Archive for the ‘தமிழ்மணம்’ Category
Sunday, August 10th, 2008
தமிழ்மணம் கருவிப்பட்டை சில பதிவுகளில் பல முறை தெரியும் பிரச்சனை இருந்து வருகிறது. கருவிப்பட்டையை இணைக்க பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை “அளி” என்ற பொத்தனை அழுத்துவது தான் இதற்கு காரணம் (Multiple clicks on the submit button). இவ்வாறு செய்யும் பொழுது தமிழ்மணம் பதிவுப்பட்டை நிரலி பல முறை இணைக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக தமிழ்மணம் பதிவுப்பட்டை பல முறை தெரிகிறது.
உதாரணத்திற்கு கீழே ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 7 Comments »
Wednesday, August 6th, 2008
தமிழ் வலைப்பதிவுகளில் வெளியாகும் பல்வேறு படங்களை (புகைப்படங்கள், ஓவியங்கள்) தொகுக்கும் திரட்டியை - தமிழ்நிழல் தற்பொழுது வெளியிட்டிருக்கிறோம்.
இது தமிழ்நிழலின் ஆரம்பகட்ட சோதனை வடிவம். புகைப்படங்களை சார்ந்த பல்வேறு வசதிகளை விரைவில் தமிழ்நிழல் திரட்டியில் எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழ் சசி
தமிழ்மணம்
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 9 Comments »
Saturday, August 2nd, 2008
மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி
தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டியான ‘ம' திரட்டி மூலமாக பல்வேறு வழிகளில் மறுமொழிகளை திரட்டுகிறோம்.
ப்ளாகர் தளங்களில் இயங்கும் பதிவுகளில் தமிழ்மணம் கருவிப்பட்டை மூலமாக மறுமொழிகள் நிலவரம் திரட்டப்படுகிறது. இது தவிர கருவிப்பட்டை இணைக்கப்பட்ட பதிவுகளின் செய்தியோடைகள் மூலமாக அனைத்து மறுமொழிகளையும் தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. இதன் மூலம் அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை ‘ம' திரட்டி வழங்குகிறது
தமிழ்மணம் பதிவுப்பட்டையை ப்ளாகர் பதிவுகளில் இணைக்கும் செய்முறை ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 11 Comments »
Thursday, July 10th, 2008
தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது. அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள். முழு கட்டுரையும் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில், வெறும் தலைப்பு மட்டுமே தமிழ்மணத்தில் வரிசையாக இத்தகைய சொற்கள் கொண்டவைகளாக உள்ள சூழ்நிலையில் தமிழ்மணம் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 64 Comments »
Sunday, May 4th, 2008
புதிய தமிழ்மணத்தின் சோதனை வடிவத்தை (பீட்டா) தற்பொழுது வெளியிட்டுள்ளோம். இந்த புதிய தமிழ்மணம் மேம்படுத்தப்பட்ட் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வெளியாகிறது.
புதிய தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை அடுத்த வரும் நாட்களில் தொடர்ச்சியாக இந்த வலைப்பதிவின் மூலமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
தற்போதைய சில முக்கிய குறிப்புகள்
குறிச்சொல் சார்ந்த பல்வேறு வசதிகளை தமிழ்மணம் இந்த புதிய பதிப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது வரை இருந்த தமிழ்மணம் வகைப்படுத்தல் இனி முற்றிலுமாக நீக்கப்படும். பதிவர்கள் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 49 Comments »
Wednesday, March 26th, 2008
தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 13 Comments »
Tuesday, January 1st, 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ) நிறுவனத்தின் நிறைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக் காட்டியும் டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவண்,
டி.எம்.ஐ நிர்வாகக் குழு
Happy New Year
Tamil Media International LLC (TMI) expresses its gratitude to you for ...
Posted in தமிழ்மணம் | 6 Comments »
Saturday, December 29th, 2007
இன்று (28, டிசம்பர் 2007) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விளைவாக, டிசம்பர் 28, 2007 அதிகாலை 1:00 கிநிநே (EST) அளவில் எடுக்கப்பட்ட backup கொண்டு தமிழ்மணம் தளம் சரிசெய்யப்பட்டுள்ளது. அதிகாலை 1:00மணியில் இருந்து இன்று இரவு 8மணி வரை சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை.
இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 5 Comments »
Wednesday, December 12th, 2007
தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தி சிறந்த பதிவுகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் நோக்கில் தமிழ்வலைப்பதிவுகளின் முன்னோடித் திரட்டியான தமிழ்மணம் சில திட்டங்களை வரைந்துகொண்டுள்ளது. இதைப்பற்றி ஏற்கனவே தமிழ்மணம் தளத்தை நிர்வகிக்கும் டி.எம்.ஐ. நிறுவனம் சில இடங்களில் இடுகை/மறுமொழி வாயிலாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
விரைவில் முழுமையான அறிவிப்பை எதிர்பாருங்கள்.
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 62 Comments »
Wednesday, June 20th, 2007
கேளிர் - தமிழ்மணம் பன்மொழித்திரட்டி - Beta
டி எம் ஐ தொழில்நுட்பக்குழு உருவாக்கிய கேளிர் - தமிழ்மணம் பன்மொழித் திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டு உள்ளோம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து வலைப்பதிவுகள் திரட்டப்படுகின்றன. இவ்வலைப்பதிவுகள் கூகுள் வலைப்பதிவு தேடுதல் சேவை மூலமாகத் திரட்டப்படுகிறன.
கூகுளை அடிப்படையாகக் கொண்டு கேளிர் திரட்டியிலே வலைப்பதிவுகள் திரட்டப்படுவதால், தமிழ்மணத்திற் பதிவு செய்யப்படாத தமிழ்ப்பதிவுகளும் இதிலே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. ...
Posted in அறிவிப்புகள், தமிழ்மணம் | 9 Comments »