தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது

January 31, 2007 · Posted in அறிவிப்புகள் · 13 Comments 

ற்றுப்படுத்துகை: பதினேழு மணிநேரம் தடைப்பட்டிருந்த தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது. தடைப்பட்டிருந்த நேரத்திலே ஆதரவுடனும் கவலையுடனும் மின்னஞ்சல், தொலைபேசி, வலைப்பின்னூட்டங்களினாலே தொடர்பு கொண்ட அத்தனை பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் டிஎம்ஐ அன்புடன் தன் நன்றியைத் தெரிவிக்கின்றது. ஏற்பட்டிருந்த தடை குறித்த விபரமான பதிவினை தமிழ்மணம் விரைவிலே அறியத்தரும்.

நிர்வாகம்
தமிழ்மணம் திரட்டி

“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” கையேடு

January 27, 2007 · Posted in அறிவிப்புகள் · 4 Comments 

தமிழ் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனம், உலகளாவிய தமிழர்களிடையே உடல்நலம்/சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் கையேடுகளைத் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்டமாக “மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” என்ற கையேடு இன்று வெளியிடப்படுகிறது. இது இரண்டு விதமான பயனாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது:

1. தனிநபர்கள் தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்
2. தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் தன்னார்வலர்கள்/பணியாளர்கள், இக்கையேட்டினைத் தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வாயிலாகப் பொதுமக்களிடையே பரப்ப விரும்பினால், அதற்கான கையேடுகளை டி.எம்.ஐ அச்சிட்டுத் தருவதைப் பரிசீலிக்கும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கான்டாக்ட் அட் டிஎம்ஐ-எல்எல்சி டாட் காம் என்ற மின்னஞ்சலில் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.
———————————

“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” கையேட்டினைப் பற்றி:

வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் மார்பகப் புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் எட்டுப்
பெண்களுள் ஒருவர் தன் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயால் பீடிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 2,00,000 பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வருடமும் 40,000 பெண்கள் இந்நோயால் இறப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மார்பகப்
புற்றுநோயை இந்நோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறிவது நோயைத் தடுக்கப் பெரிதும் உதவுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் மீடியா இன்டர்நேஷனல்
ஒரு கையேட்டினை வெளியிடுகிறது.

“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” என்ற இக்கையேடு, ஆசிய, இந்திய மகளிர் விழிப்புணர்வுக்கென உருவாக்கப்பட்டது. இதில், மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் யாவை, இந் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் முக்கியதுவம் என்ன, மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது எப்படி, எங்கு, எப்போது மார்பக ஆய்வு (mammogram) என்னும் பரிசோதனையைச் செய்து கொள்வது, போன்ற பெண்களுக்கு மிகப் பயனுடைய பல தகவல்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

மார்பகப் புற்றுநோய் பற்றிய அடிப்படைத் தகவல்கள் மற்றும் அந்நோயின் அறிகுறிகளை விரிவாகத் தருவதே இக்கையேட்டின் நோக்கம். இக் கையேட்டில் உள்ள சில அடிப்படை தகவல்கள் “மார்பக ஆய்வைப் பரப்புரை செய்யுங்கள்” (“Spread the Word on Mammogram”) என்ற அமெரிக்காவின் தேசிய புற்றுநோய்க் கழகம் (National Cancer Institute) வெளியிட்டுள்ள பயிற்சி ஏட்டின் மூலமும், வலைத்தளங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்தும், படங்கள் வலைத்தளங்களில் இருந்தும் மற்றும் ஆசிய, இந்திய பத்திரிக்கைகளில் இருந்தும் திரட்டப் பட்டன. இக்கையேட்டில் இடம்பெற்றிருக்கும் விபரங்களையும், கேள்வி-பதில்களையும், இந்திய-ஆசிய மகளிரிடம் முற்சோதனை செய்திருக்கிறோம். இக் கையேட்டின் ஆங்கில மூலத்தின் நேரடி மொழி பெயர்ப்பாக இத் தமிழ்க் கையேடு உருப்பெற்றிருக்கிறது. சில தமிழ் வலைத்தளங்களில் இருந்து தமிழ் எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தியிருக்கிறோம். வாசக நண்பர்கள் அனைவரும் இக்கையேட்டினைப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

அன்புடன்,
டி.எம்.ஐ. நிர்வாகம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

January 1, 2007 · Posted in அறிவிப்புகள் · 31 Comments 

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ) நிறுவனம், அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது. அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் இப்பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை தனித்தனியே அணுகி வந்திருந்தாலும் இவ்வமைப்புகளுக்கும், மக்களுக்குமிடையே முழுமையான தொடர்பு இருக்கவில்லை. இந்தத் தொடர்பறுந்த நிலையானது நம் சமூகத்தின் அடிப்படையில் நிலவி வரும் இரண்டு இடைவெளிகளின் பிரதிபலிப்பேயாகும், அவை யாவன: (அ) வசதிகள் வாய்க்கப் பெற்ற பிரிவினருக்கோ விளிம்புநிலை மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிய முழுமையான அறிவில்லை. (ஆ) விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும், அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை. டி.எம்.ஐ நிறுவனம் இந்த இடைவெளிகளை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்புகிறது. விளிம்புநிலை மனிதர்கள் கூட தங்கள் குரலை சுதந்திரமாகவும் ஒலிக்கும் வண்ணம் இணைய மற்றும் அச்சு வசதிகளைப் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.

ஜூலை 2006ல் நிறுவப்பட்ட நாள் முதல் இன்று வரை, டி.எம்.ஐ நிறுவனத்தினர் தங்கள் அமைப்புக் கட்டுமானத்தை உருவாக்கவும், அமைப்புக்குள்ளான ஜனநாயக விதிகளை வரையறுக்கவும் பணியாற்றி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தமிழ் மணத்தையும், பூங்காவையும் ஜனநாயகத்தன்மையுடனும், பாரபட்சமில்லாமலும் தொடர்ந்து நடத்தி வருவதற்கான வழிமுறைகளை விவாதித்து ஒருமித்த முடிவுகள் எடுத்து வந்துள்ளனர். இவற்றைத் தொடர்ந்து தற்சமயம் டி.எம்.ஐ. ஒரு ஆரோக்கியமான விவாதக்களத்தை உருவாக்குவதில் முனைந்துள்ளது.

டிசம்பர் 2006 இறுதியில் டி.எம்.ஐ. அமைப்புக்குள்ளான தேர்தல் முடிந்து, தங்களது புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நிறைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக் காட்டியும் டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இவண்,
டி.எம்.ஐ நிர்வாகக் குழு

Happy New Year

Tamil Media International LLC (TMI) is interested in promoting education and awareness among the Tamil populace around the globe regarding economic, socio-political, educational and health care issues faced by all sections of the Tamil Community. Although most of these issues are addressed disjointedly by a number of organizations, governmental, corporate and voluntary, efficient communication between these organizations and the people is lacking. This communication divide is primarily a manifestation of the following two basic societal gaps: (a) the resourceful sections are not aware of the problems of the marginalized sections and (b) the marginalized sections do not have the education or awareness, or both, to understand the root causes of their problems. Even if they are aware of them, they do not know how to access the resources for overcoming the issues. TMI aspires to bridge this gap using online and print resources and create a platform for the free expressions from the marginalized sections.

Since its foundation in July 2006, the TMI team members were engaged in building the organizational structure and the democratic norms within the organization. In addition to this, systematic efforts were undertaken to continue running Thamiz Manam and Poongaa in a democratic and balanced approach. The organizational elections have been completed in December 2006 and the executive board for 2007 has been announced.

We express our gratitude to you for continuously supporting our efforts by rightfully appreciating our services and criticizing our drawbacks. We wish you all a very Happy New Year.

Yours,
TMI Executive Committee