரிப்பு

March 1, 2007 · Posted in அறிவிப்புகள் · 12 Comments 

தமிழ்மணம் மற்றும் பூங்கா தளத்திற்கு அதிகப்படியான பயனர்களின் வரவு காரணமாக, அண்மையிலே தமிழ்மணம் திரட்டியின் பதிலிறுப்பிலே (response) சற்றே தொய்வு ஏற்பட்டிருப்பதைத் தமிழ்மணம்_பயனாளிகள் உணர்ந்திருப்பீர்கள். இதைச் சரி செய்வும் தமிழ்மணம் பயனர்களுக்கு இன்னும் மேம்பட்ட சேவையை வழங்கும் பொருட்டும் தமிழ்மணம் தளத்தில் சில பராமரிப்பு வேலைகளுக்கு இந்த வார இறுதியில் திட்டமிட்டிருக்கிறோம். அமெரிக்கக்கிழக்கு நிர்ணய நேரப்படி (EST) சனிக்கிழமை இரவு (மார்ச் 3, 2007) அன்று 11மணிக்கு இந்த பராமரிப்பு வேலை நடைபெறும். இதனால் தமிழ்மணம் சேவையிலே பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலுங்கூட சிறு தடங்கல்கள் உணரப்பட வாய்ப்புள்ளது. மார்ச் 3, 2007 சனி இரவு 11 மணிக்கு மேல் தமிழ்மண அறிவித்தல்வரை பதிவர்கள் தமிழ்மணத்திற்குத் தங்கள் பதிவுகளை/இடுகைகளை அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்மணத்தின் பராமரிப்புகள் முடிந்தவுடன் பயனர்களுக்கு அறிவிப்போம்.

புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் மறுமொழி திரட்டுதல்: மேம்படுநிலை

March 1, 2007 · Posted in அறிவிப்புகள் · 23 Comments 

இற்றைப்படும் மறுமொழிகளைக் கொண்ட இடுகைகளைத் தமிழ்மணத்திலே சுட்டும் முறையிலே இரு நாட்களுக்கு முன்னால் மாற்றங்களைக் கொணர்ந்தோம். சில பதிவர்கள் தம் பதிவுகளிலே பின்னூட்டங்களின் எண்ணிக்கைக்கும் பின்னூட்டக்களத்தினை உரையாடி (chat என்பதற்கு நாம் தேடிப்பிடித்துக்கொண்டது 🙂 ) ஆகப் பயன்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். இதனால், அவர்களின் இடுகைகள் தொடர்ந்தும் தமிழ்மணம் முன்றல் வலமேல் (தமுவமே) மூலையிலே தொடர்ந்தும் நெடுநேரம் இடத்தினைப் பிடித்துக்கொண்டன. இதனால், மற்றைய – ஆழமானது அகலமானதுமான – கருத்துப்பகிர்வு நிகழும் இடுகைகள் தேவையானவளவு முதன்மை பெறாதுபோய்விட்டதை உணர்ந்ததால், முப்பது பின்னூட்டங்களுக்கு மேலே வரும் இடுகைகளைத் தமிழ்மணம் – திரட்டினாலுங்கூட, – காட்டாதென அறிவித்திருந்தோம்; அதன் நடைமுறைச்சாத்தியத்தினை வாய்ப்புப் பார்க்கும்வகையிலே செயற்படுத்தினோம். இவ்வாய்ப்புப் பார்க்கும் இடைநேரத்திலே தமிழ்மணத்துடன் இணைந்துள்ள பதிவர்கள், வாசிப்பவர்கள் ஆகியோருடைய கருத்துகளையும் மேம்படுத்துகைக்காகக் கேட்டிருந்தோம்.

எமது தமிழ்மணம்-அறிவிப்பு பதிவிலும் தம் தனிப்பட்ட பதிவுகளிலும் தமிழ்மணம்_ஆர்வலர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தந்திருந்தனர். தனித்தனியே ஒவ்வொருவருக்கும் நன்றிகூறமுடியாத நிலையிருப்பதால், இங்கே அனைவருக்கும் எமது நன்றியைப் பொதுவிலே கூறுகிறோம்.

ஏற்கனவே வைத்திருந்த எமது மாற்றுத்திட்டங்களிலே தமிழ்மணம் ஆர்வலர்களின் கருத்துகளிலே இன்றைய நிலையிலே எமக்குச் சாத்தியப்படக்கூடியவற்றினையும் உள்வாங்கி, கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்திருக்கின்றோம்.

1. தமிழ்மணம் முன்றல் வலப்புறம், “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியிலே, ஆகக்கூடியது 40 பின்னூட்டங்கள்வரை பின்னூட்டம்_இற்றைப்படுத்தப்பட்ட_இடுகைகள் காட்டப்படும்

2. தமிழ்மணம் முன்றல் வலக்கீழ் (தமுவகீ) மூலையிலேயுள்ள “கடந்த 24 மணிநேரத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியூடாக அணுகிக் காணக்கூடிய கடந்த ஒரு நாளிலே இற்றைப்படுத்த பின்னூட்ட இடுகைகளிலே பின்னூட்ட மேலெல்லையேதுமில்லாது, புதிய பின்னூட்டங்களைக் கடந்த 24 மணிநேரத்திலே கொண்ட அனைத்து இடுகைகளும் காட்டப்படும்

3. தமிழ்மணத்திலே சேர்ந்திருக்கும் பதிவுகளின் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படவேண்டிய அவசியமில்லை (மட்டுப்படுத்துதலினை வேண்டி நின்றதன் நோக்கு மட்டுறுத்தியே அனுமதிக்கப்பட பின்னூட்டங்கள் சிலவற்றினைக் காணும்போது, அடிபட்டுப்போய்விட்டதெனக் கருதுகின்றோம் 🙁 ).

அதனால், தமது பதிவின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதும் மட்டுறுத்தாமல் விடுவதுமெனத் தேர்வினைத் தம் பதிவுகளிலே கொள்வது இனி தனித்தனியான பதிவர்களின் முடிவுக்கேயானது; தானியங்கு எரிதப்பின்னூட்டங்கள் (automatic spam comments) வருவதிலிருந்து தம்மைக் காப்பதும் திட்டமிட்ட தனியாளைத் தாக்கும் பெயரிலிப்பின்னூட்டங்களைத் தவிர்ப்பதும் அதற்கான பொறுப்பினைக் கொள்வதும் தனிப்பட்ட அப்பதிவர்களின் கைகளுக்கேயான செயற்பாடு. இதனால், முதிர்ச்சியுள்ள தமிழ்மணம் தனிப்பதிவர்களிடைப்பிணக்குகளுக்கு, தமிழ்மணத்திலே தோன்றுகிற ஒரே காரணத்துக்காகப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அவநிலையில்லாது போகுமென நம்புகிறோம். ஆனால், தான் திரட்டும் எப்பதிவிலும் தனது நலனுக்குக் குந்தகம் விளைவிக்குமெனவோ, எதிர்பார்க்கும் தரத்தினைப் பேணவில்லையெனவோ கருதும் இடுகைகளையோ/பதிவுகளையோ தன் திரட்டலிலிருந்து எந்நேரமும் நீக்கும் உரிமையைத் தமிழ்மணம் கொண்டிருக்கும்.

புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்