தமிழ்மணம் விருதுகள் 2010 – முடிவுகள்

January 15, 2011 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இனிய தமிழர் திருநாளில் தமிழ்மணம் விருதுகள் 2010 முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுகள் நிகழ்வு வலைப்பதிவுகளில் நல்ல ஆக்கப்பூர்வமான எழுத்துக்களை வளர்க்கவும், ஊக்குவிக்கவுமே வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் அத்தகைய எழுத்துக்கள் வலைப்பதிவுலகில் பெருகும் என நம்புகிறோம்.

2010ம் ஆண்டு விருதுகள் தமிழ்மணம் விருதுகளின் 3வது நிகழ்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பதிவர்களும், வாசகர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பது வலைப்பதிவுகளின் வளர்ச்சியையே காட்டுகிறது எனக் கருதுகிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்களின் பங்கேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வில் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தோம். அதிகளவில் சுமார் 20 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அதோடு மூன்றாவது கட்டத் தேர்வில் நடுவர் குழுவின் தேர்வு இருந்தது. தமிழ்மணம் நிர்வாகம் மற்றும் வலைப்பதிவர்களை உள்ளிட்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு இடுகைகள் தேர்வு செய்யப்பட்டன. நடுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, குறித்த தேதிக்குள் தங்களது மதிப்பெண்களை அளித்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு போட்டியின் சிறப்பம்சமாகப் பெண் பதிவர்களுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மகளிர் மட்டும் என்பது போல முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்று, பெண் நடுவர்களால் இடுகைகள் பரிசீலனை செய்யப்படும் வகையில் இந்தப் போட்டியினை உருவாக்கியிருந்தோம்.

தமிழ்மணத்தில் 2010ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம் இடுகைகள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இருந்து சுமார் 1511 இடுகைகள் போட்டியில் பங்கேற்றன. இந்த 1511 இடுகைகளில் இருந்து 40 இடுகைகள் சிறந்த இடுகைகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெரிய பணியை செய்வதில் எங்களுக்குத் துணையாக இருந்த பதிவர்கள், வாசகர்கள், நடுவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு என்பது பதிவர்களை ஊக்குவிக்கும் ஓர் அடையாளம் மட்டுமே. பரிசுத் தொகை என்பதும் ஓர் அடையாளத்தொகை மட்டுமே. என்றாலும் இந்த ஆண்டும் ரூ45,000.00 மதிப்புள்ள பரிசுகளை இந்த நிகழ்வில் அறிவித்து இருந்தோம். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக்கூப்பன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். பரிசுக் கூப்பனைக் கொண்டு உடனே பரிசுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நியூபுக்லாண்ட்ஸ் கடைக்கு நேரில் செல்ல முடியாவதர்கள் நியூபுக்லாண்ட்சைத் தொடர்பு கொண்டு அஞ்சல் மூலம் புத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர நூல் உலகம் வழங்கும் புத்தக கூப்பனைக் கொண்டு இணையத்தில் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விருதுகள் நிகழ்வில் எங்களுடன் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த நடுவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய நடுவர்களின் பெயர்கள்.

தருமி, தமிழ்நதி, டாக்டர். ருத்ரன், துளசி கோபால், வினவு, சுரேஷ் கண்ணன், குழலி, கோவி.கண்ணன், டாக்டர். புருனோ, செந்தழல் ரவி, சுசீலா, சந்தனமுல்லை, கவிதா, TV ராதாகிருஷ்ணன், பழமைபேசி, ரவிச்சந்திரன், சீனா, து.குமரேசன் (விருபா), ஜாக்கி சேகர், பிரசன்னா, கேபிள் சங்கர், ஜோதிஜி, கேஆர்பிசெந்தில், சங்கரபாண்டி, தமிழ் சசி, இரமணீதரன், செல்வராசு, காசி ஆறுமுகம், இளங்கோ, விஜய் மணிவேல், கார்த்திக் ராமாஸ், பாலாஜி பாரி, சுந்தரவடிவேல், தாரா, மயிலாடுதுறை சிவா, நா.கணேசன்

தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது.
http://tamilmanam.net/awards2010/winners2010.php

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ்மணம் விருதுகள் ஒருங்கிணைப்பு குழு
தமிழ் சசி
சங்கரபாண்டி
இரமணீதரன்
செல்வராசு
விஜய் மணிவேல்

Comments

40 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2010 – முடிவுகள்”

  1. ஜோதிஜி on January 15th, 2011 1:38 am

    இப்போது தான் நண்பர் மின் அஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தி இருந்தார். இன்னும் உள்ளே போகவில்லை. முழுமையாக நடுவர் குழுவைப் பற்றி அறிந்து கொண்டேன். உங்கள் மகத்தான் ஒத்துழைப்புக்கு உழைப்புக்கு என் முதல் வாழ்த்துகள்.

    தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், விளம்பரம் கொடுத்து ஊக்குவித்துக் கொண்டுருப்பவர்களுக்கும் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

  2. நீச்சல்காரன் on January 15th, 2011 1:51 am

    பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  3. வெறும் பய on January 15th, 2011 2:09 am

    என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், தமிழ்மணம் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி…

    நான் நினைத்து பார்க்காத சம்பவங்களில் இதுவும் ஓன்று.. இந்த போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை பெற்றது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது..

    வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…

  4. குசும்பன் on January 15th, 2011 2:13 am

    தமிழ்மணம் விருதுகள் ஒருங்கிணைப்பு குழுவுக்கும் நடுவர்களுக்கும், ஓட்டு போட்ட நண்பர்களுக்கும் நன்றி!

  5. வினவு on January 15th, 2011 2:30 am

    போட்டியில் வென்ற பதிவர்களும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை பல்வேறு தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு திறம்பட நடத்திய அர்ப்பணிப்பு உணர்வு உள்ள தமிழ்மணம் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  6. asiyaomar on January 15th, 2011 3:16 am

    இந்த பொங்கல் புத்தாண்டு நந்நாளில் சிறப்பாக பதிவர்களிடையே போட்டியினை நடத்தி முடிகளை அறிவித்த தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி.பெண்கள் பங்கு பெறும் பிரிவில் என்னை முதலாக தேர்வு செய்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.என் மகிழ்ச்சியை எங்ஙனம் தெரிவிப்பது என்றே தெரியவில்லை.என் எழுத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இதனை கருதுகிறேன்.வாழக தமிழ்மணம்! வளர்க அதன் புகழ்!

  7. ஈரோடு கதிர் on January 15th, 2011 4:01 am

    பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில் மிகச் சிறப்பாக போட்டிகளை நடத்திய தமிழ்மணத்திற்கு நன்றிகள்!

  8. ஊரான் on January 15th, 2011 6:39 am

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  9. நான் ஆதவன் on January 15th, 2011 7:34 am

    என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள். வாக்களித்த நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் நன்றிகள்.

    வெற்றிப்பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.

  10. T.V.Radhakrishnan on January 15th, 2011 7:35 am

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

  11. பதிவுலகில் பாபு on January 15th, 2011 9:20 am

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  12. பழமைபேசி on January 15th, 2011 9:52 am

    கடுமையான உழைப்புக்கு நன்றி!

  13. துளசி கோபால் on January 15th, 2011 11:11 am

    விருது பெற்ற அனைவருக்கும், போட்டியை வெற்றிகரமாக நடத்திய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் மனம் கனிந்த இனிய பாராட்டுகள்.

  14. shanmugavel on January 15th, 2011 2:40 pm

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  15. Sivanesan on January 15th, 2011 3:49 pm

    Veeruthugalai thadichanravargalukku valtukkal

  16. வெற்றிபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  17. RevathiNarasimhan on January 16th, 2011 12:33 am

    வெற்றிபெற்ற அனைவருக்கும், அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    என்றென்றும் நன்மை பயக்கும் பதிவுகளைக் கொடுக்கும் உங்களுக்கும் தமிழ்மண நிர்வாகத்துக்கும் இனிய வாழ்த்துகள்.

  18. RevathiNarasimhan on January 16th, 2011 12:35 am

    வெற்றிபெற்ற அனைவருக்கும், அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    என்றென்றும் நன்மை பயக்கும் பதிவுகளைக் கொடுக்கும் உங்களுக்கும் தமிழ்மண நிர்வாகத்துக்கும் இனிய வாழ்த்துகள்.
    அன்புடன்
    வல்லிசிம்ஹன்.

  19. தமிழ்மணம் 2010 விருது பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

  20. vallisimhan on January 16th, 2011 1:18 am

    வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துகள். தேர்ந்தெடுக்கும் குழும நண்பர்களுக்கும்
    நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் பாராட்டுகள்.
    இவ்வாறு விருதுகள் அளித்து ஊக்குவிக்கும் தமிழ்மணத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்

  21. அடேங்கப்பா எவ்வலவு பெரிய வேலை.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு முயற்சிக்கலா.

  22. முத்துலெட்சுமி on January 16th, 2011 8:26 am

    பரிசுக்கு நன்றி..
    ஏனைய பரிசு பெற்றவர்களுக்கும்.. தமிழ்மணத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..

  23. anbazhagan on January 16th, 2011 9:23 am

    vetri petra anaivarukkum vaazhthukkal

  24. க.பாலாசி on January 18th, 2011 6:41 am

    விருது பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். நிகழ்வினை சிறப்புற நடத்திய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றிகள்.

  25. paraiyoasai on January 18th, 2011 1:31 pm

    பிரிவு 4 -ல் முதலாம் இடத்திலும், பிரிவு 8-ல் இரண்டாம் இடத்திலும் எமது கட்டுரைகளை தேர்வுசெய்த அணைவருக்கும் நன்றி.

    தமிழ்மணத்தின் பணி தொடர வாழ்த்துக்கள்

  26. முகிலன் on January 19th, 2011 12:06 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

    முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இலாப நோக்கமில்லாமல் ஒரு திரட்டியை நிர்வாகம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் பதிவுலகில் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளில் எந்தப் பக்கமும் சாராது நடு நிலைமை வகித்து தமிழ் வலைப்பூக்களை தொகுத்து வழங்குவது என்பதே சிரமமான காரியம். அதிலும் ஆண்டுதோறும் சிறந்த வலைப்பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருது வழங்குவதும் எளிய காரியம் அல்ல. அதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கி வரும் தமிழ் மண நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

    இரண்டாவது முறையாக நான் இந்த ஆண்டும் விருதுக்கு எனது இடுகைகள் மூன்றை சமர்ப்பித்து இருந்தேன். முதல் சுற்றில் இரண்டு இடுகைகளும் இரண்டாவது சுற்றில் ஒரு இடுகையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இறுதிச் சுற்று முடிவில் என் கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு பிரிவு-16ல் முதல் பரிசு வழங்கியிருந்தீர்கள். எனக்கு வாக்களித்த நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் நன்றிகள்.

    அதே சமயம், நீங்கள் முடிவுகளோடு வெளியிட்டிருந்த நடுவர்கள் பட்டியல் எனக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. அந்த நடுவர்களில் சிலர் தங்கள் இடுகைகளை விருதுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். அவர்களில் சிலர் விருதை வென்றும் இருந்தனர். நடுவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தாங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்த பிரிவுகளுக்கு நடுவராக செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், இரண்டு பட்டியல்களையும் பார்க்கும்போது கொஞ்சம் இடறத்தான் செய்கிறது. இன்னும் சில நடுவர்கள் ஒரு பக்கச் சார்பு (இடது சாரி சிந்தனை) கொண்டவர்கள். இவர்கள் எப்படி நேர்மையாக விருதுக்கு இடுகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, என் போன்ற பலருக்கும் வந்துள்ளது. கூகுள் பஸ்ஸிலும் இடுகைகளிலும் அவர்கள் தங்கள் சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பல விடயங்களில் நடுநிலைமையைப் பேணும் தமிழ்மணம் இந்த விடயத்தில் நழுவி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஃபிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் துவங்குகின்றது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு இலங்கை அணியில் தலைவரை அம்பயராகப் போட்டால் நன்றாகவா இருக்கும்?

    தமிழ்மணத்தின் நியமித்த இந்த நடுவர் குழுவிற்கு என எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் எனக்கு வழங்கப்பட்ட விருதை நான் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை.

    அதே நேரம், உங்களின் அயராத பணியைப் பாராடும் முகத்தான் என் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணத்தில் பகிர்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டுகளில் இது போன்ற குறைகளை தமிழ்மணம் களையும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

  27. போராட்டம் on January 20th, 2011 1:06 am

    படைப்பிலக்கியப் பிரிவில் இரண்டாம் பரிசாக தேர்ந்தெடுமைக்கு நன்றி. தமிழ்ப் பதிவுலகில் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

  28. varun on January 20th, 2011 2:36 pm

    முகிலன்!

    நடுவர்கள் யார் யாரென்று தமிழ்மணம் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் என்னனு தெரியலை?

    ஒருவேளை அவர்கள் செய்த பணிக்காக அவங்களை கெளரவப்படுத்த வாயிருக்கலாம். :-)

    நடுவர்களைப் பார்த்தேன். நெறையப்பேர் இருக்காங்க! ஒரு பதிவர் என்கிற நினைப்பில்லாமல், தன் விருப்பு வெறுப்புகளை தூர வைத்துவிட்டு, “நடுவர்” என்று தன் நிலை உணர்ந்து நடந்துகொண்டார்கள் என்று நம்புங்கள்! அப்படி நீங்க நம்பினால் உங்க பிரச்சினைக்கு நல்ல தீர்வு கெடைக்கும்.

    மற்றபடி உங்க நிலை புரியுது. நீங்க இப்போ நடுவர்களை ஜட்ஜ் பண்ணினாலும் நீங்களும் இங்கே ஒரு ” நடுவர்” பதவியை கையில் எடுத்துக்கொண்டதாகத்தானே அர்த்தம்?

    The point here is it is impossible for TM to come up with a judging committee which satisfies everybody. I mean even if you did select such a committee, there will be lot of criticisms on you too. So, just let it go, please and move on! :)

    If the award is money, you could donate that sum to TM itself or some other needy people. Why do you have to do what you are doing?

    It is just a friendly suggestion and not an advice! Take it easy! :)

  29. முகிலன் on January 21st, 2011 1:39 pm

    அன்பின் வருண்,

    நடுவர்கள் நடுநிலையில் இருந்திருப்பார்கள் என்று நம்பும் அதே வேளையில் எதுவும் மோசடி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பது நடுவர் பட்டியலையும் பரிசு பெற்றோர் பட்டியலையும் பார்த்தால் தெரிகிறதே.. போட்டியிடாத பதிவர்களை நடுவர்களாகத் தேர்ந்தெடுத்திருந்தால் இந்த விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?

    Of course, criticisms would occur even on those judges regarding their stand. But avoiding judges like VINAVU – who are well known for their COMMUNIST stand and will not pick a good article supporting Globalization – we could avoid some more criticisms.

    I believe that Tamil Manam would rectify these defects in the next year awards

  30. umapathy on February 2nd, 2011 4:17 am

    congratulation to all the winners

  31. எஸ்.கருணா on February 4th, 2011 7:07 am

    எனது 2 பதிவுகளுக்கு தமிழ்மணம் விருதுகள் கிடைத்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது.தேர்வுக்குழுவுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்.1 மாதமாக வலைக்கு வராததால் மிகவும் தாமதமாகத்தான் முடிவுகளை அறிந்த்கொண்டேன்.பரிசுக்கூப்பன் பற்றிய மின்னஞ்சல் எதுவும் எனக்கு வரவில்லை என்பதையும் நினைவு படுத்துகிறேன். நன்றி மீண்டும்.

  32. பறையோசை on February 4th, 2011 10:43 am

    முகிலன் அவர்களின் நடுவர்கள் மீதான நம்பிக்கையின்மை என்பது பொருளற்ற ஒன்று. எவர் ஓருவரும் ஏதாவது ஓரு கோட்பாட்டின் சார்புடைய சிந்தனையாளராகத்தான் இருக்கமுடியும். இடதுசாரி சிந்தனையாளராக இல்லாவிட்டால் வலதுசாரி சிந்தனையாளராக இருப்பார்.
    இடதுசாரிகளையும் இடதுசாரி வலைத்தளங்களையும் தமிழ்மணம் ஆதரிக்கக் கூடாது என்று இவர் நேரிடையாகவே சொல்லிவிடலாம். எதுக்கு தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் ஜனநாயக வேடம் போடவேண்டும்!
    இடதுசாரிகள் எவரும்ல ரொக்கத்திற்கு எழுதுவதில்லை.

  33. வலிபோக்கன் on July 11th, 2011 12:56 am

    எழுதுவதற்கு ஊக்குவிக்கும் தமிழ் மணத்திற்கும். எழுதுகின்ற பதிவர்களுக்கும். எழுத்துக்களை நடுநலையோடு தேர்ந்தெடுத்த நல்லவர்களுக்கும். நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! தங்கள் பணி சிறக்க
    வாழ்த்துக்கள்

  34. mahendiran on August 23rd, 2011 10:08 pm

    தமிழ்மணம் வலைபகுதியில் என்னை அறிமுகப்படுத்தி வைத்த தினமணி வெங்கடேசமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி…

  35. Aathira on November 18th, 2011 11:34 am

    வெற்றிபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  36. kulachal mu. yoosuf on December 8th, 2011 12:21 pm

    வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ் மணம் வலைத்தளத்தின் புதியவன் ஒருவனின் நல்வாழ்த்துக்கள்

  37. unmaivrumbi on January 23rd, 2012 6:20 am

    தமிழ்மணம் 2010 விருது பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    unmaivrumbi.
    Mumbai.

  38. M.S.MANIYAN on January 25th, 2012 8:53 am

    விருது பெற்றவருக்கு தமிழ் வாழ்த்துக்கள் !
    விருது தந்த தமிழ் மணத்திற்கு நல்வாழ்த்துக்கள் ! !

  39. dhakshana on February 9th, 2012 5:57 am

    தமிழ் மணத்திற்கு நல்வாழ்த்துக்கள்

  40. jegannathan on July 10th, 2012 1:28 am

    all the best for thamizmanm

Leave a Reply