‘பதிவு’ கருவிப்பட்டையிலே பூங்கா

September 26, 2006 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் திரட்டியிலே சேர்ந்திருக்கும் பதிவுகளிலே இன்று தோன்றும் ‘பூங்கா’ இணைப்பினைத் தரும் தமிழ்மணத்தின் ‘பதிவு’ கருவிப்பட்டை, தற்போதிருக்கும் பதிவு பட்டையினை மேம்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றினைச் சோதித்துப்பார்க்கும் நோக்கிலேயான தற்காலிகக்கூறு மட்டுமேயாகும்.

பதிவர்களின் பதிவுகளிலே அவர்களின் அனுமதியின்றி, தமிழ்மணம் -இப்படியான சோதனை முயற்சிக்கப்பால்- நிரந்திரமாக எவ்விதமான உள்நுழைதலையும் செய்யாது என்பதை மீண்டும் தமிழ்மணம் உறுதி செய்கிறது.

வருங்காலத்தில், தொழில்நுட்பரீதியிலான இப்படியான சோதனை முயற்சிகளிலே பதிவர்களின் பதிவுகளிலே இடையறுத்துச் செயல்புரியவேண்டிய தேவை ஏற்படுமானால், வேண்டியளவு கால அவகாசம் கொடுத்து அவர்களின் அனுமதியுடனேயே தமிழ்மணம் செயற்படும்.

இன்றைய சோதனைமூலம் யாருக்கேனும் உளத்தாங்கல் ஏற்பட்டிருந்தால், தமிழ்மணம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Comments

6 Responses to “‘பதிவு’ கருவிப்பட்டையிலே பூங்கா”

 1. டோண்டு on September 27th, 2006 9:53 am

  அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று நான் முதலிலேயே நினைத்தேன். ஆகவே கேட்கவில்லை.

  அதை உறுதி செய்ததற்கு நன்றி.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. லக்கிலுக் on September 27th, 2006 9:54 am

  ஓக்கே… ஓக்கே… எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லே….

 3. வைசா on September 27th, 2006 12:39 pm

  தகவலைத் தெரியப் படுத்தியதற்கு நன்றி.

  வைசா

 4. theevu on September 27th, 2006 3:56 pm

  தாங்கள் விளம்பரம் இட்டால்கூட அதை புரிந்து கொள்வேன் .ஆனால் ஒரு அறிவித்தல் கூட விடவில்லையே என்ற ஒரு மனத்தாங்கலில்தான் அந்தப் பதிவு.

  நன்றி தமிழ்மணம்.

 5. ரவிசங்கர் on December 8th, 2006 6:32 pm

  அன்பின் தமிழ்மண நிர்வாகிகளுக்கு,
  பூங்கா முதல் இதழில் என் படைப்பு ஒன்று வெளிவந்தது. அதை என் நண்பர் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். அடுத்தடுத்த பூங்கா இதழ்களில் என் படைப்புகள் ஏதும் வந்திருக்கிறதா என்று புரட்டிப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. சில சமயம் படிக்க முடியாமலும் போய் விடுகிறது. நீங்கள் பதிப்பிக்கும் இடுகைகளுக்குரிய பதிவர்களுக்கு மின்மடல் மூலமாகவோ அவ்விடுகையில் ஒரு பின்னூட்டமாகவோ தெரிவித்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி

  ====
  பதிவர் ரவிசங்கர்:

  இது குறித்து நீங்கள் பூங்கா இதழ் அறிவிப்புக்குரிய பதிவினூடாக அறியலாம்.
  பூங்கா இதழ் அறிவிப்பு வலைப்பதிவு
  http://blog.poongaa.com

  தமிழ்மணம் நிர்வாகம்

 6. ramesh on December 19th, 2006 7:26 am

  sdf

Leave a Reply