Archive for the ‘தமிழ்மணம்’ Category
Thursday, January 1st, 2009
தமிழ்ப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டில் தமிழ்ப்பதிவுகள் மேலும் சிறக்கட்டுமென்று தமிழ்மணத்தின் உளங் கனிந்த நல்வாழ்த்து!
Wishing all Tamil Bloggers and Readers, a Very Happy, Healthy, Peaceful and Prosperous Blogging in 2009!
Posted in தமிழ்மணம் | 18 Comments »
Sunday, December 14th, 2008
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்கவும் தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.
தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 55 Comments »
Wednesday, November 19th, 2008
தமிழ்மணம் தளத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டன. தமிழ்மணத்தில் புதிய இடுகைகளை இணைப்பது, பதிவுகளில் தமிழ்மணம் பதிவுப்பட்டையின் தறவிறக்கம் போன்றவை மிக வேகமாக இயங்குவதை எங்களின் சோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
தமிழ்மணம் கருவிப்பட்டை மட்டுமே பதிவுகளை தாமதப்படுத்துவதாக பல பதிவர்கள் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சனை முழுவதுமாக தற்பொழுது சரி செய்யப்பட்டு விட்டாலுங்கூட சில தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
- தமிழ்மணம் நிரலி ...
Posted in தமிழ்மணம் | 12 Comments »
Saturday, November 15th, 2008
தமிழ்மணம் வழங்கியில் (Server) எதிர்கொண்டு வரும் பிரச்சனை காரணமாக தமிழ்மணம் சேவையில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம்.
அதிகப்படியான பதிவர் வருகை தவிர, தமிழ்மணம் தளம் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் வலைப்பதிவு உலகின் அனைத்து பதிவுகளையும் வைத்துள்ளதும் தமிழ்மணம் தளத்தின் வழங்கிக்கு பலுவை ஏற்படுத்துகிறது. இவை தவிர மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொல் திரட்டுதல், சூடான இடுகைகள் போன்றவையும் தமிழ்மணம் வழங்கிக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறது.
இதுவே தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 25 Comments »
Tuesday, November 11th, 2008
தமிழ்மணம் தளம் செயல்படும் வழங்கியிலே இருந்து வரும் தொடர் பிரச்சனைகளால் தமிழ்மணம் தளம் சில நேரங்களில் முடங்கி விடுவதை கடந்த சில வாரங்களாக எதிர்கொண்டு வருகிறோம். அதிகப்படியான வாசகர்/பதிவர் வரவு இதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.
இதனை சமாளிக்கவும், எதிர்காலங்களில் தமிழ்மணத்திற்கு வரக்கூடிய புதிய வாசகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தமிழ்மணம் தளத்தை அடுத்த சில நாட்களில் வேறு ஒரு மேம்பட்ட வழங்கிக்கு மாற்ற இருக்கிறோம். இந்த வழங்கி மாற்றம் தமிழ்மணம் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 27 Comments »
Sunday, August 10th, 2008
தமிழ்மணம் கருவிப்பட்டை சில பதிவுகளில் பல முறை தெரியும் பிரச்சனை இருந்து வருகிறது. கருவிப்பட்டையை இணைக்க பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை “அளி” என்ற பொத்தனை அழுத்துவது தான் இதற்கு காரணம் (Multiple clicks on the submit button). இவ்வாறு செய்யும் பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை நிரலி பல முறை இணைக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக தமிழ்மணம் பதிவுப்பட்டை பல முறை தெரிகிறது.
உதாரணத்திற்கு கீழே ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 10 Comments »
Wednesday, August 6th, 2008
தமிழ் வலைப்பதிவுகளில் வெளியாகும் பல்வேறு படங்களை (புகைப்படங்கள், ஓவியங்கள்) தொகுக்கும் திரட்டியை - தமிழ்நிழல் தற்பொழுது வெளியிட்டிருக்கிறோம்.
இது தமிழ்நிழலின் ஆரம்பகட்ட சோதனை வடிவம். புகைப்படங்களை சார்ந்த பல்வேறு வசதிகளை விரைவில் தமிழ்நிழல் திரட்டியில் எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழ் சசி
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 9 Comments »
Saturday, August 2nd, 2008
மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி
தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டியான ‘ம' திரட்டி மூலமாக பல்வேறு வழிகளில் மறுமொழிகளை திரட்டுகிறோம்.
ப்ளாகர் தளங்களில் இயங்கும் பதிவுகளில் தமிழ்மணம் கருவிப்பட்டை மூலமாக மறுமொழிகள் நிலவரம் திரட்டப்படுகிறது. இது தவிர கருவிப்பட்டை இணைக்கப்பட்ட பதிவுகளின் செய்தியோடைகள் மூலமாக அனைத்து மறுமொழிகளையும் தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. இதன் மூலம் அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை ‘ம' திரட்டி வழங்குகிறது
தமிழ்மணம் பதிவுப்பட்டையை ப்ளாகர் பதிவுகளில் இணைக்கும் செய்முறை ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 11 Comments »
Thursday, July 10th, 2008
தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது. அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள். முழு கட்டுரையும் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில், வெறும் தலைப்பு மட்டுமே தமிழ்மணத்தில் வரிசையாக இத்தகைய சொற்கள் கொண்டவைகளாக உள்ள சூழ்நிலையில் தமிழ்மணம் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 66 Comments »
Sunday, May 4th, 2008
புதிய தமிழ்மணத்தின் சோதனை வடிவத்தை (பீட்டா) தற்பொழுது வெளியிட்டுள்ளோம். இந்த புதிய தமிழ்மணம் மேம்படுத்தப்பட்ட் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வெளியாகிறது.
புதிய தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை அடுத்த வரும் நாட்களில் தொடர்ச்சியாக இந்த வலைப்பதிவின் மூலமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
தற்போதைய சில முக்கிய குறிப்புகள்
குறிச்சொல் சார்ந்த பல்வேறு வசதிகளை தமிழ்மணம் இந்த புதிய பதிப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது வரை இருந்த தமிழ்மணம் வகைப்படுத்தல் இனி முற்றிலுமாக நீக்கப்படும். பதிவர்கள் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 49 Comments »