புத்தாண்டு வாழ்த்துக்கள்

January 1, 2007 – 1:03 am by தமிழ்மணம்

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ) நிறுவனம், அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது. அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் இப்பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை தனித்தனியே அணுகி வந்திருந்தாலும் இவ்வமைப்புகளுக்கும், மக்களுக்குமிடையே முழுமையான தொடர்பு இருக்கவில்லை. இந்தத் தொடர்பறுந்த நிலையானது நம் சமூகத்தின் அடிப்படையில் நிலவி வரும் இரண்டு இடைவெளிகளின் பிரதிபலிப்பேயாகும், அவை யாவன: (அ) வசதிகள் வாய்க்கப் பெற்ற பிரிவினருக்கோ விளிம்புநிலை மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிய முழுமையான அறிவில்லை. (ஆ) விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும், அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை. டி.எம்.ஐ நிறுவனம் இந்த இடைவெளிகளை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்புகிறது. விளிம்புநிலை மனிதர்கள் கூட தங்கள் குரலை சுதந்திரமாகவும் ஒலிக்கும் வண்ணம் இணைய மற்றும் அச்சு வசதிகளைப் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.

ஜூலை 2006ல் நிறுவப்பட்ட நாள் முதல் இன்று வரை, டி.எம்.ஐ நிறுவனத்தினர் தங்கள் அமைப்புக் கட்டுமானத்தை உருவாக்கவும், அமைப்புக்குள்ளான ஜனநாயக விதிகளை வரையறுக்கவும் பணியாற்றி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தமிழ் மணத்தையும், பூங்காவையும் ஜனநாயகத்தன்மையுடனும், பாரபட்சமில்லாமலும் தொடர்ந்து நடத்தி வருவதற்கான வழிமுறைகளை விவாதித்து ஒருமித்த முடிவுகள் எடுத்து வந்துள்ளனர். இவற்றைத் தொடர்ந்து தற்சமயம் டி.எம்.ஐ. ஒரு ஆரோக்கியமான விவாதக்களத்தை உருவாக்குவதில் முனைந்துள்ளது.

டிசம்பர் 2006 இறுதியில் டி.எம்.ஐ. அமைப்புக்குள்ளான தேர்தல் முடிந்து, தங்களது புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நிறைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக் காட்டியும் டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இவண்,
டி.எம்.ஐ நிர்வாகக் குழு

Happy New Year

Tamil Media International LLC (TMI) is interested in promoting education and awareness among the Tamil populace around the globe regarding economic, socio-political, educational and health care issues faced by all sections of the Tamil Community. Although most of these issues are addressed disjointedly by a number of organizations, governmental, corporate and voluntary, efficient communication between these organizations and the people is lacking. This communication divide is primarily a manifestation of the following two basic societal gaps: (a) the resourceful sections are not aware of the problems of the marginalized sections and (b) the marginalized sections do not have the education or awareness, or both, to understand the root causes of their problems. Even if they are aware of them, they do not know how to access the resources for overcoming the issues. TMI aspires to bridge this gap using online and print resources and create a platform for the free expressions from the marginalized sections.

Since its foundation in July 2006, the TMI team members were engaged in building the organizational structure and the democratic norms within the organization. In addition to this, systematic efforts were undertaken to continue running Thamiz Manam and Poongaa in a democratic and balanced approach. The organizational elections have been completed in December 2006 and the executive board for 2007 has been announced.

We express our gratitude to you for continuously supporting our efforts by rightfully appreciating our services and criticizing our drawbacks. We wish you all a very Happy New Year.

Yours,
TMI Executive Committee

  1. 31 Responses to “புத்தாண்டு வாழ்த்துக்கள்”

  2. தமிழ்மணம் திரட்டி மற்றும் பூங்கா வலையிதழ் நிர்வாகக் குழுவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தங்களி தமிழ்சேவை மேலும் வளர்ந்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் பயனளிக்கட்டும் !

    அன்புடன்
    கோவி.கண்ணன்

    By கோவி.கண்ணன் on Jan 1, 2007

  3. உங்கள் அமைப்பில்
    உள்ள அனைவருக்கும்
    என்
    உளமார்ந்த
    ‘புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்’
    அன்புடன்
    SP.VR.சுப்பையா

    By SP.VR.SUBBIAH on Jan 1, 2007

  4. தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கும் அவர்கள் ஆற்றி வரும் சேவைகளுக்கும் மிக்க நன்றி, டி.எம்.ஐ அதன் நோக்கங்களையும் குறிக்கோளையும் விரைவில் அடைந்து வீறு நடை போட வாழ்த்துகிறேன்.

    நன்றி

    By குழலி on Jan 1, 2007

  5. TMI அமைப்பின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்…

    எண்ணங்கள் அனைத்தும் ஈடேறட்டும்…

    அழியாத அன்புடன்,
    அருட்பெருங்கோ.

    By அருட்பெருங்கோ on Jan 1, 2007

  6. தமிழ்மணம் நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    By செல்லி on Jan 1, 2007

  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    உங்கள் சேவைக்கு எங்கள் நன்றிகளும்…!

    By சிந்தாநதி on Jan 1, 2007

  8. நிர்வாகத்தினருக்கு நன்றி.
    உங்களுக்கும் மனங்கனிந்த வாழ்த்து.

    //வாழ்த்துக்கள் //
    அப்ப இது அவரில்லையா? ;-)

    By வசந்தன் on Jan 1, 2007

  9. உங்கள் சேவைகளுக்குப் பாராட்டுக்களும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்.

    By மலைநாடான் on Jan 1, 2007

  10. அன்புக்குரிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு!
    தங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    அமைதி நிலவட்டும்.
    தங்கள் சேவைக்கு என்றும் நன்றி
    அன்புடன்
    யோகன் பாரிஸ்

    By johan paris on Jan 1, 2007

  11. ஃஃதமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ) நிறுவனம்இ அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதாரஇ சமூக-அரசியல்இ கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும்இ விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது. அரசுஇ வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் இப்பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை தனித்தனியே அணுகி வந்திருந்தாலும் இவ்வமைப்புகளுக்கும்இ மக்களுக்குமிடையே முழுமையான தொடர்பு இருக்கவில்லை. இந்தத் தொடர்பறுந்த நிலையானது நம் சமூகத்தின் அடிப்படையில் நிலவி வரும் இரண்டு இடைவெளிகளின் பிரதிபலிப்பேயாகும்இ அவை யாவன: (அ) வசதிகள் வாய்க்கப் பெற்ற பிரிவினருக்கோ விளிம்புநிலை மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிய முழுமையான அறிவில்லை. (ஆ) விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோஇ விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும்இ அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை. டி.எம்.ஐ நிறுவனம் இந்த இடைவெளிகளை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்புகிறது. விளிம்புநிலை மனிதர்கள் கூட தங்கள் குரலை சுதந்திரமாகவும் ஒலிக்கும் வண்ணம் இணைய மற்றும் அச்சு வசதிகளைப் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது. ஃஃ

    சர்வதேசத் தமிழ் ஊடக(எல்.எல்.சி.-டி-எம:ஐ.)நிறுவன இயக்குனர்களுக்கு முதலில் புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லிக்கொண்டு, மேற்கொண்டு தங்கள் அறிவிப்பு சம்பந்தமான எமது அபிப்பிராயத்தைக் கவனப்படுத்த விரும்புகிறோம்.

    “…கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும்இ விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது”

    நல்ல முயற்சி!

    ஆனால், இங்கே முதலில் எழும் கேள்வியானது கல்வி பற்றியது.

    கல்வி என்று பொதுப்படையாக நாம் இந்தவுலகத்தைப் புரிவதையும் அதனூடாகத் தனது இருப்பை மானுடம் பௌதிக ரீதியாக விளங்கிக் கொள்வதையும்,இதனூடாக மானுடம் தமது பொருள் வயப்பட்டவுலகின் தேவையைத் தொடர்ந்து இயக்குவதற்குமானவொரு அநுபவ வெளியைப் புரிவதைச் சொல்கிறீர்களா?

    அல்லது,மானுடத்தினதும் இந்த இயற்கையினதுமான உறவோடெழுந்த இடைச் செயலையும் அந்தச் செயலூடக மனித குலத்தின் பொருளாயுத வாழ்வில் அமைப்பாக்கப்பட்ட இந்தப் பொருளாதார உற்பத்திப் பொறி முறைகளின் இயற்கைக்கு முரணான கருத்தியல் தளத்தையும,; அந்தத் தளத்தால் காக்கப்படும் அனைத்து மனித மற்றும் இயற்கைக்கு விரோதமாக இயங்கும் அடிதளத்தை ,மாற்றியமைப்பதற்கான சமூக விளிப்புணர்ச்சியைத் தூண்டும் அறிதல்சார் முன்னெடுப்பைக் குறித்துச் சொல்கிறீர்களா?

    மனித சமுதாயத்தில் ஏன்-எப்படி விளிம்நிலை மக்கள் பெருகி வருகிறார்கள்?அவர்களுக்கு எங்ஙனம் நீங்கள் குறியீடாக்கிய”கல்வி”இல்லாதாக்கப்படுகிறது?

    இந்த விளிம்நிலைக்கும் வசதிகள் வாய்கப் பெற்றவர்களுக்குமான பாதகமும்,சாதகமும் எப்படி உருவாகிறது?,
    அதை எவர்கள் காத்து வருகிறார்கள்,எந்தக் கல்வி இவற்றுக்குத் துணையாகிறது?

    இவைகள் குறித்தான சமூகவிரோத சந்தைப் பொருளாதார உற்பத்திப் பொறிமுறையையும்,அதைக் காத்து உறுத்திப்படுத்தி அதை இயக்குவதற்கான முறைமைகளைக் கொண்ட இன்றைய கல்விக் கொள்கைகளின் மானுட-இயற்கை விரோத்தப் போக்கையா நீங்கள் “இடை வெளிகள்”என்கிறீர்கள்?

    கூடவே “…தொடர்பறுந்த நிலை”யென்பதன் சமூக உளவியல் என்ன?

    யாரால்-எப்படி அத்தகைய தொடர்பு அறுகிறது?

    “…விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோஇ விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும்இ அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை.”

    இக் கருத்துகளுக்கூடாகச் சொல்ல வருவதென்ன?

    விளிம்பு நிலை மக்களுக்குள் கல்வி எட்டாக் கனியாக இருப்பதற்கும் அதைச் சமூகத்தில் நீங்கள் குறிப்பிடும் வசதிகள் வாய்க்கப் பெற்றவர்களுக்கான “பண்டமாக”மாற்றிய கல்வி வியாபாரம் எப்படி,எதன் தேவையோடு இணைந்தது?

    விளிம்பு நிலைமக்கள் இவற்றைப் புரிவதற்கான எல்லைகள்,இடர்பாடுகளை உருவாக்கிய சமூகக் காரணிகள் எதன் பொருட்டு நிலவுகிறதென்பதெல்லாம் ஏதோவொரு தற்செயல் நிகழ்வைக்கடந்த சமூகத்தின் மிக நுணக்கமான பொருள்வயப்பட்ட நிர்மாணிப்புகளோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவா?

    இவைகளைக்கடப்பதற்கானவொரு கருத்தாடலையும் அதுசார்ந்த மக்கள் நலக் கல்வி முன்னெடுப்பையும்தாம் நீங்கள் உரைப்பதாக எண்ணுகிறோம்.

    இந்த எண்ணவோட்டத்தில் இன்றைய சமூக முரண்பாடுகளை நீங்கள் முன்தள்ளி விளிம்பு மக்களின் போராட்டத்துக்கு எதிரான சக்திகளை அம்பலப்படுத்துவதாக இருந்தால் நிச்சியம் உங்களைப் பாராட்டியே தீரவேண்டும்!தொடருங்கள்,வாழ்த்துகிறோம்!

    நட்போடு,

    ப.வி.ஸ்ரீரங்கன்

    By P.V.Sri Rangan on Jan 1, 2007

  12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    By ஆதிபகவன் on Jan 1, 2007

  13. வாழ்த்து தெரிவித்த அனைத்து தமிழ்மணம் பயனர்களுக்கும் நன்றி.

    இந்த அறிவிப்பினூடாக வெளிப்படுத்திய எமது குறிக்கோள்களை விரிவாக அலசி கருத்துக்களை தெரிவித்த பதிவர் ப.வீ. ஸ்ரீரங்கன் அவர்களுக்கு நன்றி. உங்களுடையதும், பிற பதிவர்களினதும் எதிர்பார்ப்புகளை எம்மால் இயன்ற வரை ஈடேற்ற தொடர்ந்து முயற்சிகள் செய்வோம்.

    தொடர்ந்த புரிதலுக்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றி.

    டி.எம்.ஐ. நிர்வாகம்

    By தமிழ்மணம் on Jan 1, 2007

  14. ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    By யெஸ்.பாலபாரதி on Jan 1, 2007

  15. வாழ்த்துக்கள்

    By Bala on Jan 1, 2007

  16. புத்தாண்டு வாழ்த்துக்கள்…

    By பொன்ஸ் on Jan 2, 2007

  17. TMI அமைப்பின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்…

    எண்ணங்கள் அனைத்தும் ஈடேறட்டும்…

    By சென்ஷி on Jan 2, 2007

  18. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    வரும் ஆண்டில் எண்ணிய யாவையும் திண்ணியமாகப் பெறவும் வாழ்த்துக்கள் !

    By Manian on Jan 2, 2007

  19. TMI அமைப்பின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

    By selvanayaki on Jan 3, 2007

  20. i hv been moderated my comments

    ===
    your blog has removed from thamizmaNam as it has only one post this moment. We wonder how it was allowed in first place. If it was the mistake by thamizmaNam, apologies.
    Once three relevant / non duplicate / coherent tamil posts are present, please be kind enough to resubmit to thamizmaNam. thamizmaNam would appreciate it.

    Also, please post to the relevant post. This post does NOT have anything to do with comment moderation.

    This response is not exclusive to your blog, but thamizmNam takes this opportunity to reiterate its basic requirements to add a blog in thamizmaNam.

    Thank you for understanding.

    Admin
    thamizmaNam

    By ஏடாகூடம் on Jan 3, 2007

  21. my comments are moderated

    As mentioned to you few weeks back, your comments should have been appearing altight.

    admin
    thamizmaNam

    By கௌசி on Jan 3, 2007

  22. now i hv changed the settings and enabled comments moderation thank you

    By கௌசி on Jan 4, 2007

  23. two weeks back i hv created this blog with different 3 posts and it has been approved by thamizmanam also.yet i culdnt add ny blog to it as it was said that rss /atom feed[something]is not valid.i was ignorant abt this problm and now posted my blog with three new posts.kindly do approve the blog and enable me to add posts in future thanking you.

    By ஏடாகூடம் on Jan 4, 2007

  24. HAPPY NEW YEAR.

    எனது பதிவில் பின்னூட்டங்களை இன்றுதான் மட்டிறுத்தல் செய்துள்ளேன். தயவு செய்து பின்னூட்டங்கள் இட்டபின் தமிழ்மணத்தில் தெரியும் படி செய்யவும்.
    நன்றி
    http://www.batti-central.blogspot.com

    By somee on Jan 4, 2007

  25. i hv moderated my comments

    =====
    as it has been said earlier here, you blog has been removed. It was with one post by then. Now you have three posts. Give us some time to monitor your blog for the contents - as we had some bad experiences with some blogs - and then to add in time.

    Thank you for understanding

    admin
    thamizmanam

    By ஏடாகூடம் on Jan 4, 2007

  26. பிரார்த்தனை என்பது என்னுடை மற்றோரு பிளாக்.ஒரே புரொபைலில் உள்ளது.இதில் மறுமொழி மட்டறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது

    By கௌசி on Jan 5, 2007

  27. To tamizmanamgroup
    i told you clearly that i havr created a blog abt 20 days back in the name of http://nottangu.blogspot.com with profile name as’edakudam’ and posted it with 3 posts.but i culdnt able to connect it wi tamizmanam as it was said there is some’seythioodai’error.so i cut and posted the contents in that blog in my another blog.

    accidently when i was able to open that blog and post a new post in that blog ,i thought it is still active,so only i asked you to show my post after moderating the comments.[by that time i made 3posts in that blog].but i dont know why you hv removed that blog.what malpractice do you find in it?if you feel the contents of the posts were seen in some other blog ,iassure you it is my anotherblog and i only copied it as this post couldnt be connected wi tamizmanam.

    its really embrassing me to know that that my posts need to be checked for its nature and standard.i culd see so many posts with harshness,vulgarity with dealy criticising comments.
    culd you able to recover all or stop these things.or are you afraid of my profile name’edakudam’if it is so what abt blogs with name’porukki’ etc.
    anyhow thank you very much for your acknwledgement.onething dont go behind the peppers with microscope findout the real culprit
    thank you once again

    ======
    Hello:
    1. If you have read the previous response before rushing for this response, you might have understood what was said by thamizmaNam admin.What I (thamizmaNam admin) wrote in the last feedback is a reply in general for all posters, not to embrass you. I clearly stated it.

    2. Please read your first para and second para twice one after the other. When changes happen in the few blogs that somehow are not consistent with the thamizmaNam rules, don’t you think thamizmaNam has the right to be alert? You might have noticed how thamizmaNam was blamed for allowing nasty blogs and feedbacks. Do you know how those blogs got passed the admin? Take Radha Ragavan blog; a classic example. It had three good posts in the beginning. Then came the assaults. Finally blame was on thamizmaNam for allowing it. This is he way, some people did with the feedback moderation too. while joining they moderate them, and then let the horse run as it wants. if the situation is such, please tell how do we know your ‘cut” & ‘paste’? What can the admin do when she/he finds a single post blog is requested to get its feedback collected, and then a three post blog pops up with the same request by the same person? Even I mentioned that this particular post does not have anything to with blooger, and kindly requested for posting in the appropriate post. You even do not bother to consider it.

    3. Yes, there are few blogs that were removed for malcontents and abrupt changes in them after three posts.

    4. You blog is already added, but ‘picking up feedback’ yet to be activated (this is due to a technical glich)

    admin
    thamizmaNam

    By ஏடாகூடம் on Jan 5, 2007

  28. தமிழ்மண நண்பர்கள் மற்றும் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    By மஞ்சூர் ராசா on Jan 6, 2007

  29. என்னுடைய1.மனதில் பட்டவை,2.பிரார்த்தனைநேரம் ஆகிய இரு பிளாக்கிலும் மறுமொழி மட்டறுத்தும் அவை திரட்டப் படுவதில்லை.[திரட்டப் படுவதாக அறிவிக்கப்படுகிறது]ஆனால் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகையில் காட்டாப் படுவதில்லை.ஏதெனும் தொழில் நுட்பக் கோளாறா தெரியவில்லை.என்னுடைய தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிக் காட்டவும் சரிசெய்கிறேன்.உடனடியாக சரி செய்ய வேண்டுகிறேன்
    கௌசி
    ======
    hello:
    your மனதில் பட்டவை comments have already been ‘picked up’.

    admin
    thamizmaNam

    By மனதில்பட்டவை on Jan 7, 2007

  30. sorry to disturb again and again.
    in one of my blog[manathil pattavai] the problem is cleared.
    bur in this blog it is not yet cleared.though i hv moderated the comments my posts are not shown .kindly do the needful.
    =====
    Hello:
    Your blog is registered correctly. However, While looking at your blog it looks like no ‘pathivu’ toolbar code added. If you do that as given in http://blog.thamizmanam.com/archives/51 then toolbar will display and only then the comment count in your blog will get displayed.

    admin
    thamizmaNam

    By பிரார்த்தனைநேரம் on Jan 7, 2007

  31. thank you for adding my blog to tamizmanam.sorry for my words in my previous post if it hurted you.
    i hv moderated comments in my post and hope it will be shown in thamizmanam
    =====
    Hello:
    No problem at all. There is not hurting nor soothing in this blog business, but only self-guarding with a short self-explaining.

    Your blog is registered correctly. However, While looking at your blog it looks like no ‘pathivu’ toolbar code added. If you do that as given in http://blog.thamizmanam.com/archives/51 then toolbar will display and only then the comment count in your blog will get displayed.

    admin
    thamizmaNam

    By ஏடாகூடம் on Jan 7, 2007

  32. தமிழ்மணம் நிர்வாகத்தினரே நீங்கள் மீண்டும் மீண்டும் சொன்ன பின்னரும் கவனியாமல் பொருத்தமற்ற தலைப்பின்கீழே பின்னூட்டம் இடுகின்றார்களே. புத்தாண்டு வாழ்துகள் பதிவிலேதான் இவர்களது பதிவைச் சொல்லவேண்டுமா? பிளாக்கர் பற்றிய பதிவிலே சொல்லக்கூடாதா? இவர்களுக்கு நீங்கள் பதில் கொடுக்கத்தான் வேண்டுமா? இப்படி மற்றவர்களைப் பற்றி சற்றும் எண்ணாத போக்குதான் தமிழனின் தலைவிதியா. இதுதான் தமிழன் முன்னேறாமல் இருக்கிறான். தமிழன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

    =====
    oru thamilan:
    Thank you for your concern. However we have to remind you that you too posted under the same irrelevant post

    Admin
    thamizmaNam

    By oru thamilan on Jan 7, 2007

Post a Comment