‘பூங்கா’ பெண்கள் நாள் இதழிற்கான (12, மார்ச் 2007) படைப்புகள்

March 6, 2007 · Posted in அறிவிப்புகள் 

வரும் மார்ச் 8 ஆம் தேதி பன்னாட்டு மகளிர் தினம்! உலகெங்கும் வாழும் பெண்கள் மொழி, மதம், நாடு, இனம், பண்பாடு, அரசியல் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து “பெண்” என்கிற சிறப்பால் மட்டுமே ஒன்றுபட்டு, கடந்த நூறு ஆண்டுகளாகத் தாம் சந்தித்தப் போராட்டங்கள், சமத்துவம், நீதி, அமைதி, முன்னேற்றங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்து கொண்டாடும் நாள்! ஆண்களுக்கு இணையாக இந்தச் சமூகத்தில் கால் ஊன்றப் பாடுபட்டு சாதித்தப் பெண்களின் வரலாற்றைச் சிறப்பிக்கும் நாள்! இந்த வருட மகளிர் தினத்திற்காக “பெண்கள், சிறுமிகள் மேலான வன்முறையாளர்களைத் தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்கு முடிவு கட்டுதல் (Ending impunity for violence against women and Girls)” என்கிற கருத்தை ஐ.நா சபை அறிவித்திருக்கிறது.

இந்தச் சிறப்பு தினத்தை முன்னிட்டு, மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளிவரும் பூங்கா, பெண்கள் சிறப்பிதழாக வெளிடப்படும். இந்த இதழுக்காக, பதிவர்களை பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு தலைப்பில் ஆக்கப்பூர்வமான கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நேர்காணல்கள் போன்றவற்றை உங்கள் பதிவில் இன்று தொடங்கி எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு, ஊடகம், வர்த்தகம், சினிமா, சட்டம், மருத்துவம், பெண்ணியம், கலை, போர், அரசியல் போன்ற பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த பெண்களின் சாதனைகள், வாழ்க்கை முறை, பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி எழுதலாம்.

உங்கள் படைப்புக்களை பூங்காவிற்கு நேரிடையாகவும் select@thamizmanam.com என்கிற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். அடுத்த வார பூங்காவிற்குப் பொருத்தமான உங்களது படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Comments

8 Responses to “‘பூங்கா’ பெண்கள் நாள் இதழிற்கான (12, மார்ச் 2007) படைப்புகள்”

  1. தாணு on March 7th, 2007 1:25 am

    ப்ளாக்கில் பதிவு செய்யும் கட்டுரைகளை பூங்காவுக்கும் அனுப்பலாமா? அல்லது நீங்களே பூங்காவில் சேர்த்துக் கொள்கிறீர்களா?

    =====

    பதிவர் தாணு:
    உங்கள் பதிவிலே எழுதும் படைப்பினைத் தமிழ்மணம் திரட்டிக்குப் ‘பதிவு’ பட்டையூடாக அனுப்பலாம். அப்போதே பூங்காவிலே சேர்த்துக்கொள்வதற்கான சம்மதத்தினைத் தரலாம். பதிவிலே இல்லாத படைப்பெனில், பூங்கா ஆசிரியர் குழுவுக்கு ezine@thamizmaNam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

  2. திரு on March 7th, 2007 9:15 am

    பூங்கா பெண்கள் தின சிறப்பிதழ் சிறப்பான படைப்புகளுடன் வர வாழ்த்துக்கள்.

    ஆவலுடனும் எதிர்பார்ப்புகளுடனும்..

  3. செந்தழல் ரவி on March 7th, 2007 11:53 pm

    வாழ்த்துக்கள் படைப்பவர்களுக்கு…

  4. லக்கிலுக் on March 8th, 2007 12:02 am

    இந்திய பாராளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கான 33 சதவிகித இடப்பங்கீடு குறித்த விரிவான கட்டுரை மற்றும் விவாதத்தை எதிர்பார்க்கிறேன்.

  5. [...] தமிழ் வலைப் பதிவுலகில் படைப்புகளை அனுப்பச் சொல்லி பூங்கா கேட்டிருக்கிறது. அடுத்த இதழில் தொகுத்து வெளியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். [...]

  6. தமிழ்நதி on March 11th, 2007 5:17 am

    நட்சத்திர வாரத்தினையொட்டி இன்றைய நாளுக்கென இரண்டு பதிவுகளைப் போட்டும் தமிழ்மண இடுகைகள் பகுதியில் தெரியவில்லை. தயவுசெய்து கவனியுங்கள். நன்றி

  7. தமிழ்நதி on March 11th, 2007 7:52 am

    இப்போது எனது பதிவுகள் இடுகைப்பகுதியில் தெரிகின்றன. நன்றி.

  8. தமிழ்பித்தன் on March 12th, 2007 3:10 pm

    நான்மட்டறுத்தல் செய்து விட்டேன் மறுமொழி திரட்ட வழி செய்யவும்

Leave a Reply