வார இறுதி (மார்ச் 3, 2007) தமிழ்மணம் வழங்கியின் சேவை & பராமரிப்பு
தமிழ்மணம் மற்றும் பூங்கா தளத்திற்கு அதிகப்படியான பயனர்களின் வரவு காரணமாக, அண்மையிலே தமிழ்மணம் திரட்டியின் பதிலிறுப்பிலே (response) சற்றே தொய்வு ஏற்பட்டிருப்பதைத் தமிழ்மணம்_பயனாளிகள் உணர்ந்திருப்பீர்கள். இதைச் சரி செய்வும் தமிழ்மணம் பயனர்களுக்கு இன்னும் மேம்பட்ட சேவையை வழங்கும் பொருட்டும் தமிழ்மணம் தளத்தில் சில பராமரிப்பு வேலைகளுக்கு இந்த வார இறுதியில் திட்டமிட்டிருக்கிறோம். அமெரிக்கக்கிழக்கு நிர்ணய நேரப்படி (EST) சனிக்கிழமை இரவு (மார்ச் 3, 2007) அன்று 11மணிக்கு இந்த பராமரிப்பு வேலை நடைபெறும். இதனால் தமிழ்மணம் சேவையிலே பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலுங்கூட சிறு தடங்கல்கள் உணரப்பட வாய்ப்புள்ளது. மார்ச் 3, 2007 சனி இரவு 11 மணிக்கு மேல் தமிழ்மண அறிவித்தல்வரை பதிவர்கள் தமிழ்மணத்திற்குத் தங்கள் பதிவுகளை/இடுகைகளை அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்மணத்தின் பராமரிப்புகள் முடிந்தவுடன் பயனர்களுக்கு அறிவிப்போம்.
புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
Comments
12 Responses to “வார இறுதி (மார்ச் 3, 2007) தமிழ்மணம் வழங்கியின் சேவை & பராமரிப்பு”
Leave a Reply

அறிவிப்புக்கு நன்றி!!
தொடரட்டும் உங்கள் மேலான பணி!
OK…. ஆனா லேட் பண்ணாம சீக்கிரம் சரி பண்ணிடுங்க
சென்ஷி
=====
hopefully and if things move as we planned, the maintenence task will finish within few hours.
அறிவிப்புக்கு நன்றி
எப்பொழுதும் அறிவிப்புகளில் குறிப்பிடும் காலத்தை இந்திய நேரப்படி வழங்கினால் பதிவர்களுக்கு கணக்கு போட எளிதாக இருக்கும். இல்லாவிட்டால்,world clock தளத்துக்கு போய் தான் நேரம் மாற்ற வேண்டும். மேம்பட்ட சேவைக்குநன்றி
தொடருட்டும் உங்கள் சேவை!
you hv announced that the maintainance task will be starting from11pm on 3rd.from today 3rd morning i culdnt publish any post in my blog which get disappeared as soon as i publish [or kept as a draft.]i dont know whats wrong with my blog .culd you help me in this regard.thank u
———————-
Dear Kanmani,
Your problem in publishing comments may have something to do with blogger. If you have problem in linking the post in thamizmanam or comments update we can certainly look into it.
Admin
sir,
when i tried to publish a post using firefox browser i culd able to do that and made a posting too.but there is some page error arises when i try with internet explorer.if it is the fault of my comp i will rectify it myself otherwise you plz find out whats the problm with my blog and thamizmanam.thank u again.
3 பின்னூட்டம் வந்ததை 43ஆக காட்டி, முகப்பில் இருந்து தூக்கிவிடும் பிரச்சனை சரியாகும் வரை, இந்த ‘உயர்மட்ட’ விதியை சற்று தளர்த்தலாமே?
=====
it may be the part and parcel of the problem. We are looking into it.
தமிழ் மணம் ஒரு திரட்டிச் சேவை என்பது தெரியும்.[என்பதிவுகளை 'பப்ளிஷ்' செய்தவுடன் காணாமல் போகிறது].யாரேனும் உதவக்கூடும் என்பதால் அறிவிப்பு பகுதியில் எழுதினேன்.புதிதாக இன்னொரு பிரச்சினை.நேற்றையா என்னுடைய பதிவுக்கு4 மறுமொழிகள்தான்.ஆனால் என் இடுகை பெயருக்கு பக்கத்தில் [100] என்றிருக்கிறது.எப்படி? மறுமொழி மட்டறுத்தாலும் உடனே காண்பிக்கப் படுவதில்லை.
======
நீங்கள் தமிழ்மண அறிவிப்புகளையோ பின்னூட்டங்களிலே நாம் தரும் பதில்களையோ வாசிப்பதில்லையா?
தமிழ் மணம் ஒரு திரட்டிச் சேவை என்பது தெரியும்.[என்பதிவுகளை ‘பப்ளிஷ்’ செய்தவுடன் காணாமல் போகிறது].
I do not know what you mean by this; vanishing from thamizmaNam or from blogger itself?
If it is vanishing from your blog it could be the issue of blogger. Usually the lengthy posts or pots with long titles do vanish in (old) blogger. If the blogs are there and vanishing from thamizmaNam only, please let us know under a post related to your issue (please not here in server migration as it confuses people. Thanks).
தமிழ்மணம் பின்னூட்டங்களைத் திரட்டுவதிலே கீழ்க்காணும் வழுக்கள் தற்காலிகமாக+ தற்போது ஏற்படுகின்றன
1. பின்னூட்டங்களின் எண்ணிக்கையைத் தவறாக உயர்த்திக்காட்டுதல்
2. பின்னூட்டங்களுக்கான இடுகைகளின் அருகிலே பதிவர்களின் பெயர்கள் தோன்றாதிருத்தல்
சென்ற சில நாட்களாக இவ்வழுக்கள் குறித்து ஓரளவு திருத்தங்களைச் செய்துவிட்டோம். வழங்கி மாற்றப்படுவதால், ஓரிரு நாட்களுக்குள்ளே மிகுதியான சிக்கல்களும் களையப்படுமென நம்புகிறோம்.
வருத்தும் வழுக்களுக்கு வருந்துகிறோம். தொடரும் பொறுமைக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
நிர்வாகத்தினர் செல்லாவின் பதிவுக்கு தடை போடவேண்டும்.

இந்த மாதிரி பதிவுகள் தொடர்ந்து வருதல், தமிழ்மணத்தின் எதிர்காலத்துக்கு கேடு விளைவிக்கும்.
=====
பதிவர் யாரோ:
இதே வகையிலே இப்பதிவினைக் கருத்திலே ஒத்தவையும் எதிர்ப்பவையுமாக பல பதிவுகள் வருகின்றன. ஒவ்வொன்றையும் நீக்க முடியுமென இப்போதைக்குத் தோன்றவில்லை. ஓரளவுக்கு மேலே எமக்கு கண்காணித்து விலக்கும் தேவையும் இல்லை. பதிவர்களே தமக்குத் தாம் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதைத் தீர்மானித்துக்கொள்வதே சிறப்பானதெனத் தோன்றுகிறது. நாளுக்கு நாள் பதிவுகளை விலக்கச் சொல்லி வரும் வேண்டுகோள்களும் பதிவுகளுக்குத் தமிழ்மணமே காரணமென்ற தமிழ்மணத்தின் மீதான தனிப்பட்ட தாக்குதல்களும் வரும்; போகும். ஒரு திரட்டியின் முகப்பிலே எவர் பெயர் தோன்றவேண்டுமென்பதை நேரடியாகத் திரட்டிக்குத் தீங்கில்லாதவரை பதிவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
தமிழ்மணம்_திரட்டியினைத் தொழில்நுட்ப வகையிலே முன்னேற்றுவதும் உறுதியான சேவையைத் தருவதுமே இப்போது எமது முக்கிய இலக்குகள்
நிர்வாகம்
தமிழ்மணம்
அறிவிப்புக்கு நன்றி தொடரட்டும் உங்க்ள் பணி
தமிழ்மணம் திரட்டியை தொழில்நுட்ப வகையில் முன்னேற்றுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
தமிழ்மணத்தில் இப்போது முன்னைவிட அதிகமாகவே பல நல்லவிசயங்களும் கலந்தாய்வுக்குரிய ஆரோக்கியமான பதிவுகளும் வந்து கொண்டிருகின்றன. இந்தேவேளையில் தனிப்பட்ட கருத்தியல் மோதல்கள் காழ்புணர்ச்சியின் பால்பட்ட மோதல்களாகவும் தனிப்பட்ட தாகுதல்களாகவும் மாறிவருவது நல்லதல்ல. ஆனால் அதற்கான பதிலாக ஆபத்து என்று வாசகர் கருதும் பதிவரை எல்லாம் தமிழ்மணத்தில் இருந்து வெளியேற்றுவது என்பது பொருத்தமற்றது. தமிழ்மணதின் விதிமுறைகளைமீறினால் குறித்த பதிவருடனான் உரையாடலின் பின் அவரினை நீக்கும் முடிவினை தமிழ்மணம் எடுக்கலாம்.
வசவு சொல்லும் இடுகைகளை அகற்றுவது சரியானதாக இருக்கலாம்.அண்மையில் வெளியே சென்ற ஒரு வலைப்பூ என்னை வேண்டுமென்றெ தாக்கியிருந்தாலும் கூட குறித்தபதிவர் வெளியே போனது தேவையற்றது.அவராக முடிவெடுத்தால் நாமென்ன பண்ணுவது.பேசபடாத ஆனால் பேசப்படவேண்டிய சில விசயங்களை அவர் பேசியிருந்தார். அது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்க்கு வழிவக்குக்கும் என்றே நான் நினைத்திருந்தேன்.
மிக அதிக வலைப்பதிவரின் வருகைக்குப்பிறகு தமிழ்மணத்திற்கான பொறுப்பு இன்னும் இன்னும் அதிகரிக்கிறது.எங்களது பூரண ஒத்துழைப்பு உங்களுக்கு இருகிறது.சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களுக்கான தளமாக தமிழ்மணம் இருக்கவேண்டும்.
நன்றி
======
எப்பதிவினையும் நீக்குதல் என்பதிலே எமக்கு உடன்பாடில்லை; ஆனால், அவருடன் தொடர்ச்சியாக நிர்வாக மின்னஞ்சல்களிலும் இங்கேயும் நிகழ்ந்த பரிமாற்றங்களின் பின்னரே அவர் பதிவு நீக்கப்பட்டது. அதுகூட, அவர் நீக்கும்படியான கருத்திலே எழுதியிருந்ததை நீங்கள் காணலாம்.