தமிழ்மணத்திற்கு நன்கொடை

தமிழ்மணம் செயல்பட்டு வந்த வழங்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தமிழ்மணம் இணைய தளத்தின் தறவிறக்கம் கடந்த சில வாரங்களாக, மிகவும் தாமதமாக இருந்து வந்தது. இந்தப் பிரச்சனையை தற்பொழுது சரி செய்திருக்கிறோம். இன்னும் சில பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது முழுமையடையும் என்று நம்புகிறோம். தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைகள் களையப்பட்டு மீண்டும் ஒரு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என உறுதியளிக்கிறோம். அது வரை தற்போதைய சிரமங்களுக்கு பொறுத்தருள பதிவர்கள், வாசகர்களிடம் வேண்டுகிறோம்

வழங்கிச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், விளம்பரங்கள் மட்டுமே தமிழ்மணத்தின் வழங்கிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இதன் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்மணம், முதன்முறையாக நன்கொடையை எதிர்நோக்குகிறது.தமிழ்மணம் தமிழின் முதன்மையான வலைத்திரட்டி ஆகும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத வகையில் வலைப்பதிவுகள் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய தளமாக தமிழ்மணம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை லாப நோக்கு இல்லாத நிறுவனமாக செயல்பட்டு வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தி வருகிறது.

தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு தடையில்லாத தரமான சேவையை வழங்க நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்கொடைகளை பேபால் மூலமாக செலுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறோம்

நன்கொடை அளிக்க இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள் – http://www.tamilmanam.net/tamilmanam_donate.php

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

4 Responses to “தமிழ்மணத்திற்கு நன்கொடை”

 1. ila on July 19th, 2011 7:51 pm

  தமிழ்மணத்தால் நட்புகள் தொடங்கி, வேலை வாய்ப்பு கூட கிடைத்திருக்கிறது. அதனால்,
  எம்மால் ஆனதைச் செய்கிறோம்.

  நன்றி!

 2. வலையகம் on July 22nd, 2011 10:21 am

  2005 ஆம் ஆண்டில் கோவையிலிருந்து தமிழ்மணம் செயல்படும்பொழுது அதில் பணியாற்றிய எனது நண்பன் தமிழ்மணத்தை எமக்கு அறிமுகப்படுத்தினார்…

  ஆனால் அப்பொழுது வலைப்பூக்களில் ஆர்வம் காட்டவில்லை…

  அமெரிக்க வாழ் தமிழர்கள் வாங்கிய பின்னரே அதன் மதிப்பும் கூடியது… பலரை எழுதத்தூண்டியதும் தமிழ்மணமே… என்னால் இயன்ற உதவியினை அளிக்கிறேன்…

 3. paramasivam on September 26th, 2011 5:06 am

  வங்கிகள் மூலமாகவோ பணவிடை வாயிலாகவோ நன்கொடை அனுப்ப இயலாது என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
  தமிழ் நாட்டில் அதற்கான வசதி செய்யுமாறு அன்புடன் வேண்டி
  வலியுறுத்துகிறேன்.

 4. அரசு செல்லைய்யா on September 27th, 2011 1:56 pm

  இணைய உலகில் தமிழ் வளரவும், தரமான/சரியான கருத்துக்கள் அறியப்படவும் தமிழ் மணம் உதவுவது கண்டு மகிழ்ச்சி. மென்மேலும் தமிழ்மணம் வளர பெரிதும் விழைகிறேன்.

Leave a Reply