Archive for August, 2006
Wednesday, August 23rd, 2006
தமிழ்மணத்துக்கு ஒவ்வாத பதிவுகளை நீக்குவதற்கான வழிமுறை வரையப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்வரை, இடைக்காலத்திட்டமாகத் தற்காலிக வழிமுறை நடைமுறையிலிருக்கும்.
தமிழ்மணம் அறிவிப்பு பதிவிலே ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததுபோல, தமிழ்மணம் பதிவுகளின் உள்ளடக்கமும் அனுமதிக்கப்படும் பின்னூட்டங்களும் எவ்வாறு இருக்கவேண்டுமெனத் தீர்மானிக்கும் உரிமை எவ்விதத்திலும் அற்றது. ஆனால், தன்னோடு இணைக்கப்படும் பதிவுகள் தமிழ்மணத்தின் விதிகளுக்கு ஒவ்வாதன என்று உணரப்படும் நிலையிலே அவற்றினைத் தன் தொடுப்பிலிருந்து விலக்கிக்கொள்ள முழு உரிமையும் தமிழ்மணத்துக்கு உண்டு.
ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல, எக்காலகட்டத்திலும் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானதென்றபோதுங்கூட, வெளிப்படையாக ...
Posted in அறிவிப்புகள் | 29 Comments »
Tuesday, August 22nd, 2006
தமிழ்மணத்தின் நோக்கு தமிழ்ப்பதிவுகளிலே சிறந்தும் நற்போக்கிலுமுள்ள கூறுகளைத் திரட்டுவதாகும். ஆனால், எவ்வகையிலும் தமிழ்மணத்திலே தோன்றும் தனியாள் பதிவுகளின் உள்ளடக்கம், தொனியினைக் கட்டுப்படுத்தும் வல்லமையோ, பண்பாட்டுக்காவலராய்ச் செயல்படும் நோக்கமோ அற்றது. அதனால், தமிழ்மணத்திலே பதிவு செய்யப்பட்ட பதிவுகளைத் திரட்டுவது தவிர, தமிழ்மணம் எவ்வகையிலும் பதிவாளர்களின் பதிவுகளுக்கோ அவற்றிலே வரும் பின்னூட்டங்களுக்கோ பொறுப்பாகமுடியாது.
பதிவுகள், பின்னூட்டங்களின் உள்ளடக்கங்களுக்கு அவற்றை எழுதுபவர்களின் நேர்மையையும் பொறுப்புணர்வும் மட்டுமே அடிப்படைகளாக இருக்கமுடியுமென தமிழ்மணம் நம்புகின்றது. ஆனால், திரட்டி என்ற ...
Posted in அறிவிப்புகள் | 16 Comments »
Sunday, August 13th, 2006
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது. இம்மாற்றத்தினால் தமிழ்மணம் வழங்கிவரும் சேவைகளில் எவ்வித மாறுதலும் இருக்காது.
Posted in அறிவிப்புகள் | 1 Comment »