Archive for the ‘அறிவிப்புகள்’ Category
Thursday, May 22nd, 2008
வரும் ஜுன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் ”இணையத்தில் வளர்தமிழ் - வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும்” என்ற கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
மாவட்டக் ஆட்சித்தலைவர் திரு. கோ. பிரகாஷ், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் "இணையத்தில் வளர்தமிழ்" என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். தமிழ்மணம் நிர்வாகத்தைச் சார்ந்த முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற ...
Posted in அறிவிப்புகள் | 8 Comments »
Monday, May 12th, 2008
புதிய தமிழ்மணத்தில் இன்றைய அனைத்து இடுகைகள் பக்கமும், மறுமொழிகள் பக்கமும் லோட் ஆவதற்கு மிக அதிக நேரம் எடுப்பதாக பதிவர்கள் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.
இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பக்கமாக பார்க்கும் வசதியும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியும் உள்ளது. ஒரே பக்கத்தில் அனைத்து இடுகைகளும் லேட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது வேகமாக லோட் ஆகும் என நினைக்கிறோம்.
இன்றைய அனைத்து ...
Posted in அறிவிப்புகள் | 11 Comments »
Saturday, May 10th, 2008
தமிழகம், இலங்கை போன்ற இடங்களிலும் மற்றும் Slow Internet Connection கொண்டவர்களுக்கும் புதிய தமிழ்மணம் லோட் (Load) ஆவதில் சில பிரச்சனைகள் இருந்தன. முகப்பு பக்கம் லோட் ஆவதற்கு 1:30 நிமிடத்திற்கும் மேல் எடுப்பதாக தமிழ்மணம் பயனர்களும், நண்பர்களும் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.
இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.
அஜாக்ஸ் (Ajax) நிரலில் இருந்த ஒரு bug காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கே அமெரிக்காவில் இணையம் மிக ...
Posted in அறிவிப்புகள் | 7 Comments »
Sunday, May 4th, 2008
புதிய தமிழ்மணத்தின் சோதனை வடிவத்தை (பீட்டா) தற்பொழுது வெளியிட்டுள்ளோம். இந்த புதிய தமிழ்மணம் மேம்படுத்தப்பட்ட் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வெளியாகிறது.
புதிய தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை அடுத்த வரும் நாட்களில் தொடர்ச்சியாக இந்த வலைப்பதிவின் மூலமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
தற்போதைய சில முக்கிய குறிப்புகள்
குறிச்சொல் சார்ந்த பல்வேறு வசதிகளை தமிழ்மணம் இந்த புதிய பதிப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது வரை இருந்த தமிழ்மணம் வகைப்படுத்தல் இனி முற்றிலுமாக நீக்கப்படும். பதிவர்கள் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 49 Comments »
Thursday, April 10th, 2008
தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாக திரட்டும் புதிய வசதியை தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க முடியாத வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களும் தங்கள் புகைப்படத்தை தமிழ்மணத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.
இது தவிர தமிழ்மணம் கருவிப்பட்டை வாயிலாகவும் உங்கள் புகைப்படங்களை மாற்றிக்கொள்ள இயலும். அது குறித்த செய்முறைக்கு இந்த இடுகையை பார்க்கலாம் - http://blog.thamizmanam.com/archives/120
Gravatar என்றால் என்ன ?
நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை ...
Posted in அறிவிப்புகள் | 25 Comments »
Friday, April 4th, 2008
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகைகளை மென்நூலாக (PDF) பெறும் வசதி ப்ளாகரின் சமீபத்திய மேம்பாடுகளுக்கு பிறகு வேலை செய்ய வில்லை. ப்ளாகர் தமிழ் குறியீட்டு முறை காரணமாக இருந்த இந்தப் பிரச்சனைகள் இப்பொழுது சரி செய்யப்பட்டு விட்டன.
ப்ளாகர் தமிழ் குறியீட்டில் இருந்த சில பிரச்சனைகளை சரி செய்ய ஆலோசனைகள் வழங்கிய நண்பர் சுரதாவிற்கு எங்களது நன்றி...
பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையை (Toolbar) தங்கள் பதிவுகளில் இணைத்தால் போதுமானது. ...
Posted in அறிவிப்புகள் | 13 Comments »
Wednesday, March 26th, 2008
தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 13 Comments »
Monday, March 24th, 2008
தமிழ்மணத்தில் தற்பொழுது பதிவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இடுகைக்கு அருகே தெரியும் வசதி உள்ளது. சமீப காலங்களில் ப்ளாகரில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு இந்த வசதி சரியாக வேலை செய்யாததால் பதிவர்கள் தங்கள் புகைப்படங்களை மாற்றி கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை கையாளுவதில் இருக்கும் சில பிரச்சனைகள், தமிழ்மணத்தின் வழங்கி மாற்றத்தால் எழுந்த பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்கள். ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை வேறு ...
Posted in அறிவிப்புகள் | 17 Comments »
Saturday, March 22nd, 2008
தமிழ்மணத்தின் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் தற்பொழுது வேர்ட்பிரஸ்.காம் (Wordpress.com) பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன. வேர்ட்பிரஸ.காம் பின்னூட்ட ஓடை மூலமாக இந்தப் பின்னூட்ட நிலவரம் 20 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழ்மணத்தின் சோதனை ஓட்டத்தில் இந்த வசதி உள்ளதால் சில பிரச்சனைகள் இருக்கலாம். அவ்வாறான பிரச்சனைகளை பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்தால் அதனை சரி செய்ய முயல்வோம்.
அறியப்பட்ட பிரச்சனைகள்
* பின்னூட்ட ஓடையில் (Comment Feed) இருக்கும் பின்னூட்டங்களைப் பொறுத்தே ...
Posted in அறிவிப்புகள் | 27 Comments »
Thursday, February 28th, 2008
இன்று (பெப்ருவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விரைவிலே தமிழ்மணத்தினை வழக்கமான செயற்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள் | No Comments »