தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்

தமிழ்மணம் இயன்றவரையிலே தரமான, சொந்தமாக எழுதப்பட்ட பதிவுகளையே திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ்மணத்திலே சராசரி மாதாந்தம் நூற்றைம்பது பதிவுகள் இணைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர, சராசரியாக முப்பது பதிவுகள் தமிழ்மணத்தின் விதிமுறைகட்கும் நோக்குகளுக்கும் பொருந்தாக்காரணங்களாலே சேர்க்கப்படாமற் தவிர்க்கவேண்டியதாகின்றது. அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட பதிவுகள் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறுவதைச் சுட்டிக்காட்டும்போதும் தொடர்ந்து மீறுகையிலே விலக்கப்படுவதும் தவிர்க்கப்படமுடியாததாகின்றது.
பதிவர்கள் ஏற்கனவே அறிந்தபடி, தமிழ்மணத்திலே சேர்க்கப்படும் பதிவுகளுக்கு அடிப்படையிலே சில விதிகளை வைத்திருக்கின்றோம்.
1. பதிவுகள் தமிழிலே எழுதப்பட்டிருக்கவேண்டும்; தமிழ்மணத்திலே சேர்க்கப்படுவதற்குக் குறைந்தளவு மூன்று இடுகைகளேனும் பதிவு கொண்டிருக்கவேண்டும்.
2. முழுக்கவே சாதிச்சங்கங்கள், அரசியற்கட்சிகள், நிறுவனப்பட்ட மதங்கள், சோதிடம் இவற்றுக்காகவே சார்ந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா; ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கும் பதிவுகள், இப்படியான கருக்களை மையப்படுத்தி வெளிவரும்போது, சாதி, கட்சிப்பதிவுகள் சுட்டிக்காட்டலோடு, முற்றாக விலக்கப்படுகின்றன; மதம் சார்ந்த பதிவுகள் ‘வணிகப்பதிவுகள்’ பிரிவுக்குள்ளே சேர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன. பொருளீட்டுதல் சாராத கல்விநிறுவன, தொண்டுநிறுவனப்பதிவுகள்மட்டும் இப்படியான வகைப்படுத்தலிலிருந்து விலக்கானவை.
3. பொருளீட்டுதலை முதன்மை நோக்கமாகக் கொண்ட வணிகப்பதிவுகள், பணம் கட்டும் பதிவுகளாக ஆகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
4. திரைப்படப்பதிவுகள், வணிகப்பதிவுகள் அல்லாதவிடத்து, தமிழ்மணத்தின் திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளைமட்டும் திரட்டும் “திரைமணம்” திரட்டியிலே சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, தமிழ்மணத்திலே சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன.
5. பிற தளங்கள், பதிப்புகளிலிருந்து “ஒத்தி ஒட்டும்” பதிவுகள் இயன்றவரை தவிர்க்கப்படுகின்றன. தமிழ்ப்பதிவர்கள், தமிழிலே எழுதுவதை ஊக்குவிக்கும்வகையிலேமட்டுமே தமிழ்மணம் ஆரம்பிக்கப்பட்டது. அதனாலே, உரிமை பெற்றோ பெறாமலோ வெட்டி ஒட்டும் பதிவுகளைத் தவிர்க்கவே விரும்புகின்றோம். கலை, சமூகத்தேவை கருதிய அறிவிப்புகளும் அறிக்கைகளும் இவ்வகைப்படுத்தலுக்கு அப்பாலானவை.
6. எல்லைமீறும் இடுகைகள், தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளடக்கிய இடுகைகள் அழுத்தமான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படும்போது, அப்படியான இடுகைகளும் தொடரும் பதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படும். ஆனால், பூடகமான இடுகைகளுக்கெல்லாம் அர்த்தம் கண்டு விலக்கத் தமிழ்மணத்துக்கு இயலாதெனப் பதிவர்கள் அறிவார்களென நம்புகிறோம். மேலும், தமிழ்மணம் பதிவர்களின் தனிப்பட்ட பிணக்குகளுக்குத் தீர்ப்புச்சொல்லும் முறையீட்டு, நீதிவழங்குநிலையமில்லை என்பதைப் பதிவர்கள் உணர்வார்களென நம்புகிறோம்.
7. நகைச்சுவைப்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன; ஆனால், பரபரப்பான தலைப்புகளிலே “சூடாக விழையும்” கும்மிப்பதிவுகளையும் இயன்றவரை முன்னறிவித்தல்களோடு காலத்துக்குக் காலம் தமிழ்மணம் விலக்கி வைத்து, காத்திரமான பதிவுகள் தமிழ்மணம் முன்றலிலே தோன்ற முயற்சிக்கின்றோம்.
தமிழ்மணத்திலிருந்து பதிவுகளை தனிப்பட்ட காரணங்களுக்காக விலக்கிக்கொள்ளவிரும்புகின்றவர்கள் தனிப்பட்ட தமிழ்மணம் நிர்வாகிகளின் முகவரிக்கு அறியத்தாருங்கள். தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட பதிவுகள் விலக்கப்பட்ட காரணப்பிழைகள் களையப்படுமிடத்து, பதிவர் விண்ணப்பிக்குமிடத்திலே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும்.
ஒரு பதிவரின் வெவ்வேறு உள்ளடக்கங்கள் உள்ள பதிவுகளைச் சேர்ப்பதிலே எதுவிதமான சிக்கலுமில்லை. ஆனால், ஒரே பதிவினை வெவ்வேறு தளங்களிலே ஏற்றித் தமிழ்மணத்திலே சேர்க்க முயற்சிக்கும்போது, ஒரு பதிவினைமட்டுமே சேர்க்கலாம்.
தமிழ்மணம், தன்னார்வ அடிப்படையிலே நிர்வகிக்கப்பட்டுவருவதாகும். அதனாலே, பதிவுகளைச் சேர்ப்பதற்கும், சேர்க்கப்பட்ட பதிவுகள் பற்றிய முறையீடுகளுக்குப் பதிலளிப்பதற்கும் உடனடியே நிர்வாகிகளுக்கு இயலாமலிருக்கும். அதனாலே, குறைந்தளவு இரு நாட்கள் அவகாசமேனும் தரும்படி பதிவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சேர்ப்பதும் விலக்குவதும் தொடர்பான உங்கள் வினாக்களை ஈங்கிட்டால், முடிந்தவரை பதிலளிக்கமுயற்சி செய்வோம்.

Comments

68 Responses to “தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்”

  1. r.k.sathishkumar on September 29th, 2011 5:47 am

    சோதிட பதிவுகளை தமிழ்மணம் நீக்கி வைத்திரூக்கிறது..சோதிடம் எழுதும் இணையதளங்களை நிறுத்தி வைக்கிறது என்றால் அதை ஜீரணிக்க இயலவில்லை…அண்ணாமலை பல்கலை கழகம் போன்றவை கூட இப்போது சோதிட பாடங்கள் நடத்தும்போது தமிழ்மணம் சோதிடம் தாங்கி வரும் இணியதளத்தை நிறுத்துவது சரியல்ல…காப்பி பேஸ்ட் பதிவுகள் எழுதினால் சம்பந்தப்பட்ட பதிவை தடை செய்யலாமே தவிர குறிப்பிட்ட இணையதளத்தையே முடக்கி வைப்பது அநியாயம்…அப்படி பார்த்தா எல்லா காப்பி பேஸ்ட் இணையதளம்/ப்ளாக்குகளும் முடக்கப்பட்டுள்ளதா என பார்த்தால் அது இல்லை…தினசரி பத்து காப்பி பேஸ்ட் பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டே வருகின்றன…

    தன்னார்வ தொண்டு என தமிழ்மணம் இயங்குவதாக சொல்லும் நீங்கள்,வணிக ரீதியில் இருப்போருக்கும்,காப்பி பேஸ்ட் செய்வோருக்கும் பணம் கொடுத்தால் உங்க தளத்தையும் திரட்டுவோம் என சொல்வது ஏன்..? பணம் இருப்போர் 20 பேர் சேர்ந்து தமிழ்மணத்தின் விளம்பர தாரர் முகப்பு பக்கத்தை முடக்கி விட்டால் உங்கள் தமிழ் தொண்டு என்ன ஆகும்..?

    நான் அறிந்தவரை தமிழ்மணம் பணம் சம்பாதிக்கவே பல தளங்களை இலவச சேவையில் இருந்து கட்டண சேவைக்கு கட்டாயமாக திருப்பி விடுகிறது…

    உதாரணம்..என்னுடைய http://www.astrosuper.com நல்ல நேரம் இணையதளம் ஆகும்..முன்பு ஒரு முறை கட்டண சேவைக்கு மாற்றியபோது சுட்டிக்காட்டினேன்…தொழில் நுட்ப கோளாறு என சொன்னீர்கள்…அதன் பின் சில மாதம் கழித்து அதே தவறு நடக்க சுட்டி காட்டும்போது,சோதிட பதிவுகளை ஏற்க மாட்டோம் என சொன்னீர்கள்…ஆனால் கட்டண சேவைக்கு மாறினால் முகப்பு பக்கத்தில் காட்டுவோம்..தினசரி உங்களுக்கு 5000 ஹிட்ஸ் கியாரண்டி என சொன்னீர்கள்…ஆனால் சோதிட பதிவுகள் என்னுடையது தவிர்த்து இன்னும் நிறைய பேரின் பதிவுகள் தமிழ்மணத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது…காப்பி பேஸ்ட் பதிவுகளும் அப்படியே…

    குறிப்[பிட்ட பதிவை முடக்கலாமே தவிர.,குறிப்பிட்ட தளத்தையே திரட்டாமல் புறக்கணிப்பது மோசமான நிர்வாகத்தின் அடையாளம்…நான்கு வருடங்களாக தமிழ்மணத்தில் பதிவுகளை இணைத்து வரும் நான் இதனால் மிக மன உளைச்சலில் இருக்கின்றேன்…

  2. aashiq ahamed on September 29th, 2011 6:22 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக்….ஆமீன்

    தாங்கள் செய்யும் சேவைக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்…

    சில விஷயங்களை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகின்றேன்.

    1. மதங்களை விமர்சிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் நாத்திக தளங்கள் குறித்த தமிழ்மணத்தின் நிலை என்ன??

    2. நாத்திக மதத்தை பரப்பி கொண்டி கொண்டிருக்கும் தளங்கள் குறித்த தமிழ்மணத்தின் பார்வை என்ன??

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  3. ஜெய்லானி on September 29th, 2011 7:55 am

    நாத்திக பதிவுகளையும் ஏற்பதில்லை என்ற வரிகள் இருந்திருந்தால் தமிழ்மணத்தை நிச்சயமாக பாராட்டலாம் .

    இது சில சந்தேகங்களையும் ஏற்படுத்துவதால் இந்த கேள்வி . :-)

  4. faaique on September 29th, 2011 8:46 am

    //சில விஷயங்களை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகின்றேன்.

    1. மதங்களை விமர்சிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் நாத்திக தளங்கள் குறித்த தமிழ்மணத்தின் நிலை என்ன??

    2. நாத்திக மதத்தை பரப்பி கொண்டி கொண்டிருக்கும் தளங்கள் குறித்த தமிழ்மணத்தின் பார்வை என்ன??///

    இதுவே என் கருத்தும்..

  5. தமிழ்மணம் on September 29th, 2011 9:09 am

    மதங்களைப் பற்றிய கருத்துகளையும் கொண்ட கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் தடை செய்யவில்லை என்பதைப் பதிவர்கள் கொஞ்சம் கூர்ந்து அவதானித்தாலே அறிந்துகொள்ளலாம். ஆனால், நிறுவனப்பட்ட மதங்களுக்கென்றே இயங்கும் எப்பதிவினையும் தமிழ்மணம் திரட்டுவதில்லை என்பதே நிலைப்பாடு. உங்களைப் போன்ற பதிவர்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு நாத்திகமதம் என்று அறிவித்துக்கொண்டு முற்றுமுழுதாக அதற்காகவே இயங்கும் பதிவுகள் தமிழ்மணத்திலே இணைந்திருப்பின், தயைகூர்ந்து சுட்டிக்காட்டுங்கள்; விலக்க வசதிப்படும். நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுக்கென்றேயான பதிவுகளை, சோதிடம் போன்ற பதிவுகள் போல, வேண்டுமானால், கட்டணசேவைக்கான பதிவுகளாக மட்டுமே தமிழ்மணம் நடத்தமுடியும். ஜாதிச்சங்கங்களுக்கு அப்படியான கட்டணசேவைகூட இல்லை என்பதே நிலைப்பாடு.

  6. தமிழ்மணம் on September 29th, 2011 9:26 am

    அண்ணா பல்கலைக்கழகம் சோதிடபாடம் நடத்துமென்பதற்காக, தமிழ்மணமும் நடத்தவேண்டியதில்லை; தமிழ்மணத்தின் விதி சோதிடம் சார்ந்த பதிவுகளை ஊக்குவிப்பதில்லையென்பதே. அப்படியான நோக்கின்காரணமாகவே, “கட்டணசேவை”க்கு “விரும்பினால்,மாற்றிக்கொள்ளுங்கள்” என்ற அடிப்படையிலே இடம்மாற்றுவது. உங்களைக் கட்டணசேவையைப் பெற்றே ஆகுங்களென வற்புறுத்தவில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

    பணம் இருப்போர் 20 பேர் சேர்ந்து தமிழ்மணத்தின் விளம்பரதாரர் முகப்புப்பக்கத்தை முடக்கிவிடுமளவுக்கு, விளம்பரதாரர்கள் குவியவில்லை என்பதொரு புறமிருக்க, தமிழ்மணம் தன் இலக்குப் புள்ளியைவிட்டு, விளம்பரத்தட்டியாகச் செயற்படவில்லையென்பதை நான்காண்டுகளாகத் தமிழ்மணத்திலே பதிவுகளை இணைத்துவரும் நீங்கள் நீங்கள் கவனித்திருந்தால், மகிழ்ச்சியாகவிருந்திருக்கும். முழுச்சோதிடப்பதிவுகள் எவருடையதென்றாலுங்கூட, இலவசசேவையிலே தமிழ்மணத்திலே வெளிவந்தால், சுட்டிக்காட்டுங்கள்; விலக்கிவிடலாம். தமிழ்மணத்திலே பதிவுகள் இப்படியானவை என்று தானே இனகண்டு நீங்கிவிடுமளவுக்கு தமிழ்மணம் இன்னும் தானியங்கியாகவில்லை; மூன்று பொதுவாக விடயங்களிலே இடுகையிட்டுவிட்டுப் பின்னால், தமிழ்மணம் ஊக்குவிக்கவிரும்பாத பிரிவுகளிலேயே முழுக்கமுழுக்க இடுகைகளைத் தரும் பதிவுகளையும் ஒவ்வொன்றாகத் தேடித்தேடித்தான் நீக்கவேண்டியிருக்கின்றது. தன்னார்வச்செயற்பாடென நான்கு நிர்வாகிகள் அவர்களினால், ஆனவரையிலேதான் செயற்படமுடியும். அப்படியான நிலையிலே விட்டுப்போகும் சில குறைகளைப் பதிவர்கள் சுட்டிக்காட்ட ஏற்றுக்கொண்டு, தேவையான இடத்திலே திருத்திக்கொண்டு எம் மன, மூளை உளைச்சலை ஒதுக்கிவைத்துக்கொண்டு செயற்படுகிறோம்.

    ஒத்தி ஒட்டும் பதிவுகளையும் இயன்றவரை நீக்கவே செய்கின்றோம்; இன்னமும் “டவுண்லோடு” செய்யுங்கள் என்று வரும் பாடல்களைக் கொண்ட பதிவுகள், பிடிஎப் வடிவிலான எழுத்தாளர்களின் புதினங்கள் கொண்ட பதிவுகளைச் சேர்க்காமலோ அல்லது சேர்ந்த பதிவுகளெனில், உடனுக்குடன் நீக்கி எச்சரிக்கவோ செய்கிறோம். இவற்றையெல்லாம் சேர்த்துக்கொண்டுபோனால், தமிழ்மணத்திலே இருபதினாயிரம் பதிவுகளெனக் காட்டவுதவும்; இணையப்போக்குவரத்தால் வருமானமும்கூடலாம். ஆனால், தமிழ்மணத்தின் நோக்கும் தர்மமும் கெட்டுப்போகும். அதனாலேதான், செய்யவில்லை.

  7. அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக….ஆமீன்

    பதிவர்களுக்கான தாங்கள் செய்யும் சேவைக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்…

    தமிழமணத்தின் மதம் குறித்தான புரிதல் எனக்கு அதிர்ச்சியூட்டுகின்றது.

    ஜாதி-ஜோதிடம் இவற்றுடன் அதே தராதரத்துடன் மதத்தையும் வைத்து ஏன் பார்க்கிறீர்கள் சகோ..?

    ஜாதியும் ஜோதிடமும் ஒழிக்கப்படவேண்டிய மூட நம்பிக்கைகள்.

    ஆனால், மதம் அப்படியா..? மனிதனுக்குள் நியாயத்தீர்ப்பு நாள்-சுவனபேறு-நரகதண்டனை போன்ற மறுமைப்பற்றியான இறைப்பயம் ஏற்படுத்தி அவனை இவ்வுலகில் நல்லவனாகவும் பிறர்க்கு தீமை செய்யாமல் வாழ்பவனாகவும் மாற்றுகிறது.

    அவ்வகையில், மதம் சார்ந்த பதிவுகளை ஊக்குவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை… கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அது எப்படி சகோ..?

    மதங்களை சாடும் நாத்திக பதிவுகள் எல்லாம் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனும் தங்களின் ஒருபக்க நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.

    மாறாக, மானுட உலகிற்கு நன்மை செய்யும் நோக்கம் கொண்ட பதிவர்களோடு, மனித சமுதாயத்துக்கு நன்மைகளை செய்யும் பதிவுகளோடு தமிழ்மண நிர்வாகிகள் தங்களின் கைகோர்த்து தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த தங்களை அன்போடு அழைக்கின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    முஹம்மத் ஆஷிக்_citizen of world

  8. வருண் on September 29th, 2011 10:34 am

    சதீஸ்: உங்க தளம் விலக்கப்பட்டது அறிந்து வருத்தமே. யாருடைய தோல்வியையோ இழப்பையோ பார்த்து ரசிக்கிறதில்லை. ஆனால்

    ***சோதிட பதிவுகளை தமிழ்மணம் நீக்கி வைத்திரூக்கிறது..சோதிடம் எழுதும் இணையதளங்களை நிறுத்தி வைக்கிறது என்றால் அதை ஜீரணிக்க இயலவில்லை…***

    நீங்க தீவீரவாதத்திற்கு ஜோஸியம் சொல்ல ஆரம்பிச்சபோது எத்தனை பேரால உங்க பதிவை ஜீரணிக்க முடியலைனு உங்களுக்கு புரியலை. எதற்கும் ஒரு லிமிட் இல்லையா?

    ***நான் அறிந்தவரை தமிழ்மணம் பணம் சம்பாதிக்கவே பல தளங்களை இலவச சேவையில் இருந்து கட்டண சேவைக்கு கட்டாயமாக திருப்பி விடுகிறது…***

    பணம் இல்லைனா எப்படி தமிழ்மணம் நடத்த முடியும்? தமிழ்மணத்தை சார்ந்து உள்ள உங்க வலைதளத்தில் விளம்பரமா குவிச்சு வச்சிருக்கீங்களே? அது எதுக்கு? அது மாதிரித்தான் சார். பணம் இல்லைனா எதையும் நடத்த முடியாதுனு தெரியாதா உங்களுக்கு?

    I am really sorry that your blog is not being aggregated (I just learned). But your blog is not like how it was 4 years ago or 2 years ago. Go and check that out! Today the astrology BS is filled and overflowing in your blog. See it for yourself. Or ask a good friend who is a well-wisher of you!

    -varun

  9. வருண் on September 29th, 2011 10:38 am

    ***தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக்….ஆமீன்

    தாங்கள் செய்யும் சேவைக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்…

    சில விஷயங்களை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகின்றேன்.

    1. மதங்களை விமர்சிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் நாத்திக தளங்கள் குறித்த தமிழ்மணத்தின் நிலை என்ன??

    2. நாத்திக மதத்தை பரப்பி கொண்டி கொண்டிருக்கும் தளங்கள் குறித்த தமிழ்மணத்தின் பார்வை என்ன??

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ***

    சகோ ஆசிக அஹமது!

    நாத்திக மதமா??? நாத்திக மதவாதி பெரியார்னு சொல்லிப்பார்த்தால் சிரிப்புத்தான் வருது எனக்கு! :)
    என்னவோ போங்க.

  10. Peer Mohamed on September 29th, 2011 11:33 am

    //நிறுவனப்பட்ட மதங்கள்//

    Please furnish what is the criteria? How about atheism?
    How about communism? How about “tamil thesiyam”.
    Are you banning posts which support ideology.So i hope your list will include Democracy too

  11. தமிழ்மணம் on September 29th, 2011 1:40 pm

    Peer Mohamed,
    Please read carefully what has been said as the response in the earlier case. If any blog is going to be with “communist party” or “Tamil thesiyam Party” it would be removed. If there is any atheist religion blog that is aggregated by tamilmanam, please let Tamilmanam know so that it can be removed. Only because someone thinks, pornography is alright, it can not be added in Tamilmanam. Commonsense is what we all are based on. Tamilmanam practices democracy more than it supposes to. That’s why you are able to read your questions that are allowed, and Tamilmanam takes time to respond. Thank you.

    முகமது ஆஷிக்
    /ஜாதியும் ஜோதிடமும் ஒழிக்கப்படவேண்டிய மூட நம்பிக்கைகள். ஆனால், மதம் அப்படியா..? மனிதனுக்குள் நியாயத்தீர்ப்பு நாள்-சுவனபேறு-நரகதண்டனை போன்ற மறுமைப்பற்றியான இறைப்பயம் ஏற்படுத்தி அவனை இவ்வுலகில் நல்லவனாகவும் பிறர்க்கு தீமை செய்யாமல் வாழ்பவனாகவும் மாற்றுகிறது./
    காலக்கேடாக, இப்படியாக எது மூடநம்பிக்கை, எது நம்பியே ஆகவேண்டிய கை எல்லாம் விவாதிக்க இக்கருத்துப்பெட்டி வேண்டாமே? தமிழ்மணம் தனக்கென ஒரு நெறிக்கோவையைப் பற்றிக் கொண்டு செயற்படுகின்றது. அதன்படி பதிவுகள் சேர்க்கவும் விலக்கவும் படுகின்றன; தனிப்பட ஒருவர் தனது நம்பிக்கையைப் பற்றியும் மற்றைய விடயங்களுடன் எழுதும் பதிவுகள் விலக்கப்படவில்லையே! தனிப்பட்ட மதப்பிடிப்பினைக் குறித்த கருத்துகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. ஆக, நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுக்கெனவே வரும் பதிவுகளைமட்டுமே கட்டணசேவைக்குள்ளே –விரும்பினால் தொடருங்கள்– என வைத்திருக்கின்றோம். இதற்குமேலே இது குறித்து விளக்கம் தரத் தமிழ்மணத்துக்குப் புதிதாக எவ்விடயமுமில்லை. ஆனால், உங்கள் நெறிதவறாப்பின்னூட்டங்கள் வழக்கம்போல, தடுக்கப்படாமலே அனுமதிக்கப்படும்.

  12. ஆமினா on September 29th, 2011 2:25 pm

    //தமிழ்மணத்திலே சேர்க்கப்படும் பதிவுகளுக்கு அடிப்படையிலே சில விதிகளை வைத்திருக்கின்றோம்.//

    //முழுக்கவே சாதிச்சங்கங்கள், அரசியற்கட்சிகள், நிறுவனப்பட்ட மதங்கள், சோதிடம் இவற்றுக்காகவே சார்ந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா;//

    //மதம் சார்ந்த பதிவுகள் ‘வணிகப்பதிவுகள்’ பிரிவுக்குள்ளே சேர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன.//

    அடிப்படையிலேயே விதிகளை வைத்திருந்தால் கடைசி வரையில் கடைபிடிக்கலாமே….. உங்கள் விதிமுறைகளை மீறும்படியாக அமையும் மதம் சார்ந்த பதிவுகள் வணிக பதிவுகள் பிரிவுக்குள் கட்டணம் செலுத்தி ஏன் உங்க விதிமுறையையை நீங்களே மீறுறீங்க?????

    கட்டணம் செலுத்தாத மதம் சார்ந்த பதிவுகள் விதிமுறைக்கு உட்பட்டு நீக்கப்படுமானால் கட்டணம் செலுத்திய பின் உங்கள் விதிமுறைக்கு உட்பட்டு விடுமா? அல்லது தமிழ்மணத்தின் விதிமுறைகள் அதன் நிர்வாகத்திற்கு தகுந்தார்போல் நெகிழும் தன்மையுடையதா?

  13. Peer Mohamed on September 29th, 2011 2:33 pm

    Dear tamilmanam admin,

    Thanks a lot for taking time to respond. Appreciate the effort.

    But your answers are little murky and fishy. My question was “communism” and “tamil desiyam” and i did not use the word party there. but you have added it.

    So do you mean party specific posts won’t be allowed but “communism” and “tamil desiyam” as ideology is allowed?

    How about YOGA and tantric posts? They also stem out from ” Hinduism”

    It would be great if you can come out with a list of whats allowed and whats not. Your declaration as of now is debatable from the words you have used.

  14. குரு on September 29th, 2011 3:24 pm

    காப்பி பேஸ்ட் பண்றவங்கள ஏதாவது செய்யனும் பாஸ், அவங்க தொல்லை தான் தாங்க முடியவில்லை

  15. தமிழ்மணம் on September 29th, 2011 7:23 pm

    பதிவர் ஆமீனா /உங்கள் விதிமுறைகளை மீறும்படியாக அமையும் மதம் சார்ந்த பதிவுகள் வணிக பதிவுகள் பிரிவுக்குள் கட்டணம் செலுத்தி ஏன் உங்க விதிமுறையையை நீங்களே மீறுறீங்க?????

    கட்டணம் செலுத்தாத மதம் சார்ந்த பதிவுகள் விதிமுறைக்கு உட்பட்டு நீக்கப்படுமானால் கட்டணம் செலுத்திய பின் உங்கள் விதிமுறைக்கு உட்பட்டு விடுமா? அல்லது தமிழ்மணத்தின் விதிமுறைகள் அதன் நிர்வாகத்திற்கு தகுந்தார்போல் நெகிழும் தன்மையுடையதா?/

    நிறுவனம்சார்மதம் சார்ந்த பதிவுகளை ஊக்குவிப்பதில்லை என்பதற்காகத்தான் ‘கட்டணமுறையிலே விரும்பினால்’ தொடருங்கள் என்று சொல்லியிருப்பது; மதம் பிடித்திருப்போருக்கு எதிர்ப்பாகவிருந்திருந்தால், ஜாதி, அரசியற்கட்சிகள்போல, எக்காரணம் கொண்டும் சேர்க்கமாட்டோம் என்றிருக்கலாம். இதிலே நெகிழ்வேதுமில்லை. ஆனால், நீங்கள் தற்போது, அப்படியாக அவசியமில்லை என்றிருப்பதாலே, அப்படியான நிலையைப் பரிசீலனை செய்கிறோம்.

    Peer Mohamed,
    /But your answers are little murky and fishy. My question was “communism” and “tamil desiyam” and i did not use the word party there. but you have added it. / Yes, to make the difference between individual posts on religion and the blog on an established religion, Tamilmanam had to point you out the difference between a post on communism and the blog on communist party. Hope now you might have got what Tamilmanam intended to convey. TamilmaNam did not ban any individual post on any religious believer in TamilmaNam. Please have a look on how many Islam, Hinduism and Christianity related posts appear everyday in general blogs.

    /How about YOGA and tantric posts? They also stem out from ” Hinduism”/
    if these two words bother you, TamilmaNam recommends you to read the following post by kovi kaNNan on 28th Sep, 2011:
    வலைப்பதிவு நண்பர் ஸ்வாமி ஓம்கார் !
    http://govikannan.blogspot.com/2011/09/blog-post_28.html
    Hope this link may relax you.
    (hope you understand that we allow Hinduism posts like allowing Islam related posts)

    However a Yoga blog, like a Sufi music site will not be banned. yoga & sufi music blogs are not considered as religious blogs.

    Also, for your information, two individual Tamil nationalist bloggers’ blogs were also removed in the past two days, for continuous posts in English. Their blogs cover other issues too.

    Regarding the database: We do this as our voluntary work in between our bread-winning rat races. Also, as tamilmaNam does not force anyone to join in Tamilmanam (we only request our would be subscribers to follow our own conditions), Tamilmanam does not have to give the data either. However we wish we could give. Then it will become an ethical issue of providing information of the blogs that we add and delete to every reader who does not have business in getting it. It is not right. However, you have all of your time to monitor which blogs are removed and which are not. Good luck.

    குரு
    /காப்பி பேஸ்ட் பண்றவங்கள ஏதாவது செய்யனும் பாஸ், அவங்க தொல்லை தான் தாங்க முடியவில்லை/

    நீங்கள் கவனித்திருந்தால், சில முக்கியமான காப்பி பேஸ்ட் பதிவுகள் இப்போது தமிழ்மணத்திலே இல்லை.

  16. […] இந்தப் பதிவில் எழுதியிருக்கிறோம் (தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் வ…) அது குறித்த தனிப்பதிவு […]

  17. நட்புடன் ஜமால் on September 30th, 2011 2:45 am

    3 வருட ப்லாக் வாழ்வில் என் முதல் மைனஸ் ஓட்டு …

  18. aashiq ahamed on September 30th, 2011 3:36 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.

    நமக்கு பிடித்த ஒரு திரட்டி சில குழப்பமான தகவலை தருவதால், அதை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டுமென்ற நிலையிலேயே மறுபடியும் வந்திருக்கின்றேன். தவறாக நினைக்கவேண்டாம்.

    உங்கள் பின்னூட்டங்களை பார்த்த பிறகு சில கேள்விகள் எழுகின்றன. அவை,

    1. ///மதம் சார்ந்த பதிவுகள் ‘வணிகப்பதிவுகள்’ பிரிவுக்குள்ளே சேர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன.///

    ஒரு தனி நபர் முழுக்க முழுக்க மதம் சார்ந்து எழுதி வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய பதிவுகளை தமிழ்மனம் அனுமதிக்குமா அனுமதிக்காதா?. ஏனென்றால் நீங்கள் தான் பின்வருவதையும் கூறினீர்கள்

    ///மதங்களைப் பற்றிய கருத்துகளையும் கொண்ட கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் தடை செய்யவில்லை என்பதைப் பதிவர்கள் கொஞ்சம் கூர்ந்து அவதானித்தாலே அறிந்துகொள்ளலாம். ஆனால், நிறுவனப்பட்ட மதங்களுக்கென்றே இயங்கும் எப்பதிவினையும் தமிழ்மணம் திரட்டுவதில்லை என்பதே நிலைப்பாடு.///

    ஒருவர் முழுக்கு முழுக்க மதம் சார்ந்து எழுதுவதால் தமிழ்மணத்திற்கு என்ன பிரச்சனை? அவருடைய கருத்துக்கள் மற்ற மதத்தினரை நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதாக இருந்தால் அவரின் தளத்தை தடைசெய்யலாம். ஆனால், நல்ல முறையில் தான் சார்ந்த மதத்தை பற்றி முழுக்க முழுக்க எழுதி வருவதால் சமூகத்திற்கு என்ன கேடு வரும் என்று தமிழ்மணம் அந்த பதிவுகளை தடை செய்கின்றது?

    2. இல்லை, இது தான் எங்கள் நிலைப்பாடு என்றால், முழுக்க முழுக்க ஆத்திகத்தை (அதிலும் குறிப்பாக ஒரு சமூகத்தை) தாக்குவதற்காக மட்டுமே தளம் நடத்தி கொண்டிருக்கின்றார்களே, அந்த தளங்கள் வாசகர் பரிந்துரையிலும், சூடான இடுகையிலும் வருகின்றதே அது குறித்து ஏன் தமிழ்மணம் தங்கள் கட்டுரையில் கூறவில்லை?

    முழுக்க முழுக்க மதம் சார்ந்த பதிவுகள் வணிக பிரிவில் சேர்க்கப்படும் என்றால், அதற்கு சரி சமமான முழுக்க முழுக்க மதங்களை தாக்கி வரும் பதிவுகளும் வணிக பிரிவில் சேர்க்கப்பட வேண்டுமென்பது தான் நியாயம் அல்லவா?. முழுக்க முழுக்க மத எதிர்ப்பு பதிவுகள் வணிக பிரிவிற்குள் சேர்க்கப்படும் என்று தமிழ்மணம் அறிவிக்குமா?

    3. இது என் தனிப்பட்ட கேள்வி. வாசகர் பரிந்துரை குறித்து சில குழப்பங்கள். எனக்கு தெரிந்து ஏழு பாசிடிவ் ஒட்டு வாங்கினாலே வாசகர் பரிந்துரையில் வந்துவிடும். தமிழ்மணத்தின் இந்த பதிவு எட்டு ஒட்டு வாங்கியும் ஏன் வாசகர் பரிந்துரையில் வரவில்லை (நான் பார்த்தவரை சொல்கின்றேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்)?

    நன்றி,

    தவறாக ஏதும் இருந்தால் மன்னிக்கவும்…

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  19. soundarapandiann on September 30th, 2011 4:57 am

    தங்கள் பணி வெற்றியுடன் தொடரட்டும்…

  20. கோவி.கண்ணன் on September 30th, 2011 5:12 am

    நல்லதொரு முன்னெடுப்பு பாராட்டுகள், 3 நாளைக்கு முன்பு வந்த செய்திகளைக் கூட கட் & பேஸ்ட் போட்டு பரபரப்பு தலைப்பு வைத்துக் கொண்டு, கூட்டம் சேர்த்து ஓட்டுப் போட்டுக் கொண்டார்கள்

    சிலரால் மதப் பிரச்சார தளம் போன்றே பதிவுகள் சில தமிழ் மணத்தில் தெரிந்தன, இந்துவாக்கள் தங்களுக்கு தனித் தளம் (தமிழ் இந்து) துவங்கியது போல் மற்ற மதவாதிகளும் செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்

    தமிழ்மணத்திற்கு பாராட்டுகள்.

  21. கோவி.கண்ணன் on September 30th, 2011 5:15 am

    எனது நண்பர்களில் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனாலும்

    +1 தான்

    :)

  22. தமிழ்மணம் on September 30th, 2011 5:19 am

    நட்புடன் ஜமால்
    /3 வருட ப்லாக் வாழ்வில் என் முதல் மைனஸ் ஓட்டு …/
    தமிழ்மணம் மகிழ்ச்சியடைகின்றது. உங்கள் கருத்துச்சுதந்திரத்தை வெளிப்படுத்தத் தமிழ்மணம் எப்போதும் இடம்கொடுக்கும்.

    ஆஷிக் அஹ்மத்

    /தவறாக ஏதும் இருந்தால் மன்னிக்கவும்…/
    உங்கள் கருத்தை -அஃது இதுவரை தமிழ்மணம் விளக்கம் சொன்னதைப் புரிந்துகொள்ளமாட்டேனென்ற விதத்திலே வந்தாலுங்கூட- வெளிப்படுத்துவதற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை.

    தமிழ்மணம் தனக்கான விதிகளை எவை அதற்குப் பட்ட அளவிலே முதன்மையானவை என்று வகைப்படுத்திக்கொண்டு அதன்படி செயற்படுத்துகின்றது – உங்களுக்கு மதம் சார்ந்த பதிவுகள் முக்கியமென்பதுபோல; அவ்விதத்திலே முழுக்கவும் மதத்துக்கென்றே அமையும் பதிவுகள் தமிழ்மணத்தின் முதன்மைத்தேவைப்பட்டியலிலே இல்லை; அவ்வளவே; தனியே சமூகத்தின் பல கூறுகளையும் எழுதும்போது, ஒருவரின் நம்பிக்கை (இறைநம்பிக்கை, நம்பிக்கையின்மையோ) வெளிப்படும் இடுகைகள் தடுக்கப்படவில்லை என்பதை நான்காவது தடவையாகச் சுட்டிக்காட்டுகிறது.
    வேண்டுமானால், ஊர்களின் பெயர்களிலே வந்து கொண்டிருக்கும் கடையநல்லூர்.org, திருப்புவனம் வலைத்தளம் இவற்றிலே அதிகம் வரும் இடுகைகள் எவ்விடயங்கள் பற்றியவை எனக் காண்க. கடையநல்லூர் தளம் காதிர் ஜூவர்லஸுக்கு விளம்பரம் தந்துகொண்டிருந்தாலும், மிகுதி உள்ளடக்கங்களின்பேரிலே அனுமதிக்கப்பட்டேயிருக்கின்றது.
    http://www.kadayanallur.org
    http://newstbm.blogspot.com

    அதேநேரத்திலே, தமிழ்மணம் வெறும் திரட்டி மட்டுமே. அஃது எப்பதிவரையும் இதைத்தான் எழுதியாகவேண்டுமென்று வற்புறுத்துவதுமில்லை; வற்புறுத்த உரிமை கொண்டதுமல்ல; இவைதாம் தமிழ்மணத்தின் நோக்குகளும் விதிகளும்; இதன்படி அமையின், தமிழ்மணத்திலே உங்கள் பதிவுகளைத் திரட்ட அனுப்பலாமென்று மட்டுமே கேட்டுக்கொள்கின்றது; ஒருநாட்டிற்குப் போகையிலே அந்நாடு தனக்கு மேம்பாடுதர இவைதாம் சரியெனக் கொண்டு வைத்திருக்கும் அந்நாட்டுவிதிகளுக்கமைய நடப்பதுதான் அந்நாட்டுக்குச் செல்பவர் கொள்ளக்கூடிய நடைமுறை; அதைவிடுத்து, என்விதிக்கமைய உன்நாட்டைநடத்து என்று சொல்வதில்லையல்லவா? அதேநேரத்திலே, அவருக்கு அந்நாட்டுவிதிகள் பிடிக்காவிடத்திலே அந்நாட்டுக்குப் போகாதிருக்க அத்துணை உரிமைகளும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமுமுண்டு.

    நிறுவனம் சார்ந்த மதம்.எதிர்.தனிப்பட்ட இறைநம்பிக்கை பற்றிய விளக்கங்களை – தமிழ்மணம் பதிவுகளைச் சேர்க்கும் அகற்றும் தேவையின் அடிப்படையிலே – இயன்றவரை தந்தாகிவிட்டது. தொடர்ந்து சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க நேர அவகாசமிருக்காது.

    /தமிழ்மணத்தின் இந்த பதிவு எட்டு ஒட்டு வாங்கியும் ஏன் வாசகர் பரிந்துரையில் வரவில்லை/ இது தொழில்நுட்பப்பிரிவினர் சொல்லவேண்டியது; அவர்கள் நேரம் கிடைக்கையிலே சொல்வார்களென நம்புகிறேன்.

  23. Rasheedkhan.era. on September 30th, 2011 6:00 am

    தமிழ் மணத்தின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.நாத்திகக் கருத்துகள்,மற்றும் ஆத்திகக்கருத்துகள் என்றுதான் அனுகவேண்டும்.நிருவனமான நிலைகளை தவிப்பது அமைப்புத்தேவையின் [தமிழ் மணம்] கட்டாயம் என்று உணரப்படுதல் நன்று.

  24. krpsenthil on September 30th, 2011 8:24 am

    சாந்தியும், சமாதானமும் பூரணமாக நிலவியிருந்தால் நாத்திக கருத்துகளுக்கு வேலை வந்து இருக்காது. தமிழ்மணத்தை நான் ஆதரிக்கிறேன்..

  25. தமிழ்மணம் on September 30th, 2011 8:35 am

    தமிழ்மணத்தின் இந்த பதிவு எட்டு ஒட்டு வாங்கியும் ஏன் வாசகர் பரிந்துரையில் வரவில்லை

    **************

    தமிழ்மணம் எத்தனை பாசிடிவ் ஓட்டுக்கள், எத்தனை நெகடிவ் ஓட்டுக்கள் என்ற இரண்டையும் கணக்கில் கொள்கிறது. Weightage of Votes என்று சொல்லப்படுகிற மதிப்பு ஒட்டுக்களைக் கொண்டே தமிழ்மணம் முகப்பில் வரும் பதிவுகளை கணக்கிடுகிறது. ஒரு இடுகை அதிக நெகடிவ் ஒட்டுகளைப் பெற்றிந்தால் அது முகப்பில் வராது. காரணம் அதன் மதிப்பு ஓட்டு சதவீதம் மிகவும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் வெறும் 8 ஒட்டுகளை அனைத்தும் பாசிடிவ் ஓட்டுக்களை பெற்றிருந்தால் அது முகப்பில் தோன்றும். காரணம் அதன் மதிப்பு ஒட்டு – 100%

    இது தான் தமிழ்மணம் பின்பற்றும் Algorithm. இதனை இந்தச் சேவை அறிமுகப்படுத்தும் பொழுதே தெரிவித்து இருந்தோம்.

    தமிழ்மணம் வலைப்பதிவு என்றாலும் இது தான் விதி. வேறு ஒரு வலைப்பதிவு என்றாலும் அதுவே விதி. அது தான் தமிழ்மணம் பின்பற்றும் சனநாயகம்

    நன்றி….

    – தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு

  26. aashiq ahamed on September 30th, 2011 10:30 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.

    உங்கள் பதில்களுக்கு முதலில் நன்றிகள்.

    ///உங்கள் கருத்தை -அஃது இதுவரை தமிழ்மணம் விளக்கம் சொன்னதைப் புரிந்துகொள்ளமாட்டேனென்ற விதத்திலே வந்தாலுங்கூட///

    தவறான புரிதல். உங்கள் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதாலேயே திரும்பவும் கேட்கப்படுகின்றது.

    1. இந்த முறை ஒரு ஆதாரத்தோடு மறுபடியும் கேட்கின்றேன். உங்கள் வரையறைப்படி முழுக்க முழுக்க மதம் சார்த்த பதிவுகள், அதுவும் நிறுவனமயமாக்கப்பட்ட பதிவுகள் தான் தடை செய்யப்படுகின்றது. அப்படி இல்லாத ஆன்மீக பதிவுகள் தொடர்ந்து தமிழ்மணத்தில் வந்துக்கொண்டிருக்கின்றன என்பது உங்கள் வாதம்.

    http://payanikkumpaathai.blogspot.com/

    மேலே உள்ள தளம் ஆன்மிகம் மட்டுமல்லாது சமையல், மருத்துவம், கைவினை என்று பலவித தலைப்புகளில் பதிவுகளை உள்ளடக்கி உள்ளது. ஆனால் இந்த தளத்தை தமிழ்மணத்தில் சேர்க்க சென்ற டிசம்பர் மாதம் அனுமதி கேட்ட போது, மதத்தை காரணம் காட்டி முடியாது என்று சொல்லிருக்கின்றார்கள். இத்தனைக்கும் இந்த தளத்தின் உரிமையாளர் தெளிவாக, தன்னுடைய தளம் ஆன்மிகம் மட்டுமல்லாது பலதரப்பட்ட பிரிவுகளில் கருத்துக்களை கொண்டுள்ளது என்று சொன்ன போதும் தமிழ்மனம் நிர்வாகத்தினர் கேட்கவில்லை. இது குறித்த தமிழ்மணத்தின் மெயில் உரையாடல்கள் எங்களிடம் உள்ளன.

    இப்போது என்னுடைய கேள்வி இதுதான். முழுக்க முழுக்க மதம் சார்ந்த பதிவுகள் மட்டுமே தடை செய்யப்படுகின்றன என்ற கொள்கை வைத்திருப்பதாக கூறும் நீங்கள் உங்கள் கொள்கைக்கு எந்தவிததிலும் மாறு செய்யாத மேலே உள்ள தளத்தை சேர்த்து கொள்ளாதது ஏன்? மேலே உள்ள தளம் தமிழ்மணத்தின் வரையறைகளோடு எந்த விதத்தில் ஒத்துபோகவில்லை? ஏற்றுக்கொள்ள படாததற்கு என்ன காரணம்?

    2. நாங்கள் இப்படித்தான் செய்வோம், ஏற்றுக்கொண்டால் இருங்கள் என்பது ஜனநாயகம் இல்லையே. அப்படியென்றால், இந்த பதிவிற்கு கமெண்ட் பெட்டியையும், ஒட்டு பட்டையையும் வைத்து பதிவர்களின், வாசகர்களின் கருத்தை அறிந்து கொண்டிருக்க வேண்டாமே. தமிழ்மனத்தின் வளர்ச்சியில் பதிவர்களின், வாசகர்களின் பங்கும் உண்டு என்பதையும், அவர்களின் கருத்தை பரிசீலனை செய்வதில் தவறேதும் இல்லை என்பதிலும் தமிழ்மனத்திற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாதென நம்புகிறேன். அதுதான் ஜனநாயகமாக இருக்க முடியும்.

    இத்தனை மைனஸ் ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன. எந்த ஒரு ஜனநாயகத்திலும் இது குறித்து சிந்திப்பார்கள். பதிவில், நம் கொள்கையில் என்ன தவறு இருக்கிறதென சிந்திப்பார்கள். இந்த அளவு எதிர்ப்பிற்கு என்ன காரணம் என்று அறிந்து அதனை பரிசீலனை செய்ய முன்வருவது தான் உண்மையான ஜனநாயகம். எதிர்க்கருத்துக்களை வெளியிடுவது மட்டுமே ஜனநாயகம் இல்லையே. எதிர்கருத்துக்கள் குறித்து சிந்திப்பதும் தானே.

    3. நான் சொல்வது இதுதான். மதம் சார்ந்த பதிவுகள் கட்டண மயமாக்கப்படுவது தவறானது. ஏன் மதம் சார்ந்த பதிவுகளுக்கு இத்தகைய கட்டுப்பாடு? என்ன காரணம்?. இல்லை இது தான் எங்கள் நிலைப்பாடு என்றால், அதே நிலைப்பாட்டை மதங்களுக்கு எதிராக உள்ள நாத்திக தளங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். இது தான் பாகுபாடட்ற்ற ஜனநாயக செயலாக இருக்கமுடியும்.

    மதம் சார்ந்த பதிவுகள், அவை முழுக்க முழுக்க இருந்தாலும் அவை அடுத்த கொள்கை உடையவரை நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்யாதவரை அனுமதிக்கலாம். இல்லை இது தான் எங்கள் நிலைப்பாடு என்றால், அதே நிலைப்பாட்டை ஆன்மீகத்தை முழுக்க முழுக்க எதிர்க்கும் நாத்திக பதிவுகளுக்கும் செய்ய வேண்டும். அது தான் நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும். இது தான் பாகுபாடட்ற்ற ஜனநாயக செயலாக இருக்கமுடியும்.

    ஏற்கனவே இவற்றை தெளிவாக சொல்லிருக்கின்ரேன். இப்போது மறுபடியும் சொல்லிருக்கின்ரேன்.

    நான் பெரிதும் மதிக்கும் ஒரு திரட்டி இவ்வாறான போக்கில் செல்வதை கண்டதாலேயே எழுதிக்கொண்டிருக்கேன். என்னுடைய கருத்துக்களில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுகள்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  27. தமிழ்மணம் on September 30th, 2011 10:40 am

    aashiq ahamed
    உங்களுக்குத் திரும்ப ஒவ்வொன்றாக எடுத்து விளக்கவேண்டுமானால், விளக்கிக்கொண்டிருக்கலாம்; ஆனால், தமிழ்மணத்திலே வரும் -/+ களினை ஆதாரமாக வைத்து ஜனநாயகத்தினைத் தீர்மானிக்கும் உங்களுக்கு skewed sampling இலிருந்து size of the sampling ஊடாக இணையத்திலே வாக்கிடுவதுவரை நிறையச் சொல்ல உண்டு. “நான் சொல்வது இதுதான்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் நீங்கள் நான் சொன்ன அனைத்தையும் வாசித்திருக்கலாமே.

    இப்படியே நீங்கள் நான் சொல்வதை வாசிக்காமலே எழுதிக் கொண்டிருந்தால், – மன்னிக்கவேண்டும் – உங்களுடைய கருத்துக்களில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

    தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்; பதிவர்களின் புரிந்துணர்வு…. அதுகூடவேண்டாம், அதற்கான முயற்சிமட்டுமே இருந்தாற்கூடப் போதுமானது.

    மேலே சொல்ல ஏதுமில்லை.

  28. r.k.sathishkumar on September 30th, 2011 11:09 am

    முழுக்க சோதிடம் சார்ந்த பதிவுகள் எழுதினால் அந்த தளமே நீக்கப்படுமா..?அல்லது குறிப்பிட்ட ஜோதிட பதிவு மட்டும் நீக்கப்படுமா..?நான் சோதிடம்,அரசியல்,சினிமா என கலந்துதா எழுதுகிரேன்.எனது ஜோதிட பதிவுகள் தவிர்த்து பிறவற்றை இணைக்கலாமே..அல்லது எனக்கு முன் எச்சரிக்கை தகவல் அனுப்பி விட்டு பதிவை ?இணையதளத்தை கட்டண சேவைக்கு மாற்றி இருக்கலாமே..?

    மதம் சம்பந்தமானவற்றில்,பெரியார் சொன்னார் என்னும் பெயரில் தினசரி பல முறை இந்து மதத்தை கிண்டல் செய்தும் கேவலமாகவும் பதிவிடும் நபர்கள் ?இணியதளங்கள் ஏன் இன்னும் கட்டண சேவைக்கு மாற்றப்படவில்லை..? அந்த பதிவுகள் விழிப்புணர்வு பிரிவில் வருகிறதா..?

    முன்பு என் தளம் கட்டண சேவைக்கு மாற்றப்பட்டபோது,தொழில் நுட்ப கோளாறு என சொல்லிதான் மீண்டும் இலவச சேவைக்கு மாற்றினீர்கள் …அதற்கு பின் அடிக்கடி நான் பதிவு எழுதுவதாலோ என்னவோ திடீரென கட்டண சேவைக்கு மாற்றப்பட்டது என்பதே உண்மை.அதை தர்மம் ,நியாயம் என சொல்லிக்கொள்ளுங்கள்..வார்த்தை அலங்காரம் என்பது வேறு.நிதர்சனம் என்பது வேறு.உங்கள் சிரமத்தை புரிந்து கொண்டுள்ளேன்.
    ஆனால் முன்னறிவிப்பு இன்றியும்,முழுக்க சோதிடம் பதிவு மட்டுமே எழுதாத என் தளத்தை முடக்கியது ஏன்..?

    கட்டண சேவைக்கு நான் மாறினால் உங்கள் தர்மத்துக்கு இடையூறு வருவதில்லையா..?

    என் சோதிட பதிவை மட்டும் கண்டுபிடித்த நீங்கள் மற்ற எத்தனை பதிவுகளை நீக்கி வைத்திருக்கிறீர்கள்..?இது குறித்த முறையான அறிவிப்பு வராமல் முன்கூட்டியே நீக்கியது ஏன்..?

    முறைப்படி பல தளம் இணைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒட்டு மொத்தமாக நீக்காமல் அவற்றை கண்டு பிடித்து தாருங்கள் என வாசகர்களிடம் கேட்பது என்ன நியாயம்..?
    ஒரு நாள் கவனித்தாலோ அல்லது ஒரு வார தமிழ்மண இடுகைகளை கவனித்தாலே போதுமே..?

    தமிழ்மணத்தை மட்டும் நம்பி தமிழில் எழுதுபவர்கள் இருப்பின் தமிழ்மணம் சர்வாதிகாரி போலத்தான் நடந்துகொள்ளுமோ..?

    தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டுகள் இத்தனை இருக்கும்போதே நீங்கள் கவனித்திருக்கலாம்..உங்கள் கருத்துக்கள்,புதிய விளம்பரக்கொள்கைகளை வாசகர்கள் கடுமையாக ஆட்செபிக்கிறார்கள்..என…

    தமிழில் எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு…

    மதம் ,சோதிடம்,வழிபாடு இவை குறித்த நம்பிக்கை உள்ள மக்கள் இன்னும் பல மடங்கு அதிகம் பேர் இருக்கிறார்கள்.,..கம்ப்யூட்டர் ஐ.டி..பணியாளர்களை நம்பி மட்டும் திரட்டி நடத்த இயலாது…சாதரண பாமர மக்களும் இணையத்தை பயன்படுத்த ராசிபலன் தான் முதல் ஈர்ப்பு சக்தி..உங்கள் கரடு முரடான இலக்கியம் அல்ல.

    தமிழ்மணம் சர்வாதிகார போக்குடன் இப்படியே தொடர்ந்தால் வாசகர்களே தொடங்கும் திரட்டிகள் இன்னும் அதிகரிக்கும்.தமிழ்மணம் அனாதையாகிவிடும்.

  29. r.k.sathishkumar on September 30th, 2011 11:27 am

    தமிழ்மணம் இல்லையெனினும் கூகிள் இருக்கிறது….அது இப்படி விருப்பு வெறுப்பு பார்ப்பதில்லை..படிப்பவனின் புத்திசாலித்தனத்தை மட்டுமே பார்க்கிறது.
    நான் சோதிடம் எழுதினால் அதை படிக்கும் தமிழ்மண வாசகன் அனைவரும் மூட நம்பிக்கையாலன் ஆகி விடுவானா..?அல்லது மதம் சம்பந்தமானவற்றை எழுதியதை படித்ததும்…தமிழ்மணம் வாசகன் மதம் மாறி விடுவானா..?
    அந்தளவு முட்டாளாகவா இருக்கிறான்..தமிழ்மணம் வாசகன்..?

    அந்தளவு நான் மூளைசலவையாளனா..?

    தமிழ்மணம் ஏன் இவ்வளவு சிரப்படுகிறது..? தமிழ்மணத்தில் இணைக்காவிடினும் படிப்பவர்கள் ஃபாலோயர்கள் படித்துக்கொண்டுதானே இருப்பர்..?

    அப்புறம் எதற்கு இந்த தர்மாவதாரம்..?

    எனக்கு ஹிட்ஸ் கிடைக்காவிடினும் பரவாயில்லை.எனக்கு தமிழ் தர்மம் தான் முக்கியம் என்ற பிடிவாதம் முரட்டு பிடிவாதமே..இதனால் தங்களுக்கு பலன் எதுவும் கிடைக்க போவதுமில்லை…

    மேலே மைனஸ் ஓட்டு போட்டவர்கள் எல்லாம் மதம்,சோதிடம் சார்ந்த ஆளாத்தான் இருப்பான் என நினைத்துக்கொண்டு தமிழை காப்பாற்றிவிட்டோம் என நினைத்துக்கொள்ளுங்கள்..

    தமிழ்மணத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன..என எல்லோருக்கும் தெரியும்..சில வரிகள் எழுதி காப்பி பேஸ்ட் பதிவை இணைத்து…பதிவிட்டு விட்டு,20 ப்ளாக்கரிடம் சென்று கமெண்ட் ஓட்டு போட்டுவிட்டு வந்தால்,உடனே எனக்கு 20 ஓட்டு கிடைக்கும்..மகுடத்திலும் வந்து விடுவேன்…பரபரப்பு தலைப்பு வைத்தால் சூடான இடுகையிலும் வந்துவிடுவேன்…

    அப்படியிருக்க இதையெல்லாம் சரி செய்யாமல் தர்மம்,கொள்கை என மூச்சு முட்ட ஏன் பேசுகிறீர்கள்.>>?

    அலெக்ஸா ரேங்க் குறைந்து கொண்டே வருகிறது..பச்சை கலரில் பதிவை முன்னிருத்தினாலும் 50 டாலர் கொடுத்து விளம்பரம் செய்தாலும் சரக்கு இருந்தால்தான் 5000 க்ளிக்ஸ் கிடைக்கும்…அடந்த கியாரண்டி வாசகத்தை முதலில் சரி செய்யுங்கள்…50 டாலருக்கு தினசரி 5000 ஹிட்ஸ் ..அடேயப்பா செம கவர்ச்சி விளம்பரம்…..இதை விடவா எங்க மூட நம்பிக்கை மக்களை ஏமாற்றும்..?

    செம காமெடி..!

    தமிழ்மணம் இன்று அம்மணமாய் நிற்கிறது…

    —-
    from TM Admin
    You have your right to say whatever you want in your domain. However please do not spam Tamilmanam admin with your posts. Tamilmanam will appreciate it.

    thank you.

  30. aashiq ahamed on September 30th, 2011 11:48 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்)

    இந்த உரையாடல் பல விசயங்களை கற்றுகொடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒரு புரிதல் ஏற்படுத்தி தந்துள்ளது.

    மிக்க நன்றி…

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  31. தமிழ்மணம் on September 30th, 2011 12:05 pm

    /இந்த உரையாடல் பல விசயங்களை கற்றுகொடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒரு புரிதல் ஏற்படுத்தி தந்துள்ளது. /
    அப்படியான புரிதல் ஏற்பட்டதற்கு நாமும் உதவியிருக்கின்றோமென்பதிலே மகிழ்ச்சியே.
    புரிந்துணர்வுக்கு நன்றி

  32. aashiq ahamed on September 30th, 2011 12:26 pm

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    சலாம்,

    ///இந்த உரையாடல் பல விசயங்களை கற்றுகொடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒரு புரிதல் ஏற்படுத்தி தந்துள்ளது./// – இதனை

    நீங்கள்

    //அப்படியான புரிதல் ஏற்பட்டதற்கு நாமும் உதவியிருக்கின்றோமென்பதிலே மகிழ்ச்சியே.// – இப்படி புரிந்து கொண்டால்

    அது என் மீது தவறில்லை…

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  33. கோவி.கண்ணன் on September 30th, 2011 12:26 pm

    //தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்//

    :)

    தமிழ்மணம் கொலை வெறி கொண்டுள்ளது என்று நினைக்கிறாரோ என்னவொ.

  34. தமிழ்மணம் நிர்வாகத்தில் உள்ள சகோதரர்களே…
    நம் மீது ஏக இறைவனின் ஸலாம் உண்டாகட்டுமாக…

    சகோ.ஆஷிக் அஹமத் கேட்ட வற்றில்….

    http://payanikkumpaathai.blogspot.com/

    தளம் குறித்து நீங்கள் பதில் ஏதும் சொல்லாத நிலையில்…

    இந்த தளம் குறித்தான தங்கள் நிலைப்பாடு அறிய ஆவல்.

  35. தமிழ்மணம் on September 30th, 2011 12:42 pm

    50 டாலர் கொடுத்து விளம்பரம் செய்தாலும் சரக்கு இருந்தால்தான் 5000 க்ளிக்ஸ் கிடைக்கும்…அடந்த கியாரண்டி வாசகத்தை முதலில் சரி செய்யுங்கள்…50 டாலருக்கு தினசரி 5000 ஹிட்ஸ் ..அடேயப்பா செம கவர்ச்சி விளம்பரம்…..இதை விடவா எங்க மூட நம்பிக்கை மக்களை ஏமாற்றும்..?

    ****************

    We did NOT say that anyone will get 5000 “Clicks”. We said “3000/6000/unlimited Impressions”.

    Clicks and Impressions are two entirely different things. When an advertisement is shown in a page it is Impression. When someone clicks on an advertisement it is Clicks.

    As you can see these are two different things. Delivering an impression is in the control of Tamilmanam. Click is NOT in our control, so we do NOT guarantee any clicks. Not only Tamilmanam, even Googleadsense can’t guarantee the number of clicks

    Tamilmanam guarantees only impressions. Impressions may not translate into clicks as users have to click it and there is no “proven” methodology to force them to click it. Impression based advertisement is a standard advertisement mode in the web.

    Even in our advertisement page we have given explanation about what is an impression. Please read and it will help you to understand

    What is impression?
    An impression or web impression is the count of the Web page shown to a visitor. Tamilmanam delivers thousands of impressions on a daily basis.
    Our impression based Ad Service delivers your Ads to a Guaranteed number of users. You can also target your ads in a particular content page (such as சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை) or in all content pages. For details, please contact Tamilmanam Ads Admin

  36. வருண் on September 30th, 2011 12:47 pm

    சதீஷ்:

    ***தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டுகள் இத்தனை இருக்கும்போதே நீங்கள் கவனித்திருக்கலாம்..***

    எல்லா மைனஸ் ஓட்டும் உங்க அனுதாபிகள் (ஜோஸிய நம்பிக்கை) உள்ளவங்கனு எப்படி சொல்றீங்க? மறுபடியும் ஜோஸ்யக் கணிப்பா? மதத்தை தூக்கிப்பிடிக்க எண்ணும் பதிவர்கள் உங்களுடன் சண்டைக்கு வரப்போறாங்க (அவங்க பங்கும் இதில் அடங்கும்! எல்லாருமே ஜோஸ்யத்தை வரவேற்பவர்களல்லனு நெனைக்கிறேன். )

    இது என் கருத்து: நீங்க ஏன் ஜோஸ்யத்திற்குனு ஒரு தனி தளம் ஆரம்பித்து தமிழ்மணத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு, (கூகிள் அது இது வச்சு ஆள் சேர்த்துக்கிட்டு) உங்க தமிழ்தொண்டு பதிவுகளை இன்னொரு புதிய தளத்தில் எழுதி தமிழ்மணத்தில் இணைக்கக்கூடாது?

    தமிழ்மணம் அம்மனமா நிக்கிது அது இதுனு சொல்லி உங்க தலையிலேயே நீங்க மண் அள்ளிப் போட்டுக்க வேணாம் சார்! It sounds very offensive, imho!

    ***தமிழ்மணம் இல்லையெனினும் கூகிள் இருக்கிறது….அது இப்படி விருப்பு வெறுப்பு பார்ப்பதில்லை..படிப்பவனின் புத்திசாலித்தனத்தை மட்டுமே பார்க்கிறது.***

    அப்புறம் என்ன பிரச்சினை? விட்டுத்தள்ளுங்க! :)

  37. கோவி.கண்ணன் on September 30th, 2011 1:02 pm

    //தளம் குறித்து நீங்கள் பதில் ஏதும் சொல்லாத நிலையில்…
    இந்த தளம் குறித்தான தங்கள் நிலைப்பாடு அறிய ஆவல்.//

    எஸ்டிடி பூத் வைத்திருக்கிறவர்கள் ஓரமாக கூல்ட்ரிங்க் வைத்து அங்குவருபவர்களுக்கு விற்றுக் கொண்டு, இதை இனிமே எஸ்டிடி பூத் என்று மட்டுமே சொல்லக் கூடாது சொன்னால் யாரும் கேட்கமாட்டாங்க. ஏனென்றால் வெளியே பெரிய அளவில் எஸ்டிடி பூத் என்றே விளம்பரம் செய்யப்படுவதுடன் மெயின் பிஸ்னஸ் எஸ்டிடி சேவை தான் நடக்கும், (இப்ப செல்போன் வந்ததால் எஸ்டிடி பூத்தின் மவுசு போய்விட்டது)

    ஒருவேளை தமிழ்மணம் இதைத்தான் பதிலாக சொல்ல நினைக்குதோ ?
    :)))))))))))

  38. தமிழ்மணம் on September 30th, 2011 1:36 pm

    ஆஷிக் அஹ்மத்

    /இப்படி புரிந்து கொண்டால் அது என் மீது தவறில்லை…/

    தவறாமலே புரிந்து கொள்கிறோம்.

    முஹம்மத் ஆஷிக்

    / http://payanikkumpaathai.blogspot.com/

    தளம் குறித்து நீங்கள் பதில் ஏதும் சொல்லாத நிலையில்…

    இந்த தளம் குறித்தான தங்கள் நிலைப்பாடு அறிய ஆவல்./
    நீக்கப்பட்ட பதிவுகள் வந்த காலத்திலே தொடர்ந்து வந்த இடுகைகளைப் பாருங்கள். கூடவே ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து சில இடுகைகளின் பின்னாலே நோக்கமே வேறாக மாறிய பதிவுகளை நீக்கவேண்டி வந்தது பற்றியும் மேற்குறிப்பிலே சொல்லியிருப்பதையும் பாருங்கள்.

    அடிக்குறிப்பு இதுதான்:
    அடிப்படையிலே மதம் சம்பந்தமாகத் தமிழ்மணத்தின் நிலைப்பாடு இதுவென்ற நிலையிலே உங்கள் நிலைப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தமிழ்மணம் விதியாக்க வற்புறுத்தாதீர்கள் எனத்தான் சொல்றோம்.

    மேலே நீங்கள் இடும் முறையான பின்னூட்டங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டாலும், பதில் கிடைக்குமென்பதிலே அதிகம் நம்பிக்கை கொள்ளாதீர்கள். இதற்குமேலே விளக்க ஏதுமில்லை. இல்லை.

  39. கந்தசாமி on September 30th, 2011 2:34 pm

    தமிழ் மணத்தின் முடிவை வரவேற்கிறேன்.

  40. ஹைதர் அலி on September 30th, 2011 4:10 pm

    சிறந்த சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிற
    தமிழ்மண நிர்வகிகளுக்கு என்னுடைய நன்றிகள்.

    இங்கு சில விஷயங்களை தவறாக புரிந்துக் கொண்டு பின்னூட்டமிடுகின்ற இஸ்லாமிய பதிவர்களுக்கு

    தங்களுடைய வழிமுறைகளை மதமல்ல மார்க்கம் என்று சொல்கிறவர்கள் தொடர் பின்னூட்டங்களை சகிக்க முடியவில்லை
    மதம் என்றலே தாங்கள் தான் என்ற புரிதலும் தவறானது
    ஏன் எத்த்னையே கிருஸ்தவ மற்றும் இந்துமத ஆதரவு பதிவளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    இங்கு மார்க்கம் என்று சொல்கிறவர்கள் மத பதிவுகளை ஏன் தடை செய்கிறீர்கள் என்று கேட்பதும்.

    உண்மையான அக்மார்க் மதவாதியான கோபி. கண்ணன் நாத்திகர் மாதிரி வேடம் தரித்து பின்னூட்டம் போடுவதும்
    முரன்களின் மொத்த வடிவமாக இருக்கிறது

    அதனால் தமிழ்மணத்தை புரிந்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கேன்று ஒருசில வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள் அதை ஏற்றுக் கொண்டு முடிந்தால் தொடருங்கள்.

  41. தணல் on September 30th, 2011 9:03 pm

    மதங்களையும் சாதிகளையும் அறிவுத் திரட்டலில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்மணத்தின் இம் முடிவுகளை வரவேற்கிறோம். மிக தைரியமான முடிவை அவசியமானதொரு கட்டத்தில் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

  42. அன்பு on September 30th, 2011 9:16 pm

    கள்ளக்காதல், மது கலாச்சாரம் இவைகளை ஆதரித்து வெளியிடும் பதிவுகளை, நீக்காமல் அனுமத்திக்கும் மர்மம் என்ன? ஓஒ அவைகள் நாத்திகத்தில் தவறில்லை என்பதாலா?

  43. தமிழ்மண வாசகன் on September 30th, 2011 10:23 pm

    தமிழ் மணத்தின் முடிவுக்கு பாராட்டுகள்.இது குறித்த விவாதத்தை முடித்து ஆக்கபூர்வமாக் இன்னும் திரட்டியை முன்னெடுத்து செல்ல வேண்டுகிறேன்.பின்னூட்டங்கள் இடுவதை இப்பதிவுக்கு நிறுத்தி விட்டால் நல்லது. ஒரு கருத்தை தமிழ்மணம் தெளிவாக சொல்லிவிட்ட பின்பும் அதை ஒரு பிரச்சினையாக காட்டி திசை திருப்ப முயல்பவர்களிடம் விவாதிப்பதும்,பதில் சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்பதும் கால விரயமே.
    இரு நாள்களாக தமிழ்மண இடுகைகளே அற்புதமாக ஜொலிப்பது போல் தோன்றுகிறது
    தமிழ்மண வாசகன்

  44. jackiesager on October 1st, 2011 3:38 am

    தமிழ்மணம் பல்வேறு காரணங்களுக்காக பதிவு விலக்கம் செய்து வருவது நியாயமானது. அதே நேரம் தங்கள் பதிவுகளில் விளம்பரங்கள் எடுத்து சம்பாதிப்பவர்கள் இன்னமும் தமிழ்மணத்துக்கு கட்டணம் செலுத்தும் சேவையில் சேரவில்லை என்பது நெருடலாக உள்ளது.

    உதாரணமாக http://cablesankar.blogspot.com/ தளத்தை எடுத்துக் கொள்ளலாம். இத்தளத்தின் பக்கவாட்டினை பார்த்தீர்களேயானால் தன்னுடைய சொந்த புத்தகங்களை விற்பதற்கான விளம்பரம், தான் நடத்தும் பதிவு திரட்டி விளம்பரம், மேலும் சில வணிகதளங்களுக்கான விளம்பரங்களும் அங்கே இடம்பெற்றிருக்கிறது.

    இவ்வாறான தளங்களை திரட்டும் தமிழ்மணம், ஆர்.கே.சதீஷ்குமாரின் தளத்தை திரட்டுவதில் காட்டும் பாரபட்சம் அநியாயமாக தெரிகிறது

  45. aashiq ahamed on October 1st, 2011 11:49 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    சலாம்…

    இந்த (http://payanikkumpaathai.blogspot.com/) தளம் குறித்து தாங்கள் சொன்ன //நீக்கப்பட்ட பதிவுகள் வந்த காலத்திலே தொடர்ந்து வந்த இடுகைகளைப் பாருங்கள்.// – இதனை பார்த்தாகிவிட்டது.

    முஸ்லிம்கள் சிலர் பின்பற்றும் மூடநம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பதிவுகளும், சமையல் பதிவுகளும், சமூக நோக்கம் கொண்ட பதிவுகளும் தான் அந்த மாதத்தில் இருக்கின்றன. இது தமிழ்மண வரையறைக்கு (அதாவது முழுக்க முழுக்க மதம் சார்ந்த பதிவுகள் கட்டணமயமாக்கள்) எந்த விதத்தில் முரணாக இருக்கின்றது என்பதை அறிய ஆவல்.

    மேலும் இந்த தளம் தொடங்கப்பட்டபோது தங்களுடைய நோக்கமாக தள உரிமையாளர் சொல்லியுள்ளதில் ஒரு பகுதி

    //குறிப்பு:- மாற்றுமத அன்புள்ளங்களும் பயன்பெறும் வகையில் சமையல், கைவினைப் பொருட்கள், செய்திகள், மருத்துவம், டிப்ஸ் என்று எக்ஸ்ட்ரா பகுதிகள் விரைவில் சேர்க்கப்படும், //

    அவர் சொன்னது போலவே பல்சுவை பதிவுகளை சேர்த்து, பின்னர் (தமிழ்மணத்தில் சேர்க்க சொல்லி கேட்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே) பல துறைகளும் சார்ந்த ஒரு தளமாக அது காட்சி தருகின்றது. தளத்தின் நோக்கம் என்னவோ அதை நோக்கி தான் அந்த தளம் பயணப்பட்டு கொண்டிருக்கின்றது. பாதை மாறவில்லை. நிறுவனமாக்கவும் படவில்லை. இது தமிழ்மணத்தின் கொள்கைகளுக்கு எந்த விதத்தில் மாறுபடுகின்றது?

    இந்த தளத்தின் பதிவுகள் தமிழ்மணத்தில் சேர்த்ததிளிருந்தே இணைக்க முடியவில்லை. அதாவது முதலில் சேர்க்கப்பட்டு, பின்னர் தமிழ்மணத்தால் திரட்டப்பட்டு, தளத்தின் நோக்கம் மாறுவதாக கூறி நீக்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த தளத்தின் பதிவுகளை சேர்ப்பதில் பிரச்சனை.

    சமுதாய பதிவுகளுக்கு மத்தியில் கடுமையான மத விமர்சங்களை, எதிர்ப்புகளை வைக்கும் பல தளங்கள் உள்ளன. அவையெல்லாம் தமிழ்மண வரையறைக்குள் வரும்போது அதே போன்ற மேலே உள்ள தளம் வருவதில் என்ன பிரச்சனை?

    உங்களை வற்புறுத்தவில்லை. வாசகன் என்ற முறையில், வளர்ச்சியில் இருவருக்கும் பங்குண்டு என்ற முறையில், நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் செய்யும் சில செயல்கள் ஒரு சார்பாக இருக்கின்றதோ என்ற அச்சத்தாலேயே தெளிவாக எடுத்து கூறி விளக்கம் கேட்கின்றோம். பரிசீலிக்க சொல்கின்றேன்.

    தற்போது அந்த தளத்தை மறுபடியும் சேர்த்திருக்கின்றோம்.

    தங்களின் தமிழ் சேவைக்கு மறுபடியும் நன்றி…

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  46. ஜோதிஜி on October 1st, 2011 12:35 pm

    தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்; பதிவர்களின் புரிந்துணர்வு…. அதுகூடவேண்டாம், அதற்கான முயற்சிமட்டுமே இருந்தாற்கூடப் போதுமானது.

    சபாஷ்.

    இது குறித்து பலமுறை பேசியிருக்கின்றேன். நாகரிகம் கொடுத்த புரிதலில் நீங்களும் அமைதி காத்தீர்கள். இன்று அணையை திறந்து விட்டதும் அத்தனையும் வெளியே வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது.

  47. காவ்யா on October 1st, 2011 12:37 pm

    தனிநபர் தாக்குதல் பதிவுகளைப்பற்றி ஒன்றும் சொன்னதாகத் தெரியவில்லை. அவையேன் அனுமதிக்கப்படுகின்றன ?
    எடுத்துக்காட்டாக – விருச்சிகாந்த் என்பவர் போட்ட சசிகுமாரைத்தாக்கிய பதிவுகள். தற்போது, சாம் மார்த்தாண்டன் என்பவர் போட்ட்டுக்கொண்டுவரும் ஜாக்கிசேகரைத்தாக்கி வரும் பதிவுகள்.

    இவைகள் எந்த வகையில் அனுமதிக்கப்படுகின்றன ? அறிய விழைகிறேன். நன்றி.

    காவ்யா

  48. ஜோதிஜி on October 1st, 2011 12:39 pm

    மதம் என்பது அவரவர் சார்ந்த விருப்பங்கள். இறை நம்பிக்கை என்பது தனிமனிதன் தன்னுடைய அனுபவங்கள் மூலம் பெற்ற சுய அனுபவம். ஜோதிடம் என்பது சிலருக்கு வழிகாட்டி. பலருக்கு அது சாபக்கேடு.

    ஆனால் பாருங்களேன். நான் எழுதியே தீருவேன். நீங்கள் படித்தே ஆக வேண்டும் என்று ஏனிந்த திணித்தல்.

    மதம், சாதி, மூடநம்பிக்கைகள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த தமிழினத்தை விட்டு விலக வாய்ப்பே இல்லை என்பது கண்கூடாக தெரிகின்றது.

  49. jackiesekar on October 1st, 2011 1:12 pm

    அன்பின் தமிழ்மண நிர்வாகத்துக்கு, நீங்கள் எடுக்கும் எந்த கொள்கை முடிவுகளில் எனக்கு யாதொரு கருத்தும் இல்லை…

    இந்த பதிவில் எனது பெயரில் ஒரு போலி பின்னுட்டம் போட பட்டு இருக்கின்றது…அதை குறிப்பிடவே இந்த பின்னுட்டம்…பலருக்கு அது போலிப்பின்னுட்டம் என்று தெரியும் தெரியாத நண்பர்களுக்கு சொல்லவே இந்த பின்னுட்டம்..

    எனது பெயரில் போட்டோ முதற்க்கொண்டு ரெடி செய்து பின்னுட்டம் இட்ட உங்கள் உழைப்புக்கு நன்றி நண்பர்களே..

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

  50. aashiq ahamed on October 1st, 2011 1:44 pm

    அஸ்ஸலாமு அலைக்கும்…உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்..

    சில சகோதரர்களுக்கு,

    தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இது விவாத களமல்ல. நாமெல்லாம் பெரிதும் பாதிக்கும் ஒரு திரட்டியின் தளம். இதை விவாதகளமாக்க நான் விரும்பவில்லை. ஒரு சில தகவல்கள் ஒரு சார்பாக இருப்பதாலேயே ஆதாரங்களுடன் விளக்கம் கேட்கின்றோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உண்டு. ஒரு கொள்கைக்கு ஒரு நிலையை எடுக்கும்போது அதே அளவுகோலை மத்த கொள்கைக்கும் பயன்படுத்தாததற்கு என்ன காரணம் என்று தான் கேட்கின்றோம். எங்கள் நம்பிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென்றால், ஆரோக்கியமான முறையில் உங்களுடன் உரையாடி எங்கள் நிலையை தெளிவுபடுத்த தயாராகவே இருக்கின்றோம். தாராளமாக எங்கள் தளத்திற்கு வரலாம்.

    வெகு சில சகோதரர்களுக்கு,

    உங்களின் நேர்மையின்மையை ஏற்கனவே தெளிவான ஆதரங்களுடன் எடுத்து காட்டியும், அதை நீங்கள் மறுக்காமல் இருந்த போதும், அதற்காக குறைந்தபட்ச நேர்மையுடன் செயல்படாத போதே உங்கள் மீதான மரியாதை சுத்தமாக போய்விட்டது. இங்கே உங்களின் கலகத்தை கண்டுக்காமல் இருப்பதே உங்களுக்கான “தக்க” மரியாதை என்று எண்ணுகின்றோம்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  51. ashiq on October 1st, 2011 2:02 pm

    //மதம், சாதி, மூடநம்பிக்கைகள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த தமிழினத்தை விட்டு விலக வாய்ப்பே இல்லை //
    ஆமா ஆமா மத நம்பிக்கை தமிழன்கிட்ட மட்டும்தான் இருக்கும், உலகில் வேற எங்கும் இல்லை, சரியான கண்டுபிடிப்பு,
    ஆஷிக்

  52. தமிழ்மணம் on October 1st, 2011 3:11 pm

    jackiesekar
    தகவலுக்கு நன்றி. நேரப்பிழையாக எவர் உண்மையான ஜாக்கிசேகர், எவர் அப்பெயரிலே புனைந்து கொண்டு வருகின்றாரென அறிய எமக்கு வாய்ப்பில்லை; அந்நிலையிலே எக்கருத்த்தையும் மறுப்பதில்லை என்றளவிலே வெளியிட்டோம். இனி வரும் பின்னூட்டங்களினை அனுமதிப்பதிலே கவனமாகவிருப்போம்.

    aashiq ahamed
    தகவலுக்கு நன்றி. மீண்டும் இணைத்திருக்கும் பதிவினைப் பொருத்தப்படின் சேர்த்துக்கொள்வோம்.

    பதிவர்களுக்கு,
    மேலேயுள்ள இடுகையின் உள்ளடக்கத்துக்குச் சம்பந்தமற்ற வாதங்களை இத்தளத்திலே தயைகூர்ந்து தவிருங்கள். தொடர்ந்து அப்படியாக வருமிடத்து, தமிழ்மணம் அவ்வாறான பின்னூட்டங்களை வெளியிடுவதுபற்றி எண்ணவேண்டியிருக்கும். முரண்நகையாக, சேர்க்கப்பட்ட மதப்பதிவுகளின் அடிப்படையிலே இப்படியான வாதப்பிணக்குகள் நிகழ்ந்து, பின்னால், அதற்கும் தமிழ்மணத்தினை விலக்கு/சேர் என்று பிணை வைக்காமலிருக்கவேண்டுமென்ற முன்யோசனையுமே நிறுவனப்பட்டமதப்பதிவுகளைத் தமிழ்மணம் ஏன் தவிர்க்கவேண்டுமென்பதற்குக் காரணமாகியது.

  53. aashiq ahamed on October 1st, 2011 3:37 pm

    சலாம்,

    கமெண்ட் நம்பர் 51

    ///////மதம், சாதி, மூடநம்பிக்கைகள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த தமிழினத்தை விட்டு விலக வாய்ப்பே இல்லை //
    ஆமா ஆமா மத நம்பிக்கை தமிழன்கிட்ட மட்டும்தான் இருக்கும், உலகில் வேற எங்கும் இல்லை, சரியான கண்டுபிடிப்பு,
    ஆஷிக்/////////////////

    இது என்னுடையதல்ல..இங்கே தமிழ்மணம் தவிர்த்து யாருடனும் உரையாடி இந்த தளத்தை விவாதகளம் ஆக்க விரும்பவில்லை என்பதே இப்போது வரையிலான என்னுடைய எண்ண ஓட்டம்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  54. வருண் on October 1st, 2011 11:04 pm

    ****தனிநபர் தாக்குதல் பதிவுகளைப்பற்றி ஒன்றும் சொன்னதாகத் தெரியவில்லை. அவையேன் அனுமதிக்கப்படுகின்றன ?
    எடுத்துக்காட்டாக – விருச்சிகாந்த் என்பவர் போட்ட சசிகுமாரைத்தாக்கிய பதிவுகள். தற்போது, சாம் மார்த்தாண்டன் என்பவர் போட்ட்டுக்கொண்டுவரும் ஜாக்கிசேகரைத்தாக்கி வரும் பதிவுகள்.

    இவைகள் எந்த வகையில் அனுமதிக்கப்படுகின்றன ? அறிய விழைகிறேன். நன்றி.

    காவ்யா***

    This response itself sounds like a personal attack on some bloggers. Why should it be allowed, Kavya!

    What about your post attack criticizing periyaarthalam was “manipulating” with your HALF-BAKED analysis and knowledge?? அது தனிநபர் தக்குதல் இல்லையா?

    I see, you never follow what your preach, right?? LOL

    நீங்க ஏதாவது உங்க அரைவேக்காட்டு ஆராச்சி மூலம் இந்தத்தளம் விஷமத்தன்ம் செய்ததுனு ஒளறினால் அது தனிநபர் தாக்கு இல்லை! பெரிய சமூக சேவை?? இல்லையா??? I can never think like you guys or live like you -living in your own stupid world !

    இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். உங்க அறிவுரையைக்கேட்டுதான் ஏதோ தமிழ்மணம் தரம் முன்னேறுதுனு நெனைக்கிறதுதான் காமெடி. நீங்க கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது. ஆனால் மற்றவர்கள் எல்லாம் எந்தவிதமான பிழையோ தவறோ செய்யக்கூடாது.

    முதலில் தென்னங்கீத்தை தமிழ்மணத்தில் இணையுங்க. பதிவுப்பட்டையைக் காணவில்லை?? இல்லை மறைந்து இருக்கிறதா?? அஹ்டிவிட்டுப்புட்டு ஒரே அறிவுரையா இருக்கு?

    My advice to you is NEVER ADVISE anybody unless you want to be advised and ready to listen and accept others advices. You always talk as if you r flawless and know-it-all. I wonder why??

    காவியா நானும் இங்கே உங்களிடம் “விழைகிறேன்”! LOL

  55. தமிழ்மண வாசகன் on October 2nd, 2011 1:00 am

    வணக்கம்
    மிக சரியாக சொன்னீர்கள்.இந்த மத பதிவுகள் பல தீவிர மத பெருமை அடிப்பதும் சவால் விடுவதும்,அவர்களே ஓட்டு,மறுமொழிகள் போட்டு அப்பதிவுகளை முன்னிலை படுத்துவதும்,இதனால் பல நல்ல இலக்கியம்,தொழில் நுட்பம் சர்ந்த பதிவுகள் பின் தங்குவதும் போதும்.மத‌ப்பதிவுகளை அவர்களை பின் தொடர்பவர்கள்(மதம் சேர்ந்தவர்கள்) மட்டுமே படிக்கும் போது எதற்கு அவர்களுக்கு தமிழ்மண திரட்டி? அவர்கள் பதிவுகளில் நடந்த வீண் விவாதங்களை பார்த்தாலே தெரியும்.பதிவுலகில் இதனால் பல பிரச்சினைகள் நடந்துள்ளதை நினைவு படுத்த வேண்டுகிறேன்

    மத பிரச்சார‌ பதிவுகளுக்கு கட்டண சேவையில் கூட அனுமதி வேண்டாம். அப்படி அனுமதித்தால் பல நிபந்தனைகள் விதிப்பது நல்லது.

  56. இனியவன் on October 2nd, 2011 2:10 am

    த‌மிழ்ம‌ண‌ நிர்வாகிகளேஇன்னும் பல இஸ்லாமிய மத பிரச்சார பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.அதையும் நிறுத்துங்கள்.மதம் சார்ந்த பதிவுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துத்வ பதிவர்களை வேளியேற்றியது ஏன்?.ஒருவேளை நீங்க‌ள் இப்போது ஆபிரஹாமிய மத‌‌ பிர‌ச்சார‌ ப‌திவுக‌ளை அனும‌தித்தால் இந்துத்வ பிரச்சார ப‌திவர்க‌ளையும் அனும‌தியுங்க‌ள்.நாங்களும் சில பதிவுகளை இணைக்கிறோம்.அனுமதி எதிர்பார்க்கிறோம்.திரு ந‌ரேந்திர‌ மொடி அவ‌ர்க‌ளை வ‌சை பாடும் ப‌திவுக‌ளை அனும‌திக்காதீர்க‌ள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.சிந்திக்க‌வும் என்ற‌ ப‌திவில் வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ள் மிக‌வும் நாக‌ரிக‌ம‌ற்ற‌ முறையில் உள்ள‌ன‌.ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் இந்திய‌ இறையான்மைக்கு எதிராக‌ உள்ள‌ன‌.

  57. ஜெய்கர் on October 2nd, 2011 3:25 am

    கொஞ்ச நாளா தமிழ்மணம் பக்கமே வர பிடிக்கல… ஆனா வராமலும் இருக்க முடியல. ஆறாம் அறிவுக்கு வாய்ப்பளிக்காத மதவாத பிரச்சார திரட்டியா இருக்குமோனு கூட சந்தேகமா இருந்தது. இது நல்ல முடிவு. உண்மையாகவே இனி தமிழ்மணம் பயனுள்ளதாக இருக்கும்!!நன்றிகள்.

  58. r.k.sathishkumar on October 2nd, 2011 11:18 am

    ஜாக்கி சேகர் பெயரில் ஒரு பின்னூட்டம் எனக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் வந்திருக்கிறது.அது என் மீது களங்கம் ஏற்படுத்த என் மீது கொலை வெறியாக சூற்றி கொண்டிருக்கும் ருன் என்ற பதிவரின் வேலையாக இருக்கும் என சந்தேகப்படுகிறேன்.எனக்கும் அந்த கமெண்டுக்கும் சம்பந்தமில்லை.

  59. r.k.sathishkumar on October 2nd, 2011 11:20 am

    தமிழ்மணத்தின் நிலையை புரிந்து கொண்டேன்..என் கமெண்டுகள் உங்களுக்கு வருத்தம் கொடுத்திருக்கலாம்..அதற்காக வருந்துகிறேன்..நன்றி

  60. Peer Mohamed on October 5th, 2011 4:05 pm

    Dear Tamilmanam admin,

    Thanks a lot for taking time and replying to the queries with your stand. Appreciate the effort.

  61. zahir on October 12th, 2011 6:31 am

    வணக்கம்
    தங்கள்( தமிழ்மணம் }வலை பதிவு லிருந்து என்னை நீக்கியது வருத்தம் அழிகிறது நான் மட்டும் கோப்பி & பேஸ்ட் செய்வதாக சொல்ல ஏற்க முடியவில்லை 90 சதவிதம் வலை பதிவாளர்கள் இதை தான் செய்கிறார்கள் அதற்காக என்னை நான் நீயாபடுத்தவில்லை சிலர் ஆங்கில பதிவுளை தமிழில் மொழி மாற்றம்செய்து வருகிறார்கள்!!!!!!!!!! பரவாஇல்லை அதிகமகா எழுதி உங்களை வருத்த படுத்த விரும்ப வில்லை தங்கள் வலை பதிவில் இருந்த பொழுது கிடைத்த நண்பர்கள் 1260 தங்கள் தமிழ் மணம் முலமாக அவர்களுக்கு நன்றி , ( மீண்டும் சேர்த்தால் நன்றி) , என்றும் தமிழ் மணம் ரசிகன்
    நன்றி
    h.zahir hussain
    ——
    பதிவர் ஜாஹீர் ஹுஸேன்
    உங்கள் வருத்தம் புரிகின்றது. ஆனால், சொந்த இடுகைகள் கொண்ட பதிவுகளையே திரட்டவிரும்புகிறோம். ஆனால், உங்கள் பதிவை மட்டும் நீக்கவில்லை. பல “ஒத்தி-ஒட்டும்” பதிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இன்னமும், தோன்றும்போதெல்லாம் நீக்கப்படுகின்றன. நீக்கலஞ்சலிலே சொல்லியிருக்கப்படக்கூடியதுபோல, உங்கள் சொந்த இடுகைகளுடனான பதிவினைத் தமிழ்மணம் திரட்ட அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    நன்றி.

    தமிழ்மணம்.

  62. பலே பிரபு on October 14th, 2011 1:45 pm

    தமிழ்மணத்தோடு சில விஷயங்களில் நான் ஒத்துப்போகவில்லை.

    தமிழ்மணம் ரேங்க் என்பது மிக முக்கியமான ஒன்று. நீங்கள் போதும் கணக்கு புரியவே இல்லை.

    நீங்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவு, வரவேற்கதக்கது. ஆனால் இலவசமாக நீக்கும் பதிவுகளை கட்டணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வது ஒரு நல்ல முடிவாக தெரியவில்லை.

    இன்னும் பல பதிவுகள் நீங்கள் விலக்கி உள்ள வகையில் இருந்தும் உள்ளே உள்ளன, கண்டுபிடித்து நீக்க முயற்சிக்கவும்.

    புரிதலுக்கு நன்றி,
    ======

    தமிழ்மணம் பதில்:

    /தமிழ்மணத்தோடு சில விஷயங்களில் நான் ஒத்துப்போகவில்லை. /
    எல்லா விடயங்களிலும் எல்லோரும் ஒத்துப்போகமுடியாதுதானே, பதிவரே! சேவைவழங்குநர்க்கும் சேவைபெறுநர்க்குமான எதிர்பார்ப்புகளிலே சில வேறுபாடுகள் இருப்பது இயல்பே.

    /இலவசமாக நீக்கும் பதிவுகளை கட்டணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வது ஒரு நல்ல முடிவாக தெரியவில்லை./
    இலவசமாக அனுமதிக்கமுடியாதென்ற பதிவுகள் வர்த்தகப்பதிவுகளாக, தாமே விளம்பரத்தினை வைத்து வருமானம் பெறும் பதிவுகளாக இருக்கும்போது, அவை தமிழ்மணத்திலே கட்டணம் கொடுத்தால் விளம்பரப்படுத்துவதுதான் பொருந்தும்.

    /இன்னும் பல பதிவுகள் நீங்கள் விலக்கி உள்ள வகையில் இருந்தும் உள்ளே உள்ளன, கண்டுபிடித்து நீக்க முயற்சிக்கவும்./
    கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நடவடிக்கை எடுக்கலாம்.

    தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.

    தமிழ்மணம்.

  63. palanivel on October 14th, 2011 11:13 pm

    தமிழ்மணம் நிர்வாகிக்கு, வணக்கம்.. நான் தங்கம்பழனி. என்னுடைய வலைப்பூவான ‘உள்ளங்கையில் உலகம்’ -‘தங்கம்பழனி’ என பெயர் மாற்றம் செய்து பல நாட்கள் ஆகின்றன. மேலும் என்னுடைய வலைப்பூவை ஆரம்பநாட்களிலிருந்தே கட்டணப்பிரிவிலேயே வைத்திருக்கிறீர்கள்.. இதற்கான சரியான காரணம் எனக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு பதிவையும் நேரமிருக்கும்போது பதிவிட்டிருக்கிறேன்.. முடிந்த வரை அனைத்துப் பதிவுகளையும் சொந்தமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் எமது வலைப்பூவில் கட்டணப் பிரிவிலேயே வைத்திருப்பது எமக்கு வருத்தத்தை அளிக்கிறது.. முதன்மை பிரிவிற்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்.. எனக்கு சரியான விளக்கத்தை கொடுக்கவும். நன்றி..!!

    —–
    தமிழ்மணம் பதில்:

    பதிவர் தங்கம்பழனி

    உள்ளங்கை உலகம் இருந்த அமைப்பிலே விரும்பினால், “கட்டணத்துக்கு மாறுங்கள்” என்று மாற்றப்பட்டிருந்தது.
    இப்போதுள்ள அமைப்பிலே உங்கள் பதிவினை நீங்கள் சொந்தமாக எழுதினால், முகப்பிலே தெரியாமலிருக்கும் நிலை மாறும்.
    உதாரணத்துக்கு கீழ்க்கண்ட இடுகைகளை ஒத்துப்பாருங்கள்:
    உங்களூடையது: http://thangampalani.blogspot.com/2011/10/do-it-today.html
    தினமலர்: http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2932 +
    தினமலர்: http://tinyurl.com/3lo5dd8
    ஆக, இரு தினமலர் இதழ்களிலே வந்ததைத் தொகுத்துப் போட்டிருக்கின்றீர்கள். இந்நிலையிலே எப்படியாகச் சொந்தப்பதிவெனக் கொள்ளமுடியும்? இதே நிலைதான் உங்களின் பல கட்டுரைகளுக்கு. அதனாலேயே, தற்சமயம், ‘பதிப்புரிமை இல்லாததாலே நீக்கலாமா’ என்றிருக்கும் பதிவுகளிலே உங்கள் பதிவும் அடங்கியிருக்கின்றது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

  64. பலே பிரபு on October 16th, 2011 4:58 am

    /இன்னும் பல பதிவுகள் நீங்கள் விலக்கி உள்ள வகையில் இருந்தும் உள்ளே உள்ளன, கண்டுபிடித்து நீக்க முயற்சிக்கவும்./
    கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நடவடிக்கை எடுக்கலாம்.

    //

    நிறைய பதிவர்கள் சொந்தமாக எழுதாமல் இன்னும் உள்ளே உள்ளனர், என்பதை தெரிவித்தேன். மற்றபடி நீங்கள் நிறைய பேரை விலக்கி உள்ளது வரவேற்கதக்கது. அவர்கள் இனி சொந்தப் பதிவுகளில் கவனம் செலுத்துவார்கள்.

    நன்றி.

  65. Kumar on October 17th, 2011 6:47 pm

    To all Tamil blog writers, blog aggregators and blog readers,
    I do not write any Tamil blogs, but I read most Tamil blogs aggregated either in Tamilmanam or Tamilveli or Thiratti and others. I found one thing that some Tamil blog aggregators are doing exceptionally good job with this service. Tamilmanam is one of them. Some Tamil blog aggregator is doing bad service by just collecting all stupid blogs, which are trifle/frivolous/trash/flirt/ or you can call it by any name that describe the waste. I do not wish to name those agregators as i do not want to create another conflict among Tamil writers and readers. First i clarify very clearly that No one has right to ask me to name such a blog aggregator. Also i do not have any realtion to any aggregator or bloggers, except being a Tamil citizen.

    Come to the crux of today’s conflict, i feel that the whole team of Tamilmanam administrators is not fully responsible for whatever happened recently, that infuriated some of the bloggers. However, the words chosen by particular Tamilmanam administrator were not good. Since the team of Tamilmanam administrator has already gave the explanation for what went wrong, it is now blogger’s duty to move forward without adding fuel to the fire. Some of the bloggers seem to be very adament and un-necessarily bringing religious issues to the aggregator’s service. It is unwarranted. Forgive and Forget are better act to move forward. I do not mean to be submissively forget/forgive everything, but generously accept the regret and explanation given by the parties of conflict.

    I understand well that it is critical to have a healty discussion and arguementrs on any issue for better and constructive outcome; but here it seems to be ego problem. It never comes into the mind of good writers.

    I kindly request all bloggers to take off leave for 2 days and think carefully who is right and who is wrong, and then come to the honest decision from your heart. Then you will realize that everything is blown out of necessity.

    If any blogger is feeling that Tamilmanam is charging money unwantedly, then write your concern to them and try to get thier reply. If you are convinced with thier reply, agree with them; otherwise tell to other bloggers about the injustice and try to solve in a honest way. But do not throw soils on each other.

    It is also the duty of administrator that knowingly or unknowingly you are doing strenous job with good intention to help Tamil readers. At the same time, it is your duty to choose a right word to express your resentment/angry to bloggers. We understand that you are doing hard work by putting a lot of efforts and energy for Tamil readers, but you have to be me more patient and careful in replying to bloggers. It is easy to throw stone on ripened mango and those mangoes are prone to get beaten frequently. Your situation is like that. So be patient.

    Kindly do not fight for silly cause like this; do not make clout (groups) within ourselves; we have lost many historical events because of groupism among ourselves and infighting within ourselves.

    Good luck and wishes for Tamil bloggers and Aggregators!

    Stop your fight today! Move forward with the honest and good-intention for service to our people!

    Expecting a good writings from those bloggers hurted by the act of Tamilmanam! Expecting a still better service from Tamilmanam!
    -Kumar

  66. குவைத் தமிழன் on October 17th, 2011 9:07 pm

    இலவசமா சோறு போடுறவன்கிட்ட எனக்கு பிரியாணிதான் வேணும்னு சொல்ற மாதிரி இருக்கு. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு கொள்கை கோட்பாடு இருக்கும்.சில விதிமுறைகள் இருக்கும். நம் பதிவுகளை இலவசமா இணைக்கும் பொது அந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆகணும். இல்லன காசு கொடுத்துட்டு கேள்வி கேட்கலாம். என்னைப்பொருத்த வரை தமிழ் மணம் நிர்வாகம் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஜோதிடம்,சாதி,மூட நம்பிக்கைகளை பரப்புதல் போன்ற பதிவுகளை மட்டும் அல்ல மதம் தொடர்பான பதிவுகளையும் தூக்கி தூர வீச வேண்டும் என்பதே எனது விருப்பம். மதத்தை பரப்பவும்,அதைப்பற்றிய விளக்கம் அளிக்கவும் ஆயிரம் தளங்கள் உண்டு .அதேபோல் தான் மேற்படி சாதி,ஜோதிடம் போன்றவைகள் எல்லாம். தமிழ் மணம் நாத்திக பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறில்லை. மக்களுக்கு முதலில் பகுத்தறிவு வளரட்டும். பிறகு தன்னாலேயே தெரியும் எந்த மதம் சிறந்தது என்று.வேண்டுமானால் அவர்கள் அதை பின்பற்றட்டும். சோதிடம் என்பது ஏமாற்று வேலை என்று பலமுறை நிரூபிக்கப்பட்டும் இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கூட அதை நம்புகிறார்கள். இவர்களுக்கு தேவை முதலில் பகுத்தறிவுதான்.

  67. hidayath on October 19th, 2011 1:54 pm

    ஒரு சமூகத்தின் மீதுள்ளப் பகை உங்களை நீதமாக நடவாமல் இருக்கச் செய்ய வேண்டாம்.

  68. shiva kumar on October 22nd, 2011 8:47 am

    தமிழ்மணம் நிர்வாகத்திற்கு வணக்கம்

    நான் இந்த மாதம் முதல் பதிவுகள் எழுதி வருகிறேன் . என்னுடைய பதிவுகள் தமிழ்மணம் திரட்டியில் இணைத்து வரும் வேலையில், கடந்த இரண்டு வாரங்களாக எழுதி வரும் பதிவுகள் இணைத்தாலும் திரட்டப்படுவதாய் தெரியவில்லை.ஏன் என காரணம்தெரியவில்லை . தொழில்நுட்ப கோளர அல்லது என்பதிவுகள் தங்களின் வரம்புகளை மீறி உள்ளனவா . நல்ல பதில் எதிர்ப்பார்த்து.

    உண்மையுடன்
    அவனி சிவா ( avanishiva.blogspot.com )

Leave a Reply