தமிழ்மணம் விருதுகள் 2011 ‍- அறிவிப்பு

இவ்வாண்டின் தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு குறித்து ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால், அண்மையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத நெருக்கடிகளால் நாங்கள் திட்டமிட்டிருந்தபடி விருதுகள் நிகழ்வை நடத்த இயலாதுள்ளது. பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இது ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெருக்கடிகள் தீர்ந்தபின் விருதுகள் நிகழ்வை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடியே நடத்தும் ஒரு வாய்ப்பு இருப்பினும், வேறு சில மாற்றங்களுடனும் நடத்தலாம் என்றும் எண்ணுகிறோம். அல்லது நுட்ப ரீதியாகத் தமிழ்மணம் தளத்தின் வேறு மாற்றங்களினூடாக நல்ல பதிவுகளையும் ஆக்கங்களையும் ஊக்குவிக்க முடியுமா என்றும் சிந்தித்து வருகிறோம். இது குறித்துத் தக்க தருணத்தில் மேற்கொண்டு விவரங்களும் அறிவிப்புகளும் வெளியிடப்படும்.

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம் குழு

Comments

5 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2011 ‍- அறிவிப்பு”

 1. பரமசிவம் on December 4th, 2011 11:12 pm

  விருதுகள் வழங்குவது தேவைதான்.
  நல்ல பதிவுகளையும் ஆக்கங்களையும் ஊக்குவிப்பது இன்றியமையா தேவை.
  நல்லதே நினைக்கிறீர்கள். வருத்தப்பட ஏதுமில்லை.
  நன்றி.

 2. pazamaipesi@gmail.com on December 4th, 2011 11:18 pm

  //இது குறித்துத் தக்க தருணத்தில் மேற்கொண்டு விவரங்களும் அறிவிப்புகளும் வெளியிடப்படும்.//

  சரிங்க… காத்திருக்கிறோம்!

  //நெருக்கடிகள் தீர்ந்தபின்//

  இது என்ன, அண்ணாச்சி கடைத் தேங்காயா, விற்றுத் தீர்வதற்கு?? அல்லது டாசுமாக் புட்டிகளா, குடித்துத் தீர்வதற்கு??

  நெருக்கடிகள் ஒழியணும்! தமிழ்மணம் விருது விழா நடைபெறணும். இஃகி இஃகி!!

 3. T V Radhakrishnan on December 4th, 2011 11:49 pm

  //நெருக்கடிகள் தீர்ந்தபின்//

  ???? :)))

 4. soundarapandiann on December 5th, 2011 1:47 am

  சீக்கிறம் வாங்க…

 5. குருத்து on December 7th, 2011 6:15 am

  என்னாச்சு திடீரென? போனமுறை தவறவிட்ட பரிசை இந்த முறை பிடித்துவிடலாம என நினைத்தேன். பரவாயில்லை.

  சிக்கலை தீர்த்துவிட்டு, விரைவில் நடத்துங்கள்.

Leave a Reply