“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” கையேடு

January 27, 2007 – 9:32 am by தமிழ்மணம்

தமிழ் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனம், உலகளாவிய தமிழர்களிடையே உடல்நலம்/சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் கையேடுகளைத் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்டமாக “மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” என்ற கையேடு இன்று வெளியிடப்படுகிறது. இது இரண்டு விதமான பயனாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது:

1. தனிநபர்கள் தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்
2. தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் தன்னார்வலர்கள்/பணியாளர்கள், இக்கையேட்டினைத் தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வாயிலாகப் பொதுமக்களிடையே பரப்ப விரும்பினால், அதற்கான கையேடுகளை டி.எம்.ஐ அச்சிட்டுத் தருவதைப் பரிசீலிக்கும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கான்டாக்ட் அட் டிஎம்ஐ-எல்எல்சி டாட் காம் என்ற மின்னஞ்சலில் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.
———————————

“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” கையேட்டினைப் பற்றி:

வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் மார்பகப் புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் எட்டுப்
பெண்களுள் ஒருவர் தன் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயால் பீடிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 2,00,000 பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வருடமும் 40,000 பெண்கள் இந்நோயால் இறப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மார்பகப்
புற்றுநோயை இந்நோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறிவது நோயைத் தடுக்கப் பெரிதும் உதவுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் மீடியா இன்டர்நேஷனல்
ஒரு கையேட்டினை வெளியிடுகிறது.

“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” என்ற இக்கையேடு, ஆசிய, இந்திய மகளிர் விழிப்புணர்வுக்கென உருவாக்கப்பட்டது. இதில், மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் யாவை, இந் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் முக்கியதுவம் என்ன, மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது எப்படி, எங்கு, எப்போது மார்பக ஆய்வு (mammogram) என்னும் பரிசோதனையைச் செய்து கொள்வது, போன்ற பெண்களுக்கு மிகப் பயனுடைய பல தகவல்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

மார்பகப் புற்றுநோய் பற்றிய அடிப்படைத் தகவல்கள் மற்றும் அந்நோயின் அறிகுறிகளை விரிவாகத் தருவதே இக்கையேட்டின் நோக்கம். இக் கையேட்டில் உள்ள சில அடிப்படை தகவல்கள் “மார்பக ஆய்வைப் பரப்புரை செய்யுங்கள்” (”Spread the Word on Mammogram”) என்ற அமெரிக்காவின் தேசிய புற்றுநோய்க் கழகம் (National Cancer Institute) வெளியிட்டுள்ள பயிற்சி ஏட்டின் மூலமும், வலைத்தளங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்தும், படங்கள் வலைத்தளங்களில் இருந்தும் மற்றும் ஆசிய, இந்திய பத்திரிக்கைகளில் இருந்தும் திரட்டப் பட்டன. இக்கையேட்டில் இடம்பெற்றிருக்கும் விபரங்களையும், கேள்வி-பதில்களையும், இந்திய-ஆசிய மகளிரிடம் முற்சோதனை செய்திருக்கிறோம். இக் கையேட்டின் ஆங்கில மூலத்தின் நேரடி மொழி பெயர்ப்பாக இத் தமிழ்க் கையேடு உருப்பெற்றிருக்கிறது. சில தமிழ் வலைத்தளங்களில் இருந்து தமிழ் எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தியிருக்கிறோம். வாசக நண்பர்கள் அனைவரும் இக்கையேட்டினைப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

அன்புடன்,
டி.எம்.ஐ. நிர்வாகம்

  1. 4 Responses to ““மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” கையேடு”

  2. நல்ல முயற்சி!

    வாழ்த்துக்கள்!

    By Sivabalan V on Jan 27, 2007

  3. என் வேண்டுகோள் இன்னும் சரி செய்யப்படவில்லை.பின்னூட்டம் மட்டருத்தும் என் பதிவுகள் காட்டப்படவில்லை
    =========

    பதிவர் ஏடாகூடம்:

    உங்களின் தொடர்ச்சியான ஐந்து ஒரே பின்னூட்டங்களுக்கு நன்றி. ஏற்கனவே தெளிவாகச் சொலியிருப்பதுபோல, உங்கள் பின்னூட்டம் தமிழ்மணத்திலே திரட்டும்வகையிலே பல நாட்களுக்கு முன்னரே வகை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், உங்கள் பதிவினைப் பார்த்தபோது, வக்கிரம் பிடித்த மிருகம், தமிழன் திருந்தவே மாட்டானா? போன்ற இடுகைகளிலே பதிவு பட்டை இல்லாதது தெரிகின்றது. இது குறித்து ஜனவரி 7 இலேயே சுட்டியிருந்தோம்
    ————
    Your blog is registered correctly. However, While looking at your blog it looks like no ‘pathivu’ toolbar code added. If you do that as given in http://blog.thamizmanam.com/archives/51 then toolbar will display and only then the comment count in your blog will get displayed.
    admin
    thamizmaNam
    Posted Jan 7, 3:49 AM

    —————-
    அதன்படி செய்தீர்களா? அதன் பிறகும் பின்னூட்டங்கள் வக்கிரம் பிடித்த மிருகம் இடுகையிலே திரட்டப்படாமலிருப்பின், அறியத்தாருங்கள்.

    உங்கள் பிரார்த்தனைநேரம் பதிவின் பின்னூட்டங்கள் தோன்றுகின்றதா? அதையும் அறியத்தந்தீர்களென்றால், பிரச்சனையை அறிந்து கொள்ள இலகுவாகவிருக்கும்.

    நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம் திரட்டி

    By ஏடாகூடம் on Jan 27, 2007

  4. this is my parellel blog with http://sweet-pages.com.not with ”.i have added the toolbar in my original blog.should i need to add in my parellel blog also to show my comments getting moderated.
    as it is a blog for making prayers to those who are in need of it i very much wish my posts are to be shown repeatedly.i will try to add tool bar and inform you again
    thank you

    ====
    We are not sure about your question. Is this regarding your பிரார்த்தனைநேரம் blog? Or about பகுத்தறிவு blog?

    BTW, it seems that your ஏடாகூடம் comments are picked up by thamizmaNam.

    Also, is it possible for you to post in the appropriate post so that it is easy for the tech support to handle if any problem exists. This post is on breast cancer. Thank you.

    By kousi on Jan 28, 2007

  5. என்னுடைய ‘பிரார்த்தனை நேரம்’ இப்போது காட்டப்படுகிறது .நன்றி.
    ஆனால்’பகுத்தறிவு’,'ஏடாகூடம்’ ஆகிய ப்லாக்குகும் என்னுடைய பிளாக்குகும் தொடர்பில்லை.நன்றீ
    =====
    சரி ;-)

    By kousi on Jan 28, 2007

Post a Comment