தமிழ்மணத்தின் தலையீடின்மையும் தலையிடியும்

December 23, 2006 – 3:09 pm by தமிழ்மணம்

பதிவர்களுக்கு தமிழ்மணத்தின் இடர்ப்பாடுகள் புரியுமென தமிழ்மணம் நினைக்கின்றது. தமிழ்மணத்தினை நடத்தத் தேவையான பொருளாதாரம் குறித்தோ, தொழில்நுட்ப உதவி குறித்தோ இங்கே குறிப்பிடவில்லை. அவற்றின் தாக்கத்தினைத் தாங்கும் திறனும் எதிர்பார்ப்பும் தமிழ்மணத்திடம் இருக்கின்றது. ஆனால், திரும்பத் திரும்ப அறிவில்லாத கிளிப்பிள்ளை செப்புவதுபோல, “தமிழ்மணம் திரட்டி மட்டுமே; தனிப்பட்டவர்களிடையேயான சண்டைகளுக்கும் சிண்டு பிடித்து முண்டு அவிழ்த்தலுக்குமிடையே தமிழ்மணம் அடிதாங்கியாகவோ அல்லது கவசகேடயமாகவோ இருக்கமுடியாது. தமிழ்மணம் தன்னால் இயன்றளவு தன் விதிமுறைகளுக்கு வில்லங்கம் வராதவகையிலே செயற்பட முயற்சிக்கின்றது. அதே நேரத்திலே உங்கள் குரல்களை - அவை ஒழுங்கான தொனியிலே வெளிவரும்போது - வெளியிடவும் முயற்சிக்கின்றது” என்று சொல்லிக்கொண்டிருக்க இனியும் விரும்பவில்லை. விட்டுக்கொடுப்புகள் ஒருபோதும் இயலாமை எனக் கருதப்பட இடம் கொடுக்க விரும்பவில்லை. கடந்த ஒரு மாதத்திலே தனிப்பட்ட தமக்கிடையேயான பிக்கல்பிடுங்கல்களுக்கும் இயலாமைகளுக்கும் எரிச்சல்களுக்கும் தமிழ்மணத்தினைத் தாக்கிக் குரூர திருப்தி அடைகின்றவர்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால், அவற்றின் விளைவான திரித்தல்களும் புனைதல்களும் தொடர்ந்து பதிலிறுப்பைத் தமிழ்மணத்திடம் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன. அவை குறித்து தொடர்ந்து தமிழ்மணத்தின் கவனம், திருத்தமாகச் சொன்னால், டிஎம்ஐ இன் கவனம் சிதறிப்போக எம்மால் அனுமதிக்கமுடியாது. தமிழ்மணம், பூங்கா என்பனவற்றுக்கும் அப்பால், தொழில்நுட்பம், அறிவியல் குறித்த வெளியீடுகளைப் பதிப்பித்தல், தமிழ்ச்சமூகத்திலே வாய்ப்புக் குறைந்த பிரிவினரின் வேறு தன்னார்வ குழுமங்களால் அடையாளம் காணப்படாத தேவைகளை இனம் கண்டு, செயற்படுதல் என்பனபோன்ற விரிந்த நோக்குகளுக்கும் டிஎம்ஐ இன் நேரமும் பொருளும் சக்தியும் பயன்படுகின்றன. டிஎம்ஐ இன் வலைப்பக்கத்திலே இந்நோக்குகள் குறித்து சிறிது கோடி காட்டியிருப்பதனை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் இவை பற்றி ஓரளவு அறிந்திருப்பீர்கள்.

தமிழ்மணத்தினையும் பூங்காவினையும் எடுத்துக்கொண்டாலே,
1. தொடர்ந்து வளர்ந்து வரும் பதிவுத்தொழில்நுட்பத்துக்கும் அவற்றின் பக்கவிளைவுகளான இருக்கும் நுட்பத்திலே ஏற்படும் மாற்றங்களுக்கும் ஈடாக, தமிழ்மணத்தின் சேவையை அதனோடு இணைந்திருக்கும் பதிவர்களுக்குக் கொடுப்பதும்
2. புதிய வசதிகளைத் தமிழ்மணத்துள்ளே சேர்த்துக்கொள்ள, அடையாளம் காணவும் திட்டமிடவும் செயற்படுத்தவும் முயல்வதும்
3. பூங்காவிற்குச் சரியான, தரமான, ஏற்கனவே வேறெங்கும் பதிக்கப்படாத, செய்தித்துணுக்குகள் அல்லாத பதிவுகளைத் தேர்ந்தெடுத்தலும் சீர்படுத்துதலும் வடிவமைத்தலும்
4. பூங்காவிற்குத் தமிழ்மணத்திற்கு அப்பாலும் வெளிவரும் படைப்புகளைத் தேடிப் பெறுதலும் இணைத்தலும்

ஆகிய செயற்பாடுகள் உள்ளன.

இச்சூழலிலே, தனிப்பட்டவர்களின் பதிவுகளிலே வரும் கருத்துவேறுபாடுகளையும் சண்டைகளையும் தொடர்ந்து அவதானித்து, வசை விழுமிடத்திலெல்லாம் ‘பிளீப்’ சத்தம் எழுத்திலே விழவைக்கும் வல்லமையும் பொழுதும் தமிழ்மணத்துக்கில்லை என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவில்லையென்பதோ அல்லது புரிந்து கொண்டும் அந்நிலையை விரும்பவில்லையென்பதோ அவர்கள் தரும் அஞ்சல்கள் ஊடாகவும் இடுகைகள் ஊடாகவும் தொடர்ந்து தெரிகின்றது. இவர்கள் எண்ணிக்கையிலே மிகச்சிலரே என்றானபோதுங்கூட, இவர்களுக்குத் தமிழ்மணவிளக்கமும் விலக்கமும் தருவதிலேயே எமக்குப் பாதி பொழுது கழிந்துவிடுகின்றது. குறைந்த பட்சம், வசையடங்கிய இடுகைகளையேனும் தமிழ்மணத்திலே சேர்க்கக்கூடாதென்ற தார்மீகநியாயம் இடுகின்றவர்களிடம் இருக்கவேண்டும்; அல்லது, சேர்க்கப்பட்டால், அப்படியான இடுகைகளைத் தமிழ்மணத்திலிருந்து விலக்கிவிடுவதால்மட்டும் அவ்விடுகைகள் அவ்விடுகைகள் இட்ட பதிவுகளிலிருந்து விலகிவிடுவதில்லை என்பதை ஏரண உய்த்தறிதல்மூலம் அறிந்தும், உணர்வளவிலே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களோடு பிணக்குற்றவர்களுக்கு இருக்கவேண்டும். இல்லாதவிடத்தே, குறைந்த பட்சம் ஆற்றாமையினாலே, நியாயம் துளியுமின்றி தமிழ்மணத்தினைத் தாக்காமலேனும் இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, எய்தவனும் அம்புங்கூடவிருக்க, இடைக்காற்றை நோக்கிச் சாடுவதாலே என்னத்தினைச் சாதித்துவிட்டீர்கள் எனறே கேட்கத் தோன்றுகின்றது.

முன்னமே குறிப்பிட்டதுபோல, டிஎம்ஐ நிறுவத்தினைச் சார்ந்தவர்களுக்கு, தத்தமளவிலே தனிப்பட்ட அரசியல், சமூகப்பார்வைகளுண்டு; ஆனால், தனி மனிதர்களுக்கு மனமும் உணர்வுமிருந்தாலுங்கூட, தொடர்பாடலை அதன் உச்சநிலையான “அனைவருக்கும் சுதந்திரக்கருத்தாடல்” என்ற குரலோடு இயக்க முயற்சிக்கும் தமிழ்மணத்தினை நடத்தும் நிறுவனம் அது சார்ந்த மனிதர்களின் தனிப்பட்ட குரலாக ஒலிக்கமுடியாது; ஒலிக்கவுமில்லை. தனிப்பட்ட பதிவுகளை அவற்றின் உள்ளடக்கம் காரணமாக, அது தமிழ்மணத்திலே பதிகின்ற வேறு பலரின் விருப்புகளுக்கு உகந்தவையல்ல என்பதாலோ, அல்லது ஏன் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகத்திலே இருப்பவர்களின் தனிப்பட்ட விருப்புகளுக்கு ஒவ்வாதவையென்றோ விலக்கிவிட முடியாது. அப்படி விருப்புவெறுப்புக்கேற்ப, சேர்த்துவிலக்குவதாயின், பெருவணிக அச்சூடகங்களும் செய்தித்தாபனங்களும் செயற்படுத்துகின்றதாக குற்றம் சாட்டப்படும் ஒளிப்புமறைப்பு வழிக்கு மாற்றான பாதையென நாம் சொல்லிக்கொள்ளும் இணையவூடகத்திலே எவ்விதமான அர்த்தமுமில்லை. அப்படியான நிலையிலே தமிழ்மணத்தினை டிஎம்ஐ நடத்துவதிலும் அர்த்தமில்லை. தத்தம் படைப்புகளும் கருத்துகளும் அவற்றின் உள்ளடக்கங்களுக்காக வாசிக்கப்படுகின்றன கேட்கப்படுகின்றன என்ற அங்கீகாரத்தினைத் தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் எந்த வகையிலும் எந்நிலையிலும் தர விரும்புகின்றோம்; இந்நோக்கு -, தமிழ்மணத்திலே திரட்டப்படும் இடுகைகளாகட்டும், தமிழ்மணம் நட்சத்திரமெனத் தேர்ந்தெடுக்கப்படும் பதிவராகட்டும், பூங்காவிலே வெளிவரும் கட்டுரைகளாகட்டும் - எல்லாவற்றிலும் ஆள்,கருத்து வித்தியாசமின்றித் தெறிக்க வைக்க இயலுமானவரை முயல்கிறோம். ஒரு பதிவு அல்லது இடுகை விலக்கப்படும்போதோ அல்லது ஒரு பதிவு சேர்க்கப்படமுடியாதபோதோ அதற்கான காரணங்களைத் திட்டமாக வெளிப்படுத்துகிறோம். மீண்டும் ஒரு பதிவு சேர்க்கப்படும்போது, அதற்கான காரணங்களைத் தெளிவாகச் சொல்கிறோம்.

நிச்சயமாக பூங்கா ஆசிரியர்குழுவின் “தொகுப்பாளரின் மேசையிலிருந்து” நடுநிலையாக இருக்கமுடியாது; ஒரு பத்திரிகையாசிரியர் தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்; அதேபோல, ஆசிரியர்குழுவும் அதற்கான ஒரு பொதுக்குரலினைக் கொண்டிருக்கலாம். அதனையும் அப்பத்திரிகையிலே திரட்டப்படும் படைப்புகளையும் வாசகர்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது. பார்வைக்கும் செய்திக்கும் (views Vs. news) என்ற அளவிலேயே காண முயற்சிக்கவேண்டும். தொகுப்பாளரின் மேசை, ஆசிரியர்குழாத்தின் பார்வை; இணைக்கப்படும் படைப்புகள், பூங்காவினைப் பொறுத்தமட்டிலே, செய்திகளும் பலரின் கருத்துப்பார்வைகளும். இதனைச் சில வாசகர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தவிர, வேறு செய்தித்தாபனங்களிலே வந்த படைப்புகளை அள்ளிப்போடுவதால் - ஒலி, ஒளிப்பதிவுகள் சிலவேளைகளிலே பூங்காவிலே சேமிக்கும் இட நிலை காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலுங்கூட - பூங்கா புதிதாக எதைச் சொல்லப்போகின்றது? இதனைச் சரியாகப் புரியாத நிலையிலே அல்லது அதனை விரும்பாத நிலையிலே தொடர்ந்தும் பூங்காவிடம் “ஏன் ‘அ’ வின் பதிவினைச் சேர்க்கவில்லை?” என்றோ அல்லது “‘ஆ’வின் பதிவினைச் சேர்த்தீர்கள்?” என்றோ கேட்பது பொருந்தாது. சில கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள் இருக்கின்றன, ஆனால் அவை பூங்காவிலே தோன்றவில்லை என்று தெரிந்தால், “ஏன்???!!” என்ற வினாக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மறைமுகமான குறிப்பிட்ட சிலரின் பதிவுகளிலேமட்டுமே தோன்றும் அநாமதேயத்தாக்குதலுக்கும் அப்பால், தயவு செய்து பூங்காவுக்கு உங்களின் எதிர்க்கருத்துகளைக் கட்டுரைகளாகப் பதிவு செய்து அனுப்புங்கள். தாராளமாகப் பூங்கா, அவை தரமுள்ளவையென்று தோன்றின், கருத்துவேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளும்.

இதுவரை நாள், இப்படியாக தமிழ்மணத்தின் நிர்வாகிக்கு வந்த முறையீடுகளிலே இயலுமானவரை எமது நிலைக்குப் பங்கம்வராது செயற்படவே முயற்சித்தோம்; பதில்களையும் நேரம், சக்தி என்பவற்றினையும் பொருட்படுத்தாது தந்தோம். ஆனால், இப்படியான எமது செயற்பாடு ஆக விழுமியத்தின் கடப்பாடேயன்றி, சட்டத்தின் விளைவான கடப்பாடல்ல என்பதையேனும் புரிந்துகொள்ள இவர்களிலே பெரும்பான்மையானோர் முயற்சிப்பதாகத் தெரியவில்லை.

சென்ற வாரம் வெளிப்படையாகவே முறையிடப்பட்ட இடுகைகளின் தலைப்புகளை - எந்நிலையிலும் முறையிட்டவர்கள் பெயர் சொல்லாது- வெளியிடுவோமென்று சொல்லி வெளியிடத் தொடங்கினோம். ஆனால், தொடர்ந்தும் இவற்றுக்கான எமது தமிழ்மணத்தின் விதிமுறையின் அடிப்படையிலான பதில்களின் பின்னால், தாக்குதல்கள் தமிழ்மணத்தின்மீதுதான் பதிவுகள் காரணமாக வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, இரண்டு காரணங்களின்படி இவை வந்திருக்கின்றன. இவை தனிப்பட தமிழ்மணத்தினைத் தாக்கி வந்திருப்பதாலும், சில பதிவர்கள் தமது பதிவிலே தமிழ்மணத்தின் பதிவினை வெளியிட்டிருப்பதாலும் வெளிப்படையாகவே இங்கே தமிழ்மணத்தின் மீது தனிப்படக் குற்றம் சாட்டி வந்த சில அஞ்சற்பரிமாற்றங்களைத் தரவிரும்புகின்றோம். இவை தமிழ்மணத்தின் நிலையினைப் பதிவர்களுக்கு அறியத் தரும் நேரத்திலே, தமிழ்மணம் எவ்வாறு முகக்கவசமாகவும் இடிதாங்கியாகவும் தன்மீது குற்றம் சாட்டுகின்றவர்களாலேயே தவறாகப் பயன்படுத்தப்படுகின்றதென பதிவர்கள் அறிய உதவும். இதன்மூலம் தமிழ்மணம் பதிவர்களிடமிருந்து கழிவிரக்கத்தையோ ஆறுதலஞ்சல்களையோ எதிர்பார்க்கவில்லை; ஆனால், புரிந்துகொள்ளும் பதிவர்களிடமிருந்தாவது எதிர்காலத்திலே பதிவுகள், பூங்கா தொடர்பாகப் பொறுப்புணர்வினை எதிர்பார்க்கலாமென்ற நம்பிக்கையிலேதான் தருகின்றது. ஆனால், எந்நிலையிலும், இயக்கி பதில் அளிக்காத இறுகிய இரும்புச்சுவர்போல பதிவர்களைச் சேர்ப்பதிலும் விலக்குவதிலும் தமிழ்மணம் ஈடுபடப்போவதில்லை. தமிழ்மணத்தின் செயற்பாடுகள் தமக்குப் பொருத்தமானவையல்ல என்றோ அல்லது தம் நலனை எதிரொலிக்கவில்லையென்ரோ விரும்புகின்றவர்கள் அவர்கள் திரட்டக் கேட்டுச் சேர்ந்ததுபோலவே, திரட்டியிலிருந்து விலக்கக்கேட்டு விலகிப் போகலாம். எடுப்பார்கைப்பிள்ளையாகவோ தெருவாடு குரங்காகவோ தமிழ்மணம் இழுத்தார் இழுப்புக்கெல்லாம் இழுபட்டுக்கொண்டிருக்க அதன் நோக்குகள் இடங்கொடுக்கா. அப்படியாகத் தமிழ்மணத்தினை நடத்துவதற்கு மாற்றாக, அதை மூடிவிட்டுப்போவது தமிழ்ச்சமுதாயத்துக்கு நெடுங்கால நோக்கிலே மிகவும் பயனாகவிருக்குமெனக் கருதுகிறோம். அவர்களின் நலன்களைத் தெறிக்க, தமிழ்மணம் எனும் சிறிய திரட்டி ஒருபோதும் தடையாகவோ அல்லது ஒரே வழிதானென்றோ நாம் ஒருபோதும் சொன்னதில்லை. எத்தனையோ திரட்டிகளும் முறைகளும் இணையத்திலே அவர்களின் நலன்களைத் தெளிவாகத் தெறிக்கக் கிடைக்கட்டுமென்றும் அதன்மூலம் அவர்களின் இலக்குகள் அடையப்படட்டுமென்று வாழ்த்தி விடை தருகிறோம்.

முதலாவது முறையீடு: ஈழம் தொடர்பான பதிவிலே, தமிழ்மணத்திலிருந்து அகரன் என்பவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மதியுரைஞர் பாலசிங்கம் மறைவு குறித்து வெளியிட்ட இடுகையை அகற்றும்படி பல முறையீடுகள் வந்திருந்தன. தமிழ்மணம் விதிகளின்படி அவ்விடுகை விலக்கப்பட முடியாதென்பதே தமிழ்மணத்தின் முடிவு. அதை இயலுமானவரை தெரியப்படுத்தியிருந்தோம். அதன்பின்னால், தமிழ்மணம் ஈழத்தமிழர்களுக்கெதிராகச் செயற்படுவதாகத் தமது இடுகையிலே அகரன் என்பவர் தெரிவித்திருந்தார். முரண்நகை என்னவெனில், கனக.ஸ்ரீதரன் என்பவரின் பதிவிலே அநாமதேயம் ஒருவர் தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு ஈழத்தவர்களுக்குமட்டுமே இடம் கொடுக்கின்றதென தெட்டத்தெளிவாகவே பட்டியலாகத் தெரியும் நட்சத்திரப்பதிவாளர்களின் பெயர்களை தனக்குத்தானே இருட்டடிப்புச் செய்து வெளியிட்ட அதே நேரத்திலே அகரன் இப்படியாகத் தெரிவிக்கின்றார். ஏற்கனவே பதிவர் ஓகையின் பின்னூட்டத்திலே ஈழத்தமிழர்களான இரு பதிவர்கள்தான் நடத்துகின்றார்களெனவும் ஈழப்பயங்கரவாதிகளின் திரட்டியெனவும் இந்திய எதிர்ப்புத்திரட்டியெனவும் மிகவும் பிழையானவையும் வேண்டுமென்றே தமிழ்மணம்மீதான உள்நோக்குடனான தாக்குதலாகவும் அநாமதேயம் ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். ஆரூரன் அநாவசியமாக பதிவுகள்வட்டத்தினையும் தாண்டி வேறிடங்களிலும் தன் பார்வையைத் தமிழ்மணத்தின் நோக்காகக் குழப்பிக்கொண்டு இட்டிருந்த இடுகை, “வெறுமனே உணர்வின் அடிப்படையிலே ஈழச்சார்பான திரட்டியாக மட்டுமே தமிழ்மணம் இயங்கவேண்டும்; அல்லாது, அகரன் போன்றவர்களின் கருத்துகளை வெளியிட்டால், அது தமிழ்மணம் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புத்திரட்டி எனவும் கருதப்படும்” என ஜனநாயகமறுப்பான பதிவினை வெளியிட்டிருந்தார். இதுகூட அநாமதேயப்பதிவாளர் ஒருவர் தமிழ்மணம் நடத்துகின்றவர்கள் இவர்கள்தான் எனக்கூறி, ஈழத்தைச் சார்ந்த ஈழத்தேசியத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவரை இந்த அறிவிப்பினை இங்கே எழுதுகின்ற திரட்டி நிர்வாகியாக அடையாளம் கண்டு எழுதியிருக்கும் நாளிலே நிகழ்ந்தது வேடிக்கையானது. யாருக்கும் தமிழ்மணத்தின் சார்பின்மை குறித்து நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லாதிருப்பினுங்கூட, இப்படியாக ஈழ ஆதரவுத்திரட்டி- ஈழ எதிர்ப்புத்திரட்டி, திராவிடத்திரட்டி-பார்ப்பனத்திரட்டி என்று மத்தளத்து இருபக்கத்தடிகளும் தமிழ்மணத்தின் திரட்டுநடுநிலையைப் புரிந்துகொள்ளும் திறனுள்ள பதிவர்களுக்கு அறியத்தந்திருக்கின்றதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், ஆங்கிலத்திலே மட்டும் இடுகை வந்ததால், அகரனின் பதிவு ஒன்றும் விலக்கப்பட்டது. அதுபோல, my friend என்பவரின் brain teasers, நளாயினி தாமரைச்செல்வனின் ஈழம் குறித்த டொச் இடுகைகளும் மொழி தமிழற்றதென்ற காரணத்தினாலே தமிழ்மணத்தின் விதிகளுக்கமைய விலக்கப்பட்டன.

இரண்டாவது முறையீடு: ‘விடாதுகருப்பு .எதிர். மாயவரத்தான்’ என்ற இருவரிடையேயான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகள், “திராவிடர். எதிர். பார்ப்பனர்” என்ற தனிக்குழும உணர்வுவேறுபாடுகளின் விளைவாக தொடர்ந்தும் இருசாராரினாலும் முறையின்றித் தமிழ்மணம் தொடர்ந்து தாக்கப்படுகின்றது. எந்தவொரு இடுகையோ பதிவோ நீக்கப்படும்போது, தமிழ்மணத்தின் நோக்கு, விதிமுறைகளுக்கு ஏற்பவே விலக்கப்படுகின்றன; ஆனால், தொடர்ந்து முழுப்பொழுதும் பதிவுகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் நேரம், வசதி, வல்லமை தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இல்லாததினாலே, பதிவர்களின் முக்கோணத்தினை அழுத்திய சுட்டிக்காட்டல்கள் இலகுவாக பதிவர்களின் நாளநாடிகளூடாக எல்லைமீறியதெனக் கருதப்படும் பதிவுகளை அடையாளம் கண்டுகொள்ள உதவி செய்கின்றன. அப்படியாக முறையிடப்பட்ட இடுகைகளைப் பார்வையிட்டு, விதிமுறை காரணமாகமட்டும் அவசியமெனக் கருதினால், அவ்விடுகைகளோ, தொடர்ந்தும் அப்பதிவுகள் அப்போக்கிலேயே செயற்பட்டால், பதிவுகளோ அறிவிப்போடு அகற்றப்படுகின்றன. தமிழ்மணத்திலே சேரும்போது, ஒரு தொடர்பு முகவரி தந்திருந்தால், அது மாறும்போது - அதாவது, பதிவர் அதை மாற்றும்போது - தமிழ்மண நிர்வாகத்துக்கு முறையாக அறியத் தரவேண்டியது பதிவர்களின் பொறுப்பாகும்; தமிழ்மணநிர்வாகிகள் நாளும் எப்பதிவரது முகவரி எதுவெனத் தேடிக் கண்டுகொண்டிருப்பது, 900 பதிவுகளிடையே - தமிழ்மணம் திரட்டியினையே நா. கண்ணன், தேவ், ஜி, இராகவன் என்று அறிந்த பதிவர்களின் பெயர்களிலே தமிழ்மணத்திலே சேர்த்துக் கொள்ளும்படி வாரத்துக்கு ஒரு முறையேனும் குளறுபடியினை அநாமதேயர்கள் செய்யும் வேளையிலே, இடுகைகளின் வகையினை மாற்றும்படி, மறுமொழி திரட்டுவதைச் சேர்க்கும்படி வேண்டுகோள்கள் வரும் பொழுதிலே - முற்றிலும் சாத்தியமில்லை. இதன் காரணமாக தமிழ்மணத்தின் முன்னறிவிப்புகள் பதிவர்களுக்குச் சென்று சேராவிட்டால், அதற்குத் தமிழ்மணம் பொறுப்பாகதென அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரம்பத்திலே, ராதா ராகவன் என்ற பதிவர் ராகவன் நரசிம்மன் என்ற பதிவரின் மீதான தாக்குதலின் பின்னாலும், ராபின்ஹூட் என்ற பதிவர் மூர்த்தி என்ற தமிழ்மணத்திலே திரட்டப்படாத பதிவரின்மீதான தாக்குதலின் பின்னாலும் (தமிழ்மணத்திற்கு மூர்த்தியின் தொடர்ச்சியான முறையீடுகளின் பின்னால், அறிந்து கொண்டு ராபிஹூட்டுக்கு அறிவுறுத்தியபின்னாலும்) விலக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், திரு. நரசிம்மன் ராகவன் தனது பதிவிலே தான் சுட்டிக்காட்டியதாலேதான் ராதா ராகவன் பதிவு விலத்தப்பட்டது என்றெழுதியது, அவரின் கேட்டுக்கொண்டதாலேமட்டுமே தமிழ்மணம் அப்பதிவினை விலக்கியதென்ற தவறான அபிப்பிராயத்தைச் சில பதிவர்களிடம் ஏற்படுத்திவிட்டதோ என்று எண்ணுவதால், அப்பதிவு அவரின் முறையீட்டுக்கு முன்னரே தமிழ்மணத்தினாலே நீக்கப்பட்டுவிட்டதென்பதை இவ்விடத்திலே சுட்டவிரும்புகிறோம். விடாது கருப்புவின் பதிவிலான பின்னூட்டங்கள் காரணமான தொடர்ச்சியான முறையீட்டின் பின்னால், அவருக்கு அவர் தந்திருந்த முகவரிக்கு ஐந்து தடவைகள் முன்னெச்சரிக்கை அறியத்தந்திருந்தபின்னால் அப்பதிவு விலக்கப்பட்டது. இதே தருணத்திலே, சர்வாண்டிஸ் போன்றோரின் பதிவிலேயும் ஓகை போன்றோரின் பதிவுகளிலேயேயும் தமிழ்மணம் குறித்த தவறானதும் அவதூறானதும் ஆதாரமற்றதுமான கருத்துகள் உள்ளிட்ட பின்னூட்டங்களை விலத்திக்கொள்ளக் கேட்டு, அவர்கள் விலத்திக்கொண்டிருக்கின்றார்கள். சர்வாண்டிசின் இடுகை ஒன்றும் ஏற்கனவே விலக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக, தமிழ்மணத்தினை விடாது கருப்புவின் செயல் சரியெனக் கருதியவர்கள் குற்றம் சாட்டியதை விடாது கருப்பு விலக்கல் குறித்த அறிவிப்பு இடுகையொன்றிலே பதிவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். அவரது விலக்கல் குறித்து மகிழ்ச்சியுற்றவர்கள், “எது நடக்குமோ அது நடந்தே தீரும்” என்று எரிகின்ற கொள்ளியிலே எண்ணெய் ஊற்றியதும் தமிழ்மணத்தின் மீதான தாக்குதலிலேயே முடிவடைந்ததும் தமிழ்மணம் பார்ப்பனத்திரட்டி எனப்பட்டதும் அவ்வேளையிலேயே. இதன் பின்னால், மிகவும் விபரமாக, விடாதுகருப்புவின் பதிவு குரல் மாறினால், மீண்டும் சேர்க்கப்படுவதிலே எமக்கேதும் ஆட்சேபணையில்லையெனவும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து எமக்கேதும் தனிப்பட்ட கருத்துகள் முன்னர்போலவும் அவர் குறித்து முறையிடுகின்றவர்களின் பதிவு உள்ளடக்கங்கள்போலவும் தமிழ்மணத்துக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தோம். (இடையிலே விட்டது சிகப்பு உட்பட சில பதிவர்களின் இடுகைகளையும் விலக்கியிருந்தோம்) அது தொடர்பான பின்னான, அவருடனான தொடர்பாடல்களிலே சிலவற்றினை அவர் தன் பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். பின்னர், அவர் தன் பதிவிலே வெளியிடாடாத அஞ்சற்றொடர்பாடலிலே தான் இனி விடாதுகருப்பினை நடத்தப்போவதில்லையெனவும் மகேந்திரன் என்பவரே நடத்தப்போகின்றாரெனவும் கூறியபின்னால், முன்னரே சுட்டியிருந்த நிபந்தனைகளின்படி அவரது பதிவு சேர்க்கப்பட்டது. இது குறித்து இதற்கு முன்னைய பதிவிலே அறியத் தந்திருந்தோம். (விடாது கருப்பினை விலக்கியது, மீண்டும் சேர்த்துக் கொள்வது, கொண்டது குறித்த மாயவரத்தானின் “பதிவு விலக்கம்” அறிவிப்புக்கான பின்னூட்டமும் அஞ்சல்களும் இன்னமும் வெளியிடப்படாமலே இருக்கின்றன என்பதையும் இங்கே அறியத் தர விரும்புகிறோம். அவற்றினை மாயவரத்தானே வெளியிடாவரைக்கும் வெளியிட எமது தார்மீக நியாயம் இடம் கொடுக்வில்லை)

தொடர்ந்தும் இரு குழுவினரும் (குறிப்பாக, மாயவரத்தான் & விடாது கருப்பு பதிவாளர்) தமிழ்மணத்தின்மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் தமிழ்மணத்தின் சகிப்பு எல்லையை மீறிப் போவதாக உணர்கிறோம். விடாது கருப்புவின் காமலோகம் என்ற இடுகையும் (இது குறித்து மாயவரத்தான் உட்பட சில பதிவர்களும்) மாயவரத்தானின் ஆத்மநாதன் என்ற இடுகையும் (இது குறித்து மூர்த்தி உட்பட சில பதிவர்களும்) முழுக்கவே தனிமனிதத்தாக்குதலாகவே எம் விதிமுறைகளின்படியும் இருந்ததால், விலக்கினோம். இவ்விலக்கங்களின் போதான மாயவரத்தானின் தமிழ்மணம் நிர்வாகிக்கான அஞ்சலையும் வேறு சில பதிவர்களின் அஞ்சல்களையும் இங்கே எமது நிலையினையும் எம் மீதான தாக்குதல்களின் வகைகளையும் அறியத் தரும்பொருட்டு தருகின்றோம்.

மாயவரத்தானுடனான தொடர்பாடல்:

On 12/23/06, Mayavarathaan wrote:
Just now got this mail.
What the hell u r talking? U r the guys who don’t have guts to remove that vidathu karuppu idiot’s post. Once u removed him and as soon as he started putting ur pictures in his special aapu’s blog, u’ve again started aggregating his vidathu karuppu blog.
Did I write or allow any indecent comments in my blog on anybody? How come you can compare me with him?
Better close down thamizmanam aggregation service rather collection lot of posts nowadays blamming brahmins. If somebody will started writing about u people and about ur parents in the same way karuppu did in his blogs, then only u fools will know this pain.
Go to hell.
- Mayavarathaan…
On 12/22/06, postadmin thamizmanam wrote:
hello
Basically we are sick and tired of people like vittathu karuppu and mayavarathan and your posts. Why on earth are you bugging us? Are we the ones posting in each and everyone’s blog? Why don’t you go and fight with him directly rather than strangling our necks.

This becomes irritating in times.

Last, and also the least concerned news for you: for your information, this post by mayavaraththaan and similar post by vittathu karuppu were already removed.

On 12/22/06,Mayavarathaan wrote:
இடுகை விபரம்:
தலைப்பு:காமலோக பார்ப்பன மாய யாவாரம்!

வலைப்பதிவர்:விடாதுகருப்பு

வகை:பதிவர் வட்டம்

தகவல்:
u need the reasons?! :)

நன்றி,
mayavarathaan


புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்

புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்

=====================
On 12/23/06, Mayavarathaan wrote:
Thanks.

Plz. remove my blog from thamizmanam aggregating.

Also I dont want to show up my blog name in thamzmanam in anyway
showing that ‘comments are not aggregated’ like that.

Tks,

Mayavarathaan…

___________________________________________________________


புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்
=============================================
வேறொரு பதிவரின் தொடர்பாடல்:
On 12/22/06, postadmin thamizmanam wrote:
Dear Friend,
Basically we are sick and tired of people like vittathu karuppu and mayavarathan, and their posts. Why on earth are you bugging us? Are we the ones posting in each and everyone’s blog? Why don’t you go and fight with him directly rather than strangling our necks. After all, viddathu karuppu posted similar kamalogam post. You haven’t complained about it to us. Mayavarathaan complained about vittathu karuppu’s post, but zilch about his post.

This situation becomes irritating in times. Why on earth we have to spend hours sitting in front of monitor running thamizmaNam as a service!! What on earth we achieved on the expense of our time and energy!!

What on earth are you expecting us to do? You and your friends are complaining about mayavaraththaan & Co to us, and mayavaraththaan & friends are complaining about you & Co to us. We are JUST running a simple aggregator. As an internet user we hope you know what it means by “aggregator.” We can not be the bufferzone for both sides by taking blows of proxy wars.

Last, and also the least concerned news for you: for your information, this post by mayavaraththaan and similar post by vittathu karuppu were already removed.

On 12/21/06, ||A blogger whose name got removed|| wrote:
Dear Thamizmanam,

I have a great doubt on Tamizmanam’s political ( correct or incorrect) side of recent times.

http://mayavarathaan.blogspot.com/2006/12/409.html

chk. out this blog and decide yourself.
I dont care whoever that moorthy is or was…I dont give a damn f*** about what he writes. But do u tolerate this particular blogger’s(maayavaraththaan) actions which is been aggregated by Thamizmanam.
This is not the first time its been happening. And I was damn tired about it on reporting everytime.

I do understand that you must have lot of other works but nvm you are

And ofcourse the importance and the respect u give to ravisrinivas or mayavarathaan or dondu is astonishing compared to that of others.(I have seen it from your moderation for Thamizmanam arivippugal & Poonga blog)

Keep up your good work.

PS:
the word “POLITICAL” mentioned is not exactly about your own politics. But its from my point of view.

===========================================
மூர்த்தியின் தொடர்பாடல்:

On 12/22/06, Moorthi M wrote:
>
>
>
>
> On 12/23/06, Moorthi M wrote:
> >
> > அன்புள்ள தமிழ்மணம்,
> >
> > http://mayavarathaan.blogspot.com/2006/12/409.html
> >
> > என்ற பதிவில் மாயவரத்தான் என்ற ரமேஷ் எனது பெயரின் நற்புகழுக்கு களங்கம் கற்பிக்குமாறு பதிவிலும் பின்னூட்டங்களிலும் ஆபாசங்களாக எழுதி உள்ளான். இன்னமும் நீங்கள் அவனை திரட்டியில் இருந்து நீக்காமல் இருக்கிறீர்கள். உங்களின் எண்ணத்தினை அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள் கடிதம் கண்டதும் அடுத்ததாக சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
> >
> > —
> > With Love,
> > Moorthi.

>
>
>
> —
> With Love,
> Moorthi.


புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்
=======================================================

விடாது கருப்புவுக்கோ வெட்டிவேலை ஆப்புக்கோ மாயவரத்தானுக்கோ அநாமதேயங்களுக்கோ அவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாகப் பயந்து கொண்டு ஓடும் உளப்பாங்குள்ளவர்களென்றால், இப்படியான சூழலையும் எதிர்பார்த்த நாம் தமிழ்மணத்தினை ஒரு சேவையென எம் நேரத்தையும் சக்தியையும் பொருளையும் வீணாக்கி நடத்த முன்வந்திருக்கமாட்டோம். இது பற்றி மாயவரத்தானோ அவருக்கு அடுத்த அஞ்சலையிட்ட பதிவரோ அறியாதிருக்கமுடியாதென நம்புகிறோம். தனிப்பட்ட ஆளாக, இத்தகு/காத் தாக்குதலுக்குப் பதிலான தாக்குதலாக அஞ்சல் அனுப்புவது இலகு. ஆனால், ஒரு பொறுப்பான திரட்டி நிர்வாகமாக தமிழ்மணம் நிர்வாகம் அப்படியாகச் செய்யாதென்ற நம்பிக்கையிலேயே இப்படியான தாக்குதல் அஞ்சல்கள் வருகின்றன. அப்படியான நம்பிக்கையைத் தமிழ்மணத்திலே வைத்திருக்கும் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். தமிழ்மணத்தினை நடவடிக்கை எடுக்காமல், தானே சரியான முடிவினைப் புரிந்து கொண்டு எடுத்துக்கொண்ட மாயவரத்தானுக்குத் தமிழ்மணம் நன்றி தெரிவிக்கும் அதேவேளையிலே, தனிப்பட்டவர்களின் பதிவிலே தோன்றும் பின்னூட்டங்களினை நீக்கும் வல்லமை தமிழ்மணத்துக்கு இல்லை, ஆனால், அப்பின்னூட்டங்கள் தமிழ்மணம் விதிகளுக்கு முரணாகவிருப்பின் நிச்சயமாக அவ்விடுகைகள் நீக்கப்படுமென அறியத் தருகிறோம். ஆனால், உள்ளடக்கமின்றி, கணியமுகவரிகளை அறியவரும் அஞ்சல்களின் பிறப்பிடங்களையும் ஒரே இணையமுகவரியோடு வரும் பதிவுகளை ஓரளவுக்கு ஒத்துப்பார்க்கும் வல்லமையையும் தமிழ்மணம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் கைவரப் பெறச் சாத்தியமிருப்பதால், அநாமதேய இருப்பு தரும் பல சிக்கல்களை வருமாண்டிலே தீர்த்துக்கொள்வோம் என நம்புகிறோம்.

விடாது கருப்பு பதிவினை இப்போது நடத்துகிறவரோ இன்னும் வேறெந்த பதிவரோ தொடர்ந்தும் இப்படியான காமலோகம் போன்றும் மற்றவரைச் சீண்டும் பதிவுகளையோ விடாப்பிடியான வில்லங்கமான இடுகைகளையோ எழுதுவது அவரவர் விருப்பம். ஆனால், அப்படியான இடுகைகளைத் தமிழ்மணத்திலே பதிவு பட்டைமூலம் இணைக்கவேண்டாமென அன்புடன் தமிழ்மணம் கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்தும், அவ்வாறான எல்லைமீறும் இடுகைகளை இணைக்கும்வேளையிலே, தமிழ்மணம் இடுகைகளையோ பதிவுகளையோ விலக்குமென மீண்டுமொரு முறையும் இறுதியாகவும் வலியுறுத்திச் சொல்கிறது.

மாயவரத்தான் கட்டளையிட்டபடி நரகத்துக்குப் போகத் தமிழ்மணம் முற்றாக மறுக்கும் அதேநேரத்திலே, அவர் சொர்க்கத்துக்கு வழிதவறாமற் போய்ச்சேர தனது விழைவினை இச்சந்தர்ப்பத்திலே தெரிவிக்கின்றது. விரும்பும் நேரத்திலே, விடாது கருப்பு மீண்டும் இணைந்து கொண்டதுபோல தமிழ்மணம் திரட்டியிலே அவர் சேர்ந்து கொள்ள விரும்பினால், அவருக்குத் தமிழ்மணத்தின் வாசல் அதன் விதிமுறைகளோடு திறந்தேயிருக்கின்றது. அவரைப் போலவே, தமிழ்மணத்தின் செயற்பாடுகளினை ஒத்துக்கொள்ளமுடியாத பதிவர்கள் தம்மை விலத்திக்கொண்டு தம் நோக்குகளுக்குப் பொருந்துமிடங்களிலே இணைந்துகொள்வது அவர்களுக்கும் தமிழ்மணத்துக்கும் பெருநன்மையினைத் தரும். இணைந்திருக்கும் பதிவர்களின் எண்ணிக்கையைவிட, பதிவுகளின் தரமும் பதிவர்களின் செயற்பாடுகளுமே தமிழிணையத்துக்கும் தமிழ்மணத்துக்கும் பயனாகவிருக்குமென நம்புகிறோம்.

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் சார்பாக புத்தாண்டு அனைவருக்கும் இனிதாக இருக்கட்டும் என, தமிழ்மணம் வாழ்த்தினைத் தெரிவிக்கின்றது

திரட்டி நிர்வாகம்
தமிழ்மணம்

  1. 34 Responses to “தமிழ்மணத்தின் தலையீடின்மையும் தலையிடியும்”

  2. அடேங்கப்பா, எவ்வள்வு கடினமான வேலை.

    உங்கள் பணி தொடர வேண்டும்.

    பதிவர்கள் குழு அமைத்து திரட்டிகளை சண்டைக்கிழுப்பதை எப்படி எதிர்கொள்வது, திறம்பட செயல்படுவது எப்படி, போன்றவற்றிற்காக திரட்டிகள் குழு அமைக்கவேண்டும், தமிழ்மணம், தேன்கூடு, மரத்தடி, அப்புறம் என்னுடைய தளமும்….(ஹிஹி)

    புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

    மாஹிர்

    By mahir on Dec 23, 2006

  3. தமிழ் மணம் aggregator என்ற நிலையில் இருந்து கொண்டு பார்க்கும்போது, இத்தகைய விளக்கங்கள் எல்லாம் தேவை இல்லாததே.

    900 பதிவர்கள் இருக்கும் பொழுது இத்தகைய ‘கண்காணிப்பு’ செய்யலாம். 90000 ஆகும்போது கடினமாகும்.

    ஆகவே, you have to think about building a small ’system’ to flag ‘incorrect’ blogs.

    Aggregate everyone, but let the readers ‘flag’ an article for ‘incorrect’ contents.
    The more the flagging, you can add a message/icon in front of the article name, indicating the ‘bad’ content.

    If they score lot of ‘bad’ flags, you can stop aggregating the comments going forward.

    எல்லா பதிவர்களையும்/வாசகர்களையும் ஒரு ஆரோக்ய சூழல் உருவாக பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழில் பதிவிடுவது நமக்கு கிடைத்த ஒரு நல்ல ஆயுதம். அதை தவறான வழியில் உபயோகித்து வீணாக்காமல், உபயோகமான முறையில் அனைவரும் பயன் பெறுமாறு செய்தல் வேண்டும்.

    நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறியாமல் இருக்கலாமே…

    எட்டு வயது சிறுவன்/சிறுமி முதல், 80 வயது முதியவர்கள் வரை புழங்கும் இடம் இது. so, act responsibly!

    Think!!! Please!

    By BadNewsIndia on Dec 23, 2006

  4. தமிழ் மணம் aggregator என்ற நிலையில் இருந்து கொண்டு பார்க்கும்போது, இத்தகைய விளக்கங்கள் எல்லாம் தேவை இல்லாததே.

    900 பதிவர்கள் இருக்கும் பொழுது இத்தகைய ‘கண்காணிப்பு’ செய்யலாம். 90000 ஆகும்போது கடினமாகும்.

    ஆகவே, you have to think about building a small ’system’ to flag ‘incorrect’ blogs.

    Aggregate everyone, but let the readers ‘flag’ an article for ‘incorrect’ contents.
    The more the flagging, you can add a message/icon in front of the article name, indicating the ‘bad’ content.

    If they score lot of ‘bad’ flags, you can stop aggregating the comments going forward.

    எல்லா பதிவர்களையும்/வாசகர்களையும் ஒரு ஆரோக்ய சூழல் உருவாக பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழில் பதிவிடுவது நமக்கு கிடைத்த ஒரு நல்ல ஆயுதம். அதை தவறான வழியில் உபயோகித்து வீணாக்காமல், உபயோகமான முறையில் அனைவரும் பயன் பெறுமாறு செய்தல் வேண்டும்.

    நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறியாமல் இருக்கலாமே…

    எட்டு வயது சிறுவன்/சிறுமி முதல், 80 வயது முதியவர்கள் வரை புழங்கும் இடம் இது. so, act responsibly!

    Think!!! Please!

    By test on Dec 23, 2006

  5. பதிவர்கள் தாங்களாகவே தங்கள் குறிப்பிட்ட இடுகையொன்றை தமிழ்மணத்தின் விதிகளுக்கு முரணானது, தமிழ்மணத்தின் விதிகளின்படி நீக்கப் படக்கூடும் எனக் கருதும் இடுகையை மட்டும் தமிழ்மணத்தில் இணைக்காதிருக்க வகை செய்யலாம். இப்போதைய முறைப்படி கருவிப்பட்டயை அழுத்தி ஒருவர் தன் இடுகையை தமிழ்மணத்தில் சேர்க்காவிட்டால் கூட இன்னொருவர் அந்தக் கருவிப்பட்டயை அழுத்தி அதை தமிழ்மணத்தில் இணைக்கக்கூடும். எனவே கருவிப்பட்டையை இதற்கேற்ப மேம்படுத்த முயற்சிக்கலாம்

    By சிந்தாநதி on Dec 23, 2006

  6. என்னமோ போங்க தமிழ் மணத்தை நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள் அதை கண்டு ஆரம்பத்திலே தடுத்து நிறுத்தாவிடில் நல்லதல்ல அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும் இதற்குகூட சில அசிங்கமான மின்னஞ்சல் வரும்

    By என்னார் on Dec 23, 2006

  7. திரட்டப்படும் பதிவின் கருத்துகளை எல்லாம் படிப்பதும், தன் நிலைப்பாட்டிற்கு ஏற்ற பதிவுகளை மட்டுமே திரட்டுவதும் எந்தவொரு தானியங்கி திரட்டிக்கும் சாத்தியமில்லை என்ற புரிதல் எல்லா பதிவருக்கும் வருதல் அவசியம்.

    துவேஷத்தைக்காட்டும் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்டாலும் அடுத்த நொடியில் வேறு பெயரில் உள்ளே நுழையமுடியும், அதே துவேஷத்தை மறுபடி கண்டுபிடிக்கப்படும்வரை காட்ட முடியும், பிளாக்கரின் சேவை இலவசமாக இருக்கும்வரை 100 என்ன ஆயிரம் என்ன என்று பதிவுகளால் ரொப்ப முடியும் என்ற நிலை நிலவும்போது..

    அவர்களாகத் திருந்தாத வரை இதற்கு விடிவில்லை. இதற்கு திரட்டியை திட்டுவது என்பது புரிதல் குறைபாடே அன்றி வேறில்லை.

    சிந்தாநதி கூறும் கருவிப்பட்டை மாற்றத்தை நானும் பரிந்துரைக்கிறேன், இன்னும் ஒரு காரணத்துக்காக. பீட்டா மற்றும் வேறு சில காரணங்களால் சோதனைப்பதிவிடும் பதிவர்கள் அப்பதிவை தமிழ்மணம் திரட்டாமலிருக்க வகை செய்யமுடியவேண்டும்.

    நன்றி.

    By சுரேஷ் பினாத்தல் on Dec 23, 2006

  8. //ஆகவே, you have to think about building a small ’system’ to flag ‘incorrect’ blogs.

    Aggregate everyone, but let the readers ‘flag’ an article for ‘incorrect’ contents.
    The more the flagging, you can add a message/icon in front of the article name, indicating the ‘bad’ content.

    If they score lot of ‘bad’ flags, you can stop aggregating the comments going forward.
    //

    BNI, இது வேலைக்காகும் வழியாகத் தோன்றவில்லை.. உங்களுக்குத் தமிழ்மணம் பரிந்துரைகள், கருவிப் பட்டி, அதிலுள்ள +, - குத்துகளும் பற்றித் தெரியுமா?

    பிடிக்காத பதிவுகளுக்கு நேரம் செலவழித்து - குத்தும் அன்பர்கள் இருக்கிறார்கள் இங்கே… :(

    இப்போது செய்து கொண்டிருக்கும் வழி தான் சரியானதாகத் தோன்றுகிறது..

    By பொன்ஸ் on Dec 23, 2006

  9. சுரேஷ் கூறுவது சரியே. சில காரணங்களால் சோதனைப்பதிவு மற்றும் சில பதிவுகள் இடும்போது இதைப் படிக்க வேண்டாம் என்று சிலர் இடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தப் பதிவுகளும் திரட்டியில் வந்து கொண்டே தான் இருக்கின்றன. எனவே பதிவர் தானே சேர்க்கை அல்லது நீக்கத்தை முடிவு செய்ய முடிய வேண்டும். சில காரணங்களால் சிலருக்காக மட்டும் சிலரால் எழுதப்படும் பதிவுகளும் பொதுத்திரட்டியில் வராமல் அவர்களாகவே தடுக்க வகை செய்யலாம். இதனால் மிகப்பெரிய பயன் இருக்காதெனினும் சிலருக்காவது பயன் தரும்.

    By சிந்தாநதி on Dec 23, 2006

  10. தமிழ்மணம் நிர்வாகத்துக்கு,

    இன்றைக்கு பதிவுலகத்தில் தமிழ்மணம் செய்து வரும் பணி மிகவும் குறிப்பிடத் தகுந்ததும் பாராட்டத் தக்கதுமாகும்.அதற்காக என் முதற்கண் நன்றிகள்!

    வேறு திரட்டிகளோடு என் அனுபவம் என்னவெனில் - தங்களுக்கு மாறான அரசியல் கருத்துக் கொண்ட பதிவுகள் சத்தமில்லாமலும் எந்த வித அறிவிப்புமில்லாமலும் விலக்கப் பட்டு விடும். இங்கே நான் அந்தத் திரட்டியின் பெயரைத் தர விரும்பவில்லையென்றாலும் வாசகர்களுக்கு நான் யாரை குறிப்பிடுகிறேன் எனப் புரியும் என்று கருதுகிறேன். இவ்விஷயத்தில் தமிழ்மணத்தின் செயல்பாடு மிகவும் பாராட்டத் தகுந்ததும் போற்றத் தகுந்ததும் ஆகும். அரசியல் நடுநிலை என்கிற ஒரு விஷயம் மனிதர்களுக்குச் சாத்தியமே இல்லை - ஏதோவொரு வகை அரசியல் கருத்து ஒவ்வொருவருக்கும் இருந்தே தீரும் - எனில் திரட்டியின் செயல்பாட்டை தற்போதுள்ள படி Aggregatting Engine இடம் விட்டு வைப்பதே சிறந்தது. இந்தவிடத்தில் இதனைப் புரிந்து கொள்ள முடியாத பதிவர்களின் அறிவுக் குறைபாட்டை கண்டு நகைக்கத் தான் வேண்டுமே ஒழிய இப்படி சிரமப்பட்டு நேரம் செலவழித்து விளக்கம் தர வேண்டிய அவசியமே இல்லை.

    பூங்காவைப் பொருத்தமட்டில் ஆசிரியர் குழுவுக்கு எந்தவித அரசியல் கண்ணோட்டமும் இருக்கக் கூடாது என்று சொல்ல எவருக்குமே உரிமை கிடையாது.

    மற்றபடி உங்கள் நிலைக்கு என் ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது போன்ற சின்ன விஷயங்களில் உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் நிம்மதியையும் வீணாக்காமல், தொடர்ந்து இனைய தமிழ் உலகுக்கு நீங்கள் செய்து வரும் சேவையை தொடருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    நன்றி
    ராஜாவனஜ்
    rajavanaj@gmail.com

    By RajaVanaj on Dec 24, 2006

  11. //பிடிக்காத பதிவுகளுக்கு நேரம் செலவழித்து - குத்தும் அன்பர்கள் இருக்கிறார்கள் இங்கே…//

    கண்டிப்பாக இருப்பார்கள். கள்ள ஓட்டளிக்க நம் சிங்கங்களுக்கு சொல்லியா தரவேண்டும்.

    நான் சொல்லும், ‘flagging’ அவ்வளவு சுலபத்தில் mis-use பண்ண முடியாதபடி செய்யலாம்.

    We are all here as a ‘community’. Another option is to pick 50 or 100 moderators from various groups who have ‘reasonable’ moderate views. They can ‘flag’ articles with objectionable content and based on % of + or - flags, Tamizmanam can ‘color code’ a certain article.

    well, there are ways to do some minimum control.
    Leaving it ‘open’ is not an option when we have people around us who lack basic discipline. Shame on them!

    By BadNewsIndia on Dec 24, 2006

  12. Dont waste your energy in the discussions. you simply put a disclaimer that it is only an aggregator and let them fight! No need to ban them. My simple suggestion is try to restrict anonys posing them as bloggers unless their content is sensitive! say politics. I too write antibrahministic posts but not on any single person or blogger. any how tuff job! do it with some ease! Happy 2007!

    அன்புடன்
    இணைய நாடோடி ‘ஓசை செல்லா”

    By இணைய நாடோடி on Dec 24, 2006

  13. என்னுடைய இடுகைகளின் மறுமொழிகள் தமிழ்மணத்தால் திரட்டப் படுவதில்லை.ஆவன செய்ய விழைகிறேன்.ந்ன்றி.

    By கண்மணி on Dec 24, 2006

  14. the comments on my posts are not yet being collected and published by tamizmanam.plz help me in this aspect.thank u

    By கௌசி on Dec 24, 2006

  15. போலி யார் என்று தமிழ் மணத்துக்கு தெரியாதா? திரு காசி அவர்கள் நேர்மையாக எடுத்த முடிவுக்காக அவரை போலி கேவல்மாக எழுதினான்.
    அதே நிலை தனக்கு வரகூடாது என்று முற்போக்காக செயல்படுவது போலத்தான் இருக்கிறது இந்த அறிவிப்பு.

    By சொல்லி தான் ஆகனுமா? on Dec 24, 2006

  16. //தமிழ்மணம் ஈழத்தமிழர்களுக்கெதிராகச் செயற்படுவதாகத் தமது இடுகையிலே ஆழியூரான் என்பவர் தெரிவித்திருந்தார். முரண்நகை என்னவெனில், கனக.ஸ்ரீதரன் என்பவரின் பதிவிலே அநாமதேயம் ஒருவர் தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு ஈழத்தவர்களுக்குமட்டுமே இடம் கொடுக்கின்றதென தெட்டத்தெளிவாகவே பட்டியலாகத் தெரியும் நட்சத்திரப்பதிவாளர்களின் பெயர்களை தனக்குத்தானே இருட்டடிப்புச் செய்து வெளியிட்ட அதே நேரத்திலே ஆழியூரான் இப்படியாகத் தெரிவிக்கின்றார். ஏற்கனவே பதிவர் ஓகையின் பின்னூட்டத்திலே ஈழத்தமிழர்களான இரு பதிவர்கள்தான் நடத்துகின்றார்களெனவும் ஈழப்பயங்கரவாதிகளின் திரட்டியெனவும் இந்திய எதிர்ப்புத்திரட்டியெனவும் மிகவும் பிழையானவையும் வேண்டுமென்றே தமிழ்மணம்மீதான உள்நோக்குடனான தாக்குதலாகவும் அநாமதேயம் ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். ஆழியூரான் அநாவசியமாக பதிவுகள்வட்டத்தினையும் தாண்டி வேறிடங்களிலும் தன் பார்வையைத் தமிழ்மணத்தின் நோக்காகக் குழப்பிக்கொண்டு இட்டிருந்த இடுகை, “வெறுமனே உணர்வின் அடிப்படையிலே ஈழச்சார்பான திரட்டியாக மட்டுமே தமிழ்மணம் இயங்கவேண்டும்; அல்லாது, அகரன் போன்றவர்களின் கருத்துகளை வெளியிட்டால், அது தமிழ்மணம் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புத்திரட்டி எனவும் கருதப்படும்” என ஜனநாயகமறுப்பான பதிவினை வெளியிட்டிருந்தார். இதுகூட அநாமதேயப்பதிவாளர் ஒருவர் தமிழ்மணம் நடத்துகின்றவர்கள் இவர்கள்தான் எனக்கூறி, ஈழத்தைச் சார்ந்த ஈழத்தேசியத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவரை இந்த அறிவிப்பினை இங்கே எழுதுகின்ற திரட்டி நிர்வாகியாக அடையாளம் கண்டு எழுதியிருக்கும் நாளிலே நிகழ்ந்தது வேடிக்கையானது//

    தமிழ்மணம் நிர்வாகத்துக்கு வணக்கம்.நான் சொன்னதாக நில கருத்துகளை இங்கு வெளியிட்டிருக்கிறீர்கள்.இவ்வாறான எந்த கருத்தையும் எனது பதிவிலோ,மற்றவரின் பதிவில் பின்னூட்டமாகவோ நான் சொல்லவில்லை என்பதை தங்களுக்கு தெரியபடுத்திக் கொள்கிறேன்.அநேகமாக பெயர் குழப்பத்தின் காரணமாக இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம்.இருந்தாலும் என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்பு அதுவும் எனது இடுகையிலே ஒரு கருத்து சொல்லப்பட்டிருப்பதாக எழுதுவதற்கு முன்பாவது நான் அவ்வாறு எழுதினேனே இல்லையா என்று ஒரு முறை சோதித்திருக்கலாம்.

    ஒரு திரட்டி என்ற முறையில் தன் நிலையை விரிவாக விளக்க தமிழ்மணம் தலைப்படும்போது இதுமாதிரியான சிறு தவறுகள் நிகழ்வது இயல்பானதே என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.இருந்தாலும் இதுபற்றிய தமிழ்மணத்தின் கருத்தரிய ஆவலாக உள்ளேன்.

    =====
    பதிவர் ஆழியூரான்:

    நீங்கள் சுட்டியிருப்பது மிகவும் சரி. பெயர்க்குழப்பத்திலே (உணர்வுகள் பதிவு) ஆரூரான் என்று வந்திருக்கவேண்டியது உங்கள் பெயரான ஆழியூரான் என வந்து விட்டது. இதற்கான முழுதாக உளம் வருந்துகிறோம். தவறு களையப்பட்டிருக்கிறது.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

    By ஆழியூரான் on Dec 24, 2006

  17. //எல்லா பதிவர்களையும்/வாசகர்களையும் ஒரு ஆரோக்ய சூழல் உருவாக பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழில் பதிவிடுவது நமக்கு கிடைத்த ஒரு நல்ல ஆயுதம். அதை தவறான வழியில் உபயோகித்து வீணாக்காமல், உபயோகமான முறையில் அனைவரும் பயன் பெறுமாறு செய்தல் வேண்டும்.

    நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறியாமல் இருக்கலாமே…

    எட்டு வயது சிறுவன்/சிறுமி முதல், 80 வயது முதியவர்கள் வரை புழங்கும் இடம் இது. so, act responsibly!

    Think!!! Please! //

    நானும் வழிமொழிகிறேன்.

    இதுதாம் இன்றைய அவசியமான செயலாக இருக்கும்!

    By P.V.Sri Rangan on Dec 24, 2006

  18. ////மாயவரத்தான் கட்டளையிட்டபடி நரகத்துக்குப் போகத் தமிழ்மணம் முற்றாக மறுக்கும் அதேநேரத்திலே, அவர் சொர்க்கத்துக்கு வழிதவறாமற் போய்ச்சேர தனது விழைவினை இச்சந்தர்ப்பத்திலே தெரிவிக்கின்றது. ///

    சூப்பர்மா….

    இந்தப் பதிவில் என்னை ரொம்பவும் கவர்ந்த பதில் இது….

    By லக்கிலுக் on Dec 24, 2006

  19. my comments are not published by tamilmanam

    By தமிழச்சி on Dec 24, 2006

  20. //If somebody will started writing about u people and about ur parents in the same way karuppu did in his blogs, then only u fools will know this pain.//

    சரியான கேள்வி தான். ஆனா இவங்களுக்கும் சரி, அவனை சப்போர்ட் பண்றவனுங்களுக்கும் சரி அப்பவும் உறைக்காது.

    By peru venuma on Dec 24, 2006

  21. i can understand your feelings anb problems.

    By sugunadiwakar on Dec 24, 2006

  22. //நீங்கள் சுட்டியிருப்பது மிகவும் சரி. பெயர்க்குழப்பத்திலே (உணர்வுகள் பதிவு) ஆரூரான் என்று வந்திருக்கவேண்டியது உங்கள் பெயரான ஆழியூரான் என வந்து விட்டது. இதற்கான முழுதாக உளம் வருந்துகிறோம். தவறு களையப்பட்டிருக்கிறது.

    நிர்வாகம்
    தமிழ்மணம் //

    மிக்க நன்றி..

    By ஆழியூரான் on Dec 24, 2006

  23. பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

    தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    “அவனை முதலில் நிறுத்தச் சொல்” எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்….அனத்து மதத்தினரும்… இதனைச் செய்தால் மட்டுமே போதும்…. மத நல்லிணக்கம் வளர!

    இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

    இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!

    அனைவருக்கும் நன்றி.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    By SK on Dec 24, 2006

  24. தமிழ்மணம் நிர்வாகத்துக்கு… இடுகையிலும்,பின்னூட்டத்திலும் நீங்கள் கொடுத்திருக்கும் அகரன்,ஆரூரான் ஆகிய இரண்டு சுட்டிகளும் உணர்வுகள் என்ற ஒரு வலைப்பதிவுக்கானதாக இருக்கின்றன.எனில் இருவரும் ஒருவரா,தவறேதும் நிகழ்ந்திருக்கிறதா என்பது புரியவில்லை..இது தங்களுக்கான சுட்டிக்காட்டல் மட்டுமே..
    ==
    சுட்டியதற்கு நன்றி. சுட்டி இணைப்பிலே நேர்ந்த வழு. திருத்தப்பட்டிருக்கிறது.

    By ஆழியூரான் on Dec 24, 2006

  25. என் இடுகைகள் மருமொழி மட்டறுக்கப்படிவதில்லை

    ======
    Feedbacks from all of your blogs should appear in thamizmanam by now.

    By கண்மணி on Dec 24, 2006

  26. எனது பதிவினை மட்டிறுத்தல் செய்த பின்னரும் அதனை உங்களுக்கு அறிவித்த பின்னரும் பின்னூட்டமிட்ட பின்னர் தமிழ்மணத்தில் வரவில்லை
    தயவு செய்து சரி பார்க்கவும்
    நன்றி

    சோமி paiyan25.blogspot.com
    ==
    done.

    By somee on Dec 24, 2006

  27. ////ஆழியூரான்
    December 24th, 2006 | 1:09 pm
    தமிழ்மணம் நிர்வாகத்துக்கு… இடுகையிலும்,பின்னூட்டத்திலும் நீங்கள் கொடுத்திருக்கும் அகரன்,ஆரூரான் ஆகிய இரண்டு சுட்டிகளும் உணர்வுகள் என்ற ஒரு வலைப்பதிவுக்கானதாக இருக்கின்றன.எனில் இருவரும் ஒருவரா,தவறேதும் நிகழ்ந்திருக்கிறதா என்பது புரியவில்லை..இது தங்களுக்கான சுட்டிக்காட்டல் மட்டுமே..
    ==
    சுட்டியதற்கு நன்றி. சுட்டி இணைப்பிலே நேர்ந்த வழு. திருத்தப்பட்டிருக்கிறது.

    ////

    Unarvukal Aaruran is not Akaran. Unarvukal does not hold any anti-ltte, anti-Tamil, anti-Eelam view like Akaran.

    Akaran might be trying to use Unarvukal to do his dirty works. Unarvukal has no connection with AKARAN.

    Aaruran is NOT Akaran.

    By Unaruvkal on Jan 16, 2007

  28. நீங்க எந்த அளவுக்கு மண்டை காஞ்சு போய் இருக்கீங்கன்னு புரியுது. திரட்டி-தொழில்நுட்பம்- அரசியல் நிலைப்பாடு வேறுன்னு புரிஞ்சிக்காத, புரிஞ்சிக்க விரும்பாதவங்க கூட என்னத்த சொல்றது. இந்த பஞ்சாயத்து வேலைகளை நீங்கள் நிறுத்திக் கொள்வதை ஒரு கொள்கை முடிவாகவே அறிவிக்கலாம். தமிழ் சார்ந்த இதர பணிகளிலும் நீங்கள் கவனம் செலுத்துவது அறிந்து மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    By ravishankar on Feb 8, 2007

  29. பதிவர் விட்டுதுசிகப்புக்கு:

    தமிழ்மணத்திலே உங்கள் குறிப்பிட்ட இடுகையொன்று தோன்றவில்லையென அழுதுடுவேன் -1 என்ற இடுகையிலே நீங்கள் பதிவு செய்திருந்தீர்கள். நீங்கள், உடைப்பின் பதிவிலே அரவிந்தன் நீலகண்டன் எனப் பின்னூட்டமிட்டிருப்பவர், ச. திருமலை என்ற ஒருவரின் பின்னூட்டத்தினை அனுமதித்திருக்கும் முகமூடி ஆகியோரினைத் தமிழ்மணத்திலே உங்கள் இடுகைகள் எதையுமே எவ்விதத்திலும் தகுந்த காரணம் உங்களுக்குத் தராது தமிழ்மணம் ஒருபோதும் அகற்றியதில்லை. அதேபோலவே, தமிழ்மணத்திலே நீங்கள் சேரவேண்டுமென வற்புறுத்தியும் சேர்க்கவில்லை; தமிழ்மணத்தின் நிர்வாகம் உங்களுக்குத் தவறிழைத்ததென்று நீங்கள் (தவறாகக்) கருதினால், பிடித்த இடத்திலிருந்து விரும்பியபோது, விலகிக்கொள்ள சேர்ந்ததுபோலவே உங்களுக்கு வாசல் திறந்தேயிருக்கின்றது.

    கீழே சொல்லும் குறிப்புகளை நீங்கள், அதன் நிர்வாகிகள் அமெரிக்காவின் சிறையிலே களி தின்னவேண்டுமென்பதை விழையும் காழ்ப்புணர்வுமட்டுமே சிந்தும் இடுகைக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவுகளையும் ஏற்றுக்கொள்ளும் சுதந்திரமுள்ள தமிழ்மணம் குறித்துப் புரிந்து கொள்ள எதிர்காலத்திலே பயன்படுத்தினீர்களெனில், தமிழ்மணம் மகிழ்ச்சியடையும்.

    1. பட்டை அடித்துக்கொள்ளாமலே தமிழ்மணத்திலே உங்கள் அழுதுடுவேன் -1 இடுகை தோன்றியிருக்கின்றது

    2. அதற்கு முன்னான திராவிடம் பேசும் மச்சக்காரர் இடுகை கீழ்வரும் முகவரியிலே தமிழ்மணமூடாகச் செல்லத் தோன்றியிருக்கின்றது.
    http://thamizmanam.com/forward_url.php?url=http://vittudhusigappu.blogspot.com/2007/02/blog-post_21.html

    3. பின்னூட்டங்கள் தோன்றாதிருப்பின், அதற்கு உங்கள் பட்டையை நீங்களேதான் ஏதோவிதத்திலே உங்கள் பதிவிலே கிளப்பியிருக்கவேண்டும்; உங்கள் பதிவின் பட்டையை - உங்கள் பதிவின் பின்னூட்டங்களைத் தமிழ்மணம் அனுமதிக்காவிட்டாலுங்கூட - தமிழ்மணம் கிளப்பமுடியாது. அதனால், உங்கள் அடைப்பலகையிலே ஏதாவது பட்டையைக் கிளப்பிப் பின்னூட்டம் இடமுடியாமல் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கின்றதா எனப் பாருங்கள்

    4. ஏன் தோன்றவில்லை என்று கேட்டு தமிழ்மணத்துக்கு ஓர் அஞ்சல் admin@thamizmaNam.com, complaints@thamizmaNam.com இற்கோ அல்லது பின்னூட்டம் blog.thamizmanam.com, thamizmaNam.blogspot.com போன்றவிடத்திலோ தாருங்கள். ஓரிரு நாட்களுள்ளே தமிழ்மணத்தின்மீது தவறிருப்பின், அல்லது தமிழ்மணம் உங்களின் அடைப்பலகைத்தவறினை ஏதேனும் விதத்திலே நீக்கமுடியுமானால், நீக்கவும் விளக்கம் தரவும் உதவும்

    5. பின்னூட்டம் தோன்றாததற்கு நீங்களே காரணம் என்று உணர்கின்றபோது, அதை வெளிப்படையாகச் சொல்லும் விதத்திலே அழுதுடுவேன் - 2 என்றோ, சிரிச்சுடுவேன் -1 என்றோ தயைகூர்ந்து ஒரு தன்னிலைவிளக்கப்பதிவிட்டீர்களென்றால் - (தமிழ்மணத்திலே குற்றமெனச் சொன்ன தவறு உங்களினதென்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டீர்களென்றால், மகிழ்ச்சியடைவோமென்பது உண்மையானாலுங்கூட)-, எல்லோருக்கும் பயனாகவிருக்கும்

    6. இத்தனைக்குப் பின்னும் தமிழ்மணம் வேண்டுமென்றே உங்கள் பதிவினை டக் டக் என்று அனுமதிக்காமல், லக்கி லுக் பதிவினை டக் டக் என்று அனுமதிக்கின்றதென நீங்கள் கருதினால், தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவினை விலக்கிக் கொள்ள முன்னர் பதிவர் மாயவரத்தான் கேட்டுக்கொண்டதுபோல, admin@thamizmanam.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தங்களுக்கு எதிர்காலத்திலே வேண்டாத உள உளைச்சல்கள் ஏற்படாமலிருக்க, தமிழ்மணம் வழிவகை செய்யும்.

    7. உங்கள் பின்னூட்டங்கள் தமிழ்மணத்திலே தொடர்ந்து சேர்ந்தால், மிகுதிப்பதிவாளர்களுக்குத் தமிழ்மணத்திலே நம்பிக்கை ஏற்படவேண்டுமென்ற விழைவு உங்களுக்கிருப்பின், சேர்ந்ததென அறியத்தரவும் ஒரு பதிவிடுங்கள்; அதற்குத் தமிழ்மணம் நன்றியுடைத்ததாகவிருக்கும்.

    8. கடைசியாக, உங்கள் பதிவிலே ஏற்பட்டிருக்கும் சிக்கல் இதுவாகவிருக்கலாம். நீங்கள் மீண்டும் ஆங்கிலத்திற்கு உங்கள் நாட்காட்டியினைக் கொண்டு வந்தால், தாமாகவே சேகரிக்கப்படாதுபோன பின்னூட்டங்கள் தாமாகவே சேர்ந்துகொண்டு சீரடைய வாய்ப்புண்டெனத் தோன்றுகின்றது.

    Unfortunately, thamizmaNam is not SwedishmaNam; in thamizmaNam that is still compatible with English, if you changed your date format back to normal English, then your toolbar would show.

    பதிவர் ராஜேசனுடைய பதிவும் ராகவன் ஐயங்கார் என்பவருடைய பதிவுபோலவே தமிழ்மணத்திலே சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து, “விஷமத்தனமான பதிவுகளென நாம் அவதானித்து நம்பும் பதிவுகளை நாம் சேர்த்துக்கொள்ளமாட்டோம்” என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். ராஜசன், ராகவன் ஐயங்கார் ஆகியோரின் பின்னூட்டங்களை (ராகவ ஐயங்காரின் பின்னூட்டங்கள், விடாதுகருப்பு என்ற பதிவரின் இடுகைகளிலே கொண்டிருந்த உள்ளடக்கங்களே அவரின் பதிவு இணைக்க்கப்படாததற்கும் விடாது கருப்புவின் சில இடுகைகள் நீக்கப்படுவதற்கும் காரணமென்பதை இங்கே வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும்) நாம் வெவ்வேறு பதிவுகளிலே அவதானித்த பின்னரே, சேர்த்துக்கொளவதில்லையென நாம் முடிவு செய்திருந்தோம். இம்முடிவிலே எவ்விதமான மாற்றமுமில்லை.

    தொடர்ந்து புரிந்துணர்வுடன் நீங்கள் காட்டும் ஒத்துழைப்புக்கு நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

    By தமிழ்மணம் on Feb 21, 2007

  30. விட்டுது சிகப்பு http://vittudhusigappu.blogspot.com/2007/02/1.html என்ற முகவரியிலே தோன்றிய அழுதுடுவேன் - 1! என்ற இடுகையினை அகற்றியிருக்கின்றார். இவர் தமிழ்மணத்தின்மீது தன்னுடைய பின்னூட்டங்கள் சேகரிக்காமற் தடைசெய்கின்றதாகச் சொல்லியிருந்த , மேலே தமிழ்மணம் நிர்வாகம் இட்டிருக்கும் (பின்னூட்டம்-இல.28) பதிலினைத் தூண்டிய இவ்விடுகையின்மேலே தன்னுடைய தன்னிலைவிளக்கத்தினைத் தெளிவாகத் தருவாரெனத் தமிழ்மணம் நம்புகின்றது. இது தமிழ்மணத்தின்மீதான இவருடையதும் பின்னூட்டமிட்டிருந்த ராஜேசனுடையதுமான குற்றச்சாட்டுகளைக் களையவுதமென்று திடமாக நம்புகிறோம்.

    இப்போது விட்டுது சிகப்புவின் திராவிடம் பேசும் மச்சக்காரர்கள் இடுகையின் பின்னூட்டங்கள் தமிழ்மணத்திலே சேகரிக்கப்பட்டிருக்கின்றதென்பதையும், அதற்காக, தமிழ்மணம் எதுவிதமான தனிப்பட்ட முயற்சியோ மாற்றமோ செய்யவில்லையென்பதையும் சுட்டிக்காட்ட இவ்விடத்திலே விரும்புகிறது.

    By தமிழ்மணம் on Feb 21, 2007

  31. பிளாக்கர் புரிதலுடனான பதிவர் விட்டுதுசிகப்புவின் தமிழ்மணத்துக்கு நன்றி http://vittudhusigappu.blogspot.com/2007/02/blog-post_3932.html பதிவினை வரவேற்கின்றோம்.

    நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

    By தமிழ்மணம் on Feb 21, 2007

  32. வணக்கம்.

    இந்த சப்பையான விஷயத்துக்கு உங்களது அருமையான நேரங்களை வீணடித்துள்ளதுபோல் தோன்றுகிறது..

    இப்படி ஒவ்வொரு மொக்கைக்கும் (பதிவு) நீங்கள் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தால் வேலைக்கே ஆவாது…

    By செந்தழல் ரவி on Feb 21, 2007

  33. மறுமொழி மட்டுருத்தல் செய்யபட்டுள்ள போதிலும் எனது பதிவுகளில் மறுமொழிகள் திரட்டப்படுவதில்லை சற்று சரி பார்க்கவும்.

    By opparee on Feb 21, 2007

  34. தாமதமான முறையிடுதல்.
    இது பற்றி அங்கே முறையிட்டும் வழமை போல பலன் ஏற்படவில்லை. தவிர அது வெளியிடப்படக் கூட இல்லை.

    உணர்வுகள் தளத்தில் கொழுவி என்னும் பதிவர் எழுதிய ஒரு பதிவு தொடர்பாக நேரடியாக என் பெயரைச் சுட்டி கீழுள்ளவாறு எழுதியிருக்கிறார்கள்.

    மேலேயுள்ளவை கூட அந்தக் கூட்டத்திலுள்ள ஈழைத் தமிழர்களான கொழுவி அல்லது கழுவி அல்லது சயந்தன் அல்லது வசந்தன் என்ற பெயருள்ளதுகள் சொன்னவை.

    அவர்கள் குறிப்பிட்ட பொருளர்த்தப்படி பார்த்தால் நோய்பிடித்த தமிழர்களான சயந்தன் என பொருள்படுகிறது.

    இவற்றுக்கு தமிழ்மண விதிகளின் படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? குறித்த அந்தப் பகுதியை நீக்குமாறு உணர்வுகள் பதிவரை இரக்கிறேன். (எல்லாம் தலையெழுத்து எனக்கு)

    By சயந்தன் on Feb 21, 2007

  1. 1 Trackback(s)

  2. Apr 28, 2007: ரவி » Blog Archive » வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்?

Post a Comment