2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகள்

தமிழ்மணம் ஒவ்வொரு வாரமும் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற சேவையை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தச் சேவையை 2010ம் ஆண்டு முழுமைக்கும் வெளியிட தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. 2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியல் வரும் சனவரி 1ம் தேதி வெளியிடப்படும். வாசகர்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ள முதல் 100 வலைப்பதிவுகள் இந்தப் பட்டியலில் இடம் பெறும்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

13 Responses to “2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகள்”

 1. ஸ்டார்ஜன் on December 25th, 2010 3:46 pm

  தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

 2. ஜோதிஜி on December 25th, 2010 4:59 pm

  அட? அடுத்து இதுவா?

  அப்புறம் மற்றொரு விடயம்.

  இந்த முறை தமிழ்மணம் விருதுக்காக போட்டியிட்ட எனக்குத் தெரியாத பல தளங்களை பார்வையிட்டேன். கலந்து கொண்டவர்களுக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ இது போன்ற தளங்களை பார்வையிட பலருக்கும் வசதியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

  இதற்கென்று பக்கவாட்டில் ஒரு தனியான இணைப்பு கொடுத்து வைத்தால் தேவைப்படுபவர்கள் பார்வையிட வசதியாக இருக்கும். பங்கெடுத்தவர்களை கௌரவித்தது போல் இருக்கும். மேலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாகும்.

  ஏற்கனவே சுமை தாங்கும் (சர்வர்) இதயம் உங்களுடையது என்பதை நான் அறிந்ததே. .

 3. c p senthilkumar on December 25th, 2010 10:18 pm

  வாழ்த்துக்கள்

 4. maattru on December 25th, 2010 11:19 pm

  maattru.blogspot.com, puthithaka aarambikkappatta maattru.blogspot.com ku idam irukkuma?

 5. தமிழ்மணம் on December 25th, 2010 11:27 pm

  பதிவர் மாற்று,

  2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தமிழ்மணத்தில் இணைந்துள்ள அனைத்து பதிவுகளுக்கும் இந்தச் சேவை உண்டு. இந்த ஆண்டு முழுவதும் பதிவுகள் பெற்ற வாசகர்களின் பார்வைகளைக் (hits) கொண்டு இந்த முன்னணி நிலவரம் கணக்கிடப்படுகிறது.

  நன்றி…

 6. வல்லிசிம்ஹன் on December 25th, 2010 11:52 pm

  அந்தப் பட்டியலில் வரும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
  நல்ல சேவை இது,.

 7. shanmugavel on December 26th, 2010 1:02 am

  தமிழ்மணம் புதுப்புது ஆர்வங்களுடன் வலம் வருகிறது.என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.

 8. பதிவுலகில் பாபு on December 26th, 2010 1:32 am

  நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

 9. நீச்சல்காரன் on December 26th, 2010 3:27 am

  தமிழ் மணம் மூலமாக வந்த பார்வைகளா? அல்லது பொதுவான பக்கப்பார்வைகளா?

 10. உண்மைத்தமிழன் on December 26th, 2010 4:29 am

  வாழ்க.. வளர்க..

  தமிழ் வலைப்பதிவர்களுக்காக தமிழ்மணம் செய்து வரும் சேவைக்கு எனது பாராட்டுக்கள்.

  இதனால் தமிழ் வலைப்பதிவர்களின் உற்சாக உழைப்பு, வரும் வருடங்களில் மென்மேலும் உயரும்..!

  மி்க்க நன்றி..!

 11. T.V.Radhakrishnan on December 26th, 2010 7:52 am

  வாழ்த்துகள்

 12. கோவி.கண்ணன் on December 26th, 2010 11:00 am

  தரவரிசை பட்டியலாக இல்லாமல் 100 பதிவுகளை பட்டியலிடுவது நலம். முதல் இடத்தில் இடம் பிடித்தப் பதிவர் என்று எதோ ஒருவரைச் சுட்டினால் எதன் அடிப்படையில் (வெறும்) ஹிட் அடிப்படையிலா ? என்றெல்லாம் கேள்விக் கேட்டும் சம்பந்தப்பட்டப் பதிவரை விமர்சனம் செய்தும் எதிர்வினைகள் வரலாம். பதிவர்களுக்கிடையே (தேவையற்ற) காழ்புணர்வு ஏற்படலாம்.

  முதல் 100 இடத்தில் வந்த பதிவுகள் பட்டியல் (வரிசைப் படுத்தாமல்) இருந்தால் நல்லது

 13. பாரத் on January 1st, 2011 10:52 am

  தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply