தமிழ்மணம் பதிவுகள் நாளாந்த குறிப்பு

December 14, 2006 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் திரட்டியிலே தனிப்பட்ட கண்காணிப்பின்கீழே சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட மறுக்கப்பட்ட, விலக்கப்பட்ட, முறையிடப்பட்ட பதிவுகள், இடுகைகள் குறித்த செய்தி அவசியப்பட்ட்டால், நாளாந்தம் இங்கே தமிழ்மணவாசகர்களுக்குத் தரப்படும். இது தமிழ்மணம் அறிவிப்புகள் பதிவிலே ஒரு தற்காலிகமான பதிவு மட்டுமே. தகுந்த இடத்திலே புதிய பதிவு தேவைப்படின் விரைவிலே ஆரம்பிக்கப்படும்.

விலக்கப்பட்ட, முறையிடப்பட்ட பதிவுகளின் பெயர் மட்டுமே வெளியிடப்படும். முறையிட்டவர்களின் பெயர்கள் தமிழ்மணத்திற்கு அவசியமில்லையெனப் படுகிற வேளையிலே எக்காரணம் கொண்டும் வெளியிடப்படமாட்டா.

இடவசதி, நெறிப்படுத்து நேரம், பின்னூட்டவிவாதங்களின் விவகாரம் ஆகியன கருத்திலே கொண்டு பின்னூட்டங்கள், இங்கே எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டா.

புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

திரட்டி நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

19 Responses to “தமிழ்மணம் பதிவுகள் நாளாந்த குறிப்பு”

  1. தமிழ்மணம் on December 14th, 2006 6:22 am

    14.12.2006

    13.12.2006 அன்று விடாது கருப்பு பதிவு வேறொருவரினாலே இனி நடத்தப்படும் என்று விடாது கருப்பு தமிழ்மணத்துக்கு அறியத் தந்திருக்கிறார். பெ. மகேந்திரன் என்பவர் விடாது கருப்பு பதிவினை தமிழ்மணத்திலே இணைக்க விண்ணப்பித்ததின் பேரிலே இன்று அப்பதிவு சேர்க்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் உள்ளடக்கத்துக்கும் பின்னூட்டங்களுக்குமாக சில நாட்கள் இப்பதிவு கண்காணிக்கப்படும்.

    தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட ஒரு பதிவிலே சொல்லப்பட்டதுபோல, தமிழ்மணம் நியோ, பாலச்சந்தர் கணேசன், முத்துக்குமரன், வரனையான் ஆகியோரின் பதிவுகளை நீக்கவோ ஓரம் கட்டவோ எத்தருணத்திலும் முயலவில்லை என்பதைத் தெளிவாக இவ்விடத்திலே தெரிவிக்க விரும்புகிறது. அப்பதிவர்களின் பதிவுகளை தமிழ்மணம் –> பதிவுகள் –> முழுப்பட்டியல் ஊடாக அணுகலாம். அப்பதிவர்களே அது குறித்து தமது பதிவுகளிலே சுட்டின், இன்னமும் தெளிவாகும். ஆதாரமில்லாத வதந்திகளைப் பரப்பவேண்டாமென தமிழ்மணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது; தமிழ்மணம் குறித்த வதந்திகளைப் பதிய முன்னால், தமிழ்மணத்திடமோ அல்லது தாங்களாகவோ வதந்திகளுக்கு வசனவுரு கொடுப்பவர்கள் அவற்றினைச் சரி பார்த்துக்கொள்ளவும். தமிழ்மணத்தினை வேறெந்தத்திரட்டியோடும் சேவை அடிப்படையிலே ஒப்பீடு செய்து தரமான கணிப்பினைப் பதிவர்களுக்கு வழங்குவதற்கப்பால், நகைச்சுவை என்ற பெயரிலே சகதிரட்டிகளையோ தமிழ்மணத்தினையோ இழிவுபடுத்தும் அல்லது திரிபுபடுத்தும் இடுகைகளைத் தமிழ்மணம் ஏற்கப் பின்நிற்கும். இவ்வடிப்படையிலே No Charge Above the Meter பதிவின் கீழ்வரும் இரண்டு இடுகைகள் நீக்கப்படுகின்றன.

    1. பூனைகளுக்கு ஆப்பம் பிரித்த குரங்கு கதைண்ணா
    2. சர்வேசா சாகரம் விட்டா வளர்த்தோம் குயில்கூட்டைண்ணா ஆவ்!

    கடந்த 13.12.2006, 14.12.2006 நாட்களிலே தமிழ்மணத்திலிருந்து விலக்கும்படி முறையீடு செய்யப்பட்ட இடுகைகள் கீழ்வருமாறு: [தமிழ்மணத்தின் விதிகளினை இவை மீறியுள்ளதா என இன்னும் சரிபார்க்கப்படாததினால், இவற்றினை நீக்குவது தொடர்பாக இன்னமும் முடிவேதும் எடுக்கப்படவில்லை] முறையீடுகளின் எண்ணிக்கை அருகிலே அடைப்புக்குறிகளுக்குட் தரப்பட்டுள்ளது.

    1. ரஜினி – கழிசடைக்கு பிறந்த நாள் – வர்க்க பிறழிகள்! (1)
    2. ரவுடிகளும் திம்மியின் அரசும்! (1)
    3. பார்ப்பனர்களும் பயர் கலாச்சாரமும்! (1)
    4. அய்யப்பன் கதை கேளுங்கள்! (1)
    5. பார்ப்பனர் ராமனைக் கும்பிடுவது ஏன்? (1)
    6. சுன்னத்து (Circumcision) எச் ஐ வி தொற்றலைக் கட்டுப்படுத்துகிறது..?! (1)
    7. அனானிமஸ் அமீபா (1)
    8. (84) மெய்யான பகுத்தறிவு விடுதலை செய்யும் உண்மை! (1)

  2. தமிழ்மணம் on December 25th, 2006 10:12 pm

    கீழ்க்காணும் இடுகை அதன் உள்ளடக்கம் காரணமாகத் திரட்டுதலிலேயிருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் இக்குறிப்பிட்ட பதிவு இதுபோன்ற இடுகையினை இடுமானால், இப்பதிவினைத் தமிழ்மணம் திரட்டாது.

    இடுகை: மயிலாடுதுறை இத்தாலியில் இருக்கிறதா?

    பதிவு: அனானிமஸ் : வெட்கமாய் இருக்கிறது!!!

  3. தமிழ்மணம் on January 13th, 2007 12:15 pm

    13 ஜனவரி 2006
    தமிழ்மணம் திரட்டலிலிருந்து விலக்கப்பட்ட பதிவு: அநாநிமஸ்

    விலக்குதலுக்கான காரணம்: உள்ளடக்கம், பின்னூட்டங்கள் ஆகியவற்றின் ஒலிப்பின் தன்மை

  4. தமிழ்மணம் on January 14th, 2007 6:15 pm

    14 ஜனவரி 2006
    தமிழ்மணம் திரட்டலிலிருந்து விலக்கப்பட்ட இடுகை: சில வெளிப்படையான எண்ணங்கள்
    பதிவர்: Narasimhan Raghavan
    விலக்குதலுக்கான காரணம்: பிறபதிவுகளிலே பதிவர் தானிடும் பின்னூட்டங்களைச் சேகரிக்கும் களமாகப் பின்னூட்டப்பகுதியைப் பயன்படுத்துவதனால்

  5. தமிழ்மணம் on January 23rd, 2007 9:25 pm

    பின்னூட்டங்களிலே பயன்பட்ட சொற்கள் காரணமாக, கீழ்வரும் இடுகை திரட்டுவதிலிருந்து நீக்கப்படுகின்றது
    பதிவர்: நீலகண்டன்
    இடுகை: பெங்களூரும் இரட்டை நாக்கு கறுப்பும்

    பதிவிலே பயன்பட்ட சொற்கள் காரணமாக, கீழ்வரும் இடுகை திரட்டுவதிலிருந்து நீக்கப்படுகின்றது
    பதிவர்: விடாது கருப்பு
    இடுகை: பாப்பானே வெளியேறு!

    1. விலக்கப்படும் இடுகைகள் / பதிவுகள் குறித்து இங்கே தொடர்ந்து விபரம் தரப்படுகின்றது

    2. தமிழ்மணம், பதிவுகளின் பொருளடக்கத்தினையோ, அரசியலையோ கருத்திலே கொள்வதில்லை. எப்போதும், அனைத்துப்பதிவுகளையும் வேறுபாடின்றி, தமிழ்மணத்தின் நலனைப் பேண வரையறுக்கப்பட்ட விதிகளோடு முரணாகாத வகையிலே சேர்த்துக்கொள்ளவே முயற்சி செய்கின்றது. அதனால், சேர்க்கப்படும் பதிவின் தொனியும் பொருளும் தமிழ்மணத்தின் விதிகளுக்கும் நலனுக்கும் மாறாகாமலிருப்பதைச் சேர்க்கையிலே கவனத்திலே கொள்கிறது. இதனால், மூன்று இடுகைகள் இடப்பட்டிருப்பினுங்கூட, சில பதிவுகள் இன்னமும் சேர்த்துக்கொள்ளப்படாதிருக்கின்றன.

    தொடர்ச்சியாக மூன்று இடுகைகளுடன் ஆரம்பிப்பதும் தமிழ்மணத்திலே சேர்த்துக்கொள்ளப்பட்டபின்னால், அவ்விடுகைகள் நீக்கப்பட்டு, தனிமனிதத்தாக்குதலிலே ஈடுபடும் இடுகைகள் மீண்டும் சேர்க்கப்படும்போது, நீண்ட காலம் அப்பதிவு தொடர்ச்சியாக இருக்கின்றதா, அதன் உள்ளடக்கம் எவ்வாறு இருக்கின்றதெனக் கண்டு கொள்ளப்பட்டபின்னரே சேர்த்துக்கொள்ளப்படுகின்றது. தவிரவும் நீண்ட காலம் மறைநிலையிலே புதுப்பிக்கப்படாமலிருந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படும்போதும் இதே விதியினைத் தற்சமயம் தமிழ்மணம் சேர்ப்பதற்குக் கைக்கொள்கிறது. ஏற்கனவே பின்னூட்டங்களிலே தமிழ்மணத்தின் விதிகளுக்கு ஒத்துப்போகாத வண்ணம், பின்னூட்டம் இட்டதெனக் கருதப்பட்ட பதிவர்களின் பெயர்களிலே பதிய விண்ணப்பிக்கப்பட்ட பதிவுகளும் சிறிது காலம் கண்காணிக்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படும் விதிக்கு உள்ளமைகிறது. இவற்றினை மற்றைய விதிகளினைத் திருப்தி செய்யாத காரணங்களாலே (மூன்று பதிவுகளுக்கும் குறைவான இடுகைகளைக் கொண்ட பதிவுகள், ஆங்கிலத்திலேயோ உள்ளடக்கமோ இல்லாத பதிவுகள்) சேர்க்கப்படாத பதிவுகளுடன் இங்கே காணலாம். இது பற்றி விரைவிலே தமிழ்மணம் அறியத் தரும்.

    3. இடவசதி, நெறிப்படுத்து நேரம், பின்னூட்டவிவாதங்களின் விவகாரம் ஆகியன கருத்திலே கொண்டு பின்னூட்டங்கள், ஏற்கனவே இடுகையிலே சொல்லியிருப்பதுபோல் இங்கே எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டா.

  6. manithan on January 23rd, 2007 9:54 pm

    1)அரவிந்தன் நீலகண்டனின் \”எய்ட்ஸாண்டவர் கதை\” என்ற தலைப்பில் பெரியாரையும் மணியம்மையையும் வீரமணியையும் அவமதித்து இருக்கிறார்கள். இலங்கைக் காரர்களுக்கு அது இழிவாக தெரியவில்லையா?

    2)விட்டுது சிகப்பு என்ற பெயரில் கால்கரிசிவா, அமெரிக்க டாலர் செல்வன், ச.திருமலை, முகமூடி ஆகியோர் < பெயர்கள் நீக்கப்பட்டன> திராவிடத்தி என்றும் திம்மி என்றும் அசிங்கமாக வர்ணித்து எழுதி இருக்கின்றனர் விட்டுது சிகப்பு பதிவில். உண்மையில் < பெயர் நீக்கப்பட்டது> ஒரு ப்ராமனர். இலங்கையர்களுக்கு இந்தியப் பெண்ணைத் திட்டினால் ஒன்றும் பாதகமாகத் தெரியவில்லையா? < பெயர் நீக்கப்பட்டது>த் திட்டினால் மட்டும் கிளர்த்தெழுவது ஏன்?

    ======
    மேலேயுள்ள பின்னூட்டம் இயன்றவரை மனிதநேயத்துடன் இப்பின்னூட்டியின் முறையற்ற பதங்கள் நீக்கப்பட்ட பின்னூட்டம் மட்டுமே. பின்னூட்டம் இடப்பட்டதனாலே இவ்வகையான பின்னூட்டம் தடவை தமிழ்மணம் வாசகர்களும் அறிந்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

    நிர்வாகம்
    தமிழ்மணம் திரட்டி

  7. தமிழ்மணம் on January 26th, 2007 7:43 pm

    பின்னூட்டங்களிலே பயன்பட்ட சொற்கள் காரணமாக, கீழ்வரும் இடுகைகள் திரட்டுவதிலிருந்து நீக்கப்படுகின்றன:

    1. பதிவர்: உணர்வுகள்
    இடுகை: சில ஈழைத்தமிழர்களும் அவர்களின் உளறல்களும்!!

    2. பதிவர்: செல்லா
    இடுகை: போங்கடா வெங்காயங்களா?

    இடுகைகளிலே பயன்பட்ட சொற்கள் காரணமாக, கீழ்வரும் இடுகைகள் திரட்டுவதிலிருந்து நீக்கப்படுகின்றன:

    3. பதிவர்: மீட்டர் முருகேசன்
    இடுகை: ஆதி அனானியண்ணா வேண்டுகோள்
    இத்துடன் மூன்று இடுகைகள் இப்பதிவிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் தமிழ்மணவிதிகளை மீறும் விதத்திலேயோ அல்லது சகதிரட்டிகளை அநாவசியமாக ஆதாரமின்றி விமர்சிக்கும் விதமாகவோ இடுகைகளிருப்பின், இப்பதிவு முழுமையாக நீக்கப்படுமெனத் தமிழ்மணம் அறியத்தருகின்றது.

    4. பதிவர்: உணர்வுகள்
    இடுகை: செல்லா(த)வனின் கூத்தும் குத்துக்கரணமும்

  8. தமிழ்மணம் on January 28th, 2007 11:43 pm

    28 ஜனவரி 2006
    தமிழ்மணம் திரட்டலிலிருந்து விலக்கப்பட்ட பதிவு: மீட்டர் முருகேசன்

    விலக்குதலுக்கான காரணம்: உள்ளடக்கம், பின்னூட்டங்கள் ஆகியவற்றின் ஒலிப்பின் தன்மை

  9. தமிழ்மணம் on January 30th, 2007 12:58 pm

    30 ஜனவரி 2006
    தமிழ்மணம் திரட்டலிலிருந்து விலக்கப்பட்ட இடுகை: கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?

    பதிவர்: கொசுபுடுங்கி

    விலக்குதலுக்கான காரணம்: இன்னொரு பதிவரின் (இளவஞ்சி) இடுகையை அனுமதி பெறாமலே பதிப்பித்தது.

    குறிப்பிட்ட இடுகை தனது சொந்த ஆக்கமெனக் கொசுபுடுங்கி நிரூபிக்கப்படுமிடத்து, மீண்டும் தமிழ்மணத்திலே சேர்க்கப்படும்.

  10. தமிழ்மணம் on February 27th, 2007 1:31 am

    26பெப்ருவரி 2007

    விலக்கப்பட்ட இடுகைகள்

    கொசுபுடுங்கி – 1
    ஏமாறாதவன் – 1
    விடாதுகருப்பு – 1
    சுல்தான் – 1

    கொசுபுடுங்கி &விடாதுகருப்பு இவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்கள் தொடர்ந்தும் இதே ஒலிப்போடு வெளிவரின், நீக்குவதைத் தவிர வேறேதும் வழியில்லை.
    விட்டுக்கொடுப்புகளை இயலாமை என்று புரிந்துகொள்ள அனுமதிப்பதற்கான பாடங்களை இப்பதிவுகள் கற்றுத்தருகின்றன. அதற்கு நன்றி.

  11. இனியன் on February 27th, 2007 2:01 am

    நல்ல சேவை தொடரட்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  12. தமிழ்மணம் on February 28th, 2007 12:33 am

    28 பெப்ருவரி 2007

    திரட்டுவதிலிருந்து விலக்கப்பட்ட பதிவு: கொசுபுடுங்கி பதிவு

    விலக்கலுக்கான காரணம்: நகைச்சுவை என்ற பெயரிலே தொடர்ந்தும் குறிப்பிட்ட சிலரைத் தாக்கிக்கொண்டிருக்கும் பதிவாகத் தோன்றுவதாலே நீக்கப்பட்டிருக்கின்றது. நகைச்சுவையென்ற பெயரிலே கொசுவிரட்டும் தமிழ்மணஎல்லையை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களிலே சில தடவைகள் இந்நிலையைச் சுட்டிக்காட்டி, அவரின் இரு தனியான இடுகைகளையும் விலக்கினோம். இறுதியாக இன்று நீக்கப்பட்டது.

  13. தமிழ்மணம் on March 1st, 2007 1:56 pm

    01 மார்ச் 2007

    விலத்தப்பட்ட பதிவுகள்: உணர்வுகள் 1, 2

    விலத்தப்பட்ட காரணம்: பதிவர் தொடர்ந்து இப்போதிருக்கும் விதிகளின்படி இயங்கியதிலேயிருக்கும் சிக்கலைச் சுட்டியபோது, அவர், அவரது பதிவுகளை விலத்துவதனாலே அவருக்கேதும் பங்கமில்லை என்பதைத் தெளிவாக அறியத்தந்தது.

  14. தமிழ்மணம் on March 10th, 2007 11:57 am

    10 மார்ச் 2007

    விலக்கப்பட்ட பதிவு / இடுகைகள்

    1.
    பதிவு: iravu”KK”azugaar jananam
    விலக்கப்பட்ட இடுகை: இட்லி, வடை, சட்னி, சாம்பார்!!!
    விலக்கலுக்கான காரணம்: இக்குறிப்பிட்ட இடுகை தன்னைக் குறித்த தாக்குதலென்பதாக பதிவரொருவரின் குறிப்புகளுடனான முறையீடு.

    தனிப்பட்ட தாக்குதலென்பதாக இப்பதிவின்மீதான இரண்டாவது முறையீடு. முன்னைய முறையீட்டில், இரு வாரங்களுக்கு முன்னால், ஒரு பதிவர் தனது கணிமுகவரி (IP) வெளியிடப்பட்டுத் தாக்கப்பட்டதாகத் தந்திருந்தார். ஆனால், அவர் குறித்த பதிவிலே கணிமுகவரி தரப்பட்டிருந்தாலுங்கூட, எப்பதிவரின் பெயரும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாததால், எவ்வித விலக்கலும் நாம் செய்யவில்லை.

    2.
    பதிவு: தமிழ்நாடும் இந்தியாவும் உலகமும்
    விலக்கப்பட்டது: முழுப்பதிவும்
    விலக்கப்பட்ட காரணம்: தொடர்ச்சியான வெளிப்படையான எழுத்துவன்முறை

    3. பதிவு: kuppaithotti
    விலக்கப்பட்ட இடுகை: இந்து
    விலக்கலுக்கான காரணம்: எழுத்துவன்முறை

    4. பதிவு: Osai
    விலக்கப்பட்ட இடுகை: குதிரையின்
    விலக்கப்பட்ட காரணம்: உள்ளிடுகையின் ஒலிப்பும் இணைக்கப்பட்ட படத்தின் மீதான முறையீடும்

    இவை தவிர தனியே ஆங்கிலத்திலே மட்டும் எழுதப்பட்ட இடுகைகள் தொடர்ச்சியாக நீக்கப்படுகின்றன (பங்குவணிகம், தயவு செய்து கவனிக்கவும்). ஆங்கில இடுகைகள் பயனானவையாகயிருக்கும் அதே நேரத்தின் தமிழ்ப்பதிவுகளை ஊக்குவிக்கும் தமிழ்மணத்தின் நோக்கத்துடன் விட்டுக்கொடுப்புகள் செய்ய நாம் விரும்பவில்லை

  15. தமிழ்மணம் on March 14th, 2007 10:33 am

    14 மார்ச் 2007 புதன்

    கீழ்வரும் பதிவுகள் இன்றிலிருந்து தமிழ்மணத்திலே திரட்டப்படமாட்டா.
    விடாது கருப்பு
    விட்டுது சிகப்பு
    ஏமாறாதவன்
    இரவுக்கழுகு

    பதிவர்களிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு எதிராக, தமிழ்மணத்தின் நோக்கங்களுக்கு எதிராகப் பதிவர்களிடையே வெறும் பரபரப்பினையும் முரண்களையும் வளர்ப்பதற்கே இப்பதிவுகள் உதவுகின்றன எனக் கருதுகிறோம். இப்பதிவுகளின் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி, தமிழ்மணம்_பயனாளிகள் எமக்கும் அவ்வப்போது – அவர்களின் நோக்கம் எதுவான போதிலுங்கூட – சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்; நாமும் இப்பதிவர்களுக்கு இது பற்றிச் சுட்டிக்காட்டி, பதிவுகள் தொடர்ச்சியாகத் திரட்டப்படுவதிலேயுள்ள சிக்கலை இயன்றவரை சொல்லியிருக்கின்றோம். இதனைத் தமிழ்மணம்_பயனாளிகளும் அறிவார்கள். இப்பதிவுகளின் உள்ளடக்கங்களும் நோக்குகளும் ஒலிப்பும் மாறாத நிலையிலே தொடர்ச்சியாக இப்பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டமுடியாதிருக்கின்றோம்.

    இதுபோன்ற பதிவுகளென நாம் நம்பும் பதிவுகளைத் தமிழ்மணத்திலே இணைக்க நாம் விரும்பவில்லை. இதன் காரணமாகவே பதிவுகள் தமிழ்மணத்திலே இணைக்கப்படுவதிலே காலதாமதம் ஏற்படுவதுமுண்டு. இணைக்கப்பட்ட பதிவுகள் இப்பதிவுகள் போன்ற உள்ளடக்கம், ஒலிப்புகளுடன் செயற்படுமானால், அவையும் தரத்தேவையான முன்னறிவித்தலின் பின்னால், தகுந்த நேரத்திலே அகற்றப்படும்.

    இடவசதி, நெறிப்படுத்து நேரம், பின்னூட்டவிவாதங்களின் விவகாரம் ஆகியன கருத்திலே கொண்டு பின்னூட்டங்கள், இந்த இடுகையில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டா.

    புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  16. Sheperd on March 19th, 2007 11:33 am

    I do understand when you say that no comments will be allowed. Yet the box is there for just the purpose of placing the said comments.

    Perhaps you want to imply that the publishing of such comments can just not be taken for granted and that each comment will be examined on strict merits.

    Am I correct?

    Curious Sheperd

  17. சுல்தான் on March 27th, 2007 11:45 am

    //26பெப்ருவரி 2007
    விலக்கப்பட்ட இடுகைகள்
    கொசுபுடுங்கி – 1
    ஏமாறாதவன் – 1
    விடாதுகருப்பு – 1
    சுல்தான் – 1

    கொசுபுடுங்கி &விடாதுகருப்பு இவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்கள் தொடர்ந்தும் இதே ஒலிப்போடு வெளிவரின், நீக்குவதைத் தவிர வேறேதும் வழியில்லை.
    விட்டுக்கொடுப்புகளை இயலாமை என்று புரிந்துகொள்ள அனுமதிப்பதற்கான பாடங்களை இப்பதிவுகள் கற்றுத்தருகின்றன. அதற்கு நன்றி//

    நான் கவனிக்கவில்லை. என்னுடைய பதிவு எதுவும் விலக்கப்பட்டதா. அறியத்தரவும்.
    என் e-mail:mdsultan@eim.ae

  18. சுல்தான் on March 28th, 2007 4:13 am

    தங்களுடைய ‘தமிழ்மணம் பதிவுகள் நாளாந்த குறிப்பு’ பகுதியில் பத்தாவது கம்மெண்ட் கீழே:

    //தமிழ்மணம்
    February 27th, 2007 | 1:31 am
    26பெப்ருவரி 2007
    விலக்கப்பட்ட இடுகைகள்
    கொசுபுடுங்கி – 1
    ஏமாறாதவன் – 1
    விடாதுகருப்பு – 1
    சுல்தான் – 1

    கொசுபுடுங்கி & விடாதுகருப்பு இவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்கள் தொடர்ந்தும் இதே ஒலிப்போடு வெளிவரின், நீக்குவதைத் தவிர வேறேதும் வழியில்லை.
    விட்டுக்கொடுப்புகளை இயலாமை என்று புரிந்துகொள்ள அனுமதிப்பதற்கான பாடங்களை இப்பதிவுகள் கற்றுத்தருகின்றன. அதற்கு நன்றி.//

    என்றிருக்கிறது. நேற்றுதான் நான் அதைக் கவனித்தேன்.

    கவனித்த உடனே

    என்னுடைய எந்த பதிவு என்ன காரணத்தால் நீக்கப்பட்டது என்பதை எனது ஈ-மெயில் mdsultan@eim.ae முகவரியில் அறியத்தர இயலுமா என பதிலிறுத்தேன்.

    ஆச்சரியப்படும்படியாக, அடுத்த நிடத்திலேயே

    //Sorry, but your comment has been flagged by the spam filter running on this blog: this might be an error, in which case all apologies. Your comment will be presented to the blog admin who will be able to restore it immediately.
    You may want to contact the blog admin via e-mail to notify him.//

    என்று வந்து விட்டது

    உடனே ஆவண செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
    சுல்தான்.

  19. சுல்தான் on March 28th, 2007 4:15 am

    தங்களுடைய ‘தமிழ்மணம் பதிவுகள் நாளாந்த குறிப்பு’ பகுதியில் பத்தாவது கம்மெண்ட் கீழே:

    //தமிழ்மணம்
    February 27th, 2007 | 1:31 am
    26பெப்ருவரி 2007
    விலக்கப்பட்ட இடுகைகள்
    கொசுபுடுங்கி – 1
    ஏமாறாதவன் – 1
    விடாதுகருப்பு – 1
    சுல்தான் – 1

    கொசுபுடுங்கி ரூவிடாதுகருப்பு இவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்கள் தொடர்ந்தும் இதே ஒலிப்போடு வெளிவரின், நீக்குவதைத் தவிர வேறேதும் வழியில்லை.
    விட்டுக்கொடுப்புகளை இயலாமை என்று புரிந்துகொள்ள அனுமதிப்பதற்கான பாடங்களை இப்பதிவுகள் கற்றுத்தருகின்றன. அதற்கு நன்றி.//

    என்றிருக்கிறது. நேற்றுதான் நான் அதைக் கவனித்தேன்.

    கவனித்த உடனே

    என்னுடைய எந்த பதிவு என்ன காரணத்தால் நீக்கப்பட்டது என்பதை எனது ஈ-மெயில் mdsultan@eim.ae முகவரியில் அறியத்தர இயலுமா என பதிலிறுத்தேன்.

    ஆச்சரியப்படும்படியாக, அடுத்த நிடத்திலேயே

    //Sorry, but your comment has been flagged by the spam filter running on this blog: this might be an error, in which case all apologies. Your comment will be presented to the blog admin who will be able to restore it immediately.
    You may want to contact the blog admin via e-mail to notify him.//

    என்று வந்து விட்டது

    உடனே ஆவண செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
    சுல்தான்.

Leave a Reply