தமிழ்மணம் மறுமொழி திரட்டுதல்: மேம்படுநிலை
March 1, 2007 – 11:14 am by தமிழ்மணம்இற்றைப்படும் மறுமொழிகளைக் கொண்ட இடுகைகளைத் தமிழ்மணத்திலே சுட்டும் முறையிலே இரு நாட்களுக்கு முன்னால் மாற்றங்களைக் கொணர்ந்தோம். சில பதிவர்கள் தம் பதிவுகளிலே பின்னூட்டங்களின் எண்ணிக்கைக்கும் பின்னூட்டக்களத்தினை உரையாடி (chat என்பதற்கு நாம் தேடிப்பிடித்துக்கொண்டது
) ஆகப் பயன்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். இதனால், அவர்களின் இடுகைகள் தொடர்ந்தும் தமிழ்மணம் முன்றல் வலமேல் (தமுவமே) மூலையிலே தொடர்ந்தும் நெடுநேரம் இடத்தினைப் பிடித்துக்கொண்டன. இதனால், மற்றைய - ஆழமானது அகலமானதுமான - கருத்துப்பகிர்வு நிகழும் இடுகைகள் தேவையானவளவு முதன்மை பெறாதுபோய்விட்டதை உணர்ந்ததால், முப்பது பின்னூட்டங்களுக்கு மேலே வரும் இடுகைகளைத் தமிழ்மணம் - திரட்டினாலுங்கூட, - காட்டாதென அறிவித்திருந்தோம்; அதன் நடைமுறைச்சாத்தியத்தினை வாய்ப்புப் பார்க்கும்வகையிலே செயற்படுத்தினோம். இவ்வாய்ப்புப் பார்க்கும் இடைநேரத்திலே தமிழ்மணத்துடன் இணைந்துள்ள பதிவர்கள், வாசிப்பவர்கள் ஆகியோருடைய கருத்துகளையும் மேம்படுத்துகைக்காகக் கேட்டிருந்தோம்.
எமது தமிழ்மணம்-அறிவிப்பு பதிவிலும் தம் தனிப்பட்ட பதிவுகளிலும் தமிழ்மணம்_ஆர்வலர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தந்திருந்தனர். தனித்தனியே ஒவ்வொருவருக்கும் நன்றிகூறமுடியாத நிலையிருப்பதால், இங்கே அனைவருக்கும் எமது நன்றியைப் பொதுவிலே கூறுகிறோம்.
ஏற்கனவே வைத்திருந்த எமது மாற்றுத்திட்டங்களிலே தமிழ்மணம் ஆர்வலர்களின் கருத்துகளிலே இன்றைய நிலையிலே எமக்குச் சாத்தியப்படக்கூடியவற்றினையும் உள்வாங்கி, கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்திருக்கின்றோம்.
1. தமிழ்மணம் முன்றல் வலப்புறம், “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியிலே, ஆகக்கூடியது 40 பின்னூட்டங்கள்வரை பின்னூட்டம்_இற்றைப்படுத்தப்பட்ட_இடுகைகள் காட்டப்படும்
2. தமிழ்மணம் முன்றல் வலக்கீழ் (தமுவகீ) மூலையிலேயுள்ள “கடந்த 24 மணிநேரத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியூடாக அணுகிக் காணக்கூடிய கடந்த ஒரு நாளிலே இற்றைப்படுத்த பின்னூட்ட இடுகைகளிலே பின்னூட்ட மேலெல்லையேதுமில்லாது, புதிய பின்னூட்டங்களைக் கடந்த 24 மணிநேரத்திலே கொண்ட அனைத்து இடுகைகளும் காட்டப்படும்
3. தமிழ்மணத்திலே சேர்ந்திருக்கும் பதிவுகளின் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படவேண்டிய அவசியமில்லை (மட்டுப்படுத்துதலினை வேண்டி நின்றதன் நோக்கு மட்டுறுத்தியே அனுமதிக்கப்பட பின்னூட்டங்கள் சிலவற்றினைக் காணும்போது, அடிபட்டுப்போய்விட்டதெனக் கருதுகின்றோம்
).
அதனால், தமது பதிவின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதும் மட்டுறுத்தாமல் விடுவதுமெனத் தேர்வினைத் தம் பதிவுகளிலே கொள்வது இனி தனித்தனியான பதிவர்களின் முடிவுக்கேயானது; தானியங்கு எரிதப்பின்னூட்டங்கள் (automatic spam comments) வருவதிலிருந்து தம்மைக் காப்பதும் திட்டமிட்ட தனியாளைத் தாக்கும் பெயரிலிப்பின்னூட்டங்களைத் தவிர்ப்பதும் அதற்கான பொறுப்பினைக் கொள்வதும் தனிப்பட்ட அப்பதிவர்களின் கைகளுக்கேயான செயற்பாடு. இதனால், முதிர்ச்சியுள்ள தமிழ்மணம் தனிப்பதிவர்களிடைப்பிணக்குகளுக்கு, தமிழ்மணத்திலே தோன்றுகிற ஒரே காரணத்துக்காகப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அவநிலையில்லாது போகுமென நம்புகிறோம். ஆனால், தான் திரட்டும் எப்பதிவிலும் தனது நலனுக்குக் குந்தகம் விளைவிக்குமெனவோ, எதிர்பார்க்கும் தரத்தினைப் பேணவில்லையெனவோ கருதும் இடுகைகளையோ/பதிவுகளையோ தன் திரட்டலிலிருந்து எந்நேரமும் நீக்கும் உரிமையைத் தமிழ்மணம் கொண்டிருக்கும்.
புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
23 Responses to “தமிழ்மணம் மறுமொழி திரட்டுதல்: மேம்படுநிலை”
//1. தமிழ்மணம் முன்றல் வலப்புறம், “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியிலே, ஆகக்கூடியது 40 பின்னூட்டங்கள்வரை பின்னூட்டம்_இற்றைப்படுத்தப்பட்ட_இடுகைகள் காட்டப்படும்
//
இந்த முடிவை இத்தனை வேகத்தில் எடுத்திருக்க வேண்டிய தேவை தற்போதைக்கு தமிழ்மணத்திற்கு இல்லை என்றே நினைக்கின்றேன்…..
=====
பதிவர் குழலி:
உங்கள் முன்னைய பின்னூட்டத்திலே சொல்லியிருந்ததுபோலவே, செயற்பாடுகள் குறித்து நாமும் கொள்கையளவிலே நம்புகின்றோமென நீங்கள் அறிவீர்கள். இந்த நாற்பது நடைமுறையிலே அதிகப்பின்னூட்டம் முன்றலிலே(மட்டும்) தோன்றுவதைத் தடுக்கமட்டுமே. அதிகளவு பின்னூட்டங்கள் வரும் இடுகைகளிலே ஓரிரண்டு மட்டுமே பேசுபொருளுக்கு நியாயமாகவும் தொடர்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் பின்னூட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்பது பட்டறிவு. அதனாலேதான் இக்கட்டுப்பாட்டினை தமிழ்மணம்முன்றலுக்குமட்டும் வைத்திருக்கவிரும்புகிறோம்.
இன்னமும் சில சிறப்புமேம்படுத்தல்கள்மூலம் சில (நல்ல) இடுகைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவியலுமென நம்புகிறோம். மற்றைய மேம்படுத்தல்களின் பின்னால், இவற்றினை -, தேவைப்படின் - நடைமுறைப்படுத்த எண்ணுகிறோம்.
புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
By குழலி on Mar 1, 2007
–//தமிழ்மணத்திலே சேர்ந்திருக்கும் பதிவுகளின் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படவேண்டிய அவசியமில்லை…. //–
வலைபதிவில் எனக்கு மிக சந்தோஷமான தருணங்களில் இதுவும் ஒன்று….
நன்றி…நன்றி…நன்றி…
வாழ்த்துக்களுடன்
சரவணக்குமார்(பங்காளி/பங்குவணிகம்)
===
பதிவர் சரவணக்குமார் :
நல்லது.
அதுபோலவே, பங்குவணிகத்தினையும் தொடர்ந்து முழுவதும் தமிழிலேயே தருவீர்களானால், எல்லோருக்க்கும் பயனாகவும் எமக்கும் மகிழ்வைத் தரும்.:)
நிர்வாகம்
தமிழ்மணம்
By பங்காளி... on Mar 1, 2007
//(மட்டுப்படுத்துதலினை வேண்டி நின்றதன் நோக்கு மட்டுறுத்தியே அனுமதிக்கப்பட பின்னூட்டங்கள் சிலவற்றினைக் காணும்போது, அடிபட்டுப்போய்விட்டதெனக் கருதுகின்றோம் ).//
Not at all sir. If you had actually seen the rejected comments in all their vulgarity and baseness, you would not at all have come to this conclusion. There was no need to relax this rule. It acted as a necessary safeguard.
And you just mentioned at that time that such unmoderated comments would not be updated, that’s all.
The main offending blogger in this connection is still very much active.
Sad Sheperd
=====
Dear SS:
Basically, we do NOT want to be troubled for petty patting and spatting of indiviudal bloggers. We can not hold others’ burden when any constructive solution is within our control.
On the other hand, you might have noticed that few bad_byte_blogs that took much time to deal with and did hurt thamizmaNam are goners for good.
Some purposely instigating will be removed from aggregation if their current trends persist.
Thank you for understanding and continuing support.
Admin
thamizmaNam
By Sheperd on Mar 1, 2007
வரவேற்கிறேன் உங்கள் பெருந்தன்மையை. மகிழ்ச்சி தரும் செய்தி.
தமிழ்மணத்திற்கு நன்றி.
By மாசிலா on Mar 1, 2007
நல்ல முடிவு!
நன்றி!
By SP.VR.SUBBIAH on Mar 1, 2007
/தமிழ்மணத்திலே சேர்ந்திருக்கும் பதிவுகளின் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படவேண்டிய அவசியமில்லை /
நன்றி.
By DJ on Mar 1, 2007
40 என்பது சரியான தீர்வாகவே என் மனதுக்கு புரிகிறது. ஆனாலும் ஒரு நல்ல பதிவுக்கு தமிழ்மணத்தின் அனைத்து உறுப்பினர்களும் பின்னூட்டினால் 40 மேலேயே கணக்கு வருமுங்க. ஆனாலும் அப்படியெல்லாம் நடந்துடவா போவுது. மீண்டும் ஒரு முறை “உங்களது சேவைக்கும், புரிதலுக்கும்” நன்றிங்க.
By இளா on Mar 1, 2007
ஆனாலும் இன்னும் ஒரு முறை இதைச் சொல்லுவது தவறென்று ஆகாது.
1. தனி மனித தாக்குதல் தொடருவதை தமிழ்மணம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறதே. ஏன்?
2. பின்னூட்டங்களை மட்டுப்படுத்துதல் தேவையான ன்றுதான். வரவேற்கிறோம்.
3. கெட்ட வார்த்தை வரும் பதிவுகள் நீக்கப்படுவதிலையே? ஏன்?
=====
Please read the response to Sad Shepard.
By இளா on Mar 1, 2007
நீங்க 30 சொன்னீங்க, நான் 50 கேட்டேன், இப்போ 40க்கு முடிஞ்சிருச்சு போல!! தெரிஞ்சா 100ல் ஆரம்பிச்சு இருப்பேனே!! :))
சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஆனா அதை விட முக்கியமா “கடந்த 24 மணிநேரத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியில் அனைத்துப் பதிவுகளும் தெரியும் எனச் செய்ததற்கு நன்றி.
//(மட்டுப்படுத்துதலினை வேண்டி நின்றதன் நோக்கு மட்டுறுத்தியே அனுமதிக்கப்பட பின்னூட்டங்கள் சிலவற்றினைக் காணும்போது, அடிபட்டுப்போய்விட்டதெனக் கருதுகின்றோம்
).//
உண்மைதாங்க. ஆனா எனக்கெல்லாம் வரும் சில பின்னூட்டங்களை பார்த்தீர்களானால் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. போகட்டும்.
தமிழ்மணத்தின் தரம் காக்க இதுவரை செய்தது போன்று ஒவ்வாத பதிவுகளோ பின்னூட்டமோ இருந்தால் நாங்களும் உங்களுக்குத் தெரியத் தருகிறோம். இந்த விஷயத்தில் உங்களோடு நின்று தோள் கொடுக்கிறோம்.
By இலவசக்கொத்தனார் on Mar 1, 2007
2. தமிழ்மணம் முன்றல் வலக்கீழ் (தமுவகீ) மூலையிலேயுள்ள “கடந்த 24 மணிநேரத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியூடாக அணுகிக் காணக்கூடிய கடந்த ஒரு நாளிலே இற்றைப்படுத்த பின்னூட்ட இடுகைகளிலே பின்னூட்ட மேலெல்லையேதுமில்லாது, அனைத்து இற்றைப்படு இடுகைகளும் காட்டப்படும்
3. தமிழ்மணத்திலே சேர்ந்திருக்கும் பதிவுகளின் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படவேண்டிய அவசியமில்லை
கடந்த24 மணி நேரத்தில் இற்றைப்படுத்தப் பட்டவை மேலெல்லை ஏதுமின்றி காட்டப்படுமென்கின்றீர்.மறுமொழி இற்றைப் படுத்தவும் தேவையில்லையெனில் இற்றைப் படுத்தப்படாத இடுகைகள் 24 மணிநேரத்தில் காட்டப்படுமா?
மேலெல்லை தேவையில்லை என்பத்ற்கும்,இற்றைப் படுத்தல் தேவையில்லை என்பதற்கும் என்ன வேறுபாடு என விளங்கச் செய்யவும்
=====
“அனைத்து இற்றைப்படு இடுகைகளும்” என்பதை “புதிய பின்னூட்டங்களைக் கடந்த 24 மணிநேரத்திலே கொண்ட அனைத்து இடுகைகளும்” என வாசியுங்கள்
Seems my English does better than my tamizh
upper limit forty for the ‘Feedback Pick up’ in thamizmaNam front page.
Under ‘24 Hr Feedback Pick Up’, ALL COMMENT_Updated_Posts in the past 24 Hrs are shown, REGARDLESS the number of comments in those posts
Admin
thamizmaNam
By கண்மணி on Mar 1, 2007
என்னை மாதிரி 5 பின்னூட்டம் வாங்கறதுக்கே அல்லாடறவங்களுக்கு இது நல்ல முடிவு :))
By மணிகண்டன் on Mar 1, 2007
இது ஓரளவு பயனுள்ள வழிமூறையாகவே தெரிகிறது. ஆயினும் உறுதியாக கருத்துக் கூற இயலவில்லை. பார்ப்போம் என்ன்விதமான விளைவுகளை உருவாக்குகிறது என்று.
அசுரன்
By அசுரன் on Mar 1, 2007
உங்களது “சேவைக்கும், புரிதலுக்கும்” நன்றி !!

By sk on Mar 1, 2007
அட 40 தாறீங்களா??? அவ்வளவு எனக்கெதுக்குங்க???
இனிமேல் பின்னூட்டம் நாமே மட்டுப்படுத்த வேண்டுமா???
எல்லாப் தளங்களுக்கும் இது பொருந்துமா??? என் ஒரு தளம் இச்சிக்கலால்
வெளிவருவதில்லை.
பார்ப்போம்
நன்றி
By johan paris on Mar 1, 2007
// ;”மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]”படைச் செருக்கு” [771] (111) ://
இதை மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்!
என் பதிவில் நான் பதிலிறுத்ததையும் சேர்த்து 6 பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன!:)
எப்படி இது 111 எனக் காட்டுகிறது தமிழ்மணத்தில்!??
எவ்வாறு நிகழ்கிறது?
====
blogger SK,
There are still few gliches here. Not only yours, but also few others’ few posts got into the same problem. Tech support eliminated many of such discrepencies since the revised “feedback pick up” environment. Yet, it has to go and check some of the cases. Hope you would wait for sometime. Please see if this problem happens in your other posts too.
Thanks for the patience.
admin
thamizmaNam
By sk on Mar 1, 2007
எதோ பார்த்துப் போட்டுருக்கீங்க. அதான் அந்தக் கூடுதல் பத்து.
24 மணிநேரத்தில் தெரியறதுக்கு ‘உயரெல்லை’ இல்லைன்னு சொல்லி இருக்கரது ரொம்ப சந்தோஷமா
இருக்கு.
நன்றியுடன், மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
By துளசி கோபால் on Mar 1, 2007
40 நல்லது. (பெனாத்தலார், 40 = சபரிமலை, 40 = Jesus resurrection, 40 = Mohammad first revelation).
பின்னூட்டம் மட்டுறுத்தல் தேவை இல்லை என்பதும் நல்ல முடிவு.
40 லிமிட் இருக்கும்போது, யாரும் மட்டுறுத்தலை தூக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
(மட்டுறுத்தாம இருந்தா, அடிச்சு கவுத்தி மூடுவிழா நடத்திடுவோம்ல)
By Surveysan on Mar 1, 2007
மறுமொழி மட்டுறுத்தலுக்கான தேவையை நீக்கி இருப்பது நன்று. நன்றி.
By ரவிசங்கர் on Mar 1, 2007
மறுமொழி மட்டுறுத்தல் ஆரம்பத்தில் கசத்தது. ஆனால் குப்பை மேடாகப் பின்னூட்டப்பெட்டி மாறி கண்டது கடியது வராமல் தடுக்க நல்லதொரு மருந்து, எனவே என் சுயவிருப்பில் என் பதிவுகளில் அது தொடரும்.
By கானா.பிரபா on Mar 1, 2007
முப்பதிலிருந்து நாற்பதிற்கு உயரெல்லையைத் தளர்த்தியிருக்கிறீர்கள். ஆயினும், இற்றைப்படுத்துவதே அவசியமில்லாதது என்பதே, முந்தயை உங்கள் பதிவில் பின்னூட்டியது போல், என் கருத்து. நன்றி.
By தங்கவேல் on Mar 2, 2007
dear Sir,
recently upgraded my blog http://podakkudian.blogspot.com due to that,new postings are not showing tool bar.
kindly help in this regard.
Regards
=====
have you checked the toolbar?
By podakkudian on Mar 4, 2007
இன்று தான் இந்தப் பதிவை முழுமையாக வாசித்தேன். மிக நல்ல முடிவு. நன்றி.
By சேதுக்கரசி on Mar 4, 2007
// 3. தமிழ்மணத்திலே சேர்ந்திருக்கும் பதிவுகளின் பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படவேண்டிய அவசியமில்லை//
வணக்கம் நண்பரே,இதைப் படித்து விட்டுத்தான் ஒரு மூன்று மணி நேரம் மட்டுறுத்தலை நீக்கினேன்..
எனது பதிவு,மறு மொழியப்ப்பட்ட பகுதியில் வரவே இல்லை.
என்ன இது சோதனை என்று மறு படியும் மட்டுறுத்தல் செய்ட்துவிட்டு பல மணி நேரமாய் காத்திருக்கிறேன். பின்னூட்டம் வந்தும் மறுமொழியப்பட்ட பகுதியில் சேர வில்லை..
யாராவது விளக்குங்களேன்..
sreedar2005@gmail.com
By ரசிகன் on Dec 20, 2007