ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்

August 22, 2006 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்தின் நோக்கு தமிழ்ப்பதிவுகளிலே சிறந்தும் நற்போக்கிலுமுள்ள கூறுகளைத் திரட்டுவதாகும். ஆனால், எவ்வகையிலும் தமிழ்மணத்திலே தோன்றும் தனியாள் பதிவுகளின் உள்ளடக்கம், தொனியினைக் கட்டுப்படுத்தும் வல்லமையோ, பண்பாட்டுக்காவலராய்ச் செயல்படும் நோக்கமோ அற்றது. அதனால், தமிழ்மணத்திலே பதிவு செய்யப்பட்ட பதிவுகளைத் திரட்டுவது தவிர, தமிழ்மணம் எவ்வகையிலும் பதிவாளர்களின் பதிவுகளுக்கோ அவற்றிலே வரும் பின்னூட்டங்களுக்கோ பொறுப்பாகமுடியாது.

பதிவுகள், பின்னூட்டங்களின் உள்ளடக்கங்களுக்கு அவற்றை எழுதுபவர்களின் நேர்மையையும் பொறுப்புணர்வும் மட்டுமே அடிப்படைகளாக இருக்கமுடியுமென தமிழ்மணம் நம்புகின்றது. ஆனால், திரட்டி என்ற அளவிலே, தமிழ்மணம் தான் சேர்த்துக்கொள்ளும் பதிவுகளிலே அடிப்படையாக சில கூறுகளை எதிர்பார்க்கின்றது. இது குறித்து தமிழ்மணம் பயனர்கள் கையேடு தெளிவாக வரையறுத்திருக்கின்றது.

“thamizmanam.com reserves the right to set out its own norms for acceptance including, but not limited to, nature of content, language and frequency of posting. A blog accepted for listing at the submission may be delisted anytime later based on such norms. In this regard, thamizmanam.com’s decison is final. Bloggers whose contents are shown here as previews are requested not to post content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting terror and violence, or in violation of copyright law.

அண்மையில் இரு பதிவர்களின் சில பதிவுகள் சக பதிவர்களைக் கண்ணியக்குறைவாகத் தாக்கியிருப்பதால் அவற்றினை நீக்கும்படி பதிவர்கள் இருவர் தமிழ்மணத்தின் முறையீட்டு வசதியைப் பயன்படுத்திக் கேட்டிருந்தனர். மேலே சுட்டியிருப்பதுபோல, தமிழ்மணத்திற்கு இப்பதிவுகள் பொருத்தமற்றவை என்று தோன்றினால் நீக்கும் உரிமை முற்றாக இருப்பினுங்கூட, முடிவெடுப்பதிலே தன் அங்கமான பதிவர்களின் கருத்துகளையும் உள் வாங்க தமிழ்மணம் விரும்புகிறது.

தமிழ்மணத்திலேயிருந்து ஒரு தனிப்பதிவை நீக்குவதா, தொடர்ந்து வைத்திருப்பதா என்பதிலே குறிப்பிட்ட பதிவினை இட்டவர், முறையிட்டவர் உட்பட தமிழ்மணத்திலே தம்மைப் பதிவு செய்த எந்தப்பதிவரும் தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்க ஒரு மட்டுறுத்தப்பட்ட வசதியை ஏற்படுத்தும் சாத்தியத்தினைத் தமிழ்மணம் ஆராய்கிறது.

இவ்வசதி நடைமுறைக்கு வரும்போது, தொடர்ந்தும் தமிழ்மணத்தின் முடிவே இறுதிமுடிவானபோதுங்கூட, தமது தமிழ்மணத்துக்கு ஒவ்வாதது எனச் சுட்டப்படும் ஒரு பதிவினை நீக்குவதிலோ தொடர்ந்து இருக்கவைப்பதிலோ பதிவர்களும் பங்கெடுக்கமுடியும்.

இது தொடர்பான செயல்முறை இரு வாரங்களுக்குள்ளே விபரமாக இப்பதிவிலே வெளியிடப்படும்.

தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Comments

16 Responses to “ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்”

  1. துளசி கோபால் on August 22nd, 2006 5:35 am

    தகவலுக்கு நன்றிங்க.

  2. செல்வன் on August 22nd, 2006 6:07 am

    இவ்வசதி நடைமுறைக்கு வரும்போது, தொடர்ந்தும் தமிழ்மணத்தின் முடிவே இறுதிமுடிவானபோதுங்கூட, தமது தமிழ்மணத்துக்கு ஒவ்வாதது எனச் சுட்டப்படும் ஒரு பதிவினை நீக்குவதிலோ தொடர்ந்து இருக்கவைப்பதிலோ பதிவர்களும் பங்கெடுக்கமுடியும்.//

    இது அரசியல் செய்வதில் தான் வந்து முடியும்.பதிவர்களுக்குள் பல குழுக்கள் உள்ளன.தம் குழுவை சேர்ந்தவர்களை யாரும் விட்டுத் தரப்போவதில்லை.கடைசியில் இதனால் பெருங் குழப்பமே மிஞ்சும்.

    இவ்விஷயத்தில் நடத்தை முறைகளை பதிவர்களை கலந்து பேசி உருவாக்குங்கள்.அதன்பின் அதை அமுல்படுத்துங்கள்.மூத்த வலைபதிவர்கள் ஓரிருவர் அடங்கிய குழு வேண்டுமெனில் அமைக்கபடலாம்.மெஜாரிட்டி அடிப்படையில் முடிவெடுப்பது என்று போனால் அதில் ஏகப்பட்ட அரசியல் புகுந்து விளையாடும்.

  3. ஊர் சுற்றி on August 22nd, 2006 6:54 am

    I welcome it

  4. குமரன் (Kumaran) on August 22nd, 2006 7:56 am

    மேலும் விவரமறியக் காத்திருக்கிறேன்.

  5. CAPital on August 22nd, 2006 8:22 am

    I would also like to point out that my blog is in WordPress.com

    As you may know, WordPress.com doesn’t allow any template modification or JavaScript insertion. So we were not able to fully utilize thamizmanam.

    Can you guys somehow find a way to include posts from the blogs of WordPress.com

    At least show new posts from blogs from WordPress.com

  6. யெஸ்.பாலபாரதி on August 22nd, 2006 8:27 am

    கருத்து சுதந்திரம் தேவை தான். மாறாக அது தனிமனித தாக்குதல் என்று மாறும் போது தான்.. நாம் நெளிய வேண்டி இருக்கிறது.
    கொள்கையற்ற கோஷம் குப்பைக்குத் தான் போகும் – என்பார்கள். அப்படியானவற்றிற்கு இது அவசியமானதும் கூட…
    நல்ல முயற்சி!

  7. முத்து(தமிழினி) on August 22nd, 2006 12:46 pm

    சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குதல்/முறைப்படுத்துதல் தொடர்பான விஷயங்களில்
    பதிவர்களும் பங்கெடுக்கமுடியும் என்ற நடைமுறை ஆரோக்கியமானது என்பது என் கருத்து.

    இறுதி முடிவு தமிழ்மணத்திடம் இருந்தாலும் பலருடைய கருத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது (இதில் அனானிநாதர்களை விலக்கிவிடுவது முக்கியம்) கருத்து சுதந்திரத்திற்கு நல்லது.

  8. விடாதுகருப்பு on August 23rd, 2006 7:02 am

    ஒரு வலைப்பதிவர் கூறிய கருத்துக்களை அப்படியே மாற்றமின்றி மேற்கோள் காட்டி அதற்கு பதில் அளிப்பது தனிமனித தாக்குதல் வரிசையில் வருமா என்று அறிந்துகொள்ள ஆசையாக இருக்கிறேன்.

  9. SANGAMITHRAN on August 24th, 2006 11:03 pm

    //ஒரு வலைப்பதிவர் கூறிய கருத்துக்களை அப்படியே மாற்றமின்றி மேற்கோள் காட்டி அதற்கு பதில் அளிப்பது தனிமனித தாக்குதல் வரிசையில் வருமா என்று அறிந்துகொள்ள ஆசையாக இருக்கிறேன்.
    //
    என்ன அப்பாவித்தனமாக கேட்கிறார் பாருங்கள் ?
    கருப்பு அவர்களே,
    ஒருவருக்கு பதில் தருவதாக கூறிக் கொண்டு, தரமற்ற தனிமனித தாக்குதல் செய்வதோடு, அவர் இனத்திலே இது தான் நடைமுறை ..வழக்கம் என்றெல்லாம் காழ்ப்பை வெளிக்காட்டுவது நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தானே, இதில் என்ன சந்தேகம் அய்யா உங்களுக்கு ?

    எல்லாரும் சேர்ந்து நல்ல சூழலை உருவாக்குவோம், முக்கியமா உங்களின் ஒத்துழைப்போடும் :( (

  10. திருமொழியான் on September 13th, 2006 12:52 am

    எனது தமிழ்மணப் பதிவுகளுக்கு மறுமொழி மட்டுறுத்தப் படுவது இல்லை என்று தமிழ்மணம்.காமில் காட்டப்படுகிறது.

    தற்போது நான் எனது ப்லாக் ஸைட்டில் தேவையான மாற்றங்களைச் செய்திருப்பதால் எனது பதிவுகளுக்கு மறுமொழி மட்டுறுத்தல் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.

    அன்புடன்
    திருமொழியான்

  11. கோ.இராகவன் on September 13th, 2006 12:52 pm

    நல்ல முயற்சி. நல்ல பலனை அளிக்க வேண்டும். கருத்தியல் எதிர்ப்புகளும் விவாதங்களும் இருப்பது முறையே. சரியே. ஆனால் அந்தத் தளத்தை விட்டு அது தனிமனிதத் தாக்குதலாகும் பொழுது கண்டிப்பாக தவறுதான். உங்களது இந்த முயற்சி வெற்றி தருமானால் நல்லதுதான்.

  12. ஞானவெட்டியான் on September 13th, 2006 10:20 pm

    //கருத்தியல் எதிர்ப்புகளும் விவாதங்களும் இருப்பது முறையே. சரியே.//
    ஆனால் அதில் கண்ணியம் குறையலாகாது. பதிவு இட்டிருப்பவரும் மனிதன்தானே? தனி மனிதத் தாக்குதல், சாதி, மத, குலம் இழித்தல் தவறு என்பது எமது கருத்து
    இது இனி வரும் இளைய தலைமுறை நம்மைக் கேலி செய்ய வழி வகுக்கும்.

  13. SP.VR.SUBBIAH on September 14th, 2006 10:15 am

    தனிமனிதத் தாக்குதல், சாதி, சமயத் தாக்குதல்கள் எல்லாம் வேண்டாம் என்பதுதான் பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்பு.
    நலல – அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய – மகிழச்செய்யம் , நெகிழச் செய்யும் பதிவுகளையே பதிவு செய்வோம்
    அதற்குத் தமிழ் மணம் நிர்வாகம் செய்ய்யும் அனைத்துச் செயல்களுக்கும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு
    நன்றி, வணக்கத்துடன்

  14. என்னார் on September 14th, 2006 9:24 pm

    நிர்வாகம் தானே முழு முடிவெடுக்க வேண்டும் மற்றவர்கள் கருத்தைக் கேட்டால் அந்த அளவிற்கு சரியாக வராது . கடைத்தெருவில் ஒரு ஓவியன் ஓவியம் வரைந்து வைத்த கதைதான்

  15. கொய்ந்த on October 16th, 2006 1:17 am

    dear sir,

    i am already activated comment modreadion on my blog for your info.

    thanks
    kointha

  16. [...] ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் [...]

Leave a Reply