தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30
தமிழ்மணம் முகப்புப்பக்கத்தில் உள்ள இரண்டு சிறப்புப்பகுதிகள், அண்மையில் எழுதப்பட்ட இடுகைகளைத் திரட்டும் நடுப்பகுதியும் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளைக் காட்டும் வலப்புறப் பகுதியும் ஆகும். முன்னது, 1,000 நொடிகளுக்கொரு முறையும், பின்னது, 500 நொடிகளுக்கொரு முறையும் இற்றைப்படுத்தப்படுகின்றன. எத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பது என்பது சம்பந்தப்பட்ட வலைப்பதிவரின் தனிப்பட்ட உரிமையெனினுங்கூட, சில பதிவுகளில் பின்னூட்டங்கள், வெறும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் சில சந்தர்ப்பக்களிலே சச்சரவுகளை உருவாக்கும் நோக்கத்தோடும் அனுமதிக்கப்படுவதால், பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி அதன் தேவைக்கும் நோக்கத்துக்கும் மாறாக, முறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றது என்று தமிழ்மணம் நிர்வாகத்திற்குத் தொடர்ந்து முறையீடுகள் வருகின்றன. திரட்டியின் வளங்களைச் செம்மையாகவும், வாசகர்களுக்கு இயன்றளவு பயன் அளிக்கும் வகையிலும் தரும் நோக்குடன், பின்னூட்டங்களை இற்றைப்படுத்தும் முறையில் மாற்றங்களைத் தமிழ்மணம் கொண்டு வந்திருக்கின்றது. ஒரு சோதனை ஏற்பாடாக, ஓர் இடுகைக்கு உயரெல்லையாக, திரட்டப்படுவதிலே 30 பின்னூட்டங்கள்வரை மட்டுமே தமிழ்மணம் முன்றல்-வலப்புறத்திலே காட்டுவது என தமிழ்மணம் முடிவு செய்து செயற்படுத்தத் தொடங்கியுள்ளது. தங்கள் பதிவுகளில் எத்தனை பின்னூட்டங்களை அனுமதிப்பது என்பது பதிவர்களின் முடிவு; ஆனால், பின்னூட்டங்கள் முப்பது எண்ணிக்கைக் கணக்கினைத் தாண்டியபிறகு குறித்த இடுகைகள் முகப்புப் பகுதியில் காட்டப்படா.
மற்றபடி தமிழ்மணத்தின் சிறப்புகளில் ஒன்று, அது பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவது என்பதை மிகவும் நன்றாக உணர்ந்திருப்பதால், தமிழ்மணத்திலே கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும் முயற்சிக்கு மாற்றாக வேறு வழிகளில் நல்ல பதிவுகளையும்/ பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். அதனால், இந்த ஏற்பாடு பரிசோதிக்கப்படும்வேளையிலே, பின்னூட்டங்களைத் திரட்டுவதைச் சிறப்பான முறையில் செய்வதற்கான பதிவர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். நடைமுறையிலேயிருக்கும் வேலைப்பளு, நேரம் காரணமாக, தனிப்பட்ட பதிவர்கள், தம் இடுகைகளிலோ, ஆங்கே பின்னூட்டங்கள் வாயிலாகவோ தெரிவிக்கும் ஆலோசனைகள் எங்கள் கவனத்தைப் பெறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. அதனால், அவற்றை இவ்விடுகையில் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல்கள் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.
பதிவர்களின் தொடந்த புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்.
Comments
71 Responses to “தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30”
Leave a Reply

நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்.
தமிழ்மணத்துக்கு எது நல்லதோ
அதைச் செய்யுங்க.
உங்கள் முடிவு எதாக இருந்தாலும் ஒத்துழைப்போம்.
//தமிழ்மணத்துக்கு எது நல்லதோ
அதைச் செய்யுங்க.
உங்கள் முடிவு எதாக இருந்தாலும் ஒத்துழைப்போம்.//
டீச்சர் சொன்னதுக்கு ரிப்பீட்டு. இந்த முப்பதை ஒரு ஐம்பது ஆக்க முடியுமான்னு பாருங்க.
=====
பதிவர் இலவசக்கொத்தனார்:
இப்படியான பின்னூட்டங்களே முப்பதை இலகுவிலே அடையவைப்பதால், பதிவர்கள் தமக்கு வரும் பின்னூட்டங்களைத் தேர்ந்து பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு
முப்பது என்பது தற்போதைய சோதனைக்காலகட்டத்துக்கான ஓர் உயரெல்லைமட்டுமே. நிகழ்வதைக் கவனித்தே மாற்றுவழிகளினை நடைமுறைப்படுத்துவோம்.
இதிலே கவனிக்கப்படவேண்டியதென்னவெனில், அனைத்துபின்னூட்டங்களும் தமிழ்மணத்தினாலே திரட்டப்படும்; ஆனால், முப்பதுக்கு மேலே எண்ணிக்கை வந்தால், தமிழ்மணம் முன்றல்-வலதுபக்கத்திலே காட்டப்படமட்டும் மாட்டாது.
நிர்வாகம்
தமிழ்மணம்
மறுமொழி நிலவரம் குறித்த இந்த முடிவு நல்லதே.
கூடவே பதிவுகள் குறித்து சில எண்ணங்கள்.
படைப்புகள் தவிர வலைப்பதிவுகளில் தனிப்பட்ட விவாதங்கள் குறிப்பிட்ட பதிவுக்கான எதிர்வினைகள், பதில்கள் போன்று பல விதமாக எழுதப் படுகின்றன. அவற்றில் பலவற்றை எழுதும் பதிவரே கூட தமிழ்மணத்தில் திரட்ட தேவையில்லை என்று கருதலாம். அப்படியான சூழலில் அந்த இடுகையை தமிழ்மணத்தில் சேர்க்க விரும்பவில்லை என்று டிக் செய்யும் விதமாக கருவிப்பட்டையில் மாற்றம் செய்வது நல்லது.
தமிழ்மணத்தின் நெறிமுறைகளுக்கு மாறாக எழுத நேரும் பதிவுகளை தாங்களாகவே தமிழ்மணத்தில் இணைப்பதைத் தவிர்க்கும் இந்த வசதி பதிவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவும் உதவும். சும்மாப் பதிவுகளையும் தமிழ்மணத்தில் இணைக்க வேண்டாம் என்று பதிவர்களுக்கு அறிவுறுத்தி இந்த வசதியை தமிழ்மணம் வழங்க வேண்டும். (இப்போதைய நிலையில் பதிவர் தானாக தமிழ்மணத்தில் இணைக்கா விட்டால் கூட வேறு யாரேனும் இணைத்து விட வாய்ப்புண்டு. பதிவர் இணைக்க விரும்பவில்லை என்பதை டிக் செய்து விட்டால் பிறகு எவரும் அதை இணைக்க முடியாது அல்லவா?)
தமிழ்மணமே பதிவுகளை தரம்பிரித்தல், வேண்டும், வேண்டாமென்று முடிவு செய்தல் போன்றவை கடினமான கட்டுப் பாடாக கருதப் பட வாய்ப்புண்டு. பதிவர்களுக்கே அதற்கான வாய்ப்பை வழங்குவது அத்தகைய குற்றச் சாட்டை தவிர்க்கும். (கடினமான முடிவுகளுக்கு முன்னதாக பதிவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு!)
மேலும் விதிமுறைகள் மீறப் பட்டால் தமிழ்மணத்தில் அறிவித்து நீக்கக் கோரும் வசதி இருப்பதை தமிழ்மணத்தின் முகப்புப் பகுதியில் ஒரு அறிவிப்பாக நிரந்தரமாக இட்டு வைக்க வேண்டும். (பலருக்கும் அப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாது என்பதே உண்மை.) பதிவர்கள் தாங்களாக இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் இடுகையை நீக்க முடியும் என்றாலும் அதைப் பலரும் விரும்புவதில்லை. (நீக்குதல் என்பதன் எதிர்மறை எண்ணம் காரணமாக!)
//ஒரு சோதனை ஏற்பாடாக, ஓர் இடுகைக்கு உயரெல்லையாக, திரட்டப்படுவதிலே 30 பின்னூட்டங்கள்வரை மட்டுமே தமிழ்மணம் முன்றல்-வலப்புறத்திலே காட்டுவது என தமிழ்மணம் முடிவு செய்து செயற்படுத்தத் தொடங்கியுள்ளது//
இதை மறு பரிசீலனை செய்யலாம். ஏனெனில் காரசாரமாக நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள் கூட வாசகர் கவனத்திற்கு வராமல் போய் விடும்.
மற்றபடி, “தல போல வருமா?” என்கிற ரேஞ்சில் ஒரு பத்து பதினைந்து ஐடி உண்டாக்கி வைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பின்னூட்டிக் கொண்டு பாராட்டிக் கொண்டிருப்பவர்கள் ( யார் அந்த மூத்த பதிவர் என்று நான் சொல்ல விரும்பவில்லை
-
அதனை எந்தளவு அசிங்கமான ஒரு செயல் என்பதைப் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, தங்கள் செயல்கள் இப்படியான விளைவுகளையும் உண்டாக்கி விடும் என்பதை உணர வேண்டும்
முயற்சி செய்து பாருங்கள்.
மேம்படுத்த வேண்டிய அவசியம் வரும் போது அதை செய்வது நலம்.
கீழே உள்ளது நான் ரவிஷங்கர் பதிவில் இட்ட பின்னூட்டம்.
//பின்னூட்டங்கள் – அதுவும் கயமைப்பின்னூட்டங்கள் திரட்டப்படுவது சில ஏன் பல சமயங்களில் சலிப்பு தட்டினாலும், எண்ணிக்கை வைப்பது சரிப்படாது. தங்கமணியின் ஒரு பதிவிற்கு 300 பின்னூட்டங்கள் வந்தாலும் ஜல்லி என்றோ கயமை என்றோ சொல்ல முடியாமல்தான் இருந்தது – இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒரு விலக்கு அளிக்கப்படவேண்டும்.//
இதையும் தாங்கள் யோசிக்க வேண்டும். சாட் பாக்ஸுகளாக மாறிவரும் பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்தி அதே நேரத்தில் நல்ல விவாதங்களை இழக்காமலும் இருக்க வகை செய்ய வேண்டும்.
இதைக்கூறுவதால் தமிழ்மணத்தின் இம்முடிவு எனக்கு ஏற்புடையதல்ல என்று அர்த்தமில்லை. என் மனமார்ந்த ஒத்துழைப்பும் (எல்லா தமிழ்மண சீர்திருத்தங்கள் போல) இதற்கும் உண்டு. மனதில் பட்டதைச் சொல்கிறேன். அவ்வளவுதான்.
சில ஜல்லி பதிவர்களால் வந்த வினை. கொஞ்சம் நாட்களாக பின்னூட்டங்களின் தரம் “என்னப்பா ஊருக்கு போயிட்டு எப்ப வந்தே?” “ஊருல எல்லாரும் சவுக்கியமா?” அப்படிங்கிற ரேஞ்சுக்கு போயிடிச்சி. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பதிவர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒண்ணும் செய்ய முடியாது.
“கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலாவது 30 பின்னூட்டங்களைத் தாண்டிய இடுகைகள் வருமா? அப்படி அதிலும் வராவிட்டால் பதிவருக்கு மட்டுமல்லாமல் வாசகருக்கும் நட்டம் என்றே நினைக்கிறேன். நான் பதிவரல்ல.. வாசகர் மட்டுமே! “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலும் வராவிட்டால், என் கண்ணோட்டத்தில் இது ஒரு hitch-ஆகத் தெரிகிறது
நன்றி.
I feel you are slowly sliding into a hopeless situation. Nothing more need be said. On the one hand you take the pious stand that bloggers’ individual quarrels are of no concern to Thamizmanam.
But on the other hand you take time to restrict the updating services on the basis of some arbitrary numbers of comments. In what way is the question of the number of comments in a blog of any concern to anybody? I just see a tinge of shrill jealousy on the part of the protesters.
Now answer this question carefully. Is the 30-rule available to this post as well? And will you remove it from the permanent position in the front page as well? Kindly answer honestly.
Curious Sheperd
=====
Curious Shepard:
Thanks for this question.
No; thamizmanam announcement blogs at this point are exempted for this 30 upperlimit mark.
If you can read what is said to kAn~A PrabhA, “We do have the ability to collect the feedback as usual, but we will show only 30 at this point. We have few alternative ad hoc ways to handle the problems too; yet, we do not want to implement them right away. We certainly do not want to penalise good post and healthy discussions in long term for sake of few feedback sprinters” This number is certainly an arbitary number (Well, if statistically speaking, this arbitary number, 30 is used with a confidence in that field:-)) and we can “work with this number” for the moment. We certainly can monitor the health of the blogs though it is not our duty. Let’s see what happens and decide.
Admin
thamizmaNam
//தமிழ்மணத்தின் சிறப்புகளில் ஒன்று, அது பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவது என்பதை மிகவும் நன்றாக உணர்ந்திருப்பதால், தமிழ்மணத்திலே கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும் முயற்சிக்கு மாற்றாக//
மறுமொழிகளை மட்டுத்தினால்தான் பின்னூட்ட நிலவரம் தெரியும் என்னும் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவும். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, மட்டுறுத்தி மட்டுமே வெளியிடப்படும் பின்னூட்டங்களின் லட்சணத்தையும் தொடர்ந்து பார்த்து வருபவன் என்ற முறையில், இக்கருத்து தமிழ்மணம் நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு மட்டுமே – நன்றி.
====
பதிவர் சன்னாசி:
நீங்கள் சொல்வதிலுள்ள நடைமுறைப்பட்டறிவினையும் உணர்ந்துகொள்கிறோம். ஆனால், குறைந்தளவு பதிவர்களின் பொறுப்பினைக் கருத்தளவிலேனும் உணர்த்தவும் தமிழ்மணத்திற்கு மேலும் வேண்டாத அழுத்தங்களைத் தவிர்க்கவும் உதவுமென்பதாலேயே மட்டுறுத்தலை வலியுறுத்துகிறோம்.
நிர்வாகம்
தமிழ்மணம்
நல்ல முயற்சி, பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. வாசகர் பரிந்துரையையும், முதல் பக்கத்திலேயே தெரியும் வண்ணம் செய்தீர்களென்றால், இன்னும் சிறப்பாய் இருக்கும்.
நல்ல முடிவு. ஆனால் கானா பிரபா சொல்லும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள இரண்டு விசயங்கள் செய்யலாம்:
1. கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற லிங்கைத் தட்டினால், புதிதாக பின்னூட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்ட எல்லா பதிவுகளையும் காட்டலாம்
2. வாசகர் பரிந்துரை பகுதி இப்போதெல்லாம் அத்தனை மும்முரமாக கவனிக்கப்படுவதில்லை என்று எண்ணுகிறேன். அந்தப் பக்கத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு, அங்கே அன்றைக்குப் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்ட இடுகைகளை அவற்றின் வகை வாரியாக, (இன்றைய பதிவுகள் காட்டுவது மாதிரி) காட்டலாம்..
உங்கள் செயலுக்கு நிச்சயம் ஒத்துழைப்பு உண்டு . இப்படி செய்தாக வேண்டிய கட்டாயம் பற்றி பேசப்பட்ட பின்னர் தான் சதங்கள் அடிப்பதன் பிரச்சனை புரிகிறது.ஆனால் இது விரும்ப தக்கது அல்ல என்று தெரிவித்தாலே குறைத்துக் கொள்வார்களோ எனத்தோன்றுகிறது.என் போன்ற புதிய பதிவர்கள் பல பழைய பதிவுகளை இதன் மூலம் படிக்கப் பெறுகிறோம். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்மை யும் தீமையும் சேர்ந்தே தான் இருக்கும். எது அதிகம் என்பதை பார்த்துத்தான் முடிவு செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.
yes. sometime Tamilmanam must serve serious readers too. these type of efforts are a must to strike a balance between quality and quantity. all the best
அருமையான முடிவு. இதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
தனக்குத் தானே பின்னூட்டம் போட்டுக் கொள்ளும் மனநோயாளிகள் இனியாவது திருந்தினால் சரி.
அன்புடன்
லக்கிலுக்
நல்ல ஐடியா. கூட்ட நெரிசல்ல மூச்சு முட்டி, பல நல்ல பதிவுகளுக்கு வெளிச்சம் கிடைக்காம போவதைத் தடுக்க நல்ல வழி.
ஆனால், ஒரே நாளில் 30 பின்னூட்டம் தாண்டிவிடும் பதிவுகளை ‘மிஸ்’ பண்ணும் அபாயம் கண்டிப்பா இருக்கு.
(30 கம்மி) 50 நல்ல லிமிட்டா இருக்கும்.
ஏதாவது ஒரு லிமிட்னு வந்துட்டாலே, இனி ‘தனக்குத் தானே’ பின்னூட்டமும், வெறும் ‘நன்றி’ சொல்லும் பின்னூட்டங்களும் தானாய் குறையும்.
(எனக்கும் சேத்துதான் சொன்னேன்)
என்றாவது ஒருநாள் கமெண்ட் மாடரேஷன் தேவைப்படாமல் போனால், அதுவும் நல்லா இருக்கும்
//ஒரே நாளில் 30 பின்னூட்டம் தாண்டிவிடும் பதிவுகளை ‘மிஸ்’ பண்ணும் அபாயம் கண்டிப்பா இருக்கு//
இதைத் தவிர்க்கத் தான் பொன்ஸும் நானும் ஒரே பரிந்துரையை அளித்திருக்கிறோம்.
அதை மேலும் சப்போர்ட் செய்ய ஒரு கருத்தை முன்வைக்கிறேன்:
தமிழ்மண முகப்புப் பக்கத்தில் தான் “ரியல் எஸ்டேட்” முக்கியம். “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பக்கத்தில் அல்ல!
தமிழ்மணம் நிர்வாகிகள் இதை அவசியம் கருத்தில் கொள்ளவும். நன்றி.
=====
தமிழ்மணம் சொல்வதை நீங்களோ அல்லது நீங்கள் சொல்வதைத் தமிழ்மணமோ தவறாகப் புரிந்துகொள்ளுதல் நிகழ்வதாகத் தோன்றுகிறது.
தமிழ்மணத்திலிருந்து எவ்விடுகையுமே நீக்கப்படவில்லையே. எத்தனை பின்னூட்டங்கள் வந்தாலும் தமிழ்மணத்திலே இருக்கும். ஆக, பின்னூட்டங்களின் காரணமாக (இதற்குப் பயனாளிகள் கூறும் கயமை, கும்மி, குரங்காட்டம் எதையும் பதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்) தமிழ்மணம் முன்றல்-வலதுமேல்மூலையிலே சிந்துபாத் கழுத்திலே உட்கார்ந்த கிழவன்போலக் குந்திக்கொள்ளும் இடுகைகளை இறக்கிக்கொல்ல இதைவிட வேறுவழி இப்போதைக்குத் தெரியவில்லை. சில வழிகளூடாக, தனித்தனியே நல்ல பதிவுகளின் நல்ல பின்னூட்டங்களை எல்லைக்கப்பாலும் தோன்றச் செய்ய தொழில்நுட்பம் இடம் கொடுத்தாலுங்கூட, எது நல்ல பதிவின் நல்ல பின்னூட்டம் என்பதை யார் தீர்மானிப்பது என்பது சிக்கலாகிறது. தமிழ்மணம் பண்பாட்டுக்காவலராக விளக்கேந்தியும் வேலேந்தியும் நாளும் அலைவது நேரத்துக்கும் பொருந்தாது; நியாயத்துக்கும் பொருந்தாது.அதனாலேயே, இந்நிலை. இது ஓர் சோதனைமுயற்சியே. என்ன நிகழ்கிறதெனக் கண்டுகொண்டு, பின்னால், வேண்டினால், மாறுதல்கள் செய்யலாம்.
யோசித்துப் பாருங்கள்; எண்ணிக்கையைக் கூட்டவென்றே 288, 30, 43,49, 198,199 என்று எண்களைப் பின்னூட்டங்களாக அடிக்கும் நிலையிலே பின்னூட்டிகளும் அவற்றினை அனுமதிக்கும் பதிவர்களுமிருக்கையிலே என்ன செய்வது? இதனைக்கூடக் கிண்டல் செய்து பதிவிடுகின்றவர்களை When Zosima becomes Zorro தண்டிக்கட்டுமென சாபம் கொடுத்துவிட்டு நகரமட்டுமே முடியும்
முழு ஆதரவு.
இதை அப்படியே தொடரவும் என்னுடைய வேண்டுகோள். ‘பிரகாஷ்’ ஒரு பதிவில் சொன்னதைப் போல் இப்பல்லாம் ஒரு இருபது இருபத்தைந்தை பின்னூட்டங்களை தாண்டிவிட்ட பதிவுகளை படிப்பதற்கு மனம் வருவதில்லை.
மிக நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.
பின்னூட்டங்களுக்கு உயரெல்லை என்பது ஒரு பிற்போக்கு செய்கையே. நல்ல விவாதங்கள் நடைபெறும் இடுகைகள் காணப்படாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம். செருப்பின் அளவிற்காக காலை வெட்டிக் கொண்ட கதையாகிவிட்டது.
உங்கள் கவலை புரிகிறது; சோதித்துப் பார்ப்போம்.
எனக்கு 30 பின்னூட்டங்கள் கவலை யில்லை; ் கவலையெல்லாம் 30 பின்னூட்டம் பெற்ற பதிவருக்கு நான் பின்னூட்டம் இடுவதா, இட்டால் பதிவர் கோபிப்பாரா என்பதுதான்
நல்ல யோசனை…
சென்ஷி
“எத்தனை பின்னூட்டங்கள் வந்தாலும் தமிழ்மணத்திலே இருக்கும்.” என்ற வாக்கியம் அத்தனை தெளிவாக இல்லை.. பின்னூட்டங்கள் முப்பதுக்கு மேல் போனாலும், அந்தப் பதிவு தமிழ்மணத்தில் காணக் கிடைக்கும் என்று பொருள் கொண்டால், எங்களின் கவலையே வேறு..
போன வாரம், சுமார் ஒருவருடங்களுக்கு முன்னால் எழுதிய பதிவொன்று புது மறுமொழியின் காரணமாக இற்றைப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பதிவுகள் படித்திராத எனக்கு, இந்தப் பதிவு “24 மணிநேரத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பட்டியலில் வந்தமையாலேயே படிக்கக் கிடைத்தது. இது போன்ற நல்ல பதிவுகள், இந்த முப்பது பின்னூட்டம் என்ற உயிரெல்லையால், எங்களுக்குக் கிடைக்காது போகும் அபாயம் இருக்கிறது.
இதைத் தவிர்க்கவே, வேறு ஒரு பக்கத்தில், அதாவது முகப்பு தவிர பிறிதொரு பக்கத்தில், அன்றைன்றைக்குப் பின்னூட்டம் இற்றைப்படுத்தப்பட்ட பதிவுகளைக் காட்டுவது என் போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறோம்.
இதையே தான் சேதுக்கரசியும் சொல்வதாக எண்ணுகிறேன். புரிதல் பிழையிருப்பின் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்..
//தமிழ்மணத்திலிருந்து எவ்விடுகையுமே நீக்கப்படவில்லையே//
இதை நான் நன்றாகவே புரிந்துகொண்டேன்
சர்வேசன் சொல்வதுபோல் நல்ல பதிவை மிஸ் செய்வது என்பது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்றால், சிலர் மறுமொழியப்பட்டவையை மட்டுமே வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.. அவர்கள் அதை மிஸ் செய்துவிடுவார்கள்.
இதை சரிக்கட்ட ஒரு வழி: முகப்பில் காட்டாவிட்டாலும் பரவாயில்லை, “கடந்த 24 மணிநேரத்தில்” என்றொரு பாப்-அப் சாளரம் திறக்கிறதே, அதிலாவது காட்டலாம். இதைத் தான் பொன்ஸும் நானும் சொல்லியிருக்கிறோம்.
முகப்பில் தானே இடத்துக்குப் பிரிமியம். 24 மணிநேரம்… பாப்-அப் சாளரத்தில் அல்ல! இன்னும் விளக்கம் வேண்டுமானால் தெரிவிக்கவும்.
====
பதிவர் சேதுக்கரசி:
இப்போது புரிகின்றது. இது நல்லதொரு மாற்றுவழி. தொழில்நுட்பக்குழுவிடம் அறிவித்துவிடுகிறோம். நேரம் கிடைக்கும்போது, இரண்டு நோக்குகளையும் திருப்தி செய்யும் இவ்வழியினைக் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வார்களென நம்புகிறோம்.
நிர்வாகம்
தமிழ்மணம்
இங்கேயே கும்மி அதிகமாகி 30 பின்னூட்டங்கள் வரப்போகிறது. 31வது பின்னூட்டம் வந்தப்பிறகு இந்தப் பதிவு மறுமொழியிடப்பட்ட இடுகைகளில் தெரியுமா என்பதை அறிய விரும்புகிறேன்
))
என் முந்தைய பின்னூட்டத்தில் “கடந்த 24 மணிநேரத்தில்” என்று நான் குறிப்பிடும் பகுதி, “கடந்த 24 மணிநேரத்தில மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியாகும். இதோ:
javascript:popUp(‘inc/homecomments.php?type=full’)
என் முந்தைய பின்னூட்டத்தில் “கடந்த 24 மணிநேரத்தில்” என்று நான் குறிப்பிடும் பகுதி, “கடந்த 24 மணிநேரத்தில மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியாகும்.
ஆம்…
கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப் பட்ட இடுகைகள் பகுதியில் இந்தக் கட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற சேதுக்கரசி, பொன்ஸ் யோசனையை வரவேற்கிறேன்.
வரவேற்கத்தக்க முடிவுதான். 30க்குமேல் பின்னூட்டம் பெற முடியாத என் போன்றவர்களுக்கு உற்சாகமாகவும், பின்னூட்ட கயமை செய்பவர்களுக்குக் கடுப்பாகவும் இருக்கும்.
எல்லோரையும் எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த தமிழ் மணத்தால் ஒருபோதும் முடியாது.
கட்டற்ற வெளியின் சுதந்திரத்தை அளவுக்கதிகமாகப் பாவிக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட ஜனநாயகம்தான் சரிப்படும். தமிழ்ம்ணத்தின் முடிவு சரியானதுதான்.
மிக நேர்த்தியான விவாதங்கள் பின்னூட்டம் வழியாக நடக்கிறதென்றால் (எப்போதேனும் அபூர்வமாக) அவைகளை தமிழ்மணத்தின் விவாதக்களத்திற்கு எடுத்துச் செல்லலாமே?!
மிகவும் வருந்தத் தக்க முடிவு.
தமிழ் மணத்தில் கும்மி, அரட்டை என்கிற நோக்கத்தில் ஒரு சில பதிவர்கள், அதிலும் முக்கியமாக இளைஞர்கர் அவர்கள் முறையில் தமிழை வளர்த்து வந்தார்கள். உங்களது இந்த திடீர் முடிவால் துடிப்புள்ள அத்தமிழ் உள்ளங்களை புண்படுத்தி இருக்கிறிர்கள் என்பதனை அறிவீராக. தமிழ்மணத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது என்பது அதன் கருத்து சுதந்திரத்தை பறிப்பது என்பது அல்ல.
தமிழ்மணத்தை உயர்ந்த சிந்தனையாளர், ஒழுக்க சீலர்கள், இலக்கியவாதிகள் தங்களுடைய தனிப்பட்ட சொத்தாக ஆக்க நினைத்து செய்த சூழ்ச்சி இது.
இம்முடிவினை மறுபரிசீலனை செய்து பழைய படி தமிழ்மணத்தை அனைவரும் புழங்கும் அருமையான பூங்காவாக ஆக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மாசிலா.
நல்ல முயற்சி..செய்யுங்கள். அப்போதுதான் என்னை மாதிரி எப்போதாவது பின்னூட்டம் வரப்பெரும் ஆட்கள் கருணை அடிப்படையிலாவது கவனம் பெருவோம்.
வரவேற்கிறேன்.
பிற இடங்களில், தமிழ்மணத்துக்கு கோரிக்கை வைக்கிறது பற்றி ரொம்ப ஃபஸ் பண்ணிக்க வேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கிறேன். கருவிப்பட்டை வேலை செய்யலை, பின்னூட்டம் தெரியமாட்டேங்குது வகையறா கூவல்களை எல்லாம் இங்கே வந்து சொல்லணும்ங்கறது சரி.. ஆனால், தமிழ்மணச் சேவைகள் பற்றிய விமர்சனம், துதி, நிந்தாஸ்துதி, வம்பளப்பு, அரட்டை, ஆலோசனை போன்றவற்றை எல்லாம் இங்கே வந்து நிர்வாகத்திடம் சொல்லணும்னு எதிர்பார்ப்பது சரியல்ல. கூகிளோ, யாஹூவோ, சரி உடுங்க, ரிடிஃப் போன்ற எங்கூர் லோக்கல் சேவைகள் என்ன ஆலோசனையாக இருந்தாலும் எங்க கிட்ட *வந்து* சொல்லுங்கனு சொன்னா நடக்குமா?
நம்மைப் பற்றி நம்ம சேவையைப்பற்றி பிறர் என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நினைப்பது இயல்புதான். அதைத் தெரிந்து கொள்ள வழிகள் இருக்கின்றன. உதாரணமாக blogsearch.google.com என்கிற வலைத் தேடுபொறியிலே, ‘தமிழ்மணம்’ என்கிற பதத்தைத் உள்ளிட்டுத் தேடினால் வரும் முடிவுகளின் செய்தியோடையைச் சேமித்து, வாரத்துக்கு ஒருமுறை வாசித்தாலே வலைஞர்கள் தமிழ்மணம் பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து போகும்.
நிறுவனங்கள் எல்லாம், இந்த முறையைத் தான் கையாள்கிறார்கள். தமிழ்மணம் போன்ற dispassionate ஆக இயங்க வேண்டிய ( இயங்கி வருகிற) சேவைகளும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்பது என் ரெண்டணா.
=====
பதிவர் பிரகாஷ்:
தவறாகப் புரிந்துகொண்டீர்களோவென அஞ்சுகிறோம். நிச்சயமாக, தமிழ்மணம் செயற்பாடுகள் குறித்து எல்லாவிடங்களிலும் பேசுவதை இயன்றவரை வரை வாசித்துக்கொண்டு, கருத்திலேயெடுத்துக்கொண்டுதான் தமிழ்மணம்_மக்கள்தொடர்புக்குழு இயங்குகிறது. ஆனாலும், அனைத்தினையும் வாசித்தார்கள் என்று இங்கே கூற முடிதல்லவா? அதனாலேதான், இங்கே சொன்னது ஆலோசனைகளை ஓரிடத்திலே இயன்றவரை குவித்துக் காட்டும் நோக்கிலே. மிகுதிப்படி, நோக்குக்குத் தேவையற்ற துதி, நிந்தாஸ்துதி, விமர்சனம், அறிமுகம், ஆய்வுரை என்பனவற்றினை இங்கே அனுமதிக்கப்போவதில்லை.
நிர்வாகம்
தமிழ்மணம்
பரிசோதனை அளவில் இந்த முயற்சியில் இறங்கி இருப்பது நன்று. 50 பின்னூட்டங்களை உயரெல்லையாக வைத்தாலும் அதற்கும் எதிர்ப்பு வரலாம். இதற்கு ஒரே தீர்வு – personalised thamizmanam.
Thamizmanam should allow creation of user accounts and enable personalisation. personalisation should offer the facilities to drag / drop the three content bars in the main page, remove either of them, add the number of items shown in each bar, allow removing some posts from further display, allow the user to set the number of higher limit for recent comments to be shown etc.,
ideally, thamizmanam can offer three views for the user.
1. classic view – thamizmanam before 25th feb 2007
2. beta view – whatever thamizmanam wants to try and test which it believes best for itself and readers and bloggers.
3. personalised view – leave it to the individual user what he wants to see and how he wants to see.
=====
Blogger Ravishankar:
Thanks for the idea. Actually, this suggestion has been floating within thamizmaNam in the concept level. However as you might know, the (wo)manpower & time are the constraints to immediate implement to the worthy suggestions like this one at this juncture of time. Hopefully with the help of supportive bloggers like you we can achieve our targets earlier than what we think.
Admin
thamizmaNam
இது நல்ல முயற்சி. என் முழு ஆதரவுண்டு, (யார் கேட்டார்கள்? என்றபோதும்;-).
நாங்கள் கொஞ்சம் பழைய நிலைமையைக் கருத்திற்கொள்ளலாம்.
முன்பு தமிழ்மணத் திரட்டியில் இடுகைகளை எப்படித் தேடிப்படித்தோம்?
இன்று எழுதப்பட்ட ஆக்கங்கள், நேற்று எழுதப்பட்ட ஆக்கங்கள், முந்தநாள் எழுதப்பட்ட ஆக்கங்கள் என்று தேடிப்போய் பிடித்ததைப் படித்துக்கொண்டிருந்தோம்.
ஐந்துநாள் தமிழ்மணத் திரட்டியைப் பார்க்கவில்லையென்றால், அந்த ஐந்துநாட்களிலும் எழுதப்பட்ட இடுகைகளைத் திரட்டியிலேயே காலவரிசைப்படி பார்த்து, தேர்ந்து அந்தந்த வலைப்பதிவுகளைப் படித்தோம்.
இப்போது யாரும் அப்படி வாசிப்பதாக நான் நினைக்கிவில்லை.
பழைய பதிவர்கள் இந்தமுறையை இப்போதும் கைக்கொள்கிறார்களா தெரியவில்லை.
அன்று, வாசகர்கள் நல்ல இடுகைகளைத் தேடித்தேடி வாசித்ததும், இன்று பதிவரே மற்றவர்களுக்குத் தேடித்தேடி தீத்திக்கொண்டிருப்பதுமான (தீத்தி – ஊட்டி) சூழ்நிலைதான் தமிழ்வலைப்பதிவுச் சூழலில் இருக்கிறதோ என்ற ஐயமுண்டு. நல்ல இடுகைகளைத் தேடி வாசிக்க வேண்டியது வாசகன் கடமை. அவ்விடுகைகளைக் கவனப்படுத்துவதற்குரிய செயற்பாடுகள் திரட்டியால் போதுமானவளவுக்குச் செய்யப்படுவதாகவே நினைக்கிறேன். பூங்கா இதழ் அதில் முக்கியமானது.
இங்கு சகவலைப்பதிவர்களும் வாசகராக இருப்பதோடு, நுட்பம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் வலைப்பதிவர்களாக மட்டுமே இருப்பதால் சரியான விளக்கத்தைக் கொடுப்பதொன்றும் சிக்கலில்லை.
தமிழ்மண முகப்புப்பக்கத்திலே “இடுகைகள்” என்ற தலைப்பை அழுத்தி அதற்குள் இன்று, நேற்று, அதற்குமுன்பு என்று சொடுக்கி எழுதப்பட்ட இடுகைகளைக் கண்டுகொள்வது பெரிய வேலையில்லை. தேவையான திகதியில், தேவையான வகைப்படுத்தற் சொற்களில் இடுகைகளைத் திரட்டும் வசதி அளிக்கப்பட்டிருப்பது இன்னும் இலகுவானது. இதில் அனைத்து இடுகைகளையும் நாம் கண்டுகொள்ளலாம்.
“அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” நிரலில் தோன்றுபவை மட்டும்தான், “அண்மையில் எழுதப்பட்டவை” நிரலில் தோன்றாமல் தம்மால் படிக்கப்படக்கூடிய இடுகைகள் என்றோ அவைமட்டும்தான் நல்ல இடுகைகள் என்றோ வாசகர் (= வலைப்பதிவாளர்) நினைத்துக்கொண்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
சிலரின் பொறுப்பற்றதனத்தால் பின்னூட்ட மட்டுறுத்தலை நடைமுறைப்படுத்த வேண்டிவந்ததுபோலவே (அதனால் தமிழ்வலைப்பதிவுலகம் இழந்து அதிகமென்றபோதும்) சிலரின் பொறுப்பற்றதனத்தால் திரட்டி நிர்வாகம் தான் வழங்கும் சேவைக்கு ஒரு மட்டுப்படுத்தைச் செய்யவேண்டி வந்திருக்கிறது.
இந்த பின்னூட்ட எண்ணிக்கை மட்டுப்படுத்தல் (அதாவது தான் வழங்கும் சேவையை மட்டுப்படுத்தல்) கொண்டுவரக் காரணமாகச் சொல்லப்படும் காரணங்களிலொன்று, நல்ல இடுகைகள் பாதிக்கப்படுவது. இந்த மட்டுப்படுத்தலை எதிர்த்துச் சொல்லப்படும் காரணங்களிலொன்று அதே ‘நல்ல இடுகைகள் பாதிக்கப்படுவது’. இரண்டுமே உண்மை. (பின்-நவீனத்துக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு? Come on DJ.)
__________________________________________
30 பின்னூட்டங்களைத் தாண்டினால் அவ்விடுகை திரட்டியிலிருந்து நீக்கப்படுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும். அதைச் சரியாகத் தெளிவிக்கவும்.
30 என்ற எண்ணிக்கை சற்றுக் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன். 50 அதிகரித்துவிட்டதாகக் கருதுகிறேன். திரட்டி நிர்வாகத்துக்கும் இல்லாமல் இலவசக் கொத்தனாருக்கும் இல்லாமல் 40 ஐ முன்மொழிகிறேன்.
மிக நல்ல செயற்பாடு. இதனால் பதிவர்கள் தமக்குவரும் சற்றிங் வகையிலான பின்னூட்டங்களைத் தடுத்து ஆரோக்கியமான பின்னூட்டங்களை வெளியிட ஊக்குவிக்கும். உண்மையில் இந்த செய்றபாட்டின் மூலமே பதிவுகள் நெடுநாளைக்கு தமிழ்மண முகப்பில் தெரியும். ஏனெனில் 5 பின்னூட்டங்கள் வந்தால் 5 ஐயும் உடனடியாக வெளியிடாமல் நாளுக்கு ஒன்றென பதிவர் வெளியிட ஆரம்பிப்பார். எத்தனை வேகமாக பின்னூட்டங்களை வெளியிட முடியுமோ என இருந்த நிலை மாறி எத்தனை தாமதமாக வெளியிட முடியுமோ என்ற நிலை ஏற்படும். மிக நல்ல ஏற்பாடு. நன்றி.
சோதனை செய்துபார்ப்பதில் தவறில்லையென்றுதான் படுகிறது.
ஆனா ஒரு கேள்வி: கும்மியடிப் பின்னூட்டங்களில் ஆர்வமுள்ளவர்கள், பல கும்மிகளை வெட்டி-ஒட்டி ஒரே “கும்மிப்பொதி”யாக்கிப் போட்டுக்கொண்டால் அது ஒரு கும்மின்னுதானே கணக்கு?:))
நட்சத்திரப்பதிவுகளுக்கு அதிகமான பின்னூட்டங்களை முகப்பில் காட்ட அனுமதிக்கலாம்
வினையூக்கி
one size fits all
=====
..and, it is …..?
∞ ??
சுந்தரவடிவேல் – பத்து முறை தனித்தனியாக வெட்டிப் பின்னூட்டத்தை வெளியிட்டு பத்து முறை காட்சிப்படுத்துவதை விட அனைத்தையும் வெட்டி ஒட்டி அவர்களே ஒரே ஒரு பின்னூட்டாக வெளியிட்டால் நல்லது தானே?
வினையூக்கி – நட்சத்திர இடுகைக்கு தான் முகப்புப் பக்கத்தில் நிலையான இடம் இருக்கிறதே. நட்சத்திர இடுகை ஒவ்வொன்றுக்கும் சிறப்பு அனுமதி தருவது தமிழ்மணத்தின் வேலைப்பளுவை அதிகரிக்கலாம். ஆனால், அவர்களால் செய்ய இயலுமானால் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை.
தமிழ்மண நிர்வாகிகளுக்கு – தமிழ்மணம் தன்னார்வச் சேவை என்பதால் மாற்றங்களை செயற்படுத்த நேரமாகும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது தான். தன்னார்வச் சேவை என்ற அதே காரணத்துக்காகத் தான் அது இன்னும் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி.
=====
பதிவர் இரவிசங்கர்:
நன்றி. உங்களைப் போன்று இங்கே அக்கறையோடு பின்னூட்டும் அனைத்துப்பதிவர்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் உற்சாகத்தினை ஏற்படுத்துவதோடு, எமது வேலைப்பளுவினையும் குறைக்கின்றன; பயனர்களின் தேவையையும் அவர்கள் கண்ணோட்டத்திலே அறிந்துகொள்ளவுதவுகின்றன.
இப்பின்னூட்ட மேலெல்லை எலியைக் கொல்லக் கூரைக்குத் தீ வைத்ததாகவிருக்கக்கூடாது என்பதிலே மிகவும் அவதானமாகவிருக்கின்றோம். அதனாலேயே, எதிர்வினைகளை அறிந்துகொள்ளும் ஒரு சோதனைக்காலப்பகுதியாக மட்டுமே இப்போதைக்குக் கருதுகிறோம்.
நிர்வாகம்
தமிழ்மணம்
பின்னூட்ட அரசியல் மூலம், தங்களுக்குத் தேவையான பதிவுகளை எல்லோர் பார்வையிலும் படும்படியாகவே வைத்திருக்கவோ அல்லது தங்களுக்கு தேவையற்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து காணாமல் போகச் செய்யவோ முடிகையில், தமிழ் மணத்தின் இந்த முடிவு, ஒரு நல்ல நிலைபாடு.
அதே சமயம், சில நல்ல விவாதங்களையும், அறியக் கூடிய வாய்ப்புகளை நண்பர்கள் இழக்க நேரிடும். In the Name of Honour என்ற என் பதிவில், வந்த 43 பின்னூட்டங்களும், மிக விரிவான, நுணுக்கமான விவாதங்களும், விளக்கங்களுமாக இருந்தன. இவற்றையெல்லாம் படிக்கும் வாய்ப்பை பலர் இழக்கத்தான் செய்வர். மேலும் சில பதிவுகள், ஒரு வருடம் கழித்து வாசிக்கப்படுகின்றன. இப்படி புதைந்து போனவற்றை புதிதாக வந்தவர்கள் படிப்பதற்கு சிரமம் உண்டாகலாம்.
என்றாலும், குறைந்தபட்சம், 24 மணி நேரத்தில் பெறப்பட்ட பின்னூட்டத்தில் இந்த 30க்கும் அதிகப்பட்ட பின்னூட்டக்காரர்களை அனுமதிப்பது நல்லது.
ஒரு பதிவர், தன்னை எத்தனை கண்ணியமிக்கவராக நடத்திக் கொள்கிறாரோ, அதைப் பொறுத்தே அவருக்கு வரக்கூடிய பின்னூட்டங்கள் இருக்கின்றன. பின்னூட்டத்தை அவசரப்பட்டு வெளியிடாமல், கொஞ்சம் நிதானமாக இயங்கினாலே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
நன்றி
நண்பன்
தமிழ்மணத்தின் செயல்பாட்டில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
நல்ல முடிவு. பல புதிய பதிவுகள் வாசகர்களை சென்று சேர இந்த முடிவு பயனளிக்கும் என தோன்றுகிறது. இதை மனதார வரவேற்கிறேன்.
நன்றி
செல்வன்
உண்மையில் உங்கள் நோக்கம் உன்னத மானது. அதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால்,
ஒரு விவாதத்திற்குறிய இடுக்கையில் சுமார் 15 பதிவர்கள் கலந்துகொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது போன்ற இடுக்கைகளில் 30 பின்னூடங்கள் எனபது வெகு சாதாரணமாக எட்டிவிடும்.
விவாதங்கள் உள்ள இடுக்கைதான் பதிவுலகின் உயிர் நாடி, வெறும் கட்டுரை போல் வாசித்து செல்ல பல தளங்கள்/பத்திரிக்கைகள் உள்ளன.
அதனால் விவாத மேடையில் வரும் இடுக்கைகளுக்கு மாற்றுவழியை யோசித்தால் நலம்.
நன்றி
தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,
நல்ல முடிவு, இதனால் புதுபதிவர்கள் பயனடைவார்கள். இருந்தாலும் நான் ஒரு திட்டத்தை முன் வைக்கிறேன்.
முகப்பு, இடுகைகள், பதிவுகள், மன்றம், உதவி/தகவல் என்ற பக்க அமைப்பில் 30க்கும் மேற்பட்ட பின்னூட்டம் உள்ள இடுகைகளுக்கு தனிப்பக்கம் வைத்து ‘மறுமொழி இடுகைகள்’ என்ற தலைப்பில் திரட்டலாம். முனுமுனுப்பு வராது. 30க்கும் மேற்பட்ட பின்னூட்டம் உள்ள இடுகைகளை பயனீட்டாளர்கள் அங்கு சென்று பார்வை இடலாம். முன்பக்கம் (முகப்பு) தற்போழுது உள்ள நிலையிலேயே தொடரலாம்.
நன்றி
ஒரு சந்தேகம். ஒரு பதிவில் பின்னூட்டங்கள் 30க்கு மேல் போனால் முகப்பில்தான் வராது, ஆனால் தொடர்ந்து திரட்டப்படுகிறது எனச் சொல்லி இருக்கிறீர்கள்.
அப்படி என்றால் முகப்பில் வரவில்லை என்றாலும் “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” என்ற பகுதியிலாவது காண்பிக்கப்படுமா? அங்கும் வராதென்றால், நீங்கள் திரட்டப்படுகிறது என்பதன் பொருள் என்ன என விளக்க முடியுமா? இங்கும் காண்பிக்கப் படுவதில்லை என்றால் திரட்டுவதால் என்ன பயன்?
உங்கள் அறிவிப்பினைத் தொடர்ந்து நானிட்ட சோதனைப் பதிவு 30 பின்னூட்டங்களைத் தாண்டியதால் முகப்பில் வரவில்லை. ஆனால் “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலும் காணப்படவில்லையே? அதனால்தான் இந்த கேள்வி.
உண்மையில் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். இதில் வேறு நோக்கம் எதுவுமில்லை. நன்றி.
சுய பொறுப்பும் கட்டுப்பாடும் இல்லாத பதிவர்கள் மலிந்திருக்கும் சூழலில் இத்தகைய கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை.இதனால் நல்ல பதிவுகளாக தனித்தனியாக ஒவ்வொருவரும் கருதுபவை பாதிக்கப்படுமே என்ற ஆதங்கத்துக்கு அதிகாரபூர்வமாக தமிழ்மணம் தீர்வு சொல்வது கடினமே .யார் யாருக்கு எது நல்ல பதிவு என்பதை தமிழ்மணம் முடிவு செய்ய முடியாது என்பதே எதார்த்தம் .ஆகவே கட்டுப்பாடுகளையும் மீறி தமக்கு நல்ல பதிவுகளை தேடிப்பிடிப்பதற்கு பதிவர்களும் தாங்களாக முயற்சி எடுக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை
அதே நேரத்தில் இங்கு கூறப்பட்ட பல யோசனைகளை நான் வரவேற்கிறேன்.
1.30 பின்னூட்டங்களுக்க்கு மேல் சென்ற பதிவுகள் மறு மொழியிடப்பட்ட வரிசையில் மீண்டும் முதல் வரிசையில் வராது என்பது இருந்தாலும் , மறைக்கப்பட்ட வரிசையிலோ அல்லது மட்டுப்படுத்தப்படாத வரிசை என்ற புதிய இணைப்பிலோ கிடைக்கத் தரலாம்.
2.நட்சத்திரமாக இருப்பவருடைய நட்சத்திர பதிவுகளுக்கு மட்டும் நட்சத்திர வாரத்தில் இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
இத்தனை கட்டுப்பாடுகளுக்கு பின்னரும் ,இதை எப்படி ஏமாற்றுவது என்று யோசித்து புது வழிகளை கண்டு பிடிக்க பலர் விழைவார்கள் என்பதும் உண்மை..ஆகவே “திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முழியாது” என்பதே உண்மை.
இது தவறான தீர்வு என்றே தோன்றுகிறது.
தொடர்ந்து பதிவுகளை திரட்டுவதை விட்டுவிட்டு ஒரு பதிவின் மறுமொழி திரட்டப்பட்டு விட்டால் அடுத்த அரை மணி நேரத்துக்கு அந்த பதிவின் மறுமொழி திரட்டப்படாது என்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
இதன் மூலம் சில நாள் கழித்து விவாதம் உயிர்பெரும் பதிவுகளும் கூட வாசகரிடம் சென்றடையும்.
தமிழ்மணம் நிர்வாகம் எடுத்திருக்கும் இம்முடிவு நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.பின்னூட்டம் என்பது ஒரு பதிவு பற்றிய விமர்சனமாக கருதப்படுவதைக் காட்டிலும்,முகப்பில் இடம் பெறும் ஆர்வம் தூண்டுவதாக சமீப காலங்களில் காணப்படுகிறது.தங்களுடைய பதிவுகள் பலராலும் படிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் பதிவருமே விரும்புவர்.ஆனால் அது விளையாட்டுப் பொருளாக,ஒருவரே பலமுறை பின்னூட்டி விவாதம் பண்ணவும் செய்வதால் சில பதிவுகள் மட்டும்முகப்பில் தொடர்ந்து இடம் பிடிக்க ஏதுவாகிறது.
30 க்கு மேல் பதிவுகளை எங்கே தேடுவது என்பது ஒரு ஐயம்.ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்மணம் வாசிக்க வருபவர் சில நல்ல பதிவுகளை கவனிக்க முடியாமல் போகலாம்.
இதற்கு ஒரே வழி தாங்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளின் உரலை அறிந்திருப்பதுதான்.
எந்த ஒரு முயற்சியாயினும் அதன் சாதக,பாதகங்கள் சோதனையோட்டத்திற்கு பிறகே புரிபடும்.தேவைப்படின் பிறகு திருத்தம் கொண்டுவரலாம்.
30 பின்னூட்டங்கள் ஒரே நாளிலும் வரலாம்,ஒரு வாரத்திலும் வரலாம்.
பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கும் பதிவர்கள் கருத்தும் பின்னூட்டமாக எண்ணப்படுவதால் பதிவர்கள் 4,5 பேருக்கு ஒரே பதிலாக பின்னூட்டலாம்.
மொத்தத்தில் இந்த மாற்றம் ஏற்புடையதே..வேண்டியிருப்பின் பின்னர் மேலும் நெறிபடுத்தலாம்.
http://puthupunal.blogspot.com/2007/02/blog-post_28.html
=====
“Your Feedback Pick up” should be working; Please refresh once you approve the comments.
இது தவறான முடிவாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. சில வளமையான் பதிவுகள் 30க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் பெற்றிடின் இந்த முடிவு கண்டிப்பாக தவறாகவும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் 30க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும் பதிவுகளுக்கு முகப்பில் அல்லாத வேறொரிடத்தில் இற்றைப்படுத்தப் பட்டால் அனைத்து தரப்பினரும் மகிழ்வார்கள். யாரையும் எந்தப்பதிவையும் திரட்டியில் காட்டாமல் இருப்பது, இவ்வளவுநாள் ‘தமிழ்மணம்” காட்டிய சீறிய வழியிலிருந்து பிறழுவதாக தோன்றுகிறது
வாழ்க பாரதம்
“விவசாயி” இளா
10 நிமிடங்களுக்கு முன்பு இட்ட என்னுடைய இன்றைய பதிவிற்கு இன்னமும் ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. ஆனால் தமிழ்மணம் மறுமொழி நிலவரம் 29 என்கிறது.
எளிதில் பதிவுகளை மறையச்செய்ய நண்பர்கள் நடத்தும் சோதனையா..??
=====
பதிவர் மூக்கு சுந்தர்:
அப்படியொரு மாந்திரீக யதார்த்தமும் இதுவரை நாமாகச் சோதனையிலே கலக்கவில்லை
எங்கே 29 என்று பெருப்பித்துக்காட்டியது? தேடினோம்; காணவில்லை.
சுட்டினால், எங்கே கோளாறெனக் கண்டு திருத்திக்கொள்ள வசதியாகவிருக்கும். வேறு யாருக்கும் ஏற்பட்டிருந்தாலுங்கூட, சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி.
====
SAW IT. Thanks.
It seems the case for Bonston Bala too (19 comments are shown as 29).
Let’s have a look and come back asap. May be due to the ongoing efforts to accomodate the useful suggestions from bloggers for the past two days.
நிர்வாகம்
தமிழ்மணம்
///சேதுக்கரசி சொன்னது மிகச் சிறந்த ஆலோசனை —–
எஸ்.கே அவர்கள் சொல்லீயது:
இதனை வழி மொழிகிறேன்.
எனக்கு இந்த பிரச்சினை பொதுவாகக் கிடையாது.
இருப்பினும், தரமான பதிவுகளுக்கான ஆரோக்கியமான பின்னூட்டங்களையும் இதில் சேர்க்காமல் இருக்க என்ன வழி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். ///
இதனை வழி மொழிகிறேன்.
எனக்கு இந்த பிரச்சினை பொதுவாகக் கிடையாது.
என் பதிவு http://penathal.blogspot.com/2007/02/30.html -க்கு இதுவரை 8 பின்னூட்டங்களே வந்துள்ளபோதும் ஏனோ திரட்டப்படவில்லை. வார்ப்புரு / அமைப்பு மாற்றம் ஏதும் நான் செய்யவில்லை.
அன்புகூர்ந்து கவனிக்கவும்.
இரண்டு பின்னூட்டமே இதுவரை வந்திருக்கும் என் பதிவு, முகப்பில் 32 எனக் காட்டுவது எப்படி?
)
இருப்பினும் 30ஐத் தாண்டிய இது[!!!! முகப்பில் இன்னும்மிருப்பது எப்படி?
எப்படி?
எப்படி?
எப்படி?
=============
பதிவர் எஸ்கே:
உங்கள் இதயம் லப்-டப் என வேகமாக அடிப்பது புரிகின்றது. நீங்கள் கண்டது சரியே
தவறுதலாக 32 எனக்காட்டவில்லை. பதிவர்களின் இங்கான பின்னூட்டங்களும் சொந்தப்பதிவுகளும் தந்த கருத்துக்களின் அடிப்படையிலே பின்னூட்டங்கள் சேர்த்துக்கொள்ளுதலை மேம்படுத்தியுள்ளோம்.
முன்பக்கத்திலே 40 என உச்சமாகவும் “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலே மேலெல்லையில்லாது இற்றைப்படுத்தப்பட்ட அனைத்து இடுகைகளும் சுட்டிக் காட்டப்படும். மேலும் பின்னூட்டங்களினை மட்டுறுத்தல் செய்யவேண்டுமென்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது. பதிவர்கள் தமக்கு விரும்பிய மட்டுறுத்தல் விதியைத் தமது பதிவுகளிலே மேற்கொள்ளலாம்.
பின்னூட்டம் குறித்த தம் கருத்துகளைத் தந்து மேம்படுத்த உதவிய அனைத்துப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ்மணத்தின் சார்பிலே நன்றி. இது குறித்த விரிவான பதிவு நாளை இடப்படும்.
நிர்வாகம்
தமிழ்மணம்
இப்போது திரட்டப்படுவதற்கு நன்றி கூறி, இந்த இரு பின்னூட்டங்களையும் அழித்துவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
=====
பதிவர் சுரேஷ்:
நீங்கள் விரும்பினால், அழித்துவிடுகிறோம். ஆனால், இவை குறித்து நீங்களும் மூக்கு சுந்தரும் அறியத் தந்ததாலேயே நாங்கள் செய்து கொண்டிருந்த மேம்படுத்துதலிலே சில துணை-எதிர்விளைவுகளையும் கண்டு கொள்ளக்கூடியதாகவிருந்தது. அப்படியான படிப்பினைகளைப் பதிந்துகொள்ளவும் வரவேற்கவும் இருந்தால், நல்லதெனப் பட்டது. விரும்பினால், அழித்துவிடுகிறோம்.
நாற்பதுக்கும் சில வரலாற்று, அறிவியற்சிறப்புகள் இருக்குமென நம்புகிறோம்
புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
//பதிவர்களின் இங்கான பின்னூட்டங்களும் சொந்தப்பதிவுகளும் தந்த கருத்துக்களின் அடிப்படையிலே பின்னூட்டங்கள் சேர்த்துக்கொள்ளுதலை மேம்படுத்தியுள்ளோம்.///
ஆனால், எனக்கு என் பதிவில் இதுவரை ஒரே ஒரு பின்னூட்டம் தான் வந்திருக்கிறது ஐயா!
அதனால்தான், எந்த அடிப்படையில் 32 எனக் காட்டுகிறது என்பதைத் தெரிய ஆவலாயிருக்கிறேன்!
பின்னூட்டங்களுக்காக பதிவதில்லை நான்!!
=====
பதிவர் எஸ்கே:
தங்களுக்கு 31 பின்னூட்டங்களை அதிகரித்துக் காட்டியதற்காக வருந்துகிறோம்.
ஓரிரு பதிவுகளின் பின்னூட்டங்களினைச் சேர்ப்பதிலேயிருக்கும் நிரல் வழுக்கள் இப்போதும் சீர்செய்யப்படுகின்றன. விரைவிலே சரியாகும்.
புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
மீதி 30 பின்னூட்டங்கள் எங்கே!???????
)))))))))
இது ரொம்ப நல்ல விளையாட்டா இருக்கே
தமிழ்மணம் நிர்வாகத்துக்கு,
நீங்கள் அவ்வாறு கருதினால் இருந்துவிட்டுப் போவதிலும் எந்தப் பாதகமும் இல்லை.
என் மனதுக்குப் பட்ட இன்னொரு ஆலோசனை:
பொதுவாக 30 என்ற உயரெல்லையை நானும் ஆதரிக்கிறேன் (40க்கும் விக்கிபீடியாவில் தேடினால் சிறப்புகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை:-).
பதிவுகளில் இருக்கும் தமிழ்மணம் கருவிப்பட்டையை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், ஒரு கூடுதல் பொத்தான் – 30+ என்று கொடுக்கலாம். அதை அழுத்துவதன் மூலம், அப்பதிவுக்கு 30க்கும் கூடுதலான பின்னூட்ட்ங்களைத் திரட்ட தமிழ்மணத்துக்கு வேண்டுகோள் விடுக்க, பயனர்களுக்கு ஒரு வசதி வழங்கலாம். அதே நேரத்தில் இது தானியங்கியாக அன்றி, இடுகைகளுக்கு அருகில் உள்ள மஞ்சள் முக்கோணத்தைப் போல நிர்வாகத்தின் ஒப்புதல் பேரில் மட்டும் செயல்படுவதாகவும் அமைத்தால், 30+ பின்னூட்டம் பெறும் நல்ல விவாதங்கள் வெளிச்சம் பெற வழி செய்ய முடியும். (மஞ்சள் முக்கோணத்தையும் கருவிப்பட்டையில் இணைப்பது உபயோகமாகவே இருக்கும்)
என் முந்தையப் பின்னூட்ட்ங்களும் அதற்கான தங்கள் [கிண்டலான] பதிலும் அழிக்கப் பட்டதின் மர்மம் என்னவோ?
=======
பதிவின் செயற்படுகையிலே எரிதங்களை மட்டுப்படுத்தும் Spam Karma என்பது ஏன் சிலவற்றைத் தூக்கி எரிதமாகக் கருதுகின்றன்பதற்கு உறுதியான விதிகளில்லை. தொடர்ச்சியாக உங்கள் பின்னூட்டங்கள் குறைந்த நேர இடைவெளிக்குள் sk என்ற பெயரோடு வர, அது எரிதங்களெனக் கொண்டு, குப்பைக்குள்ளே தள்ளிவிட்டிருக்கின்றதெனத் தோன்றுகிறது. இப்போது மீட்டு வந்து இட்டிருக்கிறோம்.
ஐயா, உணர்ச்சி வசப்படாதீர்கள்
//போன வாரம், சுமார் ஒருவருடங்களுக்கு முன்னால் எழுதிய பதிவொன்று புது மறுமொழியின் காரணமாக இற்றைப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பதிவுகள் படித்திராத எனக்கு, இந்தப் பதிவு “24 மணிநேரத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பட்டியலில் வந்தமையாலேயே படிக்கக் கிடைத்தது. இது போன்ற நல்ல பதிவுகள், இந்த முப்பது பின்னூட்டம் என்ற உயிரெல்லையால், எங்களுக்குக் கிடைக்காது போகும் அபாயம் இருக்கிறது.//
எனது கருத்தும் இதுவே. நல்ல பதிவுகளை பின்னூட்ட உயரெல்லை மூலம் பார்க்க முடியாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை.
ஒரு சிலர் பின்னூட்டத்தை தவறாக பயன்படுத்தியிருக்கலாம், அதற்காக உயரெல்லை அவசியமா?
சிவபாலன் கூறுவதுபோல்
//ஒரு விவாதத்திற்குரிய இடுக்கையில் சுமார் 15 பதிவர்கள் கலந்துகொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது போன்ற இடுக்கைகளில் 30 பின்னூடங்கள் எனபது வெகு சாதாரணமாக எட்டிவிடும்.
விவாதங்கள் உள்ள இடுக்கைதான் பதிவுலகின் உயிர் நாடி, வெறும் கட்டுரை போல் வாசித்து செல்ல பல தளங்கள்/பத்திரிக்கைகள் உள்ளன//
30க்கு மேற்பட்ட பின்னூட்டங்களைக் கொண்ட பதிவுகளுக்காக வேறொரு இணைப்பை/பக்கத்தை ஒதுக்குவதுதான் சரி என நினைக்கிறேன்.
நன்றி.
======
பதிவர் ஆதிபகவன்:
ஏற்கனவே மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். இது பற்றி நாளை விபரமாக அறிவிப்போம்
தாமதமான கருத்து
http://blog.thamizmanam.com/archives/85#comment-2404
மிக்க நன்றி. தங்களதூ தொடர்ந்த புரிதலுக்கு.
நான் உணர்ச்சி வசப்படவில்லை.
தெரிந்து கொள்ளவே கேட்டேன்.
எதையோ செய்ய முற்படுகின்றீர்கள்.
அது நல்லபடியாக நடக்க முருகனை வேண்டுகிறேன்.
மீண்டும் நன்றி.
)
பாருங்கள் இந்த அறிவிப்பையே நான் ஒரு நாள் தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன்.
அதேபோல் நல்ல பதிவுகளும் பின்னூட்ட உயரெல்லை மூலம் கண்ணில் படாமல் போகலாம்!!
//நேரம் காரணமாக, தனிப்பட்ட பதிவர்கள், தம் இடுகைகளிலோ, ஆங்கே பின்னூட்டங்கள் வாயிலாகவோ தெரிவிக்கும் ஆலோசனைகள் எங்கள் கவனத்தைப் பெறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. அதனால், அவற்றை இவ்விடுகையில் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல்கள் மூலமாகவோ தெரியப்படுத்தலாம். //
இவ்வாறு நீங்கள் குறிப்பிட்டிருப்பதன் காரணமாக பதிவுகள் தொடர்பாக நானொரு கருத்தை இங்கே (பின்னூட்ட எண் 5) முன்வைத்தேன். அது குறித்து தமிழ்மண நிர்வாகத்தின் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன். ஒருவேளை மறுமொழி நிலவரம் சேவை குறித்து மட்டுமே இங்கு பேசப்படலாம் என்று கருதினால் தெரிவிக்கவும்.
====
======
பதிவர் சிந்தாநதி:
உங்கள் கருத்துகளை முன்னமே கண்டோம். நன்றி. நடைமுறைப்படுத்தவேண்டிய திட்டங்களாகச் சிலவற்றினைக் கருத்திலே ஏற்கனவே கொண்டிருக்கின்றோம். உங்கள் கருத்துகளும் அவற்றுக்குப் பலம் சேர்க்கும்.
நிர்வாகம்
தமிழ்மணம்
முன்பொருமுறை நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னேன்.: “இப்போதெல்லாம் நிறைய பதிவுகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. நல்லதுதான். ஆனால் முக்கால்வாசிக்குமேல் தனிமனித தாக்குதல்களும், வம்பளப்புகளும், பத்திரிகைச் செய்திகளை மீள்பதிவு செய்வதுமாகத்தானிருக்கிறது. பல பதிவுகளை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதனால் உருப்படியான பதிவுகளை தவறவிட்டுவிடுமோவெனவும் தோன்றுகிறது.” என்கிற மாதிரி புலம்பிக் கொண்டிருந்தேன்.
நண்பர் ஒரு யோசனை சொன்னார். “நான் சொல்வதை முயற்சித்துப் பாருங்களேன். எனக்கு சரியாக இருக்கிறது. உங்களுக்கு இருக்கலாம்.”
நான் ஆவலுடன் “அது என்ன?”
“எந்தப் பதிவில் அதிகமான பின்னூட்டமிருக்கிறதோ, அதை அறவே தவிர்த்துவிடுங்கள். உள்ளே உருப்படியாக எந்தவிஷயமுமிருக்காது” என்றார் அவர்.
()
சோதனை முறையில் தமிழ்மணம் எடுத்திருக்கும் இந்த முடிவை வரவேற்கிறேன்.
தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,
நேற்றுவரை நானும் 30 க்கு மேல் பின்னூட்டங்கள் வரும் பதிவுகளை இற்றைப்படுத்த முயலும் உங்களின் முடிவை சரியென்றே நினைத்திருந்தேன். ஆனால் தீடிரென்று இன்று ஒரு யோசனை – ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுமார் 30 – 35 இடுகைகள் தமிழ்மண முகப்பில் இன்று மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் தோன்றுகின்றன. அதில் பின்னூட்டக் கயமை அல்லது கும்மி மூலம் அதிக பின்னூட்டம் பெறும் இடுகைகள் ஒரு நான்கு தேறுமா? நான் சொல்வது எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் (At any given point in time). எனவே, அந்த நான்கு இடுகைகளுக்காக மற்ற சில நல்ல விவாதத்திற்கு வழிவகை செய்யும் இடுகைகளையும் இற்றைப்படுத்துவது அவசியமில்லை என்பது என் கருத்து. பதிவர் சுரேஷ் கண்ணன் சொன்னதுபோல், நான் வெற்றிகரமாகப், பெரும்பாலும் பின்னூட்டக் கயமை / கும்மியடிக்கும் இடுகைகளை தவிர்த்து வருகிறேன். மேலும், தமிழ்ப்பதிவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து, வெவ்வேறு கால நேரங்களில் பதிவிடுகிறார்கள். ஒருவேளை நான் இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு (தமிழ்ப்) பதிவர் ஒரு நல்ல இடுகையிட்டு, அது, பெரும்பாலும் நான் தமிழ்மணத்திற்கு வருகை தரும் முற்பகல் 11 மணிக்கு முன்பாகவே 30 பின்னூட்டங்களைத் தாண்டிவிட்டிருந்தால், அவ்விடுகையை நான் (தமிழ் மணத்தின் கட்டுப்பாட்டால்) பார்க்காமலேயே தவறவிட்டுவிடுவேன். எனவே இப்போதிருக்கும் முறையே தொடரலாம் என்பது என் கருத்து.
ஒரு வேண்டுகோள்.
தமிழ்மணம் நிர்வாகிகளுடன் எந்தெந்தக் காரியங்களுக்காக எந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்துடன் தொடர்புக்கான மின்முகவரிகளை தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்திலும் இந்த வலைப்பதிவின் இடப்புறப் பட்டையிலும் இடுவது பதிவர்களின் தொடர்புகளுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி
சோதித்துப் பார்த்தேன். மறுமொழிகள் தமிழ் மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்
பகுதியில் வரவில்லை.
சுபமூகா
http://puthupunal.blogspot.com
======
பதிவர் சுபமூகா:
“கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” இனைப் பார்த்தீர்களென்றால், தவறானாலுங்கூட, 15:39 வெந்த புண்ணில் வேல்! (1) : சுபமூகா என்றிருக்கின்றது. ஏழு மணிநேரத்தின்முன்னால், “ஏலேலோ ஐலசா [1] ” என்பது தோன்றியிருந்தது. மீண்டும் நீங்களாகவே ஒரு பின்னூட்டமிட்டு, அவ்விடுகையை உயிர்ப்பித்துப் (இப்பதம் வேறெங்கும் தேடிக் கிடைத்ததில்லை. தமிழிலேயே இருக்கிறது; பயன்படுத்துகிறோம் – கேட்டீர்கள்; சொல்லிவிட்டோம்
) பார்த்தால், புதிய பின்னூட்டம் பற்றிய விபரம் தமிழ்மணத்திலே “மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியிலே சுட்டிக்காட்டப்படும். தொடர்ந்தும் சிக்கலிருப்பதாகக் கருதினால், அறியத்தாருங்கள்.
புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்
வலைப்பதிவுகளின் சிறப்பே அதன் சுதந்திரமான வெளிதான், பதிவர்களின் பொறுப்பற்ற சில செயல்களும் அதை கட்டுப்படுத்துகிறேன் என்று கிளம்புவதும் வலைப்பதிவுகளையும் தமிழ்மணத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக தற்போதைய வெகுசன ஊடகத்தில் உள்ள எழுதப்படாத கட்டுப்பாடுகளைப்போல இங்கேயும் கொண்டு வந்துவிடும் நிலை உருவாகிவிடும் என்று அஞ்சுகிறேன். எது கும்மி பதிவு, எது ஜல்லிபதிவு, எது கருத்துபதிவு, எது சரக்கு பதிவு என்பதை எப்படியாக தீர்மாணிப்பது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொறுத்தது, எனக்கு நல்ல பதிவாக தோன்றுவது வேறு சிலருக்கு ஜல்லி பதிவாகவும், மற்ற சிலருக்கு இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை இதையே எப்போ பார்த்தாலும் எழுதுகிறான் என்றும் தோன்றும், மற்றவர்கள் நல்ல பதிவு என்று நினைப்பது சில சமயங்களில் எனக்கு கும்மி, ஜல்லி இன்ன பிற பதிவுகளாக தோன்றும், எல்லாம் இங்கே கிடைக்கும் என்பதுதான் வலைப்பதிவு உலகின் சிறப்பம்சமே, வெகுசன ஊடகத்தில் இல்லாத ஒன்று வலைப்பதிவுகள் என்ற மாற்று ஊடகத்தில் கிடைப்பது இது தான், எனவே அதில் எதை தேர்ந்தெடுத்து படிப்பது என்பதை வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.
//சில பதிவுகளில் பின்னூட்டங்கள், வெறும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் சில சந்தர்ப்பக்களிலே சச்சரவுகளை உருவாக்கும் நோக்கத்தோடும் அனுமதிக்கப்படுவதால், பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி அதன் தேவைக்கும் நோக்கத்துக்கும் மாறாக, முறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றது என்று தமிழ்மணம் நிர்வாகத்திற்குத் தொடர்ந்து முறையீடுகள் வருகின்றன.//
இதில் உண்மைகள் இருந்தாலும் இத்தனை சீரியசாக எடுத்துக்கொண்டு செய்ய வேண்டியதிருக்கின்றதா?? ஒரு நாளைக்கு வெளிவரும் சராசரியான 150 பதிவுகளில் எத்தனை பதிவுகளில் இப்படியாக இருக்கின்றது? ஒன்றிரண்டு கூடத்தேறாது… அந்த ஓரிரு பதிவுகளுக்காக இப்படியான பின்னூட்ட உயரெல்லைகள் என்றெல்லாம் இப்படியான கட்டுப்பாடுகள் தேவையா என்பதை யோசிக்கலாம், அப்படியே தமிழ்மணத்தின் பின்னூட்ட பக்கத்தில் கும்மி பதிவுகள் ஆக்கிரமிக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது நான் பார்த்தவரை ஒரே சமயத்தில் ஓரிரண்டைத்தவிர பின்னூட்ட பகுதி முழுக்க எந்த காலத்திலும் கும்மி பதிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டில்லை (டோண்டு பிரச்சினை ஏற்பட்ட அந்த சில நாட்கள் தவிர) எனவே உயரெல்லைகள் என்று செயல்படுவதெல்லாம் செருப்புக்காக காலைவெட்டுவது போன்றது என்று நான் கருதுகிறேன், கடந்த ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் திரட்டப்பட்ட பதிவுகளை எடுத்து புள்ளிவிபரம் எடுத்து கும்மி பதிவுகள் கணக்கை எடுத்து பார்த்தால் உண்மை நிலவரம் நமக்கு புரியலாம்.
//தமிழ்மணத்தின் சிறப்புகளில் ஒன்று, அது பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவது என்பதை மிகவும் நன்றாக உணர்ந்திருப்பதால், தமிழ்மணத்திலே கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும் முயற்சிக்கு மாற்றாக வேறு வழிகளில் நல்ல பதிவுகளையும்/ பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
//
இதை ஆராய்ந்து செய்யலாம்….. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகளில் அவசரமாக இதை செயல்படுத்துவதை விட தொழில்நுட்ப தீர்வுகளை பற்றி சிந்திக்கலாம்….
ப்ளாக்கர்.காம் மில் பதிவுகள் பற்றிய முறையீடு செய்யப்பட்டால் அதிகபட்சம் ஒரு எச்சரிக்கை(WARNING) செய்தி அந்த வலைப்பதிவை திறக்கும்போது வரும், மேற்கொண்டு படிப்பதும் படிக்காததும் வாசகர்களின் விருப்பம், இதை படிக்கலாம் இதை படிக்கக்கூடாது இது கும்மி பதிவு, இது உயர்ந்த பதிவு, இது நல்ல பதிவு என்றெல்லாம் வகைப்படுத்துதலும் தரப்பிரிப்பும் மேற்கொண்டால் இன்றைக்கு வெகுசன ஊடகங்களில் உள்ள மாய கட்டுப்பாடுகள் இந்த தளத்திலும் வந்து சேர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. எல்லாம் இங்கே கிடைக்கும் என்பதுதான் வலைப்பதிவு உலகின் சிறப்பம்சமே, அங்கே கும்மிகளும் இருந்துவிட்டு போகட்டுமே, இன்றைக்கு கும்மி என்பது நாளை நகைச்சுவைக்கும், அதன் பிறகு எப்போ பார்த்தாலும் சாதி சாதி மதம் மதம்ன்னு பேசுறாங்கப்பா என்று அந்த பதிவுகளுக்கும் கட்சி கட்சினு அலையுறாங்கப்பா என்று அரசியல் பதிவுகளுக்கும், ஜாவா தொழில்நுட்பத்திற்கும், கட்டுமானப்பணி தொழில்நுட்பத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கின்றது, பலர் அதை விரும்பி படிப்பதில்லை அப்படி அதில் விருப்பமுள்ளவர்களுக்கு தனியாக சென்று பார்த்துக்கொள்ளட்டும் என வேறு சில வகையான பதிவுகளுக்கும் கூட சிலர் கட்டுப்பாடுகள் விதிக்க கோரலாம்.
எல்லாம் இங்கே கிடைக்கும் என்பதுதான் வலைப்பதிவு உலகின் சிறப்பம்சமே, கட்டுப்பாடுகளின் மேல் கட்டுப்பாடுகளாக அந்த சிறப்பம்சத்தை நாம் குறைக்கிறோமா என்றும் யோசிக்கலாம்.
இவைகள் இந்த விடயத்தில் என்னுடைய கருத்துகளே, மற்றபடி தமிழ்மணம் செம்மையாக செயல்பட என் ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கும்…
இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டுமென்று கூட அவசியமில்லை, செய்தி தமிழ்மண நிர்வாக குழுவிற்கு சென்றால் போதுமானது….
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
அது எப்படி உங்களுக்கு மட்டும் என் பின்னூட்டங்கள் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்
பகுதியில் தெரிகிறது?!
நான் எனக்கு நானே பின்னூட்டி விட்டு [ஆஆஆஆ, என்னையும் இது மாதிரி பண்ண
) ] பார்த்தேன். ஐந்து நிமிடங்கள் பொறுத்துக் கூடப் பார்த்தேன்!
வச்சுட்டாங்களே!
நம்ப முடியவில்லை.. ல்லை.. ல்லை..! அங்கு இல்லை!!
http://www.geocities.com/ganesamurthy/g200703020930.bmp
நன்றி,
அன்புடன்,
சுபமூகா
======
பதிவர் சுபமூகா:
இதுதான் நெற்றிக்கண்ணில்லாமல் ஞானக்கண்ணிருப்பவர்களுக்கான வசதி
(though I ain’t Lobsang Lama
)
நேற்றைய பின்னூட்ட நிலை மாற்றங்களினால், பின்னூட்ட எண்ணிக்கையிலே தவறுகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
சற்றே பொறுங்கள்; இதன் காரணமாகத்தானெனில், ஓரிரு நாட்களிலே வழு களையப்பட்டுவிடும்.
புரிதலும் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்
‘ஓரிரு நாட்கள்’ கழித்து ஞாபகப் படுத்துகிறேன் [;-)]
இன்னும் அதே நிலை!!
அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் சுபமூகா பெயர்!
நன்றி, நன்றி, நன்றி!
அன்புடன்,
சுபமூகா