‘தேன்கூடு’ சாகரன் அவர்களுக்கு அஞ்சலி
‘தேன்கூடு’ வலைப்பதிவுத் திரட்டியை உருவாக்கியவரும், சாகரன் என்கிற புனைப்பெயர் கொண்ட சகவலைப்பதிவருமான திரு. கல்யாண் அவர்கள் அகாலமாக மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தோம். அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அவரது துணைவியார், குழந்தை, பெற்றோர், உறவினர்கள், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அன்னாருடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
‘தமிழ்மணம்’ திரட்டியை நடத்த டி.எம்.ஐ பொறுப்பேற்றுக்கொண்டபோது புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் அனுப்பிய மடலை இவ்வேளையில் கனத்த மனத்தோடு நினைவு கூர்கிறோம். வலைப்பதிவு என்னும் மாற்றூடகம் தமிழில் வளர்ச்சிபெற தமிழ்மணமும், தேன்கூடும் இணையாக பணிபுரிந்துவருகின்ற நிலையில் தேன்கூட்டின் பின்புலத்தில் முதன்மையானவராக இருந்து இயங்கிய கல்யாண் மறைந்தது தமிழ் வலைப்பதிவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரது இழப்பை ஈடு செய்து தேன்கூட்டினை தொடர்ந்து வளர்த்தெடுக்க தேன்கூட்டோடு சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு மனத்திண்மை வாய்க்க உளப்பூர்வமாக விழைகிறோம். கல்யாண் விரும்பியதைப்போல தமிழ்மணம் பிற தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளோடு தொடர்ந்து நட்புறவு பேணும் என்பதனை அவருடைய நினைவுக்கு அளிக்கும் மரியாதையாக மீண்டும் உறுதி செய்கிறோம்.
இவண்,
டி.எம்.ஐ. நிர்வாகம்
—–
Update
Dear All,
Please check the following website for sakaran’s funeral rites updates.
http://djanakiraman.googlepages.com/
Thanks
Deepa (His sister)
February 13th, 2007 | 1:04 am
—–
தேன் பதிவிலிருந்து:
சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.
ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.
sakaraalai@gmail.com
எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.
Comments
66 Responses to “‘தேன்கூடு’ சாகரன் அவர்களுக்கு அஞ்சலி”
Leave a Reply
போன மாதம் சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்தவர், இன்று இல்லை. நம்ப முடியவில்லை. அதிர்ச்சி 🙁
இதய அஞ்சலி!
சகபதிவர் மற்றும் தமிழ் பற்றாளர் ஒருவரை நாம் இழந்துள்ளது, மிக வருத்தமான நிகழ்வு.
அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
மிக்க துயரமான சம்பவம், சாகரனின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இதை கேள்விப்படதிலிருந்து இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை…
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேன்கூடு திரட்டியை தோற்றுவித்தவரும், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகியுமான திரு. கல்யாண்(சாகரன்) அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில் தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
முத்தமிழ்மன்றம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தூணை இழந்து தவிக்கிறோம். 1978ல் பிறந்தவர். 28 வயது முடிந்து இன்னும் 29கூட ஆகாதவர். இந்த வயது இறக்கும் வயதா???
இதுபோன்ற கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா என்று கேட்கத் தோன்றுகிறது. மனைவி, மூன்று வயது குட்டிப் பாப்பா வர்ணிகா, அப்பா, அம்மா, தங்கை ஆகியோரைப் பிரித்து அவரை அழைத்துச் சென்ற காலனை நினைத்தால்… கோபமாக வருகிறது.
கல்யாணின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்யாணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவோம்.
பிரிவால் வாடும்,
முத்தமிழ்மன்ற நண்பர்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:-
1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்
மிகவும் துயரமான செய்தி அறிந்து வருந்துகிறேன். இவ்வளவு இளம்வயதிலா?
அவருடைய குடும்பத்தினர், உற்றார், நண்பர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சகபதிவர் மற்றும் தமிழ்ப் பற்றாளர் ஒருவரை நாம் இழந்துள்ளது, மிக வருத்தமான நிகழ்வு. இணையத்தமிழின் ஆர்வலரும், அதன் வளர்ச்சிக்கு உழைத்தவருமான திரு. கல்யாணின் மறைவு எல்லோருக்கும் ஒரு பேரிழப்பு.
அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
உமர் மறைவிற்கு பின் ஈடு செய்ய முடியாத இழப்பு இது.
பழக இனியவரான கல்யாணின் இழப்பை இன்னும் நம்ப முடியாதவனாகவே இருக்கிறேன்.
🙁
வருத்தமளிக்கும் செய்தி!
அவருடைய குடும்பதாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!!
கல்யாண் அவர்களுக்கு இதய அஞ்சலிகள் :(((
மூர்த்தி,
29 வயதா? மிகவும் வருத்தம் தரும் செய்தி.
அவர்கள் குடும்பத்துக்கு நம்மால் ஆன உதவி செய்யவேண்டும்.
தயவு செய்து co-ordinate செய்யுங்கள்.
நன்றி!
[…] தமிழ்மணத்தின் அஞ்சலி […]
மிக மிக வருத்தமான செய்தி!
ஆழ்ந்த இரங்கல்கள்!
Words cannot alone express how sorry I am to hear this news. Please accept my most sincere condolences on the loss of Sagaran Kalyan
இணையத்தமிழுக்குத் தொண்டு செய்து வந்து கொண்டிருந்த கல்யாண் இவ்வளவு இளம் வயதில் மரணம் அடைந்தது அனைவரையும் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் இனிச் செய்யவிருந்த தொண்டை தமிழ்ச் சமூகம் இழந்து விட்டது.
இவ்வளவு இளம் வயதில் அவரைப் பறி கொடுத்த அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் தற்பொழுது அனுபவித்து வரும் துன்பத்தை நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்குகிறது. அவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சொ. சங்கரபாண்டி
“சாவே உனக்கு ஒரு சாவு வராதா?”
நண்பர் கல்யாணை ரியாதில் தங்கியிருந்த இன்னொரு நண்பர் வழி அறிந்திருந்தேன். நேரே பார்த்ததில்லை.
முன்முனைப்புள்ள இளைஞர். தமிழார்வத்தில் அவர் செய்த வலைப்பணிகள் பாராட்டத் தக்கவை.
அண்மையில் ஊருக்கு வந்த போது தொடர்பு கொண்டு, “தமிழ்ச் சொல்லாக்கம் பற்றி தேன் கூட்டிற்கு இணைப்புக் கொடுத்து ஒரு வலைத்தளம் தொடங்க வேண்டும், அதற்கான நுட்ப உதவிகளை நான் செய்கிறேன், நீங்கள் எழுதுங்கள்” என்றார். நான் “இப்பொழுது உள்ள பணிகளைப் பற்றிச் சொல்லிக் கூடியவிரைவில் தொடர்பு கொள்ளுவேன்” என்று சொல்லியிருந்தேன். “அடுத்தமுறை உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று அவரும் சொல்லியிருந்தார். அவருடைய ஆர்வமும், கனிவும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.
இத்தனை இளம் அகவையில் இப்படி ஓர் இழப்பா? மனம் கனத்துப் போகிறது. அவர் குடும்பத்தாருக்கும், நெருங்கிய நண்பர்களும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்புடன்,
இராம.கி.
சாகரனுக்கு அஞ்சலி. அவரது ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்.அன்னாரின் பிரிவில் துயருறும் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெறவிருப்பதாக கேள்விபட்டேனே. அதைப்பற்றி வெளியிடுங்களேன்.
இந்த இளம் வயதில் அகாலமாக திரு. சாகரன் அவர்கள் மறைந்தது உலக தமிழ் சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கடல் கடந்து வாழும் தமிழர்களிடையே ஒரு இணைப்பாக இருக்கும் தேன்கூடு திரட்டியை நிறுவியவர் யார் என அறியாமல் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருபவன் நான்.
குடும்பத் தலைவனை இழந்து வாடும் துணைவியார், குழந்தை, குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொலைவிலிருந்து வெறும் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க இயலும். அது மட்டுமே போதாது.
இழப்பிலிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு, சிறு குழந்தையின் கல்வி-எதிர்காலத்திற்காக வேறு எந்த வகையிலும் உதவியாய் இருக்க இயலுமெனில் என்னால் இயன்ற உதவியைச் செய்யச் சித்தமாயுள்ளேன்.
29 வயது மரணிக்கிற வயதா?
:-((
உண்மையில் மனம் கனக்கச் செய்த நிகழ்வு. எனக்கு அவரிடம் பரிச்சயம் இல்லையெனினும் வலையுலகில் என் முதல் தமிழ் காதல் தேன்கூட்டிலிருந்துதான் ஆரம்பமானது. அவரின் சேவையை உபயோகப்படுத்தியவர்கள் யாரென்று கூட தெரியாமல் அனைவரையும் அரவணைத்த அந்த ஆத்மா இன்று நம்முடன் இல்லை.
மனம் நிரம்பிய சோகமுடன்
சென்ஷி – டெல்லி
ஆழ்ந்த இரங்கல்கள். சென்னை சந்திப்பில் பார்த்த சிரித்த முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த துன்ப நேரத்தில் அவரது குடும்பமும், தேன்கூடு நண்பர்களும், உறவினரும் மனபலம் பெறவேண்டும்.
அதிர்ச்சி அளிக்கும் செய்தி
சாகரன் அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
சாகரன் குறித்து தொடர்ந்து வரும் பதிவுகள், அவரின் மரணம் பதிவுலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.முகம் தெரியாத சிலரும் வருந்தியிருப்பது அவரின் மீதான மரியாதையை கூட்டுகிறது. சாகரன் அவர்களின் இழப்பு குறித்த பதிவுகளை முழுவதும் அவர்களின் குடும்பத்தாற்க்கு பிறகு ஒரு வேளையில் தெரியப்படுத்தினால் அவர்களின் இழப்பை பகிர்ந்து கொண்டதாய் இருக்கும்.
எல்லோருக்கும் இனியவரான சாகரன் எனக்கு மரணம் மூலம் அறிமுகமாகியிருக்கக்கூடாது.
வருந்துகிறேன்
[…] http://icarusprakash.wordpress.com/2007/02/11/shocking http://pithatralgal.blogspot.com/2007/02/192.html http://valai.blogspirit.com/archive/2007/02/11/kalyan.html http://blog.thamizmanam.com/archives/84 http://thulasidhalam.blogspot.com/2007/02/blog-post_12.html http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post.html http://theyn.blogspot.com/2007/02/blog-post_8610.html http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_12.html http://masivakumar.blogspot.com/2007/02/blog-post_12.html http://wethepeopleindia.blogspot.com/2007/02/blog-post_8206.html http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_12.html http://techtamil.blogspot.com/2007/02/blog-post.html http://vicky.in/dhandora/?p=305 http://surveysan.blogspot.com/2007/02/blog-post_4044.html http://muthukumaran1980.blogspot.com/2007/02/blog-post_12.html […]
மிகவும் துயரமான செய்தி அறிந்து வருந்துகிறேன். இவ்வளவு இளம்வயதிலா?
அவருடைய குடும்பத்தினர், உற்றார், நண்பர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தேன்கூடு திரட்டியை உருவாக்கிய திரு. சாகரன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்நத இரங்கலைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
திரு. கல்யாணின் நினைவினைப் போற்றும் வகையில் ஒரு 24 மணி நேரத்திற்கு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளைத் தவிர மற்றெந்தப் பதிவையும் அனுமதிக்காமல் அவருக்கு மரியாதை “தேன்கூடும், தமிழ்மணமும்” செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்!
நன்றி.
மிகவும் வருந்தத்தக்க செய்தி. சமீபத்திய சென்னைச் சந்திப்பின் போது இனிப்புகளோடு வந்து அறிமுகப்படுத்திக் கொண்டவர். அதற்குப் பிறகு ஒரு சில தொலைபேசிகள். சில மின்னஞ்சல்கள். மிகவும் இளைஞரான இவரது இழப்பு நிச்சயம் வருத்தத்திற்குரியது. முத்தமிழ்மன்றம் (www.muthamilmantram.com) உருவாகுவதில் முக்கிய உதவியாற்றிய இவரது இழப்பு வருத்தத்தைத் தருகிறது.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ் பதிவர் வட்டம் ஒரு நல்ல பதிவரையும் தமிழ் பற்றாளரையும் இழந்து விட்டது. அன்னாரடு குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
வருத்தமளிக்கும் செய்தி. அவர் குடும்பத்தாருக்கும், நெருங்கிய நண்பர்களும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
தாங்க முடியாத சோகம் .. சாகரன் அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஒரு தடவைதான் பார்த்திருக்கிறோம். இவ்வளவு இளம் வயதில் இல்லாமற் போவதென்பது உறவுகளை எவ்வளவு துயரிலாழ்த்துமொன்று. காலம் மட்டுமே இந்தக் கண்ணீரைத் துடைக்க வல்லது. வார்த்தைகளுக்கு அந்த வலிமை இல்லை.
இத்தனை இளம் வயதில் சாகரன் மறைந்தது மாபெரும் சோகம்.
தமிழ் என்ற நூலிழையில் பிணைந்து – இணைய தமிழுக்கு பெரிய பங்களிப்பு செய்த சாகரனுக்கு நம்முடைய கண்ணீர் அஞ்சலி.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சாகரன் குடும்பத்தினருக்கும், என் ஆழ்ந்த அனுதாபங்கள்
வரும் புதனன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவர் இல்லத்தில் ஈமக்கிரியை நடைபெற இருப்பதாக முத்தமிழ்மன்றத்தில் படித்தேன்.
முடிந்த அன்பர்கள் போய் அஞ்சலி செலுத்தினால் எங்களைப் போன்ற இயலாதவர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும்.
அன்றைய தினம் தமிழ்மணத்திற்கும் ஒரு விடுமுறை அளிக்கலாமே!
முருகனருள் முன்னிற்கும்.
===============
அன்புள்ள எஸ்கே அவர்களே
அன்றைய நாளிலே தமிழ்மணம், தேன்கூடு போன்ற வலைத்திரட்டிகளுக்கு ஓய்வினைக் கொடுப்பதினைவிட, அவர் குறித்த, தமிழ்குறித்த நல்ல பதிவுகளைமட்டுமே பதிவர்களிடுவது எனத் தீர்மானித்துச் செயற்பட்டால், இன்னும் மேன்மையடையுமென்று தோன்றுகிறது; திரட்டிகளின் சேவை துல்லியமாகத் தெரியுமல்லவா?
நிர்வாகம்
தமிழ்மணம்
நான் கேட்கும் செய்தி உண்மையாக இருக்காதா.. என்று உள்ளம் வாஞ்சிக்கிறது….
வலைத்தளங்களில் தனக்கென தனி ஒரு இடத்தை ஏற்படுத்தியவர். தனிப்பட்ட முறையில் எனக்கு தொடர்பு இல்லையென்றால், இணைத்தளங்களில் அவர் ஆற்றிய பங்கை பார்த்து வருகிறேன்.
அவரது இணையப்பக்கத்தில் சென்ற வாரம் கூட பதிவு கொடுத்து இருந்தாரே.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல கடவுள் ஆறுதல் அளிக்க வேண்டுகிறேன்.
//ஓய்வினைக் கொடுப்பதினைவிட, அவர் குறித்த, தமிழ்குறித்த நல்ல பதிவுகளைமட்டுமே பதிவர்களிடுவது எனத் தீர்மானித்துச் செயற்பட்டால், இன்னும் மேன்மையடையுமென்று தோன்றுகிறது; திரட்டிகளின் சேவை துல்லியமாகத் தெரியுமல்லவா?//
இது இன்னும் நல்ல கருத்து! அப்படியே செய்யலாம்!
நான் “ஓய்வு” எனச் சொன்னது முன்னர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கல்யாண் பற்றிய பதிவுகளை மட்டுமே இடுதல் என்னும் பொருளில்தான்.
மிக்க நன்றி, ஐயா!
தமிழுக்கு தொண்றாற்றிய தொண்டன் சாகரனுக்கு என் கண்ணீர் அஞ்சலி
தேன்கூடு நடத்தியவர் 28 வயது இளைஞரென்பதும், இன்று அவர் நம்மிடையே இல்லை என்பதும், அவர் பெயர் சாகரன் என்பதும் இன்றே அறிந்தேன். அவரை பற்றி கேள்விப்படும் முதல் செய்தியே இப்படியா? சாகும் வயதா இது?யார் என்ன சொல்லி அந்த குடும்பத்தை இனி ஆறுதல் படுத்த முடியும்? ஒன்றும் புரியாமல் விழிக்கிறோம். தேன்கூட்டை ஏன் கலைக்க துணிந்தான் இறைவன்? ஒன்றுமே புரியவில்லை.மனம் மிக நோகிறேன். அவர் ஆத்மா அமைதி பெறவும் அவர் குடும்பம் இந்த சோதனயிலிருந்து மீளவும் உங்கள் அனைவருடனும் நானும் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.
அதிர்ச்சியான தகவல்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள். இயற்கை அவரது குடும்பத்தினர்க்கு மனபலம் அளிக்கட்டும்.
எம்.கே.குமார்.
துயரச் செய்தி.
அன்னாரின் குடும்பத்தவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
துயரச்செய்தி இது..!!! வருந்துகிறேன், இதய அஞ்சலி செலுத்துகிறேன்..!!!
தினம் தினம் உபயோகிக்கும் அருமையான் தமிழ்திரட்டி தந்த அவரது ஆன்மாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Dear All,
Please check the following website for sakaran’s funeral rites updates.
http://djanakiraman.googlepages.com/
Thanks
Deepa (His sister)
சகபதிவர் மற்றும் தமிழ் பற்றாளர் ஒருவரை நாம் இழந்துள்ளது, மிக வருத்தமான நிகழ்வு.
அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
-Suvanappiriyan
மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி. ஒரு தமிழார்வரின் மறைவு நெஞ்சை கணக்கச் செய்கிறது.
ஆழ்ந்த இறங்கல்கள்..
தேன் பதிவிலிருந்து:
சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.
ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.
sakaraalai@gmail.com
எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.
This is a great loss to weep at , and a great loss to tamil computer society , but his works towards tamil computing will still have him .
And we all will have him , within our hearts .
🙁
அதர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் நிலை குலைய வைத்த செய்தி. இனியவர் ஒருவரை இழந்துவிட்டோம்.
அன்னாருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
My Sincere condolences to Sakaran’s family and freinds.
Karthikramas.
ஆழ்ந்த அனுதபம். சாதனையால் உயர்ந்த உங்களை சந்தித்து பேசுகின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உங்களின் உழைப்பின் பயைனை கடல் கடந்து அனுபவித்தோம். உங்கள் நினைவு தமிழ ஈழத்தில் என்றும் நிலைக்கும்.
தமிழ் ஈழ மக்கள்
தமிழ் ஈழம்.
my deepest condolences to sankaran’s family.
சாகரனின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சற்று முன் பாலராஜன் அவர்களிடம் இருந்து வந்த செய்தியின் படி, கல்யாண், இன்று நடு இரவு விமானத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறார். நாளை காலை இந்திய நேரம் எட்டு மணி அளவில் வந்து சேர்வார்கள் என்று தொலைபேசி மூலம் சொன்னார்.
நண்பர் நாமக்கல் சிபி சொன்னப்போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்த இளம்வயதில் இப்படி ஏற்பட்டிருப்பது மாறாத வேதனையை அவரது குடும்பத்திற்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அவரது ஆன்மா சாந்தியடையவும் அன்னாரின் குடும்பம் இந்த மாபெரும் துயரத்திலிருந்து மீளவும் அனைவரும் பிரார்த்திப்போம்.
‘தேன்கூடு’ என்ற மாற்று வலைப்பூக்கள் திரட்டியின் வாயிலாக தமிழ்ச்சேவை செய்து, தமிழ்கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்டு வளர்ந்து வந்த இளைஞர் திரு. கல்யான் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாகரனைப் பற்றி பிற பதிவுகளையும் படிக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரோட பொண்ணுக்கும் மனைவிக்கும் பெற்றோருக்கும் ஆண்டவன் அருளும் மன உறுதியும் தருமாரு வேண்டிக்கிறேன். கொடுமை.
சாகரனை பற்றி கேள்விபட்டு இருக்கிறேன். அவருடைய தேன்கூடு வலைபதிவுக்கு தவறாமல் செல்வேன். தமிழை இணையத்தில் வளர்க்க பாடுபட்டவர். நிறைய செய்தவர்.
முத்தமிழ் மன்றம் ஆரம்பிக்க தூணாக இருந்தவர்.
இந்த இளம் வயதில் அவரை இறைவன் தன்னிடத்தில் அழைத்து கொண்டுயிருக்க கூடாது.
சாகரனை பிரிந்து வாடும் அவர் மனைவிக்கும், குழந்தை, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுதாகர்
முத்தமிழ்மன்றம்
இந்த தளத்தில் புதிதாக கால் பதித்தவன் நான். திரு. சாகரனைப் பற்றி அறிந்துகொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. அவர் அகால மரணம் வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தினாலும், கடவுளிடம் என்னுடைய கேள்விகளை சாகரனுக்கு அஞ்சலி-யாக செலுத்துகிறேன்.
” தரணியில் இதயமிலார் பலரிருக்க
மலர்ந்த
சாகரனின் செந்தாமரை இதயத்தை
பிடுங்கியது நியாயமோ?
தளிர் விட்ட இலைகளும்,
பூக்களும் உயிர்ப்போடு
சிலிர்த்திருக்க
வேரினை கருக்கியது
நியாயம்தானோ?
தேன்கூட்டை குழப்பி
தேனீக்களை துயரத்தில்
ஆழ்த்தினாய்
இழந்த இராணீக்கு
எப்படி செய்வாய் உன்
இழப்பீட்டை?”
அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
யாழினி அத்தன்
சாகரனுக்கான மற்றும் உமர் தம்பி ஆகியோருக்கு சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே…..
http://ajeevan.blogspot.com/
or
http://radio.ajeevan.com/
முகம் தெரியாத சாகரன் கல்யாண் அவர்களின் அகால மரணச் செய்தி மனதை உருக்கியது, அவரின் பிரிவால் நிர்க்கதியாக உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!