தமிழ்மணம் திரட்டியிலே பின்னூட்டங்களினைக் காட்டுவதிலேயிருந்த சிக்கல்

March 4, 2007 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் திரட்டியிலே பின்னூட்ட மேலெல்லையை மாற்றுதலின் பின்னால், கடந்த சில நாட்களாகப் பின்னூட்டங்கள் காட்டப்படுவதிலே இரண்டு வழுக்கள் தற்காலிகமாகக் காணப்பட்டன.

1. பின்னூட்டங்களின் எண்ணிக்கையைத் தவறாக உயர்த்திக்காட்டுதல்
2. பின்னூட்டங்களுக்கான இடுகைகளின் அருகிலே பதிவர்களின் பெயர்கள் தோன்றாதிருத்தல்

இது குறித்து தமிழ்மணம் அறிவிப்பு பின்னூட்டங்களிலே அறியத் தந்திருந்தோம். இவை பற்றி பதிவர்கள் & வாசகர்கள் ஆகியோரும் அறியத் தந்தனர். அவர்களுக்கு நன்றி. இப்போது, முதலாவது வழு களையப்பட்டிருக்கிறது என சோதித்தவளவிலே நம்புகிறோம்.

தொடர்ந்தும் இந்நிலையிலே சிக்கல்கள் தென்பட்டால், அறியத்தாருங்கள். மேலே குறை களைய வசதியாகவிருக்கும்.

வருத்திய வழுக்களுக்கு வருந்துகிறோம். தமிழ்மணம் பயனாளிகள் காட்டிய பொறுமைக்கு நன்றி.

புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

இற்றைப்படுத்து விபரம்

4 மார்ச் 2007, 15:45 கிநிநே

தொடர்ந்தும் ஏறக்குறைய இருபத்தைந்து இடுகைகள் பின்னூட்ட எண்ணிக்கை *வழு*வுடன் காணப்படுகிறன.

However the comment count *problem* is fixed. For the practical (time saving) purpose , those numbers are left to appear as such if the count is less than 100. For those more than 100 were reset already. That is why no any 100, 608, 456, 4424 etc.

All of the ones >40 and <100 can be reset to zero and upon viewing them next they can show the correct count. Just that for a brief time they will disappear from the list. This might take a while. Once finishing up the 2nd problem this resetting will be tackled.

பொறுமைக்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

24 Responses to “தமிழ்மணம் திரட்டியிலே பின்னூட்டங்களினைக் காட்டுவதிலேயிருந்த சிக்கல்”

  1. வி.ஜெ.சந்திரன் on March 4th, 2007 3:09 pm

    http://viriyumsirakukal.blogspot.com/2007/03/blog-post_03.html

    என்ன தம்பி கறுத்து போனாய் (42) :

    இப்பிடி தான் காட்டுது

    :)

  2. தமிழ்மணம் on March 4th, 2007 4:16 pm

    இற்றைப்படுத்து விபரம்

    4 மார்ச் 2007, 15:45 கிநிநே

    தொடர்ந்தும் ஏறக்குறைய இருபத்தைந்து இடுகைகள் பின்னூட்ட எண்ணிக்கை *வழு*வுடன் காணப்படுகிறன.

    However the comment count *problem* is fixed. For the practical (time saving) purpose , those numbers are left to appear as such if the count is less than 100. For those more than 100 were reset already. That is why no any 100, 608, 456, 4424 etc.

    All of the ones >40 and <100 can be reset to zero and upon viewing them next they can show the correct count. Just that for a brief time they will disappear from the list. This might take a while. Once finishing up the 2nd problem this resetting will be tackled.

    பொறுமைக்கு நன்றி

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  3. திரு on March 5th, 2007 11:36 am

    தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,

    எனது பெரியார் வலைப்பதிவின் பின்னூட்டங்கள் தமிழ்மணம் திரட்டியில் திரட்டப்படவில்லை. சரிசெய்யுமாறு கேட்கிறேன். நன்றி!

    அன்புடன்
    திரு

    =====
    இப்போது திரட்டப்படுகிறது

  4. கௌசி on March 5th, 2007 11:45 am

    இன்று பதிவிட்ட ‘ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிகள்’என்ற இடுகைக்குப் பக்கத்தில் என்னுடைய பெயர் வரவில்லை. ஆவன செய்யவும்.நன்றி.

    ======
    இது பற்றி நேற்றைய அறிவிப்பிலே சுட்டியிருந்தோம். இந்நிலை சில பதிவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வழுவைக் களைவதிலே ஈடுபட்டிருக்கின்றோம். விரைவிலே சரியாகும்.

  5. கௌசி on March 5th, 2007 12:06 pm

    it has been rectified .thank you veru much .

  6. Vicky on March 5th, 2007 12:12 pm

    என்னுடைய பதிவின் பின்னூட்டங்கள் கடந்த சில பதிவுகளாக திரட்டப்படவில்லை. can u pls. look into it??

  7. கானா.பிரபா on March 6th, 2007 12:35 am

    என்னுடையதன் பிரச்சனை இன்னும் இருக்கிறது, இலங்கைப் பிரச்சனை போலவே…

    =====
    இப்போது பெயர் தென்படுகின்றது. சரி பாருங்கள். தொடர்ந்தும் குறையிருப்பின், அறியத்தாருங்கள்.

  8. நாகு on March 10th, 2007 9:19 am

    எங்கள் பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் இருக்கிறது(comment moderation). ஆனால் தமிழ்மணம் இல்லை என்கிறது. மேலும் புது பிளாக்கரில் pdf எப்படி செய்வது என்று தெரிவித்தால் நலம்.

  9. தமிழ்மணம் on March 10th, 2007 9:25 am

    பதிவர்களுக்கு:

    பூங்கா, தமிழ்மணத்தின்மீதான சில பதிவர்களின் பின்னூட்டங்கள் spam karma வடிகட்டியினால், எரிதங்கள் எனக் கருதப்பட்டு, எரிதக்குப்பைகளோடு விழுந்துவிடுகின்றன. குறிப்பாக, Pot “Tea” Kadai, iravu”KK”azugu, SK, கானா பிரபா ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு இப்படியாக எப்போதும் நிகழ்கின்றது. உடனுடக்குடன் அவற்றினைக் கண்காணித்து, எரிதங்கள் அல்லவென அனுமதிக்க முடியாதிருக்கின்றபோதும், அவ்வப்போது சோதனை செய்து அனுமதிக்க வேண்டியதை அனுமதிக்கின்றோம். அதனால், இதுபோல பதிவர்களின் எரிதங்களல்லாத தமிழ்மணம், பூங்கா பின்னூட்டங்கள் தாமதமானால், இந்நிலையையும் கருத்திலே கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
    புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

  10. Sivabalan V on March 11th, 2007 2:32 pm

    நிர்வாகிகளுக்கு,

    எனது பதிவின் பின்னூடங்கள் அனுமதித்த பிறகு தமிழ்மணத்தில் தெரியவில்லை..

    ஆவன செய்யுங்கள்!1

    நன்றி

  11. மணிகண்டன் on March 11th, 2007 3:52 pm

    அண்மையில் மறுமொழியப்பட்ட இடுக்கைகள் பகுதியில் எனது வலைப்பதிவின் பின்னூட்டங்கள் திரட்டப்படவில்லை. சரிசெய்யுமாறு கேட்கிறேன். நன்றி!

    =====
    திரட்டப்படுகிறதே

  12. Sivabalan V on March 11th, 2007 11:24 pm

    நிர்வாகத்திற்கு,

    “சற்றுமுன்” பதிவுகளில் இருந்து தமிழ்மணத்திற்கு அளித்தால் அண்மையில் எழுதப்பட்டவை இடுக்கையில் தெரியவில்லை.

    http://satrumun.blogspot.com/

    ஆவண செய்யுங்கள்

    நன்றி

    =====

    ஞாயிறு தமிழ்மணத்திலே சற்றுத் தாமதமாகவே இடுகைகள் தோன்றியதாகச் சில பதிவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
    கவனிக்கின்றோம்

  13. Nandha on March 12th, 2007 3:04 am

    தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,

    எனது வலைப்பதிவின் பின்னூட்டங்கள் தமிழ்மணம் திரட்டியில் திரட்டப்படவில்லை. ஏற்கனவே எனது வலைப் பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மணத்திலும் ‘ஆம்’ என்றே உள்ளது.ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் திரட்டப்படுவதே இல்லை.இதனை சரிசெய்யுமாறு கேட்கிறேன். நன்றி!

    நட்புடன்
    நந்தா

  14. ☆ சிந்தாநதி on March 12th, 2007 3:43 am

    பதிவுகள் இட்டு ஒரு மணிநேரத்துக்கு மேலாகிறது. இதுவரை தமிழ்மணத்தில் திரட்டப் படவில்லை. ஏற்கனவே திரட்டப் படும் பதிவுகளில் புதிதாக இடப்படும் மறுமொழிகளையும் திரட்டவில்லை…

    http://tamiltalk.blogspot.com/
    http://valai.blogspirit.com/

  15. மணிகண்டன் on March 12th, 2007 1:06 pm

    தமிழ்மணத்திற்கு அனுப்பிய எனது பதிவு மூன்று மணிநேரங்களுக்கு பிறகே தமிழ்மணம் முகப்பில் தோன்றியது. பின்னூட்டங்களும் தாமதமாகவே தோன்றுகிறது.

    ஆவண செய்யுங்கள். நன்றி

  16. இலவசக்கொத்தனார் on March 12th, 2007 4:02 pm

    எனக்கும் மணிகண்டன் கூறிய பதிவுகள் முகப்பில் வருவதும் மறைவதுமான பிரச்சனை இருக்கிறது. என் பதிவில் சிபியும், ஜிராவும் கூட இந்த பிரச்சனை இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எஸ்.கேவும் இந்த பிரச்சனை இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஒரு வேளை அமெரிக்காவில் டே லைட் சேவிங் நேரம் முன்னமே வந்துவிட்டதால் ஆன பிரச்சனையா? இது பற்றி ஒரு விளக்கம் தாருங்களேன்.

    நன்றி.

  17. செல்லி on March 12th, 2007 5:33 pm

    //பதிவுகள் இட்டு ஒரு மணிநேரத்துக்கு மேலாகிறது. இதுவரை தமிழ்மணத்தில் திரட்டப் படவில்லை. ஏற்கனவே திரட்டப் படும் பதிவுகளில் புதிதாக இடப்படும் மறுமொழிகளையும் திரட்டவில்லை…//
    இதே பிரச்சனை என்னக்கும் இருக்கிறது

  18. Kana Praba on March 12th, 2007 6:40 pm

    மணிகண்டன் சொன்ன பிரச்சனை எனக்கும் உள்ளது, இந்த பதிவுக்கு மட்டும்
    http://www.kanapraba.blogspot.com

  19. தமிழ்மணம் on March 12th, 2007 7:22 pm

    தமிழ்மணத்தின் சேவையிலே காணப்படும் தாமதம்

    தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட இடுகைகளையும் இற்றைப்படுத்தப்பட்ட பின்னூட்டங்களையும் காட்டுவதிலே கடந்த ஞாயிறிலிருந்து (11 மார்ச் 2007) தாமதம் ஏற்பட்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. இந்நிலையை எமக்கு அறியத் தந்த பதிவர்களுக்கு நன்றி.

    இந்நிலை கடந்த ஞாயிறு அமெரிக்க நிர்ணய நேரத்திலே ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் விளைவாக இருக்கலாமெனக் கருதுகிறோம்.

    விரைவிலே சேவையை வழமைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

    இடைப்பட்ட நேரத்திலே தமிழ்மணம்_பயனர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வசதிக்குறைவுக்கு வருந்துகிறோம்.

    புரிந்தலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  20. தமிழ்மணம் on March 12th, 2007 10:45 pm

    இற்றைப்படுத்திய செய்தி

    12, மார்ச் 2006 திங்கள் 23:30 அமெரிக்கா கிழக்குக்கடற்கரை நேரம்

    இப்போது, தமிழ்மணம் சேவை வழமைக்குத் திரும்பியிருக்கின்றது.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  21. sugunadiwakar on March 17th, 2007 9:38 am

    சமீபகாலமாக என் பதிவில் பின்னூட்டங்கள் வந்தபின்னும் ‘சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’ பட்டியலில் வருவதில்லை.

  22. sugunadiwakar on March 26th, 2007 5:40 am

    மீண்டும் என்னுடைய இடுகைகள் ‘சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’ பட்டியலில் வருவதில்லை.

  23. rajmohd on December 30th, 2007 10:16 pm

    நிர்வாகிகளுக்கு,

    எனது பதிவின் பின்னூடங்கள் அனுமதித்த பிறகு தமிழ்மணத்தில் தெரியவில்லை..

    ஆவன செய்யுங்கள்!

    நன்றி

  24. தமிழ்மணம் on December 30th, 2007 10:54 pm

    it might be the wordpress.com -thamizmaNam issue.

Leave a Reply