டி.எம்.ஐ.யின் கையேடுகள்
பொதுவாகக் கையேடுகள் என்பவை குறுகிய நேரத்தில் நிறைய செய்திகளை எளிய முறையில் சொல்லி, பல்வேறு செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இவற்றைச் சுற்றுலா மையங்கள், கண்காட்சிகள், நூல்நிலையங்கள், மருத்துவமனைகள் என்பவற்றில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். தமிழ் இணையத்தில் உலாவும் அன்பர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு சோதனை முயற்சியே ‘தமிழ் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கையேடுகள்‘. இவற்றின் நோக்கம், கையேடுகளின் வாயிலாகத் தமிழர்களுக்குச் சுகாதாரம், சமூக நலன், கல்வி போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இதற்கான கையேடுகள் இணையத்திலும், வேண்டும்பொழுதில் அச்சீடாகவும் வெளியிடப்படும்.
இதுவரையில் வெளியிடப்பட்ட கையேடுகள்:
அ) குடும்ப உறவை பலப்படுத்துதல்: இத்தொடரில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களை எவ்வாறு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தேர்ச்சியடைய வைக்கலாம் என்பதற்கு வழிகளும், அதன் மூலம் குடும்பங்களில் பிணைப்பை வலுப்படுத்தும் முறைகளைக் குறித்தும் நாம் அறிந்துகொள்ளலாம்.
வாரம்-1 பயிற்சி கையேடு – 1
வாரம்-1 பெற்றோர் கையேடு – 1
வாரம்-2 பயிற்சி கையேடு
வாரம்-2 பெற்றோர் கையேடு
வாரம்-3 பயிற்சி கையேடு
வாரம்-3 பெற்றோர் கையேடு
வாரம்-4 குழந்தைகள் பயிற்சி கையேடு
வாரம்-5 பெற்றோர் கையேடு
வாரம்-6 குழந்தைகள் பயிற்சி கையேடு
வாரம்-6 பெற்றோர் கையேடு
வாரம்-7 பெற்றோர் கையேடு
வாரம்-8 குழந்தைகள் பயிற்சி கையேடு
வாரம்-9 பெற்றோர் கையேடு
ஆ) மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்: இந்தக் கையேட்டில் மார்பக ஆய்வு செய்துகொள்ள வேண்டிய இன்றியமையாமை பற்றியும், முறைகளைப் பற்றியும் விளாக்கப்பட்டிருக்கிறது.
இவற்றை டி.எம்.ஐயின் இந்தப் பக்கத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
மேற்கண்ட கையேடுகளின் ஆங்கில மூலம் பத்மா அரவிந்த் அவர்களின் ஈடுபாட்டில் தயாரானவை. அவை பூங்கா குழுவினரால் மொழிபெயர்க்கப்பட்டு (“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” மொழியாக்கம்-நன்றி: கற்பகம் கல்யாண்), வடிவமைக்கப்பட்டன. இதுவரை சராசரியாக ஒவ்வொரு கையேடும் சுமார் 30 முறை தரவிறக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவைப் பலப்படுத்துதல் கையேட்டின் இறுதி சில பகுதிகள் வரும் வாரப் பூங்கா இதழ்களில் வெளிவரும். இவற்றைத் தவிர வரும் காலத்தில் அதிக அளவில் குடும்ப நலம், குழந்தைகள் நலம் மற்றும் சுகாதாரம் குறித்த கையேடுகள் வெளியிடப்படவுள்ளன.
வலைப்பதிவர்களாகிய நீங்கள் எவ்வாறு இதற்கு உதவலாம்?
கையேடு தயாரிப்பில் ஆர்வமும், திறமையும் உள்ள வலைப்பதிவர்கள் எங்களோடு இணைந்து இவற்றைத் தயாரிக்கலாம். உதாரணமாக, நீங்கள் காணும் பயனுள்ள பொதுநலக் கையேடுகளை எங்களது கவனத்துக்குக் கொண்டு வரலாம்.
இயன்றால், அதன் வெளியீட்டாளரோடு தொடர்புகொண்டு மொழிபெயர்ப்பு உரிமையைக் கேட்கலாம் (பொதுவாக இது வழங்கப்படுவதில் பிரச்சினையில்லை); நீங்களே அதனைத் தமிழாக்கி எங்களுக்கு அனுப்பலாம்.
உங்கள் வலைப்பதிவுகளில் இட்டுவிட்டு, எங்களுக்கு இணைப்பை அனுப்பலாம்.
நாங்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் கையேடுகளை மொழிபெயர்ப்பதில், வடிவமைப்பில் உதவலாம்.
புதிதாக ஏதேனும் கையேடுகள் தயாரிக்கும் யோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட கையேடுகளை நண்பர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் பரப்பலாம்.
அச்சிட்ட கையேடுகளை விநியோகிக்க இயலுமென்றால், அதற்கான ஏற்பாடும் பரிசீலிக்கப்படும்.
கையேடுகளைப் பற்றிய விமரிசனங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டு, கையேடுகளின் தரத்தினை உயர்த்த வகை செய்யலாம்.
எனவே விருப்பமுள்ள நண்பர்கள் எம்மோடு தொடர்புகொள்ளலாம். பயனுள்ள தகவல்களை மக்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் தயாரிக்கப்படும் இக்கையேடுகளை பதிவர்கள் அதிக அளவில் தரவிறக்கிப் படித்துக்கொள்ளவும், பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் வேண்டுகிறோம்.
பதிப்புக்குழு
டிஎம்ஐ
Comments
5 Responses to “டி.எம்.ஐ.யின் கையேடுகள்”
Leave a Reply

நல்ல முயற்சி.
இந்தக் கையேடுகளை தரவிறக்குவதில் பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. தரவிறக்கப்பட்ட கோப்புகள் காலியாக உள்ளன. அவற்றின் அளவு 0kb என்று காட்டப்படுகிறது. லினக்ஸில் இந்தப் பிரச்சனை என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன். விண்டோஸிலிருந்து இன்னமும் முயன்று பார்க்கவில்லை.
Same problem from Win XP also.
As an epidemiologist (public health professional), I can help you in this regard. Thank you.
அதே பிரச்சனைதான் எனக்கும். எந்த கோப்பையும் தரவிறக்க முடியவில்லை ;-(
சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
அண்மையிலே டிஎம்ஐ வழங்கியினை இடப்பெயர்த்தோம் (server migration). அதன் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்.
விரைவிலே, இத்தடங்கலை நிவர்த்தி செய்துவிடுகிறோம்.