தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்

October 17, 2011 · Posted in தமிழ்மணம் 

தமிழ்மணம் இணையத்தளம் 2004ல் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மணத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் தமிழ்மணம் எவ்வாறு தனது கொள்கை முடிவுகளை அறிவிக்கிறது என்பதை நாங்கள் விளக்க வேண்டியதில்லை. என்றாலும் அண்மைக்காலங்களில் தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நாம் இதனை தெரிவிக்க வேண்டியுள்ளது.

தமிழ்மணம் தளம் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு அமெரிக்க அரசாங்கத்தின் சட்டதிட்டங்களின் படி நடத்தப்படும் தொண்டு நிறுவனம். எனவே, தமிழ்மணம் தளம் என்பது ஒரு தனிநபரின் தளம் அல்ல. ஒரு நிறுவனத்தின் தளம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணம் தளம் தன்னுடைய கொள்கை முடிவுகளை எப்பொழுதும் தமிழ்மணத்தின் அதிகார்வப்பூர்வமான வலைப்பதிவான இந்த வலைப்பதிவிலும், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவித்து வந்திருக்கிறது. அதைத் தவிர வேறு எங்கும் அறிவிப்பது இல்லை. அதேபோல் தமிழ்மணத்தின் கருத்துக்களை அறிய விரும்புவர்களும், தம் கருத்துக்களைத் தமிழ்மணத்துக்குத் தெரிவிக்க விரும்புவர்களும் தமிழ்மணத்தின் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளவும். தங்களுடைய பதிவுகளில் வெளியிடுவதால் எந்தப் பயனுமில்லை.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்மணம் முகப்பில் மிக மலினமாக எழுதப்படும் மொக்கைப் பதிவுகளும், ஒட்டி வெட்டும் காப்புரிமைகளை மீறும் பதிவுகளும், மத, ஜோதிடப்பதிவுகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதாயும், காத்திரமான எழுத்துகள் சில மணிநேரங்கள் கூட நிலைப்பதில்லை என்றும் வலைப்பதிவர்களும், வாசகர்களும் எங்களுக்குத் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இது தமிழ்மணத்தின் நோக்கத்தையே தோற்கடிப்பதாயுள்ளது என்று நாங்கள் கருதியபடியால் முதல் இரண்டுவகைப் பதிவுகளை விலக்கவும் மூன்றாவது வகைப்பதிவுகளை வேண்டுமானால் விளம்பரப் பதிவுகளாக அனுமதிக்கவும் முடிவு செய்திருந்தோம். இம்முடிவைப்பற்றி இரு வாரங்களுக்கு முன்பு எம்முடைய நட்சத்திர வாரத்தில் மிகத்தெளிவாக அறிவித்தும் இருந்தோம்.

இம்முடிவின் அடிப்படையிலேயே கடந்த வாரத்தில் சில பதிவுகளை விலக்கவும் செய்தோம். எப்பதிவுகளை விலக்குவது என்பதை கீழே கொடுக்கப்பட்ட நான்கு நிர்வாகிகளே இணைந்து முடிவெடுத்து வந்திருந்தாலும், அம்முடிவை நடைமுறைப்படுத்துவதையும், தேவைப்பட்டால் பதிவர்களின் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதையும் எங்களில் யாரொருவருக்கு கால அவகாசம் இருக்கிறதோ அவர் செய்து வந்திருக்கிறோம்.
இருப்பினும் எங்களுடைய கொள்கைமுடிவை வேண்டுமென்றே தவறாகத் திரித்து சில மொக்கைபதிவுகள் எழுதப்பட்டன. இப்பதிவுகளில் திரிக்கப்பட்ட ஒருசிலதகவல்களை மட்டும் மறுக்கும் வண்ணம் எங்கள் நிர்வாகிகளுள் ஒருவர் ஒரு பதிவில் போய் தன்னுடைய கருத்தைப் பின்னூட்டமாகப் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலங்களில் கூட தொழில் நுட்பம் போன்றவற்றில் எங்களுடைய நிர்வாகிகள் ஓரிருமுறைகள் இதேபோல் பிற பதிவுகளில் விளக்கம் அளித்திருக்கிறபடியால் இம்முறையும் ஒருநிர்வாகி விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறார். இதுபோன்ற பின்னூட்டங்கள் எவையுமே தமிழ்மணத்தின் பயனர் கணக்கின் கீழ எழுதப்பட்டவை அல்ல. நிர்வாகிகளின் சொந்த மின்னஞ்சற் கணக்குகளிலே எழுதப்பட்டவையே என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவை தமிழ்மணம் குழுவில் அனைவராலும் இணைந்து தயாரிக்கப்பட்ட வரைவாக இல்லாமல் நிர்வாகிகளின் தனிப்பட்ட கருத்துகளாகவே எழுதப்பட்டவை. மேலும் குறிப்பிட்ட அப்பதிவில் அவர்மேல் சில அனானித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அந்த நிர்வாகியும் ஒரு விளக்கப் பின்னூட்டத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து வாதம் செய்ய அதுமுழுச் சண்டையில் போய் முடிந்திருக்கிறது.

தமிழ்மணம் நிர்வாகி தன் சொந்தப்பெயரில், தன் சொந்தக் கருத்துக்களைப் பின்னூட்டமிட்டாலும், அவர் தமிழ்மணம் நிர்வாகத்தின் முடிவை விளக்க முற்பட்டதால் அவை தமிழ்மணத்தின் கருத்துகளாக ஒருசிலரால் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் நட்சத்திர இடுகைகளில் சொல்லப்பட்ட முடிவுகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது. வெற்று ஆரவார மொக்கைப் பதிவுகள் தமிழ்மணம் முகப்பை ஆக்கிரமிப்பது குறித்து பல பதிவர்களும் வாசகர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டுகோள்களைச் சார்ந்தே தற்பொழுது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழ்மணத்தை ஒரு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம். விலக நினைப்பவர்கள் தமிழ்மணம் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

தமிழ்மணம் நிர்வாகிகள்
தமிழ் சசி
செல்வராசு
சொ. சங்கரபாண்டி
இரமணீதரன்

Comments

101 Responses to “தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்”

  1. குடுகுடுப்பை on October 17th, 2011 11:52 am

    தமிழ்மணம் நடத்துவதில் உள்ள சிரமம் புரிகிறது, இரமணீதரன் கருத்துக்களை வெளியிட்டபோது ஆன் பிகாப் ஆப் தமழ்மணம் என்ற வார்த்தைகளை தவர்த்திருக்கவேண்டும்.

    தமிழ்மணத்திற்கு என்னுடைய ஆதரவு. மீண்டும் சேர்ந்து இயங்க நினைப்பவர்களை இணைத்து இதனை கடந்து போகலாம்.

  2. Raja on October 17th, 2011 11:58 am

    Hi,
    I dont have tamilmanam account nor a blog however i use tamilmanam only to read all my favorite blogs. In a recent controversial blog the comments given by Mr.Ramindaran was really not acceptable. though i understand that the content of the blog was objectionable the in which Mr.ramni expressed his concern was really condemnable

    Though Mr ramani used his personal ID to post his voice, he intoduced himself as one of the Tamil manam admin. hecne tamilmanam has the resposibility to urge him to takeback all the objectionable words he expressed esp about muslims.

    Thanks
    Raja

  3. வாசகன் on October 17th, 2011 12:00 pm

    -/பெயரிலி. said…

    Hello பன்னிக்குட்டி

    Tamilmanam does not bother about making fun on house. Actually time to time it is needed to look at its way of management and policies, and to adjust according to the necessary evils.

    However poking fun does not mean skewing the facts accordingly. Tamilmanam always open to any reasonable question about any of its actions – even to irrational people who never want to accept there could be alternative views. However Tamilmanam can not take it easy at irrational childish attitudes that deliberately skew the facts and “Our_way or No_way” goonism.

    It is not funny “விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி
    கேட்பதை.” I was serious in my explanation. Usually I do not care about the worlds of “Winnie the Poohs,” However the Piglets should know their limits.

    If you and your buddies who echoed you above really think Tamilmamam is here for your deliberate fact-benders, pack your blog bags and get out to somewhere else since there are thousand better blog aggregators out there. After all, aggregators including Tamilmanam is not an important portal in the era of 1001 aggregators, Facebook and Twitter.

    Also, any of those who commented above without any seriousness want you still have plenty of time to take yourselves out of Tamilmanam; please let me know, I will act accordingly.

    This does not mean you should not throw rotten eggs and spoiled tomatoes on Tamilmanam; please do. Organic wastes help us become more green (of course, I am not talking about money). However please do not try be mudslinging pigs…Oops! Piglets.

    Thank you very much.

    On behalf of tamilmanam
    -/tramanitharan, k.
    (-/பெயரிலி.)

    இதற்கும் விளக்கம் தர முடியுமா ? தமிழ்மணத்தின் சார்பில் என்று சொல்லியே வசைமழைகளை பொழிந்திருக்கிறார் திரு இரமணீதரன்.

  4. drpkandaswamyphd on October 17th, 2011 12:02 pm

    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு,

    இரமணீதரன் என்பவர் உங்கள் நிர்வாகக் குழுவில் இருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக இப்போது அறிகிறேன். நிர்வாகத்தில் பங்கு பெறும் ஒருவர் எங்கு எப்போது தமிழ் மணத்தைப்பற்றி எழுதினாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகிறது. இதை அவர் அறியவில்லை என்றாலும் தமிழ்மண நிர்வாகம் இப்படி பொறுப்பைத் தட்டிக் கழிப்பது அழகல்ல.

    அன்புள்ள,

    ப.கந்தசாமி

  5. Jafferkhan on October 17th, 2011 12:02 pm

    Appakuda avar thavaru seithar enbathai solla manam varavillai 🙁

  6. நக்கீரன் .J on October 17th, 2011 12:20 pm

    மீண்டும் முதல்லேந்தா ????

    ரோம்ப நல்லவங்க போல ..!!!!

  7. நக்கீரன் .J on October 17th, 2011 12:22 pm

    SIR ,,,

    ரொம்ப டயர்டு ஆகிட்டோம் …

  8. கல்பனா ராஜேந்திரன் on October 17th, 2011 12:24 pm

    ஐந்து விரல்களில் ஒரு விரலினின் செயல் கண்டு இது என் கைக்குரியது விரல் இல்லை ., இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் உள்ளது உங்க மேற்கண்ட விளக்கம்………..

    — கல்பனா இராஜேந்திரன்

  9. Rajkumar Srinivasan on October 17th, 2011 12:38 pm

    இம்முறையும் ஒருநிர்வாகி விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறார். இதுபோன்ற பின்னூட்டங்கள் எவையுமே தமிழ்மணத்தின் பயனர் கணக்கின் கீழ எழுதப்பட்டவை அல்ல. நிர்வாகிகளின் சொந்த மின்னஞ்சற் கணக்குகளிலே எழுதப்பட்டவையே என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவை தமிழ்மணம் குழுவில் அனைவராலும் இணைந்து தயாரிக்கப்பட்ட வரைவாக இல்லாமல் நிர்வாகிகளின் தனிப்பட்ட கருத்துகளாகவே எழுதப்பட்டவை.

    Above words are completely unacceptable……if that person want to express his personal view…why the HELL he used the word TAMILMANAM….Don’t know why rest of the ADMIN people are trying to protect him…..I already recommend ETISALAT (UAE service provider) to block TAMILMANAM

    As administrator(s) you should have some responsibility…

    Hope you have guts to publish this comments…

    Regards

    Rajkumar Srinivasan
    Abu Dhabi

  10. senthilaan on October 17th, 2011 12:42 pm

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தொடரட்டும் உமது பணி!!

  11. நக்கீரன் .J on October 17th, 2011 12:51 pm

    சார் ,,நாங்க தயார் ….

    உங்களில் யார் அதிகாரபூர்வமாக —ஆரோக்கியமான

    விவாதத்திற்கு வரிங்க ????

    விட்டு ஓடக்கூடாது ….

    விகடன் பத்தி குஉரியதற்கு வாய் திறக்கவில்லை …ஏன் …

    பயப்பிடாம வாங்க ….

  12. ILa on October 17th, 2011 12:54 pm

    Well Said. குழுவில் இருப்பதனாலையே தனிப்பட்ட கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.

  13. நக்கீரன் .J on October 17th, 2011 12:55 pm

    ஏதாவது ஒரு தலத்தில் …

    கமென்ட் மொடேரஷன் இல்லாமல் வாங்க…

    அங்க வச்சிப்போம்….கச்சேரிய …..

  14. நாமக்கல் சிபி on October 17th, 2011 1:05 pm

    /குழுவில் இருப்பதனாலையே தனிப்பட்ட கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை./

    தனிப்பட்ட கருத்து சொல்லக் கூடாதுன்னு யாரும் சொல்லலைங்க விவாஜி!

    ஆன் பிஹால்ஃப் ஆஃப் தமிழ்மணம்னு போட்டிருக்காரே! அப்ப தமிழ்மணம் பொறுப்பேத்துக்கணும்!

  15. வைரைசதிஷ் on October 17th, 2011 1:09 pm

    சார் நீங்க முஸ்லீம் மதத்தையே இழிவாக பேசி இருக்கிறீர்

    பின் என்னையும் சக பதிவர்களையும் இழிவாக பேசருக்கிறீர்

    இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்

    மற்றும்

    என்னை திட்டியதுக்கு நான் கேட்ட போது நீங்கள் சொன்ன பதில்

    ஒலிச்சந்தத்துக்காக

    ஒலிச்சந்தத்துக்கு சூப்புற மாதிரியும் இருக்கும் என்றா பதில் வர வேண்டும்

  16. PeerMohamed on October 17th, 2011 3:16 pm

    This is pure diversion.

    Derogatory comments were made by ramaneedharan who responded in the capacity of tamilmanam admin. So it becomes their official word. An apology should be rendered to those who are hurt.

    http://www.ethirkkural.com/2011/10/blog-post.html

  17. aashiq ahamed on October 17th, 2011 3:17 pm

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தமிழ்மணமும், பெயரிலியும் வெவ்வேறு ஆட்கள் என்றும், தனிநபரின் கருத்துக்களை தமிழ்மணத்தின் கருத்துக்களாக எண்ண வேண்டாமென்றும் நீங்கள் கூறினால், அங்கே தமிழ்மணம் சார்பாக பேசுகின்றேன் என்று ரமணிதரன் சொன்ன போதே நீங்கள் மறுப்பை வெளியிட்டு இருக்கவேண்டும். அப்போதெல்லாம் சும்மா இருந்து விட்டு, இங்கே நாடகம் ஆடுவது திரிபுவாதத்தின் உச்சம்.

    இப்போது என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான், தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட நிர்வாகி ரமணிதரன் (அல்லது தமிழ்மண நிர்வாகம்) தன்னுடைய அநாகரிகமற்ற நடத்தைக்கு முஸ்லிம்களிடமும், பதிவர்களிடமும் மன்னிப்பு கேட்பாரா மாட்டாரா?

    இதற்கு ஆம் இல்லை என்று இரண்டில் ஒன்றை சொன்னால் நாங்கள் அடுத்த முடிவை எடுக்க ஏதுவாய் இருக்கும். காலம் தாமதிக்காமல் பதில் கூறுவது நம் இருவருக்கும் நல்லது…செய்வீர்களா??

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  18. Anonymous on October 17th, 2011 3:25 pm

    இஸ்லாமிய மத பிரசாரத்திற்க்கு தமிழ்மணம் பாவிக்கபடுகிறதா என்கின்ற பலத்த சந்தேகம் இருந்தது. தமிழ்மணம் மத பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வாழ்த்துக்கள்.

  19. ஜெய்லானி on October 17th, 2011 3:36 pm

    இதுல ஒரு நிர்வாகிய காப்பாத்தும் செயல்தான் தெரியுது . அவ்ருக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னா அவரை பகிரங்க மண்ணிப்பு கேட்க சொல்லுங்க அதுதான் முறை .

    தமிழ்மணத்தில கேட்காவிட்டாலும் அவருடைய பிளாகிலயாவது கண்டிப்பா கேட்டே ஆகனும் . இனி ஒரு தடவை திமிதனமான ஒரு தப்பு எங்கேயும் வராமலிருக்கு இது உதவும் .
    கேட்பார் என்று நம்புகிரோம்

  20. வருண் on October 17th, 2011 3:43 pm

    There was ONLY ONE post (response) in which he/peyarili said “on behalf of TM” and I dont find any abusive words in that comment. He was hurt by “pannikutti’s sarcasm” and got emotional of course.

    Then 10 bloggers (anonymous and nameless and some clowns) started attacking here and there, then the discussion took a wild turn. peyarili did say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.

    I dont think peyarili or tamilmaNam should apologize to anybody.

    That is my humble opinion.

    BTW, TamilmaNam’s committee do not have “allah, jesus and lord rama” as committee members, it is run by human beings and they do lose their temper when some clowns are making baseless accusations!

    -varuN

  21. வருண் on October 17th, 2011 3:45 pm

    ***peyarili did say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.***

    this should read as “peyarili did NOT say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.”

  22. வருண் on October 17th, 2011 3:50 pm

    ***இதற்கும் விளக்கம் தர முடியுமா ? தமிழ்மணத்தின் சார்பில் என்று சொல்லியே வசைமழைகளை பொழிந்திருக்கிறார் திரு இரமணீதரன்.***

    vasagan or whatever!

    How are you defending the pannikutti’s comment about TamilmaNam? We all know தமில்மண்ம் needed money and that is the reason they started “கட்டணசேவை”. He should not make fun of TamilmaNam for taht when he wants to his blog to be aggregated by TamilmaNan! period.

  23. Venu Raghav on October 17th, 2011 4:02 pm
  24. Uthayam on October 17th, 2011 4:11 pm

    ரமணீதரனுக்கு எனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். அவரது மத மன வக்கிரம் தான் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளது. இப்போக்கு மிகவும் ஆபத்தானது. அவரது செயலை வன்மையாக கண்டிக்காமல் மெத்தனம் காட்டி வரும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளைக் கண்டிக்கிறேன்.

  25. TheKa on October 17th, 2011 4:17 pm

    //தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது.//

    மென்மேலும் வளர வாழ்த்துகள்! இலவச சேவை செய்றதிலும் இத்தனை இடர்பாடுகளை தாண்டி வரணும்னா அந்த கடவுளே மனச விட்டுடுவாரு போலவே… தொடர்ந்து பீடு நடை போடு தமிழ்மணம்…

  26. Vasanth on October 17th, 2011 4:23 pm

    +1

    பெயரிலி மதசம்மந்தமாக இட்ட கருத்து தன்னுடைய பெயரிலேயே தெரிவித்திருக்கிறார்..இதற்கு தமிழ்மணம் பொறுப்பு கிடையாது..இந்தப்பிரச்சினையையும் தமிழ்மணத்தையும் இணைத்து மதப்பிரச்சினையாக்குபவர்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்..!

    தமிழ்மணத்தின் http://blog.thamizmanam.com/archives/344 இந்த இடுகையை குறிவைத்து கிளப்பப்பட்டு மதப்பிரச்சினையை தமிழ்மணத்தோடு சேர்ப்பது தவறு..!

    நன்றாக எழுதுபவர்கள், நல்லபதிவுகள் வரவேண்டும் என்ற நோக்கில் தமிழ்மணம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள்
    மூலம் நிறைய நல்ல பதிவுகளும் புதியவர்களும் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தமிழ்மணத்திற்க்கு எனது பாராட்டுக்கள்..!

    தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்கு தமிழ்மணம் வருத்தம் தெரிவித்திருப்பது வரவேற்கக்கூடிய ஒன்று..!

    I support to tamizhmanam..!

  27. மதவெறி மததுவேஷம் கற்பிக்காத நம் போன்ற அமைதி விரும்பும் அனைத்து நல்லோர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

    மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

    ===>>>இங்கே தெளிவாகவே கோரிக்கை வைத்துவிட்டேன்.

    மேலும் இன்றைய இத்தனை பதிவர்களின் குரல்களுக்கு பதிலாக…

    இதுமாதிரி ஒரு பொறுப்பற்ற சொதப்பல் உளறலை நான் தமிழ்மணத்திடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை.

    மற்ற மூன்று நிர்வாகிகளும், குற்றமிழைத்த நான்காவது நபர் மீது கேள்வி கேட்டு நடவடிக்கை எடுத்து, அவரை தமிழ்மணத்திலிருந்து விலக்கி இருந்திருந்தால்… இந்த திரட்டி பிழைத்திருக்கும்.

    அல்லது….

    திரு.-/பெயரிலியே…. 2G ஊழல் போல, பழியை தன்மீது மட்டும் போட்டுக்கொண்டு “தான்தான் அனைத்துக்கும் காரணம், மற்றவர்கள் எல்லாரும் அப்பாவிகள்” என்று அறிவித்து மன்னிப்பு கேட்டு இருந்திருந்தால் கூட இந்த திரட்டி பிழைத்திருக்கும்.

    ஆனால்…

    குற்றத்துக்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட சகலரிடத்தும் பகிரங்க மன்னிப்பு கேட்க திராணியற்றவர்கள் என்று தாமாகவே ஒத்துக்கொள்வது போல தன் சொதப்பல் சப்பைக்கட்டை ஊருக்கும் உலகுக்கும் அதை ஒரு பதிவாகவே போட்டு நன்கு விளக்கியமைக்கு மிக்க நன்றி.

    இளையவரான சகோ.வைரை.சதீஷ் உட்பட இன்று பதிவு போட்ட எண்ணற்ற பதிவர்களை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு இனியாவது மனம் வருந்தி திருந்தி பகிரங்க மன்னிப்பு கேட்கும் பதிவு ஒன்றை எழுத ஆரம்பியுங்கள்.

    அன்றி, ஆணவச்செருக்கே மிகுதியாயின்…

    மேலே… அருண்கள், குடுகுடுப்பைகள், செந்திலான்கள், இளாக்கள் போன்றவர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ்மண திரட்டிக்காக பெரிய குழி ஒன்றை வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதே அங்கே சென்று திரட்டி படுத்துக்கொள்ளட்டும்.

  28. வருண் on October 17th, 2011 4:51 pm

    ***அன்றி, ஆணவச்செருக்கே மிகுதியாயின்…

    மேலே… அருண்கள், குடுகுடுப்பைகள், செந்திலான்கள், இளாக்கள் போன்றவர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ்மண திரட்டிக்காக பெரிய குழி ஒன்றை வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதே அங்கே சென்று திரட்டி படுத்துக்கொள்ளட்டும்.***

    Everybody has their own opinion. அவங்க அதை சொல்றாங்க. ஏன் இஷ்டத்துக்கு உங்களுக்கு ஜால்ரா அடிக்கலைனா அவர்கள் எல்லாம் குழிதோண்டுவதாக சொல்றீங்க்? உங்க கருத்தை சொல்லிட்டுப் போங்க சார்! உங்களுக்கு எதுக்கு அருண், இளா, செந்திலான், குடுகுடுப்பை பத்தி எல்லாம்?

    பெயரிலியை விமர்சிக்கிற உங்கள் இந்த லட்சணத்தை யார் விமர்சிக்கிறது???

    -வருண்

  29. !!!!உங்க கருத்தை சொல்லிட்டுப் போங்க சார்! உங்களுக்கு எதுக்கு அருண், இளா, செந்திலான், குடுகுடுப்பை பத்தி எல்லாம்?!!!!

    சகோ.வருண்,
    மிக நல்ல அவசியமான கேள்வி கேட்டீர்கள்..!
    ——————————-
    ???இதனை கடந்து போகலாம்???—-ஒரு பிரச்சினையிலே தீர்வேதும் தராமலேயே அந்த பிரச்சினை அப்படியே வேரிட்டு விழுதிட்டு வளரவிட்டு விட்டு திரட்டி கடந்து போகலாம் என்றால்…? இதுதானே குழி..?
    ——————————
    ???போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தொடரட்டும் உமது பணி!!???—முதலில் இவர் இப்படி செல்வாரா..? ஏய்,,, என்னப்பா விஷயம்..? வாடாப்பா பேசி தீர்த்து சுமுகமா தொடரலாம்.. என்றல்லவா சொல்வார்..!? இதுவும் குழிதானே..?
    ——————————
    ???குழுவில் இருப்பதனாலையே தனிப்பட்ட கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.???—-ஹாலோ… யாருங்க இதை பிரச்சினை ஆக்குனது..? இதுவாங்க இங்கே பிரச்சினை..? இங்கே நான் பாடும் பாட்டுக்களுக்கு தமிழ்மணம் பொறுப்பல்ல என்று ஆரம்பத்திலேயே சொல்லிட்டு பாடி இருக்க வேண்டியதுதானே..? “on behalf of TamilmaNam” நான் பாட்டு பாடறேன் என்றால்..?
    —————————–
    ???***peyarili did say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.***

    this should read as “peyarili did NOT say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.”
    ???

    —அடிச்சீங்க பாருங்க ஒரு உலக மகா அந்தர் பல்டி..! இனி என்னத்த சொல்ல..?

    இதையும் பார்த்துட்டு ஒரு பின்னூட்டவாதியாலே சும்மா போக முடியுங்களா சகோ.வருண்..? உங்களாலே தாங்க மத்தவங்க எல்லாம் என் கண்ணில் பட்டாங்க…!

    பாவம்… அந்த அனானி பிழைச்சி போகட்டும்.

    இப்போ புதுசா… குழி வெட்டலில் உங்களையே பீட் பண்ணிட்டார் சகோ.வசந்த்.

    ???பெயரிலி மதசம்மந்தமாக இட்ட கருத்து தன்னுடைய பெயரிலேயே தெரிவித்திருக்கிறார்..இதற்கு தமிழ்மணம் பொறுப்பு கிடையாது..இந்தப்பிரச்சினையையும் தமிழ்மணத்தையும் இணைத்து மதப்பிரச்சினையாக்குபவர்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்..!??? —–அடா… அடா…. அடா…. ரொம்ப வேகமா குழி வெட்டறாருங்கோ…

    கஷ்டபடாம குழிவெட்ட நான் ட்ரைளர் காட்டறேன் பாருங்க….

    ////-/பெயரிலி அப்டீன்னு ஒருத்தர் தானாமானா நிர்வாகின்னு பதிவுலகிலேயே இல்லவே இல்லைங்க…! சண்டை போட்டவர் ஒரு profile இல்லாத அநாமதேய போலிங்க… இதோ பாருங்க… இவர்தாங்க நிஜ -/பெயரிலி.. “இவர்…அவரில்லை” இவரின் இந்த profile லிங்க் ல போய் பாருங்க… அட… ஓபன் ஆகுதுங்க…. பாருங்க படம் கூட கலர் படமா இருக்கு… அவர் ஃபோட்டோவோட ப்ரோபைல் இருக்கு பாருங்க… ஊர், ஜில்லா அட்ரஸ் படிப்பு வேலை எல்லாம்… ச்சே… -/பெயரிலி சொன்னதை நம்பி தப்பான ஆளை தமிழ்மண நிர்வாகின்னு நினைச்சு… இப்படி ஏமாந்திட்டீங்களே கண்ணுங்களா….////

    —இப்படில்லாம் பெரிசா வேகமா குழி வெட்ட தெரிஞ்சிக்கிங்க….

    ///ஜால்ரா///

    —-இந்த வார்த்தையை நான் சொல்லவே இல்லையே..? அப்புறம் எப்படி கபால்னு உங்களுக்கு இது நியாபகம் வந்துச்சு..?

    தானாடாவிட்டாலும்….

  30. வருண் on October 17th, 2011 6:33 pm

    ***peyarili did say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.***

    this should read as “peyarili did NOT say “on behalf of TamilmaNam” when he got carried away in the argument.”
    ???

    —அடிச்சீங்க பாருங்க ஒரு உலக மகா அந்தர் பல்டி..! இனி என்னத்த சொல்ல..? ***

    இந்த தளத்தில் “ரிவியூ” பண்ண வசதியில்லைங்க. நான் செய்த எழுத்துப்பிழை அர்த்தத்தையே மாற்றிவிட்டது என்பதால் அதை சரி செய்தேன்.

    அவரு ஒரே ஒரு இடத்தில்தான் “on behalf of TamilmaNam” சொல்லியிருக்காரு என்பதுதான் உண்மை. அதுவும் தமிழ்மணத்தை பற்றி தரக்குறைவாக (காமெடி என்கிற பெயரில்) விமர்சிச்சதால. இதில் பல்டியடிக்க எதுவும் இல்லைங்க.

    நீங்க என்னவேணா நெனச்சுக்கோங்க, சொல்லிக்கோங்க. நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லனும் என்பதற்காக தவறை சரி செய்தேன். அவ்வளவுதான்! 🙂

  31. Ilayadhasan on October 17th, 2011 7:40 pm

    //நீங்க என்னவேணா நெனச்சுக்கோங்க, சொல்லிக்கோங்க. நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லனும் என்பதற்காக தவறை சரி செய்தேன். அவ்வளவுதான்!//

    yes Varun, biggest clown like you does not have one word ,one stand…in circus, clown does all kinds of tricks than any body else…you are that kind…
    your jalra is reaching the sky do you know.

  32. Ilayadhasan on October 17th, 2011 7:55 pm

    hey Varun,
    //vasagan or whatever!

    what kind of attitude is this? Do you think your name is the only sweetest name in this whole wide world? Is this the way you treat other commenters? Just because you want your jalra to be heard loud, just dont use words like whatever and clowns…on top of it you are commenting like below and getting carried away :

    //உங்களுக்கு எதுக்கு அருண், இளா, செந்திலான், குடுகுடுப்பை பத்தி எல்லாம்?//

    if you want to express your opinion , just express it, who asked you to add your stupid adjectives? I really condemn it and dont again do it otherwise we will start using all kinds of adjectives.

    Tamilmanam if you are really fair, then this comment should reach varun.

  33. maduraimakkan on October 17th, 2011 8:36 pm

    இந்தப் பிரச்சனை எனக்கும் புரியவில்லை. தமிழ்மணமே மன்னிப்பு கேள் என்ற கோரிக்கை அபத்தமாக உள்ளது

    இஸ்லாமிய சகோதரர்கள் இவ்வாறான கோரிக்கைகளை வைத்து மொத்த தமிழ்மணத்தையும் முடக்குவது சரியல்ல

    தமிழ்மணம் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு இந்தப் பிரச்சனையை கடந்து செல்வதே நல்லது

    அதை விட்டு இப்படி தமிழ்மணத்தை முடக்குவேன், மன்னிப்பு கேள் என்பதெல்லாம் சுத்த அபத்தம்

  34. தணல் on October 17th, 2011 8:58 pm

    தவறுக்கு வருத்தம் தெரிவித்தது நன்று. தொடரட்டும் தமிழ் மணத்தின் சேவை.

  35. பெயரிலி தமிழ் மணம் சார்பாக, அல்லது தனிப்பட்ட முறையில் தமிழ் மணத்திற்கு ஆதரவாக இயங்கிருந்தாலும், இதை தமிழ் மணம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அண்டர்லைன் பண்ணி தெளிவாகச் சொல்லி விட்டது.,

    ஜெவின் பெயரைச் சொல்லி நான் செய்யும் செயலுக்கு அவர் எப்படி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க முடியும். என் செயல் ஜெ வின் கவனத்திற்கு வந்து இதற்கு ஜெ நான் பொறுப்பல்ல அவரது தனிப்பட்ட கருத்து என சொன்னபின்னும் அங்கேயே வாதம் செய்வது நமது விபரமின்மையையே எடுத்துக்காட்டும்.

    இதை புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம் என்பதே தெரியவில்லை.

    பெயரிலியின் கருத்துகளுக்கு பெயரிலியே பொறுப்பேற்க வேண்டும் நாங்கள் அல்ல என தமிழ்மணம் சொல்லி ஆயிற்று..

    இனியும் தமிழ்மணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்பது எதற்கு என்பது புரியவில்லை. பஸ்ஸ்லில் சிலவாரங்களுக்கு முன்னால் மன்னிப்பு வாரமாக இருந்ததே அப்படி ஒரு வாரத்தை ஏற்படுதத வேண்டும் போல., அதில் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும்:))))

    இனி பெயரிலி செய்ய வேண்டியது, கவனத்தில் கொள்ள வேண்டியது எப்போது தமிழ்மணம் நிர்வாக வருகிறீர்களோ அப்போது இரமணீதரனாகவும், எப்போது தனிப்பட்ட கருத்துகள் கூறுகிறாரோ அப்போது பெயரிலியாக வந்தும் செயல்படுவது இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும்.

    பெயரிலியின் கருத்துகளை அவரது தளத்தில் எதிர்கொள்வதுதான் நண்பர்களுக்கு அழகு., பெயரிலியின் கமெண்ட்களை படித்தவரை அவரை எதிர்கொள்வதில் இருக்கும் சிரமத்தை தமிழ்மணத்தை தாக்குவதன்மூலம் திசை திருப்புவது போல் தான் தெரிகிறது.

    மன்னித்தல் என்பது சாந்தியும் சமாதானமும் நிலவ ஒரு சிறந்த வழி.,

    மன்னிப்பு கேள் என்பது …….??????

  36. PeerMohamed on October 17th, 2011 9:35 pm

    பதிவர்களால் தான் தமிழ்மணம் என்பதே சாத்தியம். It cannot exist in a vacuum. தமிழ்மணம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வேறு திரட்டிகளில் பதிவுகளை இணைத்து செயல்படுவது தான் பதிவர்கள் செய்யும் அடுத்த முக்கியமான செயல்.
    சும்மா இளம் பதிவர்களை நோக்கி “சூப்புவது” போன்ற கடுஞ்சொற்களை வீசிவிட்டு ” சும்மா rhyming ah பேசுனேன் ” ன்னு கெளம்புறது தான் ஒரு திரட்டியின் முக்கியமான நிர்வாகி செய்யும் செயல் என்றால் திரட்டியின் நிர்வாக குழு அதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
    admin@tamilmanam க்கு மெயில் அனுப்புனா சகோ.ரமணி reply பண்றாரு ஆனா அவர் சொல்றதெல்லாம் தமிழ்மணம் கருத்தாகாது அப்டின்னு புதுசா ஒரு பதிவு தமிழ்மணம் ல வருது . சத்தியமா புரியல சார்.

  37. கண்ணன் பலராம் on October 17th, 2011 10:01 pm

    பெயரிலியை இஸ்லாத்தின் முகமனை இழிவுபடுத்தினார் என திட்டித் தீர்க்கிறீர்கள். அவருடைய பக்கத்துகதை என்ன என கேட்டுவிட்டு திட்டுவோம் என உங்களிலே யாருக்காவது தோன்றியதா? நீங்களே சொல்லி நீங்களே தரக்குறைவான பதிவுகளை போடுகிறீர்கள். அவர் உங்கள் முகமனை இழிவுபடுத்தவில்லை என்று நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீர்களா? நீங்களே இழிவு படுத்தினார் என்று அறிவித்துக்கொண்டு தரக்குறைவாக பதிவு போடுகிறீர்கள். அவர் உங்கள் முகமனை இழிவுபடுத்தவில்லை என்று உறுதியானால் என்ன முகத்தோடு மற்றைய பதிவர்களைப் பார்ப்பீர்கள்? உங்கள் முகமனை அவர் இழிவுபடுத்தவில்லை என்று நிரூபிக்க என்ன செய்யவேண்டும் என்றாவது எங்காவது சொல்லியிருக்கின்றீர்களா? இழிவுபடுத்திவிட்டார் இழிவுபடுத்திவிட்டார் என்று திரும்பத் திரும்ப ஆளுக்கு ஆள் சொல்லிக் கொள்கிறீர்களே ஒழிய உங்களின் குற்றச்சாட்டு நியாயம் எங்கே சொல்லியிருக்கின்றீர்கள்? சாந்தி சமாதானம் என்ற வார்த்தைகள் வருவதாலே அவர் இழிவுபடுத்திவிட்டார் என்பதெல்லாம் எதையும் நிரூபிக்காது. அவர் டெரர்கும்மிப்பதிவிலே தமிழ்மணம் ஐடியோடு வந்தது தவறு என்றால் நீங்கள் இப்படியாக குழம்பிய குட்டையிலே மீன் பிடிப்பதுபோல இரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரைக் குற்றம் சாட்டுவது முறையாகாது. ஒருவர் அவர் செய்து நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கே தண்டிக்கப்படவேண்டும். அவரின் கருத்தைக்கூட கேட்காமல் குற்றம் என்று நீங்களே தீர்மானித்துவிட்டதால் தண்டிக்கப்படக்கூடாது. பெயரிலி டெரர்கும்மி பதிவிலே நிதானம் இழந்தார் என்று குற்றம் சுமத்தும் பதிவர்கள் பெயரிலியை முஸ்லீம்களின் முகமனை இழிவுபடுத்தினார் என்று சிலர் தீர்மானித்துக்கொண்டு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு கூச்சல் இடுவதும் நிதானம் இழந்த செயலே என்று ஏன் புரிந்துகொள்ளவில்லை?

  38. tamilan on October 17th, 2011 10:10 pm

    விள்க்கத்திற்கு நன்றி தமிழ்மணம்.
    அவ்வளவுதான் பிரச்சினை தீர்ந்து விட்டது.இதில் இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள் ?
    1.நான் ஒரு பதிவர் எனில் என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை மட்டுறுப் படுத்துவது என் பொறுப்பு.பெயரிலி தெரிவித்த கருத்துகள் தவறு என்றால் அத்னை அப்படியே வெளியிட்டு பதிவர் செய்ததும் தவறுதான்.அவரை ஏன் மன்னிப்பு கேடக சொல்லக்கூடாது?

    2. பெயரிலி கருத்துக்கு தமிழ்மணம் பொறுப்பு அல்ல என்று குறிய பின் எதற்கு பிரச்சினை?.இன்னும் ஒரு பதிவில் ஒரு வேறு மதம் சார்ந்த பதிவர் “பார்ப்பன ட்வீட்” என்று ஒரு பதிவு இட்டார்.அதற்கு அவர் மதம் சார்ந்த அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

    3.விகடன் விவகாரம் தவறு என்றால் தினமலர் விவகாரத்தில் நடந்ததை என்ன சொல்வது?தின________ என்ற அநாகரிகத்திற்கு யார் மன்னிப்பு கேட்பது?

    இன்னும் நிறைய இருக்கிறது.ஆனால் அவசியம் இல்லை.

    குற்றம் சொல்வது என்றால் மிக எளிது.அனைவரும் தங்கள் தவறுகளையும் சீர்தூகிப் பார்ப்பது நல்லது.யாரும் மனித புனிதர் அல்ல!

    தமிழ்மணத்தின் இந்த விளக்கமே போதும்.

    நடந்ததை மறப்போம் மன்னிப்போம்

  39. தமிழன் on October 17th, 2011 10:58 pm

    //தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம். விலக நினைப்பவர்கள் தமிழ்மணம் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.//

    தமிழ் மணம் தெளிவாக கூறியிருக்கிறது. வேண்டுமானால் சேர்ந்து இருங்கள். இல்லாவிடில் வெளியேருங்கள். அதைவிட்டு விட்டு மன்னிப்பு கேட்கவேண்டுமாம். உலகத்தில் எல்லா இடத்திலும் செய்யும் குண்டாத்தனத்தை இங்கேயும் ஆரம்பித்து விட்டார்கள்.

  40. தமிழன் on October 17th, 2011 11:04 pm

    @நிகழ்காலத்தில்.. (அறிவே தெய்வம்) ,
    //மன்னித்தல் என்பது சாந்தியும் சமாதானமும் நிலவ ஒரு சிறந்த வழி.,
    மன்னிப்பு கேள் என்பது …….??????//
    அவர்கள் உலகம் முழுவது செய்வது :). அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் தப்பு இல்லை. ஆனால் அவனுகள சொன்னா உடனே வந்து விடுவார்கள். ……………………..

  41. தமிழன் on October 17th, 2011 11:20 pm

    @தமிழ்மணம், மன்னிப்பு கேட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

  42. Robin on October 17th, 2011 11:30 pm

    நான் தமிழ் பிளாக்குகளைப் பற்றி அறிந்துகொண்டதே தமிழ்மணம் வழியாகத்தான். நீண்ட காலமாக இலவச சேவையை தமிழ்மணம் வழங்கியது என்பதை மறுக்க இயலாது.

    சமீப காலமாக ஒரு சிலர் சேர்ந்து தமிழ் மணத்தை மொக்கை எனப்படும் குப்பைப் பதிவுகளையும் ஆபாசப் பதிவுகளையும் இட்டு ஒரு குப்பைத் தொட்டியைப் போல மாற்றி வைத்திருந்தார்கள். சில மூத்த பதிவர்கள் சுட்டிக்காட்டியபோது அவர்களையும் நக்கல் செய்து தொடர்ந்து தங்கள் சிறுபிள்ளைத்தனமான செயலை செய்து வந்தார்கள். இதனால் நல்ல பதிவுகளை தந்தவர்கள் சோர்வடைய நேரிட்டது, சிலர் தமிழ்மணத்தைவிட்டே வெளியேறி விட்டனர்.

    இந்நிலையில் தற்போது தமிழ்மணம் எடுத்துள்ள முடிவு சரியானது, நியாயமானது. மதப் பதிவுகள் திரட்டப்பட விருப்பமில்லாவிடில் அனைத்து மதப் பதிவுகளையும் பாரபட்சம்பார்க்காமல் நீக்கி விடலாம்.

  43. ilaydhasan on October 17th, 2011 11:43 pm

    Respected Tamilmanam Management,

    I have few basic questions.

    Question #1: When a X person going and telling other person that , I am from ‘so and so’ organisation , then other person will see him as a representative of that organisation till the complete conversation ends. If that official wanted to express his own personal opinion, he should have quoted with ‘in my personal opinion’ blah blah or end with “hey guys this is just my personal opinion”. This is how any educated management person will behave with his customer.I have never seen this in one of your management guy’s response.

    When an official goes to a bar with his uniform and behave rudely and abuse others people will still treat him as that official because of the uniform he is wearing. When he entered the bar he should have removed his uniform in the first place.

    Look at the way he blabbered,it clearly shows,he is an arrogant official:

    டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?

    Do you still want us to believe it is his personal opinion? கழட்டிடடுமா – clearly shows he is still talking as Tamilmanam man.

    Question #2: I agree we are your service’s user and we have to be bound by your Terms and Service. But who gave you the right to abuse your service’s users and their family. I never recollect we have agreed to such terms and conditions,what answers you have for these comments:

    a) நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்…..

    b) அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.

    c)ஏங்கவண்டிக்காரன் மகனுல, முரட்டுக்காளையில ஜெய்சங்கரோட ஏதாச்சும் சவால்விட்டுக்கிட்டிருற சீன் பாக்கறப்ப உங்க அம்மா உங்கள பெத்தாங்களா? 🙂

    d)another one saying I am ready to fight bring your father,uncle,grandpa

    Just because you are providing free service, it does not mean that one of your management team member can insult bloggers like this and invite all the family members to fight with him. He sounds like a third class rowdy to me.

    Though yours is private organisation, when your employee is behaving badly in public and if it is brought to your attention,normally any ethical company will take discipilinary action against such person.What sort of discipilinary action you are going to take against this person? Instead of that I see you guys are hiding your face and telling it is his personal opinion.

    Your honourable admin claims like this “It is irony; if these people are the one tamilmanam thinks to aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die.”

    Wow , I can clearly see that you guys are really working your ** off to save tamil.Kudos to your effort.

    Q4) It is very common in tamil and english magazines that a celebrity,MLA,MP,VIPs bio-data being published with funny comments.I never seen those person took it very serious and attached the respective magazines. Why your man errupted like this ,is it just because he was one of the founder of TM or because there is something which pokes your some part of your good heart…In tamil there is a say:

    குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்

    PS: I am sure this comment wont be visible,if you really find some values in my question,do post it. Otherwise I am sure TM is an unethical company who is scared of accusation.

  44. Robin on October 17th, 2011 11:54 pm

    பெயரிலி என்பவர் இஸ்லாமியர்களை அவமதித்துவிட்டதாக கூப்பாடு போடுவது வேடிக்கை. சாந்தி, சமாதானம் என்ற பெயர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் கண்டுபிடித்ததா? ஜோக்காக சொன்ன ஒரு விஷயத்திற்காக இஸ்லாத்தின்மீது தாக்குதல் நடந்துவிட்டது, மன்னிப்புக் கேள் என்று குதிப்பதைப் பார்க்கும்போது இணையத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்ற நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதே இஸ்லாமியப் பதிவர்கள் பிற மதங்களை அநாகரீகமாக விமர்சிக்க தவறியதில்லை அல்லது அப்படி செய்யும் இஸ்லாமியர்களை கண்டிப்பதுமில்லை.

  45. sandanamullai on October 18th, 2011 12:05 am

    தமிழ்மணம் அளித்த விளக்கத்துக்கு நன்றி. அந்த குறிப்பிட்ட கமெண்டில் இஸ்லாம் எங்கு வந்ததென்று புரியவில்லை. எதிர்ப்பையும் கோபத்தைம் காட்டவேண்டிய பருண்மையான பல பிரச்சினைகள் நாட்டில் இருக்கும்போது ஒன்றுமில்லாததையெல்லாம் பூதாகரமாக மாற்றும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானதாக தெரிகிறது. ( இதில் தமிழ்மணம் வருத்தம் தெரிவித்ததும் எதற்கென புரியவில்லை.) மேலும், ”சாந்தி” என்பதை பெண்கள் மீதான தாக்குதல் என்று பின்னூட்டத்தில் பொங்கும் பெண்ணியப்புலிகள் எவரும் கண்ணெதிரே பெண்கள் இழிவுபடுத்தப்பட்டபோதோ, அவதூறு செய்யப்பட்ட போதோ எங்கு போயிருந்தார்கள்? அப்போதெல்லாம் சிறு கண்டனம் கூட தெரிவித்ததில்லை. இந்த வெற்றுகோஷங்களையெல்லாம் புறந்தள்ளி தமிழ்மணம் தன் ஆக்கப்பூர்வமான பயணத்தை தொடரட்டும்.

  46. Jafferkhan on October 18th, 2011 12:21 am

    @tamizmanam
    enna solringa mannipu ketka thayara? Pathil sollumaiya!!

  47. அப்துல் பாஸித் on October 18th, 2011 12:44 am

    தங்களின் இந்த விளக்கத்திற்கு நன்றி!

    //அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை//

    சரி, இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் பெயரிலி/இரமணிதரன் தமிழ்மண நிர்வாகத்தில் இருப்பதால் தமிழ்மணத்திலிருந்து நான் நிரந்தரமாக விலகுகிறேன். தங்களுக்கு இது பற்றி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

  48. தமிழ் சசி / Tamil SASI on October 18th, 2011 12:56 am

    நான் தமிழ் சசி. தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவர். இந்தப் பிரச்சனையில் எனது தனிப்பட்ட கருத்தாக இதனை பதிகிறேன்…

    *************

    நடந்த நிகழ்வு என்னவென்று புரியவே எனக்கு இரு நாட்கள் எடுத்தது. பிரச்சனையை புரிந்து அதற்கான விளக்கத்தையும் தமிழ்மணம் வலைப்பதிவில் அளித்து விட்டோம். இன்னமும் தமிழ்மணமே மன்னிப்பு கேள் என்றால் என்ன சொல்வது ? ஒரு வரியில் சொல்லவதென்றால் ”தமிழ்மணம் மன்னிப்பு கேட்க முடியாது. தமிழ்மணம் மன்னிப்பு கேட்பது என்ற கேள்வியே இங்கே எழவில்லை

    இரமணி எழுதிய கருத்துகளுக்கு தன்னுடைய வலைப்பதிவில் விளக்கமும் அளித்து விட்டார் – http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html. அவர் எழுதிய கருத்துகளுக்கு அவர் தான் பொறுப்பேற்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்று தான் அவர் தனது வலைப்பதிவில் விளக்கமும் அளித்து இருக்கிறார். அதனை விடுத்து ஒட்டு மொத்த தமிழ்மணமும் பொறுப்பேற்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதெல்லாம் எந்த வகை நியாயம் என்பது எனக்கு புரியவில்லை. தொடர்ந்து கூக்குரல் எழுப்பினால் அது நியாயமாகி விடாது. இது போன்ற பலப் பிரச்சனைகளை நாங்கள் பார்த்தும் இருக்கிறோம்.

    ஒரு தனிப்பட்ட பதிவராக சொன்னால் இரமணி கூறியது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பிரச்சனைக்குரிய வலைப்பதிவில் ”ஒரு” மறுமொழியை கூட அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அவரிடமும் கூறினேன். இங்கும் முன்வைக்கிறேன். அதே நேரத்தில் அந்தக் கருத்துக்களை அவர் தனி மனிதனாக சொல்ல அவருக்கு உரிமை உண்டு. தமிழ்மணம் நிர்வாகியாக இருக்கும் காரணத்தினாலேயே அவரது தனி மனித உரிமையை நாங்கள் மறுத்து விட முடியாது. சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினைச் சார்ந்தே மாற்று கருத்துக்களை நாம் முன்வைக்க உரிமை உண்டு. அவ்வாறு இருக்கையில் தொண்டு செய்யும் தமிழ்மணத்தில் அந்த உரிமையை பறிக்க இயலாது என்பதை கூட புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமாக உள்ளதா ?

    இறுதியாக தமிழ்மணத்தின் மீது ”பெருவாரியான” பதிவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சார்ந்தே நாங்கள் இயங்கி வருகிறோம். அவ்வப்பொழுது நிகழும் இவ்வாறான சலம்பல்களை இவர்கள் புறக்கணித்து தமிழ்மணத்தின் நியாயங்களை புரிந்து எங்களுக்கு ஆதரவையே வழங்கியிருக்கின்றனர். அவர்களின் ஆதரவையே நாங்கள் எப்பொழுதும் வேண்டி நிற்கிறோம். அவதூறுகளை வீசுபவர்களை நாங்கள் எப்பொழுதும் கண்டு கொள்வதில்லை. அதையெல்லாம் கடந்து தான் கடந்த ஏழு ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் பயணிப்போம்…

    தொடர்ச்சியான மறுமொழிகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரமும் இல்லை

    நன்றி…

  49. veera thamilan on October 18th, 2011 1:25 am

    /தமிழ்மணம் மன்னிப்பு கேட்க முடியாது. தமிழ்மணம் மன்னிப்பு கேட்பது என்ற கேள்வியே இங்கே எழவில்லை ”/
    super தெளிவாக சொல்லியாயிற்று! எல்லாரும் அவரவர் வேலை போய் பார்க்கலாம்

  50. சந்தோஷ் on October 18th, 2011 1:32 am

    சசியின் கருத்துக்களோட ஒத்துப்போகிறேன்.. Just ignore and keep moving guys.

  51. madala maraiyOn on October 18th, 2011 1:33 am

    பதிவர்களால் தான் தமிழ்மணம் என்பதே சாத்தியம். It cannot exist in a vacuum. //

    Tamil manam s not a market place and they r not sellers. They do this aggregator to just serve Tamil blogging. U, as Tamil bloggers, r in need of an exposure; if not, u will lose all enthusiasm and stop blogging. So, it is u who need them, not they u!

    They do it free, and if they close it down, it s not they, but u who stand to lose. Beggars shd not b choosers, as the adage goes. U need them; but u pretend here they need u. Wht fun !

  52. madala maraiyOn on October 18th, 2011 1:36 am

    Seeing more and more muslis abusing the TM to propogate their religious ideology, it s obvious there s a conspiracy to malign TM as these bloggers think they will b blocked. It s a muslm conspiracy

    It is time TM should put it food down and block all religious blogs here.

  53. suvanappiriyan on October 18th, 2011 1:37 am

    //அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.//

    விளக்கம் அளித்து பிரச்னையை முடித்து வைத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. வழமைபோல் தொடரட்டும் உங்கள் பணி!

  54. ஹைதர் அலி on October 18th, 2011 1:48 am

    மானமிகு பெண்புலி சந்தனமுல்லை அவர்களுக்கு

    //பெண்ணியப்புலிகள் எவரும் கண்ணெதிரே பெண்கள் இழிவுபடுத்தப்பட்டபோதோ, அவதூறு செய்யப்பட்ட போதோ எங்கு போயிருந்தார்கள்? அப்போதெல்லாம் சிறு கண்டனம் கூட தெரிவித்ததில்லை.///

    மறந்து விட்டு பேசாதீர்கள் உங்களுக்கு எதிரான புனைவு தாக்குதலில் நானும் புனைவு எழுதியவன்னுகு எதிராக கண்டனங்களை தெரிவித்து இருக்கிறேன் என்பதை மீள நினைவுப் படுத்துகிறேன்.

    நீங்கள் மறுக்கும் பட்சத்தில் வினவில் செங்கொடியில் பல தளங்களில் இருக்கும் என்னுடைய பின்னூட்டங்களை வரிசை படுத்தவும் தயார்

  55. சௌந்தர் on October 18th, 2011 3:01 am

    அவர் கூறியது தவறான கருத்துகள் தான் ஆனால் தமிழ்மணம் அதற்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை…

    பின்னுட்டம் இட்டவரே அந்த பதிவில் போய் மன்னிப்பு கேக்கலாம் அது அவர் விருப்பம் ….

    ஒருவரை வற்புறுத்தி மன்னிப்பு கேள் என்று சொல்ல கூடாது

    மன்னிப்பு என்பது தானாக உணர்ந்து கேட்க வேண்டும் …அது தான் உண்மையான மன்னிப்பு…

    இவ்வளவு பெரிய நிறுவனம் வந்து வருத்தம் தெரிவித்து இருப்பதை நான் பாராட்டுகிறேன்…

    இனி அவர் பின்னுட்டம் இடும் பொழுது கவனத்துடன் பின்னுட்டம் இடவேண்டும்…

    இந்த பிரச்சனையை இத்துடன் விட்டுவிடுவது தான் நலம்….

    இதுவும் கடந்து போகும்…

  56. ilaydhasan on October 18th, 2011 3:07 am

    //They do it free, and if they close it down, it s not they, but u who stand to lose. Beggars shd not b choosers, as the adage goes. U need them; but u pretend here they need u. Wht fun !

    ///

    oh come on, r u living in social networking world or your own cocoon. If no blogger is ready to be a member of an aggregator, what such aggregation will aggregate. Just their own ***t.

  57. Anonymous on October 18th, 2011 3:09 am

    தமிழ்மணம் மன்னிப்பு கேட்க முடியாது. தமிழ்மணம் மன்னிப்பு கேட்பது என்ற கேள்வியே இங்கே எழவில்லை

    நன்றி தமிழ் சசி அவர்களே.
    தமிழ்மணமோ மதிப்புக்குரிய பெயரிலி அவர்களோ எவரிடமும் மன்னிப் கேட்க வேண்டிய தேவையில்லை.
    நன்றி.

  58. ilaydhasan on October 18th, 2011 3:12 am

    //நான் தமிழ் சசி. தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவர். இந்தப் பிரச்சனையில் எனது தனிப்பட்ட கருத்தாக இதனை பதிகிறேன்…
    //
    like this remaining 2 also escape as it is my own opinion. Then who the hell we are talking to …I dont understand….keep your tamil upkeeping service.
    Bull***t.

  59. ilaydhasan on October 18th, 2011 3:26 am

    //அதே நேரத்தில் அந்தக் கருத்துக்களை அவர் தனி மனிதனாக சொல்ல அவருக்கு உரிமை உண்டு. தமிழ்மணம் நிர்வாகியாக இருக்கும் காரணத்தினாலேயே அவரது தனி மனித உரிமையை நாங்கள் மறுத்து விட முடியாது. சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினைச் சார்ந்தே மாற்று கருத்துக்களை நாம் முன்வைக்க உரிமை உண்டு.//

    Wow, I never expected Tamil Media International has such kind of ‘Conflict of Interest’ and “Reputation” policies in their employee hand book.

    Kudos. No need to talk any more. I understood whether it is internation company or not.

  60. puduvaisiva on October 18th, 2011 3:26 am

    இது சரியான விளக்கம் கிடையாது தமிழ்மணமே !

    “”Thank you very much.

    On behalf of tamilmanam
    -/tramanitharan, k.
    (-/பெயரிலி.)””

    உங்களுடன் இனைந்து பணியாற்றும் அந்த நபரிடம் இருந்து நீங்கள் விளக்கம் கேட்டு இருக்கலாம் அது தவறாக இருந்தால் அவர் மூலமாகவே மன்னிப்பு கேட்டு இருக்கலாம் அதை விட்டு பொத்தம்பொதுவாக உள்ள விளக்கம் தேவையற்றது.

  61. தமிழன் on October 18th, 2011 3:42 am

    @madala maraiyOn , சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

  62. G u l a m on October 18th, 2011 3:43 am

    எந்த மனிதருக்கு தம் வாழ்வில் சாந்தியும் சமாதானமும் அவசியமாகப்படுகிறோ
    அவர்கள் அனைவரும் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
    அன்பு தமிழ்மண நிர்வாகிகளுக்கு.,

    இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்.,

    இங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை., இன்னும் சொல்ல போனால் அந்த வார்த்தையை இஸ்லாம் அல்லாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் என் எந்த ஒரு பின்னூட்டத்தின் தொடக்கத்திலும் அவ்வாக்கியத்தை சேர்த்திருக்கிறேன்., ஏனைய இஸ்லாமிய பதிவர்களும் அப்படியே!

    ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை.,
    மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்
    //சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்..
    ஆக இங்கு வேண்டியது இரண்டு பதில்கள் தான்
    1.இந்த வார்த்தையே தேவையின்றி பயன்படுத்தியதற்காக சகோ ரமணிதரன் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்..!
    2. அதுவும் தமிழ்மணம் சார்பாக இடப்பட்ட பின்னூட்டமாக இருப்பதால் தமிழ்மணம் இதற்கு பொறுப்பான பதில் தரவேண்டும் !

    -இதுவரையிலும் தமிழ்மணம் நடு நிலையான திரட்டியாகவே தமிழ் மனங்களால் அறியப்படுகிறது என்பதையும் கவனத்தில் வையுங்கள்

  63. வெங்கட் on October 18th, 2011 3:43 am

    // அவர் எழுதிய கருத்துகளுக்கு அவர் தான்
    பொறுப்பேற்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்று
    தான் அவர் தனது வலைப்பதிவில் விளக்கமும்
    அளித்து இருக்கிறார். அதனை விடுத்து ஒட்டு
    மொத்த தமிழ்மணமும் பொறுப்பேற்க வேண்டும்,
    மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதெல்லாம்
    எந்த வகை நியாயம் என்பது எனக்கு புரியவில்லை. //

    அப்புடி போடுங்க சார் அருவாளை…

    இங்கே எல்லாம் ரயில் ஆக்ஸிடெண்ட்
    நடந்தா. ரயில்வே மந்திரி ராஜினாமா
    பண்றாரு..

    ” டிரைவர் தான்யா ஆகிஸிடெண்ட்
    பண்ணினான்.. அதுக்கு நான் என்ன
    பண்ண முடியும்னு..? ” இப்படி பல்டி
    அடிச்சி பேச தெரியாம..

  64. @ தமிழ் சசி,

    தாங்கள் நிர்வாகியாக அன்றி சாதாரண ஒரு பதிவராக அளித்துள்ள பதிலில் ஒப்புக்கொண்டவை:

    ////ஒரு தனிப்பட்ட பதிவராக சொன்னால் இரமணி கூறியது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பிரச்சனைக்குரிய வலைப்பதிவில் ”ஒரு” மறுமொழியை கூட அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அவரிடமும் கூறினேன். இங்கும் முன்வைக்கிறேன். அதே நேரத்தில் அந்தக் கருத்துக்களை அவர் தனி மனிதனாக சொல்ல அவருக்கு உரிமை உண்டு.////

    இப்போது என் கேள்விகள்:

    அப்படியெனில், ‘on behalf of Tamilmanam’ என்று அவர் நிறுவன அதிகாரத்தை தவறாக தன் தனிப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தி இருக்கிறாரா இல்லையா..?

    இப்படிக்கூட சொல்லாமல் நிர்வாக விஷயங்களை நிர்வாகியாகவே பேசியும் இருக்கிறாரா இல்லையா..?

    இதற்கெல்லாம் அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வில்லையே..?

    ஒரு பதிவராக உடன்படாமல் மாற்றுக்கருத்து கொண்டுவிட்டு, ஏன் ஒரு நிர்வாகியாக அவரின் கருத்துக்களோடு உடன் படுகிறீர்கள்..?

    ஏன் ஒரு நிர்வாகியாக அவரின் அக்கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வில்லை..?

    இப்பொது இந்த தளத்தில் நீங்கள் பதில் அளிக்க வேண்டியது ஒரு நிர்வாகியாக… பதிவராக அல்லவே..?

    தமிழ்மண பிளாக்கில் நிர்வாகிகள் பதிவராக பதில் அளிப்பதும்… மற்றவர்கள் தளத்தில் அவர்கள் ‘on behalf of Tamilmanam’ என நிர்வாகிகளாக பதில் அளிப்பதும்….காலக்கொடுமை… அல்லது வடிகட்டிய நயவஞ்சகம்..!

    //அவதூறு// —-இந்த சொல்லாடலுக்கு என் வன்மையான கண்டனங்கள். அவை அனைத்தும் ஆதாரபூர்வமான கடும் குற்றச்சாட்டுக்கள்.

    ///இறுதியாக தமிழ்மணத்தின் மீது ”பெருவாரியான” பதிவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சார்ந்தே நாங்கள் இயங்கி வருகிறோம்.///—இது உண்மை என்றால்…. அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள். தமிழ்மணம் அல்லது பெயரிலி இவருவரில் யார் குற்றத்துக்கு பொறுப்பேற்கபோகிறவர்..?

    இருவரும் பொறுப்பல்ல என்று தட்டிக்கழித்தால்….

    ///தமிழ்மணத்தின் மீது ”பெருவாரியான” பதிவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை/// —-தன் இறுதி மூச்சை விட்டுத்தொலைத்திருக்கும்..!

  65. @ சந்தனமுல்லை…

    ////எதிர்ப்பையும் கோபத்தைம் காட்டவேண்டிய பருண்மையான பல பிரச்சினைகள் நாட்டில் இருக்கும்போது ஒன்றுமில்லாததையெல்லாம் பூதாகரமாக மாற்றும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானதாக தெரிகிறது.////

    ஆமாம்… இந்த ஆபத்து பதிவுலகை நீங்கள் குலுக்கிய “பூக்காரி புனைவுக்கதை” பிரச்சினை காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டதே..?

    ///வெற்றுகோஷங்களையெல்லாம் புறந்தள்ளி///—அன்று இந்த பெண்புலி(?) அப்படி செல்லவில்லையே..? ரணகளப்படுத்தியதே..?

    தனக்கு வந்தால் மட்டும்தான் தலைவலி எனும் சுயநலமிகள் இங்கே நன்றாக வெளிக்கொனறப்படுகிறார்கள்.

    தங்களின் பெண்ணுரிமை பற்றிய சந்தர்ப்பவாதமும் நன்கு வெளிப்பட்டது; சகலருக்கும் நல்லதொரு படிப்பினை சகோதரி.

  66. Vijay on October 18th, 2011 6:55 am

    உங்க விளக்கதுக்குள்ளலாம் போகல, இந்த விளக்கம் நீங்க தனியா கொடுக்கறீங்களா இல்ல தமிழ்மணம் சார்பா கொடுக்கறீங்களா

  67. இரா. செல்வராசு on October 18th, 2011 7:06 am

    தமிழ்மணத்தின் மீது திட்டமிட்ட தாக்குதலாக இசுலாமியப் பதிவர்கள் மேற்கொண்டிருக்கும் பதிவுத் தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது. யாரோ ஓரிருவர் கூறிய ஒன்றை வைத்துக் கொண்டு அதனை முழுமையாகப் பார்க்காமல் தமிழ்மணத்தின் மீது அவதூறாகவும் வசைபாடியும் வருவது சரியல்ல.

    தமிழ்மணம் பதிவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் என்றுமே தலையிட்டதில்லை. அதனாலேயே, தமிழ்மணத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்பதும் இல்லை. ஆனால் இவ்விரண்டும் சில சமயம் முரண்பாடானதாகத் தோன்றலாம். அப்போது முடிந்தவரை சரியான முடிவினை எடுக்கவே முனைகிறோம். தமிழ்மணத்தின் மீது அவதூறாகவும் வெளியாகும் கருத்துக்களும் பல இன்னும் கூட வந்துகொண்டே தான் இருக்கின்றன. சிலசமயம் சில நிர்வாகிகள் இது கண்டு எதிர்வினை காட்டி விடுவதும் உண்டு. அதே சமயம், பதிவர்களின் கருத்துக்களுக்குச் சுதந்திரம் இருப்பது போல, நிர்வாகிகளுக்கும் அவர்களின் தனிநபர்/தனிப்பதிவர் சுதந்திரத்திலும் தமிழ்மணம் தலையிடுவதில்லை. தமிழ்மணத்தின் நிர்வாகி என்பதற்காகவே அவர்கள் தங்கள் தனிக்கருத்துக்களை ஒடுக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் அன்று.

    பலருக்கு வரலாறு தெரிவதில்லை. தமிழ்மணம் பதிவர்களால் நடத்தப்படும் ஒன்றே. இது யாரோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தால் ஆரம்பித்து நடத்தப்படுவதன்று. பதிவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் இதனாலும் நிர்வாகிகளுக்கும் உண்டு. இருப்பினும் இந்த வேறுபாடு அறியாத பலர் குழப்பமாக எண்ணி விடக்கூடும் என்பதால் இந்தக் கோட்டைக் கவனமாகக் கையாள முற்படுகிறோம். சிலசமயம் சென்ற வாரத்தில் இரமணிதரன் அவர்கள் பின்னூட்டங்களில் உண்டானது போல தமிழ்மணம் நிர்வாகியாக எழுதுகிறோமா, அல்லது தனிப்பதிவராக எழுதுகிறோமா என்பதில் குழப்பம் நேர்ந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு குழப்ப நிலை உண்டான காரணத்திற்காக மட்டுமே எங்களது வருத்தத்தைச் சென்ற பதிவில் தெரிவித்திருந்தோம். ஆனால், அப்பதிவிலும், திரு.இரமணிதரன் இவ்விரண்டு நிலைகளுக்கும் (தமிழ்மண நிர்வாகி, தனிப்பதிவர்) வேறுபடுத்திக் காட்ட முனைந்திருக்கிறார் என்பதைப் பொறுமையாகப் படிக்க முனைவோர் உணர முடியும்.

    நிற்க. இவ்விடத்தில் சாந்தியும் சமாதானமும் என்னும் இசுலாமியர் முகமன் என்று சொல்லப்படும் ஒன்றைக் கிண்டல் செய்துவிட்டார் என்பது முன்வைக்கப் படுகிறது. ஒன்று, அது அவருடைய தனிக்கருத்து. தமிழ்மணத்தின் கருத்து அல்ல. இரண்டாவது, தமிழில் பொதுவான ஒரு சொற்றொடரை ஒரு சாரார் தமக்கே உரியதான ஒன்றாக எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் புரியவில்லை. இத்தனைக்கும் அப்பதிவில் இசுலாமியக் கருத்துக்கள் ஏதுமில்லை. இதனால், கிடைத்த ஒன்றை வைத்துக் கொண்டு பிரச்சினை உண்டாக்குதல் தான் தெரிகிறது. இப்போதும், இவை குறித்துத் தமிழ்மணம் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், வீணில் தமிழ்மணத்தை உள்ளே இழுத்திருப்பதால் இங்கே இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. தவிர, இதனால் முழுமையான விவரம் அறியாதோரும் தவறான புரிதலுக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் இவ்விளக்கம் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

    இப்போதும் சிறுபான்மைக் கருத்துக்களும், ஒடுக்கப் பட்ட குரல்களும் தடையின்றி ஒலிக்க இயலும் ஒரு தளமாகத் தான் தமிழ்மணத்தைப் பார்க்கிறோம். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்திப் பிரச்சார நோக்கத்திற்கும், மொக்கைகளுக்கும், உரிமையின்றி வெட்டி ஒட்டும் பதிவுகளை வளர்ப்பதற்கும் பயன்படுத்தி வருவதை எங்கள் கொள்கைக்கு மாறாகப் பார்க்கிறோம். தமிழ்மணத்தின் இக்கொள்கைக்கு ஏற்பு இல்லாதவர்கள் எவ்விதத் தயக்கம் இன்றியும் தாமாக வெளியேறிவிடலாம். அல்லது வெளியூடகங்களில் இல்லாத ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு காத்திரமான பதிவுகளை எழுதப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை விடுத்து, மிரட்டலாகவும், அவதூறாகவும் தமிழ்மணம் மன்னிப்புக் கேட்க வேண்டும், இரமணிதரனை நீக்க வேண்டும் என்று கேட்க உங்களுக்கு உரிமையில்லை. தமிழ்மணம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை; கேட்காது என்று அறுதியாகக் கூறுகிறோம்.

    ஒவ்வொரு முறையும் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவுகளில் ஒரு சீர்மை கருதிச் சில மாற்றங்களை ஏற்படுத்த முனையும்போதும், தனது கொள்கை முடிவுகளைச் செப்பனிட்டு, அதன் காரணமாகச் சில பதிவுகளை நீக்க முனையும் போதும் இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதே உண்மை. இப்போதும், சாதி/மத/சோதிட/மொக்கை/வெட்டியொட்டுப் பதிவுகளை நீக்குகிறோம் என்று அறிவித்ததில் இருந்து எங்களோடு மின்னஞ்சலிலும் வாதாடி வந்த சிலர் இவற்றின் பின்னணியிலும் இருப்பதை உணர முடிகிறது.

    பதிவர்களால் திரட்டியா, திரட்டியால் பதிவர்களா என்று உதார் விடும் சவால்களுக்குப் பதில் சொல்லவும் எங்களுக்கு விருப்பமில்லை, நேரமில்லை. எங்கள் நேரமும் உழைப்பும் இப்படி வீணாவதில் உடன்பாடில்லை. தமிழ்மணம் ஒரு தனித் தளம். அதற்கெனச் சில நெறிமுறைகள் சட்டதிட்டங்கள் உண்டு. உங்களுக்கு அது ஏற்புடையதாய் இருந்தால் சேர்ந்திருங்கள். இல்லையேல், உங்கள் தனி வழி பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருங்கள். இதில் யாருக்கும் எந்தக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. இதில் தமிழ்மணத்தின் அராசகம், கொள்ளை என்று ஏன் அவசியமின்றி ஏசிக் கொண்டு இங்கேயே இருக்கிறீர்கள்?

    இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். தனியொரு பதிவரைப் போன்றே தமிழ்மணத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் அவரவர் அரசியல், ஆன்மீகம், மொழி, மத, சாதி, ஆசாபாச நிலைப்பாடுகள் உண்டு என்றாலும், தமிழ்மணம் என்னும் இவ்வமைப்பு அதனால் பாதிக்கப் படாமல் இயன்றவரை தன் நிலையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று இத்தனையாண்டுகளில் முனைந்து அதில் வெற்றி கண்டே வந்திருக்கிறோம். அதில் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து இணைந்திருப்பதும், நம்பிக்கையின்றி வெளியேறுவதும் உங்கள் முடிவினில் தான் இருக்கிறது.

  68. paramasivam on October 18th, 2011 7:55 am

    தமிழ் வளர்ப்பதும் தமிழ் இனம் காப்பதும்தான் தமிழ்மணத்தின் தலையாய பணி.
    தமிழ், தமிழன் என்று சொல்லிக் கொண்டு உள்ளே புகுந்து சாதி மத வெறிக்குத் தூபம் போடுவோரைப் புறக்கணிக்க வேண்டும்.
    மத வெறியர்களிடம் தமிழ்மணம் மன்னிப்புக் கேட்பது மாபெரும் குற்றம்.
    தமிழின் மீது ஆணையிட்டுத் தொடர்ந்து உங்கள் நெறியில் செல்லுங்கள். பல்லாயிரவர் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம்.

  69. sandanamullai on October 18th, 2011 8:13 am

    @ஹைதர் அலி: பெண்களுக்கெதிராக புனைவு எழுதும் அரசியலை, ஆணாதிக்கத்தை உணர்ந்து கண்டித்த ஹைதர் அலிக்கு வாழ்த்தும் நன்றியும். “சாந்தி” என்ற் சொல்லில் பெண்ணை உருவகப்படுத்தி தாக்கியதாக சொல்லிவந்த சில கமெண்டுகளை பார்த்தேன். அதை நீங்கள் எழுதியிருந்தீர்களா எனத்தெரியாது. ஆனால், அப்படி கோபப்படுபவர்கள், நேரடியாக பெண்கள் மீது தாக்குதல் நிகழும்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மதரீதியான தாக்குதல் என்று குற்றஞ்சாட்ட பெண்ணுரிமை போர்வையில் வரும் சந்தர்ப்பவாதத்தையே சுட்டிக்காட்டினேன்.

    @ஆஷிக்:
    “பூக்காரி புனைவு” தங்களுக்கு ஒன்றுமில்லாததாக தோன்றினால், நல்லது, அதற்கு மேல் உங்களிடம் பேச ஒன்றுமில்லை. என் சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி.

  70. பெண் on October 18th, 2011 8:17 am

    @ஹைதர் அலி பெண்களுக்கு பர்தா அணிவதையும், இசுலாமில் உள்ள பெண்களுக்கு எதிரான பிற்போக்குதனங்களையும் முதலில் எதிர்த்து பழங்குங்கள். அதன் பிறகு பெண் விடுதலை பேசலாம்.

  71. madala maraiyOn on October 18th, 2011 8:31 am

    oh come on, r u living in social networking world or your own cocoon. If no blogger is ready to be a member of an aggregator, what such aggregation will aggregate. Just their own ***t.
    //

    Such a situation will never occur. If a social network loses its popularity, that s due to some techinical deficiencies or lack of gadgets therein. A network like TM wont go that way. Tamil bloggers r not uniform. They r A bewidering variety.

    If all Muslim bloggers keep away from TN, that does only good to TM because TM will b free from religioius mumbo jumbo. Some useful time can be found in TM w/o these religious mumbo jumbo. Muslim blogs and also other religious blogs r making TM a bad experience to read

    Just lay off, all of u, to verify my statement that TM will go on for ever as glororious as ever.

    All Muslim bloggers open their own aggregator and no one but u will enter there. That s very very good. When r u going to do that ?

  72. பூந்தி on October 18th, 2011 8:33 am

    சாந்தி உண்டாகட்டும் என்று ஆசீர்வதிக்கும் சாமியார்களை எதிர்த்து ஆஷிக் எப்போ போராடப் போகிறார்? எப்போ மன்னிப்பு கேட்க வைக்க போறார்?

  73. குடுகுடுப்பை on October 18th, 2011 8:47 am

    தமிழ்மணத்தின் தொண்டு புரிபவர்கள் தொடர்வார்கள், சசி உள்ளிட்டோரின் கடும் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

  74. suryajeeva on October 18th, 2011 9:38 am

    //They do it free, and if they close it down, it s not they, but u who stand to lose. Beggars shd not b choosers, as the adage goes. U need them; but u pretend here they need u. Wht fun !//
    dear
    madala maraiyan,
    we are not beggars, if u think so you are, then i think it is better you should review your mind…

    and tamil manam is also responsible for publishing this comment and hurting the sentiments of bloggers
    thank you

  75. வருண் on October 18th, 2011 9:52 am

    This blog has allowed Ilayadhasan to call me a clown! If I dont respond, people might start believing that varun is indeed a clown. I hope this blog will allow me to respond him. Thanks!

    ———————

    ***if you want to express your opinion , just express it, who asked you to add your stupid adjectives? ***

    Mr. Ilayadhasan:

    This is not the right place to start a war with you! Nevertheless, Are you telling me when I should use what adjective? LOL

    Let me ask the same, WHO ASKED you to use “STUPID” as an adjective in your above sentence? LOL

    You see, you dont even know what you are doing! And you advise me how I should behave? BTW, I am not in TM committee, so you cant come after me telling some worthless accusations. It is my freedom of speech as a blogger. You cant interfere with that. Not only you, even your GOD!

    ***yes Varun, biggest clown like you does not have one word ,one stand…***

    I am not a RELIGIOUS FANATIC to go on interpret everything based on religion and giving “religious painting” to any nonsense or for any casual statement made in an argument- not intended for making fun of any religion. Then, go on group up people based on religion and come here ask for an apology. And that to for a “casual statement” using SANSKRIT words like “shanthi” !

    Yeah, I dont have THE SAME stand for every issue based on my “religion”. My stand depends on the particular issue and of course I analyze the issue RATIONALLY not religiously!

    ***in circus, clown does all kinds of tricks than any body else…you are that kind…your jalra is reaching the sky do you know.***

    Circus clowns are professionals. They know what they are doing and they are good at it. Religious clowns (it does not matter which religion they belong to) , on the other hand, are irritating me rather than being funny as they are amateurish and IRRATIONAL always. Let me be a circus clown. You be whatever you want to be! Of course that is your freedom to choose!

    **like this remaining 2 also escape as it is my own opinion. Then who the hell we are talking to …I dont understand…***

    You dont seem to UNDERSTAND anything properly. Nobody can help you!

    ***.keep your tamil upkeeping service.
    Bull***t.***

    They will do much much better without you being part of TM! Goodbye and good luck, genius!

    -வருண்

    p.s: Now that I am in a situation like “peyarili” was. When people start attacking me like this guy ilayadhasan. I have to respond like peyarili did. This is how all the internet arguments takes turns.

  76. சொ. சங்கரபாண்டி on October 18th, 2011 9:57 am

    நானும் தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவன். தமிழ்மணம் வாயிலாக சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லியாகி விட்டது. தமிழ்மணம் நிர்வாகியான திரு. இரமணிதரன் தன்னுடைய சொந்த முகவரி மூலம் இட்ட கருத்துக்களை அவருடைய சொந்தக் கருத்துக்களாகவே கருதவேண்டும். தமிழ்மணத்தின் நிர்வாகி என்று குறிப்பிட்டு அவர் ஏற்படுத்திய குழப்பத்திற்கு தமிழ்மணம் வருத்தமும் தெரிவித்து விட்டது.

    * * *

    இனி இப்பொழுதைய சிக்கல்கள் பற்றிய என்னுடைய சொந்தக் கருத்துக்களைச் சொல்லி பொதுப்படையான வலைப்பதிவுலகம் குறித்த என்னுடைய கவலையையும் சுருக்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இந்தச் சிக்கல் தொடர்பாக வந்த ஒரு சிலவற்றைப் படிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. அப்படியிருக்க அனைத்தையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்க முடியாது. இங்கு வைக்கப் பட்டிருக்கும் பெரும் குற்றச்சாட்டுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

    1. கும்மிப் பதிவுகளை தமிழ்மணம் நீக்கியதும் எழுதப்பட்ட நையாண்டிப் பதிவும் அதில் இரமணியின் எதிர்வினையும்:

    மற்றவர்களை நையாண்டியாக எழுதவும் அனானிப் பின்னூட்டங்களை அனுமதித்தும் அரசியல் செய்பவர்கள் இரமணியின் எதிர்வினையையும் அவர்களே எதிர்கொள்ள வேண்டும். தனிப்பட்ட என்னுடைய கருத்து, இரண்டு பேருடைய செயல்களுமே தவறானவை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சமூகத்தைப் பற்றி நாகரீகமாக விவாதிக்கவும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் வலைப்பதிவு போன்ற அருமையான கட்டற்ற ஊடகங்களைப் பயன்படுத்தாமல் பொதுத்தளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறையில்லாமல் இப்படி அருவருக்கத் தக்க சண்டைகளை வலைப்பதிவர்கள் (இரமணி உட்பட) நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பல்வித திறமைகளைக் கொண்ட இரமணி இப்படி நடந்து கொண்டது என் போன்ற நண்பர்களுக்கெல்லாம் ஏமாற்றமே.

    ஆனால், அவருடைய திறமைகளையெல்லாம் தன்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்கோ, சுயதம்பட்டத்துக்கோ துளியும் பயன்படுத்தத் தெரியாத இரமணி தமிழ்மணம் என்ற பொதுச்சேவை அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்று அர்ப்பணிப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது. அவருடைய படைப்புத்திறனெல்லாம் வெளியே வர கால அவகாசமில்லாமல், மொக்கைகளை எழுதுபவர்களுக்காக உழைக்க வேண்டுமா என்ற கேள்வியே என்னிடம் அடிக்கடி எழுவதுண்டு. அவர் மட்டுமல்ல தமிழ்மணம் குழுவில் உள்ளவர்கள் எல்லோருமே ஒருகாலத்தில் அருமையாக எழுதிக்கொண்டிருந்தவர்கள்தாம், இப்பொழுது எழுத நேரமில்லை என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியொரு விரக்தியான சூழலில்தான் அவர் எல்லைமீறி நடந்து கொண்டார் என்ற என்னுடைய புரிதலை நான் இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    2. இசுலாமியப் பதிவர்கள்
    இரமணி எழுதியது இசுலாமிய முகமனை நையாண்டி செய்தா, இல்லையா என்பதை விடுங்கள். அவர் எழுதியது தவறானது. இதுபோன்று பொதுவில் எழுதுவதை அவர் கைவிட வேண்டுமென்று தனியேயும், இங்கேயும் கோரிக்கை வைக்கிறேன்.

    அடுத்து, அவர் இசுலாமிய முகமனை மனதில் வைத்து எழுதவில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். அவர் சொல்வதை நம்பாமலிருப்பதை விட, அதை நம்புவதற்கே ஆதாரங்கள் உள்ளன. கும்மிப் பதிவிலுள்ள அவருடைய எந்தப் பின்னூட்டங்களும் இசுலாமியப் பதிவர்களைப் பற்றியில்லை. இசுலாமியப் பதிவர்களுடன் எழுந்த சிக்கலும் நட்சத்திர வாரத்தோடு விளக்கமாக எழுதி தீர்க்கப்பட்டது. இரமணி அவருடைய விளக்கப்பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் இலங்கையில் போலியாகப் பயன்படுத்தப்படும் வாசகங்களைப் போல் அப்பதிவில் ஒரு சிலர் நடிப்பதை நையாண்டி செய்து எழுதியதாகவே தெரிகிறது. அவருடைய எழுத்துக்களைப் படித்தவர்களுக்குத்தான் தெரியும், அவர் ஈழத்து வழக்குகளையும், சொற்களையும் அதிகமாகப் பயன்படுத்துபவர் என்று. சில ஆண்டுகளாக நண்பராயிருந்தும் அவர் எழுத்துக்கள் இன்னும் எங்களுக்கே முழுவதும் புரிவதில்லை. மேலும் இரமணியின் தனிப்பட்ட வாழ்க்கையை (தகவல்களை) அறிந்த எங்களுக்கு நன்றாகத் தெரியும், அவர் இசுலாமிய முகமனை நையாண்டி செய்திருக்க முடியாதென்று.

    எனவே அவர் இசுலாமியர்களின் முகமனை நையாண்டி செய்தார் என்பது தவறான புரிதல். இசுலாமியப் பதிவர்கள் தமிழ்மணத்தின் மேலுள்ள கோபத்தினால் இப்படித் திரிக்கிறார்கள் என்று சொல்வது எப்படி அபத்தமோ அதே போல் இரமணி இசுலாமியர்களின் முகமனை நையாண்டி செய்து இதை எழுதினார் என்பது.

    இறுதியாக இசுலாமிய நண்பர்கள் இதைவைத்து ஒரு குழுமனப்பான்மையை உருவாக்குவது பதிவுலகச் சூழலில் அவர்களின் மீதான அவநம்பிக்கை வளர்வதில்தான் முடியும் என்று நான் பயப்படுகிறேன். தயவுசெய்து இதைக் கைவிடுங்கள். தமிழ்மணம் இந்த விதயத்தில் தவறாக நடந்து கொண்டது என்று கருதினால் தமிழ்மணத்திலிருந்து விலகி விடுங்கள். இதுதான் நான் வைக்கும் வேண்டுகோள்.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

  77. அப்துல் பாஸித் on October 18th, 2011 10:36 am

    @madala maraiyon

    //Beggars shd not b choosers, as the adage goes.//

    well said.

    can u answer me, who asking donations?

    @Tamilmanam Admin

    Why dont you publish this?

  78. வருண் on October 18th, 2011 11:16 am

    ***அப்துல் பாஸித் on October 18th, 2011 10:36 am

    @madala maraiyon

    //Beggars shd not b choosers, as the adage goes.//

    well said.

    can u answer me, who asking donations?***

    I guess those donations is to “feed” “beggars” like me and other bloggers who have a Tamil blog and expects (begging) TM to “feed” us. Certainly not for donating and feeding the RELIGIOUS FANATICS who pollute TamilmaNam and Tamil recently!

  79. hanif on October 18th, 2011 11:23 am

    பெயரிலி இஸ்லாமிய மனதை மட்டும் இழிவு படுத்தவில்லை. அவரின் அதிகமான பின்னூட்டம் மிக்க தரக்கீழாக இருந்ததை பெயரிலிக்கு வேண்டியவர்களை தவிர அனைவரும் ஒப்புக்கொள்வர். ஒருமுறை on behalf of TamilManam என்று குறிப்பிட்டாலும் பின்னரும் ஒரு நிர்வாகி என்ற அதிகார முறையிலே பின்னூட்டம் இட்டதை வாசிக்க தெரிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர். பெயரிலிக்கு சார்பாக வாதிட்டவர்கள் உண்மையிலே சுய அறிவுடன் அப்பதிவை வாசித்தார்களா என்று தெரியவில்லை

  80. hanif on October 18th, 2011 11:26 am

    தமிழ்மணத்தின் பெயரில் பின்னூட்டம் இட்ட யாரோ ஒருவரை அது கண்டிக்க தேவை இல்லை ஆனால் அதை செய்த தன் நிர்வாகியை கண்டிக்காமல் ஏன் வக்காளத்து வாங்க வேண்டும்
    1.அவர் செய்கயை கண்டித்து ஒரு பதிவிட வேண்டும் or
    2.அவர் சார்பாக மன்னைப்பு கேட்க வேண்டும் or
    3.பெயரிலி தானே மன்னிப்பு கேட்க வேண்டும்
    இதுவே சாதாரண மனித பண்பாடு
    எங்கள் பதிவர்கள் தமிழ் மணத்தில் தங்கியில்லை
    தமிழ் மணம் தான் பதிவர்களில் தங்கியுள்ளது.
    மிக்க நாகரிகமாக பின்னூட்டமிடும் செல்லக் குழந்தையை கொண்ட திரட்டியின் கீழ் தம் பதிவை சமர்ப்பிக்க இங்கே யாரும் அலையவில்லை. அவசியமும் இல்லை

  81. hanif on October 18th, 2011 11:28 am

    தமிழ் மணத்திற்கு சாந்தியும் சமாதானமும் தேவை இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளது. அதை தான் திரு.பெயரிலி விவரித்து அழகு படுத்தியிருக்கிறார். எனவே இதன் பின்னால் தமிழ்மணத்தின் பங்கு நிச்சயம் சிறிதளவேனும் உள்ளது

  82. VANJOOR on October 18th, 2011 11:43 am

    திரு.சங்கரபாண்டி அவர்களின் விளக்க‌த்திற்கு நன்றி.

    அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வரஹ்)

    ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே ! வாச‌க‌ர்க‌ளே !!

    இனிமேலும் இதுபோன்ற‌ நிக‌ழ்வுக‌ள் த‌மிழ்ம‌ண‌த்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இட‌ம் பெறாது என பரிபூரணமான ந‌ம்பிக்கையுடன்

    மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த‌ பாதையில் பயணிப்போம்.

    நாம் சந்திக்கும் பல இடங்களில் ஒன்றாக தமிழ்மணமும் வ‌ழக்க‌ம் போல் இருக்க‌ட்டும்.

    த‌ன்மான‌ உண‌ர்வுட‌ன் இதுவ‌ரையிலும் த‌மிழ்ம‌ண‌த்திலிருந்து தானாகவே வில‌கிக்கொண்ட‌ அனைத்து சக‌ முஸ்லீம் ப‌திவ‌ர்களும் மீண்டும் த‌மிழ்ம‌ண‌த்தில் இணைந்து கொள்ளுங்க‌ள்.

    ந‌ல்லெண்ண‌த்தின் அடிப்ப‌டையில் நேச‌ க‌ர‌ம் நீட்டும் செய‌லாக‌ இதுகாறும் தானாக‌வே வில‌கிக்கொண்ட‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களை

    த‌மிழ்ம‌ண‌ம் அடையாள‌ம் க‌ண்டு த‌மிழ்ம‌ண‌ம் தன்னிச்சையாக அவர்களை தமிழ்மனத்தில் இணைத்து திரு.ச‌ங்க‌ர‌பாண்டிய‌ன் உள்ளிட்ட‌ த‌மிழ்ம‌ண‌ நிர்வாகிக‌ளின் நேச‌க்க‌ர‌த்தை வலுவூட்ட‌லாமே ..

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

  83. பீர் | Peer on October 18th, 2011 12:01 pm

    @சொ. சங்கரபாண்டி,

    இரமணி ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துபவரல்ல என்பதாலேயே அந்தச் சொல்லாடலின் விளக்கத்தை பலர் பதிவிட்டு கேட்டிருக்கிறார்கள். அவருடைய அந்த சொல்லாடலும் அதைத் தொடர்ந்தான பல பின்னூட்டங்களும் பலருக்கும் அதிர்ச்சி தந்தது போலவே எனக்கும் தந்தது.

    சாந்தியும், சமாதானமும் புரியாமல் விளக்கம் கேட்பவர்களுக்கு சற்று விளங்கும்படியாகவே இரமணியோ, உங்களில் யாரோ இது ‘அந்த’ சாந்தியும் சமாதானமும் அல்ல என்று சொல்லியிருந்தால் இது அப்போதே முற்றுப்பெற்றிருக்கும்.

    இத்தவறான புரிதலின் வினை அறுக்க, எப்போதும் போல சில சைக்கோ அனானிகளின் விளையாட்டு ஆரம்பமாகியிருக்கிறது. அதையும் தமிழ்மணம் புரிந்துகொள்ளும் என்றே நம்புகிறேன்.

    ஆனாலும், தமிழ் சசி குறிப்பிட்டிருக்கும் ‘”பெருவாரியான” பதிவர்கள் யார் என்பது இன்னும் எனக்கு புரிபடவில்லை. 🙁

    உங்களுடைய தனிப்பட்ட பதிலில் தமிழ்மணத்தை கட்டி இழுக்கும் முதிர்ச்சி தெரிகிறது.

    நன்றி, வாழ்த்துக்கள்.”

  84. Kannan on October 18th, 2011 12:32 pm

    Everybody wants a piece of the cake.

    Pannikutti Ramsami : The subject blog on Tamilmanam was written without knowing what would happen. It was an innocent post IMHO. Understandable that he is fanning this issue wherever h goes.

    Ramanidhanan: It was not wise on the part of Ramanidharan to use unparliamentary words in his comments. As an admin of tamilmanam, he should have known his responsibility.

    TamilManam : Easily it could have solved the problem amicably, but they are escalating it, for they have to defend Ramanidharan.

    Idea Mani : A very shrewd blogger. He used this opportunity to extract the best of the situation. He does not want to leave any stone unturned to take advantage of the situation. Cunning indeed!!

    Muslim bloggers: They want a piece of action. Bigtime. Its now or never. Somebody has said Shanthi and samadhanam. So, let us teach him a lesson. If a muslim blogger does not condemn this now, he will be looked down at. Thats why you find so many of muslim bloggers against tamilmanam. Each portraying how loyal they are to the community.

    Vairai Satish : Satish you are a kid. Dont spoil yourself spending your valuable time here. Your exams are near.

    Astro Satish : The blogger, rejected by tamilmanam, is angry to the core on tamilmanam. So he tries to escalate the problem in all relevant blogs.

    So what is this to the common reader : Free Entrertainment.

    What is not realized is that Tamilmanam is a non-profit portal. I know the difficulties of running a website. They dont have enough revenue to support this site. Somebody is paying from his pocket. Its easy to comment on Tamilmanam, but it takes guts to run one like this. Easily they could have made this a cash cow. I am sure they know how. But bloggers should not sharpen their axe on the tree that fed them.

    Bloggers : Its no loss to tamilmanam if you go. Its no loss to you too if you go. So just leave if you have to. Creating a scene here is very pathetic.

    Writer Sujatha rightly said about the five minute fame 🙂

  85. ஆதிவராகமூர்த்தி on October 18th, 2011 12:36 pm

    வாஞ்சூர் அய்யா அவர்களின் வேண்டுகோளை ஏற்று இஸ்லாமிப் பதிவர்கள் தங்களின் பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்ளலாமே?

  86. தமிழ் சசி / Tamil SASI on October 18th, 2011 12:49 pm

    ஆனாலும், தமிழ் சசி குறிப்பிட்டிருக்கும் ‘”பெருவாரியான” பதிவர்கள் யார் என்பது இன்னும் எனக்கு புரிபடவில்லை.

    *************

    நீங்கள் எதனை சார்ந்து இந்தக் கேள்வியினை எழுப்புகிறீர்கள் என்று புரிகிறது. எப்பொழுதும் இத்தகைய சலம்பல்களைச் செய்பவர்கள் மிகவும் சிறிய ஒரு பிரிவினர் தான். மிகுதியான பதிவர்கள் அமைதியாக தங்கள் கருத்துக்களை பதிந்து வருபவர்கள். இந்த சிறிய பிரிவினர் தான் பல்வேறு காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி வருபவர்கள். ஆட்களும், பிரச்சனைகளும் மட்டும் தான் மாறுகின்றன. ஆனால் சல்ம்பல் ஏற்படுத்துபவர்கள் மிகச் சிறிய ஒரு பிரிவினர் தான்.

    இந்த அர்த்தத்தில் தான் கூறினேன். நீங்கள் நினைக்கும் சிறுபான்மை (இஸ்லாமியர்), பெரும்பான்மை (இந்துக்கள்) என்பது அல்ல.

    என் வலைப்பதிவை சென்று பார்த்தால் (http://blog.tamilsasi.com) உங்களைப் போன்ற முஸ்லீம்கள் கூட எழுதாத அளவுக்கு காஷ்மீரின் விடுதலைக் குறித்தும், பாலஸ்தீன விடுதலைக் குறித்தும் எழுதியிருக்கிறேன். சங்பரிவார் கும்பலை எதிர்த்து எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

    வலைப்பதிவில் சமீபகாலங்களில் வந்து விட்டு எங்களைப் போன்றவர்கள் யார் என்று கூட தெரிந்து கொள்ளாமல் போகிற போக்கில் ஏதாவது கருத்துக்களை வீசிச் செல்வது பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. நாங்களும் வலைப்பதிவர்கள் தான். 2004ல் இருந்து வலைப்பதிவில் இருக்கிறேன். இது போன்ற பலப் பிரச்சனைகளைப் பார்த்தும் இருக்கிறேன். எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்று எதிலோ முடிவடையும் இந்த வலைப்பதிவு சண்டையிட ஒரு காலத்தில் நேரம் இருந்தது. தற்பொழுது இல்லை.

    ஏதாவது ஒற்றை வரியை பிடித்து, தவறாக புரிந்து கொண்டு, அதைப் பிடித்தே தொங்கிக் கொண்டு பெரிய அளவில் பிரச்சனை செய்ய உங்களுக்கு வேண்டுமானால் நேரம் இருக்கலாம். எனக்கு இல்லை

    ந‌ன்றி…

  87. பூந்தி on October 18th, 2011 12:58 pm

    அதெப்படிப்பா இப்படி பல்டியடிக்கறீங்க? இதுல அதிரிச்சி அடைய என்ன இருக்குன்னு தெரியல. நீங்களா ஒன்னு கற்பனை பண்ணிக்குவீங்க, அதுக்கு மன்னிப்பு கேளுன்னு சாந்தி, சமாதானம்னு பேசிக்கிட்டே மிரட்டுவீங்க!! இப்படி ஒவ்வொன்னுத்துக்கும் அந்த சாந்தி இல்ல, அந்த சமாதானம் இல்லன்னா சொல்லீட்டிருக்கமுடியும்? ஆமா, இங்க இவ்ளோ பேசறவங்க யாரும் ஏன் ஜெய்லானியையோ என்னன்னே தெரியாம கண்டனம் பதிவு எழுதுனவங்களையோ ஒரு வார்த்தை கேக்காத மர்மம்தான் என்ன?

  88. ஹைதர் அலி on October 18th, 2011 1:01 pm

    நன்றி சகோதரர் சங்கரபாண்டி அவர்களே

    //இசுலாமியப் பதிவர்கள் தமிழ்மணத்தின் மேலுள்ள கோபத்தினால் இப்படித் திரிக்கிறார்கள் என்று சொல்வது எப்படி அபத்தமோ //

    சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் ஆம் தமிழ்மணத்தின் மீது தனிப்பட்ட எந்த கோபமும் எங்களுக்கு இல்லை

  89. மீஞ்சூர் on October 18th, 2011 1:04 pm

    அவங்க செஞ்ச ஒரே நல்ல காரியமா இருந்துட்டு போவட்டுமே? எதுக்கு போனவீய்ங்களை திரும்ப கூப்பிட்டுக்கிட்டு? வான்சூர், கொஞ்சம் யோசிக்கலாமே!

  90. Uthayam on October 18th, 2011 1:32 pm

    தமிழ் சசி யின் விளக்கத்தை விட சங்கரபாண்டியின் விளக்கத்தில் உண்மை பளிச்சிடுகிறது. ரமணி அந்தப் பொருள்பட கூறியிருக்க மாட்டார் என்றே நம்புவோம். இனியாவது நிர்வாகிகள் தங்கள் சொந்த கருத்துக்களை தமிழ்மணப் பெயரில் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மறப்போம் மன்னிப்போம் என்று முஸ்லிம் பதிவர்களும் பெருந்தன்மையாக விட்டு தள்ளுவது நல்லது.

    ஏனென்றால்.. நிஜமான துவேஷவாதிகள் முஸ்லிம்களின் இந்த குழுமனப்பான்மையை வைத்து அவர்களை தனிமைபடுத்த முயன்று வருகின்றனர். மீண்டும் சங்கரபாண்டிக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன். “ஒரு வார்த்தை கொல்லும்;ஒரு வார்த்தை வெல்லும்” என்பார்கள். கொல்லும் வார்த்தையை மறந்து மன்னித்து வெல்லும் வார்த்தை வென்றெடுத்து தமிழ்மணமும் அதன் பதிவர்களும் மீண்டும் சகஜ நிலைக்கு வர எத்தனிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  91. மாயன் on October 18th, 2011 2:13 pm

    நான் 6 மாதமாகவே எல்லா ப்ளாக்குகளையும் படித்து வருபவன். நக்கலும் நையாண்டியும்…இரட்டை அர்த்தமும் பதிவுகளிலும் பின்னூட்டத்திலும் இல்லாததா? எல்லா மதத்தைப் பற்றியும் எழுதாத வார்த்தையா…தமிழ்மணத்தை பற்றி எழுதினால் அந்த பதிவை மட்டும் தானே எடுக்க வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தி இருக்கவேண்டும்…அதோடு ஏதோ புனிதப் பயணிகள் போல ‘கெட்ட வார்த்தை பேசிட்டான்….பேசிட்டான்…என்று புலம்புவதும்…மதத்தை புண்படுத்திவிட்டான் என்று taking advantage of the situation எடுத்துக்கொண்டு மற்றவரை ரேக்கிவிடுவதுமாய்…எல்லோரும் அவரவர் பதிவுகளிலும் அநுமதித்த பின்னூட்டத்திலும் எப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று search செய்து பார்க்கவும் பதிவுலகம் எப்படி என்று…ஒரு பதிவுக்காக பளாக்கை நீக்க கூடாது என்பது மட்டுமே உண்மையான பிரச்சினை…

  92. silent onlooker on October 18th, 2011 2:19 pm

    //ஆனாலும், தமிழ் சசி குறிப்பிட்டிருக்கும் ‘”பெருவாரியான” பதிவர்கள் யார் என்பது இன்னும் எனக்கு புரிபடவில்லை. //

    certainly not the bunch of folks that run around like headless chicken.
    ———————–
    I took the pain to go through the entire replies in terror kummi post.

    peyarili identified himself as admin *only* in the initial responses while objecting to certain portions of the original post.

    What started as a decent reply turned into a nasty duel when the terror-kummi and his gang continued their mock in comments.

    It is unfortunate when tamil(nadu) crowd thinks கூட்டத்துல தர்ம அடி போடறது போல மகிழ்ச்சியானது வேறொண்ணும் இல்லன்னு.

    Little they anticipated that peyarili would pay them back by the same coin.
    Those that know past history would not be surprised by peyarili retorts.
    May be it is shock to the new crop of bloggers that joined post 2009.

    Terror-kummi and his sidekicks that claims a moral high pedestal on peyarili’s decency level should realize that it is their provoking that lead to this sorry situation.

    Hope they swallow this bitter pill and move on in their blogging life.

    That alleged *phrase* was used entirely in a different context and fellow islamic bloggers fails to understand a word/phrase may have entirely different meaning in a different context.

    The side-show of boycott seem to be the residual anger in response to banning blogs that propagate institutionalized religions. The boycott move in my opinion is unnecessary which was constructed upon whipped up passion.

  93. பீர் | Peer on October 18th, 2011 3:35 pm

    @தமிழ் சசி,

    ஏதாவது ஒற்றை வரியை பிடித்து, தவறாக புரிந்து கொண்டு, அதைப் பிடித்தே தொங்கிக் கொண்டு பெரிய அளவில் பிரச்சனை செய்ய உங்களுக்கு வேண்டுமானால் நேரம் இருக்கலாம். எனக்கு இல்லை

    🙂 🙂

    பதிவுகளில் பின்னூட்டம் எழுதியே மாத/வருடங்களாகிறது. எனக்கும் விருது தந்து கவுரவித்த தமிழ்மணத்திற்கு என் எண்ணத்தைச் சொல்லவே இங்கு வந்தேன்.

    இனி சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

  94. tamilan on October 18th, 2011 4:18 pm

    //
    வாஞ்சூர் அய்யா அவர்களின் வேண்டுகோளை ஏற்று இஸ்லாமிப் பதிவர்கள் தங்களின் பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்ளலாமே?
    //

    அடப்பாவீங்களா, நீங்கள்லாம் தமிழ்மணத்துல‌ இருக்க போறீங்களா ? அப்ப கிளம்பலையா ?

    தமிழ்மணத்தை விட்டு போறோம் அப்படின்னு சொன்னது எல்லாம் சும்மாவா ? உங்களை நம்பி நிறைய அப்பாவிங்க போயிட்டாங்களே ?

    முகத்துல இருக்கிற கரியை துடைங்கப்பா

  95. Anonymous on October 18th, 2011 5:59 pm

    //நீங்கள்லாம் தமிழ்மணத்துல‌ இருக்க போறீங்களா ? அப்ப கிளம்பலையா ?//
    தமிழன் அவர்களே; அவர்கள் தமிழ்மணத்தை விட்டு கிளம்பினால் அவர்களின் நோக்கங்களை எப்படி செயல்படுத்துவது? எல்லாம் சும்மா ஒரு மிரட்டல் தான்.

  96. Siva on October 19th, 2011 12:54 am

    தமிழ்மண நிர்வாகிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தையும் அதே சமயம் ரமணிதரனின் பின்னூட்டம் தவறு என்பதையும் ஏற்று கொண்டு விட்டீர்கள். அது போதும் எங்களுக்கு. ஆனால் அதே சமயம் கடைசி பத்தியில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் நீங்கள் விலகி கொள்ளலாம் என்ற வார்த்தையையும் சேர்த்து இருப்பது சற்று கடினமானதாக இருக்கின்றது. ஒவ்வொரு பதிவரும் தேவை என்பதை கருத்தில் கொண்டு அந்த வாக்கியத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன். இசுலாமிய சகோதரர்கள் நிச்சயம் உங்கள் விளக்க கடிதத்தை ஏற்று கொள்வார்கள். ஆனால் அதே சமயம் தமிழ்மணம் என்ற தேர் நகருவதற்கு எல்லோரும் சேர்ந்தால் சுமூகமாய் செல்லும் என்று நான் நினைக்கின்றேன். நான் அனுபவத்தில், தமிழ்மண இணையத்திற்கு வெகு புதியவன் என்றாலும் நானும் உறுப்பினர் என்பதால் எனது கருத்துக்களை சமர்ப்பித்து இருக்கின்றேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  97. S.kumar on October 19th, 2011 6:46 am

    உங்கள் விளக்கம் ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது. நிர்வாகிகளில் ஒருவர் சம்பந்தப்பட்ட பதிவரின் தளத்தில் மனதில் தோன்றிய கீழ்தரமான வார்த்தைகளை எழுதியததற்கு தமிழ்மணம் பொறுப்பல்ல என்று சொல்வது எப்படி சார் நியாயம்?

    நான்கு பேர் இருக்கும் குழுவில் ஒருவர் எழுதுவது எப்படி சொந்தக் கருத்தாக இருக்கமுடியும். அப்படியே இருந்தாலும் அவர் ஆங்கிலத்தில் எழுதியதில் தமிழ்மணத்துக்காகத்தான் எழுதியிருக்கிறார் என்று அப்பட்டமாக சொல்லியும் நீங்கள் அவரே பொறுப்பு என்று சொல்வது நல்லாயில்லை.

    பதிவர்களை கேவலப்படுத்திய அவருக்கு நீங்க சப்பைக் கட்டுத்தான் கட்டியிருக்கிறீர்கள். மொக்கைப் பதிவுகளும் சோதிடப் பதிவுகளும் தமிழ்மணத்தின் தரத்தைக் குறைத்தனவா… இல்லை ஹிட்ஸை கூட்டினவா… சொல்லுங்கள்.

    அவர் பேசிய விதம் தப்பு… அதற்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று பார்த்தால் ஜாகா வாங்கியிருக்கிறீர்கள்…

  98. வருண் on October 19th, 2011 9:31 am

    ****மொக்கைப் பதிவுகளும் சோதிடப் பதிவுகளும் தமிழ்மணத்தின் தரத்தைக் குறைத்தனவா… இல்லை ஹிட்ஸை கூட்டினவா… சொல்லுங்கள்.****

    ஹிட்ஸைஸைக்கூட்டினா தமிழ் மணக்குமா என்ன? ஹிட்ஸ் பல “பாழாப்போன தளங்களிலும்தான்” கூடுது. அதுக்காக? ஹிட்ஸைக் கூட்டுறதுதான் தமிழ்மணத்தின் ஒரே குறிக்கோள்னு யாரு சொன்னது உங்களிடம்???

    எஸ். குமார்: நீங்க ஏன் சார், “தமிழ்மொக்கை திரட்டி”, “தமிழ்ஜோஸியத் திரட்டி”னு திரட்டிகள் ஆரம்பிச்சு ஹிட்ஸைக்குவிச்சு எங்கேயோ போகக்கூடாது? விடாதீங்க இந்த அறியவாய்ப்பை! தமிழ்மணம் நழுவவிட்டுடுச்சு! நீங்க பிடிச்சுக்கோங்க! :)))

    வந்திட்டாரு பஞ்சாயத்துத்து தலைவர் தீர்ப்போட ! கூடவே மொக்கைக்கும், ஜோசியத்துக்கும் வக்காலத்து வேற!

    ***அதற்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று பார்த்தால் ஜாகா வாங்கியிருக்கிறீர்கள்…***

    நாலு தமிழனை ஒற்றுமையா இருக்க விடமாட்டீங்களே!! எதையாவது எழவைக்கூட்டி இருந்த ஒரு உறவை முறிச்சு , குட்டையை குழப்பி, ஒண்ணுமில்லாம ஆக்கி நீங்களும் வீணாப்போகனும்? பாவம் உங்க ஆசையில் மண்ணள்ளிப்போட்டுட்டாங்க! 🙁

  99. அருள் on October 19th, 2011 10:42 am

    நகைச்சுவை என்பது வேறு, அடுத்தவர் மனதை, அதுவும் முன்பின் தெரியாதவர் மனதை காயப்படுத்துவது என்பது வேறு. கேலியும் கிண்டலுமாக, பலநேரங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

    தனது முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?

    இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான “பட்டாம்பூச்சி விளைவு”: http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

    தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் – தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ “டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி…!” என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள்.

  100. தணல் on October 19th, 2011 11:28 am

    போறேன் போறேன் ன்னு சொல்லுபவர்கள் எல்லாம் தயவு செய்து கிளம்புங்கப்பா. மூட்டையைக் கட்டிக்கிட்டு வாசல் வரைக்கும் வந்துட்டு என்ன சும்மா இந்தா போய்டுவேன் இந்தா போய்டுவேன் ன்னு போக்கு காட்டிட்டு இருக்கீங்க?

    நாங்க இருக்கோம் புது ரத்தம் பாய்ச்சுவதற்கு! நீங்க தயவு செய்து கிளம்புங்க.

  101. தமிழ்மணம் on October 19th, 2011 2:59 pm

    தமிழ்மணம் கூற வேண்டிய அனைத்தையும் இந்தப் பதிவின் விளக்கத்தில் கூறி விட்டோம். தமிழ்மணம் நிர்வாகிகளும் தனித்தனியாக தங்கள் கருத்துக்களை கூறி விட்டனர். இதற்கு மேல் இந்தப் பிரச்சனையில் தமிழ்மணம் கூறுவதற்கு எதுவும் இல்லை

    இத்துடன் இந்தப் பதிவின் மறுமொழிகள் மூடப்படுகிறது. மேலும் விவாதங்களை தொடர விரும்புகிற பதிவர்கள் தங்களுடைய பதிவுகளில் தொடர வேண்டுகிறோம்.

    மறுமொழிகள் மூலம் விவாதங்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

    புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

    நிர்வாகம்,
    தமிழ்மணம்

Leave a Reply