Archive for the ‘அறிவிப்புகள்’ Category
Wednesday, January 20th, 2010
தமிழ்மணம் விருதுகள் 2009 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பனை அனுப்பி இருக்கிறோம். இந்தக் கூப்பனைக் கொண்டு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் புத்தக நிலையத்தில் பதிவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தானியங்கியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மின்னஞ்சலையும் சோதிக்க இயலவில்லை. மின்னஞ்சலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம், விருதுகள் 2009 | 4 Comments »
Sunday, January 17th, 2010
தமிழ்மணம் வழங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் நேற்று மாலை (சனவரி 16)தொடங்கி இன்று மதியம் வரை(சனவரி 17) தமிழ்மணம் சேவையில் தடங்கல் இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தில் கடந்த 48மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வாசகர் பரிந்துரையின் வாக்குகள் தமிழ்மணத்தில் இல்லை. இனிமேல் அளிக்கப்படும் வாக்குகள் தமிழ்மணத்தில் சேகரிக்கப்படும்.
சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்
நிர்வாகம்
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 5 Comments »
Saturday, January 16th, 2010
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற 2009ம் ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு தற்பொழுது நிறைவுபெறுகிறது. இந்த விருதுகள் நிகழ்வில் கலந்து கொண்ட பதிவர்களுக்கும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு இருந்த கூடுதலான ஆர்வமும், பங்கேற்பும் எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்து இருந்தது. அடுத்த ஆண்டில் இந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம், விருதுகள் 2009 | 39 Comments »
Sunday, January 3rd, 2010
இணையத்தில் இருக்கும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நூற்குறி (புக்மார்க்) வசதி தற்பொழுது தமிழ்மணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அடிப்படையான சோதனை வடிவம் ஆகும். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட நூற்குறி வசதியினை வழங்க முனைவோம்.
இந்த நூற்குறி வசதியைக் கொண்டு பதிவர்கள் மட்டுமில்லாமல் வாசகர்களும் தமிழ்மணத்தில் தாங்கள் படித்த சுட்டிகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு பயனர் பெயரை உருவாக்கி தமிழ்மணத்தில் உள்நுழைந்தால் கட்டுப்பாட்டகத்தில் நூற்குறியை பகிர்ந்து கொள்ளும் சுட்டி ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 9 Comments »
Friday, January 1st, 2010
தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வாக்களிக்கும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். Openid முறையில் வாக்களிப்பதில் இருந்த பல சிரமங்களை பதிவர்களும், வாசகர்களும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி வாக்களிப்பதற்கு தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும். தற்போதைய புதிய முறை மிகவும் எளிமையாக இருப்பதால் அதிகளவில் வாசகர்கள்/பதிவர்கள் இதனை பயன்படுத்த முடியும் என நம்புகிறோம்
உங்களுக்கு ஒரு புதிய பயனர் பெயரை ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 17 Comments »
Friday, January 1st, 2010
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கி சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்
முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இடுகைகள் இந்த இரண்டு கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்
தமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்
வாக்கெடுப்பு நடைமுறைகள்
1. இரண்டாம் கட்ட ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம், விருதுகள் 2009 | 14 Comments »
Thursday, December 31st, 2009
தமிழ்மணம் விருதுகள் 2009ல், பதிவர்கள் மட்டும் பங்கு பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பி்ன் முடிவுகளை இப்பொழுது அறிவிக்கின்றோம். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குகள் பெற்ற முதல் 10 இடுகைகள் அடுத்த கட்ட பொது வாக்கெடுப்பிற்கு தகுதி பெறுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளை சில பிரிவுகளில் பெற்றிருப்பதால் சில பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.
அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பில் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம், விருதுகள் 2009 | 27 Comments »
Thursday, December 17th, 2009
தமிழ்மணத்தில் சில இடுகைகளின் தலைப்புகள் கடந்த இரு தினங்களாக தெரிவதில்லை என பல பதிவர்கள் கூறியுள்ளனர். ப்ளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் செய்தியோடைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.
தமிழ்மணம் தொழில்நுட்பக்குழு இந்தப் பிரச்சனையை சரி செய்ய முயன்று வருகிறது என அறியத்தருகிறோம். பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி...
நிர்வாகம்,
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 3 Comments »
Wednesday, December 16th, 2009
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த ஆண்டின் சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் முதல் கட்ட வாக்கெடுப்பு இன்று தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.
தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக வாக்கினை அளிப்பதற்கான சிறப்புத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நடைமுறைகள்:
1. உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம், விருதுகள் 2009 | 15 Comments »
Tuesday, December 1st, 2009
தமிழ்மணம் விருதுகள் 2009ம் ஆண்டுக்கான இடுகைகளைப் பரிந்துரை செய்வதற்கான காலக்கட்டம் வரும் சனிக்கிழமை, டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு (அமெரிக்க நேரம்) தொடங்க இருக்கிறது என்பதை பதிவர்களுக்கு நினைவுறுத்துகிறோம்.
பதிவர்களுக்கு அனுப்ப்படும் மின்னஞ்சலைக் கொண்டு தங்களுடைய இடுகைகளை பதிவர்கள் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை தொடங்கும் நேரத்தில் அது குறித்த அறிவிப்பும் தமிழ்மணத்தில் வெளியாகும்.
பரிந்துரைக்கான காலக்கட்டம் - டிசம்பர் 5 முதல் டிசம்பர் 12 வரை (அமெரிக்க நேரம் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம், விருதுகள் 2009 | No Comments »