தமிழ்மணம் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதில்கள்
ரவிசங்கர்
கேள்வி : Recent times when I try to post after typing my username and password the next screen says” புது இடுகை
எதுவும் காணப்படவில்லை” two times I tried and the same message came but post has not been appeared in tamilmanam. But it appears after some time. Some time it get posted if I post one more post after five minutes.Both posts
appears.
பதில் : தமிழ்மணம் தொடர்ச்சியாக தானியங்கியாக பதிவுகளை திரட்டிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த திரட்டுதல் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் சில நேரங்களில் பதிவுகள் Cache என்று சொல்லப்படுகிற சேமிப்பானில் இருக்கும். அவ்வாறான நேரங்களில் நீங்கள் குறிப்பிடும் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதை கண்டறிந்தோம். உங்களுடைய கேள்விக்கு மிக்க நன்றி. தற்பொழுது இந்த வழு(Bug) களையப்பட்டிருக்கிறது
டோண்டு ராகவன்
கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்
பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை
ஜோதிஜி
கேள்வி :ஓட்டுப்பட்டை என்பது அவசியமா? உறுப்பினராக இருப்பவர்கள் பதிவை வெளியிட்டதும் இயல்பாகவே இணைத்துக் கொள்ளும் வசதியை உருவாக்கினால் என்ன?
பதில் : ஒட்டுப்பட்டை (அ) பதிவுப்பட்டை என்பது அவசியமானது அல்ல. பதிவுப்பட்டையை இணைப்பது பதிவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. அதனை தமிழ்மணம் வலியுறுத்துவது இல்லை. அதே நேரத்தில் சில வசதிகள் பதிவுப்பட்டை மூலமே சாத்தியமாகிறது – குறிப்பாக வாசகர் பரிந்துரை வாக்குகள், மறுமொழிகளை திரட்டுதல் போன்றவை ஒட்டுப்பட்டை (அ) பதிவுப்பட்டை மூலமே சாத்தியமாகிறது. பதிவுப்பட்டையை இணைக்காவிட்டாலும் பதிவுகளை தமிழ்மணம் தானியங்கியாக திரட்டும்.
செல்வராஜ நிரூபன்
கேள்வி :என்னிடம் சிறிய ஒரு கேள்வி இருக்கின்றது. சில நேரங்களில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் வெளிவருகின்ற பதிவுகளிற்கு அண்மையாக உள்ள யெலோ (Yellow) பட்டன் மூலம் ரிப்போர் செய்து, தனி மனிதத் தாக்குதலோ அல்லது ஆபாச விடயங்களோ இல்லாத பதிவுகளையும் விஷமத் தனமாக திட்டமிட்டு தமிழ் மணத்திற்கு ரிப்போர்ட் செய்து பலர் நீக்கச் செய்கின்றார்கள். இவ்வாறு பதிவர்களால் ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளும் தானியங்கி முறையில் தான் நீக்கப்படுகின்றனவா அல்லது தமிழ்மண நிர்வாகிகளின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படுகின்றனவா? இதே வேளை ஒரு பதிவர் தனது தனிப்பட்ட ஐபி முகவரியிலிருந்து ரிப்போர்ட் செய்திருக்கிறாரா? அல்லது பல பதிவர்களின் வெவ்வேறு ஐபி முகவரியிலிருந்து புகார் செய்திருக்கிறார்களா? எனும் தொழில் நுட்பத் தகவல்களைத் தமிழ் மணம் பரிசோதித்தா இவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளை நீக்குகின்றது?
பதில் : தமிழ்மணத்தில் ஒரு பதிவோ, இடுகையோ எதன் அடிப்படையில் நீக்கப்படுகிறது என்பது குறித்த விபரங்களை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறோம் (தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்). ஆனால் இது தானியங்கியாக செய்யப்படுவதில்லை. புகார் வழங்குபவர்கள் ஐபி விபரங்களை தமிழ்மணம் சேகரிப்பதில்லை. ஒரு புகார் முன்வைக்கப்படுகிறது என்பதாலேயே ஒரு பதிவோ, இடுகையோ நீக்கப்படுவதும் இல்லை. தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தமிழ்மணம் சேர்க்கை விதிகளை மீறியிருந்தால் மட்டுமே ஒரு பதிவோ, இடுகையோ விலக்கப்படுகிறது.
முனைவர் இரா.குணசீலன்
கேள்வி :“தாங்கள் அளிக்கும் குறிச்சொற்களில் “இலக்கியம்“ என்னும் பிரிவும் இருந்தால் இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கத் துணையாக இருக்கும் எனக் கருதுகிறேன்..
பதில் : ஆலோசனைக்கு நன்றி. இதனை நிச்சயம் செய்கிறோம்
YOGA.S
கேள்வி :வார நட்சத்திரம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?தரப்படுத்தலில் பாகுபாடு காண்பிக்கப்படுவதில்லையா?அதிக பின்னூட்டம்(கருத்து)பெறுவோர் முன்னணிக்கு வந்து விட முடியுமா?பின்னூட்டமிடுவோர் கண்டிப்பாகப் பதிவராகத் தான் இருக்க வேண்டுமா?அப்போது தான் முகப்பில் இடம்பிடிக்கலாமா?(நான் பதிவரல்ல)
பதில் : நட்சத்திரங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விபரங்களை தனி இடுகையில் முன்வைக்க இருக்கிறோம். அப்பொழுது இது குறித்து விரிவாக எழுதுகிறோம்
கோவி.கண்ணன்
கேள்வி :‘மகளிர்மணம்’ எப்போது செயல்பாட்டுக்கு வரும் ? தமிழ்மணம் விவாதக் களங்களை (Forum) உருவாக்கி ஆக்கமான விவாதங்களுக்கு வழி செய்யலாமே
பதில் : உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. நல்ல யோசனை. இதனை பரிசீலனை செய்கிறோம்.
கேள்விகளை எழுப்பிய அனைவருக்கும் நன்றி. மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்
தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு
Comments
18 Responses to “தமிழ்மணம் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதில்கள்”
Leave a Reply
சார் நான் சசிகுமார் வந்தேமாதரம் வலைப்பூவை நடத்தி வருகிறேன். என்னுடைய பதிவுகள் இரண்டுமுறை திரட்ட படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. காரணம் 5 அல்லது 6 ஓட்டு வந்தவுடன் மறுபடியும் 0 இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்.
நான் ஏற்கனவே தமிழ்மணத்தில் இணைந்துள்ளேன். என்னுடைய ப்ளாக்குகள் “ரேகா ராகவன்” மற்றும் “அன்பேசிவம்” ஆகும். என் படைப்புகளை வெளியிடும்போது இடுகைகளை தமிழ்மணத்தில் இணைக்க விரும்பி அதற்க்கான செயல்களை செய்தால் ”
உங்களுடைய கணக்கு செயற்படுத்தப்பட வில்லை (Not Activated)
உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்படுத்தற் குறியைக் (Activation code) கொண்டு உங்கள் கணக்கை செயற்ப்படுத்தவும்
என்றே வருகிறது. எனக்கு (Activation code) எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பிவைக்கப்படவில்லை. எனவே எனக்கு
(Activation code ) ஐ உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
// நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை//
அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
காரணம் 5 அல்லது 6 ஓட்டு வந்தவுடன் மறுபடியும் 0 இல் இருந்து ஆரம்பிக்கிறது
*****
சிலப் பதிவர்கள் ப்ளாகரில் பதிவு வைத்திருந்து விட்டு பின் தனித்தளத்திற்கு மாறுகிறார்கள். இரண்டு பதிவுகள் என்றாலும் செய்தியோடை ஒன்று தான். இவை இரண்டு முறை திரட்டப்படுகிறது. அது போன்ற சூழ்நிலை இவ்வாறு நேரும் வாய்ப்பு உள்ளது
எனக்கு (Activation code) எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பிவைக்கப்படவில்லை. எனவே எனக்கு
(Activation code ) ஐ உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
*****
தமிழ்மணத்தில் கொஞ்சம் தேடிப் பார்த்தால் அனைத்தும் உள்ளது. தமிழ்மணம் முகப்பு பக்கத்திலேயே கீழ்க்கண்ட மூன்றும் உள்ளது
தமிழ்மணத்தில் சேர
கடவுச்சொல் மறந்துவிட்டதா?
கணக்கை செயற்படுத்த
அதில் ”கணக்கை செயற்படுத்த” என்ற சுட்டியில் சென்றால் இவ்வாறு வரும்
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்னும் செயற்படுத்தற் குறி (Activation code) வரவில்லையா ? செயற்படுத்தற் குறியை மறுபடியும் பெற இங்கே சொடுக்குங்கள்
அந்தப் பக்கத்திற்கு சென்று ”http://www.tamilmanam.net/login/resend_activation.php” செயற்படுத்தற் குறியை (Activation code) மறுபடியும் பெறலாம்
பயனர்கள் தளத்தினை கொஞ்சம் தேடிப்பார்த்தால் தங்களுக்கு தேவையானதை கண்டு கொள்ள முடியும்
தமிழ்மணம் தன்னார்வ நிறுவனம். இதில் அனைவரின் கேள்விகளுக்கும் தமிழ்மணமே பதில் வழங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. எங்களுக்கு அனைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நேரம் இல்லை என்பதே உண்மை
நன்றி….
அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?
************
தமிழ்மணம் பல விதங்களில் விளபரங்கள் வழங்குகிறது. வர்ணப்பட்டையுடன் கூடிய விளபங்களுக்கு கூடுதல் கட்டணம். வர்ணப்பட்டை இல்லாத விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம். சிலர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்மணம் விளம்பரப் பக்கங்களில் அது குறித்த விபரங்கள் உள்ளன
http://www.tamilmanam.net/purchase_ads.php
http://tamilmanam.net/tamilmanam_paid_service.php
நன்றி….
தேவையில்லாமல் ஒரு தள உரிமையாளர்கள் (ஏதோ தொழில்நுட்ப கில்லாடி வேலை ( தவறான வழியியில் தன் பதிவை அதிக நேரம் முகப்பில் தெரிய வைத்ததாக ) செய்து தங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்ததாக “பொய்குற்றச்சாட்டு” சொல்லி அந்த தள உரிமையாளர்களை இழிவு படுத்திவிட்டு, இப்போ யாரோ “சீன்” போடுவதாக உளறல் வேற??
தமிழ்மணத்திற்கும் உங்களுக்கும் புரிதல் இல்லைனா, அந்த தள உரிமையாளர்களை தேவையில்லாமல் இழிவு படுத்தியதுக்கு மன்னிப்பு கேட்கனும்! அதுதான் முறை.. அதை விட்டுப்புட்டு யாரோ சீன் போட்டதா எதுக்கு உளறல்???
What right you have to accuse some blogger who happened to be innocent and did not do anything illegal or manipulation? Go, apologize to him like a gentleman!
@வருண்
கிட்டத்தட்ட இதையே எனது பதிவிலும் பின்னூட்டமாக இட்ட உங்களுக்கான பதில் அங்கேயே கொடுக்கப் பட்டுள்ளது, போய் பார்க்கவும்: http://dondu.blogspot.com/2011/09/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவர்கள் வருண், டோண்டு ராகவன்,
தமிழ்மணம் இது தொடர்பான தன் விளக்கத்தைத் தந்துவிட்டது. மேலும் இது குறித்து இடுகையின் நோக்குக்கு அப்பாலான வாதத்தை இப்பதிவிலே தவிருங்கள்.
நன்றி.
தமிழ்மணம்,
பசுவைத் தூக்குவோம்; பசியடங்குவோம்!
http://puthiyapaaamaran.blogspot.com/2011/09/blog-post_30.html
கீழ் குறிப்பிட்ட காரணத்தை** எனது மின் அஞ்சலுக்கு அனுப்பி ஏற்கெனவே தமிழ்மணத்தில் வெளியானதை நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய கவிதை என் சொந்தக் கற்பனையில் உருவாகி வெளியிடப்பட்டது என்பதை உங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் இக்கவிதையை வெளியிட தங்களை அன்புடன் கோருகிறேன். நன்றி. – புதிய பாமரன்
**Dear author,
Your post பசுவைத்is removed by http://www.tamilmanam.net Administrator due to follwing reason,
copied post has been removed from aggregation
நிர்வாகி
பதிவர் புதிய பாமரன்
தகவலுக்கு நன்றி. வினவு பதிவுக்கு நன்றி கூறி ஆக்கம் உங்களுடையதெனத் தெளிவாகக் கூறப்படாமல் வெளியிட்டிருந்ததாலே, எடுத்துப்போட்டதென்ற புரிதலோடு விலக்கப்பட்டது. அண்மைக்காலத்திலே பதிவர்களின் படைப்புரிமையைப் பற்றியே கவலைப்படாது சில பதிவர்கள் எடுத்துப்போட்டே தம் பதிவுகளை ஓட்டுவதை அறிந்திருப்பீர்கள். அதனாலே, உங்களைப் போன்று சொந்தமாகவே எழுதுகின்றவர்களின் உரிமை தமிழ்மண இணைப்புகளிலே மீறப்படாமலிருப்பதற்கான நடவடிக்கையின் பாற்பட்டதே அது.
உங்கள் இடுகையை மீள இட்டால், தானாகவே சேர்ந்துகொள்ளும்.
==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணத்தின் விளக்கங்களுக்கும், விரைந்த செயலாற்றலுக்கும், சேவைகளுக்கும் நன்றிகள் உறித்தாகுக.
– புதிய பாமரன்.
விட்டலனின் ‘ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்’ என்ற பதிவு 10 நாட்களுக்கு மேலாக முகப்பில் இருந்துவந்தது. இதில்தான் டோண்டுராகவன் பின்னூட்டமிட்டார். பெரியார் தளம் போன்றவை விளம்பரப்பதிவுகள். முகப்பில் நின்றன. அதற்கு நீங்கள் சொன்ன பதில் ஒத்துவரும். விட்டலனின் பதிவுக்கு வருமா? அவர் பதிவு விளம்பரப்பதிவா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தவும்.
விட்டலன் ரொம்பவே அதிகமாக மௌனம் சாதிக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இருந்தாலும் விட்டலனுடைய பதிவு விளம்பர பதிவுதான் என்பதை தமிழ்மணமே ஊர்ஜிதம் செய்த பிறகு நாம் மேலே பேசாமல் இருப்பதே நலம்.
(அவசரமாக போன முறை ரிப்ளை பட்டனை அழுத்தியதால், இப்போது இதையும் சேர்க்க வேண்டியதாயிற்று).
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரட்டிகளின் பதிவுப் பட்டைகள் பெரும்பாலான வலைப்பூக்களில் தவிர்க்க முடியாத அம்சம். ஓட்டுகளால் பதிவுகளை கொண்டு சேர்க்கும் அடையாளமாகவும், படைப்பாளிக்கு ஊக்கம் அளிக்கிற விசயமாகவும் இருப்பது சிறப்பு.[சில நேரம் வெறுப்பேற்றுகிற]
பெரும்பாலான திரட்டிகளின் பதிவுப் பட்டைகள் சிறிய வடிவங்கள். பதிவுகளின் கடைசி வரிகளாய் அவற்றை சீராக அடுக்கி வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ் மணத்திலோ நீளமான பெல்ட் மாதிரியான பட்டை. சில தளங்களில் அந்த பட்டை நடுவீட்டில் பீரோ வைத்த மாதிரியாகத் தெரிகிறது.
வடிவில் சிறியதாகவும் , விரும்பிய இடத்தில் வைத்துக் கொள்ளும்படியாகவும் [பட்டன் வடிவில்]ஒரு பட்டையை உருவாக்குவதுபற்றி தமிழ் மணம் பரிசீலிக்கலாமே…
மன்னிக்கவும், இந்த மின்னஞ்சல்/பயனர் பெயர் தமிழ்மணத்தில் இல்லை அல்லது செயற்படுத்தல் குறி (Activation code) சரியற்றது
என்றே வருகிறதே!
====
தமிழ்மணம் பதில்:
பதிவர் இராஜராஜேஸ்வரி
ஆம். தங்கள் பதிவு முற்றிலும் ஒரு மதம் சார்ந்த பதிவாக இருப்பதாக வகைப்படுத்தியிருப்பதால், அது தமிழ்மணத்திலே முன்பக்கத்திலே தோன்றி வாராது. http://jaghamani.blogspot.com
ஆனால், ஒரு பொதுவாக பலவிடயங்களையும் (இறைநம்பிக்கை உட்பட) பேசும் பதிவாக வரும் சாத்தியமிருப்பின், அவ்வேளையிலே தமிழ்மணத்துக்கு அறியத்தாருங்கள். மீண்டும் முகப்பிலே தோன்றச்செய்துவிடலாம்.
புரிதலுக்கு நன்றி.
வணக்கம், நான் குவைத் தமிழன் என் பதிவுகளுக்கு யாரெல்லாம் தமிழ் மனத்தில் வாக்களித்துள்ளார்கள் என்று எப்படி அறிவது? எனக்கு தொழில்நுட்ப அறிவு ரொம்ப கம்மி. எனக்கு தரிஞ்ச வரைக்கும் தேடி பார்த்துட்டேன். தெரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.