‘பதிவு’ கருவிப்பட்டையிலே பூங்கா

September 26, 2006 · Posted in அறிவிப்புகள் · 6 Comments 

தமிழ்மணம் திரட்டியிலே சேர்ந்திருக்கும் பதிவுகளிலே இன்று தோன்றும் ‘பூங்கா’ இணைப்பினைத் தரும் தமிழ்மணத்தின் ‘பதிவு’ கருவிப்பட்டை, தற்போதிருக்கும் பதிவு பட்டையினை மேம்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றினைச் சோதித்துப்பார்க்கும் நோக்கிலேயான தற்காலிகக்கூறு மட்டுமேயாகும்.

பதிவர்களின் பதிவுகளிலே அவர்களின் அனுமதியின்றி, தமிழ்மணம் -இப்படியான சோதனை முயற்சிக்கப்பால்- நிரந்திரமாக எவ்விதமான உள்நுழைதலையும் செய்யாது என்பதை மீண்டும் தமிழ்மணம் உறுதி செய்கிறது.

வருங்காலத்தில், தொழில்நுட்பரீதியிலான இப்படியான சோதனை முயற்சிகளிலே பதிவர்களின் பதிவுகளிலே இடையறுத்துச் செயல்புரியவேண்டிய தேவை ஏற்படுமானால், வேண்டியளவு கால அவகாசம் கொடுத்து அவர்களின் அனுமதியுடனேயே தமிழ்மணம் செயற்படும்.

இன்றைய சோதனைமூலம் யாருக்கேனும் உளத்தாங்கல் ஏற்பட்டிருந்தால், தமிழ்மணம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Tamilmanam Toolbar for Blogger

September 23, 2006 · Posted in அறிவிப்புகள் · 235 Comments 

Instructions in English, given below

ப்ளாக்கர் பதிவுகளில் தமிழ்மணம் கருவிப்பட்டையை சேர்ப்பதற்கான செய்வழி:

1. தங்கள் பீட்டா ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (“login”).

2. நீங்கள் தமிழ்மணம் கருவிப்பட்டையை சேர்க்க விரும்பும் பதிவைத் தேர்வு செய்க.

3. ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து (“Manage Layouts”) பகுதிக்குச் செல்க
(இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).

4. மீயுரை சீர்திருத்து (“Edit HTML”) என்கிற பகுதிக்குச் செல்க.

5. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க.

6. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்க.

7. <head> பகுதியின் இறுதிக்குச் சென்று தமிழ்மணம் கருவிப்பட்டை நிரலின் முதற்பகுதியை </head> இன் முன் இடுக. (அதாவது “]]></b:skin>” என்ற கோர்வைக்கு அடுத்து).

தமிழ்மணம் கருவிப்பட்டை நிரலின் முதற்பகுதி மாற்றமில்லை. உங்கள் வசதிக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

<!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>
<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->

8. இடுகைப் பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்க. இப்பகுதி <!– posts –> என்ற வரியால் குறிக்கப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து <div id=”blog-posts”> என்ற பகுதி இருக்கும்.

9. Blogger Beta வுக்கான தமிழ்மணம் கருவிப்பட்டை நிரலின் இரண்டாம் பகுதி dateHeader பகுதிக்கு அடுத்து சேர்க்கப்படவேண்டும். அதை அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலே ஏற்கனவே இருக்கும் பிளாக்கர் நிரலின் மூன்று வரிகள் கீழே தரப்பட்டுள்ளன:

<b:if cond='data:post.dateHeader'>
<h2 class='date-header'><data:post.dateHeader/></h2>
</b:if>

10. தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்மணம் கருவிப்பட்டை நிரலின் இரண்டாம் பகுதியை ஒத்தி ஒட்டுக:

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1
(c)2005 thamizmanam.com -->
 
<b:if cond='data:blog.pageType == "item"'>
<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp 
+ "&amp;posturl=" + data:post.url 
+ "&amp;cmt=" + data:post.numComments 
+ "&amp;blogurl=" + data:blog.homepageUrl 
+ "&amp;photo=" + data:photo.url' 
language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>
 
<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1
(c)2005 thamizmanam.com -->

11. மேற்காணும் நிரலை ஒட்டியபின் அதற்கடுத்துள்ள வரி இவ்வாறாக காணப்படலாம்.


<b:include data='post' name='post'/>

12. அடைப்பலகையை சேமிக்க. மேலதிகக் கேள்விகள், பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் தமிழ்மணத்தின் தொழில்நுட்பக் குழுவுக்கு, techsupport at thamizmanam. com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள்.

Instructions in English:

1. Login to your blogger.beta account

2. Select the blog you want to add thamizmanam toolbar.

3. Go to Manage Layouts (You will be in Template tab)

4. Go to “Edit HTML” tab

5. Before editing your template, you may want to save a copy of it. Download and save a copy of your template.

6. Select the Expand Widget Templates CheckBox. (Top Right corner of EditBox).

7. Go down to the end of <head> section and paste the thamizmanam toolbar code part 1 just above the </head> tag. (Right after the line containing the text string “]]></b:skin>” )
Part 1 of thamizmanam code is still the same as given below:

<!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>
<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->

8. Navigate down and find the posts section. It might be denoted by the comment line as follows:

<!– posts –>
and followed by the section: <div id=’blog-posts’>

9. Thamizmanam toolbar code Part 2 for Blogger Beta should go right after the dateHeader section (the three lines shown below):

<b:if cond='data:post.dateHeader'>
<h2 class='date-header'><data:post.dateHeader/></h2>
</b:if>

10. Copy the thamizmanam toolbar code Part 2, shown below and paste here.

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1
(c)2005 thamizmanam.com -->
 
<b:if cond='data:blog.pageType == "item"'>
<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp 
+ "&amp;posturl=" + data:post.url 
+ "&amp;cmt=" + data:post.numComments 
+ "&amp;blogurl=" + data:blog.homepageUrl 
+ "&amp;photo=" + data:photo.url' 
language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>
 
<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1
(c)2005 thamizmanam.com -->

11. The line after pasting the code above might look like this:


<b:include data='post' name='post'/>

12. Save the template. If there are any questions, problems, issues send a mail to admin@thamizmanam. com

புரிந்துணர்வுடனான உங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி

தமிழ்மணம் ப்ளாகர் டூல்பார் பக்கம் – http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

பூங்கா வெளிவந்துவிட்டது…

September 18, 2006 · Posted in அறிவிப்புகள் · 19 Comments 

பூங்காவின் முதல் இதழ் இன்று, செப்டெம்பர், 18 2006 ல் வெளியாகிறது.

http://poongaa.com

பூங்கா ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள

ezine @ thamizmanam.com

தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி.

பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு

September 7, 2006 · Posted in அறிவிப்புகள் · 41 Comments 

தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு, “பூங்கா” எனும் வாராந்திர வலையிதழாக வெளிவரத் தமிழ்மணம் விரும்புகிறது.

பூங்கா – வலையிதழ்
இணையத்தமிழின் முதலாவது தானியங்கித்திரட்டி என்ற ஆரம்பநிலையைக் கடந்து, அடுத்தபடியிலே தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் நோக்குகிறது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமெனத் தமிழ்மணம் திடமாக நம்புகிறது.

எக்கோணத்திலிருந்தும் வரும் கருத்துகளுக்கும் பேதமின்றி, தமிழ்மணவிதிகளுக்கு முரண்படாத வகையிலே இடமளிப்பதனால், பூங்கா மூலம் நடையொழுங்கு, உள்ளடக்கம், வடிவ நேர்த்தி, தகவல் புதுமை, வெளிப்பாட்டு உத்தி போன்றவற்றைப் பதிவர்கள் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தரமான எழுத்துக்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு அத்தகைய பதிவுகளைச் சுலபமாக அடையும் வழியாகவும் பூங்கா விளங்குமென உறுதியாக நம்புகிறோம்.

தமிழ்மணமும் பூங்காவும்
தமிழ்மணம் என்பது அணையில்லாப் பேராறு. தமிழ்ப்பரப்பில் உலகெங்கும் பெய்கின்ற சிந்தனைத்துளிகள் அத்தனையும் ஒன்றிணைந்து பிரவகித்து வருகிற இணையத்தின் பொன்னி. கரை மோதிப் புரண்டசைந்து ஆர்ப்பரித்து வரும் ஆடிப்பெருக்கு; மனிதக்கரங்களும் கறைகளும் படாதது.

பூங்கா வலையிதழ் நதியின் ஆழமும் அமைதியுங் கொண்ட ஆடுதுறை. மூழ்கிக் குளிப்பதற்கும் நீந்திக் களிப்பதற்குமாய் வெட்டப்பட்ட செய்குளம். வேண்டின், இதன் வழி நீந்தி தமிழ்மணம் என்ற ஜீவநதியையும் அடையலாம்; உங்களைத் தடுப்பவர் எவருமிலர்.

பதிவுகளைப் பூங்காவிலே சேர்க்கத் தருதல்
பூங்கா, இலாபநோக்கற்ற, சமூக, இலக்கிய விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய ஒரு மாற்றூடக இதழ். இதில் வெளிவரும் படைப்புகளுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

பூங்கா ஆசிரியர் குழு பதிவுகளை தமிழ் மணத்தின் விதிமுறைக்கு உட்பட்டு, தமிழ்மணத்தினால் திரட்டப்படும் பதிவுகளிலிருந்து தெரிவு செய்யும். பூங்கா ஆசிரியர் குழுவின் பதிவுத்தேர்வுகளே இறுதியானவை.

தமிழ்மணத்தில் வெளிவரும் அனனத்து வகை பதிவுகளிலிருந்தும் ஆசிரியர்குழுவுக்குச் சிறந்ததெனத் தோன்றும் பதிவுகள் தெரிவு செய்யப்படும். தற்சமயம் இருக்கும் வகைப்பாடுகளில் அனைத்திலுமிருந்து தரமான பதிவுகளை பூங்கா வலையிதழ் உள்வாங்கும். இதற்கான ஒப்புதல் வலைப்பதிவர்களிடமிருந்து பெறப்படும். வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகள் பூங்காவின் தேர்வுக்கு உள்ளாகி வெளிவர விருப்பம் கொண்டால், பதிவுகளைத் தமிழ்மணத்திலே திரட்ட அறிவிக்கும்போதே ஒப்புதல் தரும்வகையிலே தமிழ்மணம் மாறுதலைத் தற்போதைய அமைப்பிலே செய்யும்.

வலைப்பதிவர்கள் தமக்கே உரிமைகொண்ட, தாமாகவே எழுதிய, படம்பிடித்த, வரைந்த, ஒலித்த ஆக்கங்கள்மட்டுமே தேர்வுக்குக் கவனிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் பதிவருக்குச் சொந்தமற்றவையென அறியப்படுமிடத்து அறிவித்தலுடன் விலக்கப்படும். பதிவர்கள் இவ்வகையான சொந்தப்பதிவுகளை தமிழ்மணத்திற்கு அறிவிக்கும்போது பயன்படுத்தும் “வகைப்படுத்தல்” பக்கத்திலே பூங்காவிலே சேர்க்க அனுமதி கேட்கப்படும். அங்கே உங்கள் பதிவை பூங்காவிற் சேர்த்துக்கொள்ளச் சம்மதம் என்றால் நீங்கள் தேர்விலே எந்த மாற்றத்தினையும் செய்யாமல் அப்படியே அனுப்பினால் போதுமானது. உங்களுக்குச் சம்மதமில்லை என்றால் மட்டும் “சம்மதமில்லை” என்பதைத் தெரிவு செய்து அனுப்பவேண்டும். கீழ்க்கண்ட படம் இச்செயற்பாட்டுக்கான தேர்வுநிலையைக் காட்டுகிறது.

பூங்காவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எப்பதிவின் உரிமையும் அதனை ஆக்கிய வலைப்பதிவரிடமே எப்போதுமிருக்கும். எதிர்காலத்தில், ஆண்டின் மிகச்சிறந்தபதிவுகளைத் தேர்ந்தெடுத்து, அச்சுநூலாக்கும் திட்டமும் கருத்தளவிலே தனக்கு உண்டென்பதை இங்கே தமிழ்மணம் குறிப்பிட விரும்புகிறது. பூங்காவில் வெளியிட விருப்பம் தெரிவிக்காத பதிவர்களின் பதிவுகள் பூங்காவில் வெளிவரா.

பூங்காவின் உள்ளடக்கம்
நிகழ்வுகள், அரசியல், அறிவியல்,செய்தி விமரிசனம், தொழில்நுட்பம், பொருளாதாரம், இலக்கியம், நூல் அறிமுகம்/விமர்சனம், வரலாறு மற்றும் பலவேறுபட்ட விடயங்கள் தொடர்பான நல்ல பதிவுகளையும் பூங்கா வெளியிடும். ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் பதிவுகளுக்கு எண்ணிக்கை வரையறை எதுவும் இல்லை. பதிவரினாலே அனுமதி தரப்பட்ட தரம்வாய்ந்ததெனத் தோன்றும் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பெறும்.

பூங்கா இதழில், தேவைக்கேற்ப புதிய பிரிவுகளை சேர்க்கவோ, முன்பிருந்த பிரிவுகளை விலக்கவோஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.

பூங்காவுக்குப் பதிவுகளினைத் தேர்ந்தெடுத்தல்
ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரத்தின் வியாழக்கிழமை வரை தொகுக்கப்படும் பதிவுகள், தேர்ந்தெடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று பூங்காவிலே வெளியிடப்படும். சிறந்த படைப்புகள் என ஆசிரியர் குழு பரிந்துரைக்கும் படைப்புகள் குறித்த வாரத்திற்கு முன்னதாக வெளிவந்திருந்தாலும், அவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்காவிடின், காணப்பட்ட வாரத்து இதழில் இடம்பெறும்.

தமிழ்மணம் நட்சத்திரங்களின் பங்களிப்பின் தடங்கள் பூங்காவிலும் இருக்க வேண்டுமெனத் தமிழ்மணம் உணர்வதால், நட்சத்திரங்கள் தாம் சேவை செய்யும் வாரத்துக்கு முந்தைய வாரத்திலிருந்து தேர்வு செய்யும் பதிவுகளும் அவர்கள் மின்னும் வாரத்திலே வெளிவரும் பூங்காவில் இடம்பெறும். நட்சத்திர தெரிவுகள் இடம்பெறும் சிறப்புப்பக்கங்கள் “நட்சத்திர தேர்வு” என குறிப்பிடப்படும். நட்சத்திரங்கள் பல துறைகளிலிருந்தும் துறைக்கு ஒன்று என, தாம் சிறந்ததெனக் கருதும் ஐந்து பதிவுகளை ஆசிரியர் குழுவிற்கு அவர்கள் அனுப்பினால் அவற்றிலிருந்து இரண்டு பதிவுகளைப் பூங்கா வெளியிட விரும்புகிறது.

இதுவரை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகளிலிருந்து மிகச் சிறந்த இடுகை என வாசகர்கள் எதையேனும் எண்ணினால் அதை தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கலாம். வாசகர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும் தமிழ்மணத்தைப் போன்றே பூங்காவும் ஒரு பாலமாகச் செயற்படும். எனவே இதழ் பற்றிய கருத்துக்கள், பதிவுகள், மேம்பாட்டு உத்திகள் அனைத்திலும் உங்கள் பங்களிப்பையும் அன்புடன் தமிழ்மணம் கோருகிறது.

பூங்கா பக்கமும் தொடர்பும்
பூங்கா ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள ezine@thamizmanam.com

தமிழ்மணம் தளத்திலே பூங்கா இதழ்ப்பக்கத்தின் முகவரி விரைவிலே வெளியிடப்படும்.

தற்போது ஆசிரியர்குழுவின் வெள்ளோட்டச்சோதனையிலிருக்கும் பூங்கா 18 செப்டெம்பர் 2006, திங்கள் அன்று முதலாவது இதழாக வெளியாகும்.

தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ்

September 4, 2006 · Posted in அறிவிப்புகள் · 1 Comment 

புரட்டாதி மாதம் முதற்கொண்டு தமிழ்மணம் திரட்டி ஒவ்வொரு வாரமும் திரட்டப்படும் பதிவுகளிலே சிறந்த பதிவுகளைத் தொகுத்து பூங்கா வலையிதழாக வெளியிடவிருக்கிறது. வெள்ளி முதற்கொண்டு அடுத்த வியாழன் வரையிலான, தொகுப்பதற்குப் பதிவர்களினால் அனுமதிக்கப்பட்ட பல்வேறுதுறைப்பதிவுகளிலிருந்து சிறந்த பதிவுகள் தொகுக்கப்பட்டு பூங்கா இதழாக தொடரும் திங்களிலே வெளியிடப்படும். இதற்கான தேர்வினை பூங்கா ஆசிரியர் குழுவும் தொகுக்கப்படும் வாரத்துக்கு முன்னைய வாரத்தின் சிறப்பு நட்சத்திரமும் தேர்ந்தெடுப்பார்கள். பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியிலே உள்ளிடும்போதே அப்பதிவுகளைப் பூங்கா இதழுக்குத் தேர்ந்தெடுக்க சம்மதம் தெரிவிக்கவோ மறுக்கவோ பதிவருக்கு வசதி செய்யப்படும். இதுபற்றிய செயல்முறை விளக்கமாக இன்னும் ஓரிரு நாட்களிலே தமிழ்மணம் அறிவிப்பிலே பதியப்படும்.