மதம் சம்பந்தமான அவதூற்று இடுகைகளை நீக்குதல்

May 5, 2012 · Posted in தமிழ்மணம் 

மதம் சம்பந்தமான தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத் தமிழ்மணம் முற்றிலும் மதம் சார்ந்த பதிவுகளைச் சேர்க்காதிருப்பதை விதியாகக் கொண்டிருப்பதைத் தமிழ்மணம் பயனாளிகள் அறிவீர்கள். அதேநேரத்திலே, கருத்துச்சுதந்திரம் கருதி பொதுவான பதிவொன்றிலே வரும் மதம் சம்பந்தமான இடுகைகள் ஓரிரண்டைத் தமிழ்மணம் இணைக்கிறது.

ஆயினும், அண்மைக்காலத்திலே மதம் சம்பந்தமான இடுகைகளாலே சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மகுடம் பிரிவுகள் தொடர்ச்சியாக, குழு அடிப்படையிலே வாக்கிடப்பட்டு நிரப்பப்படுவதாலே வேறு பல நல்ல இடுகைகள் தெரியாமலே மறைந்துபோவதைப் பலர் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். மேலும், கடந்த ஒரு வாரமாக, மதம் சார்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்டிருக்கும் சொந்தத்தகராறின் காரணமாக, தமிழ்மணம் வெறும் அவதூறுகளின் தொகுப்பாகக் காட்சியளிப்பதினை இனிமேலும் அனுமதிக்கமுடியாது. பதிவர்கள் சுயதணிக்கை செய்து பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு சில நாட்கள் எதையும் மட்டுறுத்தாது தமிழ்மணம் நிர்வாகம் அவகாசமளித்துப் பொறுத்திருந்தது. ஆயினும், அவ்வண்ணம் இதுவரை நடக்காததின் காரணமாக உடனடியாக நிர்வாகம் கீழ்க்கண்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

1. அவதூறான இடுகைகள் உடனடியாக நீக்கப்படும்
2. தொடர்ச்சியான அவதூறுகொண்ட இடுகைகளையிடும் பதிவுகள் மொத்தமாக நீக்கப்படும்

பதிவர்களையும் இப்படியான அவதூறான, மதம் சார்ந்த இடுகைகள் தமிழ்மணத்திலே தோன்றும்போது வரும் வாரத்திலிருந்து சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம். ஆயினும், தமிழ்மணத்துக்கான அஞ்சல்கள், பின்னூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கமளிப்பதற்கும் உடனடியாக விளக்கமளிப்பதற்கும் நிர்வாகத்தினாலே முடியாதென்பதையும் தெரிவித்துக்கோள்கிறோம்.

தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

Comments

71 Responses to “மதம் சம்பந்தமான அவதூற்று இடுகைகளை நீக்குதல்”

  1. ராஜ் on May 5th, 2012 1:27 am

    அருமையான முடிவு. இதை நான் வரவேற்கிறேன்…
    தமிழ்மணத்துக்கு என் வாழ்த்துக்கள்

  2. வாஞ்ஜூர் on May 5th, 2012 1:34 am

    வரவேற்கப்பட வேண்டிய நல்லதொரு முடிவு.

    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

  3. paramasivam on May 5th, 2012 1:36 am

    உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச் சரியான முடிவு.
    தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தமிழ் மணம், தொடர்ந்து அப்பணியைச் செய்ய வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம்.

    தனி மனித சுதந்திரம் என்னும் பெயரில் நிகழ்த்தப்படும் வெறியாட்டங்களுக்குத் தடை விதித்தது போற்றுதலுக்குரிய நற்செயல்.

    தொடர்க தங்களின் தமிழ்ப்பணி…நற்பணி.

  4. RAZIN on May 5th, 2012 2:00 am

    தமிழ்மணம் நிர்வாகி அவர்களுக்கு..

    தாங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் உடன்படுகிறேன்… மதங்களை பழிக்கும் இடுகைகளை தணிக்கை செய்யும் முடிவு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றே.. முஸ்லிம்,ஹிந்து,கிருஸ்தவர் என அது யாராக இருந்தாலும்,பிற மதங்களை தாக்கி எழுதும்போது அதை தடைசெய்யுங்கள்…

    தங்களின் அறிக்கையை மறுபரிசீலணை செய்தபின் முழுமையாக உடன்படுகிறேன்…

    நன்றி.

    அன்புடன்
    ரஜின்

  5. ஆஷிக் அஹமத் அ on May 5th, 2012 2:02 am

    அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)

    தமிழ்மணத்தின் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  6. ///நிர்வாகம் கீழ்க்கண்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
    1. அவதூறான இடுகைகள் உடனடியாக நீக்கப்படும்
    2. தொடர்ச்சியான அவதூறுகொண்ட இடுகைகளையிடும் பதிவுகள் மொத்தமாக நீக்கப்படும்
    பதிவர்களையும் இப்படியான அவதூறான, மதம் சார்ந்த இடுகைகள் தமிழ்மணத்திலே தோன்றும்போது வரும் வாரத்திலிருந்து சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம்.///

    சற்றே காலதாமதம் ஆயினும் மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஆறுதலான நல்லதொரு சிறந்த முடிவு.

    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு மகிழ்வுடன் நன்றி.

  7. ரஹீம் கஸாலி on May 5th, 2012 2:09 am

    நிச்சயம் இது வரவேற்புக்குரியது.

  8. karikalan on May 5th, 2012 2:16 am

    நல்ல முடிவு !

    மேலும் தெளிவு பெற சில கேள்விகள்

    1.மதம் சம்மந்தமான அவதூற்று இடுகைகளை மட்டுமே நீக்குவீர்களா இல்லை மதப்பிரசார பதிவுகளையும் நீக்குவீர்களா

    2. மதம் சம்மந்தமான அவதூற்று இடுகைகள் என்பதற்கு ஏதேனும் அளவுகோல் வைத்துள்ளீர்களா இல்லை யாரேனும் ஒருவர் ஆட்சேபித்தாலே போதுமானதா

    3. பல பதிவர்கள் சேர்ந்து ஒரு குரூப்பாகி, பொய் id பல உருவாக்கி, தங்கள் குரூப் பதிவர்களின் இடுகைகளுக்கு ஓட்டு போட்டு தமிழ்மணத்தில் எப்போதும் மகுடம் சூடுகிறார்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள் என் நம்புகிறேன். அதை தடுப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா

    நன்றி

  9. ஜெய்லானி on May 5th, 2012 2:24 am

    வரவேற்கப்பட வேண்டிய நல்ல விஷயம் . :-) .

  10. ஹைதர் அலி on May 5th, 2012 2:53 am

    உங்கள் முடிவை வரவேற்கிறேன்
    தமிழ்மண சேவைக்கு நன்றி

  11. தமிழ் மீரான் on May 5th, 2012 3:01 am

    ஆக்கப்பூர்வமான அறிவிப்பு. நடுநிலையோடு இம்முடிவு செயல்படுத்தப்படும் பட்சத்தில் அனைவரின் வரவேற்பைப் பெறும் நிச்சயம்.
    நன்றி தமிழ்மணம் நிர்வாகத்திற்கு!

  12. மோகன் குமார் on May 5th, 2012 3:04 am

    மிக நல்ல முடிவு. தமிழ் மணம் நிர்வாகிகள் நடப்பவை அனைத்தையும் கவனிக்கிறார்கள். அவ்வப்போது தேவையான நடவடிக்கை எடுப்பது மிக நல்ல விஷயம்.
    இந்த விஷயத்திலும் தமிழ் மணம் மற்ற திரட்டிகளில் இருந்து தனித்து நிற்கிறது

  13. ராஜ் on May 5th, 2012 3:18 am

    தன் மதத்தை பரப்பும் மத பிரச்சார பதிவுகளையும் நீக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

  14. suvanappiriyan on May 5th, 2012 3:37 am

    தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு!

    உங்கள் முடிவை வரவேற்கிறேன். அவதூறாக தெரிந்து கொண்டே வீண் பழிகளை குறிப்பிட்ட மதத்தின் மீது நிகழ்த்தி வரும் போக்கு இதனால் மட்டுறுத்தப்படும். அதே போல் மதம் சாராத மற்ற இடுகைகளையும் வாசகர்கள் தங்களின் ஓட்டுக்களை அளித்து பலரையும் சென்றடைய செய்ய வேண்டும்.

    வழக்கம் போல் தமிழ் மணம் என்றும் போல் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

  15. கபிலன் on May 5th, 2012 3:43 am

    ஐயா…

    ரொம்ப சரியான முடிவு…கொஞ்சம் லேட் தான் என்றாலும் இது மிகவும் அவசியமான ஒன்று. மக்களிடையே மதம் எனும் போர்வையில் பகைமையை வளர்க்கும் பதிவுகளை நீக்குதல் நல்ல முடிவு.

    அவதூறு எது என வகைப்படுத்துதல் என்பது கஷ்டமான விஷயம். இதனை தமிழ்மணம் எப்படி செய்யப் போகிறது ? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  16. மதுரன் on May 5th, 2012 4:08 am

    சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு..

    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ஆக்கபூர்வமாக எழுதிக்கொண்டிருக்கிற பதிவர்களுக்கு இந்த முடிவு இன்னும் உற்சாகத்தை தரும்.

    நன்றிகள் பல

  17. மாத்தியோசி மணி on May 5th, 2012 4:54 am

    அவசியமான / அழகான முடிவு! வரவேற்கிறேன்!

    ஆயினும் சில விஷயங்களை இங்கே சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்! முதலில் , இங்கே மத அவதூறூப் பதிவுகள், அனைத்து மதத்துக்கும் என்றில்லாமல் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மட்டும் எதிராக எழுதப்பட்டு வருகின்றன என்பதை அனைவரும் அறிவர்! குறிப்பிட்ட ஒரு மதம் மாத்திரம் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருவதற்கு அந்த மதத்தைச் சார்ந்த சிலரின் செயல்பாடுகளே காரணம் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விளைகிறேன்!

    அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மதத்தினைப் பரப்பும் பதிவுகளை எழுதி, குழுமமாகச் சேர்ந்து ஓட்டுக்கள் அளித்து, தமிழ்மணத்தின் மகுடத்திலே, குறுகிய நேரத்தில் அரங்கேற்றிவிடுவதையும் தொடர்ச்சியாக அவதானிக்க முடிந்தது!

    குறிப்பிட்ட சில காலத்துக்கு முன்னர் தமிழ்மணத்தின் மகுடம் முழுக்க முழுக்க குறிப்பிட்ட அந்த மதத்தினரின், “ மத பிரச்சார” பதிவுகளால் நிரப்பப்பட்டிருந்தது ஒன்றும் இரகசியமானது அல்ல! அந்தச் சந்தர்ப்பத்தில், “ தமிழ்மணம் முழுக்க முழுக்க மதப் பிரச்சார தளமா?” என்கிற கேள்வி, நடுநிலைமைப் பதிவர்கள் முதற்கொண்டு வாசகர்கள் வரை எழுந்ததும் மறுக்க முடியாத உண்மையாகும்!

    ஆக, தமிழ்மணத்தை முதலில் தவறான வழியில் பயன்படுத்தும் எண்ணத்தை உருவாக்கியது / குழுவாகச் சேர்ந்து ஓட்டுப் போட்டு ஆக்கிரமிக்கும் வித்தையைச் செயற்படுத்தியது யார் என்ற கேள்விக்கு அனைவருக்குமே பதில் தெரியும்!

    ஆக, எந்தவொரு தாக்கத்துக்கும் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு என்கிற அடிப்படையில், மதப் பிரச்சாரகளமாக சிலகாலம் இருந்த தமிழ்மணம், பின்னாளில் மத அவதூறுகளமாக மாற்றம் பெற்றமை காலத்தின் கட்டாயமாகும்!

    இப்போது மத அவதூறுகளை வேரறுக்கும் தமிழ்மணத்தின் முடிவு வரவேற்கக்கூடியது எனிலும், மதப் பிரச்சாரங்களுக்கு / குழும ஓட்டு முறையில் தமிழ்மண மகுடத்தை ஆக்கிரமிக்கும் கைங்கரியங்களுக்கு எதிராக தமிழ்மணம் எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது, தெளிவாக்கப்படவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

    வரும் காலாத்தில், மதப் பிரச்சார களமாக மாற்றம் பெற்றுவிடாமல் , தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பும் கடமையும் தமிழ்மணத்தின் வசம் உண்டு என்பதையும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்!

  18. thequickfox on May 5th, 2012 5:02 am

    தமிழ்மணம் மதம் சார்ந்த பதிவுகளைச் சேர்க்காதிருப்பதை விதியாகக் தமிழ்மணம் கொண்டிருந்தாலும், அதை நடைமுறைபடுத்தாமல் இருந்ததினால் தமிழ்மணம் ஒரு இஸ்லாமிய மத பிரசார மேடையா பாவிக்கபட்டது. இது பிற மதத்தவரை மிகவும் மன வேதனையடைய வைத்துள்ளது. தமிழ்மணம் குமட்டுகிறது என்றவர்கள் தமிழ்மணத்தை பாவித்தே இஸ்லாமிய மத பிரசார செய்தார்கள்.

  19. ராஜ நடராஜன் on May 5th, 2012 6:02 am

    தாமதமாக இருந்தாலும் தமிழ்மணத்தின் அறிவிப்புக்கு எனது ஆதரவு.

  20. துஷி on May 5th, 2012 7:54 am

    மிக நல்ல முடிவு…..

    இதுவரை நாங்கள் போராடியதும் இதற்காகவே…. :( காரணம் சில ஜால்ரா மத பதிவுகளே இதுவரை மகுடத்தில் இருந்தது…..

    பார்க்கலாம் இனியாவது மதம் இல்லா நல்ல பதிவுகள் மகுடத்தில் வருதா என்று :(

    வாழ்த்துக்கள் தமிழ்மணம்

  21. துஷி on May 5th, 2012 7:59 am

    வாஞ்ஜூர் on May 5th, 2012 1:34 am
    வரவேற்கப்பட வேண்டிய நல்லதொரு முடிவு.
    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.
    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.<<<<<<<<<<<<<<<<

    பார்டா…. தமிழ் மணம் முகத்திலேயே குத்திய பின்னும் வலிக்காத மாதிரியே ஒரு அக்டிங்… ஹா …. ஹா………….

    ஆமாம்….. அதான் தமிழ் மணம் மத பதிவுகளுக்கு இடம் இல்லை என்று சொல்லிட்டே…… இனி நீங்க என்ன பண்ணுவீங்க……. ஆவ்…… மதம் என்ற பெயரில் உங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சு ஊட்டியதுக்கு தமிழ் மணம் இப்போ முற்றுப்புள்ளி வைத்து விட்டதே…….

    சரி சரி
    இனிப்பாய் குழுமங்களில் நஞ்சு கக்குங்கோ :(

  22. jram178 on May 5th, 2012 8:00 am

    நல்ல முடிவு!

    இதை நான் வரவேற்கிறேன்…
    தமிழ்மணத்துக்கு என் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

  23. ramani on May 5th, 2012 8:07 am

    நல்ல செய்தி
    வாழ்த்துக்கள்
    34

  24. saarvaakan on May 5th, 2012 8:23 am

    வணக்கம் ,

    நல்ல முடிவு.இதுவரை நடந்ததெல்லாம் போகட்டும்.இனிமேல் பதிவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

    போலி ஐடி பிரச்சிஅனியையும் தீர்க்க வேண்டுகிறோம்.

    இந்த மிழமண ஓட்டு ஐ டிக்களை சரிபார்த்தலே இப்பிரச்சினை தீர்ந்துவிடும்.
    ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐ டி பயன்படுத்துவது தவறு என்பதால் கடந்த மூன்றுமாதங்களில் பதிவு இடாத அனைத்து ஐ டிக்களையும் நீக்கி புதிதாக பதிவு செய்ய சொன்னால் நலமாக் இருக்கும்.

    அவதூறு பதிவுகள் நீக்கப்படும் முடிவு நல்ல விடயமே!.பாராட்டுகள்.

    மத அவதூறு என்பதை எப்படி வரையறுக்கிறோம் என்பதையும் தெளிவாக்கினால் நன்று.

    எனினும் மத பிரசார பதிவுகள், தமிழ்மண மகுடம் ஏறும் தகுதி இல்லை என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    நன்றி

  25. Peer Mohamed on May 5th, 2012 8:57 am

    நல்ல முடிவு.

  26. Rizi on May 5th, 2012 9:00 am

    @மாத்தியோசி மணி..

    அண்ணே தமிழ்மனம் நிர்வகத்தார் அதெல்லாம் பாத்துக்குவாங்க.. நீங்க கிளம்புங்க..

  27. paramasivam on May 5th, 2012 9:07 am

    இது என் வரையிலான தனிப்பட்ட கேள்வி.
    தங்களின் பதில் என்னை நோகடிப்பதாக இருப்பினும் கவலையில்லை.
    நேரடியான பதில் தர முடியுமா?
    எந்தவொரு மதச் சார்பும் இல்லாமல், கடவுளை மையமாக வைத்து, தொடர் பதிவுகள் எழுதுபவன் நான்.
    ஆரம்ப நிலையில் என் பதிவுகளுக்கு இடம் தந்த தமிழ்மணம், பின்னர் நிரந்தரத் தடை போட்டுவிட்டது.
    இன்ன காரணத்தால் ஏற்கப்படவில்லை என்று ஒரு குறிப்பு வெளியிட்டால் அதில் என்ன தவறு.?
    முறையாகப் பதிவு செய்தாலும், ‘இப்பதிவு ஏற்கனவே தமிழ்மணத்தில் வெளியிடப் பட்டுவிட்டது என்ற தவறான தகவலே மீண்டும் மீண்டும் தரப்படுகிறது.
    இந்நிலை ஏன்?
    என்னையும் ஒரு தரமான பதிவராக மதித்துப் பதில் தர மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
    பதில் கிடைத்தால், அது என்னை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கடிக்கும் என்பது உறுதி.
    கணிசமான என் பதிவுகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    மதச் சார்பின்றி அனைத்து நண்பர்களும் பாராட்டும் வகையின் நான் பின்னூட்டங்கள் இடுவதைத் தாங்களும் அறிந்திருக்கக் கூடும்.
    நன்றி

  28. PREM on May 5th, 2012 11:02 am

    சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு

  29. G u l a m on May 5th, 2012 11:42 am

    அன்பு தமிழ்மண நிர்வாக சகோதரர்களுக்கு.,

    நல்ல முடிவு. காலம் தாழ்த்தி வருதுதான் வருத்தம்.

    இங்கேயும் ஒரு குறிப்பிட்ட கூட்டம்., இடும் கோஷங்களை பாருங்கள். உண்மையே இதை விட எளிதாக உங்களால் விளங்கிக்கொள்ள முடியாது.

    இது விமர்சன பகுதி இல்லையென்பதால் நானும் பதிலுக்கு விமர்சனம் செய்ய முற்படவில்லை

    உங்களின் புரிதலுக்கு
    நன்றி.

  30. அன்பழகன் on May 5th, 2012 11:47 am

    நல்ல முடிவு. ஆனால் இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாம்.

    சிறுபான்மை கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை தூற்றும் பதிவுகளை நீக்குவோம் என்றும், இந்து மதத்தை அம்பலப்படுத்தும் தமிழ் ஓவியா, வாஞ்சூர், சிந்திக்கவும் போன்ற பதிவுகள் வரவேற்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் வாதத்துக்கு இடமிருக்காது.

    நன்றி

  31. uThAyAm on May 5th, 2012 1:06 pm

    உங்கள் முடிவை வரவேற்கிறேன். விரும்பி தமிழ்மணத்தை வாசித்து வரும் நான்,சமீப காலமாகவே அவதூறு நாற்றத்தால் குமட்டிக்கொண்டு வந்ததால், தமிழ்மணத்தை தவிர்த்து வந்தேன். உங்களது அறிவிப்பு மகிழ்வை தருகிறது. நன்றி. வலைபதிவுகள் மூலம் தங்களது எழுத்து திறமையை பதிவர்கள் பட்டை தீட்டிக்கொள்வார்கள் என்று நினைத்தால், சில வலைப்பதிவுகளில் வக்கிரத்தின் வாந்தியாக, சைக்கோக்களின் எழுத்து வடிவமாக காட்சியளித்தது வருத்தப்பட வைத்தது.

    சில ஆண்டுகளுக்கு முன்னரும் இப்படித்தான், சிலர் குழு சேர்ந்து கொண்டு ஒரு மதத்தையே தாக்கியும் அவதூறு செய்தும், மத உணர்வுகளைப் புண் படுத்தியும் வந்தனர். அப்போது தமிழ்மணம் அந்த சில பதிவர்களின் பதிவை நீக்கி தூய்மை படுத்தினர். ஆனால் இப்போதும் அதே நிலை.

    மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் பதிவர்கள் அதற்கென்று ஒரு வலைப்பதிவு தொடங்கி கொள்ளலாம்.
    காழ்ப்புணர்ச்சி இல்லாத ஒரு வலைப்பதிவு உலகத்தை உருவாக்கி பதிவுகளின் தரத்தை உயர்த்த பதிவர்கள் பாடுபடுவோம். கருவாக உருவெடுக்கும் உங்கள் எண்ணங்களை வலையேற்று முன், அவசரபடாமல் மனதினுள் உருப்போட்டு, எழுத்து நாகரிகத்தை கருத்தில் கொண்டு பதிவேற்றுங்கள். உங்கள் பதிவுகள் ஒரு நொடியில் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு பலரால் வாசிக்கப்படுகிறது என்ற பொறுப்போடு எழுதுங்கள்.
    உங்கள் எழுத்தின் கண்ணியம் தமிழ்மணத்தின் தரத்தை உயர்த்தவும் பயன்படுகிறது என்பதையும் மறந்து விட வேண்டாம். நாமும் உயர்வோம் தமிழ்மண தரத்தையும் உயர்த்துவோம்.

  32. Thanimaram. on May 5th, 2012 1:42 pm

    காலம் தாழ்த்திய நடவடிக்கை என்றாலும் வாழ்த்துக்கள் தமிழ்மணம் நல்ல பதிவுகளை  ஊக்கிவித்து சிறப்பானவர்களை இனி மகுடம் ஏற்றும் என்று நம்புகின்றேன்.

  33. குடுகுடுப்பை on May 5th, 2012 2:49 pm

    தமிழ்மணம் பக்கம் வரவே பிடிக்கவில்லை, மத மாற்ற பதிவர்களின் பதிவுகளின் எண்ணிக்கை எரிச்சலையே தருகின்றது. மத சகிப்புத்தன்மை என்பதெல்லாம் வெற்றுக்கோஷம், பல தெய்வ வழிபாட்டை தாக்கி எழுதுவது, என் மதம் வந்தால் சொர்க்கம் இல்லாவிட்டால் நரகம் என்பதே மதசகிப்புத்தன்மையை தாண்டியவையே, கருத்து சுதந்திரம் என்பதால் அனுமதிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.அதே சமயத்தில் எதிர்கருத்தும் அனுமதிக்கப்படவேண்டும், ஆனால் சண்டை வரும் அதன் பொருட்டே இந்த மதவாத கும்பலிடம் இருந்து ஒதுங்கி போவதையே என் மனம் விரும்புகிறது.

  34. தமிழ்மணம் on May 5th, 2012 3:28 pm

    உங்கள் பதிவு தமிழ்மணத்திலே இன்னமும் இருக்கத்தானே செய்கின்றது. எங்கே தடை போடப்பட்டது?

  35. அன்பழகன் on May 5th, 2012 5:50 pm

    நல்ல முடிவு வரவேற்கிறோம்.

    ஆனால், தெளிவாக சிறுபான்மை மதத்தை எதிர்க்கும் பதிவுகள் நீக்கப்படும் . ஆனால் இந்து மதத்தை அம்பலப்படுத்தும் தமிழ் ஓவியா, சிந்திக்கவும், வாஞ்சூர் போன்ற பதிவுகள் நீக்கப்படாது என்று அறிவித்துவிட்டால், வாதத்திற்கு இடமிருக்காதே.

    நன்றி

  36. துஷி on May 5th, 2012 6:11 pm

    தமிழ் மணத்துக்கு…….

    கவனித்தீர்களா? இங்கே பெரும்பாலான கருத்துரைகளில் நண்பர்கள் சொல்வது தங்களை “இதுவரை மகுடங்களில் வந்த மத வாத பதிவுகள்” எரிச்சல் படுத்து, வெறுப்படைய செய்தது என்பதே….. இதை செய்வது செய்தது யார்???

    ஒரு கசப்பான உண்மை…
    இவ்ளோ நாளும் தமிழ் மணம் என்பது பார்ப்பதற்கு “முஸ்லிம் மதம் பரப்பும் ஒரு முஸ்லிம்களின் அதிகாரபூர ஏடு” போலவே காட்சி தந்தது :( மகுடம், சூடான இடுகை என்று எங்கே பார்த்தாலும் முஸ்லிம் மதம் போற்றும் இடுகைகளே….. :(

    இப்போது தமிழ் மணம் சுதாரித்துக்கொண்டு விட்டது…..
    மிகவும் சந்தோஷமாக இருக்கு…. இந்த சந்தோசம் தொடர வேண்டும்….. தயவுதாட்சம் பார்க்காமால் மத பதிவுகள் நீக்கப்பட வேண்டும்… மத குப்பைகளை நீக்கப்பட்டு தரமான பதிவுகள் தமிழ் மனத்தை அலங்கரிக்க வேண்டும்……….

    வாழ்த்துக்கள் அண்ட் தேங்க்ஸ் தமிழ் மணம்

  37. surendran on May 5th, 2012 9:14 pm

    vanakkam thamizhmanam, nirvaagigalukku enkkum oru valaippadhivu ondru undu adhai thamizhmanaththil inaiththen aanaal indhuvarai ennudaiya padhivu prasoorikkapadavillai kaaranam ketten badhil illai, ennudaiya samudhaaya padhiveyandri madhaprachaaramo alladhu madhaveripidiththu aduththta madhaththai izhivupaduththuvadhu alladhu oru velai ippadi ththaan thamizhmanaththil ezhudhavendumo ena ninaikka thodriyadhu enakku ondru thodriyadhu ippadi madham saarndha mattrum madhpprachchaara kuzhukkalukku munnirimaiyo ena ninaikka thondriyadhu ed hueppadiyo madha kuppai agattriulleer vaazhththukkal

  38. தமிழ்மணம் on May 5th, 2012 11:01 pm

    உங்கள் பதிவின் முகவரி என்ன? அதையும் தந்திருக்கலாமே?

  39. உஸ்மான் on May 5th, 2012 11:25 pm

    மிக சிறந்த முடிவு. காமாலைக் கண்ணோடு பார்கக்கூடியவனுக்கு எல்லாமே மஞ்சளாக தெரிவது போல இஸ்லாமிய கருத்து என்றாலே எதித்து பின்னுட்டம் இடுவதே தலையான கடமை என்றவர்களுக்கு இது ஒரு கடிவாளம்.மதங்களை விமர்சனம் செய்வதற்கும் எழுத்து போர் புரிவர்தற்கும் இன்னும் எத்தனையோ தளங்கள் உள்ளன. அதில் யுக முடிவு நாள் வரை எங்கள் கருத்துக்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வோம்.

  40. paramasivam on May 6th, 2012 3:34 am

    பரமசிவம் சொல்கிறேன்:

    http://www. kadavuLinkadavuL.blogspot.com என்னும் என் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப் படவில்லை.

    புதிய இடுகைகள் ஏற்கப்படுவதில்லை . முறையாகப் பதிவு செய்தாலும், ‘தங்கள் பதிவு ஏற்கனவே வெளியிடப் பட்டுவிட்டது என்ற தவறான பதில் தருவதாகத்தான் சொன்னேன்.

    மன்னியுங்கள்.
    தொடர்ந்து தங்களுக்குத் தொல்லை கொடுக்க நான் விரும்பவில்லை.
    தமிழ்மணத்திற்கு நன்கொடையோ [மனம் இருந்தும் நன்கொடை அனுப்புவதற்கான வழிவகைகள் வாய்க்கப் பெறாதவன்] கட்டணமோ நான் செலுத்துவதில்லை.

    தொடர்ந்து ‘இலவசமாக’ என் இடுகைகளை ஏற்பதும் புறக்கணிப்பதும் தங்கள் விருப்பம்.

    மூன்று மடல்கள் அனுப்பித் தொல்லை தந்ததற்கு மிக மிக வருந்துகிறேன்.

    வாய்ப்பு அமைந்து விருப்பமும் இருந்தால், இடுகைகளுக்குப் பின்னூட்டம் இடுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதை வெளியிடுவதும்கூட தங்கள் விருப்பம் சார்ந்ததுதான்.

  41. புரட்சிகாரன் on May 6th, 2012 4:01 am

    இதற்குக் என்ன தீர்வு என்று கொஞ்சம் தெளிவு படுத்தி இருக்கலாம்.. இனி மேல் தமிழ்மணம் முஸ்லிம் பதிவர்களின் குழு அடிப்படை வாக்குனை தடை செய்யுமா..?? அல்லது மத பிரச்சார முக்கியமா முஸ்லிம் மத பதிவர்களின் மத பிரச்சார பதிவுகளை தடை செய்யுமா..??? தயவு செய்து தெளிவு படுத்தவும்..

  42. தமிழ்மணம் on May 6th, 2012 9:03 am

    பதிவர் பரமசிவம், இது தொழில்நுட்பம் சார்ந்த சிக்கலாகவிருக்கவேண்டும்.
    இதுபோன்ற சிக்கல்களுக்கான தீர்வுகள் பற்றி இத்’தமிழ்மணம்’ பதிவிலிருக்கும் பழைய இடுகைகளைத் தேடிப்பாருங்கள். அகப்படாவிட்டால், அறிவியுங்கள்.

  43. mathisutha on May 6th, 2012 9:58 am

    தமிழ்மண நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றிகள்…

    தங்களின் இந்த முடிவு தமிழ்மணத்தின் தமிழுக்கான சேவை என்ற உண்மையான நோக்கத்தை மீண்டும் உலகறிய (சவுதியைத் தவிர) வைக்கும் என்பது என் ஊறுதியான நம்பிக்கையாகும்.

    அத்துடன் ஒரு குழு வந்து நகைச்சுவை கருத்துக்கள் இட்டுப் போனதற்கான காரணம் தெரியவில்லை. ஏனென்றால் தமிழுக்காக சேவை செய்த தமிழ் மணத்தை நாற்றம் பிடித்தது என்று கூறியதுடன். அந்த சேவைக்கு படி பெறாது உழைத்த ஒருவரை கேவலப்படுத்தியதுடன். இதை தடை செய்த அரும்பாடு பட்டவர்கள். ஏதோ ஒன்றுமே நடக்காதது மாதிரி நடந்து கொண்ட விதம் தான் சிரிப்பை ஊட்டுகிறது.

    மீண்டும் ஒரு முறை தமிழ்மண நிர்வாகத்திற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்

    ம.தி.சுதா

  44. mathisutha on May 6th, 2012 10:05 am

    மதம் என்பது ஒவ்வொருவனது பிறப்பிலும் ஒட்டிக் கொள்ளும் ஒன்று. அதை விபரம் தெரியும் போது விருப்பமில்லாதவன் கழட்டி எறிகிறான். வாள் முனைகளில மிரட்டிய போது கூட மதம் மாறாமல் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான சூழலில் எழுத்துக்களால் ஒருவனை மதம் மாற்ற முடியாது. அதனால் தமிழ்மண நிர்வாகத்திடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் முழு மதம் சார்ந்த ஆக்கங்களையும் அனுமதிக்காமல் விடுவதே நல்லது…

    இக்கருத்து ஏற்றுக் கொள்ளமுடியாவிடில் இன்னொன்றை கூற விரும்புகிறேன்.. திரைமணம் போல் ஆன்மீகத்துக்கும் தனியாக விட்டு தமிழ்மண முகப்பை பல்துறை சார்ந்த விடயத்திற்கு அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

  45. கோவி.கண்ணன் on May 6th, 2012 11:58 am

    தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு,

    தங்களது நடவடிக்கை காலம் தாழ்த்தியது என்றாலும் வரவேற்கத்தக்கது, பதிவர்கள் மதவாத / மத எதிர்ப்பு பதிவுகளை எழுதாவிட்டாலும் மதவாதிகள் அல்லது குறுப்பிட்ட குழுவினர் எழுதுவது தான் மகுட மேடைக்கு செல்லும் என்பதை கள்ள வாக்குகள் அல்லது குழு வாக்குகள் தான் முடிவு செய்கின்றன, இந்தநிலையில் மகுடத்திற்கு தகுதியான பதிவுகளை பரிந்துரை செய்யும் பொறுப்பை ஒழுங்கு செய்ய தமிழ் மணம் சுழற்சி முறையில் வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு குழு என்ற முறையில் பயனர் வட்டத்தை உருவாக்கி அவர்கள் மூலம் நல்ல இடுகைகளை மகுடமாக்கிக் காட்டுவது தான் நல்ல வழியாக இருக்க முடியும்.

  46. Jafar on May 6th, 2012 3:49 pm

    மதம்
    ஒரு நடைவண்டி

    கற்பவனுக்கு வரம்
    கற்றவனுக்கோ சாபம்

    சாப விமோசனம்
    சர்வ நிவாரணம்

    ஓட்டை உடைத்தல்
    விதையின் கடமை
    கூட்டைச் சிதைத்தல்
    குளவியின் உரிமை

    அது
    நன்றி கொல்லல் அன்று
    நன்று கொள்ளல்

    மீண்டும் பிற.

  47. நம்பள்கி on May 6th, 2012 4:08 pm

    மதுரை ஆதீனம் வழி வந்தான் என்ற முறையில் இந்தப் பதிவு மனதை புண்படுத்துகிறது.

    இந்தப் பதிவு இப்போது உள்ளது.

    “அதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்…! by dheva”

    “”இப்ப நித்தியானந்தரு, சத்தியானந்தரு, மதுரை ஆதினம், மன்னார்குடி சாதினம்னு உசுர வாங்குறானுங்க! துறவின்னு சொன்னா என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க….. மொதல்ல..? அதுக்கப்புறம் எதை எதை நீங்க தொறந்தீங்கன்னு கொஞ்சம் வாயைத் தொறந்து சொல்லுங்க..””

    இது மாதிரி நிறைய…..

  48. நீச்சலகாரன் on May 6th, 2012 8:50 pm

    @பரமசிவம்,
    http://kadavulinkadavul.blogspot.com/feeds/posts/default
    உங்கள் தளத்தின் செய்தியோடை(RSS) தவறாக வழிமாற்றி விடுகிறது.

    நீங்கள், Settings -> others சென்று அல்லது
    http://www.blogger.com/blogoptionsfeed.g?blogID=8682335674076847360 சென்று Post Feed Redirect URL என்கிற பெட்டியை திருத்தவும் அல்லது நீக்கவும்

  49. paramasivam on May 7th, 2012 12:29 am

    எவ்வளவோ முயன்றும் , ‘பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்’ [http://kadavulinkadavul.blogspot.com/2012/05/05-05-2012.html] என்னும் என் புதிய இடுகையை இணைக்க இயலவில்லை.

    என் செய்தியோடை: http://feeds.feedburner.com/blogspot/pFxcY

    தொடர்ந்து முயல்வேன்.

    மிக்க நன்றி.

  50. வருண் on May 7th, 2012 10:19 am

    ***1. அவதூறான இடுகைகள் உடனடியாக நீக்கப்படும்
    2. தொடர்ச்சியான அவதூறுகொண்ட இடுகைகளையிடும் பதிவுகள் மொத்தமாக நீக்கப்படும்.**

    என்ன நடந்ததுனே தெரியாது. :(

    ——————
    ***இதற்குக் என்ன தீர்வு என்று கொஞ்சம் தெளிவு படுத்தி இருக்கலாம்.. இனி மேல் தமிழ்மணம் முஸ்லிம் பதிவர்களின் குழு அடிப்படை வாக்குனை தடை செய்யுமா..?? ***

    யாரு குழு அமைக்கிறாங்கனு ஆராய்ச்சி செய்றதெல்லாம் ரொம்ப கஷ்டம். ஒரு 30 பேர் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக பொறுப்பாக, சீரியஸாக நல்ல ஓட்டுப் போட்டால் மகுடம் ஏற்றி விடலாம். அதை கள்ள ஓட்டு, குழு மனப்பான்மை என்றெல்லாம் சொன்னால் என்ன பண்ணுறது?.. இது (குழு அமைப்பது, ஒருவருக்கு ஒருவர் ஓட்டுப்போடுவது) எல்லாம் அவங்க உரிமை, அவங்க ரைட்ஸ் இல்லையா? குழுவாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவா இருக்கக்கூடாதுனு சட்டமா போட முடியும்? இதெல்லாம் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு மட்டுறுத்துவது ரொம்ப கஷ்டமான விசயம். You need to think about practicality. It is very complicated.

    I believe, TM cares about ABUSIVE and purposefully written articles against some religion or person who worships one religion sincerely. Not the articles which just comes out of your mind from your “original thoughts”.

    Moderation is always good. Otherwise we get lost without knowing our limits! :) Let us wait and see how this action helps improving the quality of TM.

  51. பிரபாகர் on May 7th, 2012 11:07 am

    மதம் சம்பந்தமான பதிவுகளை ஓரம்கட்டினால் மதத்தை எதிர்த்து பகுத்தறிவை பிரச்சாரம் பண்ணும நபர்களுக்கு எப்படி வாய்ப்பளிப்பது?

    எனவே மதம் சம்பந்தமான பிரச்சாரங்களுக்கு ஒரு தனியான திரைமணம் போல ஒரு மதம்பிடித்த மனம் என்று ஒன்று ஆரம்பித்து கொடுத்து விடுங்கள். அடித்துக் கொண்டிருக்கட்டும். இரண்டாம் புலிகேசியில் அடித்துக்கொள்ள மைதானம் காட்டிக்கொடுத்தது போல இருக்கட்டுமே.

    மேலும் உங்களது திரைமனத்தை திறந்தாலும் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளைத் ஒன்றுக்கு மேல் திறந்தாலும் ஒரே ஒரு tab-இல் திறக்கிறது. முந்தையது தனியாகவும் அடுத்தது தனியாகவும் திறப்பதில்லை. இதனை மாற்றி வேறு வேறு ஆக திறக்குமாறு செய்தால் நல்லது.

  52. தமிழ்மணம் on May 7th, 2012 1:20 pm

    கொஞ்சம் அவகாசம் தாருங்கள். தமிழ்மணம் தொழில்நுட்பவியலாளர்கள் சரி பார்க்கமுடியும்

  53. சே.குமார் on May 7th, 2012 2:39 pm

    அருமையான முடிவு.
    இதை நான் வரவேற்கிறேன்…
    தமிழ்மணத்துக்கு என் வாழ்த்துக்கள்

  54. நல்லடியார் on May 7th, 2012 4:09 pm

    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு, இறை-அமைதி நிலவட்டுமாக.

    மதம் சார்ந்த பதிவுகளை பட்டியலிடாதிருப்பதற்கு சிலரின் தவறான அணுகுமுறையே காரணம் எனில் சம்பந்தப்பட்டவர் பதிவராக இருக்கும் பட்சத்தில் தகுந்த காரணங்களைச் சுட்டி பதிவையோ அல்லது பதிவரையோ நீக்குவதே சரியான முடிவாக இருக்கும். அவதூறுகளின் தொகுப்பாக தமிழ்மணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால், தமிழ்மணம் திரட்டிமூலமாக கடைவிரிக்கப்பட்ட குறிப்பிட்ட மதத்தின்மீதான அவதூறுகளுக்கு எதிர்வினையாக இல்லாவிட்டாலும் தன்னிலை விளக்கமாக எழுதப்படும் பதிவுகளை தடைசெய்வது சரியல்ல என்பது என் அன்பான கருத்து.

    இதன் நடத்துனர்கள் மதநம்பிக்கையற்றவர்களாக இருக்கலாம். அதேபோன்றுதான் பதிவர்களும் இருக்க வேண்டுமா? மதங்கள் தவிர்த்து சினிமா, அரசியல் மற்றும் ஒன்றுக்கும் உதவாத இன்னும் எத்தனையோ மொக்கை பதிவுகளும், பதிவர்களும் உளரே. இதற்கு ஏதேனும் திட்டமுண்டா? :)

    தன்கருத்தைச் சொல்வதற்கு எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ அதுபோல் தான் சார்ந்த மதத்தையும் சொல்லும் உரிமையுண்டு. துரதிஷ்டவசமாக, தம் மதக்கொள்கையின் சிறப்பைச் சொல்லும் பதிவர்களைவிட, அடுத்தவர் நம்பிக்கைமீது உமிழும் பதிவர்களே மிகைத்துள்ளனர்.

    என்னுடைய பதிவுகளில் அவதூறுகளுக்கான எதிர்வினைகளே இடம்பெற்றுள்ளன என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதற்குமேலும் உங்கள் முடிவு சரியே என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நன்றி.

  55. தமிழ்மணம் on May 7th, 2012 4:34 pm

    உங்கள் அன்பான கருத்துக்கும் தமிழ்மணத்தின் நிலையினைப் புரிந்துகொள்தலுக்கும் நன்றி

  56. கோவி.கண்ணன் on May 7th, 2012 8:54 pm

    //கொஞ்சம் அவகாசம் தாருங்கள். தமிழ்மணம் தொழில்நுட்பவியலாளர்கள் சரி பார்க்கமுடியும்//

    தொழில் நுட்பத்தால் சரி செய்துவிட முடியும் என்று தெரியவில்லை. கடந்த இரு நாட்களின் மகுடங்களில் மீண்டும் குழு வாக்குக் குத்தப்பட்டு குறிபிட்ட தரப்பினர்கள் ஏற்கனவே வளைத்துவிட்டனர்.

    மகுடம் பகுதியைத் தற்காலிகமாகக் தூக்கிவிடுவது தான் அடுத்து தொழில் நுட்ப ரீதியில் சரி செய்வதற்கும் முன் எடுக்கப்படும் ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்க முடியும்.

    இல்லை என்றால் தமிழ்மண மகுடத்தின் பெயரை ‘வஹாபி தொப்பி’ என்று மாற்றிவிடுங்கள், ரிசர்வ் செய்யப்பட்டது என்று நினைத்து பிறர் பிரச்சனைக் கிளப்பாமல் இருப்பார்கள்

  57. paramasivam on May 7th, 2012 11:16 pm

    பெருந்தகையீர்,
    ‘பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள் ‘என்னும் என் புதிய இடுகை தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுவிட்டது.
    பொறுமையுடன் எனக்குப் பதில் தந்து வழிகாட்டிய தங்களின் பெருந்தன்மையைப் போற்றுகிறேன்.
    மிக்க மகிழ்வுடன் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி.

  58. தனபாலன் on May 8th, 2012 12:49 am

    நல்ல முடிவு! தமிழ்மணத்துக்கு என் வாழ்த்துக்கள் !

  59. சில்டு பியர்ஸ் on May 8th, 2012 3:26 am

    ஏதாவது செய்யுங்கள். புண்ணியமாப் போவும். போரடிக்கிறது என்று தமிழ்மணம் பக்கம் வந்தால் முதல் பக்கம் இருப்பதெல்லாம் கேள்விகள்-எதிர்வினைகள்-கள்ள ஓட்டுகள் பதிவுகள்தான். ஐந்து ஆறு பதிவுகளுக்குமேல் தேற மாட்டேன் என்கிறது.சுவாரஸ்ய பதிவுகளுக்கு இடமில்லையெனில் திரட்டி தன் மதிப்பை இழக்குமே. ஓட்டுபோட்டு சிறந்த10 தேர்ந்தெடுப்பதை 5 ஆக மாற்றுவது நல்லது.மகுடம் எல்லாம் எடுத்துவிடலாம் என்றே தோன்றுகிறது.

  60. இன்னிக்கு தமிழ்மணத்தின் மீது “சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்”ன்னு சொல்றவன் எல்லாம் நேத்திக்கு என்னா பேச்சு பேசினான் தெரியுமா….??இன்னிக்கு அவனுங்க மீது சாந்தியும் அப்புறம் சமாதானமும் நிலவட்டும்…..தமிழ்மணம் ஏன் எங்கள் தமிழ் நாட்டின் கேடு கெட்ட அரசியல்வதிகளைப் போல் மாறிவிட்டது…???ஓ பிழைப்பு நடக்கணுமா…???

  61. Ravivarmah on May 8th, 2012 10:49 am

    மிக நல்லமுடிவு. மதங்களை இழிவுபடுத்தும் அனைத்துப்பதிவுகளையும் தடைசெய்ய வேண்டும்
    அன்புடன்
    வர்மா

  62. நல்லடியார் on May 8th, 2012 1:00 pm

    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு அனுப்பிய தனிமடல் கிடைத்ததா?
    அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு, நம்மீது இறைஅமைதி நிலவட்டுமாக.

    சுவனப்பிரியன் நித்தியானந்தா குறித்த பதிவிற்கு எதிர்வினையாக திரு.கோவி கண்ணன் ஓர் எதிர்பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, பின்னூட்ட மாறாட்டங்கள் நடந்ததாகவும், இதனால் தரமான இதர பதிவர்களின் பதிவுகள் பிந்தள்ளப்பட்டதாகவும் எழுந்த முறையீடுகளைத் தொடர்ந்து, தமிழ்மணம் சாதி/மதம்/அரசியல்/பாலியல் வன்மகள் கொண்ட பதிவுகளைத் திரட்டாது என்று அறிவித்திருந்தீர்கள். தள நடத்துனர்களின் முடிவு என்ற வகையில் அதில் நான் கருத்திடாமல் இருந்தேன்.

    எனினும், சுவனப்பிரியன் – கோவி.கண்ணன் இடையேயான பதிவில் திரு.கோவி. கண்ணன் அவர்கள் பதிவுக்குத் தொடர்பற்ற முஹம்மது நபியின் திருமணம் குறித்த தவறான கருத்தைப் பதிவு செய்திருந்ததால் நானறிந்துள்ள விளக்கத்தை பதிவிட்டு தமிழ்மணத்திலும் இணைத்தேன். இந்நிலையில், என் பதிவு மேற்சொன்ன காரணத்துக்காக பட்டியலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு மடலொன்று கிடைக்கப்பெற்றபிறகு, தமிழ்மணத்தின் முடிவு குறித்த என் கருத்தைப் பின்னூட்டமாகவும், பதிவாகவும் இட்டேன்.

    எனினும், என்னுடைய பதிவும், வலைப்பூவும் நீக்கப்பட்டமடல் வந்தது சற்று ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருந்தது. நானறிந்து தமிழ்மணம் தொடங்கப்பட்ட புதிதில் ஓரிரு முஸ்லிம் பதிவர்கள் மட்டுமே எழுதி வந்தபோது, அவர்களுக்கு எதிர்வினை என்ற பெயரில் பலர் முஹம்மது நபி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக எழுதப்பட்ட பதிவுகளும், பின்னூட்டங்களும் தமிழ்மணத்தில் வரத்தொடங்கிய பிறகே, அதுவரை வாசகனாக இருந்த நான் எழுதத்தொடங்கினேன்.

    எம் பதிவில் நான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் நெறியான இஸ்லாம், ஈருலக வழிகாட்டியாகக் கருதும் முஹம்மது நபி மற்றும் குர்ஆன் குறித்த தவறான விமர்சனங்களுக்கு விளக்கமாகவே பதிலிட்டுள்ளேன். மற்றபடி, பொதுவான கருத்தியல் சார்ந்த பதிவுகளும் உள்ளன.

    இந்நிலையில் “முற்றிலும்” மதம் சார்ந்த பதிவுகள் என்ற பிரிவின்கீழ் என்னுடைய பதிவையும் வலைப்பூவையும் பட்டியலிருந்து நீக்கியிருப்பது நியாயமல்ல என்பதை தங்கள் மறுபரிசீலனைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். தமிழ் முஸ்லிம்கள் தாம் கொண்ட கொள்கைகளையும், எண்ணங்களையும் சக தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ்மணம் பாலமாகவே இருந்து வந்துள்ளது.இனியும் தொடர வேண்டும் என்று விரும்புபவர்களில் அடியேனும் ஒருவன்.

    இந்த விளக்கம் ஏற்புடையதாக இருப்பின் என்பதிவு மற்றும் வலைத்தளம் குறித்த தங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யவும். மாற்றுக் கருத்து இருப்பின் தயங்காமல் அறியத்தரவும்.

    அன்புடன்,
    நல்லடியார்

  63. நல்லடியார் on May 8th, 2012 1:05 pm

    மதம் சாராதவராகச் சொல்லிக்கொள்ளும் நாத்திக மதத்தைச் சார்ந்த திரு.ஷாம் ஜார்ஜ் (தருமி) அவர்களின் “568. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? … ” என்ற பதிவை அனுமதித்து, பின்னூட்ட மகுடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழ்மணத்தின் முடிவு உள்நோக்கம் கொண்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும், “முற்றிலும்” மதம் சார்ந்த பதிவுகள் என்ற பிரிவில் எனது வலைத்தளம் வராது என்பதற்கு அதிலுள்ள பதிவுகளே சான்று என்பதையும் நிர்வாகிகள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

    நன்றி.

  64. தமிழ்மணம் on May 8th, 2012 1:55 pm

    உங்கள் கருத்துக்கு நன்றி. “இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றி” என்று தொடங்கும் உங்கள் பதிவு மதப்பதிவுதான். அதனாலேயே தொடர்ச்சியான உள்ளடக்கத்தின் அடிப்படையிலே நீக்கப்பட்டிருக்கின்றது.

  65. தமிழ்மணம் on May 8th, 2012 1:58 pm

    தமிழ்மணத்துக்கு சர்ச்சைகளிலே கொண்டு வந்து திரட்டியினைச் சிக்கச்செய்யும் மதம் சார்ந்த, மதத்தினை இழிவுபடுத்தும் பதிவுகளைத் தவிர்த்தலைத் தவிர வேறேதும் நோக்கில்லை. உடனுக்குடன் நடவடிக்கைகள் ஒவ்வொரு பதிவிலும் எடுத்துக்கொண்டிருக்க முடிவதில்லை. நீக்கவேண்டிய இடுகைகள் ஏதுமிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். பொருந்தினால், நேரம் வாய்க்கையிலே இயன்றவரை முயற்சிப்போம்

  66. நல்லடியார் on May 8th, 2012 3:55 pm

    //“இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றி” என்று தொடங்கும் உங்கள் பதிவு மதப்பதிவுதான். //

    இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி.WAR AGAINST MEDIA TERRORISM

    இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை தமிழ்மணம் நிர்வாகி(கள்) உணர வேண்டுகிறேன். நான் சார்ந்துள்ள மதம் குறித்து பிறர் வைக்கும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதையும் தவறு என்பது வியப்பளிக்கிறது. தவறான குற்றச்சாட்டுகளைத் தாங்கிய பதிவுகள் பட்டியலிடப்படாவிட்டால் அதற்கான விளக்கப்பதிவு தேவையில்லையே.

    சகதமிழர்களோடு கண்ணியமாக உரையாடும் களமாகவே நான் இதுவரை எனது வலைப்பூவைக் கையாண்டுள்ளேன். எனினும், பொருந்தாத காரணங்களைச் சொல்லி கருத்துரிமையை தடுப்பது ஏனென்று விளங்கவில்லை.

    தருமியின் http://dharumi.blogspot.com/2012/05/blog-post.html இப்பதிவு குறித்து நிர்வாகியின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.

  67. suvanappiriyan on May 9th, 2012 7:02 am

    இன்று கழுகு தளத்தில் சென்று இஸ்லாமியர்கள் பெயரில் மைனஸ் கள்ள ஓட்டுக்களைப் போட்டு அந்த பதிவை தமிழ்மண மகுடத்திலிருந்து இறக்கி எனது பதிவில் வந்து அதே போல் கள்ள பிளஸ் ஓட்டுக்களைப் போட்டு மகுடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மற்ற பதிவர்களும் வாசகர்களும் இஸ்லாமிய பதிவுகளின் மீது காழ்ப்புணர்வு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கி தமிழ் மணத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஒரு பதிவு வாசகர்களை அதிகம் சென்றடைவது அந்த பதிவின் நம்பகத் தன்மையினாலும் எழுதுபவரின் எழுத்து திறமையினாலுமே ஆகும். இது போன்ற குறுக்கு வழிகளை நானோ மற்ற எந்த இஸ்லாமிய பதிவர்களோ இதுவரை செய்ததில்லை: இனியும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    புரிதலுக்கு நன்றி!

  68. ஆஷிக் அஹமத் அ on May 9th, 2012 7:22 am

    தமிழ்மண நிர்வாகத்தாருக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

    தமிழ்மணத்தின் முடிவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இங்கேயும் வந்து சிலர் விதண்டாவாதம் செய்வது நகைப்புக்குரியதாக இருக்கின்றது. இது விவாத மேடை இல்லை என்பதால் விலகியே இருக்கின்றோம்.

    மேலும் கள்ள வோட் குறித்த இன்றைய நிகழ்வுகளை உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகின்றோம். கழுகு தளத்தின் ஒரு பதிவுக்கு எங்கள் பெயரில் மாற்றம் செய்து கள்ள ஆள்மாறாட்ட முகவரியில் இருந்து மைனஸ் வோட் குத்தி அந்த பதிவை மகுடத்தில் இருந்து கீழிறக்கிவிட்டு, இன்றைய சுவனப்பிரியனின் பதிவிற்கு பிளஸ் வோட் குத்தி மகுடத்தில் ஏற்றியிருக்கின்றனர். எங்கள் பெயரில் போடப்படும் கள்ள முகவரிகள் குறித்து நாங்கள் முன்னமே உங்களுக்கு தெரியபடுத்தி இருக்கின்றோம். கள்ள முகவரிகளால் ஒரு பதிவு மகுடதிற்கு வருவது ஏற்புடையது அன்று. இம்மாதிரியான அங்கிகாரத்தால் பதிவர்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது.

    பதிவர்களுக்குள்ளாக குழப்பம் விளைவிக்க முயலும் கீழ்த்தரமான செயலை தமிழ்மணம் தடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

    கழுகு தள பதிவு லிங்க்: http://www.kazhuku.com/2012/05/blog-post.html
    கள்ள வோட்கள்: hussainaamma, suvanapppiriyan, abdulhakkimm, peermohamed.mm@gmail.com, mohaaashik, hajamydheeen, AMINAA29

    சுவனப்பிரியனின் பதிவு லிங்க்: http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_08.html
    கள்ள வோட்கள்: rabbanii carbonffriend mustaquee1515@gmail.com suvanapppiriyan PeerMhdd AMINAA29 askabt.islamm@gmail.com hajamydheeen gulaam nayagan_12 peermohamed.mm@gmail.com mohaaashik hussainaamma abdulhakkimm (இது வரை)

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  69. தமிழ்மணம் on May 9th, 2012 11:12 am

    பதிவர் ஆஷிக் அஹமத் & சுவனப்பிரியன்
    இருக்கும் தமிழ்மணம் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலே, தனித்துவமான ஒரு பதிவர் கணக்கோடும் ஒரு மின்னஞ்சலோடும் ஒருவர் தமிழ்மணத்திலே பதிவு செய்துகொண்டு அதனூடாகவே வாக்கிடப்படுகின்றது. ஒரு கணணியிலே ஒரு வாக்கினை இட்டால், மீண்டும் ஒருவர் வாக்கிடமுடியாது. காண்க: http://blog.thamizmanam.com/archives/195 இதனடிப்படையிலேயே தமிழ்மணம் தொழிற்படுகின்றது. அதற்குமேல் தமிழ்மணம் பதிவர்களின் அடையாளத்தைக் கண்டுகொள்வதைச் செய்யமுடியாது. எத்தொழில்நுட்பத்திலும் இருக்கக்கூடிய குறையும் ஓட்டையும் இந்நுட்பத்திலும் இருக்கமுடியும். இதனைக் காலப்போக்கிலேயே மேம்படுத்தமுடியும். இவ்வோட்டைகளைப் பயன்படுத்தி, முறையற்ற வாக்குகளை இடுதலைப் பதிவர்கள் செய்தால், தமிழ்மணம் நடைமுறையிலே ஆளடையாளம் கண்டும் எதையுமே செய்யமுடியாதநிலையிலே இருக்குமென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

    ஆனால், பதிவர்களே புரிந்துகொள்ளாமல் செயற்படும்போது, ஒரு நிலையிலே இப்படியான பரிந்துரைகளையும் சூடாக்குதலையும் நீக்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.

  70. நல்லடியார் on May 9th, 2012 12:19 pm

    முழுகருத்தையும் விரிவாகச் சொல்லவேண்டி இருந்ததால் தமிழ்மணத்தின் பாரபட்ச அணுகுமுறை குறித்த ஆதங்கப் பதிவு.

  71. பீர் | Peer on May 9th, 2012 1:56 pm

    அன்பின் தமிழ்மண நிர்வாகம்,

    68வது பின்னூட்டத்தில் ஆஷிக் குறிப்பிடும் கள்ள ஓட்டு போட பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் பெயர்/மின்னஞ்சலை (போலி என உறுதிசெய்துவிட்டு) நீக்கிவிடலாமே.

    என்னுடயை பெயரிலும் சில கள்ள பயனர் கணக்குகள் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.

    தமிழ்மண தொடர்பு முகவரி தந்தால், முறைப்படி புகார் அனுப்புகிறேன்.

    அல்லது நிலைமை சீராகும்வரை ‘சூட்டையும், பரிந்துரையையும்’ நிறுத்தி வையுங்கள்.

Leave a Reply