தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள்

தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு நிகழ்வில் பதிவர்கள் மட்டும் பங்கெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் அதிக ஓட்டுகளைப் பெறும் 10 இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும் என அறிவித்து இருந்தோம். ஆனால் பல இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளைப் பெற்று இருப்பதால், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன‌.

தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள் – http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் இடுகைகளை பரிந்துரை செய்ததுடன் மட்டுமில்லாமல் வாக்கெடுப்பிலும் பங்கேற்ற பதிவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பு நாளை டிசம்பர் 28 முதல் தொடங்குகிறது. பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் இதில் பங்கு பெறலாம். சனவரி 4ம் தேதி வரை வாக்கெடுப்பு நடைபெறும். தமிழ்மணத்தில் பயனர் கணக்கை வைத்துள்ள அனைவரும் இந்த வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும்.

வாக்குச்சீட்டு

வாக்குச்சீட்டு இந்தச் சுட்டியில் உள்ளது.
http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php
உங்கள் பயனர் பெயரை கொண்டு உள்நுழைந்து இரண்டாம் சுற்றில் வாக்களிக்க முடியும்..

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

11 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள்”

 1. நீச்சல்காரன் on December 27th, 2010 7:16 pm

  முதல் கட்ட சுற்றில் தேர்வுப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 2. வாழ்த்துக்கள். கடும் போட்டி போல

 3. ஸ்டார்ஜன் on December 28th, 2010 4:29 am

  தேர்வுப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 4. Rk.Guru on December 28th, 2010 5:29 am

  தமிழ்மணத்தில், “தள்ளாடும் முதுமை” என்ற பதிவை முதல் சுற்றில் தேர்தெடுத்த சமுகநலன் உள்ள அனைத்து நண்பர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.

 5. b.rajaram on December 28th, 2010 6:38 am

  முதல் சுற்றில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

 6. யோவ் on December 28th, 2010 2:28 pm

  தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள். “பீச்சாங்கை” கவிதையை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றிகள். தேர்வாகாதவர்களுக்கு அடுத்த முறை வெற்றி பெறவும், கலந்து கொண்டு படைப்புகளை பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் !

 7. அங்கிதா வர்மா on December 29th, 2010 12:23 pm

  இச்சுற்றில் தேறிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், அரசியல் விமர்சன பிரிவில் எனது பதிவுக்கு வாக்களித்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்……

  இப்பதிவில் முன்னேற முடியாமல் போன பதிவர்கள் இன்னும் சிறந்த பதிவுகளை எழுதி அடுத்த ஆண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்………..

 8. ஊரான் on December 30th, 2010 12:25 pm

  நான் மூன்று இடுகைகளை சமர்ப்பித்திருந்தேன். அவற்றில் ஆன்மீகப் பிரிவில் ஒன்றும், விளையாட்டுப் பிரிவில் ஒன்றும் என இரண்டு இடுகைகள் முதல் சுற்றில் தேர்வாகியுள்ளன. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி!

 9. padaipali on December 30th, 2010 12:30 pm

  நான் பங்குபெற்ற ,
  காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)பிரிவில்
  கல்லூரி காலத்து எனது கைவண்ணம் ! ஓவியத்திற்கும்
  பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில்
  அம்மணமாய்,நானலைந்த அறியா வயதில்.. நினைவோடைக்கும்
  பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள் பிரிவில்
  விபசாரியின் உபசரிப்பு! படைப்பிற்கும் வாக்களித்து முதல் சுற்றில் மூன்று பிரிவிலும் என் மூன்று பதிவுகளையும் தேர்வுபெற செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்படுகிறேன்! மற்றும் தேர்வு பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வெற்றி பெற என் வாழ்த்தை பதிவு செய்கிறேன்.

 10. vidyasubramaniam on December 31st, 2010 4:51 am

  முதல் சுற்றில் அரசியல் சமூக விமர்சனம் பிரிவில் எனது “நடை பாதையும், பாதசாரியும் , மற்றும் பெண்கள் பிரிவில் “பெண்ணின் ஒளி” ஆகிய இடுகைகளை தேர்ந்தெடுத்த உள்ளங்களுக்கு நன்றி.

 11. Mahathevan on December 31st, 2010 12:50 pm

  “சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம்”

  எனது பதிவையும் முதல் சுற்றில் தேர்ந்தெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்

  தமிழ்மணத்திற்க்கும் நன்றிகள்

Leave a Reply