தமிழ்மணத்தின் நன்றிநவிலல்நாள் நன்றி

தமிழ்மணத்தின் வளர்ச்சியிலும் சேவையிலும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ள பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏனைய நலன்விரும்பிகளுக்கும் தமிழ்மணம் சார்பாக இந்நன்றிநவிலல்நாளன்று நன்றியைத் தெரிவிக்கின்றோம். இத்தகைய ஆதரவின்றி தமிழ்மணம் இத்துணை சிறப்பாகச் செயற்படமுடிந்திருக்காது.

தமிழ்மணத்தின் வேண்டுகோளை ஏற்று பணம் அனுப்பியுதவிய கீழ்க்காணும் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்நாளிலே தமிழ்மணம் நன்றி தெரிவிக்கின்றது.
Vetrivel Ramaswamy
Prakasam Giriraj
A Candeban
Ilamurugu S Periasamy
Manivasagam Mounasamy
Photocbe
Gurudev Ravindran
Sayenthiran Kathiresampillai
Durai Appadurai
Thennavan Ramalingam
Yesuvadian chellappan
Dhinesh Kumararaman
Varadarajan Radhakrishnan
Partheeban elangovan
Thillai Kumaran
Viji Palaniappan
Manimozhian Ramasamy Kandasamy
Ramalakshmi Thangarajan
Somu Ravichandran
Kayalvizhi Muthuletchumi
Singai Bloggers/ Ponnusamy Purushothaman
Arasu Chellaiah

மேலும் கடந்த காலத்திலே தமிழ்மணத்தினை இயக்குதற்கு உதவிய கீழ்க்காணும் நண்பர்களுக்கும் எம் நன்றி உரித்தாகும்.
Soma Ilangovan
V. G. Dev
Kumar Kumarappan
Thani Cheran
Peter Yeronimuse
Sendhil Murugan
Naga Ganesan
TMI members
மேலும், இவ்வாண்டு தமிழ்மணத்தின் விருதுகளைத் தேர்வு செய்வதிலே நடுவர்களாகக் கடமையாற்றி உதவிய பதிவர்களுக்குத் தமிழ்மணம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. விருதுகளுக்கான நூல்களையும் நிதியையும் வழங்கிய புரவலர்களுக்கு நன்றி.

கூடவே, அவ்வப்போது, தமிழ்மணத்திற்குத் தகுந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் தந்து வழிப்படுத்திய பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ்மணத்தின் நன்றி.

அத்துடன், தமிழ்மணத்திலே தம் விளம்பரங்களை வைத்துதவிய பதிவர்களுக்கும் நன்றி.

இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தும் தமிழ்மணம் தமிழ்ப்பதிவுகட்குச் சேவையாற்ற உங்கள் புரிந்துணர்வுடனான ஒத்துழைப்பினை வேண்டுகிறோம்.

Comments

7 Responses to “தமிழ்மணத்தின் நன்றிநவிலல்நாள் நன்றி”

  1. Pazamaipesi on November 24th, 2011 6:13 pm

    Thanksgiving Holiday, நன்றி நவில்தல் நாளுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்புன்னு கேக்கலாமுன்னு வந்தா, இப்படி ஒரு செய்தியப் போட்டு வாயைக் கட்டிட்டீங்களே? அனைவருக்கும் நன்றியோ நன்றி!!

  2. கோவி.கண்ணன் on November 24th, 2011 9:23 pm

    தமிழ்மணம் நன்றி அறிவித்தலுக்கு பாராட்டுகள், தமிழ்மணம் விருதுகள் 2011 பற்றி ஏதேனும் திட்டம் அறிவிப்பு இருக்கிறதா ?
    🙂

  3. கோபாலன் on November 25th, 2011 11:58 am

    இந்த சொரிந்து விட்டு கொள்ளும் கலாச்சாரம் தமிழ் பதிவர்களுக்கு எப்படி வந்தது என்று யோசித்ததுண்டு. அது தமிழ்மணத்தில் இருந்து வந்ததுதான் என்று இப்போது புரிகிறது.

  4. கண்ணன் பலராம் on November 25th, 2011 7:11 pm

    உண்மைதான் கோபாலன் சார். சில தமிழ்ப்பதிவர்கள் இவ்வளவு பணத்தை தமிழை மணக்க செய்ய சொரிந்து விட்டுக் கொள்ளும் கலாச்சாரம் தமிழ்மணம் தன்னலம் இல்லாமல் பதிவர்களின் சேவைக்கு அள்ளி அள்ளி சொரிந்ததாலே வந்ததுதான்

  5. K.s.s.Rajh on November 25th, 2011 11:53 pm

    பதிவர்களுக்கு அளப்பெரிய சேவை புரியும் தமிழ்மணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  6. ஜோதிஜி திருப்பூர் on November 28th, 2011 4:55 am

    வழங்கிய உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

  7. vanjoor on November 29th, 2011 10:58 am

    தமிழ்மணத்துக்கு எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களை நன்றியுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

Leave a Reply