தமிழ்மணம் பதிவுப்பட்டை (Toolbar)

July 8, 2011 · Posted in அறிவிப்புகள் 

வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உடனுக்குடன் தமிழ்மணத்திற்கு அளிக்கவும், மறுமொழிகளை உடனுக்குடன் திரட்டவும், வாசகர் பரிந்துரைக்காக வாசகர்களிடம் இருந்து வாக்குகளை திரட்டவும் பதிவுப்பட்டைச்சேவையை தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளோம். உடனுக்குடன் மறுமொழிகளும், இடுகைகளும் வலைப்பதிவுகளில் இருந்தே ஒரு சொடுக்கிலே தமிழ்மணத்தின் முகப்பிற்கு வந்தடையும் தொழில்நுட்பம் தமிழ்மணத்தின் சிறப்பம்சமாகவும் இருந்து வந்துள்ளது.

ஆனால், இன்றைக்கு வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வலைப்பதிவும் வாசிக்கப்படும் பொழுதும் பதிவுப்பட்டை சேவை தமிழ்மணத்தின் வழங்கிக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அது தவிர வலைப்பதிவுகளிலே தரவிறக்கமும் தாமதமாகிறது. இப்பிரச்சனை தமிழ்மணம், வலைப்பதிவர்கள் என அனைவரையும் பாதிக்கும் நிலையில், இச்சேவையை இடைநிறுத்தத் தமிழ்மணம் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கின்றது.

இச்சேவையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட சேவை வரும் வரையில் வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் திரட்டுதல் போன்ற சேவைகள் இயங்காதெனத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்த சேவைகள் மீண்டும் செயற்படத் தொடங்கும்.

இதனால், பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

19 Responses to “தமிழ்மணம் பதிவுப்பட்டை (Toolbar)”

 1. துளசி கோபால் on July 10th, 2011 11:37 pm

  தகவலுக்கு நன்றி.

  ஆளில்லாத கடையில் டீயை ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டே இருக்கேன்!

  தமிழ்மண முகப்பில் இடுகைகள் தெரிவதில்லை:(

  ஒரு ஐயம்……சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தால்…… இது எல்லோருக்கும் பொது இல்லையா?

  மற்ற பல பதிவர்களின் இடுகைகள் மட்டும் முகப்பில் வருகின்றனவே?

  ஒன்னும் புரியலை:(

 2. ராஜ நடராஜன் on July 11th, 2011 1:51 pm

  பதிவுப்பட்டையை யாரோ திருடி விட்டார்கள் என்று புகார் செய்திருந்தேன்.காரணம் இதுதானா?தகவலுக்கு நன்றி.

  தமிழ்மணம் எவ்வழியோ பதிவனாக நானும் அவ்வழியே!

 3. paramasivam on July 11th, 2011 1:57 pm

  ஏற்கனவே என் வலைப்பதிவில் இருந்த ‘தமிழ்மணம் பதிவுப் பட்டை’
  காணாமல் போய்விட்டது.
  பல முறை முயன்றும் பலனில்லை.
  புதிய இடுகை பதிவு செய்வதா வேண்டாமா?
  தெளிவு படுத்திங்கள்.

 4. சக்திவேல் on July 11th, 2011 11:10 pm

  ஒட்டுப்பட்டையை இணைப்பது ஒருபுறமிருக்கட்டும்,இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள இடுகைகளைப் புதுப்பிக்க ‘அளி’ கட்டப்பகுதியில் சென்று எனது வலைத்தள முகவரியை கொடுத்தால் பதிவை கூட இணைக்க முடியவில்லை. மேலும் தமிழ்மணம் தளம் திறப்பதில் கூட தாமதம் ஆகிறது.

 5. சக்திவேல் on July 11th, 2011 11:10 pm

  ஒட்டுப்பட்டையை இணைப்பது ஒருபுறமிருக்கட்டும்,இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள இடுகைகளைப் புதுப்பிக்க ‘அளி’ கட்டப்பகுதியில் சென்று எனது வலைத்தள முகவரியை கொடுத்தால் பதிவை கூட இணைக்க முடியவில்லை. மேலும் தமிழ்மணம் தளம் திறப்பதில் கூட தாமதம் ஆகிறது.

 6. அமைதிச்சாரல் on July 12th, 2011 12:39 am

  நான் கேக்க நினைச்சதை டீச்சரே கேட்டுட்டாங்க..

  பட்டையின் உதவியில்லாம நேரடியா, தமிழ்மணத்துக்கு இடுகைகளை அனுப்பும் வசதியிருக்கா??.. எப்படீன்னு கொஞ்சம் வெளக்குனா நல்லாருக்கும் 🙂

 7. ஹேமா(சுவிஸ்) on July 12th, 2011 5:52 am

  தமிழ்மணச் சேவையின் அருமை இப்போதான் விளங்குகிறது.விரைவில் சீர்ப்படுத்தி வர வேண்டிக்கொள்கிறோம் !

 8. என்னுடைய பதிவு /வாக்குப் பட்டை நினைக்குந்தோறும் வரும்; காணாமல் போகும். இது பல மாதங்களாகவே நிகழ்ந்து வருகின்றது. என்னுடைய சில பதிவுகள் 2000க்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்ட போதும் வாக்கென்னவோ பூஜ்ஜியத்தை தாண்டவில்லை. ஏனெனில் வாக்குப்பட்டையே சில நேரங்களில் தான் தெரியும். தங்களைத் தொடர்புக் கொள்ள தளத்தில் உள்ளது போல techsupport@tamilmanam.com மின் அஞ்சல் செய்தேன்; அம்முகவரி தவறென்று மீண்டும் எனக்கே தகவல் திருப்பப்பட்டது. techsupport@tamilmanam.net ற்க்கும் அதே நிலை. தங்களைத் தொடர்புக் கொள்ள உபயோகத்திலுள்ள மின் அஞ்சல்முகவரி தரவும். குறைகள் விரைவில் களையப்பட்டு பதிவர்களுக்கு சிறந்த சேவையினை தொடரும் நாளை ஆவலுடன் நோக்குகின்றோம்.

 9. ஒ.நூருல் அமீன் on July 12th, 2011 7:35 am

  தகவலுக்கு நன்றி!

  எனது பதிவுகளை இணைக்க முடியவில்லை. என் வலைத் தளம் பிளாக்கர் லிஸ்டில் இல்லை என வருகிறது. உதவவும்.

 10. chittoor.S.Murugesan on July 13th, 2011 2:49 pm

  பரமசிவம் அவர்களே !

  பதிவுகளை திரட்டுவது ஆட்டோவா ( ஆட்டோமெட்டிக்கா) நடக்காது. மத்தபடி தமிழ்மணம் வ்லைதளத்துக்கு போய் இடுகைகளை புதுப்பிக்க என்றுள்ள இடத்தில் வலைப்பூவின் (பதிவின் அல்ல) யு ஆர் எல்லை தந்து அளி பொத்தானை அழுத்தினால் உங்க பதிவு தமிழ்மணத்தில் தெரியும்..

 11. anbumani on July 15th, 2011 6:05 am

  தமிழ்மணம் முகப்பில் இருக்கும் இடுகையை புதுப்பிக்க எனும் பெட்டியில் தங்கள் வலைத்தள முகவரியை இட்டு புதிய இடுகையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

 12. பல்லவன் on July 15th, 2011 10:21 am

  தமிழ்மணம் வழியாக முன்னொரு காலத்தில் வலைப்பூக்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் கிடைத்தது….

  தமிழ்மணத்தின் அலெக்ஸா பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இப்பொழுது வலைப்பூவுக்கு தமிழ்மணம் வழியாக வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

  தமிழ்மணம் அலெக்ஸா அதிகரித்தமைக்கு காரணம் tamilmanam tool bar script டினை நம் வலைப்பூவில் போட்டமையே காரணம் என்று நினைக்கிறேன்… நம் வலைப்பூவிற்கு கிடைக்கும் அலெக்சா மதிப்பு நம் மூலம் தமிழ்மணத்திற்கு கிடைக்கிறது… வலைப்பூக்களில் tamilmanam tool bar இணைப்பது அதிகரித்ததால் தமிழ்மணம் சர்வரும் செயல் இழந்துள்ளது… அலெக்ஸா மதிப்பும் அதிகரித்துள்ளது என்று நினைக்கிறேன்…

 13. ஜோதிஜி on July 15th, 2011 11:07 am

  பட்டை தேவையில்லை. மேற்கொண்டு உங்கள் சேவையை மேம்படுத்த வேறு வழியில் சிறப்பாக செயல்படுத்த உங்கள் குழுவினர் பட்டையைத் தீட்டலாம்.

  அறிவிப்புக்கு நன்றிங்கோ.

 14. சக்திவேல் on July 15th, 2011 9:23 pm

  துளசி கோபால் அவர்களின் கருத்தை தான் நானும் வழிமொழிகிறேன்,என்னுடைய பதிவுகளை இணைக்க பலமுறை முயன்றும் முடியவில்லை.ஆனால் பல பதிவர்கள் புதிய இடுகைகள் மட்டும் எப்படி முகப்பி வருகிறது.

  விளக்கங்கள் தரவும்.மேலும் பதிவை இணைக்கலாமா?வேண்டாமா?என்பதை சரியாக கூறவும்.

 15. Vallisimhan on July 17th, 2011 10:24 am

  என் வலைப்பதிவில் இருந்த ‘தமிழ்மணம் பதிவுப் பட்டை’
  காணாமல் போய்விட்டது.
  தமிழ்மண முகப்பில் இடுகைகள் தெரிவதில்லை.

 16. Vallisimhan on July 17th, 2011 10:24 am

  என் வலைப்பதிவில் இருந்த ‘தமிழ்மணம் பதிவுப் பட்டை’
  காணாமல் போய்விட்டது.
  தமிழ்மண முகப்பில் இடுகைகள் தெரிவதில்லை.

 17. sparkkarthi on July 18th, 2011 2:27 pm

  போங்கப்பா நீங்க எப்பவுமே இப்படித்தான்.

 18. Rathi on July 19th, 2011 12:38 pm

  தமிழ்மணம் பதிவுப் பட்டை பிரச்சனை இல்லை, போகட்டும். இடுகையிட என்று போனால் “புதிய இடுகை” யின் பக்கத்தில் தமிழெழுதி கூட இயங்கவில்லை. அதுவும் இந்தப் பிரச்சனையின் விளைவா!!! அல்லது எனக்கு மட்டும் அந்நிய நாட்டு சதியா! யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா!

 19. kavya on September 26th, 2011 3:42 am

  சில பதிவர்கள் (தேவராஜ் விட்டலன், பெரியார் தளம், புதிய தென்றல்) முன்பக்கத்திலேயே பலநாள்களாக நிற்கின்றன. இது திரட்டியின் சேவையை துர்பிரயோகம் செய்வதாகும். இதைச்சரி செய்வீர்கள் என நம்புகிறேன்.

Leave a Reply