தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்

October 23, 2014 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தில் வெளிவரும் பதிவுகளில் சில பதிவுகள் தரமற்ற தகவல்களை வெளியிடுவதாக பதிவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அத்தகைய பதிவுகள் தமிழ்மணத்தில் இருந்து தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன‌.

தமிழ்மணம் தானியங்கியாக பதிவுகளை திரட்டும் ஒரு மென்பொருள். தமிழ்மணத்தில் உள்ள எந்தப் பதிவும் மட்டுறுத்தப்படுவதில்லை. தானியங்கியாக பதிவுகள் திரட்டப்படும் சூழலில் அனைத்து பதிவுகளையும் நிர்வாகத்தால் கவனிக்க முடியாத சூழ்நிலை சில நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த கவனக்குறைவுக்கு பதிவர்களிடம் தமிழ்மணம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு ஆக்கப்பூர்வமான தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக தமிழ்மணம் இருக்க வேண்டும் என்பதே தமிழ்மணத்தின் நோக்கம். தரமற்ற சிலப் பதிவுகளால் தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நேர்ந்த சங்கடங்களுக்கு தமிழ்மணம் வருந்துகிறது.

தமிழ்மணம் மேல் அக்கறை கொண்டு தமிழ்மணத்தின் நிர்வாகத்திற்கு இந்தப் பிரச்சனையை கொண்டு வந்த அனைத்து பதிவர்களுக்கும் தமிழ்மணம் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி,
நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

21 Responses to “தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்”

  1. கோபாலன் on October 23rd, 2014 1:59 am

    எது தரம் என்பதில் என்றுமே ஒவ்வொருவருக்கும் வேறுபாடு உண்டு. இருப்பினும், நடுநிலையான. மற்றவர் மனதைப் பாதிக்காத தரமுள்ள வார்த்தைகள் அடங்கிய கருத்துக்களை கவனத்தில் கொண்டு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    கோபாலன்

  2. அமுதவன். on October 23rd, 2014 2:06 am

    நியாயமாகவும் நேர்மையாகவும் தமிழ்மணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் பல பதிவர்களின் மனக்குமுறலும் தங்களின் இந்த அறிவிப்பின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டுத் தடுத்திருக்கும் சில பதிவர்களின் அட்டகாசம் பொறுத்துக்கொள்ள முடியாததாகவே இருந்தது. என்னைப்போன்ற பல பதிவர்கள் ஒன்றும் சொல்லமுடியாதபடி கைகட்டி வாய்பொத்தியே இருந்தோம். நல்லது விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்களுடையதாக இருந்தது.
    உங்கள் விளக்கம் நிறைவளிக்கிறது என்றபோதிலும் தமிழ்மணம் அதன் பதிவுகளின் மீது எப்போதுமே, எந்நாளுமே ஒரு மேற்பார்வை கொண்டிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நன்றி.

  3. dharumi on October 23rd, 2014 2:26 am

    மகிழ்ச்சி.

    மிக மிக நன்றி.

    //தமிழ்மணத்தின் நிர்வாகத்திற்கு இந்தப் பிரச்சனையை கொண்டு வந்த அனைத்து பதிவர்களுக்கும் தமிழ்மணம் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.//

    இத்தொடர்பு நிலைத்து நீண்டிருக்க விழைக்கிறேன். மீண்டும் நன்றி

  4. dharumi on October 23rd, 2014 2:33 am

    இத்தொடர்பு நிலைத்து நீண்டிருக்க விழைகிறேன்.

    மீண்டும் நன்றி

  5. johan paris on October 23rd, 2014 3:31 am

    பலரின் விருப்பத்தை பூர்த்தி செய்ததற்கு நன்றி!

  6. T.N.MURALIDHAAN on October 23rd, 2014 7:24 am

    மிக்க நன்றி. அதுபோலவே 125 க்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் தமிழ் மண இணைப்புக்காக காத்திருகின்றன.அவற்றையும் இணைத்தால் தமிழ் இணைய வாசகர்களும் எழுத்தாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் . மேலும் 20.07.2014 முதல் மூன்று மாதத்திற்கு மேலாக புதிய வலைப்பூக்களுக்கு ஐநைப்பு அனுமதி வழங்கப்படவில்லை

  7. bagawanjee on October 23rd, 2014 10:22 am

    சிறிது தாமதம் என்றாலும் நல்ல முடிவு .எதிர்காலத்தில் இம்மாதிரி பிரச்சினை வராமல் எச்சரிக்கையுடன் இருந்தால் நலம் !

  8. விசுAwe​some on October 23rd, 2014 11:34 am

    நன்றி!

  9. F V Radhakrishnan on October 23rd, 2014 11:49 am

    அன்பின் தமிழ்மண நிர்வாகிகளுக்கு

    வணக்கம்
    வள்ளுவன் என்ற பெயரில் என் வலைப்பூவில் திருக்குறள்களை எளிய முறையில் விளக்கிவருகிறேன்.
    அந்த வகையில் இப்போது காமத்துப்பாலை எழுதுகிறேன்.
    இலக்கியத் தரம் வாய்ந்த அப்பதைவையும் ஆபாசப்பதிவாக நீக்கியதை வன்மையாக எதிர்க்கிறேன்.
    பல ஆண்டுகளாக தரமான பதிவுகளை எழுதி வருபவன் நான்
    நன்றி

    அன்புடன்
    டி,வி,ராதாகிருஷ்ணன்,

  10. venkatesh on October 23rd, 2014 12:14 pm

    யப்பா… சமீங்களா… நாலு மாசமா மெயில் அனுப்பி இன்றைக்குதான் இதற்கு ஒரு முடிவு கிடைதிருக்கிறது. குப்பைகள் இல்லாத தமிழ் மணம் இன்றைக்குதான் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கு… இனிமேலாவது மெயில் அனுப்பினால் உடனே நடவடிக்கை எடுங்க சாமீய்..

  11. கரிகாலன் on October 23rd, 2014 2:34 pm

    கொஞ்சம் தாமதம் என்றாலும் கூட, பதிவர்களின் கவலைகளுக்கு மதிப்பு கொடுத்து நடவடிக்கை எடுத்த தமிழ்மணத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  12. மதுரைத்தமிழன் on October 23rd, 2014 5:25 pm

    உங்களது “பொன்னான நேரத்தை” ஒதுக்கி பதிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தமிழ்மண நிர்வாகிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  13. ravi on October 23rd, 2014 7:35 pm

    நன்றி

  14. மாநகரன் on October 24th, 2014 12:18 am

    மிகவும் காலந்தாழ்ந்த முடிவு என்றாலும் வரவேற்க தக்கதே. தமிழ்மணம் உரிமையாளர்கள் மாதம் ஒருமுறையாவது தளத்தினை கவனித்தால் மிகவும் நல்லது. நிலுவையில் இருக்கின்ற புதிய பதிவுத் தளங்களையும் தயவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன். நன்றிகள் !!! :)

  15. உலகளந்த நம்பி on October 24th, 2014 2:37 am

    இதயம் கனிந்த நன்றி.

  16. உலகளந்த நம்பி on October 24th, 2014 2:55 am

    தமிழ்மண நிர்வாகிகளின் கடமையுணர்வும் நற்பண்பும் போற்றுதலுக்குரியவை.

    என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  17. தி.தமிழ் இளங்கோ on October 24th, 2014 6:45 am

    தமிழ்மணத்திற்கு நன்றி!
    த.ம.15

  18. நா.முத்துநிலவன் on October 24th, 2014 7:59 am

    சரியான கருத்துகளுக்கு மதிப்பளித்து, அதற்கேற்பச் செயல்படும் தங்களின் அன்பிற்கும் ஆன்றமைந்த பண்பிற்கும் எனது நன்றி. நமது பதிவர் தி.ந.முரளி சொன்ன கருத்தை நானும் வழிமொழிகிறேன். அண்மையில் வெளிவந்த எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ நூலின் இறுதிக் கட்டுரையில் தமிழ்மணம் பற்றி எழுதியிருப்பதுடன் நன்றியும் தெரிவித்திருக்கிறேன். நூலை அனுப்புவதெப்படி? அன்பு கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

  19. தமிழ்மணம் on October 24th, 2014 2:33 pm

    தமிழ்மணம் மேல் மதிப்பு வைத்துள்ள அனைத்து பதிவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மிக்க நன்றி,

    நிர்வாகம்,
    தமிழ்மணம்

  20. தமிழ்மணம் on October 24th, 2014 2:36 pm

    பதிவர் டி,வி,ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

    உங்களுடைய திருக்குறள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்படவில்லை. தமிழ்மணத்தில் தொடர்ந்து திரட்டப்படுகிறது.

    ஆபாசமான பதிவுகளை கொண்ட வலைப்பதிவுகளை மட்டுமே நீக்கியிருக்கிறோம்.

    நன்றி,
    தமிழ்மணம்

  21. தமிழ்மணம் on October 24th, 2014 2:41 pm

    பதிவர் நா.முத்துநிலவன்,

    உங்களது புத்தக முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணம் குறித்து நீங்கள் எழுதியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    தமிழ்மணம் அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது. எனவே நூலை அனுப்புவது உங்களுக்கு சிரமமாக இருக்கும். உங்களது கனிவுக்கு மிக்க நன்றி…

    உங்களது நூல் குறித்த விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பினால் பதிவர் புத்தகங்கள் பகுதியில் உங்களது நூல் அறிமுகத்தை வெளியிடுவோம்.

    நன்றி,
    தமிழ்மணம்

Leave a Reply