Archive for the ‘அறிவிப்புகள்’ Category
Friday, January 2nd, 2009
உங்களுடைய இடுகைகளைப் பரிந்துரை செய்துவிட்டீர்களா? இல்லையெனில் சனவரி 7 வரை உங்களுடைய இடுகைகளை நீங்கள் பரிந்துரை செய்ய இயலும். இதுவரை பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகளை இன்று முதல் பரிந்துரைகள் பக்கத்தில் காணலாம்.
மேலும் இப் போட்டி சார்ந்த சில விதிகளையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்மணம்
விருதுகளுக்கான தேர்வுகளில் தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்களின்
இடுகைகளும் இடம்பெறுகின்றன. தமிழ்மணம் குழுவில் உள்ள பதிவர்கள் ஏனைய
பதிவர்கள் போலவே போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும். ஆனால் விருதுக்கான
இறுதித் ...
Posted in அறிவிப்புகள் | 12 Comments »
Sunday, December 28th, 2008
1. விருதுகள் 2008ன்னு அறிவிச்சிட்டு 2006ல எழுதுன இடுகைகளையும் பரிந்துரைப்பக்கத்தில காண்பிக்கறீங்க?
2. தவறுதலா நடந்தது இப்போ சரிசெய்யப்பட்டிருக்கு. ஏற்கனவே பழைய இடுகைகளை பரிந்துரை செஞ்சவங்க மறுபடியும் சரியான இடுகைகளை தெரிவு செய்ய வேண்டியதிருக்கும்.
1. சரி செய்யப்பட்டதில ஒரு சில இடுகைகள் ரெண்டு மூணு தடவை தெரியுதே?
2. அப்படி ஒரு வழு இருக்கறது தெரியும். அதனால எந்த சிக்கலும் இல்லை. இப்போதைக்கு அது அப்படியே தான் தொடரும்
1. விருதுகள் -2008க்கு ...
Posted in அறிவிப்புகள் | 13 Comments »
Thursday, December 25th, 2008
தமிழ்மணம் பதிவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய விருதுகள் 2008 க்கான இடுகைப் பரிந்துரைகள் இன்றுமுதல் துவங்குகின்றன. உங்களது இடுகைப் பரிந்துரைக்கான சிறப்புத் தொடுப்பு, தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு இன்று அனுப்பப்படுகிறது. இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால் அம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.
மின்னஞ்சல் பெறுவதற்கு உங்களது பதிவு 01-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டிருக்கும் மின்னஞ்சலை மாற்றுவதற்கான கோரிக்கைகள் தற்சமயம் ஏற்றுக்கொள்ளப் பட இயலாது. எனினும் ...
Posted in அறிவிப்புகள் | 21 Comments »
Wednesday, December 24th, 2008
தமிழில் வலைப்பதிவுகள் பெருக வேண்டுமென்றும், அனைத்துத் தரப்பு வாதங்களும் ஆரோக்கியமாக இடம் பெறும் ஊடகமாக வலைப் பதிவுகள் இயங்க வேண்டுமென்றும் தமிழ்மணம் விரும்புகிறது. அந்த நோக்கத்துடனேயே வலைப்பதிவுகளைத் திரட்டி இற்றைப் படுத்தித் தமிழ்மணத்தின் வெவ்வேறு பகுதிகளில் தருகிறது.
சூடான இடுகைகள், வாசகர்கள் எதனை அதிகம் வாசிக்கிறார்கள் என்பதன் ஒரு குறியீடு மட்டுமே. அதேநேரத்திலே தமிழ்மணம் சூடான இடுகைகளில் தொடர்ந்து இடம் பெற வேண்டுமென்ற நோக்கத்துக்காகவே போடப்படும் பதிவுகள் அதிகரித்த நிலையிலே ...
Posted in அறிவிப்புகள் | 50 Comments »
Sunday, December 14th, 2008
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்கவும் தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.
தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 55 Comments »
Saturday, November 29th, 2008
1. இப்ப எதுக்கு இந்தப் பழைய கதையெல்லாம்? விருது பத்தி மேல சொல்லுங்கப்பா...
2. மன்னிச்சுக்குங்க போன வாரம் ஒடம்பு சரியில்ல.
1. அடடா... இப்போ பரவால்லியா?* (அது பத்தி எங்களுக்கு என்னப்பா கவலை!) :-)*
2. ஓ... சுறுசுறுப்பா எறங்கீட்டேன். விருது பத்தி வர்ற வாரம் பேசிக்குவோமா?
Posted in அறிவிப்புகள் | 9 Comments »
Tuesday, November 25th, 2008
1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க?
2. ஏன், இன்னைக்கே கூட போட்டுடலாம்.
1. முழுமையான அறிவிப்ப வெளியிடப் போறோமா, இல்லை முன்னோட்ட அறிவிப்பு மட்டும் தானா?
2. இப்போதைக்கு முன்னோட்ட அறிவிப்பு மட்டும் போதும்.
1. ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால...
2. அப்போ ஏற்பட்ட குழப்பங்கள் இந்த முறை இருக்காது. தெரிவை எளிமையாக்குறதுக்கான நிரல்கள் பாதி தயாரா இருக்கு. இன்னும் சில நாட்கள்ல முழுமையான ...
Posted in அறிவிப்புகள், சிறப்பிடுகைகள் | 42 Comments »
Saturday, November 22nd, 2008
1 : இந்தப் படத்தை தமிழ்மணம் முகப்பிலயும் வலைப்பதிவுலயும் இணைச்சிடுறீங்களா?
2 : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் இது எதுக்காக?
1 : அத உங்களோட ஊகத்துக்கே விட்டுடறேன்.
2 : பதிவர்கள் கேட்டா என்னன்னு சொல்றது ?
1 : அவங்களும் ஊகிக்கட்டுமே.
2 : சரியா ஊகிக்கறவங்களுக்கு சிறப்புச் சலுகை/பரிசு எதுவும் உண்டா ?
1 : :)
2 : இது கேள்விக்குறியா இல்ல ஆச்சரியக்குறியா?
1 : உங்களுக்கு எது ...
Posted in அறிவிப்புகள் | 32 Comments »
Monday, November 17th, 2008
தமிழ்மணம் வழங்கியின் பராமரிப்பு தொடர்பான வேலைகள் முடிவடைந்து, தமிழ்மணம் வழக்கமான சேவைக்குத் திரும்பியிருக்கின்றது.
எனினும், பதிவர்கள் புதுஇடுகைகளைத் தமது பதிவுகளிலிருந்தே தமிழ்மணத்துக்குச் சேர்ப்பதிலே தடங்கலிருக்கின்றதாகத் தெரிகின்றது. புதிய இடுகைகளைச் சேர்க்கும்போது, "புதிய இடுகைகள் காணப்படவில்லை" என்ற செய்தி கிட்டுகிறது.
தற்போதைக்கு பதிவர்கள் தமிழ்மணத்தின் முன்பக்கத்திலே "இடுகைகளைப் புதுப்பிக்க" வசதியினூடாக, தம் பதிவு முகவரியினைத் தருவதன்மூலம், வழக்கம்போலவே புதிய இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கலாம்.
தம் பதிவுகளிலிருந்து நேரடியாகப் புதிய இடுகைகளை அறியத்தரும் நுட்பத்திலிருக்கும் குறைபாடு ...
Posted in அறிவிப்புகள் | 23 Comments »
Saturday, November 15th, 2008
தமிழ்மணம் வழங்கியில் (Server) எதிர்கொண்டு வரும் பிரச்சனை காரணமாக தமிழ்மணம் சேவையில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம்.
அதிகப்படியான பதிவர் வருகை தவிர, தமிழ்மணம் தளம் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் வலைப்பதிவு உலகின் அனைத்து பதிவுகளையும் வைத்துள்ளதும் தமிழ்மணம் தளத்தின் வழங்கிக்கு பலுவை ஏற்படுத்துகிறது. இவை தவிர மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொல் திரட்டுதல், சூடான இடுகைகள் போன்றவையும் தமிழ்மணம் வழங்கிக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறது.
இதுவே தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 25 Comments »