புத்தாண்டு வாழ்த்துக்கள்; புதிய சேவை

தமிழ்மணத்தின் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் புத்தாண்டில் தமிழ்மணம் மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே ”தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்” என்ற சேவையின் மூலம் ஒவ்வொரு வாரமும் முதல் 20 இடங்களைப் பெற்ற வலைப்பதிவுகளின் பட்டியலை வெளியிட்டு வந்தோம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை முதன்மையாகக் கொண்டு தமிழ்மணத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு பதிவையும் தர வரிசை படுத்தும் புதிய சேவையை – தமிழ்மணம் தரவரிசை(Traffic Rank) அறிமுகப்படுத்துகிறோம். இந்தச் சேவை தமிழ்மணத்தில் இணைந்துள்ள அனைத்து பதிவுகளுக்கும் அளிக்கப்படும். தற்பொழுது தமிழ்மணத்தில் இருந்து பெறும் பார்வைகளை அடிப்படையாக கொண்டு இந்த சேவை செயல்பட்டாலும் எதிர்காலத்தில் ஒரு தளம் பெறும் மொத்த பார்வைகளையும் கொண்டு செயல்படும் வகையில் இந்தச் சேவை விரிவு படுத்தப்படும்.

இந்தச் சேவையை எப்படி பயன்படுத்துவது ?

இதற்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது http://www.tamilmanam.net/blog_ranking.php. அங்கே சென்று உங்கள் தளத்தின் முகவரியை அளித்தால் அந்தப் பதிவின் தரவரிசை(Traffic Rank) கிடைக்கும்.

உதாரணமாக தமிழ்மணம் அறிவிப்புகள் தளத்தின் தர வரிசை 112

Tamilmanam Tamil blogs Traffic Rank

இதனைப் பெற தளத்தின் முகவரியை அளிக்க வேண்டும்

அளி என்ற பொத்தானை அழுத்தியவுடன் தளத்தின் தரவரிசை கிடைக்கும். அத்துடன் உங்கள் தளத்தில் இந்த தரவரிசையை வைத்துக் கொள்வதற்கான நிரலும் இருக்கும். இந்த நிரலை உங்கள் வலைத்தளத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் தரவரிசை புதுப்பிக்கப்படும் பொழுது உங்கள் தளத்தில் இருந்தே புதிய தரவரிசையை தெரிந்து கொள்ளலாம்

இந்தச் சேவை பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம்.

*************

2010ம் ஆண்டுக்கான முதல் 100 இடங்களைப் பெற்ற பதிவுகளின் தரவரிசை நாளை, புத்தாண்டு தினத்தன்று வெளியாகும்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

20 Responses to “புத்தாண்டு வாழ்த்துக்கள்; புதிய சேவை”

 1. இக்பால் செல்வன் on December 31st, 2010 12:34 pm

  மிகவும் அருமையான சேவை. இப்படியான சேவைகளை டெச்னோரட்டியில் கண்டதுண்டு, தமிழில் இச்சேவை புதுமை.. வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்களுடன்….

 2. டோண்டு ராகவன் on December 31st, 2010 12:35 pm

  எனது பதிவின் தரவரிசை அவ்வப்போது நான் பதிவை ரிஃப்ரெஷ் செய்யும்போது தானே இற்றைப்படுமா அல்லது நாம்தான் அதையும் செய்ய வேண்டுமா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. பழமைபேசி on December 31st, 2010 12:46 pm

  வர வர, தமிழ் மணத்தின் கடமையுணர்வுக்கு அளவும் எல்லையும் இல்லாமப் போகுது…. மகிழ்ச்சியான பற்றியம்தான்… ஆனாலும் பார்த்துகுங்க அப்பு… அடிப்படை முக்கியம்!!!

 4. தமிழ்மணம் on December 31st, 2010 12:53 pm

  எனது பதிவின் தரவரிசை அவ்வப்போது நான் பதிவை ரிஃப்ரெஷ் செய்யும்போது தானே இற்றைப்படுமா அல்லது நாம்தான் அதையும் செய்ய வேண்டுமா?

  **********

  பதிவின் தர வரிசை ஒவ்வொரு நாளும் தானியங்கியாக புதுப்பிக்கப்படும். தினம் ஒரு முறை என்ற வகையில் இது செயல்படுகிறது. இதற்காக தனியாக பதிவர்கள் எதையும் செய்யத் தேவையில்லை. தமிழ்மணம் உங்கள் பதிவிற்கென கொடுத்துள்ள நிரலை உங்கள் வலைத்தளத்தில் இணைத்துக் கொண்டால் போதுமானது.

  நன்றி…

 5. பழமைபேசி on December 31st, 2010 1:03 pm

  ஆமாங்க; இன்னொரு விசுக்காவும் போயிப் பார்த்தேன்… அதான் விவரமாச் சொல்லலாம்ன்னு….

  தமிழ்மணத்தோட சிறப்பே, பதமான, பொலிவான முகப்புத்தானுங்க… user experience…பயனர் பயன்பாடு இருக்கு பாருங்க… அது அவ்வளவு சிறப்பா இருக்கும்…. இப்படி வில்லைகளை ஏத்திட்டே போனம்னாக்க, முகத்துல அடிக்கிது பாருங்க…

 6. shanmugavel on December 31st, 2010 1:18 pm

  தமிழ்மணம் தினமொரு புதுமை,நாளொரு பொலிவுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 7. உண்மைத்தமிழன் on December 31st, 2010 2:53 pm

  மிக்க நன்றி..

  பதிவர்களுக்குள் தரமான பதிவுகளைத் தர வேண்டிய நிர்ப்பந்தமும், போட்டிகளும் இதனாலேயே உருவாகும் என்று நினைக்கிறேன்..!

 8. T.V.Radhakrishnan on December 31st, 2010 2:57 pm

  .புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 9. Sivanesan on December 31st, 2010 3:19 pm

  Putyuyavan addiyan ennasaiyamudiyum thayavusaituvilakkavum

 10. மதி on December 31st, 2010 6:15 pm

  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  தங்களது” ” புதிய சேவைக்கு நன்றிகள்.

  எனது பிளாக்கின் ரேங் பார்த்த போது அதில்
  ” தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : [No Data] ” என்று இருக்கிறது.

  எனது பிளாக்கை தமிழ்மணதில் இணைத்த நாள் 29/05/2006.
  இது update செய்யப்படுமா?

 11. ராமலக்ஷ்மி on December 31st, 2010 9:43 pm

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  புதிய சேவை நன்று.

 12. NewTalk on January 1st, 2011 1:05 am

  //இப்படி வில்லைகளை ஏத்திட்டே போனம்னாக்க, முகத்துல அடிக்கிது பாருங்க…//

  டிராபிக் ஏற ஏற செலவுகளை கட்டுப் படுத்த அவை முக்கியம் ஓல்டு டாக்கு!

  காசு கொடுத்து திரட்டி பாக்குற அளவுக்கு பெரிய மனசு உங்களுக்கு இருக்கா ஓல்டு டாக்கு!!

 13. ஜோதிஜி on January 1st, 2011 2:20 am

  நன்றி பழமைபேசி,

  அடிப்படை முக்கியமுங்க.

  அப்புறம் முக்கி முக்கி எழுதறவுங்க எல்லாரும் இதற்காகவே “வேறு” விதமாக எழுதினாத்தான் வந்து நிற்க முடியும்ன்னு நினைச்சுக்கிட்டு “கலைச்சேவை” செய்யப் போறாங்க.

  49 கொடுத்து உசுப்பேத்தி விட்டுட்டீங்க?

 14. மாணவன் on January 1st, 2011 2:59 am

  நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 15. ramesh on January 1st, 2011 8:25 am

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 16. புது சேவை சூப்பர்தான்,இனி பதிவுலகில் பாதிப்பேர் தூங்கமாட்டாங்கன்னு நினைக்கறேன்.

 17. பழமைபேசி on January 1st, 2011 1:11 pm

  @@NewTalk

  நண்பரே, விளம்பரங்கள் அல்ல நாம் குறிப்பிட்டது. புதியது, traffic என்றெல்லாம் சிவப்பு வண்ணத்தில் சிறுபெட்டிகள் ஆங்காங்கே இருப்பது பொலிவுக்கு சறுக்கல்… ”பெரிய மனசு??” Let’s be constructive!!!

 18. ஊரான் on January 2nd, 2011 4:08 am

  தரவரிசையை வைத்துக் கொள்வதற்கான நிரலை வலைத்தளத்தில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறையை அறிந்து கொள்ள வேண்டும். உதவி தேவை.

 19. மதிசுதா on January 8th, 2011 11:06 am

  நல்ல சேவை முறை நன்றிகள்…

 20. Jaleela kamal on January 15th, 2011 4:39 am

  மிக அருமையான முயற்சி,

  வாழ்த்துகக்ள்

  இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

Leave a Reply