பதிவு விலக்கம் குறித்த அறிவிப்பு

December 6, 2006 · Posted in அறிவிப்புகள் 

விடாது கறுப்பு பதிவு அதன் அண்மைக்கால உள்ளடக்கம், பின்னூட்டங்கள் ஆகியவை தமிழ்மணத்தின் விதிகளுக்கு மீறியதாக இருப்பதால், உடனடியாகத் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகின்றது. தமிழ்மணத்தின் விதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்ட தொடர்ச்சியான அஞ்சல்களுக்கும் இடுகைகளின் விலக்கத்துக்கும் விடாது கறுப்பு பதிவினதும் உள்ளடக்கங்களினதும் தொனி மாறாததால், இவ்வாறான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்குத் தமிழ்மணம் தள்ளப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே தனிப்பட்டவர்களினைத் தொடர்ந்து தாக்கியதால் ராபிஹுட் பதிவு, ராதா ராகவன் பதிவு என்பன நீக்கப்பட்டிருப்பதைப் பதிவர்கள் அறிவீர்கள். இதைத் தவிரவும் தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளடக்கிய இடுகைகளைக் கொண்ட பதிவுகள் அவை தொடர்ந்தும் தமிழ்மணத்திலே இருக்கவேண்டிய தேவை இருப்பின், அவற்றினை விலக்கும்படி அன்புடன் கேட்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்மணம் தன்னைப் பற்றிய ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களையும் மறைமுகமான மிரட்டல்களையும் தமிழ்மணம் பதிவர்கள் தமிழ்மணத்தின் நோக்கங்களையும் இதுவரைகாலத்துச் செயற்பாடுகளையும் நன்றே அறிந்திருக்கின்றார்கள் என்ற முழு நம்பிக்கையிலே இன்னமும் திரட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழ்மணம் ஒரு தானியங்கித்திரட்டி என்ற நிலையிலே ஒவ்வொரு பதிவினையும் இப்போதிருக்கும் தொழில்நுட்ப அமைப்பின்படி, உள்ளடக்கங்களைப் பார்த்து சேர்த்தோ விலக்கியோ கொள்ளும் தகமையுடைத்ததல்ல. இதைப் புரிந்து கொண்டு, தனிப்பட்ட பதிவர்களின் செயற்பாடுகளுக்குத் தமிழ்மணம் எவ்வகையிலும் பொறுப்பேற்றமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்மணம் ஒரு பதிவரின் இடுகை தனிப்பட்டவளவிலே தாக்குதலை நிகழ்த்துதெனக் காண்கையிலே அதற்கான அவரின் செயல் விளக்கத்துக்கும் இடுகை விலக்குதலும் இடமளித்த பின்னரே அப்பதிவு குறித்துச் செயற்படமுடியும். எந்நிலையிலும் தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் தமிழ்மணத்தின் விதிகளுக்கு அமைய மட்டுமே எடுக்கப்படுகின்றவையாகும். தமிழ்மணத்தின் விதிகளுக்கு முரணானவை எனத் தமிழ்மணத்துக்குத் தோன்றும்படி முறையீடிடப்பட்ட மற்றைய இடுகைகள், பதிவுகள் குறித்த பட்டியலையும் விபரமான பதிவினையும் விரைவிலே இங்கே ‘தமிழ்மணம் அறிவிப்பு’ பதிவிலே காணலாம். இப்பதிவுகளிலே சில ஏற்கனவே இடுகைகளையோ பின்னூட்டங்களையோ விலக்கிக்கொள்ளும்படி கேட்கப்பட்டிருக்கின்றன.

முன்னைய ‘தமிழ்மணம் அறிவிப்பு’ பதிவு ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, விரைவிலே இது குறித்து பதிவர்கள் வெளிப்படையாகவே பதிவொன்றிலே முறையிட வழிவகை செய்யப்படும். இது தமிழ்மணத்தின் செயற்பாடுகளிலே தமிழ்மணத்திற்கு அநாவசியமான அநாமதேயர்களின் திட்டமிட்ட தாக்குதல்கள் பதிவர்களைக் குழப்பாதிருக்கவும் பயமுறுத்தாதிருக்கவும் உதவுமெனத் தமிழ்மணம் நம்புகிறது. இதன் மூலம் பதிவுகள் குறித்து முறையீடிடும் பதிவர்களும் தமது செயற்பாடுகளுக்கு ஓரளவுக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்கவேண்டிய நியாயம் உருவாகும். பழுத்த மரத்துக்கும் கல்லடி அதனை உயிரிழக்கும் எல்லை வரைக்கும் இருக்கக்கூடாதென நம்பும் தமிழ்மணம் தன்னிலே பதிவு செய்துகொண்ட பதிவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டுமென விரும்புகின்றது.

பதிவர்கள் தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களெனத் தொடர்ந்தும் தமிழ்மணம் நம்புகிறது.

தமிழ்மணத்தின் பதிவுகள் விலக்கப்படுவது குறித்த பழைய பதிவுகள்:

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)

நன்றி.

Comments

119 Responses to “பதிவு விலக்கம் குறித்த அறிவிப்பு”

  1. அனானி on December 6th, 2006 1:11 am

    இன்று காலைதான் நினைத்தேன் தங்களுக்கு இந்த பதிவுகளின், அது தொடர்ந்த மறைமுக தாக்குதல்களை பட்டியலிட வேண்டுமென்று….தாங்களே இது தொடர்பாக இந்த பதிவு வெளியிட்டு தங்களது நிலையை விளக்கியதற்க்கு நன்றி.

  2. செந்தில் on December 6th, 2006 1:15 am

    //பதிவர்கள் தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களெனத் தொடர்ந்தும் தமிழ்மணம் நம்புகிறது.//

    ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை. அதன் பிந்தான் தோழர் கருப்புவின் தொனி மாறியதை அறிவோம்.

    அனைத்து விதிகளும், சட்டங்களும் அதிகாரங்களால் மட்டுமே கட்டபட்டவை என்று தெரிந்தபோதும் முடிவை பரிசிலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    “வரவனையான்” செந்தில்

  3. டிபிஆர். ஜோசஃப் on December 6th, 2006 1:24 am

    இத்தகைய நடவடிக்கை தேவைதான். ஒரு ஆரோக்கியமான சுழலை உருவாக்குவதில் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும் என்று நம்புகிறேன்..

  4. டோண்டு ராகவன் on December 6th, 2006 1:31 am

    மிக்க நன்றி தமிழ்மண நிர்வாகத்துக்கு. இந்த நடவடிக்கையை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    I am sure all right thinking persons will agree with me.

    நன்றி,
    டோண்டு ராகவன்

  5. Pakutharivu on December 6th, 2006 1:41 am

    This is not fair. Please reconsider this.

  6. kumar on December 6th, 2006 1:49 am

    சரியான நடவடிக்கை.
    அது யாராக இருந்தாலும்.
    நன்றி தமிழ்மண நிர்வாகிகளே.

  7. hariharan on December 6th, 2006 2:31 am

    தமிழ் மணத்தின் நடுநிலை மனம் இந்த நடவடிக்கை மூலம் நிலைப்படுத்தப் படுகிறது!

  8. அனானி on December 6th, 2006 2:32 am

    வரவனையானே நீக்கப்பட வேண்டியவர்தான்….பார்த்தீர்களா அவரது சமிபத்திய பதிவினை….உணர்ச்சிபூர்வமான எழுதுவதாக நினைத்து அடுத்தவர்களை அடித்து நொறுக்கும் இவரது வாதத்தினை இங்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது கோரிக்கை.

  9. Ramamurthy on December 6th, 2006 2:42 am

    Romba nandri. Karuppu veluppu ena nirapetham kaati pesu nandri ulla jeevankalakku saatai adi. (nandri ulla jeevan ethu endru anaivarakkum theriyum)

  10. SP.VR.SUBBIAH on December 6th, 2006 2:47 am

    யாராக இருந்தாலும், ஜாதி, மத, இன உணர்வுகளைப் பற்றி எழுதும் போது நெஞ்சில் ஈரத்துடனும், கவனத்துடனும் எழுத வேண்டும்.

    தங்கள் கருத்துகளை எழுதலாம். ஆனால் அது யாரையும் காயப்படுத்தும்படி எழுதக்கூடாது.

    பதிலுக்குப் பதில் தீர்வாகாது. எதிர் பதிவு போடுபவர்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    தமிழ்மணத்தில் எழுதுபவர்களில், படிப்பவர்களில் என்னைப்போல நான்கைந்து பேர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருமே இளைஞர்கள்தான்.

    எழுதுபவர்களின் சராசரி வயது 33ற்கு மேல் தேறாது!

    ஆகவே அவர்கள் தங்களுக்குரிய கோபத்தையும், தாகத்தையும், வேகத்தையும் தவிர்த்து கண்ணியமாக எழுத வேண்டுமென, அடியேனும் ஒரு பதிவாளர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

    தற்சமயம் வேகத்துடன் எழுதும் வேறு சில பதிவாளர்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.

    விடாது கருப்பு நன்றாக எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர்.

    அவர் கையாண்ட நடையும், வார்த்தைப் பிரயோகங்களும், தனி மனிதத்தாக்குதல்களும்தான் சரியல்ல; முறையல்ல
    அதுவே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக் கிறது.

  11. யெஸ்.பாலபாரதி on December 6th, 2006 2:53 am

    ‘வரவனை’ செந்திலின் கருத்தையே வழிமொழிகிறேன்.

    ஒரு தலைப்பட்சமான முடிவென்று தோன்றுகிறது. மறுபரிசிலனை செய்ய வேண்டுகிறேன்.

  12. சபாபதி சரவணன் on December 6th, 2006 3:13 am

    இது சரியான நடவடிக்கை என நீங்கள் வாதிடுவீர்கள் எனில், இதைவிட பச்சையான மொழியில் இந்தியச் சமூக புரட்சியாளரான பெரியார் அவர்களைப் பற்றி பதிந்தவர் இன்னும் தமிழ்மணத்தில் உலவுகிறாரே!!!! அதுவும் நாளுக்கு நாள் மிகக் கேவலமான பதிவுகளுடன்.

    விடாது கருப்புவை காட்டிலும் பல மடங்கு அதிகமான தனி மனித தாக்குதல்கள் மேற்கொள்ளும் பதிவர்கள் அண்மைக்காலமாக மலிந்து போய் இருக்கின்றனரே!!! அவர்களுக்கு உங்களின் கத்தரிக்கோல் வேலை செய்யாதோ???

    விடாது கருப்புவின் பாணி மிகவும் மாறியது எதற்குப் பின்னர் என்பது ஊறறிந்த ரகசியம் ஆயிற்றே. தங்களுக்கு தெரியாதா???

    உங்களை உறுத்தியது அவரின் மொழி என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் கேலிச் சீண்டலுக்கு ஆளாகும் போது அவர்களிடமிருந்து எங்ஙணம் நாகரீக வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள்???

    தங்கள் ஒருதலையான நடவடிக்கைக்கு எதிராக என்னுடைய வன்மையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

  13. வழிப்போக்கன் on December 6th, 2006 3:21 am

    அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்டத் தவறான முடிவு.

    கருப்புவின் பதிவில் ஒரு சில பதிவர்களின் பெயர்கள் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். அப்படிப்பார்த்தால் விடாது கருப்புதான் போலி டோண்டு என்று வெளிப்படையாக மாயவரத்தான் எழுதியது தனிமனிதத் தாக்குதல் இல்லையா? இரண்டுமே தவறுதான்.

  14. விடாது கருப்பு on December 6th, 2006 3:27 am

    தமிழ்மணம் நிர்வாகத்தினரே,

    தனிப்பட்ட ஒரு பதிவரைத் தாக்கி வந்த பதிவுகளை நீங்கள் திரட்ட ஆரம்பித்ததில் இருந்து பிடித்தது உங்களுக்கு சனி.

    அப்போதே நாங்கள் பலமுறை உங்களுக்கு சுட்டிக் காட்டினோம். ஆனால் நீங்கள் செவிசாய்க்கவில்லை.

    இலங்கையர்கள் நடத்துவது போன்ற ஒரு தொனியை மக்கள் முன் காட்டுவதற்காக இலங்கைப் பாணி நடையுடன் பதிவுகளும் அறிவிப்பும் இட்டீர்கள்.

    இந்த அறிவிப்புகளை இடுவதும் தமிழ்மணத்தினை தொடர்ந்து யார் நடத்துவது என்றும் எனக்கு தெரியும்.

    கால்கரி சிவாவும், ஹரிஹரனும், டோண்டு ராகவனும் , மாயவரத்தான் ரமேஷ்குமாரும், கிருஷ்ணாவும், ம்யூசும், மவுல்சும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும், மலர் மன்னனும், நேசகுமாரும், வடுவூர் குமாரும், செளராஸ்டிர குமரனும், டாலர் செல்வனும், வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?

    ஒரு வழக்கு என்று வந்தால் நன்கு தீர விசாரித்து பதிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் எனக்கு நீங்கள் எந்த கடிதமும் இடவில்லை. எந்த விளக்கமும் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் என் பதிவினை நீக்கியது கண்டனத்துக்கு உரியது.

    இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும். திராவிடர்களின் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    பெரியார் புகழ் வாங்க!

    =================
    பதிவர் விடாது கறுப்பு:
    கீழுள்ளவை தொடர்ச்சியாக உங்களுக்கு அனுப்பப்பட்ட அஞ்சல்கள். [இதுபோல, செர்வாண்டிஸ் போன்றவர்களுக்கும் அவர்களின் பதிவுகளிலிருக்கும் பின்னூட்டங்களுக்காகக் குறிப்பு அனுப்பப்பட்டு, அவை விலக்கப்பட்டன; மேலே குறிப்பிட்டதுபோல, விலக்கப்படும் சாத்தியங்களுடன் அவதானிப்பிலேயிருக்கும் மற்றைய பதிவுகள், இடுகைகள் பட்டியல் விரைவிலே இங்கே இடப்படும்]:

    to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Dec 5, 2006 11:51 PM subject Your post செளராஸ்டிர removed in http://www.thamizmanam.com mailed-by srs.perfora.net
    Dear author,
    Your post செளராஸ்டிரis removed by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,
    பதிவர் விடாது கறுப்பு: உங்களின் இடுகைகள் தொடர்ந்து தமிழ்மணத்தின் எல்லையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. உங்களின் தமிழ்மணம் மீதான அக்கறைக்குத் தமிழ்மணம் நன்றி தெரிவிக்கும் அதேவேளையிலே, பதிவர்கள் மீதான தனிப்பட்ட உங்கள் பதிவின் இடுகை, பின்னூட்டங்கள் தரும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் தமிழ்மணம் அனுமதிக்கமுடியாத நிலையை எட்டிக்கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடரின், உங்கள் பதிவு விலத்தப்படவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படும் என்பதை வருத்தத்துடன் தமிழ்மணம் தெரிவிக்கின்றது. தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களென நம்புகிறது.
    நிர்வாகி
    http://www.thamizmanam.com
    ——
    to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Dec 3, 2006 10:32 PM subject Your post தமிழ்மணத்தினை removed in http://www.thamizmanam.com mailed-by srs.perfora.net
    Dear author,
    Your post தமிழ்மணத்தினைis removed by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,
    Blogger vidaathu kaRuppu, While thamizmaNam appreciate your care for thamizmaNam, it can NOT allow your post distort the view of thamizmaNam for a wide readership. It only hurts thamizmaNam. Hence, it is unfortune for thamizmaNam to remove your particular post from aggregation Thank you for continuing support.
    நிர்வாகி
    http://www.thamizmanam.com
    ——

    to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Nov 28, 2006 12:26 AM subject Your post Email removed in http://www.thamizmanam.com mailed-by srs.perfora.net
    Dear author,
    Your post Emailis removed by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,
    Though the main post is not of thamizmanma\’s concern, thamizmaNam is unconfortable with few comments in this posr. thamizmaNam kindly requested to remove few feedback to keep this post aggregating. However it has not been done, and th e-mail got bounced. Hence thamizmaNam regrets to inform you that this post is removed from thamizmaNam aggregation. thamizmaNam hopes you would understand its position. Thank you very much.
    நிர்வாகி
    http://www.thamizmanam.com
    —–
    to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Nov 5, 2006 9:04 PM subject Your post பல removed in thamizmanam.com mailed-by srs.perfora.net

    Dear author,
    Your post பலis removed by thamizmanam.com Administrator due to follwing reason,
    Dear Blogger Due to the direct attack on a blogger, unfortunately thamizhmaNam has to remove this particular post from its aggregation. ThamizhmaNam hope you would understand its position. ThamizhmaNam appreciate your continuing coorporation with understanding. Thank you very much.
    நிர்வாகி
    http://www.thamizmanam.com
    —-

    to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Oct 31, 2006 9:52 PM subject Your post பாப்பாத்தியின் removed in thamizmanam.com mailed-by srs.perfora.net

    Dear author,
    Your post பாப்பாத்தியின்is removed by thamizmanam.com Administrator due to follwing reason,
    தமிழ்மணத்துக்குப் பாதகமான விளைவினைத் தரக்கூடிய தலைப்புக்காகவும் உள்ளடங்கிய சில பதங்களுக்காகவும் இந்த இடுகையைத் திரட்டியிலிருந்து தமிழ்மணம் நீக்குகிறது. புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
    நிர்வாகி
    http://www.thamizmanam.com
    —-

  15. Vajra on December 6th, 2006 4:07 am

    வேறு பெயரில் சம்பந்தப் பட்ட நபர் திரும்பி வந்தால் தமிழ்மணம் என்ன செய்யும் ?

  16. திராவிடவெறியன் on December 6th, 2006 7:38 am

    தீண்டாமை ஒரு பாவச்செயல் என்பது தெரிந்து தீண்டாமைக்கு கொடிதாங்கி ஒரு உயர்ஜாதிகாரன் எழுதிய இந்த பதிவுக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள் தமிழ்மணத்தாரே!

    http://harimakesh.blogspot.com/2006/11/65.html

  17. towardslight on December 6th, 2006 8:32 am

    That is too good decision from your side. Keep it up. Many of the skilled people are keeping away from writing in blogs and posting in thamizmanam just because of people like karuppu. It is good for tamil blogspace. Whatever may be the case, please do not add his blog in Thamilmanam in near future too. By the way, I am not a brahmin and my support for your action is just based on the thoughts good for tamil cyberworld.

  18. Sreesharan on December 6th, 2006 8:32 am

    கருப்பு வின் பதிவு கொஞ்சம் சூடாக இருந்தது உண்மை தான். ஆனால் இங்கு இன்னும் பலர் எல்லோருடைய தன்மானத்தையும் குறி வைத்து எழுதுகிறார்களே. குறிப்பாக ஹரிஹரனின் பதிவுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை.மறைமுகமாக ஜாதியம் பேசும் இது போன்றவர்களின் பதிவுகளை ஏன் தடை செய்யக்கூடாது

  19. இறையடியான் on December 6th, 2006 8:34 am

    நிர்வாகி அவர்களே
    பொருக்க முடியாத அளவிற்க்கு
    ஆபாசாமாகவும் தனி நபர் தாக்குதலாகவும் இருக்கும் பதிவுகளை தாங்கள் திரட்டும் போது கருப்புவை மட்டும் நீக்கியது ஆச்சரியமே

    நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் உன்னை அடிக்கும் போது கைகட்டி சும்மா இரு என்ப்பது போல் உள்ளது.

    சிலர் எம்பெருமானார் நபிகளையும் பெரியாரையும் மட்டரகமாக தாக்கி எழுதும் பதிவுகளை தாங்கள் பார்க்கவில்லையா?

    இது பரிசீலனை பன்ன முடியாத தீர்ப்பா?

    நண்றி
    இறையடியான்

  20. அனானி on December 6th, 2006 8:38 am

    அனானியாக கருத்து சொல்ல காரணம் இருக்கிறது. ஏற்கனவே இந்த பதிவ்லும் பின்னோட்டத்தில் போலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் என் உண்மையான முகம் காட்டி எழுதினால் உடன் எனக்கு போலி பிளாக் கிடைக்க பெறலாம்.

    தமிழ் மணம் நிர்வாகம் தாங்கள் எடுத்த முடிவு சரியானது. இதில் இருந்த்து பின் வாங்க வேண்டாம்.
    தமிழ் வலை பதிவுகளில் குழு மனபபான்மையும் சாதி தாக்குதலும் தான் அதிகமாக காண படுகிறது.

    இதை நீக்கி சரியான தளத்தில் செல்ல இந்த முயர்சி வழி வகுக்கும். நீங்கள் நீக்கிய கருப்பு ஒரு பிரிவினரை திட்டுவதை தவிர வேறு ஏதும் எழுதினாரா என்று சொல்லவதர்க்கு இல்லை.

    இதோ அவரின் பின்னோட்டத்தில் கூட எந்த வித வம்புக்கு போகாமல் எழுதி கொண்டு இருக்கும் வடுவூர் குமார் போன்றவர்களை தாக்கும் போது இவரின் எண்ணம் தெரிகிறது.

    இந்த சுய தணிக்கை தொடருட்டும். அந்த பக்கதில் இருந்த்தும் சில பதிவுகளை நீக்குங்கள்.

    தமிழ் மணம் வளர, தமிழ் வலைபூக்கள் வளர்சி பெற நீங்கள் எடுத்த நடவடிக்கை சரியானது.. வாழ்த்துக்கள்

  21. திருவடியான் on December 6th, 2006 8:47 am

    பிறர் மனங்களை புண்படுத்தும் பதிவுகளைத் தடைசெய்வது என்பது வரவேற்கத்தக்கது.

    அதே சமயம் இந்த அளவுகோல் தயவு தாட்சண்யமின்றி பாராபட்சமில்லாமல் எல்லாப் பதிவர்களுக்கும் அது பொருந்துவதாக உங்கள் நடவடிக்கை இருக்குமேயானால்.. மிக்க மகிழ்ச்சி. அதிலிருந்து பிறழ்வதாக சகப் பதிவர்களுக்குத் தோன்றுமேயானால் தாங்கள் நடுநிலையிலிருந்து வழுவி கருப்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகத் தான் தெரியும்.

    இடுகின்ற அனைத்துப் பதிவுகளையும் தணிக்கை செய்வது சாத்தியமில்லை என்றாலும்.. புகார்கள் வரும்போது கவனித்து ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த வகையில் இன்னும் நிறையப் பதிவர்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட இரு மதத்தினரிடையே மிக கேவலமாக ஒருவரையொருவர் அபாண்டமாக பழிசுமத்தி வரும் பதிவுகள் இதற்கு ஒரு சரியான உதாரணம்.

  22. பங்காளி on December 6th, 2006 9:03 am

    அன்புடையீர்,

    தமிழ்மண நிர்வாகிகள் என்கிற முறையில் திரு.விடாது கருப்பு அவர்களின் மீதான, உங்களின் நீக்க நடவடிக்கையை ஒருதலைப் பட்சமானது என்றே கருதுகிறேன்.

    அவரை இவ்வாறு எழுதத் தூண்டியவர்களும், அவரைவிட மலிவாக எழுதிவரும் நண்பர்கள் விடயத்தில் இதே நடவடிக்கைகளை எடுத்தீர்களானால் உங்களின் நடுநிலமை பேசப்பட்டிருக்கும்.

    எனவே மற்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் நண்பர் விடாது கருப்பு அவர்களுக்கு ஒர் எச்சரிக்கை விடுத்து அவரது பதிவுகளை தமிழ்மணம் மீண்டும் திரட்ட ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்பன்
    பங்காளி

  23. blogger on December 6th, 2006 9:44 am

    Sathish aka KaruppuPaiyan was wantonly posting such posts.His blog contains only such posts. He was targetting one caste and some bloggers.
    That was pure hate speech, no hold barred.Some bloggers were
    supporting him and were encouraging him although they knew that he was indulging in
    hate speech only. So your decision is justified and is a right one.You have given him
    enough time and opportunities to correct himself.Yet he was repeating the same hate speech with more vengence. The decision by Tamizmanam though belated is an appropriate decision.The timing was apt.
    I hope that some others who write in similar lanuage and style will take note of your decision and correct themselves.

  24. mathu on December 6th, 2006 10:21 am

    its really unfortunate.
    i havent expected such things, explicitly showing partiality by thamizmanam. All the reasons stated for removal are equally applicable to others too, i feel. For the past two years I have been reading all blogs and understand the happenings. Now it shows your color.
    I strongly condemn this.

  25. SK on December 6th, 2006 10:25 am

    தமிழ்மணம் ஒரு தனி மரம்.
    நாம் அதில் தங்கும் பறவைகள்.
    நமக்கு இதிலெல்லாம் கருத்து தெரிவிக்க உரிமை இல்லையோ என எண்ணுகிறேன்.

    நடந்தது ஒரு வருந்தத் தக்க சம்பவம்.

    மற்றவர்கள் இதைப் பார்த்து தங்கள் நடையினை இனியாவது மாற்றி தமிழ்மணத்திற்குள் வருவதை ஒரு இனிய அனுபவமாகச் செய்வார்கள் என நினைக்கிறேன்.
    இந்த வேண்டுகோள் அனைவருக்குமே!

    வேகம் தணிந்த விடாது கருப்புவின் விவேகமான பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்.

    அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்பதை விடுத்து, மாற்றம் தன்னளவில் கொண்டு வந்து, “தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு ஒரு இக்கட்டான நிலையினை கொடுக்காமல் இருக்க” அனைவரும் பாடுபட வேண்டும்.

    தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

  26. கோவி.கண்ணன் on December 6th, 2006 10:40 am

    //தமிழ்மணம் ஒரு தனி மரம்.
    நாம் அதில் தங்கும் பறவைகள்.
    நமக்கு இதிலெல்லாம் கருத்து தெரிவிக்க உரிமை இல்லையோ என எண்ணுகிறேன்.

    வேகம் தணிந்த விடாது கருப்புவின் பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்.//

    இது நன்று …! எஸ்கே ஐயாவை நானும் வழிமொழிகிறேன்

  27. மாயவரத்தான்... on December 6th, 2006 11:21 am

    சற்றே காலம் தாழ்ந்தாலும் மிக சரியானதொரு முடிவு.

    நன்றி தமிழ்மணம்.

    மேற்படி விடாது கருப்புவை பதிவு & பின்னூட்டங்களையும் என்னுடைய பதிவையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களைப் பற்றிய விபரங்களை விடாது கருப்புவிற்கு அனுப்பி வைக்கவும். அவர்களைப் பற்றி அந்த நபர் கீழ்த்தரமாக எழுதிய பிறகு இதே கருத்தோடு வந்தால் வரவேற்கிறேன்.

    எந்த ஒரு நிலையிலும் யாரையும் தரம் குறைவாக நான் தாக்கி எழுதியது கிடையாது என்பது தமிழ் வலையுலகைச் சேர்ந்த அனைத்து நடுநிலையாளர்களுக்கும் தெரியும்.

    மிக்க நன்றி தமிழ்மணம்.

    வஜ்ரா அவர்கள் கேட்டபடி, மேற்படி நபர் (வழக்கம் போல) வேறொரு பெயரில் இங்கே வந்தால் அதை தடுப்பது எப்படி என்பதை அறியத் தருவீர்களா?! அதற்கு தொழில் நுட்ப மூலம் எதுவும் தீர்வு உண்டா என்பதையும் யோசிக்க வேண்டும். சிரமமான காரியம் தான். என்றாலும் விபரம் அறிந்தவர்கள் இதற்கு யோசனை தெரிவிக்க வேண்டும்.

  28. தமிழ்மணம் on December 6th, 2006 11:48 am

    தனி நபர்கள் மீதான அவதூறுகள், மிரட்டல்கள், ஆபாசத் தாக்குதல்கள் இவை மட்டுமே கணக்கிலெடுக்கப்படுகின்றன. இப்பட்டப்பட்ட பதிவுகளைச் சுட்டிக்காட்டினால் தமிழ்மணம் பரிசீலிக்கும். அந்த அடிப்படையில் ஹரிஹரனின் சில இடுகைகள், ஓகையின் ஓர் இடுகையின் பின்னான தனிப்பட்டவர்கள்மீதானதும் தமிழ்மணம் மீதானதுமான ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களின் அனுமதிப்பு, மதம் சம்பந்தமாக எல்லைமீறிய வசைப்பதிவுகள் உட்பட ஏற்கனவே வந்த சில முறையீடுகள் பரிசீலனையில் உள்ளன. அவை குறித்து விரைவில் தமிழ்மணம் முடிவெடுக்கும். தமிழ்மணத்தின் முடிவுகளுக்கு கருத்தியல் அடிப்படையாக இருக்காது. ஆகவே கருத்து வேறுபாடுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து புகார்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டுகிறோம். செர்வாண்டிசின் பின்னூட்டங்களிலே இருந்த தமிழ்மணம் தொடர்பான ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களை அவர் அனுமதிப்பது குறித்து அவ்விடுகை விலக்கப்பட்டது. அவருக்குச் சுட்டிக் காட்டியபின்னால், அவரால் அப்பின்னூட்டங்கள் விலக்கப்பட்டன. அதனைத் தமிழ்மணம் வரவேற்கிறது. ஆதாரங்களுடன் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தமிழ்மணம் மறுக்காது. இயலுமானவரையிலே பதில் அளிக்கும். ஆனால், எப்புறத்திலிருந்தும் எக்கருத்தியலிருந்தும் ஆதாரமற்ற மறைமுகமான தமிழ்மணம் மீதான தாக்குதல்களையோ வேண்டுகோள் என்ற பாவனையிலான மென்மையான பயமுறுத்தல்களையோ தமிழ்மணம் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரிலே, தன்னைச் சுட்டுக்கொண்டு இனியும் ஆதரிக்க முடியாத நிலையிலேயிருக்கின்றது. விடாது கறுப்பின் பதிவு தொடர்பாக தமிழ்மணம் ஆலோசனை செய்யும்.

    மேலும் இப்பதிவினைத் தனிப்பட்ட சச்சரவுகளுக்கான களமாகப் பயன்படுத்துவதைத் தமிழ்மணம் அனுமதிக்காது.

    புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

  29. மாயவரத்தான்... on December 6th, 2006 11:57 am

    விடாது கருப்புவின் பதிவிலேயே என்னைப் பற்றியும் மேலும் பல சக பதிவர்களைப் பற்றியும் தரக்குறைவாக பின்னூட்டம் இருப்பது மேற்படி பின்னூட்டக்காரருக்கு தெரியவில்லையா.. அல்லது அந்த வார்த்தைகள் எல்லாம் இவரது அகராதியில் கெட்ட வார்த்தைகள் இல்லையோ?!

  30. மாயவரத்தான்... on December 6th, 2006 12:08 pm

    /விடாது கறுப்பின் பதிவு தொடர்பாக தமிழ்மணம் ஆலோசனை செய்யும்//

    சம்பந்தப்பட்ட கேவலமான பதிவுகளையும், பின்னூட்டங்களையும் நீக்கினால் தானே?!

    ====
    பதிவர் மாயவரத்தான்:

    இங்கே உங்களது கேள்வி அநாவசியமானதென்றே தோன்றுகிறது. விடாது கறுப்பின் பதிவினை நீக்கியது இங்கே அச்செயற்பாட்டினை எதிர்ப்பவர்களுக்கு ஒரு தோல்வியாகவோ அல்லது அதனை ஆதரிப்பவர்களுக்கு ஒரு வெற்றியாகவோ எந்நிலையிலும் கருதப்படக்கூடாதென்பதினை உறுதியாகத் தெரிவிக்க, தமிழ்மணம் விரும்புகிறது. பதிவு அரசியல் தமிழ்மணத்தின் நோக்காக என்றும் இருந்ததில்லை; இருக்கவும் போவதில்லை. தமிழ்மணம் பதிவர்களினதும் வாசகர்களினதும் வசதிக்காக, தரமான பதிவுகளை ஒருங்குபடுத்தும் ஒரு திரட்டி மட்டுமே. தமிழ்மணத்தின் சேவையின் தரமும் அதன் இயல்பான செயற்பாடுகளுக்கு இடரேதும் இல்லாதிருப்பதே தமிழ்மணத்தின் செயற்பாடுகளின் நோக்குகளாகும். அதற்கப்பால், அதற்கேதும் பக்கம்சாய் அரசியல் இல்லை. அவ்வகையிலே விடாது கறுப்பின் பதிவினை எக்காரணத்துக்காக நீக்கியதோ அக்காரணத்துக்கான நிவர்த்தி அவர் பதிவிலே தென்பட்டால் அப்பதிவினை நீக்கிய தமிழ்மணமே அதை ஏன் சேர்க்கிறது என்று தகுந்த காரணத்தினைத் தன் விதிமுறைகளூடாகக் காட்டியபின் சேர்த்துக்கொள்ளும். அப்போது வேண்டுமானால், இப்படியான கேள்விகளைக் கேட்பது ஏதேனும் விதத்திலே பயனுள்ளதாகவிருக்கலாம்.

    நன்றி.

    தமிழ்மணம் நிர்வாகம்

  31. SK on December 6th, 2006 12:10 pm

    இப்பதிவிற்கு பின்னூட்ட அனுமதியே இருந்திருக்கக் கூடாது என்பது என் கருத்து.

    என்னுடையதையும் சேர்த்தே சொல்கிறேன்!!

  32. ராஜா on December 6th, 2006 12:19 pm

    சரியான முடிவு. வெகு காலமாக தரம் தாழ்ந்த பதிவுகளையே எழுதிவந்தார். இங்க விடாதுகருப்புக்கு ஏன் ஜல்லி அடிக்கும் படுகிறது என்று நன்கு சிந்திப்பவர்களுக்கு தெரியும். பகுத்தறிவு பகுத்து அறிவதற்கே

  33. மாசிலா on December 6th, 2006 12:19 pm

    //ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை. அதன் பிந்தான் தோழர் கருப்புவின் தொனி மாறியதை அறிவோம்.

    அனைத்து விதிகளும், சட்டங்களும் அதிகாரங்களால் மட்டுமே கட்டபட்டவை என்று தெரிந்தபோதும் முடிவை பரிசிலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    “வரவனையான்” செந்தில்//

    இதையே நானும் மறுமொழிகிறேன்.
    மாசிலா.

  34. ஒரு பதிவர் on December 6th, 2006 1:00 pm

    நடுநிலை தவறாது செயல்பட்ட தமிழ்மண நிர்வாகத்துக்கு நன்றி.பதிவர்களின் குடும்ப உறுப்பினர்களை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் தாக்கியதை எவ்விதத்திலும் ஜீரணிக்க முடியவில்லை.சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து தமிழ்பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவ வழிவகுத்து விட்டீர்கள்.

    அனைவரும் ஏற்கும் தீர்ப்பை எந்த நீதிபதியும் தர இயலாது.அப்படித்தரும் தீர்ப்பு காம்ப்ரமைஸ் தீர்ப்பாகும், நீதிதவறாத தீர்ப்பு சிலருக்கு ஜீரணிக்க முடியாததாகத்தான் இருக்கும்.

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    போலி டோண்டுவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட
    பெயர் சொல்ல முடியாத ஒரு பதிவர்

  35. ஆழியூரான் on December 6th, 2006 2:20 pm

    இது ஒருதலை பட்சமான முடிவு.உண்மையாகவே நீங்கள் புரிந்துணர்வுடன்தான் ஒத்துழைப்பு தருகிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது.ஆம் என்றால் தமிழ்மணத்தின் புரிந்துணர்வில் கோளாறு இருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.இது கருத்து ஊடகம்.இதில் இருபக்க நியாயங்களை அனுமதிப்பதே ஒருங்கிணைப்பவரின் கடமை.உண்மையில் நீக்க வேண்டிய பதிவுகள் எவையெவை என்பதை ஒரு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்வதுதான் நியாயம்.தயவுசெய்து உங்கள் முடிவை பரிசீலியுங்கள்.

  36. Vikram on December 6th, 2006 2:59 pm

    மிக சரியான முடிவு.

    மிக்க நன்றி தமிழ்மணம்

  37. gulf-tamilan on December 6th, 2006 3:55 pm

    நீக்க வேண்டிய பதிவுகள் எவையெவை என்பதை ஒரு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்வதுதான் நியாயம். உங்கள் முடிவை பரிசீலியுங்கள்

  38. உண்மையான திராவிடன் on December 6th, 2006 3:56 pm

    தமிழ் வலைப்பதிவுலகின் நெஞ்சிலிருந்த முள் நீக்கப் பட்டுவிட்டது.

  39. உண்மையான திராவிடன் on December 6th, 2006 3:58 pm

    //
    உண்மையில் நீக்க வேண்டிய பதிவுகள் எவையெவை என்பதை ஒரு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்வதுதான் நியாயம்.தயவுசெய்து உங்கள் முடிவை பரிசீலியுங்கள்.
    //

    இதுலயும் “கள்ள ஓட்டு” போட்டு உங்க கொளுகைக்கு வெறோதமா இருக்குற பதிவர்களை விரட்டவா ?

    தமிழ்மணம் இந்த விஷயத்தை அறிவித்துவிட்டு இந்த பதிவுக்கு பின்னூட்ட வசதியை நீக்கிவைத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
    ===

    பதிவர் dravidian@asshole.com:

    செய்திருக்கலாம்தான். ஆனால், தமிழ்மணத்தின் முடிவு குறித்த கருத்துகள் பகிரங்கமாகப் பேச வசதி செய்து தராவிட்டால், அதுவும் தமிழ்மணம் பதில் கூறமுடியாத இடங்களிலெல்லாம் கருத்துச்சுதந்திரம் தரவில்லை என்ற அர்த்தத்திலே தமிழ்மணத்தினைத் தாக்குவதற்குப் பயன்படக்கூடும். அப்படியான நிலையை ஏற்படுத்தத் தமிழ்மணம் விரும்பவில்லை. உதாரணத்துக்கு உங்கள் முகவரியைக் காரணம் காட்டி முதலிரண்டு தடவைகள் உங்கள் பதிவினை அனுமதித்திருக்காவிட்டால், யாராவது கருத்துச்சுதந்திரம் என்ற பெயரிலே வேறெங்காவது தமிழ்மணம் பற்றிக் கருத்தினைத் தெரிவிக்கும் நிலை ஏற்படும். ஆனால், இங்கேயே அதைச் சுட்டிக்காட்ட வசதி ஏற்படுத்தித் தந்தால், அப்படியான நிலை ஏற்படாதெனத் தோன்றுகிறது.

    தமிழ்மணம் நிர்வாகம்

  40. kala on December 6th, 2006 4:15 pm

    oru pothu idathil yellorume nagaregamagathan natan thu kolkirom.patithavarkal pangerkum athu um sinthika athai yelithil kontu varakutiya,valimaiyana penavai vaitiruppavar kal,yaraka irunthalum,avarkal karuthukalai sabai kuriya mariyathaiyudan than solla ventum.nam onrum katumirantigal allave.parasparam kanniyam illathavarkal yeluthave varaventiyathilai.

  41. கொழுவி on December 6th, 2006 5:50 pm

    இதில் வடுவூர் குமார், குமரன் போன்றோர் விடாதுகருப்புவின் எதிர்த்தரப்பாக எப்படி வந்தார்கள் என்பது விளங்கவில்லை.
    அப்படியாயின் யாரை எதிர்ப்பதென்பதில் விடாது கருப்புக்கு எந்த விளக்கமோ கொள்கையோ இல்லையென்பதாகவே நான் விளங்கிக்கொள்கிறேன்.
    சகட்டுமேனிக்கு தன் எதிரிகளைத் தானே வரித்துக்கொண்டு வசைபாடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறாரோ?

    குறிப்பிட்ட பதிவு சம்பந்தமான அதிருப்தியை தமிழ்மண நிர்வாகம் தெரிவித்தபோது ‘உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணியப்போவதில்லை’ என்று முன்பொருமுறை நிர்வாகத்துக்கு எதிராக விடாது கருப்பு எழுதியபோது, பிரச்சினை தொடர்பாகவோ தமிழ்ப்புரிதல் தொடர்பாகவோ கருப்புக்கு அடிப்படைப் புரிதலில்லை என்றே கருதிக்கொண்டேன்.

    இந்தப் புரிதலற்ற தன்மை இன்னும் பலருக்கு இருப்பதாகவே தெரிகிறது.

  42. குமரன் (Kumaran) on December 6th, 2006 6:02 pm

    //இதில் வடுவூர் குமார், குமரன் போன்றோர் விடாதுகருப்புவின் எதிர்த்தரப்பாக எப்படி வந்தார்கள் என்பது விளங்கவில்லை.
    //

    நன்றி திரு.கொழுவி.

  43. குமரன் (Kumaran) on December 6th, 2006 6:06 pm

    //ஒரு வழக்கு என்று வந்தால் நன்கு தீர விசாரித்து பதிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் எனக்கு நீங்கள் எந்த கடிதமும் இடவில்லை. எந்த விளக்கமும் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் என் பதிவினை நீக்கியது கண்டனத்துக்கு உரியது.
    //

    [பதிவர் குமரனின் பதில் நீக்கப்பட்டது]

    பதிவர் குமரன்:

    மன்னித்துக்கொள்ளவேண்டும். விடாது கறுப்புக்கான தனிப்பட்ட உங்கள் பதிலுக்கும் இதே அலைவரிசையிலே மற்றவர்களின் பதில்களுக்கும் ‘தமிழ்மணம் அறிவிப்புகள்’ பதிவு பொருத்தமான களமல்ல என்பதால், அனுமதிக்கவில்லை. இதைப் புரிந்துகொள்வீர்களெனத் தமிழ்மணம் நம்புகிறது.

    நன்றி.

    தமிழ்மணம் நிர்வாகம்.

  44. மஞ்சமாக்கான் on December 6th, 2006 7:24 pm

    //எந்த ஒரு நிலையிலும் யாரையும் தரம் குறைவாக நான் தாக்கி எழுதியது கிடையாது என்பது தமிழ் வலையுலகைச் சேர்ந்த அனைத்து நடுநிலையாளர்களுக்கும் தெரியும்.//

    மாயவரத்தான் அவர்களே,

    அப்போ ராபின்ஹூட் என்ற பதிவில் மோகமாக எழுதிய ரமேஷ் யார்?

    சர்வாண்டஸ் என்ற பதிவில் மிக அசிங்கமாக எழுதிய ராகவன் யார்?

  45. அனானிமஸ் on December 6th, 2006 7:27 pm

    என் பதிவை ஏன் நீங்கள் அனுமதிக்கவில்லை?

    பார்ப்பன மிருகங்களை பதிவிட அனுமதிக்கும் நீங்கள் ஒரு ஏழை திராவிடரை பதிவிட அனுமதிக்காதது எங்ஙனம் தகும்?

  46. ஒட்டக் கூத்தர் on December 6th, 2006 7:34 pm

    சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து எழுதுகிறேன். செளராஸ்டிரர்கள் ஒரு போதும் பார்ப்பனர் ஆக முடியாது. ஒரு செளராஸ்டிரரைப் பற்றி எழுதியதும் தமிழ்மணத்துக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதற்குமுன் பெரியாரைப் பற்றி மிகவும் அசிங்கமாக கீழ்த்தரமாக எழுதிய கால்கரி சிவா, வஜ்ரா சங்கர், மாயவரத்தான், ஹரிஹரன், ஜயராமன், டோண்டு பதிவுகளை வைத்து அழகு பார்க்கும் உங்களுக்கு கறுப்பு பதிவினைக் குறை சொல்ல அதிகாரமில்லை.

  47. ஜோ on December 6th, 2006 8:39 pm

    தமிழ்மண நிர்வாகத்துக்கு,
    இது மிகவும் சிக்கலான விடயம் .இதில் எல்லோரையும் திருப்தி படுத்திவிட முடியாது .ஆனாலும் அனவருக்கும் விளக்கங்கள் கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் .வலைப்பதிவுகளில் தற்போது பிரச்சனை பதிவுகளால் மட்டுமல்ல .பின்னூட்டங்களே பதிவுகளை விட மோசமாகவும் ,புத்திசாலி பதிவர்கள் சிலர் எதிர் மறை நக்கல் ,நையாண்டி (கெட்ட வார்த்தை பயன்படுத்தவில்லையாம்) மூலம் மற்றவரை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது .இவற்றுக்கெல்லாம் தமிழ்மணமே தீர்வு கண்டு விட முடியாது .எனவே “பதிவராய் பார்த்து திருந்தாவிட்டால் ,வலைப்பதிவை வளர்க்க முடியாது ” என்பது தான் உண்மை.

    முடிந்த அளவுக்கு சில வரைமுறைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுக்க முடியும் .அதை தாங்கள் செய்வதில் சில மன வருத்தங்கள் ஏற்படலாம் .ஆனால் பொதுநலன் கருதி அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

    விடாது கருப்பின் கருத்துக்களில் பலவற்றில் உடன்பாடு இருந்தாலும் ,அவர் எழுத்து நடை தவிர்க்கப்படவேண்டிய ஒன்று .மொழிநடையை ,நேரடித் தாக்குதல்களை அவர் குறைத்துக்கொண்டிருந்தால் அவர் கருத்து பலருக்கு சென்று சேர வாய்ப்புண்டு .அதை அவர் செய்யத்தவறியதால் அவர் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது .தமிழ்மணத்தின் அந்த முடிவு சரியா தவறா என்பது அதே அளவையோடு தமிழ்மணம் தொடர்ந்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்..எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்ய வேண்டுமென பதிவர்கள் எதிர் பார்க்க கூடாது .தமிழ்மணத்துக்கு அவகாசம் கொடுப்பது அவசியம்.

    விடாது கருப்பின் பதிவை தமிழ்மணம் நீக்கியது போல ஹரிஹரன் என்பவருடைய பதிவும் நீக்கப்பட்டிருக்க வேண்டும் .சமீப காலங்களில் அவர் மிகக் கேவலமாகவும் ,உள்நோக்கத்துடனும் எழுதி வருகிறார் .அவரது பதிவை நீக்குவது பற்றி தமிழ்மணம் தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் அந்த முடிவு எடுப்பதற்கு பிற பதிவர்களின் கருத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமானால் என்னுடைய இந்த கருத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

    நன்றி!

  48. நாடோடி on December 6th, 2006 9:13 pm

    தாமதாய் வந்தாலும் மிகச்சரியான முடிவு. ஜோசப் அய்யா சொன்னது போல “ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும் என்று நம்புகிறேன்..”

  49. கோவி.கண்ணன் on December 6th, 2006 9:20 pm

    தமிழ்மண நிர்வாகத்துக்கு,

    ஜோவின், மேற்கண்டக் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன் !

    நன்றி

  50. ஒரு பதிவர் on December 6th, 2006 9:21 pm

    ஹரிஹரன் எந்த பதிவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதவில்லை. பெரியாரை கிண்டல் செய்து எழுதினார். ஆனால் பெரியார் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுள் அல்லவே?மனிதர்களை காயப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமே அன்றி மனிதர்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் புனிதமாக கருதுவதையும் தாக்குதை தவிர்க்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது.

    ஜோவுக்கு தரும் மரியாதையை நான் கிறிஸ்தவத்துக்கு தர முடியாது. டோண்டுவுக்கு ஜோ தரும் மரியாதையை டோண்டுவின் ஜாதியத்துக்கு அவர் தரவேண்டும் என்பதை எதிர்பார்க்க இயலாது.

    மதிப்பிற்குறியவர்கள் தனிமனிதர்கள் தானே அன்றி அவர்களின் நம்பிக்கைகள் அல்ல. பொதுவாழ்வுக்கு வந்த மனிதர்கள் விமர்சனத்துக்கு ஆளாவதை தவிர்க்க இயலாது.பெரியாரை பற்றிய விமர்சனத்துக்கு (மட்டும்) வரம்பு வைக்கும் அவரது பக்தர்கள் செயலை அவரே ஆதரிக்க மாட்டார்.

  51. பெயர் சொல்ல விரும்பாதவர் on December 6th, 2006 9:22 pm

    தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    விடாது கருப்பு பதிவி கண்டிப்பாக நீக்க பட வேண்டிய ஒன்று தான். வக்கிர கருத்துகளை கண்ணியமான எழுத்துகளில் எழுதினாலும் வக்கிரம் வக்கிரம் தான்.

    குமரன் , குமார் போன்ற தனி பட்ட பதிவாளர்களை வாய் கூசும் வார்த்தைகளை வைத்து தாக்கியது மன்னிக்க பட வேண்டியது அல்ல.

    மேலும் பின்னோட்டங்களில் தனக்கு தானே இவர் குடும்பம் தோல் வியாபாரம் செய்கிறது. இவர் என்ன செய்கிறார் என்று ஆபாச வார்த்தைகளை போட்டு தாக்கியது கண்ணியம் இல்லாத செயல்.

    தமிழ் மணம் இது போல களை எடுப்பு செய்வது நீண்ட கால தமிழ் வலை பூக்களின் வளர்சிக்கு வழி வகுக்கும்.

    நாங்கள் இலவசமாக உங்கள் சேவையை பயன் படுத்துகிறோம். உங்களை குற்றம் சொல்ல எனக்கு அருகதை இல்லை என நினைக்கிறேன். தனி பட்ட அலுவல்கள பல இருப்பினும் அனைவரின் கருத்து அறியு நினைக்கும் உங்கள் பண்பான செயல் போற்ற தக்கது

  52. Suresh on December 6th, 2006 9:27 pm

    Good decision. Vidathu karuppu’s language crossed all the limits.

  53. Sivabalan V on December 6th, 2006 9:27 pm

    திரு.ஜோ வின் கருத்து ஏற்புடையதே!! நானும் உடன்படுகிறேன்.

    நன்றி

  54. குமரன் (Kumaran) on December 6th, 2006 9:49 pm

    புரிந்து கொள்கிறேன் தமிழ்மணத்தாரே.

  55. ஜோ on December 6th, 2006 9:59 pm

    ஒரு பதிவர்,
    ஹரிஹரன் நம்பிக்கைகளை மட்டுமே தாக்குகிறார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .அவர் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தவில்லையே ,யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையே என்று சொல்லி தப்பிக்க நினைப்பது சட்டத்தின் ஓட்டைகளை சாமார்த்தியமாக பயன்படுத்தி தப்பித்துக் கொள்ள நினைப்பவரின் வக்கீல் செய்யும் வாதம் .நேரடித் தாக்குதலுக்கும் ,புத்திசாலித் தனமான மறைமுக ,நையாண்டி ,வஞ்சப்புகழ்ச்சி எழுத்து மூலம் தூண்டி விடுவதற்கும் சட்டப்படி வேறுபாடு இருக்கலாம் .ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ,அது ஏற்படுத்தும் விளைவுகளும் ஒன்று தான் .அதனால் எனக்கு வேறுபாடு தெரியவில்லை.

  56. BadNewsIndia on December 6th, 2006 10:28 pm

    கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது கொடுமைதான்.

    ஆனால்,
    ‘விடாது கறுப்பு’ சமீப காலமாக, அவர் பதிவுகளில்,தகாத வார்த்தைகள் உபயோகிப்பதும், சரியான மட்டுறுத்தல் செய்யாமல் பின்னூட்டங்கள் அனுமதித்தும் வாடிக்கையாக செய்து கொண்டிருந்தார்.

    யார் சொல்லியும் கேட்கவில்லை.

    ‘சூடு’ குறைந்து, நல்ல கருத்துக்களை ‘அசிங்கம்’ இல்லாமல் பதிய விருப்பப்பட்டு மீண்டும் புதிய பதிவுடன் வந்தால் அவருக்கு அனுமதி தர வேண்டும் என்பதே என் கருத்து.

    அடுத்தவரை நாகரீகம் இல்லாமல் தாக்குவது சரியல்ல. இதை செய்யும் மற்ற பதிவர்களும், அவர்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    புரிதலுக்கு நன்றி!

    அநாகரீக பதிவாளர்களை உடனுக்குடன் தமிழ்மணத்துக்கு தெரியப் படுத்துங்கள்.

    தமிழ்மண நிர்வாகிகளும், உடனக்குடன் ‘எச்சரிக்கை’ அனுப்பி, முடிந்தவரை பதிவர்களை ‘திருத்தப்’ பார்க்க வேண்டும்.

    நமக்குள்ள அடிச்சுக்கவே நேரம் சரியா இருக்க. என்னிக்கு ஊரு திருந்தரது ?

    (suggestion: Thamizmanam can colour code ‘problem’ blogs when listing the blogs during the ‘evaluation’ period in addition to sending an email to the blogger. This will give an indication for the readers and the blogger to take appropriate steps).

  57. கபாம்குபீம் on December 6th, 2006 10:37 pm

    கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருவர் கருத்தை கருத்தால் எதிர்க்க திரணியில்லாமல், ஒரு அகராதி தமிழ் கெட்டவார்த்தைகளின் அகராதியாக உருவெடுத்து கீழ்த்தரமான வாத்தைகளில் எழுதினால் அதன் பயனை அனுபவித்துதானே வேண்டும்!

    தமிழ்மணம் தன் கடைமையை செய்திருக்கிறது – என் வாழ்த்துக்கள்.

    அடுத்து சட்டம் தன் கடைமையை செய்யும் என நம்புகிறேன். அடுத்தவன் அம்மா, சகோதரி பற்றி அவலமாக இமெயில் அனுப்புவதும், இமெயில் ஃபோர்ஜரி செய்வதும், கொலை மற்றும் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுவதற்கும் பலன் விரைவில் கிட்டட்டும்.

  58. மரைக்காயர் on December 6th, 2006 10:59 pm

    திரு. ஜோ அவர்களின் மேற்கண்ட கருத்துக்களில் நான் உடன்படுகிறேன்.

  59. (ஓகை) நடராஜன் on December 6th, 2006 11:54 pm

    //ஓகையின் ஓர் இடுகையின் பின்னான தனிப்பட்டவர்கள்மீதானதும் தமிழ்மணம் மீதானதுமான ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களின் அனுமதிப்பு, மதம் சம்பந்தமாக எல்லைமீறிய வசைப்பதிவுகள் உட்பட ஏற்கனவே வந்த சில முறையீடுகள் பரிசீலனையில் உள்ளன//

    இது குறித்து என்னிடம் யாரும் நேரிலோ தனி மடலிலோ கேட்கவில்லை. அப்பதிவின் பின்னூட்டங்களுக்கு முடிந்தவரை அங்கேயே பதில் அளித்திருக்கிறேன். எனக்கு ஏதும் தவறாகத் தெரியவில்லை.

    ஆனால் இது குறித்து தமிழ்மனத்திற்கு புகார் வந்திருக்கிறது என்று இப்போது அறிந்து கொண்டதனால் அந்த பதிவின் அனைத்து பின்னூட்டங்களையும் நீக்கிவிடுகிறேன்.

    கருத்தளவில் இல்லாமல் மனத்தளவில் வருத்தம் இருக்குமானால் தொடர்புடைய அனைவரும் என்னை மன்னிப்பார்களாக.

    தமிழ்மனம் தொடர்பான ஒன்று இந்த அளவு திறந்த விவாதத்துடன் நடப்பது மிகவும் பாராட்டுக்குறியது. தமிழ்மனத்துக்கு நன்றி.

    எல்லா பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். கருத்து எவ்வளவு கடுமையாயினும் நல்ல மொழியிலேயே அதைச் செய்யுங்கள். எவ்வளவு அருமையான உணவாக இருந்தாலும் அழுக்குத் தட்டில் அதை பரிமாற வேண்டாம்.

    நன்றி.

  60. பொன்ஸ் on December 6th, 2006 11:55 pm

    திரு ஜோ அவர்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளன. அதையே நானும் வழிமொழிகிறேன்..

  61. பரதரசு on December 7th, 2006 12:19 am

    ஒரு பதிவர் என்ற நண்பரின் கருத்தில் நான் உடன்படுகிறேன் , ஹரிஹரன் யார் குடும்பத்தை பற்றி அசிங்கமாக எழுதினார் ? பார்ப்பன நாய்களே என்று தலைப்பிலேயே எழுதுகிறார்களே ? அதற்குண்டான நியாயம் பெரியார் பற்றிய பதிவுக்கு இல்லையா என்ன ? தங்கள் தரப்பிலிருந்து ஒரு ஆள் தண்டிக்கப்பட்டவுடன் எதிர்தரப்பிலும் ஒரு ஆள் விழவேணுமெண்று ஆசைப்படுகிறார்கள் .

    பரதரசு

  62. திராவிடவெறியன் on December 7th, 2006 12:37 am

    தமிழ்மணம் இப்போது தனது எதிரிகள் யார் என்று உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

  63. ஒரு பதிவர் on December 7th, 2006 1:48 am

    ஜோ

    நம்பிக்கைகள் தாக்கப்பட்டக் கூடாது என்றால் அப்போது பார்ப்பனியம் கூட நம்பிக்கை தான். அது மட்டும் தாக்குதலுகுட்படலாமா?அதை தாக்கிய பெரியார் தவறு செய்தவராகவில்லையா?ராமர் சிலையை செருப்பால் அடித்த அவரது செயல் ஹரிஹரனை விட எந்த விதத்தில் வேறுபட்டது?

    பெரியார் மனிதர்களை மதித்தார்.ஆனால் அதே சமயம் அவர்களின் நம்பிக்கைகளை அடித்து உடைக்கவும் தவறவில்லை.

    இதில் சட்டத்தின் ஓட்டை, கீட்டை என எதுவும் இல்லை. பெரியாருக்கு அவரது எதிர்ப்பாளர்களிடம் கிடைத்த கருத்து சுதந்திரம் அவரது சீடகோடிகளால் அவர்களது எதிர்ப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பது தான் முக்கியம்.

    மீண்டும் சொல்கிறேன். தனிமனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களது நம்பிக்கைகள் மதிக்கபட வேண்டியவையோ, மரியாதை தரப்பட வேண்டியவையோ அல்ல.

    அப்படி நம்பிக்கைகளுக்கு மரியாதை தரவேண்டுமென்றால் அதை பிராமணீயத்துக்கு தரத்தவறிய பெரியார் தான் முதல் குற்றவாளி ஆகிறார்.

  64. ஒரு பதிவர் on December 7th, 2006 2:01 am

    //நேரடித் தாக்குதலுக்கும் ,புத்திசாலித் தனமான மறைமுக ,நையாண்டி ,வஞ்சப்புகழ்ச்சி எழுத்து மூலம் தூண்டி விடுவதற்கும் சட்டப்படி வேறுபாடு இருக்கலாம் .ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ,அது ஏற்படுத்தும் விளைவுகளும் ஒன்று தான் ./

    தனிமனிதர்களை தாக்குவதற்கும் அவர்களின் நம்பிக்கைகளை தாக்குவதற்கும் உள்ள வித்யாசத்தை நீங்கள் நேரடி தாக்குதலுக்கும், மறைமுக தாக்குதலுக்கும் உள்ள வித்யாசமாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என தெரியவில்லை.

    “சுந்தர சுப்ரமணியன் என்ற முட்டாள் பதிவர்” என்பது தனிப்பட்ட தாக்குதல்

    “அழகிய முருகன் (சுந்தர சுப்ரமணியத்தின் மொழிபெயர்ப்பு) என்ற முட்டாள் பதிவர்” என்பது நீங்கள் சொன்ன மறைமுக, வஞ்சகப்புகழ்ச்சி அணி.

    ஆனால் சுந்தர சுப்ரமணியம் பின்பற்றும் எதாவது ஒரு நம்பிக்கையை தாக்குவதும் மேல்கண்ட இரண்டும் முற்றிலும் வேறு வேறானவை.

    ஒரு மனிதனின் நம்பிக்கையை எத்தனை இழிவுபடுத்தினாலும் அது அந்த மனிதனை இழுவுபடுத்துவதாகாது. அப்படி அந்த மனிதன் நினைத்துக் கொண்டால் அது விமர்சனத்தை தாங்க இயலாத அவனது பக்குவமின்மையை குறிக்குமே அன்றி வேறெதையும் குறிப்பதாகாது. ஜெயலலிதா மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால் அவரை தாக்க கூடாது என நான் சொல்ல முடியுமா?

  65. ஒரு பதிவர் on December 7th, 2006 2:04 am

    In a lighter vein ஹரிஹரனின் பதிவை படிக்கும் பெரியார் பக்தர்களுக்கு உடனடி தேவை அண்ணா சொன்ன ‘எதையும் தாங்கும் இதயம்’

  66. தரம் தாழ்ந்த பதிவுகள் நீக்க தமிழ்மணம் எடுத்த இந்த நடவடிக்கை என்னைப் பொறுத்தவரை மிகச் சரியானதே. சுட்டிக் காட்டிய பிறகும், திருத்திக் கொள்ளாமல் தொடர்ந்தது தவறு. கண்டபடி எழுதுவதும், கருத்துச் சுதந்திரமும் ஒன்றல்ல. இது தொடக்கமாக இருக்கட்டும், இது போல், எழுதுகின்ற இன்னும் சிலருக்கும் இது பாடமாக இருக்கட்டும். களைகள் நீக்கப்பட்டு, நல்மணம் கமழும் இடமாய் தமிழ்மணம் மணக்கட்டும்!

  67. jaallyjumper on December 7th, 2006 3:42 am

    நாகரீகமான மொழியில் அநாகரீகத்தை பரப்பலாம். ஆனால் அநாகரீகமான மொழியில் நாகரீகத்தை பரப்பினால் அது குற்றம்.இவ்வாறு கருதும் தமிழ்மணத்தில் உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

  68. திருவடியான் on December 7th, 2006 4:45 am

    நண்பர் JOE வின் கருத்துக்களுக்கு நானும் உடன்படுகிறேன். வில்லை விட்டு அம்பை நோவானேன்.

    பேசாமல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையாக ஒரு பதிவு எந்த வகையில் ஒருவரைப் பாதிக்கிறது என்பதை… உதாரணமாக.. அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தியிருப்பது.. மதரீதியான மோதல்களுக்கு வழிவகுப்பது.. கலாச்சாரச் சீர்கேடு.. ஆபாசக்கருத்துக்கள் போன்ற செக்பாக்ஸ் வைத்து குறைகளைக் கேட்பதற்கு வழி செய்யுங்கள். அதை எல்லோரும் பார்க்கும் படியாகவும் வையுங்கள். இது ஒரு வகையில் இந்த மாதிரியான குறைகளைக் களைய வழி வகுக்கும். இந்த மாதிரியான தொடர் குறைகளை வகைப்படுத்தி மாதமொருமுறை அந்தப் பதிவரின் பதிவை பரிசீலித்து விலக்குவதா அல்லது தொடர்வதா என்று முடிவு செய்யலாம். இதையும் வெளிப்படையாக எல்லாரும் பார்க்கும் படியாக ஒரு பக்கத்தில் தொடர்ந்து காட்டலாம்.

  69. towardslight on December 7th, 2006 8:02 am

    I cannot say anything other than that supporters of black should go to mental asylum. Otherwise, they may be too young to blogsworld to know wh

  70. towardslight on December 7th, 2006 8:05 am

    I cannot say anything other than that supporters of ‘black’ should go to mental asylum. Otherwise, they may be too young to blogsworld that they do not know what is going on around. I am really very happy that something good happened to tamil cyberspace by removing the ‘black’s blog from Thamizmanam.

  71. சிந்தாநதி on December 7th, 2006 8:14 am

    தமிழ்மணத்தைப் பொறுத்தவரை விடாதுகருப்புவின் சமீபகால எழுத்துக்களில் உள்ள நிதானமின்மை அவரது பதிவு நீக்கத்திற்கு நியாயமான காரணமாகவே இருக்கிறது.

    ஒருவர் தன் கொள்கையை, அல்லது, தான் சார்ந்த கொள்கையை பரப்புவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளது. ஆனால் தனக்குப் பிடிக்காத கொள்கையை எதிர்ப்பதற்காகவே பதிவு எழுதுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? திரு ஹரிஹரன் அதைத்தான் செய்து வருகிறார்.

    நண்பர்கள் திரு ராகவன், குமரன் போன்றோர் செய்வது போல மதம் சார்ந்த பதிவுகளை ஆக்கப்பூர்வமாக எழுதுவதே முறையானது. மாறாக தன் மதத்தை போற்றுவதற்காக அதன் மறுப்பாளரை திட்டமிட்டு எதிர்த்தும் பழித்தும் எழுதுவது நியாயமா என்பதை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.

    நேரடியாகச் சொன்னால் பெரியாரை விமர்சிப்பதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே! ஆனால் அது திட்டமிட்ட பழிப்புகளாக செய்யப்படுவதை தமிழ்மணம் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறதா?

    சில இஸ்லாமிய பதிவர்களும் கூட தேவையில்லாமல் இந்து மதத்தை தாக்குவதை நிறுத்த வேண்டும். அது போலவே இஸ்லாமை தாக்கும் நண்பர்களும். அவரவர் மதங்களை போற்றுங்கள். அடுத்தவர் மதங்களை இகழாதீர்கள்.

    நியாயமான சந்தேகங்களை கேட்டறியலாம். திட்டமிட்ட வெறுப்புணர்வோடு கேட்டால் பகைமையே மிஞ்சும்.

    மதம் தவிர்த்து எழுதவும் வாசிக்கவும் எவ்வளவோ இருக்கிறது. (யானையின் மதம் போன்றதே மனிதனின் மதமும்).

    அதே சமயம் யாரையுமே நிரந்தரமாக விலக்கி வைக்க அவசியமில்லை. தமிழ்மணத்தின் விதிமுறைகளை ஏற்று எழுத ஒப்புக்கொள்ளும் உறுதி மொழி தரும்பட்சத்தில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கலாம். இது விடாதுகருப்பு, ஹரிஹரன் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.

  72. தமிழ்மணம் on December 7th, 2006 8:53 am

    பதிவர் ஓகை நடராஜன்:

    இது குறித்து உங்களிடம் இதுவரை ஏதும் தமிழ்மணம் கேட்கவில்லை என்பது சரியானதுதான்.

    தமிழ்மணம் குறித்து அநாமதேயமாகப் பின்னூட்டங்களிலே மொழியப்படும் பொய்ப்பரப்புரைகளை இதுவரை காலமும் பதிவர்களிடம் வினாவுவது தமிழ்மணத்திற்கு நாகரீகமில்லை என்பதால் எதையும் அவாவமல் இருந்தது; குறைந்தபட்சம் இப்படியான வேரின்றி மேலேறி விழுதுவிடும் அநாமதேயப்பின்னூட்டங்கள் வந்து விழும் பதிவுகளையிடும் பதிவர்கள் அப்படியான பின்னூட்டங்கள் குறித்து அவர்களே தார்மீகமாகத் தீர்மானம் செய்து கொள்ளவேண்டுமென்பது தமிழ்மணத்தின் எண்ணமாகவிருந்தது. தமிழ்மணத்திலே திரட்டப்படாத பதிவுகளிலே இப்படியான ஆதாரமற்ற பரப்புரைகள் ஆளறிந்த பதிவுகளாகவும் அநாமதேயப் பின்னூட்டங்களாகவும் வருவதன் காரணங்கள் அறிந்தும் அவை குறித்துத் தமிழ்மணம் எதுவுமே செய்யமுடியாத நிலையிலே தமிழ்மணத்திலே தம் பதிவுகளைத் திரட்டும் பதிவர்களும் வாசகர்களும் அதே காரணங்களை உணர்வார்களென விட்டுவிடலாம். ஆனால், தொடர்ந்து – உங்களுடையது உட்பட – தமிழ்மணத்தின் நோக்குகளிலும் இயங்கும் பாங்கிலும் நம்பிக்கை கொண்டு தம்மை அங்கே திரட்டும் சில பதிவுகளிலேயே இப்படியான தமிழ்மணத்தின் மீதான இணையச்சேறடித்தல் நிகழும்போது, அதன் பதிவர்களும் உள்ளூர அப்படியான போக்கினை ஏதேனும் வெளித்தெரியாத காரணத்துக்காக அனுமதித்து ஊக்கம் தருகின்றார்களோ என்ற ஐயம் எழுகிறது. தங்களின் பூங்கா குறித்த பதிவு வெளிப்படையாக இடப்பட்டு, உங்கள் பார்வையிலே பூங்கா எப்படியாகத் தோன்றியது என்பதையிட்ட மிகவும் கண்ணியமான வெளிப்படையான உங்களுக்குப் பட்ட ஆதாரங்களுடனான பதிவு. இதை, தமிழ்மணத்தின் இணையான பூங்காவின் சார்பிலே தமிழ்மணம் வரவேற்கிறது. ஆனால், அதன் பின்னான சில பின்னூட்டங்கள் தமிழ்மணத்தின்மீதும் பூங்கா மீதும் அநாமதேயச்சேறடிப்புக்கே வழிவகுத்தன. ஒரு முறை இரு முறை இணையத்திலே இப்படியாக ஏற்பட்டால், விட்டுவிடலாம். ஆனால், இதுவே ஒரு திட்டமிட்ட, திரும்பத் திரும்ப ஆதாரமற்ற வதந்திகளையும் காழ்ப்பான வரையறையில்லாத வசைகளையும் உள்ளடக்கிய, அநாமதேயப்பின்னூட்டங்களாக, சில பதிவுகளிலே ஒரு போக்காக வளர்வது எதேச்சையானதெனக் கருத இடமில்லையெனத் தமிழ்மணமும் தன்னிலே தொகுக்க அனுமதிக்கும் பல பதிவர்களையும் தமிழ்மணம் நலம் விரும்பும் வாசகர்களையும்போல உணரத் தொடங்கியிருக்கின்றது. இதை இப்பொழுதிலே கண்டுகொள்ளாவிட்டால், இது தமிழ்மணத்தினை மட்டுமல்ல, அதன் முக்கிய கூறுகளான இணைந்து கொண்ட பதிவர்களையும் வாசகர்களையுமே தனிப்படச் சேதப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்மணத்திடம் விடாதுகறுப்பு பதிவினைக் குறித்து எதிர்ப்புத் தெரிவித்த பதிவர்களிலே பலரோ அல்லது அவர் பதிவினைத் திரட்டியிலிருந்து தவிர்த்தது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களிலே பல பதிவர்களோ தமிழ்மணம்மீது அநாமதேயமாகத் தாக்குதல் நடத்தியது குறித்துக் கண்டிக்காமல் அது தமிழ்மணத்தின் தன் நற்பெயருக்காகப் போராடவேண்டிய தனிப்பட்ட பிரச்சனை என்ற போக்கிலே இருப்பதாகத் தோன்றிய பொழுதிலேதான் எதிர்காலத்திலே புதிய பதிவர்களிடமும் சட்ட ரீதியிலும் இப்படியான திட்டமிட்ட எதிர்மறைத்தாக்குதல் எப்படியான நிலையை ஒரு கருத்துச்சுதந்திரம் பொதிந்த சேவையைத் தர விரும்பிய காரணத்தினால் தமிழ்மணத்துக்கு ஏற்படுத்துமென்பதை எண்ணிச் சென்ற வாரத்திலிருந்து தமிழ்மணம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஏற்படுத்த எண்ணியிருக்கின்றது. தமிழ்மணம் – தன்னைப் போன்ற இன்னொரு எந்தத்திரட்டியும் எதிர்பார்க்க விரும்புவது போலவே – தன்னிலே நம்பிக்கை கொண்டு இணைந்திருக்கும் பதிவர்களினதும் வாசகர்களினது நலனைப் பேணிச் சேவை செய்வது போலவே, மறுபக்கமிருந்தும் பதிவர்களும் தாம் கூறாயிருக்கும் தமிழ்மணத்தின் நலன் தம் பதிவுகளின் விரிவோடும் நலனோடும் சம்பந்தபட்டது என்பதை உணர்ந்து பொறுப்போடு செயற்பட வேண்டுமென விழைகிறது.

    உங்களின் பதிவுகளிலே இருக்கும் மற்றைய பின்னூட்டங்கள் குறித்து தமிழ்மணம் எதையுமே கருத்தினைச் சொல்ல அருகையற்றது. தமிழ்மணம் ஒரு திரட்டி என்பதைக்கூட விட்டுவிடலாம். ஆனால், ‘தமிழ்மணம் அறிவிப்புகள்’, ‘பூங்கா’ ஆகிய இரண்டு பதிவுகள் சக பதிவுகள் என்றவளவிலேனும் அவை குறித்த அநாமதேயமான பொய்ப்பரப்புரைகளைப் பிரசுரிக்காதிருக்கும் தார்மீக நியாயம் தேவை. பதிவர் செர்வாண்டிஸ் பதிவிலே அப்படியான பின்னூட்டங்கள் வந்தபோது, அதைத் தமிழ்மணம் சுட்டிக்காட்டியதால், அவர் அகற்றியிருக்கின்றார். உங்கள் பதிவு குறித்து அவற்றிலே தனிப்பட்ட பதிவர்கள் தம் பெயர்கள் மிகவும் விகாரப்படுத்தியும் திரித்தும் பொய்மைப்படுத்தியும் குறிப்பிட்டது தொடர்பான முறையீடுகளும் தமிழ்மணத்துக்கு வந்திருப்பதால், அது தனிப்பட்ட பதிவர்களின் பிரச்சனை என்று தமிழ்மணத்தின் பிரச்சனை இல்லையென அவர்களையே கையாளும்படி விட்டுவிடுவதா அல்லது தமிழ்மணத்தின் பெயரும் இழுக்கப்பட்டிருப்பதால், தமிழ்மணம் அது குறித்து பின்னூட்டங்களை அனுமதித்த பதிவர் என்பதால், உங்களிடம் நீதி கேட்பதா என்பது இன்னமும் முற்றாகாத நிலையிலேதான் உங்களுக்கு இதுவரை இவ்விடயத்திலே எவ்விதமான அஞ்சலும் தமிழ்மணம் அனுப்பவில்லை.

    தமிழ்மணத்துக்கு மேலும் நிர்வாகச்சுமையை ஏற்றாத விதத்திலே, நீங்களே இப்படியான அநாவசியமான பின்னூட்டங்களை நீக்குகின்றீர்கள் என்று முன்வந்திருப்பதற்கு மிக்க நன்றி. தமிழ்மணம் குறித்து ஆதாரமில்லையென உங்களுக்கும் படிப்பவர்களுக்கும் தோன்றக்கூடிய பின்னூட்டங்களையும் அநாகரீகமான பொதுவான வசைப்பின்னூட்டங்களையும் மட்டுமே விலக்கும்படி தமிழ்மணம் திரட்டி என்ற தகுதியிலும் ‘தமிழ்மணம் அறிவிப்புகள்’ பதிவு என்ற சக பதிவுக்குரியவர்களாகவும் கேட்கிறோம்.

    நன்றி.

    தமிழ்மணம் நிர்வாகம்

  73. (ஓகை) நடராஜன் on December 7th, 2006 9:12 am

    இந்த பதிவைப் பொருத்தவரையில் பின்னூட்டங்களை முக்கியமற்றதாகவும் பதிவு முக்கியமானதாகவும் கருதுவதால் எல்லா பின்னூட்டங்களையும் அழித்துவிட்டு பதிவை மட்டும் வைத்திருக்கிறேன்.

    தங்கள் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  74. நாடோடி on December 7th, 2006 9:14 am

    தமிழ்மணம் நிர்வாகிகள் கவனத்திற்கு இங்கு
    நாடோட(பின்னூட்ட எண் 46) என்ற பெயரில் பின்னூட்டம் இட்டது நான் இல்லை.

    எனது blog “நாகரீக நாடோடி”
    அந்த கருத்திற்கும் எனக்கும் தொடர்புகிடையாது.

    அந்த நாடோடி வோறொரு நாடோடியாக இருக்கலாம்.

  75. peyar etharku on December 7th, 2006 9:42 am

    நான் தந்தை பெரியார் மேல் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவன். அவரில்லாவிட்டால் என் தலைமுறைக்கு உளவியல்ரீதியிலான உந்துசக்தி கிடைத்திருக்காது என்ற உண்மையை உணர்ந்து எங்களைப் போன்றவர் அந்த மாமனிதருக்கு என்றும் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் இந்த விடாதுகருப்பு என்ற பெயரில் எழுதும் அன்பர் எந்த நோக்கத்தில் பெரியார் பெயரை தான் எழுதும் ஆபாசப்பதிவுகளில் ஏன் பயன்படுத்துகிறார் என்ற ஆதங்கத்தில் அவருக்கே நேராய் பலமுறை அன்பாகவும் சிலசமயம் அதட்டியும் தனிமடல்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய நல்ல வார்த்தைகளைக்கு எல்லாம் இவர் செவிசாய்க்கவே இல்லை. இவர் எழுதும் கருத்துக்களை வைத்து பெரியாரைப் பற்றி ஒரு குறுகிய பிம்பத்தை எளிதாக உருவாக்கி அவரை கேலிப்பொருளாக்கக்கூடிய வாய்ப்பை நம் பரம்பரை எதிரிகளுக்கு இவர் சுலபமாய் அமைத்துத் தந்து கொண்டிருந்தார். இவர் பதிவை நீக்கியது உண்மையான தந்தை பெரியாரின் அன்பர்களுக்கு நிச்சயம் மனப்புழுக்கத்தை நீக்கியிருக்கும் என்னைப்போல் என்று நம்புகிறேன். இனியும் இவரை போன்றவர் எழுதும் ஆபாசப்பதிவுகளுக்கு நாம் எந்த விதத்திலும் ஆதரவு அளித்திடக்கூடாது என்று நண்பர்களை எல்லாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    (ஒரு பெயர் சொல்லவிரும்பாத பதிவர்)

  76. John on December 7th, 2006 10:19 am

    கால்கரி சிவாவும், ஹரிஹரனும், டோண்டு ராகவனும் , மாயவரத்தான் ரமேஷ்குமாரும், கிருஷ்ணாவும், ம்யூசும், மவுல்சும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும், மலர் மன்னனும், நேசகுமாரும், வடுவூர் குமாரும், செளராஸ்டிர குமரனும், டாலர் செல்வனும், வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?

    What you did when these guys always tesed/insulted ‘tamils’, ‘periya’, islam and christians.

    The only difference is these guys used not volgur language. and insulted the extream.

    Really i am wondering about your biased action.

    You should answer about this. I am 100% agreeing Mr. Joe

  77. பங்காளி on December 7th, 2006 10:36 am

    சரி…சரி…எல்லாரும் சொல்ல வேண்டியத சொல்லீட்டாங்கன்னு நினைக்கிறேன்….

    பஞ்சாயத்தை சீக்கிரமா முடிச்சி சீக்கிரமா தீர்ப்பச் சொல்லுங்க….

    நண்பர் விடாது கரூப்பு மற்றும் நண்பர் ஹரிஹரன் இருவரும் எதிர்வரும் காலங்களில் இப்படியான பதிவுகளை தமிழ்மணத்தில் வாசிப்புக்கு வைக்கமாட்டோம் என்கிற அவர்களின் உறுதிமொழியுடன் அவர்களின் பதிவுகளை தமிழ்மணம் திரட்டவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

  78. M. Sundaramoorthy on December 7th, 2006 10:43 am

    ஓகை எழுதியது:
    // இது குறித்து என்னிடம் யாரும் நேரிலோ தனி மடலிலோ கேட்கவில்லை. அப்பதிவின் பின்னூட்டங்களுக்கு முடிந்தவரை அங்கேயே பதில் அளித்திருக்கிறேன். எனக்கு ஏதும் தவறாகத் தெரியவில்லை.//

    இது உண்மையல்ல. நான் எழுதியிருந்த பின்னூட்டத்தை 24 மணி நேரத்திற்கு பிறகும் அனுமதிக்காத நிலையில் கேட்டு ஓகை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதைத் தொடர்ந்து எங்களிருவருக்கும் நடந்த மின்னஞ்சல் பரிமாற்றத்தில் அநாமதேயங்கள் சிலரை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதையும், தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் அமெரிக்க வலைப்பதிவாளர்கள் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்ததையும் சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ஆதாரமற்ற அவதூறுகளையும், மிரட்டல்களையும் எந்த எவ்வித உறுத்தலும் இல்லாத வெளியிட்டதைக் கண்டிதிருந்தேன். கடைசியாக என் பின்னூட்டத்தை அனுமதித்த பிறகு இன்னொரு அநாமதேயம் என்னை ‘இந்தியாவின் எதிரி’ என்றுத் தாக்கியது. இப்படி பிறரின் மீதான அவதூறுகளையும், மிரட்டல்களையும் அதுவும் பொறுப்பேற்க திராணியில்லாத அநாமதேயங்கள் செய்தவற்றை இத்தனை நாட்கள் எந்தவிதக் உறுத்தலுமின்றி வைத்திருந்த ஓகை அவர்கள் ஓரிரு நாட்களுக்கு முன் வேறொரு பதிவில் அவருக்கு ஒரு பதிவர் இறையாண்மையைப் பற்றி சொல்லித்தர முயற்சித்தது சோகமளிததாக குறிப்பிட்டிருந்தார். இதற்கே சோகமென்றால் அவருடைய அதே பதிவிலேயே பிறரை பயங்கரவாதிகளாகவும், தேசவிரோதிகளாவும், தமிழ்மணத்தை சேரக்கூட்டாத திரட்டியாகவும் சித்தரித்திருந்தது சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்தனை சோகம், கோபம் அளித்திருக்கும் என்று ஓகை அவர்களுக்கு இத்தனை நாள் புரிந்திருக்கவில்லை என்பதே பெரிய சோகம் தான். இன்னும் அதில் அவருக்கு “ஏதும் தவறாகத் தெரியவில்லை”. பொறுப்பேற்க முன்வராத அநாமதேயங்களின் பின்னூட்டங்களுக்கு அவற்றை மட்டுறுத்தி வெளியிடும் பதிவாளர்களே பொறுப்பேற்க வேண்டும். அண்மையில் இதைத் தமிழ்மணத்திற்கு தெரியபடுத்தியது அடியேன் தான்.

    அதேபோல BadNewsIndia என்ற இன்னொரு நாகரிக கனவானும் “அடுத்தவரை நாகரீகம் இல்லாமல் தாக்குவது சரியல்ல. இதை செய்யும் மற்ற பதிவர்களும், அவர்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று உபதேசம் செய்திருக்கிறார். இவர் தான் ஓகையின் பதிவில் ஒரு அநாமதேய “ஆராய்ச்சியாளர்” விடுத்திருந்த மிரட்டலை ஒத்தியெடுத்து தனிப்பதிவாகவே போட்டிருந்தார். இதில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தாக்கப்பட்டிருந்தது. அதை அருண்மொழி சுட்டிக்காட்டியிருந்தார். நான் கடைசியாக பார்த்தவரையில் பதிவு அப்படியே இருந்தது அதிலிருந்த பெயர்கள் உட்பட. இதையும் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு தெரியபடுத்தியிருக்கிறேன்.

  79. (ஓகை) நடராஜன் on December 7th, 2006 1:23 pm

    என் பதிவில் மட்டுறுத்தல் செய்யப்பட்டிருந்த பின்னூட்டங்களில் சுந்தரமூர்த்தி அவர்களின் பின்னூட்டமும் ஒன்று. அதை வெளியிடச் சொல்லி அவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நான் என் நிலைப்பாட்டைச் சொல்லி வற்புறுத்தவேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிறகும் வெளியிட வேண்டுமெனக் கூறியதால் அவருடைய பின்னூட்டத்தை வெளியிட்டேன். இது தொடர்பான எங்கள் கடிதத் தொடர்பை மேலும் வெளிப்படுத்த நான் விரும்ப வில்லை.

    //இப்படிப்பட்ட ஆதாரமற்ற அவதூறுகளையும், மிரட்டல்களையும் எந்த எவ்வித உறுத்தலும் இல்லாத வெளியிட்டதைக் கண்டிதிருந்தேன்.//

    ‘கண்டித்திருந்தேன்’ என்பதெல்லாம் முழுப் பொய். இந்தப்பின்னூட்டங்கள் எழுதுவதற்கு முன் அந்த மடல்களை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டுதான் எழுதுகிறேன். இவை என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அவரிடமும் இருக்கும். இல்லாவிட்டால் நானே தருகிறேன். கண்டிப்பு என்பது பெரிய வார்த்தை. என் பிள்ளைகளுக்கு நான் அதைச் செய்வதில்லை. என்னைக் கண்டிக்க இவர் யார்? சர்வ சாதாரணமாக இன்னொரு மனிதரின் மேல் அதை எப்படி இவரால் பிரயோகிக்க முடிகிறது?

    இறையான்மை பற்றி சொல்லிக் கொடுப்பதை சொல்லியிருந்தேன். ஆனால் சோகமாக சொல்லியிருந்தேனா? எனக்கு இப்போதுதான் தெரியும். தகவலுக்கு நன்றி.

    என் பதிவைப் பற்றி தமிழ் மனத்திடம் முறையிடுவதற்கு முன் நீங்கள் முறையிட்ட பதிவர்களின் பட்டியலை எனக்கு தனி மடலில் தர முடியுமா சுந்தரமூர்த்தி அவர்களே!

    இது தொடர்பாக தமிழ்மனத்தைத் தவிர யாருக்கும் விளக்கம் சொல்வதாக இல்லை. வேண்டியவர்கள் தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்மனத்தின் நேரத்தை வீணடித்ததற்காக வருந்துகிறேன்.

  80. Vajra on December 7th, 2006 5:13 pm

    //
    மீண்டும் சொல்கிறேன். தனிமனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களது நம்பிக்கைகள் மதிக்கபட வேண்டியவையோ, மரியாதை தரப்பட வேண்டியவையோ அல்ல.
    //

    இதுவே சிறப்பான சிந்தனை. முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

  81. Vajra on December 7th, 2006 5:20 pm

    //
    வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?
    //

    என் புரிதல் படி திராவிடர் என்ற “இனம்” இல்லை. ஆகவே அதை ஒரு நம்பிக்கை என்ற முறையில் விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உட்படுத்துகின்றேன்.

  82. விடாது கருப்பு on December 7th, 2006 7:29 pm

    //விடாது கருப்புவின் பதிவிலேயே என்னைப் பற்றியும் மேலும் பல சக பதிவர்களைப் பற்றியும் தரக்குறைவாக பின்னூட்டம் இருப்பது மேற்படி பின்னூட்டக்காரருக்கு தெரியவில்லையா.. அல்லது அந்த வார்த்தைகள் எல்லாம் இவரது அகராதியில் கெட்ட வார்த்தைகள் இல்லையோ?!

    //

    ராபின்ஹூட் என்ற பதிவில் அசிங்க அசிங்கமாக ஒரு பதிவரைப் பற்றி எழுதியது ஏன் மாயவரத்தான்? அது ஆபாசம் இல்லையா?

    சர்வாண்டிஸ் என்ற பதிவில் அசிங்க அசிங்கமாக எழுதிய டோண்டு உங்கள் நண்பர்தானே? அவன் உங்கள் நண்பந்தானே?

  83. விடாது கருப்பு on December 7th, 2006 7:31 pm

    //
    மீண்டும் சொல்கிறேன். தனிமனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களது நம்பிக்கைகள் மதிக்கபட வேண்டியவையோ, மரியாதை தரப்பட வேண்டியவையோ அல்ல.
    //

    இதுவே சிறப்பான சிந்தனை. முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

    அதனால்தான் பார்ப்பணீயத்தினை குறை சொல்கிறேன் வக்கிரா அவர்களே.

  84. புலிப்பாண்டி on December 7th, 2006 7:35 pm

    //
    மீண்டும் சொல்கிறேன். தனிமனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களது நம்பிக்கைகள் மதிக்கபட வேண்டியவையோ, மரியாதை தரப்பட வேண்டியவையோ அல்ல.
    //

    முற்றிலும் சரி…
    தமிழ்மணத்தில் தடை செய்யப்பட வேண்டிய இன்னொரு நபர் இறைநேசன்..இஸ்லாமிய இறை நம்பிக்கை குறித்து சிறப்பாக, எந்தத் தனிமனிதனையும் வசைபாடாமல் ஆராய்ச்சி செய்து எழுதும் நேசகுமாரை குறித்து இறைநேசனின் பதிவுகளில் அவர் எழுதியுள்ள வாக்கியங்கள் சில..:
    “சொறி மன்னர் நேசகுமாருக்கு”,
    “உன்னால் முடிந்ததை நீ கவனி; என்னால் முடிந்ததை நான் கவனிக்கிறேன்”,”இந்தப்போலி சூத்திரன் நேசகுமார்”,”பொது இடத்தில் மலம் கழிக்கும் நேசகுமார்”,”பீ.மு.க தலைவர் நேசகுமார்”…

    இவ்வளவு அநாகரீகமாக எழுதும் இறைநேசனைத் தமிழ்மணத்திலிருந்து தடை செய்ய வேண்டும்…

  85. பாமரன் on December 7th, 2006 8:31 pm

    விடாது கறுப்பை தடைசெய்வதுக்கு முன்னால் இந்துத்வாவை திணிக்கும் பதிவுகளை ஒரு முறை பரிசீலியுங்கள். விடாதுகறுப்பு போன்றவர்களை தடுப்பது இந்துத்வ விஷங்களை மக்கள் மனதில் இறக்குவதற்கு பச்சை கொடி ஆகிவிடும். தயவு கூர்ந்து முடிவை பரிசீலியுங்கள்.

  86. yaro on December 7th, 2006 8:31 pm

    //அதனால்தான் பார்ப்பணீயத்தினை குறை சொல்கிறேன் வக்கிரா அவர்களே.
    //

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அப்படி சூடு பட்டும் திருந்தாததால் தான் வைக்கப்பட்டது ஆப்பு!

  87. நம்பி on December 7th, 2006 8:37 pm

    தமிழ்மணமே, நீ தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் விடாது கறுப்பின் குரல்வளையை நெறிப்பது திராவிட மக்களை துயரத்தில் ஆழ்த்தும் ஜனநாயக அத்துமீறல்.

  88. நாயகன் on December 7th, 2006 8:41 pm

    //கால்கரி சிவாவும், ஹரிஹரனும், டோண்டு ராகவனும் , மாயவரத்தான் ரமேஷ்குமாரும், கிருஷ்ணாவும், ம்யூசும், மவுல்சும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும், மலர் மன்னனும், நேசகுமாரும், வடுவூர் குமாரும், செளராஸ்டிர குமரனும், டாலர் செல்வனும், வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?//
    பதில்சொல் தமிழ்மணமே….

  89. உரிமைவீரன் on December 7th, 2006 8:52 pm

    அதாவது மென்மையாக வசைபாடினால் அது கருத்து சுதந்திரம், மெதுவாக ஏசினால் ஏற்றுக்கொள்ள தகுந்தது. திராவிட பாரம்பரியம் என்றும் உள்ஒன்று வைத்து புறமொன்று பேசாது. ஆரியனைப் போல் விஷமேற்ற தெரியாததால் அன்று சூத்திரனான திராவிடன், அதே சூழ்ச்சியால் இன்றும் உரிமையிழந்துவிட்டான். விடாதுகறுப்பு யாருக்கு பதிலடி கொடுத்தார் என பாருங்கள், தூண்டிவிட்டது யார் என எண்ணிபாருங்கள், ஆரம்பித்தது யார் என சொல்லுங்கள். இது சூழ்ச்சி. சகுனிகளை வென்று திராவிடன் ஜொலிக்கும் நாள் வெகு தொலைவிலில்லை. விடாதுகறுப்பை தடுத்தற்கு என் கண்டனம்.

  90. தமிழ்விரும்பி on December 7th, 2006 9:09 pm

    ////கால்கரி சிவாவும், ஹரிஹரனும், டோண்டு ராகவனும் , மாயவரத்தான் ரமேஷ்குமாரும், கிருஷ்ணாவும், ம்யூசும், மவுல்சும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும், மலர் மன்னனும், நேசகுமாரும், வடுவூர் குமாரும், செளராஸ்டிர குமரனும், டாலர் செல்வனும், வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?////
    இவர்கள் மீது என்ன நடவடிக்கை?
    குற்றம் செய்தவனைவிட குற்றம் செய்ய தூண்டியவனுக்கு தான் அதிக தண்டனை நம் சட்டப்படி, விடாதுகறுப்பு என்ற நபரை அவ்வாறு எழுத தூண்டிய நபர்களை தடுத்தால் விடாதுகறுப்புக்கு பதில்கொடுக்கும் அவசியம் இருக்காது. தமிழ்மணம் திராவிடனை சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால் இழிவுபடுத்தி, பிரிக்கும் மேற்கண்ட பிரிவினைவாதிகள் நம் தேசம் மதசாற்பற்றது என்ற கொள்கைக்கு எதிராக தேசதுரோகம் செய்பவர்கள். தமிழ்மணமே உன் செயல் கண்டனத்திற்குரியது.

  91. மகேஷ் on December 7th, 2006 9:19 pm

    விடாது கறுப்புக்கான தடை அத்துமீறல், திராவிட மக்களுக்கு எதிரானது. இந்துத்வ சக்திகளுக்கு சாதகம். ஆரிய சூழ்ச்சிக்கு பலி ஆடு விடாதுகறுப்பு.
    தமிழ்மணமே நீ வழங்கியிருப்பது நீதி(பாண்டிய மன்னன் வழங்கியது)
    நாங்கள் கேட்பது நியாயம்( கண்ணகி கேட்டது)
    எங்களுக்கு நியாயம் தான் தேவை.

  92. SelvaKumar on December 7th, 2006 9:28 pm

    தமிழ்மண நிர்வாகத்துக்கு,

    ஜோவின், மேற்கண்டக் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன் !

    நன்றி

  93. Satheesh on December 7th, 2006 9:34 pm

    //**SK
    December 6th, 2006 | 10:25 am
    தமிழ்மணம் ஒரு தனி மரம்.
    நாம் அதில் தங்கும் பறவைகள்.
    நமக்கு இதிலெல்லாம் கருத்து தெரிவிக்க உரிமை இல்லையோ என எண்ணுகிறேன்.

    நடந்தது ஒரு வருந்தத் தக்க சம்பவம்.

    மற்றவர்கள் இதைப் பார்த்து தங்கள் நடையினை இனியாவது மாற்றி தமிழ்மணத்திற்குள் வருவதை ஒரு இனிய அனுபவமாகச் செய்வார்கள் என நினைக்கிறேன்.
    இந்த வேண்டுகோள் அனைவருக்குமே!

    வேகம் தணிந்த விடாது கருப்புவின் விவேகமான பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்.

    அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்பதை விடுத்து, மாற்றம் தன்னளவில் கொண்டு வந்து, “தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு ஒரு இக்கட்டான நிலையினை கொடுக்காமல் இருக்க” அனைவரும் பாடுபட வேண்டும்.

    தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
    **///
    வழிமொழிகிறேன்.

  94. ஓகை அவர்களே,
    //‘கண்டித்திருந்தேன்’ என்பதெல்லாம் முழுப் பொய். இந்தப்பின்னூட்டங்கள் எழுதுவதற்கு முன் அந்த மடல்களை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டுதான் எழுதுகிறேன். இவை என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அவரிடமும் இருக்கும். இல்லாவிட்டால் நானே தருகிறேன். கண்டிப்பு என்பது பெரிய வார்த்தை. என் பிள்ளைகளுக்கு நான் அதைச் செய்வதில்லை. என்னைக் கண்டிக்க இவர் யார்? சர்வ சாதாரணமாக இன்னொரு மனிதரின் மேல் அதை எப்படி இவரால் பிரயோகிக்க முடிகிறது?
    //

    கண்டிப்பு/கண்டனம் என்பது பெரிய வார்த்தையாக இருந்தால் என்னை மன்னித்து விட்டு, தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு வெளியிட்ட என் பின்னூட்டத்தின் முதல் பத்தியையும் வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றும் பொருத்தமான சிறிய வார்த்தையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

    கண்டிப்பு என்பது உங்களுக்கு பெரிய வார்த்தை. நான் சாதாரணமாக பிரயோகித்துவிட்டேன். பயங்கரவாதிகள், கம்பி எண்ணுதல் என்பதெல்லாம் எனக்கு மிகப்பெரிய வார்த்தைகள். இதை ஒரு முறைக்கு மேல் உங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்திருந்தேன். உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றியதால் அவற்றை இவ்வளவு நாட்கள் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.

    //இறையான்மை பற்றி சொல்லிக் கொடுப்பதை சொல்லியிருந்தேன். ஆனால் சோகமாக சொல்லியிருந்தேனா? எனக்கு இப்போதுதான் தெரியும். தகவலுக்கு நன்றி.//

    இட்லிவடையின் இந்த பதிவில் நீங்கள் எழுதியது:

    “வாக்களிப்பவர்கள் என்னுடைய இந்த பதிவைப் பார்த்துவிட்டு பிறகு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    பின்னூட்டங்களைப் படியுங்கள். பின்னூட்டங்கள் மிக முக்கியம். என் பதிவை விட பின்னூட்டங்களில் அதிக செய்திகள் இருக்கின்றன. யார் யாரெல்லாம் சொந்தப் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதுவே ஒரு மிகப் பெரும் செய்தி. ஒருவர் எனக்கு இறையான்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்க முயன்றிருப்பார் பாருங்கள். ஒவ்வாத கருத்துக்கள் எல்லாம் காமெடி என்று வர்னிக்கப்படும் வலையுலகில் எனக்கு அதைப் பார்த்ததும் சோகம் தான் வந்தது.”

    இன்னொரு முரண்பாடு என்னவென்றால் அங்கே பதிவைவிட பின்னூட்டங்கள் முக்கியம் என்றீர்கள். இப்போது “இந்த பதிவைப் பொருத்தவரையில் பின்னூட்டங்களை முக்கியமற்றதாகவும் பதிவு முக்கியமானதாகவும் கருதுவதா”க சொல்கிறீர்கள்.

    சொந்த பெயர்களில் எழுதப்பட்ட பின்னூட்டங்களில் ஏதோ “செய்தி”யை கண்டுபிடிக்கத் தெரிந்த உங்களுக்கு அனாமதேயங்களின் பின்னூட்டங்களில் உள்ள அவதூறுகள் தெரியாமல் போகிறது. அதை என்னுடைய மின்னஞ்சல்களில் சுட்டிக்காட்டியிருந்தும் யாரும் தெரிவிக்கவில்லை என்று சொல்கிறீர்கள்.

    ஓகையும், இட்லிவடையும் அப்பாவித்தனமாக, அக்கறையோடு தமிழ்மணத்தைப் பற்றி பதிவு போட்டுவிட்டு அநாமதேயங்கள் தமிழ்மணத்தைத் தாக்க அனுமதித்தது பதிவுகளின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. பதிவுகளை நீக்குவதற்கு தமிழ்மணம் தன் மீதான தாக்குதல்களையும் கணக்கிலெடுத்திருப்பதால் இட்லிவடைக்கும் அப்பதிவினை/பின்னூட்டங்களை நீக்கச்சொல்ல வற்புறுத்த வேண்டுமென பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுக்கிறேன்.

  95. Satheesh on December 7th, 2006 10:02 pm

    தமிழ்மணமே!
    விடாது கறுப்பு போன்ற திறமையான பதிவர்களை நீக்குவது தமிழ்மணத்திற்கு இழப்பு.
    விடாது கறுப்பே!
    நீ வேகத்தை குறைத்து விவேகத்தை கூட்ட வேண்டும்.

  96. Thamizhan on December 7th, 2006 10:15 pm

    I donot like any harsh or hurting words.If you are honest you should have removed Hariharan also and condemned Mayavarathan for personal attack.Give this as a public warning on civility and start fresh.Take back your action and let every one be civil.You can even form a monitoring committe to make immediate recommendations to you.I am sure there are enough people who will volunteer to be on the committe.

  97. BadNewsIndia on December 7th, 2006 10:42 pm

    //அதேபோல BadNewsIndia என்ற இன்னொரு நாகரிக கனவானும் “அடுத்தவரை நாகரீகம் இல்லாமல் தாக்குவது சரியல்ல. இதை செய்யும் மற்ற பதிவர்களும், அவர்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று உபதேசம் செய்திருக்கிறார். இவர் தான் ஓகையின் பதிவில் ஒரு அநாமதேய “ஆராய்ச்சியாளர்” விடுத்திருந்த மிரட்டலை ஒத்தியெடுத்து தனிப்பதிவாகவே போட்டிருந்தார். இதில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தாக்கப்பட்டிருந்தது. அதை அருண்மொழி சுட்டிக்காட்டியிருந்தார். நான் கடைசியாக பார்த்தவரையில் பதிவு அப்படியே இருந்தது அதிலிருந்த பெயர்கள் உட்பட. இதையும் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு தெரியபடுத்தியிருக்கிறேன்.
    //

    சுந்தரமூர்த்தி சொல்லும் தனிப்பட்ட நபர்கள் போலி டோண்டு, கருப்பு, பார்டெண்டர் இந்த மாதிரி ‘அசிங்கமாக’ எழுதும் நபர்கள்.
    அருண்மொழி சுட்டிக்காட்டிய சில பகுதிகள் சுட்டிக்காட்டிய அன்றே நீக்கப்பட்டுவிட்டது.
    எதையோ எதனுடனோ முடிச்சு போடவேண்டாம்.

    தமிழ்மணம், ‘அசிங்க’ பதிவுகளை தூக்குவதோடு நின்று விடாமல், அந்த அசிங்கப் பதிவர்கள், வேறு பதிவுகளில் வந்து பின்னூட்டம் இடுவதை அனுமதிக்க வேண்டாம் என்று மற்ற ‘நல்ல’ பதிவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.

    ஆஹா, வீடு சுத்தமாவுது. மெத்த மகிழ்ச்சி :)

  98. அன்புடன் தமிழன் on December 7th, 2006 11:08 pm

    அன்பான திராவிட உள்ளங்களே,

    விஷம் தோய்ந்த மேலாதிக்க உத்தி எவ்வளவு நளினமாக எல்லா இடங்களிலும் வேர் பரப்பி, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ளுகிறது என்பதனை இன்னும் ஒருமுறை பார்க்கிறோம்.

    இந்த உத்தி ஒரு நேர்க்கோடு போல செவ்வனே அமைந்திருப்பதை தமிழ்மண வரலாற்றை நெடுங்காலமாக அறிபவர்கள் உணர முடியும்.

    பெயர் குறிப்படுவது முறையல்ல என்றாலும், சில நேரங்களில், பெரிது வாய்ந்த நன்மையை கருதி அதை செய்ய வேண்டியிருக்கிறது.

    நண்பர் பாலசந்தர் கணேசன் அவமானப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தட்டார்.

    தோழர் நியோ திட்டமிட்டு கழிக்கப்பட்டார்.

    துடிப்பான தமிழர் நண்பர் முத்து (தமிழினி) விரட்டியடிக்கப்பட்டார் (இது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு. அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் என்று நம்புகிறேன்)

    இப்போது, செயலாற்றல் மிகுந்த விடாது கருப்பும் பலியாக்கப்பட்டு விட்டார்.

    உண்மையில் தமிழ்மணம் மேல் எனக்கு வருத்தமில்லை. விடாது கருப்பின் சமீப பதிலடிகளை வரன் கடந்த ஒன்று என பிண்ணனி காரணியாக தமிழ்மணம் நிறுத்தியிருப்பது மிக வலுவான தாங்கியாக இருப்பதால, மேலாதிக்க உத்தியின் நஞ்சு அவரை உசுப்பி விட்டது எனற உண்மை தொய்விழந்து விட்டது.

    ஆனாலும், இன்னும் ஒருமுறை மேலாதிக்க உத்தியிடைய கோரமுகமும், அதன் இருப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    எஞ்சியுள்ள திராவிட உணர்வுகளுக்கு சுண்ணாம்பு தடவப்பட்டிருக்கிறது.

  99. Krishnan on December 7th, 2006 11:12 pm

    “வேகம் தணிந்த விடாது கருப்புவின் விவேகமான பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்.”

    இம்மாதிரி தொனியில் எழுதற எல்லோருக்கும் ஒண்ணு சொல்ல விரும்பறேன். விடாது கருப்பு தனது பதிவில் எல்லார் மேலும் கக்கும் விஷத்தைப் பாருங்கய்யா. இன்னும் அவருக்கு வக்காலத்து வாங்கும் பதிவர்களை பாத்து அழறதா சிரிக்கிறதான்னு தெரியல்லீங்க.

    இந்த அழகுக்கு கருப்பு ஒரு பக்கம், மறு பக்கம் மாயவரத்தான் இருவரையும் ஒரே தராசுலே எப்படீப்பா போடறீங்க? மாயவரத்தான் ஐ.பி.வைத்து நிரூபித்ததாலேத்தான் விடாது கருப்புவும் போலி டோண்டுவும் ஒரே ஆளுன்னு தெரிஞ்சது.

    பை தி வே போலி டோண்டுவை பத்தி விடாது கருப்பு எழுதறதைப் பாருங்க.

    “*நான் டோண்டு என்ற ஜாதிவெறி பிடித்த பாப்பாத்தி மகனுக்கு பின்னூட்டினேன் என்பதற்காக எனக்கே அசிங்க மடல் அனுப்பியவர் போலி டோண்டு.”

    அநாகரிமாகத் தாக்கப்பட்ட டோண்டு “அவன்”, அப்படித் தாக்கிய போலி டோண்டு “அவர்” ஆகி விட்டார் இந்த விடாது கருப்புவுக்கு. இதுலேருந்தே இந்த ஆளோட அழுக்கு மனசு தெரியல்லியா?

    இந்த மயக்கத்திலே எஸ்.கே.சாரும் வந்ததுதான் இன்னும் அதிசயம். ஐயா, தெரியாமல்தான் கேட்கிறேன், அவன் உங்களை பார்க்காமல் அவாய்ட் செய்ததிலிருந்தே உங்களுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே. அவனை நீங்கள் நேரில் பார்த்து விட்டால் அவந்தான் மூர்த்தி என்று புலப்பட்டு விடுமே. அவன் ஃபோட்டோ கூட இணையத்திலே இருக்கே? நீங்களும் போலி டோண்டுவால் தாக்கப்பட்டவர்தானே. சற்று யோசியுங்கள்.

    அதே மாதிரித்தான் ஹரிஹரனும். அவர் பெரியாரைப் பற்றி ஆழ்ந்து படித்துத்தான் எழுதினார். பெரியார் பல பிம்பங்களை உடைத்தார். ஆனால் அவர் பிம்பத்தை ஹரிஹரன் உடைக்கிறார். அவ்வளவே. முதலாவதை சரி என்பவர்கள் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சிலருக்கு நரேந்தர் மோதி பிடிக்காது, தாக்கறாங்க, ராஜாஜி பிடிக்காது குல்லுகப்பட்டர்ங்கறாங்க. அதே போல பெரியாரைப் பிடிக்காதவங்க அப்படித்தான் தாக்குவாங்க. ஹரிஹரன் விடாது கருப்பு மாதிரி எங்கே தனிமனிதத் தாக்குதல் நடத்தினார்?

    இன்னும் புரியாதவங்க விடாது கருப்போட வலைப்பூக்கு போயி அங்கெ கொடுத்திருக்கற தானிலை விளக்கத்தைப் பாருங்கய்யா. எவ்ளோ அநாகரீகமா அந்தாளு எழுதியிருக்கருன்னு பாருங்க.

    கிருஷ்ணன்

  100. suresh on December 7th, 2006 11:24 pm

    Thamizmanam took a right decision by expelling vidathu karuppu.He was spewing venom on individuals and their families. I fully support this move of thamizmanam.

  101. suresh on December 7th, 2006 11:26 pm

    கால்கரி சிவாவும், ஹரிஹரனும், டோண்டு ராகவனும் , மாயவரத்தான் ரமேஷ்குமாரும், கிருஷ்ணாவும், ம்யூசும், மவுல்சும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும், மலர் மன்னனும், நேசகுமாரும், வடுவூர் குமாரும், செளராஸ்டிர குமரனும், டாலர் செல்வனும், வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?

    They did not abuse any individuals or their families indecently.They put forth their views in a civil and decent way.

  102. blogger on December 8th, 2006 2:06 am

    Bloggers should understand the position of தமிழ்மணம் நிர்வாகம் also. Tamizmanam is
    an aggregator and lists blogs.
    The adminstration has some rights and responsibilities.
    Those who talk of rights of bloggers forget about the responsibilities of bloggers.
    Using public space is free but
    it is also governed by rules.
    We all abide by rules and regulations day in and day out
    in our work places and elsewhere.Irresponsibile behavior harms individual as
    well as collective interest.
    Let us bear that in mind
    before accusing தமிழ்மணம் நிர்வாகம் of bias.

  103. மனிதன் on December 8th, 2006 3:15 am

    நீங்கள் விலக்கி வைத்த எல்லா பின்னூட்டங்களையும் வெளியிடவும். நாங்கள் படித்து தெரிந்து கொள்கிறோம்.

  104. அசுரன் on December 8th, 2006 3:30 am

    தமிழ்மண நிர்வாகத்துக்கு,

    ஜோவின், மேற்கண்டக் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன் !

    நன்றி
    அசுரன்

  105. அசுரன் on December 8th, 2006 3:49 am

    தமிழ்மணம்,

    நண்பர் ஜோ ஏற்கனவே இட்டிருந்த ஒரு பின்னூட்டத்துடன் நானும் ஒத்துப் போகிறேன். அத்துடன் மேலும் சில விசயங்களை சேர்த்துக் கூற விருப்பப்படுகிறேன்.

    அடிப்படையற்ற ஆபாசம் என்ற வகையில் வரும் பதிவுகளை(Pornography, personal abuse) எச்சரிக்கை கொடுத்து நீக்குவதில் தவறில்லை. அதை விடுத்து தனது கருத்துக்களில் அதி தீவிரம் காட்டுவதற்க்காக தண்டிப்பது என்று போனால் அதன் எல்லை பரந்து பட்டது. யாரை வேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்ற நிலையே ஏற்ப்படும். ஏனெனில் இது ஒவ்வொரு மனிதரையும் பொறுத்து மாறுபடும்.

    இது போல பார்த்தால், ராஜவனஜ்ஜின் பீ அள்ளுவது பற்றிய கட்டுரை, ஆழியூரானின் தளத்தில் பிரசூரிக்கப்பட்ட ஒரு தலித் எழுத்தாளரின் கவிதைகளுக்கான அறிமுகப் பதிவு இவையெல்லாம் கடும் எதிர்ப்பை ஈர்க்கும் தன்மையுள்ளவையே. ஆழீயூரானின் அந்த பதிவை முத்தமிழ் குழமத்தில் பிரசூரித்த பொழுது அதற்க்கு எதிராக கிளர்ந்து வந்தவர்களுக்கு பதில் சொல்லி மாள முடியவில்லை. ஏனெனில் இது வர்க்கங்களாக பிளவுண்ட சமூகம் ஆகவே அதற்க்கேற்ற கருத்து, பண்பாட்டு சார்புகள் இருக்கும். இந்த யாதார்த்தத்தை நிராகரித்து விட்டு இதுதான் சரியான பண்பாடு என்பது போல ஒரு தளத்தை நாம் தேர்ந்தெடுத்தால் அது யாருக்கான தளம் என்பது மற்றவர்கள் முன் அம்பலமாகிவிடும்.

    இவ்விடத்தில் அது பார்ர்பினிய பண்பாட்டு ஆதரவான தளம் என்ற தோற்றத்தை தருவதை தமிழ் மணம் மறுக்காது என்று கருதுகிறேன்.

    வலையுலகம் அந்தரத்தில் தொங்கும் ஒரு கருத்து தளம் அல்ல. இந்த சமூகத்தின் சகல விதமான ஆபாசங்களும், கருத்து வேறுபாடுகளும் இங்கும் தன்னை பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். இந்த யாதார்த்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறேன். என்னைக் கேட்டிருந்தால் கருப்புவின் பதிவுகள் நீக்கப்படலாமா என்று கேள்வி எழுப்பி விவாதம் செய்திருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும். அட்லீஸ்ட், கருப்பு தன் பக்கத்து தவறுகளை உணர்வதற்க்காகவவது ஏதுவாக இருந்திருக்கும். கருப்புவின் தவறு குறித்து இங்கு குறிப்பிடுகிறேன் எனில் அவர் மீதான அக்கறைதான்.

    எப்படி கருப்புவின் ஆதிக்க சாதி எதிர்ப்பு கருத்துக்கள் ஒரு சாரருக்கு ஆத்திரம் வரவழைக்கிறதோ அதே போலத்தான் ஹரிஹரன் முதலானவர்களின் அப்பட்டமான வர்ணாஸ்ரம தீண்டாமை ஆதரவு பதிவுகள், பெரியார் அவதூறு பதிவுகள் ஆத்திரத்தை வரவழைக்கும். நேசக் குமாரின் வரலாற்றுப் புரட்டு இஸ்லாம் விரோத இந்துத்துவ மத வெறி பதிவுகள் ஜனநாயக சக்திகளுக்கும், இஸ்லாமியருக்கும் ஆத்திரம் வரவழைக்கும். அதுவும் இங்கு உலா வருபவர்கள் பக்குமில்லா இளைஞர்கள் எனும் போது தமிழ்மணத்தின் இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் ஒரு பக்க சார்பு கருத்து தளத்தை வலுப்படுத்தவே செய்யும்.

    மேலும் ஒரு ஏற்றத்தாழ்வான சமூகத்தில் நடுநிலை என்று ஒன்றும் கிடையாது. அப்படி ஒன்று சொல்லப்பட்டால் அது ஆளூம் கருத்தியலுக்கு ஆதரவான நிலைப்பாடேயன்றி வேறல்ல. ஆக, தமிழ்மணத்தின் நடுநிலையின் தன்மை என்னவென்பதை அதன் நடவடிக்கைகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. இது தமிழ்மணத்தின் மீது தீர்மானகரமான அபிப்ராயம் வைக்கும் முயற்சி அல்ல. இன்னும் சொன்னால் தமிழ்மணத்தின் மீது அப்படி ஒரு தீர்மானகரமான முடிவுக்கு நான் இன்னும் வரவில்லை.

    இந்த விசயத்தில் தமிழ்மணம் வாசகர்களின் மீது நம்பிக்கை வைத்து தனது கட்டுப்பாட்டைச் செலுத்துவதிலிருந்து விலகி சிறிது ஜனநாயக தன்மையை புகுத்துவது அவர்களின் தேவையற்ற நிர்வாக பளுவை குறைப்பதுடன், ஒட்டுமொத்த வலைப்பூ உலகின் முதிர்ச்சியை வளர்க்க உதவும் என்று கருதுகிறேன்.

    தரம் கெட்ட பதிவுகளை அந்தந்த பதிவர்களே முட்டி மோதி தீர்த்துக் கொள்ளட்டும். அல்லது அவற்றை படிக்காமல் நிராகரிக்கட்டும். எப்படிப் பார்த்தாலும் உளப்பூர்வமான சார்புகளுடைய வாசகர்கள் தங்களது நிலையிலிருந்து பார்க்கும் போது இது போன்ற ஒரு சார்பு பதிவுகள் அம்பலப்பட்டே போகும்.

    இந்த நடவடிக்கை தேவையற்ற நடவடிக்கை என்பதே எனது கருத்தும். ஒரு வேளை தேவைப்பட்டால் கூட அதை ஒரு திறந்த விவாதமாக்கி, பக்குவப்பட்ட பதிவர்களை முக்கியமாக பங்களிப்பு செய்யச் சொல்லி அழைப்பு விடுத்து ஒரு பாரிய புரிதலை எல்லாருக்கும் உண்டாக்கியிருக்கலாம்.

    ஆம், கருப்புவின் சமீபத்திய சில பதிவுகள் மிகக் கடுமையாக இருந்தாலும் அவை முயுச்சுவல் விளைவுதான். ஒரு பக்க, unprovoked விளைவு கிடையாது.

    இந்த இடத்தில் விடாது கருப்புவிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவரது அதீத ஆபாச தாக்குதல், கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது கோபத்தைக் காட்டினாலும், அது ஆதிக்க கருத்தியலுக்கு ஆதரவு கொடுக்கும் மனநிலையை பொதுத் தளத்தில் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இதை, பொய் என்று தெரிந்தும் அநியாயமாக எழுதும் சில வலது சாரி வலைப்பதிவர்களின் பதிவுகளின் தன்மையிலிருந்து அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் நோக்கம் ப்ரொவோக்கேசன், அவ்வள்வுதான். பார்த்தீர்களா வெற்றி பெற்று விட்டார்கள். ஆக, அது போன்ற ஒரு நடையை விடுத்து கூர்மையாக அம்பலப்படுத்தும் வகையில் தனது எழுத்து வன்மையை அவர் சிறப்பான பங்களிப்புகளைச் செய்ய பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.

    அதை விடுத்து நாம் நமது மனநிலையிலிருந்து மட்டும் எழுதுவது நாம் இயங்கும் தளத்தின் மனநிலையிலிருந்து அந்நியப்பட்டுப் போகவே தலைப்படும். அது கருப்பு விசயத்தில் துலக்கமாக நடந்துள்ளது.

    இப்பொழுதும் கூட கருப்புவிற்ற்கு ஆதரவான மனநிலை கொண்ட பலரும், அவரது எழுத்தின் தன்மையினால் தயங்கி ஒரு ஊசாலாட்டத்துடன் இந்த நிகழ்ச்சிப் போக்கை அவதனித்துக் கொண்டிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.

    இவ்விடத்தில் தோழர் கருப்புவை முன்பே எச்சரிக்கத தவறியதற்க்காக நானும் வருந்துகிறேன்(வேறு தளங்களில் இது குறித்து எச்சரித்திருந்தும், நேரடியாக முயற்சி செய்யவில்லை).

    முந்தைய தமிழ் மண நடவடிக்கைகள் தெரிந்தோ தெரியாமலோ அது குறித்த ஒரு சார்பு கருத்தை வலுவாக ஊண்றி விட்டுச் சென்றுள்ளது. அது போன்ற சூழலில் ஜனநாயக வழிப்பட்ட அனுகுமுறைய கையாண்டிருந்தால் இதே சக்தி விரையம் அல்லது இதை விட குறைவான விரயத்துடன் நல்ல தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம். இங்கு தமிழ்மணத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் நான் கருத்து வைக்கவில்லை. இன்னும் சொன்னால் மற்றெல்லாரையும் போலவே நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

    பொதுவாக இது போன்ற விசயங்களில் ஈடுபட தயங்கினாலும், கருப்புவிற்க்கு எனது ஆதரவை காட்ட வேண்டிய கடமையையும், அவரது தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டிய கடமைகளையும் ஒருங்கே மனதில் கொண்டு இங்கு எழுத தலைப்பட்டேன்.

    தமிழ்மணம் இதனை எவ்வகையில் எடுத்துக் கொள்ளும் என்பதனைப் பற்றி தெரியவில்லை. ஆனால் நண்பர் கருப்புவின் சேவை இங்கு தேவைப்படுகிறது என்பதை அவர் உணர வேண்டும். அவரது இது வரையான எழுத்துக்கள் பெரியாரைப் பற்றி அறீமுகம் இல்லாதவர்களுக்கு அவரைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது என்பதனையும் அவர் உணர வேண்டும்.

    இது குறித்து தமிழ்மணத்தின் கருத்துக்களை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.

    இங்கு கருப்புவிற்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களை பாராட்ட கடமைப் பட்டுள்ளேன். குறிப்பாக தோழி பொன்ஸை பாராட்டுகிறேன்.

    அசுரன்

  106. தமிழ்மணம் on December 8th, 2006 10:31 am

    இந்த இடுகையிலேயான பின்னூட்டங்கள் இத்தோடு நிறுத்தப்படுகின்றன. அனுமதிக்கப்படாமலே இன்னும் பதினெட்டுப்பின்னூட்டங்கள் உள்ளன. எப்படியான பின்னூட்டங்களைத் தமிழ்மணம் விலக்க வேண்டுகிறது என்பதற்கு ஆதாரமாக அவற்றினைக் கொள்ளலாம். பின்னர் வேண்டினால், உதாரணங்களாக வெளியிடப் பயன்படும்.

    நன்றி.

    தமிழ்மணம் நிர்வாகம்.

  107. nadunilai on December 8th, 2006 11:43 am

    ஸ்ரீமான் ஈ.வெ.ராமஸ்வாமி நாயக்கர்
    மஞ்சத் துண்டன்
    காக்கா திருமா
    வீரமணிமாமா

    -இவை இன்றைய பதிவுகளில்
    நான் கண்ட சில சொற்கள்!
    த்மிழ்மணத்தின் தகுதிக்கு
    இவை பொருந்துமா?

  108. Samudra on December 9th, 2006 9:23 am

    Well done!

  109. தமிழ்மணம் on December 12th, 2006 12:17 am

    தமிழ்மணத்திற்குச் செய்யப்பட்ட முறையீடுகளின் காரணமாக இன்று நீக்கப்பட்ட இரு இடுகைகளும் அதற்குக் கொடுக்கப்பட்ட காரண அறிவுறுத்தல் அஞ்சல்களும்.

    1. அநாநிமஸ் பதிவின் இடுகை

    ஆடையைக் களையும் பார்ப்பனர் கூட்டம்!

    பதிவர் அநாநிமஸ்: தங்கள் இடுகை குறித்து தமிழ்மணத்திற்கு ஏதுவிதமான சிக்கலும் இல்லை; ஆனால், அதன் பின்னூட்டங்களின் எல்லை மீறல்களும் குறிச்சொல்லும் தமிழ்மணத்திற்கு அழுத்தம் தருவதாகத் தற்போதிருக்கும் இருக்கும் சூழலிலே அநாவசியமான சட்டச்சிக்கல்களிலே தமிழ்மணம் தன்னை உள்நுழைக்க விரும்பவில்லை. அதன் காரணமாக இவ்விடுகையைத் தமிழ்மணம் தொகுப்பிலிருந்து நீக்குகிறது. புரிதலுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி. தமிழ்மணம் நிர்வாகம்

    2. விட்டுது சிகப்பு பதிவின் இடுகை

    விலகல்கள், விலக்கங்கள், விளக்கங்கள்

    பதிவர் விட்டுது சிகப்பு: கீழுள்ள கருத்து தமிழ்மணத்துக்கு அனுப்பப்பட்டது. \”நண்பரே, இப்பதிவில் என் பெயரில் போலி கமெண்ட் உள்ளது. அதனை நான் சுட்டிக்காட்டியும் அவர்கள் எடுக்கவில்லை\” உண்மைநிலை தமிழ்மணத்துக்குத் தெரியாது. ஆனால் இருக்கும் சூழலிலே அநாவசியமான சட்டச்சிக்கல்களிலே தமிழ்மணம் தன்னை உள்நுழைக்க விரும்பவில்லை. அதன் காரணமாக இவ்விடுகையைத் தமிழ்மணம் தொகுப்பிலிருந்து நீக்குகிறது. புரிதலுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி. தமிழ்மணம் நிர்வாகம்

    இது குறித்த பின்னூட்டங்கள் இங்கே இடவசதி, முடிவின்றிச் சுழலும் பின்னூட்டப்போர்முறைகள் காரணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

    புரிதலுடன் தொடரும் பதிவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

    தமிழ்மணம் நிர்வாகம்

  110. சயந்தன் on February 24th, 2007 1:39 am

    இது பற்றிய எனது முன்னைய முறையிடுகைகள் கிடைத்திருக்குமென நம்புகிறேன்.
    குறித்த அப்பதிவர் மீண்டும் நேரடியாக என் பெயரினைச் சுட்டி நேற்று முன்தினமும் தனது பதிவொன்றினை மீளப் புதிப்பித்து உள்ளார்.
    http://unarvukal-unarvukal.blogspot.com/2007/01/blog-post_25.html

    அதில்
    மேலேயுள்ளவை கூட அந்தக் கூட்டத்திலுள்ள ஈழைத் தமிழர்களான கொழுவி அல்லது கழுவி அல்லது சயந்தன் அல்லது வசந்தன் என்ற பெயருள்ளதுகள் சொன்னவை.

    தமிழ்மண விதிகளின் படி ஒரு பதிவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் பதிவுகளும் அனுமதிக்கப் படும் பின்னூட்டங்களும் திரட்டியில் இருந்து விலக்கப் படுமென அறிந்தேன்.

    நான் இரு தடவைகள் அவ் வலைப் பதிவுக்கு நேரடியாக எழுதியாயிற்று. தமிழ்மணம் தன் விதிகளுக்குட்பட்டு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஏதாவது உள்ளதா?
    வழமை போல இதனை ஒரு இதனை ஒரு பெரும் பிரச்சனைக்குள்ளாக்கி பதிவுகள் எழுதி யுத்தங்கள் ;) நடாத்த நான் விரும்பவில்லை. தமிழ்மணம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருப்பின் அறியத்தர முடியுமா..? (இதனை வெளியிடாதும் விடலாம்)

  111. சயந்தன் on February 24th, 2007 1:43 am

    எனது முன்னைய முறையிடுகை நுட்பச் சிக்கல்களால் கிடைத்திருக்காது எனத் தோன்றுகிறது. மீள அனுப்பியுள்ளேன்.

    http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_21.html

    இந்தப் பதிவில் தேவையற்ற விதத்தில் என்னை கொச்சைப் படுத்தும் விதத்தில் பின்னூட்டம் ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது தடவை. முதற்தடவை அவருக்கு அது தொடர்பாக அனுப்பிய பின்னூட்டம் வெளியிடப்படவில்லை. இம்முறையும் அது பற்றியும் எழுதியுள்ளேன். அதனை இணைத்துள்ளேன்.

    உணர்வுகளுக்கு வணக்கம்.
    இது இரண்டாவது தடவை எனது பெயரை தேவையற்ற விதத்தில் கொச்சைப் படும் வகையில் நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள்.
    ஒரு தடவை நீங்களும் இத்தடவை பின்னூட்டமாகவும் இது அரங்கேறியிருக்கிறது.
    ஏற்கனவே எனது பெயரினை இங்கு இழுத்தமை தொடர்பாக நான் உங்களுக்கு அனுப்பிய மடலுக்கு யாதொரு பதிலுமில்லை.

    பின்னூட்டங்களில் தனிநபர் ஒருவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவற்றை பதிவர் வெளியிடுவது குறித்த அப்பதிவு தமிழ்மணத் திரட்டியில் இருந்து நீக்கப்படுமளவுக்கு விளைவுகளைக் கொண்டது.

    ஏற்கனவே மனநோயாளி என்று கருத்துத் தொனிக்கும் வகையிலும் இப்போ மிருகங்கள் என்ற ரீதியிலும் என்னை விளித்து கருத்து வந்துள்ளது. தயவு செய்து குறித்த கருத்துக்களை நீக்கவும்.

    இப்பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா என்ற சந்தேகத்தில் இதனை தமிழ்மண ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் பகுதிக்கும் அனுப்பியுள்ளேன். குறித்த கருத்துக்களை நீக்குவதற்கு அவர்களால் விடுக்கப்படும் கால அவகாசத்தில் நீங்கள் இவற்றை நீக்குவீர்கள் என நம்புகிறேன். நன்றி
    தொடர்ந்தும் தமிழ்மணத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.

    அவர் அனுமதித்த பின்னூட்டம் இது.

    கொழுவியென்பது வசந்தனும் சயந்தனும் தான். மனநோயுடன் அலையும் அந்த ரண்டு ஐந்துகளும் சொறிய இடம் தேடுதுகள். அதுகளுக்காக நீங்கள் உங்கடை நேரத்தை வீணடிக்க வேண்டாம். ரண்டும் கழுவுற நேரம் போக உங்களோடை கொழுவுதுகள்.

    நடவடிக்கை எடுக்க கோருகிறேன். நன்றி. வணக்கம்.

  112. unaruvkal blog on February 24th, 2007 7:32 pm

    //பின்னூட்டங்களிலே பயன்பட்ட சொற்கள் காரணமாக, கீழ்வரும் இடுகைகள் திரட்டுவதிலிருந்து நீக்கப்படுகின்றன:

    1. பதிவர்: உணர்வுகள்
    இடுகை: சில ஈழைத்தமிழர்களும் அவர்களின் உளறல்களும்!!

    4. பதிவர்: உணர்வுகள்
    இடுகை: செல்லா(த)வனின் கூத்தும் குத்துக்கரணமும் //

    நான் ஒன்றும் வம்புக்குச் சண்டைக்குப் போகவில்லை. நான் முன்னர் சேலையை விழுங்கிய பஞ்சாபி என்ற தலைப்பை எழுதியதும். அதை நையாண்டி செய்து, அவதூறாகப் பலகூறி என்னை வீண் வம்புக்கு பெயரிலி, கொழுவி, சயந்தன், வசந்தன், வெற்றி, சோமி, சின்னக்குட்டி போன்றோர் இழுத்தனர்.

    சயந்தன் என்னுடைய வலைப்பதிவிற்கு அனுப்பிய பின்னூட்டம் ஒன்றில் ‘சேலை தமிழ் அல்ல, வேட்டி தமிழ் அல்ல” என்று கூறியிருந்தார். சயந்தன், வசந்தன், கொழுவி போன்றோர் அவ்வாறு கூறியதோடு நிறுத்திவிடாது, என்னைக் கடுஞ்சொற்களால் தங்கள் வலைப்பூவில் வசைபாடினார்கள். சயந்தன் அனுப்பிய ஓரு பின்னூட்டத்தை நான் தவறுலதாக அழித்துவிட்டேன், அதனால் அவர் சமற்கிருதம் பற்றிக் கூறிய பின்னூட்டம் என்னிடமில்லை. மேற்கூறிய பதிவர்கள் என்னைச் சண்டைக்கு இழுக்கும் முகமாக, என்னை அவதூறு பேசி இட்ட பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதற்காகவும், சேலை வேட்டி போன்றவற்றைத் தமிழல்ல எனக்குறிப்பிட்டதற்குப் பதிலளிக்கும் முகமாகவும்தான் ‘ஈழைத்தமிழர்கள்” எனத் தொடங்கும் இடுகைகளை நான் இட்டேன். ஈழை என்றால் மனநோய் என அர்த்தம். தமிழ்ச் சொற்களைத் தமிழல்ல என்பதும் ஒருவிதமான மனநோயே, அதனால்தான் நான் அந்தத் தலைப்பைத் தேர்வுசெய்தேன்.

    மேற்கூறியவர்கள் என்னை இழிந்து பேசியதை பின்வரும் தொடுப்புகளில் சென்று பார்க்கலாம்.

    http://padamkadal.blogspot.com/2007/01/blo…2.html#comments

    http://koluvithaluvi.blogspot.com/2007/01/blog-post_25.html

    http://koluvithaluvi.blogspot.com/2007/02/blog-post_21.html

    http://koluvithaluvi.blogspot.com/2007/02/blog-post_22.html

    http://somee.blogspot.com/2007/01/blog-post_24.html
    “”"மாதுளன் மற்றும் மாதிலன் said…
    தமிழ் பெட்டையளின்ரை இடுப்பைப் பாக்காமால் அவங்கள் அவதிப்படுறாங்கள். வயசுக் கோளாறு.. அவையளின்ர உணர்வுகளையும் புரிஞ்சு கொள்ளுங்கோ..”"”

    http://koluvithaluvi.blogspot.com/2007/01/blog-post_26.html

    “”At 6:31 AM, ஆயா said…

    உணர்வுகள் ஊளையிடுமா… ஊஊஊஊஊஊ.. கனடாவில தாங்கள் என்ன செய்யினமோ அதையே மற்றவனும் செய்வான் எண்டு எதிர்பாக்கிறது ஈழத்தமிழ் நண்டுகளுக்கு பொதுவான விசயம் தானே.. அரோகரா.. யாதும் ஊரே யாவரும் கேளிர்”"

    http://www.yarl.com/forum3/index.php?showt…=20#entry254513

    http://sugunadiwakar.blogspot.com/2007/02/…-post_3545.html

    தற்போது நல்ல பிள்ளைகள் போல் நடிக்கும் சயந்தன் போன்றோர் வடிக்கும் நீலிக்கண்ணீரைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. மேலும், கொழுவி, சோமி போன்றோர் இட்ட இடுகைகளை அழிக்காது என்னுடைய இடுகையை மட்டும் அழித்தது தமிழ் மணத்தின் பக்கச்சார்பைக் காட்டுகின்றது.

    அவை நடந்து ஒரு மாதகாலமாகி விட்டன. ஆனால் பெயரிலி, கொழுவி போன்றோருக்குப் பதிலாக நான் இட்ட இடுகைகளால் அவர்களின் மூக்குடைந்துவிட்டதால், தொடர்ந்தும் எனக்குத் தொல்லைதரும் வகையில் அவர்கள் நடந்துகொண்டனர், இன்றும் நடக்கின்றனர். அதுபோன்றே செல்வாவும் எனது இடுகையை எடுத்து என்னைக் கீழ்த்தரமாக விமர்சித்ததால் செல்வாவுக்குப் பதிலளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உந்தப்பட்டேன்.

    அவ்வாறே அண்மையில் மிதக்கும் வெளி என்பவரும் என்னை வீண் வம்புக்கு இழுத்தார். முதலில் மிதக்கும் வெளி என்னை விமர்சித்தார், அதற்குப் பதில் இடுகையை நான் போட்டேன். அதைப்பார்த்த கொழுவி, வன்னியன் போன்றோர் அவருடன் ஒன்றுசேர்ந்து கும்மாளம் அடிக்கத்தொடங்கினர். விமர்சனத்தோடு மட்டும் நின்றுவிடாது, உணர்வுகள் வலைப்பூவிற்கு எங்கள் வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இடுங்கள் என்று விளம்பரம்கூட செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

    மேலும் உணர்வுகளுக்கு இங்கு பின்னூட்டமிடவும் என்ற விளம்பரப் படத்தைக் கொழுவி தனது வலைப்பூவின் மேற்பகுதியில் கொழுவியுள்ளார். அதுதொடர்பாக நான் தமிழ்மண நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனக் கையை விரித்துவிட்டு, நீர் மிதக்கும் வெளியை விமர்சித்தீர் (அவர்தான் அய்யா என்னை முதலில் விமர்சித்தார்!), அதற்குக் கொழுவி உங்களை விமர்சிக்கின்றார் என்று மழுப்பிவிட்டீர்கள். அதற்கு நான் மறுமொழி ஒன்றை மீண்டும் மின்னஞ்சல் மூலமாக எழுதினேன். அதை எழுதி இன்றோடு இரண்டு நாட்களுக்கு மேலாகவிட்டது, இன்னும் பதில் வந்ததாகத் தெரியவில்லை.

    மிதக்கும் வெளியை என்னை விமர்சித்ததற்கு நான் பதில் இடுகை செய்ததால் கொழுவி என்னை விமர்சிக்கலாம் என்று தமிழ்மண நிர்வாகம் கருத்துத் தெரிவித்திருந்தது. அவ்வாறெனின், வசந்தன், கொழுவியுடன் கூட்டுச் சேர்ந்து வேட்டி தமிழ்ச் சொல்லல்ல எனக்கூறிய சயந்தனை ஈழைத் தமிழர் என்று அழைப்பதில் என்ன தவறு?

    இதற்குக் காரணம் கொழுவியும், சயந்தனும் தான், அதை நீங்கள் ஆரம்பத்தில் கண்டிக்கவில்லை. அவர்களின் பதிவுக்குத்தான் நான் பதிலளித்தேன். நேற்றுக் கூட கொழுவி தமிழ்மணத்தில் எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள் பார்ப்போம் எனச் சவால் விட்டார்.

    கொழுவி அவர் என்னைப் பற்றி இழிவாகப் பேசிக் கொண்டே, அவரை பற்றி நான் கூறியதை அழிக்கச் சொல்லி மிரட்டுகிறார். நீங்கள் கூட, உங்களால் எதுவும் செய்ய முடியாதென்று கையை விரித்து விட்டு, ஒரு தலைப்பட்சமாக நடப்பது கண்ணியமானதாக எனக்குப் படவில்லை.

    பின்னூட்டத்தை அனுமதிப்பது, அனுமதிக்காமல் விடுவதும் வலைப்பதிவாளரின் உரிமை, அப்படியிருந்தும் இந்த வலைப்பதிவுக்குப் போட்டியாக, வெளிப்படையாக அறிவித்து விட்டுக் கொழுவி பதிவைத் தொடங்கியபின்னும் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்மணத்தில் சிலருக்கு, மற்ற வலைப்பதிவளார்களைவிடக் கூடுதல் அதிகாரமுண்டா? அப்படியென்றால் அவர்களின் பெயர்களை அறிவித்தால், அவர்கள் என்ன தான் சொன்னாலும், பதில் சொல்லாமல் இருக்கலாம். இன்றும் கொழுவி, உணர்வுகள் வலைப்பதிவுக்கெதிராக பின்னூட்டம் இடுவதற்காகத் தொடங்கிய பதிவை விட்டு, என்னுடைய பதிவை மட்டும் நீக்கியது நியாயமானதா? தமிழ்மணத்தின் விதிகளுக்குச் சரியா? எல்லோருக்கும் நடுநிலையாக நடப்பீர்கள் என நினைத்துத் தானே நானும் இணைந்தேன்.

    நான் பாவித்த, பாவிக்கும் வார்த்தைகளை விட மிக, மிக மோசமான வார்த்தைப் பாவனைகள் தமிழ்மணத்திலுண்டு. உதாரணம், செல்லா, கொழுவி மற்றும் சிலர்.

    பாரதியாரை ஈனப்பிறவி என்பதை அனுமதிக்கும் நீங்கள் ஈழைத்தமிழர் என்ற வார்த்தையில் பிழை கண்டது வேடிக்கை மட்டுமல்ல, வேதனைக்குமுரியது. தமிழ்மணத்திலுள்ள நல்லெண்ணத்தாலும் தொடர்ந்து இங்கிருக்கும் எண்ணத்துடனும் தான் இவ்வளவையும் எழுதுகிறேன், பாரபட்சமில்லாமலும், நீதியுடனும் நடந்து கொழுவியின் பதிவையும் நீக்குவீர்களென நம்புகிறேன், அத்துடன் உங்களின் விளக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.

    உணர்வுகளுக்கு எனது வலைப்பூவில் வந்து பின்னூட்டமிடுங்கள் என்று விளம்பரம் செய்யும் கொழுவியின் வலைப்பதிவைத் தமிழ்மணத் திரட்டியிலிருந்து முற்றாகவே நீக்க வேண்டும்.

    =======
    *This was post under நாளாந்த விலக்குதல் post. Please do not post under that post so that it won’t get cluttered.
    Thanks for the uderstanding

    admin
    thamizmaNam

  113. தமிழ்மணம் on February 24th, 2007 7:38 pm

    தமிழ்மணம், தமிழ்வலைப்பதிவுகளின் மழலைக்கண்காணிப்பகமோ தமிழ்ப்பண்பாட்டுக்காவலகமோ அல்ல; வெறும் தன்னார்வ வலைப்பதிவுத்திரட்டிமட்டுமே (பெருமூச்சு!).
    இயன்றவரை நமக்கு நாமே வகுத்த விதிகளுக்கு இணக்கமாக நம் நலனை எண்ணி நடக்கின்றோம்.
    இதற்குமேலே சொல்வதற்கொன்றுமில்லை. நாளை ஆளுக்கொரு திரட்டியென ஒவ்வொரு பதிவரும் தானே செய்துகொள்ளும் நிலை வந்தால், இத்தகுகேள்விகளை அவர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கமுடியாதெனில், இப்போது திரட்டப்படும் ஒவ்வொரு பதிவிலேயிருக்கும் ஒவ்வொரு வரிக்கும் (அது தமிழ்மணத்திலே தோன்றுவதில்லை என்பது தெள்ளத்தெளிவு) தமிழ்மணத்திடம் பதிலினை எதிர்பார்ப்பது முறையுமல்ல, ஏரணத்துக்கொவ்வியதுமல்ல.

    சுட்டப்பட்ட பதிவுகளிலே தனிப்பட்ட தாக்குதல்கள் தமிழ்மணத்தின் நலனைப் பாதிக்கும்வகையிலே இருக்குமானால், குறிப்பிட்ட இடுகையோ பதிவோ எந்நேரத்திலும் சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு ஒரு சிறு தனிப்பட்ட அறிவித்தலுடன் அகற்றப்படும். பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி தற்காலிகமாகவோ நிரந்திரமாகவோ நிறுத்தப்படும். உதாரணத்துக்கு, இரண்டு நாட்களின் முன்னால், தொடர்ந்தும் தமிழ்மணத்தின் பின்னூட்டற்றிரட்டலிலே பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மட்டுமே வெளிப்படையாக முன்னிலைப்படுத்திப் பின்னூட்டப்பட்ட பதிவொன்றின் பின்னூட்டங்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதிலிருந்து விலக்கப்பட்டது. பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலே எண்களையோ எழுத்துக்களையோ வெறும் இணையத்தொடர்பாடல்களிலே அடிக்கப்படவேண்டிய ஒற்றைவரிகளையோ அடித்துக்கொண்டிருக்கும் இடுகைகளுக்கும் இச்சேர்ப்பதிலான இடைநிறுத்தம் பயன்படும்.

    புரிதலுடனான தொடரும் ஆதரவுக்கு நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்.

  114. eelabarathi on February 24th, 2007 8:41 pm

    தமிழ்மணத்தின் அருமையான விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒரு சிலரில் இருக்கும் கோவத்தில் அனைத்து ஈழத்தமிழரையும் மனம் புன்படும்படி ஈழத்தமிழரென விழிப்பது ஏற்புடையது அல்ல. உணர்வினது பதிவு விலக்கியது சரியான செயலே இதற்கு நாம் ஆதவு தெரிவிக்கிறோம்.

    =====
    உணர்வுகளின் பதிவினை இதுவரை விலத்தியதாக எங்குமே நாம் எழுதவில்லை.
    பின்னூட்டங்கள் போடப்படுவதன் தன்மை காரணமாகத் தொகையை அதிகரிக்கும் மு. கார்த்திகேயனின் பின்னூட்ட இற்றைப்படுத்துதலைக் காட்டுவதைத்தான் இரண்டு நாட்களாக நிறுத்தியிருக்கிறோம். அதைத்தான் சுட்டினோம்.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  115. Unarvukal on February 26th, 2007 1:05 am

    ///தமிழ்மணம்
    February 24th, 2007 | 7:38 pm
    தமிழ்மணம், தமிழ்வலைப்பதிவுகளின் மழலைக்கண்காணிப்பகமோ தமிழ்ப்பண்பாட்டுக்காவலகமோ அல்ல; வெறும் தன்னார்வ வலைப்பதிவுத்திரட்டிமட்டுமே (பெருமூச்சு!).///

    ஏன் வீண் பெருமூச்சு, உங்கள் நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்களின் வலைப்பதிவுகளைப் பட்டியலிட்டால், அவர்கள் இருக்குமிடம் செல்லாமல் நாம் தவிர்ப்போமே? பெயரிலி நிர்வாகத்தில் உள்ளாரா? இல்லை கொழுவி உள்ளாரா?

    தன்னார்வ வலைப்பதிவுத் திரட்டி, குறிப்பிட்ட வலைப்பதிவுகளில் வெளிவரும் இடுகைகளைத் தடைசெய்துகொண்டு, நாங்கள் சுட்டிக்காட்டி, மின்னஞ்சல் அனுப்பியும் கொழுவியின் வலைப்பதிவுமேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் என்ன?

    இன்று உணர்வுகள் வலைப்பதிவுக்கு அனானிமஸ் ஒருவர் கீழேயுள்ள பின்னூட்டத்தை இட்டிருந்தார், இது வெறும் அறிவுரையா அல்லது அச்சுறுத்தலா என்பது எனக்குப் புரியவில்லை.

    ///அன்பரே உங்கள் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவன் நான். நிறைந்த வாசிப்பு உங்களிடம் உள்ளது.
    நிற்க
    தமிழ்மணம் தற்போது பெயரிலியால் நிர்வகிக்கப்படுவதென்பது அனைவரும் அறிந்த ஒன்று. – தமிழ்மணத்தில் உங்களுக்கு விளக்கப் பதில் எழுதுபவரும் அவரே – இந்நிலையில் உங்கள் குற்றச் சாட்டுக்களில் பெயரிலியை இழுத்துச் சாடுவது எந்தளவு தூரம் பயனளிக்கும் ?

    நீங்கள் பெயரிலியின் எழுத்தில் பரீச்சயம் உள்ளவராக இருந்தால் பூங்கா இதழின் ஆசிரியரின் மேசையிலிருந்து வாசித்துப் பாருங்கள். இலகுவாகப் புரியும். உங்கள் குற்றச் சாட்டுக்களில் பெயரிலியை இழுத்து மோதுவது பெயரிலி மீது பெரும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கும் மற்றயை தமிழ்மண நண்பர்களிடம் இருந்து உங்களை விலக்கவே உதவும்///

    உண்மையில் பெயரிலி தமிழ்மண நிர்வாகி என்றால் அவர் தனது நண்பர்களுக்காக ஒரு பக்கச்சார்பாக நடந்துகொள்ளக்கூடாது. நான் தமிழ்மணத்துக்குப் புதியவன் ஆனால் அப்படிச் செய்வது நடுநிலை வகிக்க வேண்டிய, நாமெல்லாம் எமது குறைகளைச் சொல்லும் நிர்வாகத்துக்கு அழகல்ல.

    வெறும் செய்திகளை மட்டும் பதிவு செய்யும் வலைப்பதிவாளர்களுக்குக் கூட உணர்வுகளின் மீது ஆத்திரமுண்டாவதன் காரணம் புரியவில்லை

    =====
    பதிவர் உணர்வுகள்:

    நீங்கள் தமிழ்மணம் தந்திருக்கும் பதிலை மீண்டுமொரு வாசித்துப்பார்த்தால், பதில் உங்களுக்காக மட்டும் தந்ததல்லவெனத் தெளிந்திருப்பீர்கள்.

    உங்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவையும் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளதுமான பின்னூட்டிகளினதும் அவர்களது பின்னூட்டங்களினதும் அரசியல்கள் குறித்து தமிழ்மணத்தினை நடத்தும் டி எம் ஐ நிறுவனத்துக்கு அக்கறையில்லை. டிஎம்ஐ நிர்வாகிகள் யாவரெனத் தெளிவாக டிஎம்ஐ தளம் தருகின்றது. தமிழ்மணம் முன்றலூடாக நீங்கள் அதை அணுகிப் பார்க்கலாம்.

    உங்களுடைய தொடரும் இம்முறையீட்டின் அடிப்படையின் திரிபினையும் மேலோட்டமான குற்றச்சாட்டுகளையும் தமிழ்மணம் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் அதற்கில்லை. அதுபோலவே, நீங்கள் வேண்டிக்கேட்டுக்கொண்டதன்படி, உங்கள் கவிதைப்போட்டி குறித்த விளம்பரத்தினையும் தமிழ்மணத்தின் முன்றலிலே போடவேண்டிய அவசியமிருக்கவில்லை.

    தொடர்ந்தும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்களை முன்வைக்கமாட்டீர்களென நம்புகிறோம். தொடர்ந்து இதுபோன்ற தமிழ்மணத்தின் விதிகளுக்கமைய இயங்குவதிலே உங்களுக்குச் சிக்கலிருப்பின், உங்களுக்குப் பின்னூட்டம் இட்டவர் கூறுவதுபோல, தனியாள் ஒருவரே விதிகளை இங்கே நிர்ணயிப்பதாக எண்ணினால், தயவு செய்து admin@thamizmaNam.com மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் பதிவினைத் தமிழ்மணத்திலிருந்து விலக்கிக் கொள்ளும்படி ஓர் அஞ்சல் அனுப்புங்கள். விரைந்து செய்வோம்.
    இனி அநாமதேயங்களின் வார்த்தைகளினை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்படும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமாக பின்னூட்டங்களினை இங்கே இடமாட்டீர்களென நம்புகிறோம். அப்படியாக வரும் பட்சத்திலே அவற்றினை அனுமதிக்க, இப்பதிவொன்றும் குப்பைக்கூடையல்ல என்பதைத் தெளிவாக உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இறுதியாக, உங்கள் பதிவுகளை அவற்றின் உள்ளடக்கம், ஒலிப்பு, சொற்புழக்கம் என்பனவற்றினுடனான பார்வைகளுடன் நீங்களும் வாசிக்கின்றீர்களென நிச்சயமாக நாம் நம்புகிறோம்.

    நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  116. Unarvukal Blog on February 27th, 2007 11:38 pm

    கவிதைப்போட்டியைத் தமிழ்மணத்தின் முகப்பில் இட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் அவ்வேளை, தாங்கள் கொழுவிமேல் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.

    கொழுவி உணர்வுகள் வலைப்பூவிற்குத் தனது வலைப்பூவில் பின்னூட்டம் செய்யலாம் என வெளிப்படையாக விளம்பரம் ஒன்றைத் தனது வலைப்பூவின் இடதுமேல்புறத்தில் இட்டுள்ளார். அவரது அவ்வாறான நடவடிக்கையைத் தமிழ்மணமும் ஏகமனதாக ஏற்று ஊக்குவிக்கின்றதா என்பதுபற்றித் தமிழ்மண நிர்வாகம் விளக்குமாறு வேண்டுகிறேன்.

    அங்கனம் கொழுவி அந்த விளம்பரத்தை அகற்றாதுவிடின், நானும் பதிலுக்கு அவரின் வலைப்பதிவிலோ இல்லை அவரது சகாக்களின் வலைப்பூவிலோ பின்னூட்டமிடுவதற்குப் பதிலாக எனது வலைப்பூவில் பின்னூட்டமிடுமாறு விளம்பரம்போடலாமா? அவ்வாறு எல்லோரும் பிறர் வலைப்பூவிற்குத் தமது வலைப்பூவில் பின்னூட்டமிடலாம் என்ற விளம்பரம் போடலாமா? அப்படியான அடாவடித்தனத்தை தமிழ்மணம் அனுமதிக்கிறதா? அதைப்பற்றி நீங்கள் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

    மிதக்கும் வெளி என்னை விமர்சித்ததற்கு நான் மிதக்கும் வெளிக்குப் பதிலளித்தால் கொழுவி போன்றோர் என்னை விமர்சிக்கலாம் எனத் தமிழ்மண நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறெனின் எனது வலைப்பூவிற்குத் தனது வலைப்பூவில் பின்னூட்டமிடலாம் எனக் கொழுவி கூறுவதால் கொழுவியின் சகாக்களின் வலைப்பூவை நானோ அல்லது வேறு யாரேனும் தாக்கலாம். அதுபோல் ஒவ்வொருவரும் இன்னொருவர் வலைப்பூவை விமர்சிக்க என்று வலைப்பூக்களை உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைக்கலாம். அதைத்தான் தமிழ்மணம் சொல்லவருகின்றதா?

    எனது வலைப்பூவைத் தமிழ்மணத்திலிருந்து அகற்ற நான் விரும்பவில்லை. அதேசமயத்தில் தமிழ்மணம் எனது இடுகைகளைக் காரணமின்றி கேட்டவாக்கில் நீக்கியபோதும், எனது வலைப்பூவை விமர்சித்தும், எனது வலைப்பூவிற்குத் தனது வலைப்பூவில் பின்னூட்டமிடலாம் என்று விளம்பரமும் செய்யும் கொழுவிமீது ஏன் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை?

    கொழுவிக்கும் அவரது அடாவடித்தனத்துக்கும் நான் பயந்து விட்டேனென்று அர்த்தமல்ல, அவரது பாணியில் பதிலளிக்க எனக்கும் தெரியும், எதற்கும் இந்த விடயத்தில் உங்களின் தெளிவான விளக்கத்தை மட்டும் எதிர்பாக்கிறேன்.

    “what is sauce for the goose must also be sauce for the gander.”
    =====
    உணர்வுகள் ஆரூரன்:

    கவனிப்பதற்கு நிறைய பயனுள்ள வேலைகள் நேரத்தையும் சக்தியையும் வேண்டி நிற்கின்றன. திரும்பத் திரும்பச் சொல்லியாகிவிட்டது. இனி, சொல்வதற்கு ஏதுமில்லை. அவ்வளவுதான். உணர்வுகளைக் கொழுவுவதும் கொழுவுவதை உணர்வதும் நமக்கான கடமைகளல்ல.

    “Someone’s Terrorist another’s Liberator….
    for a facilitator, these terms don’t matter

    நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  117. கொழுவி on February 28th, 2007 7:34 am

    இப்பின்னூட்டத்துக்காக தமிழ்மணம் பதிலளிக்கத் தேவையில்லை.
    ஆரூரான் அவர்களுக்குரிய பதில்தான் இது. இங்குக் கேள்வி கேட்டதால் இங்கேயே பதிலளிப்பது நல்லது.
    ==========================
    ஆரூரான்,
    உங்கள் வலைப்பதிவுக்கான பின்னூட்டங்களைத் திரட்டுவது பற்றி மிகமிக விளக்கமாக எமது வலைப்பதிவில் சொல்லியாகிவிட்டது. நியாயமான சகல காரணங்களையும் சொல்லியாகிவிட்டது. அப்படியொரு பதிவு போட்டிருப்பதைக் கண்ட நீங்கள் அங்கு என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை ஒருமுறை வாசித்திருந்தால் இப்படி மாங்கு மாங்கென்று தட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

    ஈழத்தமிழரின் அரசியலோடு தொடர்புடைய முக்கியமான பின்னூட்டங்களையும் தனிப்பதிவருடைய தன்னிலை விளக்கங்களையும் வெளியிடாமல் பிழையான கண்ணோட்டமொன்றை மற்றவரிடத்தில் ஏற்படுத்தும் முயற்சியின் விளைவாகவே அப்பதிவு தோன்றியது. தனிப்பட்ட பதிவருடைய தன்னிலை விளக்கங்களை அனுமதிக்காமல் அவர்களைப் பிழையானவர்களாக மற்றவர்கள் கருதும் வகையில் தொடர்ந்து ஊடக வன்முறையைச் செய்துகொணடி்ருக்கிறீர்கள். இதில் பெயரிலி தொடக்கம் வெற்றி வரை நிறையப்பேர் பாதிக்கப்பட்டவர்களுள் அடங்குவர்.

    நீங்கள் கொழுவிக்கு வரும் பின்னூட்டங்களையோ கொழுவியின் நண்பர்களாக நீங்களே கருதும் பதிவர்களுக்கு வரும் பின்னூட்டங்களையோ திரட்ட வேண்டிய அவசியமேயில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் உங்களைப் போல் வெளியிடப்பட வேண்டிய பின்னூட்டங்களை மட்டுறுத்தி ஊடகவன்முறை செய்பவர்களல்லர். நியாயமாகவே நடந்துகொள்கின்றனர். அவர்கள்மேல் எந்தப்பதிவருமே பின்னூட்டங்களை ஒளிப்பது பற்றி இதுவரை புகார் சொல்லிப் பார்த்துண்டா?
    இந்நிலையில் அவர்களின் பின்னூட்டங்களை என்பதிவில் திரட்டுவேன் என்று குழந்தைப்பிள்ளைபோல அடம்பிடிப்பது ஏன்?
    மற்றவர்கள் தவறே செய்யாதிருக்கும்போது இதென்ன புதுக்கூத்து?

    நீங்கள் சரியானமுறையில் பின்னூட்டங்களை வெளியிட்டு ஆரோக்கியமான விவாதச்சூழலைப் பேணும்போது உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை இன்னொருவர் திரட்டுவது இயல்பாகவே இல்லாமற்போய்விடும். அதைச் செய்வதைவிட்டுவிட்டு நானும் மற்றவர்களின் பின்னூட்டங்களைத் திரட்டுவேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

    நீங்கள் நினைக்கும் பதிவர்களும் உங்களைப்போல் பின்னூட்டங்களை நிறுத்தி அராஜகம் செய்யும்போது கொழுவி சொன்ன அதே காரணங்களை உங்களுக்கு நியாயமாக்கிக்கொண்டு நீங்களும் அப்பதிவர்களுக்குரிய பின்னூட்டங்களைத் திரட்டும் வேலையத் தொடங்கலாம். அல்லாதபட்சத்தில் நியாயம் உங்கள்பக்கமில்லை.

    நிற்க, உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை நுட்ப ரீதியில் களவெடுத்து யாரும் திரட்டவில்லை. கொழுவியின் வலைப்பதிவில் பதிவர்கள் தாங்களாகவே வந்து இடும் பின்னூட்டங்களே அவை. அதாவது நீங்கள் தங்கள் பின்னூட்டங்களை வெளியிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையின்மையில் அவர்கள் வந்து அங்கு இடுகிறார்கள். நேரடியாக அவை கொழுவியின் பதிவில் இடப்படும் பின்னூட்டங்களே. அப்பின்னூட்டங்களைச் சொந்தம் கொண்டாட வேறுபதிவர்களுக்கு தார்மீக உரிமையில்லை.

    இப்படி பின்னூட்டங்களைச் சேர்ப்பதும் திரட்டுவதும் காலகாலமாக வலைப்பதிவில் நடந்துவருபவைதான். ஒருபதிவர் வேறு வலைப்பதிவுகளில் தான் இடும் பின்னூட்டங்களை தன் பதிவிலும் இட்டுவருவது தமிழ்வலைப்பதிவுலகில் நீண்டகாலமாக இருந்துவருவது. அதுபோல் ஓரிடத்தில் இடும்பின்னூட்டத்தை வேறோரு பதிவரின் இடுகையிலிரும் இட்டுவருவதுகூட தொடர்ந்து நடந்துவருவதுதான். இப்படியான நேரங்களில் எந்தப்பதிவருமே ‘இஞ்ச போட்டதை ஏன்ரா அங்கயும் போட்டாய்?’ என்று குழப்படி செய்துகொண்டிருப்பதில்லை.

    ======
    கொழுவி தமிழ்மண நிர்வாகத்தில் இல்லை. நிர்வாகத்தில் யார் யார் இருக்கிறார்களென்ற பட்டியலில் பார்த்துக் கொள்ளலாம்.

    ===============================

    தமிழ்மணம்பதிவர் கொழுவி:

    இப்பின்னூட்டங்களை இங்கே நாம் அனுமதித்திருக்கத்தேவையில்லை. ஆனால், ஆரூரனின் பின்னூட்டங்களை அனுமதித்த ஒரே காரணத்துக்காகப் பதில் சொல்ல அனுமதித்தோம். இனிமேல் இது தொடர்பான எப்பின்னூட்டத்தினையும் இரு சாராரிடமிருந்தும் அனுமதிக்கமாட்டோம்.

    புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  118. Unarvukal Blog on February 28th, 2007 8:48 am

    “உணர்வுகளைக் கொழுவுவதும் கொழுவுவதை உணர்வதும் நமக்கான கடமைகளல்ல.”

    அப்படியென்றால் உங்களால் நீக்கப்பட்ட எனது இரண்டு இடுகைகளிலும் உங்கள் உணர்வு கொழுவுப்பட்டது ஏன்?
    ==========
    பதிவர் ஆரூரன்:

    “நாளாந்தம் நீக்கப்படும் இடுகைகள்/பதிவுகள்” இப்பதிவினைப் பார்த்தால், அவற்றிலே உணர்வுகளோடு கொழுவியோ, கொழுவுவதை உணர்ந்தோ விலக்கப்பட்டவை எத்தனை?
    பதிவுகளின் உள்ளடக்கங்கள் தமிழ்மணத்தின்மீது தாக்குதலைப் பிறர் மேற்கொள்ள வசதி செய்யுமென நினைப்பினே, நாம் இடுகைகளையோ பதிவுகளையோ நீக்குவதுண்டு.
    நியாயமாகப் பார்த்தால், உங்களின் பதிவின் ஒலிப்புக்காகவும் மற்றோரைத் தாக்கும் முறைக்காவும் முழுப்பதிவினையுமே நீக்குதல் வேண்டும். ஆனால், பல பதிவுகள் இதேபோலவே வருகின்றன. இயன்றவரை பதிவர்களுக்கே எதைச்ச் சேர்ப்பது விலக்குவதென சுதந்திரத்தைக் கொடுத்து நடக்கின்றோம்.

    உங்களுக்கு நாளும் உளச்சிக்கல் இல்லாமல், உங்கள் பதிவினை இன்றோ அல்லது நாளையோ நீக்கிவிடுகின்றோம்.

    உங்கள் பின்னூட்டங்கள் தொடர்பின்றியிருப்பின், இனி அவை அனுமதிக்கப்படமாட்டா

    நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  119. Unarvukal Blog on March 1st, 2007 1:30 pm

    //உங்களுக்கு நாளும் உளச்சிக்கல் இல்லாமல், உங்கள் பதிவினை இன்றோ அல்லது நாளையோ நீக்கிவிடுகின்றோம்.

    உங்கள் பின்னூட்டங்கள் தொடர்பின்றியிருப்பின், இனி அவை அனுமதிக்கப்படமாட்டா

    நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம் //

    நான் கொழுவியின் அடாவடித்தனம் பற்றிக் கேட்டதற்கும் நீங்கள் ஒருபக்கச் சார்பாக நடப்பதற்கும்
    உங்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் என்னுடைய வலைப்பூவைத் தமிழ்மணத்திலிருந்து நீக்குவேன் என்று மிரட்டுகிறீர். தமிழ்மணத்திலிருந்து என்னுடைய வலைப்பூவை நீக்குவது உங்களைப் பொறுத்தது, அதற்கு நான் அஞ்சிநடுங்கப்போவதில்லை.

    ======
    Blogger uNarvukaL:
    Do not worry. You will get what you wish.
    We certainly aware that some bloggers copy and paste your posts. They can continue to exist in thamizmaNam as the posts are not the issue at this moment (inspite of the way they are put into words).
    Your requested post for having the poetry contest Ad showing in the front of thamizmaNam will also be removed asap.

    Thank you for been part of thamizmaNam for a short time.
    wish you all the best.

    Admin
    thamizmaNam

Leave a Reply